ஒரு எளிய மதிய உணவு.
காய்
கலந்த வரு சோறு (Veg Fried Rice)
காய்களை
பொரியல் செய்து கலந்த சாதம் செய்வது போல் பிரட்டி எடுத்தால் பிரைட் ரைஸ் என்று
நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை. Fried rice க்கு சாஸ் வகை தேவை. மேலும்
இதை நல்ல high flame இல் தயாரித்து சூடாக சாப்பிடவேண்டும்.
இன்றைய
செய்முறைக்கு எடுத்துக்கொண்ட காய் சாஸ் பட்டியல்.
கேரட்,
பீன்ஸ், காப்ஸிகம், பட்டாணி, (பச்சை பட்டாணி இல்லாததால் ஊறவைத்து வேகவைத்த காய்ந்த
பட்டாணி), கேபேஜ்.
காய்கள் நறுக்கியபின்
செய்முறை.
பாசுமதி
அரிசி ஒரு டம்ளர் உலையில் இட்டு கஞ்சி வடித்து சோறாக எடுத்து கொள்ளவும். சிலர்
குக்கரில் கஞ்சி வடிக்காமலும் சோறாக்கிக் கொள்வர்.
பட்டாணி
பீன்ஸ் இரண்டையும் சிறிது நேரம் அடுப்பில் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் வேக
வைத்துக்கொள்ளவும்
பின்னர்
அடுப்பில் வோக் அல்லது சீனி சட்டியை வைத்து சிறிது எண்ணையில் high flame இல்
காய்கள் போட்டு நன்றாக வதக்கவும். ஒரு ஸ்பூன் தக்காளி சாஸ், அரை ஸ்பூன் சோயா சாஸ்
தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிரட்டவும். பின்னர் சோறை இக்கலவையில் போட்டு
சிறிது மிளகு பொடியும் சேர்த்து டாஸ் செய்யவும். விருப்பம் இருந்தால் வாசனைக்கு
ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கலாம்.
சூடு ஆறும்முன் பரிமாறவும்.
தொட்டுக்கொள்ள
வெங்காயம் பூண்டு சேர்த்து ரோஸ்ட் செய்த பேபி உருளை ரோஸ்ட்.
பப்படம்
தயிர்
வெங்காயம்.
பேபி உருளை ரோஸ்ட்.
உருளை கிழங்கில் நெல்லிக்காய் அளவு சைசில் சிறு சிறு கிழங்குகள்
கிடைக்கும். இவை வேகவைத்தால் மொழுக் மொழுக் என்று இருக்கும். பெரிய கிழங்குகள்
போன்று மாவாகாது.
கிழங்குகளை
வேகவைத்து தோல் உரித்து இரண்டாக வெட்டி மிளகுபொடி அல்லது மிளகாய் பொடி, வெங்காயம்,
பூண்டு, உப்பு சேர்த்து வாணலியில் சிறிது
எண்ணெய் விட்டு மிளகாய் நெடி போக பிரட்டி எடுத்தால் உருளை ரோஸ்ட் தயார்.
Fried
rice இல் சீனி, MSG என்கிற அஜினோ மோட்டோ சேர்க்கவில்லை. அது சேர்த்தால் தான்
சைனீஸ் ருசி கிடைக்கும்.
ஈடுபாடுடன் செய்யும் எந்த உணவும் அது கஞ்சியானாலும் சரி சாப்பிடக் கூடிய பக்குவத்தில் கிடைக்கும். ஏனோ தானோ என்று கவனியாமல் செய்தால் குப்பைக்குத்தான் போகும்.
வறுத்த சாதம் Fried rice ஏனோ என் விருப்ப உணவல்ல. இதனை நான் சாப்பிடுவதில்லை (எனக்கு அதற்குப் பல வாய்ப்புகள் வெளி நாட்டில் வந்திருக்கின்றன)
பதிலளிநீக்குபேபி உருளைக்கிழங்கு. சமீபத்தில் ஆந்திரா சித்தூர் கோய்விட்டுத் திரும்பும் வழியில் கிலோ 20 ரூ என்று இரண்டு கிலோ வாங்கினேன். அடிக்கடி அதனைச் செய்து சாப்பிடுகிறேன். நேற்றுக்கூட, சேவை, வெந்தயக்கீரை குழம்பு, பேபி உருளை காரக் கறி, அதற்கு முந்தைய நாள் வெண்டை கிச்சடி, சாதம், பேபி உருளை ரோஸ்ட் என்று சாப்பிட்டேன். வெகு ருசி.
இந்த சாஸ்களில் நான் உபயோகிப்பது பஜ்ஜிக்குத் தொட்டுக்கொள்ள (மாத்திரம்) டொமடோ கெச்சப். இல்லாவிட்டால் பீட்சாவுக்கு கெச்சப். வேற சாஸ் எதையும் உபயோகிப்பதில்லை, பசங்க பல சாஸ்களை உபயோகித்தபோதும்.
முருகா சரணம்
பதிலளிநீக்கு