ஃப்ரைட் ரைஸ்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஃப்ரைட் ரைஸ்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.2.16

"திங்க"க்கிழமை 160201 :: ஃப்ரைட் ரைஸ்!



நேற்று மதியம்.  நீண்ட நாட்கள் ஆயிற்றே என்று செய்யப்பட்டது!



முட்டைகோஸ், 2 குடைமிளகாய், 3 கேரட், நான்கு பெரிய வெங்காயம், ஐந்தாறு பீன்ஸ் (
மகனின் விருப்பத்துக்காக பீன்ஸ் சேர்த்ததை மறந்து விட்டேன்.  நினைவூட்டிய நெல்லைத் தமிழனுக்கு நன்றி!)


முட்டைக்கோஸை சீவலாக சீவிக் கொண்டு, கேரட்டைத் துருவிக்கொண்டு, குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொண்டு,  பீன்ஸ் நறுக்கிக்கொண்டு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொண்டு..




வாணலியில் இட்டு அரை வதக்கல் வதக்கிக் கொண்டு,




பொலபொலவென வடித்து வைத்திருக்கும் சாதத்தை அதில் கலந்து (பாஸ்மதி அரிசியாய் இருந்தால் விசேஷம்.  ஆனால் நாங்கள் எங்கள் வீட்டில் நித்தம் வடிக்கும் பச்சரிசியை வைத்துதான் வடித்தோம்),
தேவையான அளவு உப்பு சேர்த்து, புரட்டிக் கொண்டு,

இறக்கும்போது மிளகுப்பொடி தூவி, (வெள்ளை மிளகு வாங்கிப் பொடி செய்து போடுங்கள் என்று சொல்வார்கள்.  ஆனால் நாங்கள் வீட்டில் இருந்த க.மி தான் போட்டோம்.  சிலர் இதில் ரெடிமேடாக விற்கும் செஸ்வான் ரைஸ் பொடி சேர்த்துத் தூவுவார்கள்.  நாங்கள் சேர்க்கவில்லை. அதைச் சேர்த்தால் அசட்டுத்தனமான புளிப்பு கலந்த ஒரு சுவையாக இருக்கும்),





இறக்கி பங்கு பிரித்துச்....


இருங்கள்...  இருங்கள்... ரைத்தா தயார் செய்ததைச் சொல்ல மறந்து விட்டேன்!  



வழக்கமாக வெங்காயம் மட்டும் நறுக்கித் தயிரில் சேர்க்கும் ரைத்தாவில் அதனுடன் கூட கொஞ்சம் குடைமிளகாய்த் துருவல், கேரட் துருவலையும் சேர்த்து இலேஸாக உப்பு தூவி கலந்து வைத்துக் கொண்டோம்.



...சாப்பிட்டு விடலாம்!