கேள்வி பதில்கள் :
நெல்லைத்தமிழன் :
1 அரசியல்வாதிகள் அவங்க ஆட்சி செய்யும்போது அயோக்கியர்களாகவும் பிறர் ஆட்சி செய்யும்போது உத்தமர்களாகவும் பேசுவது ஏன்? சமீப உதாரணங்கள் கேள்வித்தாள் கசிவு, தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் வேண்டும் என இப்போது பேசும் ஸ்டாலின்.
# தற்காலத்தில் அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள். " நீ மட்டும் என்ன செய்தாய் ? இதுவேதானே " என்பது அதன் பிரதானவிசேஷம்.
& அரசியல்வாதி என்ற ஒரு வார்த்தை போதும் வார்த்தை மாறுபவர்கள் என்பது தெரிந்துகொள்ள!
2 பெண்கள் தங்களுக்குப் பிடித்த உணவை செய்கிறார்களா இல்லை பெரும்பாலும் ஹோட்டல் நடத்துபவர்கள் செய்வதுபோல கணவன் குழந்தைகள் மாமியார் மாமனார் என அவர்களோட விருப்பத்திற்காகப் பண்ணி அதையே தங்களுக்குப் பிடித்ததாக எண்ணிக்கொள்கிறார்களா?
# தாங்கள் நன்றாகச் செய்யும் பலவற்றையும் செய்து எல்லாரையும் "பழக்கி" விடுகிறார்கள்.
3 நல்ல டூரிஸ்ட் இடங்கள், லட்சம் பேர் போகும் கோயில் நகரங்கள், போன்றவற்றில் உருப்படியான ஹோட்டல்களே இருப்பதில்லையே. என்ன காரணம்?
# எது செய்தாலும், அது எவ்வளவு மோசமானாலும் அத்தனையும் விற்றுப் போகும் என்பதால்தான்.
& டூரிஸ்ட் இடங்களில் உள்ள ஹோட்டல்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. கோவில் பக்கத்தில் உள்ள ஹோட்டல் = அது ஹோட்டல் நடத்துபவர்களுக்கு கடவுள் இட்ட சாபம். ' இங்கே பாரு, இந்தத் தலத்துக்கு வருபவர்கள் எனக்காக வருபவர்கள் - அதை உனக்காக வருபவர்களாக மாற்றாதே - அதை மீறி நன்றாக எல்லாம் செய்தால், உன் வியாபாரத்தை கெடுப்பேன்' என்று சொல்லி சாபம் கொடுத்திருப்பார்!
4. என்னுடைய கணிப்பு, ஒரு பொருளுக்கு அளவுக்கு அதிகமான விளம்பரங்கள் வந்தால், பொருள் சுத்த வேஸ்டாக இருக்கும் என்பது. அல்லது 10 பைசா பொருளை 5 ரூபாய்க்கு விக்கறான்னு நினைப்பேன். உங்கள் எண்ணம் என்ன?
# முற்றிலுமாக அப்படியல்ல. சில பொருட்களை வேண்டுமென்றே குறைந்த விலைக்கு ஆரம்பத்தில் மிக அதிக விளம்பரத்துடன் விற்று போட்டியாளர்களை கூண்டோடு அழித்து விடுவதும் ஒரு வியாபார உத்தி.
5. குழந்தைக்கு மாட்டுப்பால் நல்லது என்று சொல்றாங்களே. அப்போ கன்றுக்கு பால் வேண்டாமா? நாம் அதீதமா பால் சாப்பிட்டா கால்சியம் வரும் அது வரும் இது வரும்னு ஏமாற்றுகிறோமா?
# காட்டுப் பிராணியாக இருந்த மாடு வீட்டுப் பிராணி ஆன பிறகு அதன் உணவு முறையும் அதன் பால் சுரக்கும் அளவும் பெருத்த மாற்றத்துக்கு உள்ளானது என்பதால் இப்பொழுது நாம் பால் அதிகம் சாப்பிடா விட்டால் கன்றுக்கு மட்டுமல்ல, மாட்டுக்கும் அது ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
6. 'நான் சொல்றேன்.. இந்த டூத் பேஸ்டுதான் நல்லது', 'நான் சொல்றேன் இந்த ஹேர் ஆயில் உறுதி செய்யப்பட்டது' என்றெல்லாம் டாக்டர் மாதிரி கோட் போட்டுக்கிட்டு விளம்பரத்துல வர்றாங்களே.. இவங்க போலி டாக்டரா? இல்லை அந்தப் பொருளை இருபது ஆண்டுகள் ஆய்வகத்துல சோதனை செய்திருக்காங்களா? எப்படி அரசு இந்த போலி டாக்டர் விளம்பரங்களை அனுமதிக்குது?
# இப்போதிருக்கும் சட்டங்கள் கெடுதல் விளைவிக்காத அளவுக்கு விளம்பரங்கள் சாமர்த்தியமாக அமைக்கப்படுகின்றன.
& சோதனை எல்லாம் ஒன்றும் செய்திருக்கமாட்டார்கள் என்று நூற்றுக்கு 90 பேர்கள் சொல்கிறார்கள். நீங்க வேண்டுமானால் நூறு பேர்களைக் கேட்டுப்பாருங்கள்!
= = = = = = = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
பேர்ல் ரவுண்டபவுட் பற்றி எழுதும்போது இந்தப் படத்தையும் பகிரத் தோன்றியது. இதற்கு முன்பு நின்றுகொண்டு நாங்கள் எல்லோரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். பிற்காலத்தில் இது முற்றிலுமாக அழிக்கப்படும் என்று நினைத்திராத சமயம் அது. அதன் மீது அரசுக்கு எவ்வளவு கோபம் என்றால், அந்தப் படத்துடன் கூடிய நாணயத்தைக்கூட அரசு மாற்றிவிட்டது. இப்போதைய தலைமுறைக்கு அப்படி ஒரு ரவுண்டபவுட் இருந்ததே தெரியாது.
எனக்கு என் அப்பாவை ரொம்பவே பிடிக்கும். (நல்லா அவர்கிட்ட அடிலாம் வாங்கியிருக்கேன்) ஆனாலும் அவருக்கு என் மீது தனிப்பட்ட அன்பு உண்டு (இந்தப் பய எதுக்கும் லாயக்கில்லாதவனாகவே இருக்கானே... இவன் எப்படிப் பிழைக்கப்போகிறான் என்ற எண்ணத்தினால் தோன்றிய அன்பாகவும் இருக்கலாம்).
2000ல், என் சகோதரன் சௌதியில் வேலை பார்த்துவந்தான். அப்போ என்னிடம், அப்பாவை பஹ்ரைன் கூட்டிவாயேன், நாங்களும் வந்து பார்க்கிறோம் என்றான் (சௌதிக்கு வரவழைப்பது மிகக் கடினம்). அப்போது எனக்கு செலவுக்கணக்கு பார்க்கும் வழக்கம் அதிகம். அதனால் முயற்சி செய்யவில்லை. பிறகு காசைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்படாத நிலை வந்தபோது என் அப்பாவைக் கூப்பிட்டேன். அவர் இனிமேல் நான் விமானத்தில் அவ்வளவு நேரம் பயணிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அப்பா மறைந்த அடுத்த வருடம் அம்மாவை பஹ்ரைன் கூட்டிவந்தேன் (முதல் இரண்டு முறை, நான் சென்னை வந்து, விமானத்தில் கூட்டிவருவேன். திரும்பச் செல்லும்போது கூட்டிக்கொண்டு விட்டுவிட்டு வருவேன். அப்படி என் நிலைமை இருந்தது). அம்மாவை என்னுடைய காரில் பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றது என் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியது.
= = = = = = = = = = = = =
KGG பக்கம் :
சரோஜாதேவி தொடர் கதை
சென்ற வாரம் - சுட்டி : பகுதி 10: ராபின்ஹூட் நாநா !
இனி
இந்த வாரப் பகுதி.
பகுதி 11 : " நாநாவின் திட்டம் : MCEL 01
ஹோட்டல் என்றாலே உடலுக்கு தீங்கு விளைவிக்கிற இடம். நம் knowledgeக்கு தெரியாத அறியாதவர்கள் சமைக்கிற இடம். Food poison என்பதெல்லாம் இப்பொழுது சகஜமாக இருக்கிறது. இதில் உருப்படியான, உருப்படியில்லத என்ற பாகுபாடெல்லாம் உண்டா, என்ன?
பதிலளிநீக்குஅரசியல்வாதிகள், அவங்க -- என்று அன்னியப்பட்டு விலகிப் பேசுவதே ஒரு அரசியல் தானோ? நமக்கு வேண்டப்பட்ட ஆளும் தரப்பினர் இந்த பட்டியலில் வராதவராத உத்தமர்கள் போல நினைக்கிற அளவுக்கு நாம் அறியாமையில் உழல்கிறோமா, என்ன?
பதிலளிநீக்கு