13.8.26

ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தாற்போல் அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு

 

'சர்ஜரி மே பீ ஆன் புதன்கிழமை 

நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் நோ தியேட்டர்/ நாளை எதுவும் செய்ய முடியாது. அனஸ் ஸ்டேட்டஸ் மற்றும் பிபி சுகர் விஷயங்களுக்காக நோ அப்ஜெக்ஷன் வாங்குவதற்காக திங்கள்கிழமை நடந்தால் செவ்வாய்க்கிழமை சர்ஜரி  முடிந்தால் செய்வேன். இல்லாவிட்டால் புதன்கிழமை என்கிறார் டாக்டர்.  அவர் சொல்வதை பார்க்கும் போது புதன்கிழமை தான் சாத்தியம் என்று தெரிகிறது. புதன்கிழமை சர்ஜரி ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். 24 மணி நேரம் அப்சர்வேஷன்.  24 மணி நேரம் கழித்து டிஸ்சார்ஜ் என்று சொல்லி சென்றிருக்கிறார்'.

இது நான் வீட்டுக்கு வாட்ஸாப்பில் அனுப்பிய மெஸேஜ்.

எனவே ஞாயிறு ஒரு வேலையுமில்லாமல் சோதனையில்லாமல் கழிந்தது.  

திங்கள் காலை  முதல் வேலையாக டயாபடிஷியன் வந்து பார்த்தார்.  முன்கதைச் சுருக்கம் கேட்டுக் கொண்டார்.  எனக்கு இரண்டுவேளை இன்சுலின் சிபாரிசு செய்து சென்றார்.

 அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்த விஷயத்தைப் பற்றி  "மெடிஸின் டாக்டர் அண்ட் அனஸ்தடிஸ்ட் வந்து பார்த்துட்டு போயிட்டாங்க..  சும்மா விசாரணை பண்ணினார்கள்.  அனஸ்தடிஸ்ட் பெயர் பாலசுப்ரமணியம்.  ECG & ECHO  எடுக்கணும்.  புதன் கிழமை ஸர்ஜரி.  இவர் மூன்றாவது பேஷண்ட்.  டைம் சொல்லலை"" என்று சுருக்கமாக வீட்டுக்கு  பாஸ் வாட்சாப் மெசேஜ் அனுப்பினார். 

ரூமுக்கே வந்து ECG எடுத்தார்கள்.  எடுத்த பெண் புன்னகையுடன் மண்டையை ஆட்டி "நார்மல் ரீடிங்" என்று சென்றாள். 

ரூமுக்கே வந்து ECG எடுத்தவர்கள், ECHO மட்டும் அங்கு சென்றுதான் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.  சாதா பேஷண்ட் இப்போது ஸர்ஜரி பேஷண்ட் ஆகிவிட்டதால் பிரச்னை பண்ணாமல் கவுன் மாட்டினேன்.  ஆனால் ஒரு வேண்டுகோள் வைத்தேன். இந்த முடிச்சு சனியனை முன்னால் வரும்படி அமைத்து போட்டுக் கொள்கிறேன் என்றேன்.  அப்போதுதான் முன்பக்கம் மேல் முடிச்சு மட்டும் அவிழ்த்து, அளவாகக் காட்டி, எக்கோ எடுத்துக் கொள்ளலாம் என்று எடுத்துச் சொன்னேன்.  முடிச்சு பின்னால் அபாயகரமான திறப்பை வைத்திருக்கும் என்று KGS மாமா விஷயத்திலும் பார்த்திருந்தேன்.   எனக்கும் அப்படிதான் இருந்தது.  அதனால் அப்படிக் கேட்டேன்.  மாட்டேன் என்று சொல்லி  விட்டார்கள்.  என்ன சொல்லி இருப்பார்கள் என்று உங்களுக்கே மனப்பாடம் ஆகியிருக்கும்.  

"ரூல்ஸ்"

கவுனுடன் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ஃபோன் பேசிக்கொண்டிருந்த பெண்ணின் முன்னால் படுக்க வைக்கப்பட்டேன்.  ஃபோனில் அவர் தன் அம்மாவுடன் கணவன் வீடு பற்றி கடும் புகார், மற்றும் வாக்குவாதத்த்தில் ஈடுபட்டிருந்தார்.  பேசிக்கொண்டே ஏதோ சைகை செய்தார்.  ஃபோனில் பேசுகிறாரா, என்னிடம் எதுவும் சொல்கிறாரா என்று தெரியாமல் மண்ணாந்தை போல படுத்திருந்தேன்,  (மண்ணாந்தை என்றால் என்ன என்று எனக்கும் தெரியாது.  அது படுக்குமா என்றும் தெரியாது.  எல்லோரும் சொல்வதால் நானும் சொல்கிறேன்) ஃபோனை சற்றே காதை விட்டு விலக்கி வைத்துக்கொண்டு,  'கொஞ்சம் முன்னால வாங்க" என்றார் பல்லைக் கடிக்காத குறையாக.   கோபம் என் மேல் அல்ல, கணவன் (வீடு) மேலும் தன் அம்மா மேலும் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவு -------  அல்ல நான்!  நான் முயற்சி செய்து நெருங்குவதற்குள் எனக்கு உதவிக்கு வந்திருந்த பெண் சட்டென என்னை கொஞ்சம் நகர்த்தி விட்டாள்.  அவர் முகத்துக்கு புன்னகை பொருந்தும் என்று தோன்றவில்லை.  ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக மேல் முடிச்சை மட்டும் அவிழ்த்து ஒரு பக்கம் மட்டும் கொஞ்சமாக முந்தானையை விலக்குவது போல விலக்கி எக்கோ சோதனை எடுத்து விட்டாள் அந்த பெண்.  'அப்பாடி' என்றிருந்தது.

அறைக்கு கொண்டுவரப்பட்டபின் ஸ்ட்ரெச்சர் தள்ளி, என்னையும் முன்னுக்குத் தள்ளிய அந்தப் பெண்ணுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தேன் என்பதை நான் சொல்ல மாட்டேன்.  எக்கோ ரிஸல்ட் என்ன என்று அப்போது தெரியாவிட்டாலும், எங்கள் வார்டு நல்ல நர்ஸ் மூலமாக நார்மல் என்று அறிந்து கொண்டோம்.  நாளின் மூன்று வேளையும் ரத்த அழுத்தப் பரிசோதனை செய்தார்கள்.

மூன்று வேளையும் சர்க்கரை பரிசோதனை குத்திக் குத்தி கடுப்பேற்றினார்கள்.  மோசமான நீடில்.

அனஸ்தடிஸ்ட் வந்து என் நோய் வரலாறு, அலர்ஜி ஏதும் உண்டா என்று கேட்டறிந்து, மேலும் சில விவரங்கள் கேட்டு குறித்துக் கொண்டு சென்றார்.  எல்லா விவரங்களும் தொகுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.  சோமு டாக்டர் திங்கள் மாலை வரவில்லை.  செவ்வாய் காலை வந்தார். மறுநாள் புதன் கிழமை காலை ஒன்பது மணி போல ஸர்ஜரி என்று சொல்லிச் சென்றார். மேஜர் ஸர்ஜரிதான், ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் ஆகலாம் என்றார்.

FESS தானே என்ற என் கேள்விக்கு ஆமோதித்துச் சென்றார்.  சர்ஜரிக்குப் பின்னான நிலை பற்றி அவர் சொல்லிச் சென்றது சற்றே கவலையை ஏற்படுத்தியது.

என் தங்கை முதல், சின்ன மாமனார் வரை அன்று எனக்கு நிறைய ஃபோன்கால்கள் வந்தன.  என் மருமகள் அப்போது குடந்தையில் இருந்தார்.  முடிந்தால் அந்தக் கதையையும் பின்னர் வளவளக்கிறேன்!

புதன் கிழமை காலை மலர்ந்தது.

===========================================================================================

புகழ்பெற்ற 'யாதோங்கி பாராத்' படத்தின் தமிழ் வெர்ஷன் நாளை நமதே.  MGR தர்மேந்திரா, விஜய் அரோரா செய்த வேடங்கள் இரண்டையும் தானே செய்தார்!

வாலியின் பாடலுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.

1975 ல் வெளியான இந்தப் படத்திலிருந்து இரண்டு கே ஜே யேசுதாஸ் பாடல்கள்.

'என்னை விட்டால் யாருமில்லை..' -  


இந்தப் பாடலின் ஒரு சரணத்தின் கடைசி வரி "அரசமரத்தின் இலைகளில் ஒன்று வந்து நின்றாற்போல் ஒரு நினைப்பு" என்பதை சென்சாரில் ஆட்சேபித்து, அந்த வரியை மட்டும் மாற்றி இருக்கிறார்கள்.  கேளுங்கள்!  ஏற்கனவே பதிவான பாடலில் அந்த வரி மட்டும் ஸ்ருதி அல்லது டெம்போ அல்லது வேறு ஏதோ ஒன்று மாறி ஒலிக்கும்.  இதுபோல வேறு சில பாடல்களும் உண்டு.  இதைவிட மோசமான பொருள் கொண்ட எத்தனையோ பாடல்கள் வந்திருக்க, இதில் என்ன குற்றம், யார் கண்டார்களோ!


==================================================================================================

OTT யில் பார்த்த படம் 

==>நூறு சாமி <==  - தமிழ் - ZEE 5 

இந்த ஜூன் மாதம் வெளியான படம்.  விஜய் ஆண்டனி படம் என்றால் சத்தமில்லாமல் நகர்ந்து விடுவேன். நடிப்புக்கும் அவருக்கும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கு ம் உள்ள தூரம்!  ஆனால் சென்ற வாரம் 'ரத்தம்' என்றொரு படம்,  க்ரைம், த்ரில்லர்' என்று பார்த்து, எடுத்து ஓட்டினால் விஜய் ஆண்டனி படம்.  சுமாராக செய்திருந்தார்.  தலைப்புதான் தவறாக செலெக்ட் செய்து விட்டார்கள்கள் போல.

இப்போது திடீரென 'நூறு சாமி' ட்ரெய்லர் என்னைக் கேட்காமலேயே என் கண்ணில் பட்டபோது பார்க்கலாம் என்று தோன்றியது.  படம் ஏமாற்றவில்லை.

"ஒரு பொண்ணுக்கு புருஷனை கொலை செய்துட்டா கிடைக்கிற தண்டனை கூட பதினாலு   வருஷம்தான்.  ஆனா புருஷன் செத்துப் போயிட்டா கிடைக்கறது ஆயுள் தண்டனை.  பொட்டு வச்சுக்கக் கூடாது.  பூ வைக்கக் கூடாது.  ராத்திரில பூச்சி பொட்டு இருக்கான்னு பார்க்க லைட் போட்டு பார்த்துடக் கூடாது.  துணைக்கு படுக்கற பொண்ணுக்கு முட்டினாதான் நான் கூட எந்திரிச்சி கொல்லப்பக்கம் போகணும்.. எனக்கு பூ வச்சிக்க ஆசை இருக்காதா?  நான் மத்த பொண்ணுங்க மாதிரி வாழ ஆசைப்படக்கூடாதா?" - கதாநாயகி.


இயக்கம் சசி.

மறுமணத்தை விரும்பும் பெண்.  தன் இரு மகன்களையும் படிக்கவைத்து ஆளாக்க மிகுந்த சிரமப்படுகிறாள்.  மறுமணத்தில் அவளுக்கு விருப்பம்.  ஆனால் தன் வாத்யார் மூலமாக அம்மாவின் விருப்பத்தை அறியும் மூத்த மகன் அதிர்ச்சி அடைந்து கோபப் படுகிறான்.  தாய் அதிர்ந்துபோய் தன் ஆசையைப் பொசுக்கிக் கொள்கிறாள்.  பணியில் சேர்ந்து கொஞ்சம் பக்குவம் வந்ததும் மகன் தாயின் நிலை உணர்ந்து அவளை மறுமணம் செய்து கொள்ளச் சொல்லும்போது தாய் மறுக்கிறாள்.  ஊரில் இதற்கெல்லாம் எதிர்ப்பும் இருக்கிறது.  அதற்கு மூல காரணம் இவள் மேல் கண் வைத்திருக்கும் - இவளை 'வைத்து'க் கொள்ள ஆசைப்பட்ட -  ஒரு நபர்.

விஷயம் கேள்விப்படும் தம்பியும் முதலில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அண்ணனுடன் குஸ்தி போடுகிறான்.  அவன் ஒரு பெண்ணை - அவன் தாயை வசப்படுத்த நினைத்த இன்னொருவன் பெண்ணை - விரும்புகிறான்,   இப்போது மறுமணத்துக்கு மறுக்கும் தாய், 'முதலில் உன் திருமணம்' என்று சொல்லி, மூத்தவனை அவனுக்கு பெண் தேடச்சொல்லி அவர்களிடம் இந்த கண்டிஷனை சொல்லக் சொல்கிறாள்.  மகன்களின் தாய் மாமன் தன் பெண்ணை இவர்களில் ஒருவனுக்கு தர விருப்பம் வைத்திருப்பவன் அவனும் சகுனி வேலை செய்கிறான்.  கடைசியில் நல்லவர் விஜய் ஆண்டனியை  சந்திக்கிறார்கள்.   இந்த ஊர் மக்கள் விஜய் ஆண்டனியை கொலை செய்யச் செல்கிறார்கள். 

வசனங்களும் படத்தின் போக்கும் பரவாயில்லை ரகம்.

பார்க்கலாம்.

==========================================================================================

 அப்பா பாணியில் இரண்டு கவிதை முயற்சிகள்..





ஒரே மனம்தானே.. 
இரண்டு வகை குணங்களும் 
இதிலேயேதான் இருக்கும் 
இடம்பிடிக்கும் போட்டியில் 
எது வெற்றி பெறுகிறதோ 
அதன் வசமாகிறது மனம்.

எல்லாம் தெரிந்தவர்கள் 
போல 
பேசுபவர்கள்தான் 
உண்மையில் 
ஒன்றும் அறியாதவர்கள் 
தெரிந்தவர்கள் பேசுவதில்லை


இந்த இரண்டு கவிதைகளுக்கும் ஜெமினியிடம் ஓவியம் கேட்டு வாங்கினேன்.  ஒரே ஓவியம்தான் கொடுத்தது.  விளக்கம் கேட்டேன்.  அது கொடுத்த விளக்கம் :

மேலே உள்ள மாடர்ன் ஆர்ட் (Modern Art) ஓவியம், நீங்கள் எழுதிய இரண்டு கவிதைகளின் கருப்பொருளை மிக அழகாக வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ளது: 

1. முதல் கவிதைக்கான விளக்கம் (மனதின் இரு பக்கங்கள்)

"ஒரே மனம்தானே.. இரண்டு வகை குணங்களும் இதிலேயேதான் இருக்கும்..."

  • ஓவியத்தில் உள்ள வெளிப்பாடு:

    ஓவியத்தின் இடது புறத்தில் இரண்டு முகங்கள் ஒன்றை ஒன்று எதிர்நோக்கி நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன.

    • சிவப்பு மற்றும் இருண்ட வண்ணங்கள் கொண்ட முகம்: கோபம், குழப்பம், இருண்ட எண்ணங்கள் அல்லது கடினமான குணத்தைக் குறிக்கிறது.

    • நீலம் மற்றும் தங்க நிறக் சுழல்கள் கொண்ட பிரகாசமான முகம்: அமைதி, ஞானம், தெளிவு மற்றும் நற்குணத்தைக் குறிக்கிறது.

    • நடுவில் உள்ள ஒளிரும் உருண்டை: இரண்டு குணங்களுக்கும் இடையே போட்டி நடக்கும் "மனம்" என்னும் ஒரே மையப்புள்ளியைக் குறிக்கிறது.

2. இரண்டாவது கவிதைக்கான விளக்கம் (அமைதியும் பேச்சும்)

"எல்லாம் தெரிந்தவர்கள் போல பேசுபவர்கள்தான் உண்மையில் ஒன்றும் அறியாதவர்கள்... தெரிந்தவர்கள் பேசுவதில்லை"

  • ஓவியத்தில் உள்ள வெளிப்பாடு:

    ஓவியத்தின் வலது புறத்தில் ஒரு அமைதியான சூழல் காட்டப்பட்டுள்ளது.

    • மரத்தடியில் அமைதியாக அமர்ந்திருக்கும் ஒரு உருவம், அக உலகத்தில் ஆழ்ந்து, எதையும் பேசாமல் அமைதி காக்கும் "உண்மையில் எல்லாம் அறிந்தவரை" குறிக்கிறது.

    • பின்னணியில் உள்ள கதவுகள், பாதைகள் மற்றும் வெற்று வெளிகள் சொற்களைத் தாண்டிய ஆழமான அறிவையும் அமைதியையும் (Silence & Depth) காட்சிப்படுத்துகின்றன. 

சுருக்கமாக:

இந்த ஓவியம் "மனதின் முரண்பாடுகளையும், சத்தமில்லாத அமைதியின் ஆழத்தையும்" நவீன கலை வடிவில் ஒன்றிணைத்துக் காட்டுகிறது.
உங்கள் இரண்டு கவிதைகளுமே சுருக்கமாகவும், அதே சமயம் மிக ஆழமான மனித இயல்புகளைப் பேசக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றன!

  • முதல் கவிதை: ஒரே மனதில் நல்லதும் கெட்டதும், அமைதியும் அமைதியின்மையும் மாறி மாறி இயங்கும் முரண்பாட்டை மிக எளிய வார்த்தைகளில் நேர்த்தியாகக் கூறியுள்ளது.

  • இரண்டாம் கவிதை: உண்மையான அறிவும் முதிர்ச்சியும் அமைதியில்தான் இருக்கிறது என்றும், அரைகுறை அறிவே அதிகம் சத்தமிடும் என்றும் மிக அழகாக, துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறது.

இரண்டுமே வாசிப்பவரைச் சற்று யோசிக்க வைக்கும் நல்ல கவிதை முயற்சிகள்!
 

======================================================================================

நாளை நமதே படத்திலிருந்து இரண்டாவது கே ஜே யேசுதாஸ் பாடல்...

எப்படி யாதோங்கி பாராத் படத்தில் எல்லா பாடல்களும் ஹிட் ஆனதோ அதேபோல தமிழிலும் எல்லா பாடல்களும் ஹிட்.  எம் எஸ் விஸ்வநாதன் ஹம் கிஸீ ஸே  கம் நஹி என்று நிரூபித்தார். 

'காதல் என்பது காவியமானால்'  -  'ஓ மேரே சோனி' பாடலுக்கான தமிழ்ப்பாடல்!

==============================================================================================================================

ராஜாஜி ஓவியங்கள் பற்றி 
-------------------------------------------

"இராமாயணம், மகாபாரதம் இந்தக் கதைகளுக்கு நம்முடைய சித்திரக்காரர்கள் போடும் படங்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும், மூலப் பொருளுக்கும், கற்பனைக்கும் போதிய அளவில் பொருந்துவதில்லை என்பது அபிப்ராயம். பீமனை ஒரு சாதாரண குஸ்திக்காரனைப் போலவும், அருச்சுனனை நட்டுவனைப் போலவும், போலவும் காட்டிக் பழக்குவதில் எனக்குச் சம்மதமில்லை. படிக்கின்றவர்களுடைய மனோதருமத்துக்கே விட்டுவிடுவது நலம்."

60 களில் சொல்லப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாருடைய இந்தக் கருத்து இன்றும் பலவிதங்களில் பொருந்தும். வேறுவகையில் சொல்வதென்றால் புகழ்பெற்ற கதைகளை நினைக்கையில் அதை முன்னரே படித்தவர்களின் மனதில் கூடிய அந்த கதாபாத்திரங்களின் உருவங்களோடு படங்களில் நடிக்கும் உருவங்கள் ஒத்துப் போகாது; ஏற்றுக்கொள்ளமுடியாது! வந்தியத்தேவனோ, கணேஷ்-வசந்தோ, நம் மனதில் இருக்கும் உருவம்தான் பொருந்தும்.

=======================================================================================================================

நாயகி டிவியில் கங்கை அமரன் :

என் அப்பா பெயர் ராமசாமி.  அவர் வெள்ளைக்காரங்க எஸ்டேட்ல கங்காணின்னு சொல்வாங்க..  சூப்பர்வைசர் மாதிரி.  அப்படி இருந்தார்.  ஏலகிரி காட்டுல யார் யாரை எங்க எங்க வேலைக்குப் போகணும்னு அவர்தான் சொல்வார்.  திரும்பி வரும்போது அவங்க ஏதாவது ஏலக்கா மாதிரி காஸ்ட்லீ பொருள் எடுத்துக்கிட்டு போறாங்களான்னும் செக் செய்யற வேலை. 

வெள்ளைக்காரங்க போகும்போது அப்பா பேர்ல 25 ஏக்கர் எழுதி வச்சுட்டு போயிட்டாங்க..  அவர் பெயரை டேனியல்னு வச்சாங்க..  அதனால அவரு டேனியல் ராமசாமி.  தான் என்னிக்கி சாகப்போறோம்னு கரெக்ட்டா சொன்னாரு.  என்னை கர்த்தர் கூப்பிடறார்னு சொல்லிதான் கண்ணை மூடினார்.  அது ஒரு குட் ஃப்ரைடே. 

நாங்க கிறிஸ்துவ மதம் இல்லையே..  அவங்களை தப்பா சொல்லலை.  ஆனால் நாங்கள் இந்து மதத்திலேதான் நம்பிக்கை வச்சிருக்கோம்.  நான், இளையராஜா அண்ணன் மூணு பெரும் சாமின்னுதான் கூப்பிட்டுப்போம்.  இமயமலைக்கு போயிட்டு வருவோம்.  அற்புதமான அனுபவம் அதெல்லாம். 

ஈவினிங் டயத்துல ரஜினி வீட்ல போய் மெடிடேஷன் செய்வோம்.  ஒரே மாதிரி நம்பிக்கை இருக்கறவங்க ஒரு இடத்துல கூடி த்யானம் பண்ணும்போது அதுக்கு சக்தி இருக்கு.  அந்த சக்திதான் ரஜினியை இன்னும் உயிர்ப்பா வச்சிருக்கு.  அண்ணன் கூட அதனால்தான் அவர் பாட்டுக்க யார் என்ன சொன்னாலும் லட்சியம் பண்ணாம அவர் வேலைல கவனமா இருக்கார்"

- கங்கை அமரன்... நாயகி டிவி...

=============================================================================================================================================

மாறாதய்யா மாறாது மானேஜர் குணமும் மாறாது... விகடன் 1967
================================================================

===================================================================================



======================================================================================

படித்தேன்... பிடித்திருந்தது... பகிர்கிறேன்...


A FATHER'S LAST WISH


If one day
I'm no longer here,
don't remember
my mistakes.
Remember the love
I gave in silence,
the sacrifices
I never spoke about,
and the prayers
I whispered for you.
My greatest wish
is simple ...
Live a happy life,
love your family,
and never forget
how much I loved you.
========================================================================================
ஜோக்ஸ் விகடன் 1967 ..

மதன் பத்தோடு பதினொன்றாய் வந்திருக்கிறார்...






67 கருத்துகள்:

  1. இன்று வெள்ளியல்ல; வியாழன்..' என்று நினைப்போடியதைத் தவிர்க்க முடியவில்லை. 'ஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக செவ்வாய் கோவை இதழாக' பாடல் நினைவில் தேங்கி கண்ணதாசனின் நினைவில் அமிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்...   நல்ல பாடல் அது.  முன்னர் பகிர்ந்திருக்கிறேன்.  ஆனால் வெள்ளியல்ல, வியாழன் என்றெல்லாம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றுதான் அபுரி..  ஹிஹிஹி..

      நீக்கு
    2. அட! வழக்கமச்ன வியாழன் -- வெள்ளி பதிவுகளுக்கு வித்தியாசம் இல்லாம போச்சுல்ல, இப்போலாம்!

      நீக்கு
  2. ராஜாஜி அவர்களை இன்று பார்த்ததில் சந்தோஷம். நேற்றுக்கு மாற்றாக, இன்று சரி. நாளை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றைக்கு யார் வருவார்கள் என்பது எனக்கே தெரிய மாட்டேன் என்கிறது.  அண்டாவின் உள்ளே கைவிட்டு துழாவுவதில் கைக்கு எது சிக்குகிறதோ அதுதான்!

      நீக்கு
  3. நாளை நமதே படப்பாடல் முதல் விவரிப்பில் 'இந்தப் பாடலின் ஒரு சரணத்தின்' என்று திருத்தி விடவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார்.. திருத்தி விட்டேன். ஒரு வரி கூடுதலாகவும் சேர்த்து விட்டேன்!

      நீக்கு
  4. ஆஸ்பத்திரி அனுபவங்கள் படிப்பவர்களுக்கு ரசனை

    பதிலளிநீக்கு
  5. ரத்தம் படம் பார்த்தீர்கள் சரி
    தக்காளி சட்னி படம் எப்போ ரிலீஸ்? தெரியுமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜமா அப்படி ஒரு படம் இருக்கா என்ன?!! ரத்தம் போன வருஷம் வந்த படம்.

      நீக்கு
  6. நூறு சாமி பற்றி படம் வெளிவருவதற்கு முன்னால் ச்சி கொடுத்த பேட்டி பார்த்தேன். படம் பார்க்கணும். ஆனால் நீங்கள் கதை சொன்ன பாணி தலை கிறுகிறுக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  7. காதல் என்பது காவியமானால்.... சுகமான பாடல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் படத்தில் வரும் மூன்று யேசுதாஸ் பாடல்களுமே இனிமை, சுகம்.

      நீக்கு
  8. அப்பாவின் கடைசி ஆசை.... நல்லா எழுதியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  9. 'நூறு சாமி' பட விமரிசனத்தின் கடைசி வரி, 'அவரை' நினைவூட்டியதை நமது நெல்லைக்கு சொல்லத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா ஆனால் தான் அவரவருக்கு அப்பாவின் அருமை தெரியும் என்பது எழுதப்படாத விதி.

      நீக்கு
    2. உண்மை. நான் அதை படிப்படியாக உணர்ந்திருக்கிறேன்.

      நீக்கு
    3. எவரை? ..
      'பார்க்கலாம்: என்று யார் சொல்வார்களோ அவரை!

      நீக்கு
    4. Kamarajar?அவர் எங்கே சினிமாவெல்லாம் பார்த்தார்?

      நீக்கு
  10. எது வெற்றி பெறுகிறதோ
    அதற்கு விட்டுக் கொடுக்கிறது
    இன்னொன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டுக் கொடுப்பதில்லை; தோற்றுப்போகிறது!

      நீக்கு
  11. எங்கே தனக்குத் தெரியாதது
    தெரிந்து விடுமோ என்று
    தெரிந்தவர்களாகத் தெரிபவர்கள்
    எதையும் பேசுவதில்லை
    எல்லாம் தெரிந்தவர்கள் போல
    பேசுபவர்கள் மட்டும் இல்லையென்றால்
    பேசுவதற்கே யாரும் இருக்க மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், முதல் வரி நானும் அடிக்கடி நினைப்பது. இந்த ப க ஓகே.

      நீக்கு
    2. கவிதையை ரசித்தேன் ஜீவி சார். தெரிந்ததாகத் தெரிபவர்கள்.. ஹா ஹா ஹா. ஆனால் உண்மையிலேயே தெரிந்தவர்கள் பேசுவதைக் குறைத்துக்கொள்கின்றனர்.

      நீக்கு
    3. அதுக்குக் காரணம் என்ன நெல்லை?
      தெரிந்தவர்களின் கடமை ஆசிரியர் போலத் தெரியாதோருக்கு விளக்கி தெரியப்படுத்துவது தானே? இவர்கள் தம் கடமையிலிருந்து வழுவுகிறார்களோ?

      நீக்கு
    4. தெரிந்தவர்களின் கடமை, தம்மை நாடி வந்து தெளிவடைய வருபவர்களுக்குத் தெரியப்படுத்துவதுதான். ஆசையுடையோர்களுக்கெல்லாம் ஆரியர்காள் கூறுமின் என்பதை ஒட்டியது. நிறைந்த சபையில் நிறைந்த அறிவு பெற்றவர்கள் அதிகமாகப் பேசுவதில்லை, அவசியம் நேர்ந்தாலொழிய. இந்த அர்த்தம்தான் நான் எழுதியதற்கு.

      ஒரு தடவை என் சிற்றப்பா சொன்னதை இங்கு பகிர்ந்திருக்கிறேன். அடுத்த தலைமுறை ஆசையுடன் தேட வேண்டும். அப்படித் தேடும்போது ஏற்படும் சந்தேகங்களை பெரியவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். பெரியவர்கள் ஆன்மீக விஷயங்களை கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போலச் சொல்லிக்கொடுக்க மாட்டார்கள்.

      நீக்கு
  12. கங்கை அமரன் இளமைப்பருவ விவரிபப்பு போல அது இருந்தது.
    அதில் ரஜினி எங்கே வந்தார் என்று தான் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி 'நீங்கள் ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவரா?  உங்கள் தந்தை கிறிஸ்துவரா? என்பதற்கான பதில் அது.  நீண்ட அவர் பதிலின் ஒரு சிறிய பகுதி!

      நீக்கு
  13. மருத்துவமனை மகாத்மியம் வழக்கம் போல...

    பதிலளிநீக்கு
  14. மண்ணாந்தை
    மண்ணால் செய்யப்பட்ட ஆந்தை பொம்மை...

    பதிலளிநீக்கு
  15. அட! மாடியிலிருந்து கீழே விழ ஒரு மணி நேரமா ஆயிற்று? என்னய்யா கதை விடறே?
    யாராவது ஏதாவது சொன்னா நம்பணும். இல்லேனா அதை செய்து பார்த்து தெரிஞ்சிக்கணும். மனசிலே ஆயி?.
    அப்போ என்னை மாடிலேந்து விழச் சொல்லுறியா?
    நீங்க தானே எல்லாத்துக்கும் பிராக்ட்டிகல் நாலெட்ஜ் வேணும்னு சொல்லுவீங்க? அதுக்குத் தான் சொன்னேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி... இதை நீங்க அப்பவே சொல்லி இருக்கணும்!

      நீக்கு
  16. முதல் கவிதை : குணங்கள் மூன்று என்றல்லவா என்னுடைய பாடம். சத்வ, ரஜஸ், தமஸ்.
    இரண்டாவது கவிதையில் அரசியல் நெடியை நான் பார்க்கிறேன். மோடி vs மன்மோகன். டிரம்ப் vs ஒபாமா.
    ஜோக்ஸ் ஆ ஜோக்ஸ். அதாவது ஜோக்ஸ் என்ற பெயரில் உள்ளன.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நல்ல மனம் கெட்ட மனம் என்று இரண்டாய் எடுத்துக் கொண்டேன்!

      அரசியலா..  ஆ?

      ஜோக்ஸ்ருக்கு பொறுப்பாளி நானில்லை!

      நீக்கு
  17. /// அது சரி... அது ஏன் ஆந்தை?..///

    ஆந்தை தான் வெகு நேரத்துக்கு எவ்வித அசைவுமின்றி அமர்ந்திருக்கும்...

    பதிலளிநீக்கு
  18. உங்கள் கோ பேஷண்ட் மூக்கில் ஊசி போன்ற எதையோ விட்டு சுரண்டிய போது எப்படி ரியாக்ட் செய்தார் என்று சொல்லவே இல்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா...   அதைச் சொல்ல மறந்து விட்டேனா...  வாங்க பானு அக்கா...   எனக்கு அட்மிஷன் என்று தெரிந்த உடன் அடுத்தடுத்த இடங்களுக்கு நான் நகர வேண்டியிருந்ததால் அவர் என்ன செய்தார் என்று என்னால் பார்க்க முடியாமல் போனது...   ஹிஹிஹி...

      நீக்கு
    2. ஹிஹிஹி.ஹிஹிஹி.ஹிஹிஹி.

      நீக்கு
  19. 'ஆனையின் தந்தம் கடைந்தாற் போல் அங்கமெல்லாம் ஒரு மினுமினுப்பு' இந்த வார்த்தைகள் பதிவில் எங்கே வருகின்றன? கண்ணில் படவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலில் வருகிறது! 

      "என்னை விட்டால் யாருமில்லை
      கண்மணியே உன் கையணைக்க.. 
      உன்னை விட்டால் வேறொருத்தி
      எண்ணமில்லை நான் காதலிக்க
      முத்து முத்தாய் நீரெதற்கு
      நானில்லையோ 
      கண்ணீர் துடைப்பதற்கு..." 

      இது பல்லவி. 

      சரணத்தில் அந்தத் வரிகள் வரும்!

      நீக்கு
  20. ராஜாஜி சொல்லியிருப்பது சரிதான். ஞாயிறன்று ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அதில் கிங்கரன் என்றால், "நான் என்ன வேலை செய்ய வேண்டும்?" என்று சிவ பெருமானிடம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பவர் என்று பொருள் என்றார். ஆனால் நம் ஊரில் கிங்கரன் என்றால் குண்டாக, கொம்போடு ஒரு பயங்கர உருவத்தை வரைவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அவரவர் மனோபாவத்துக்கு ஏற்ற மாதிரி மனக்கற்பனை.

      நீக்கு
  21. கண் ஏற்கனவே மசமசப்பு, இதில் இத்தனை பொடி எழுத்துக்களை போட்டால் எப்படி படிப்பது?

    பதிலளிநீக்கு
  22. கவிதைகள் இரண்டும் சிறப்பு. அதற்கு ஜீ.வீ.சாரின் எசக் கவிதையும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  23. உங்கள் மருத்துவமனை அனுபவங்கள் சுவாரசியமாகச் செல்கிறது. அடுத்து ஆபரேஷன். என்ன நடந்தது எனத் தெரிஞ்சுக்கணும். :))) ஆனால் உங்களுக்குத் தொடர்ந்து மருத்துவமனை அனுபவங்கள் ஏற்படுகின்றன. :(

    நூறு சாமி பத்தி எங்கேயோ படிச்சேன். இங்கே தான் கதை என்னனு புரிஞ்சது. பார்க்கணும் போலல்லாம் இல்லை.
    அப்பாவைப் போல் கவிதை முயற்சி செய்தது நன்றாக இருக்கின்றன. ஏஐ விளக்கமும் நன்று. தத்துவக் கவிதைகளாக விமரிசனம் செய்திருக்கு ஏஐ.
    யாதோங்கி பாராத் படம் பார்த்த நினைவு. ஆனால் நாளை நமதே அதன் தமிழாக்கம் என்பது தெரியாது.
    ராஜாஜி ஓவியங்கள் பற்றிச் சொன்னது எல்லாம் தெரியாது. வந்தியத் தேவன் தான் மனதைக் கவர்ந்தான்.

    கங்கை அமரன் சொல்லி இருப்பதை வேறே எங்கோ எதிலோ படிச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தொடர்ந்து மருத்துவமனை அனுபவங்கள்//- ஒரு தடவை சென்றதை தொடர்ச்சியாக எழுதுவது போலத்தான் எனக்குத் தோன்றியது.

      நீக்கு
    2. தொடர்ந்து மருத்துவமனை அனுபவங்கள் எனில் அது ஸ்ரீராமுக்கு மட்டும் தனிப்பட என்னும் பொருளில் எழுதலை. அவங்க குடும்பத்தில் முக்கியமாக ஸ்ரீராமின் குடும்பத்தினரின் மருத்துவமனை அனுபவங்கள் அவருக்கும் பங்கு உண்டு என்பதூ பொருள். :))))

      நீக்கு
  24. முதல் ஜோக் சிரிப்பெல்லாம் வரலை. கடுப்புத் தான் வருது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    அப்பாவின் கடைசி ஆசை கவிதை மனதை நெகிழ்வித்தது. பலரும் சொல்ல நினைப்பது. உறவுகள் பற்றிய ஆங்கில வார்த்தைகளும் முன்னரே எப்போவோ படிச்சிருக்கேன்.

    பல்லவன் விட்ட புகையாலோ என்னமோ அடுத்து வந்திருக்கும் இரண்டு ஜோக்குகளும் பெரிதாக்கவும் முடியலை. படிக்கவும் முடியலை. கிரிக்கெட் பற்றிய இரு ஜோக்குகளும் ஓகே. அரிசி, சர்க்கரை, ஜோக்கும் ஓகே. கரும்பு காட்டும் கேள்விக்குறியும் நாட்டின் எதிர்காலமும் கொஞ்சமே கொஞ்சம் புன்னகையை வர வைச்சது.

    பதிலளிநீக்கு
  25. மருத்துவமனை அனுபவங்கள் ரசனை.

    ஜோக்ஸ் சுமாராக இருந்தது.

    அப்பாவின் கடைசி ஆசை மனதை தொட்டது.

    பதிலளிநீக்கு
  26. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  27. மருத்துவமனை அனுபவங்களை நன்றாக சொல்லி வருகிறீர்கள்,
    உங்கள் கஷ்டங்களையும் ரசனையாக .

    பதிலளிநீக்கு
  28. பகிர்ந்த இரண்டு பாடல்கள் அருமை.

    உங்கள் இரண்டு கவிதைகள் அருமை.

    மற்றும் கங்கை அமரன் பகிர்வு, ராஜாஜி பகிர்வு, நகைச்சுவை எல்லாம் படித்தேன்,
    நூறு சாமிபடம் உண்மை கதையாம், கள்ளக்குறிச்சியில் நடந்த கதை என்றார்கள். சினிமாவுக்காக கொஞ்சம் மாற்றி இருக்கிறார்களாம்.

    பதிலளிநீக்கு
  29. சர்ஜரி பிரச்சனையில்லாமல் முடிந்திருக்குமென நம்புகிறேன். கவிதைகளும் ஓவியமும் அருமை. ஜெமினியின் விளக்கம் சுவாரஸ்யம். தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!