தோலுரித்து எடுத்துக் கொண்டேன்.
இந்தக் கலவையை வெறும் வாயில் டேஸ்ட் பார்த்த மகன்கள் அதையே ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!!! (ஹிஹிஹி...)
தோலுரித்த உருளைக்கிழங்கை காரப்பொடி, பெருங்காயத் தூளால் லேசாகப் புரட்டிக் கொள்ளவும். (நான் இந்த ஸ்டெப்பைப் பின்னர்தான் செய்தேன். முன்னரே செய்திருக்கலாம் என்று செய்யும்போது யோசனை வந்தது! வெளியே காரம் தேவைப்படாதவர்களுக்கு இது வேண்டாம்!)
தோலுரித்த உருளைக்கிழங்குகளை மிகக் கவனமாக கத்தியால் வெட்டி வெளியே எடுத்துக் கொண்டேன். (இங்குதான் வேறு மாதிரி யோசித்து வைத்திருந்தேன். நடைமுறைப்படுத்த முடியவில்லை!) வெளியே எடுத்த பகுதி இருக்கிறதல்லவா.... அதில் உள்ள கீழ்ப் பகுதியை ஜாக்கிரதையாகக் குறைத்து விட்டேன் - வெட்டி ஓரமாக வைத்து விட்டேன். இப்போது மூடி போன்ற குறைக்கப்பட்ட பகுதி மட்டும் மிச்சம்.
குறைக்கப்பட்ட பகுதிகளை அம்மிணிக் கொழுக்கட்டை போல அதே கலவையில் புரட்டி பொரித்து எடுக்கலாம். இல்லை தனியாகப் பொரித்து சாப்பிடலாம்! கொஞ்சம்தான் இருக்கும். அந்தக் கலவையில் மிச்சம் மீதி இருந்தால் அதை பொரித்த உருளைக்கிழங்கைச் சாப்பிடும்போது தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
உள்ளே ஸ்டஃப் செய்யும் முறையில் / பொருளில் அவரவர்கள் யோசனைகளுக்கேற்ப மாறுதல் செய்து கொள்ளலாம். கார்ன்ஃப்ளார் மாவு வைத்துப் புரட்டிக் கொள்ளலாம். மைதா மாவு பேஸ்ட் போலச் செய்து பிளந்தால் ஒட்டலாம்!








