சேனை மசாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேனை மசாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.8.15

"திங்க" க்கிழமை 150810 :: சேனை மசாலா.



சேனைக்கிழங்குக்கும் எங்களுக்கும் ஏழாம் பொருத்தமான ஒரு சம்பவத்தை இந்தப் பதிவில் படித்திருப்பீர்கள்!
 
இப்போது வேறு ஒரு முயற்சி.   அப்போது செய்ய இருந்த முயற்சிதான்!
 
இது யாரும் செய்யாதது இல்லை.  இதை நாங்கள் இந்தமுறை செய்தோம்.  அவ்வளவுதான்!  இதன் மூலம் யாராவது ஒருவராவது பயனடைந்தால் (ஹிஹிஹி) சரிதான்!
 
என்ன செய்தார்கள் என்றால்,
 

                                                            Image result for சேனைக்கிழங்கு
 
சேனைக்கிழங்கை கழுவி, சுத்தம் செய்து, தோல் நீக்கிக் கொண்டு அரிப்பை நீக்கும் சிகிச்சை செய்தபின்,
 
சற்றே பெரிய துண்டுகளாக அவற்றை நறுக்கி எடுத்துக் கொண்டு,


                                                                             Image result for சேனைக்கிழங்கு
 
கொஞ்சம் புளியை எடுத்து, கெட்டியாகக் கரைத்துக் கொண்டு, அதில் உப்பு, காரப்பொடி, ( நாங்கள்  மசாலாப் பொடி சேர்க்கவில்லை!  தேவைப்படுபவர்கள் சேர்த்துக் கொள்ளலாம் ) சேர்த்துப் பிசைந்துகொண்டு,
 
அதில் நறுக்கிய சேனைத் துண்டுகளைப் போட்டுப் புரட்டி, குலுக்கி, 15 நிமிடங்கள் ஊறவைத்து, 'மைக்ரோவேவ் அவனி'ல் நான்கு நிமிடங்கள் வைத்து எடுத்துக் கொண்டு,
 
வாணலியில் எண்ணெய் விட்டுக் கொண்டு இந்த சேனையைப் போட்டு, உடையாமல் புரட்டும் நேரம்....

 
கொஞ்சம்  சின்ன வெங்காயம் எடுத்து உரித்துக் கொண்டு, கொஞ்சம் கொத்துமல்லி, இரண்டு பச்சை மிளகாய்,  இரண்டு பட்டை மிளகாய், கொஞ்சம் உப்பு, இரண்டு பல் பூண்டு ( நாங்கள் இஞ்சி சேர்க்கவில்லை.  தேவையானால் சேர்த்துக் கொள்ளலாம் ) அப்படியே பச்சையாக மிக்ஸியிலிட்டு நன்றாக அரைத்துக் கொண்டு,  அதை வாணலியிலிட்டு, பச்சை வாசம் போக வதக்கிக் கொண்டு,

 
பக்கத்து வாணலியில் மொருமொருத்துக் கொண்டிருக்கும் சேனையை இதில் எடுத்துப் போட்டு,  உடையாமல் புரட்டி விடவும்.  நன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து விடலாம்!
 

 
வீட்டில், "தொட்டுக் கொள்ள எல்லாம் வேண்டாம்..... அப்படியே சாப்பிடுகிறோம்" என்று சொல்லி காலி செய்து விட்டோம்!
 




இந்தக் கலவையில் சேனையைப் போடாமல் தனியாகவும் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டோம்.  வெங்காயம் சாப்பிடாதவர்களுக்கும், மொறுமொறு என்று மட்டுமே சாப்பிடப் பிடிப்பவர்களுக்கும்!





எப்பவும்  சின்னச் சின்னதா நறுக்கி ரோஸ்ட் செய்யறோமே...  மாறுதலாய் முயற்சி செய்வோமே என்று..!









படங்கள்  : கடைசி மூன்று படங்கள் மட்டும் சொந்தம்!  மற்றவை இணையத்திலிருந்து!