எப்போதும் பாசிப் பருப்போ, துவரம்பருப்போ சேர்த்து கீரை மசியல் செய்வது வழக்கம்.
பல வருடங்களுக்கு முன்...! என் இளமைக் காலத்தில்... ! ஒரு நாள்...
வீட்டில் பருப்பில்லாத மாதக் கடைசி. கீரை வாங்கி வந்து விட்டார் அப்பா. அப்போது அம்மா பருப்பில்லாமல் செய்த அந்தக் கீரை மசியலை அப்புறம் பல முறை பருப்பிருந்த நாட்களிலும் செய்திருக்கிறோம்.
முளைக்கீரையை மண்ணில்லாமல் அலசி, அழகாக நறுக்கிக் கொண்டு அப்படியே ஒரு பாத்திரத்திலிட்டு, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து,
தேங்காய், பச்சை மிளகாய், இரண்டு சீரகம் வைத்து மிக்ஸியில் அரைத்துக்கொண்டு,
வெந்த கீரையில் இட்டுக் கலக்கி, பெருங்காயம் தூவி, தேங்காய் எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து,
சாப்பிட வேண்டியதுதான்.
தீர்ப்பு : ஆனாலும் பருப்பில்லாத மசியல் எப்போதாவது சாப்பிடலாமே தவிர, எப்போதும் சாப்பிட பருப்போடு செய்யும் மசியலே......!












