நாம்தான் வெளுத்தது எல்லாம் பால் என்று நம்புபவர்கள் ஆச்சே.. இது போல கணினி ரசீதில் என்னுடனேயே வந்து இருமுறை குறை கண்டுபிடித்துச் சரி செய்தும் காட்டி இருக்கிறார் அவர். நான் வாங்காத இரண்டு பொருட்களுக்கு விலை போடப் பட்டிருந்தது. இன்னும் சொல்லப் போனால் அங்கு வாங்கப் படும் பொருட்களின் விலையை வெளிக் கடைகளில் வாங்கும் விலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் சொல்வார்.
கட்டி விட்டு என்னைப் போலப் புலம்பாமல், சும்மா பதிவு எழுதிக் கொண்டிருக்காமல் அவர் நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றியும் பெற்று விட்டார். தீர்ப்பு கிடைத்து விட்டது சரி, பணம் கைக்குக் கிடைத்ததோ இல்லையோ! சில இடங்களில் நீங்கள்தான் முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்றெல்லாம் சொல்லி விடுவார்கள். ஆனால் பணம் கைக்குக் கிடைக்காது... அது போல!
அதே போல எப்படி, எவ்வளவுச் சாப்பிட்டாலும் டிப்ஸ் தராமல் வருபவர்களும் உண்டு. தரவேண்டும் என்று சட்டமா, என்ன? அவர்களையும் நாம் கணக்கில் சேர்க்க வேண்டாம்!
அந்தச் செய்தி.