திங்கள், 10 ஆகஸ்ட், 2015

"திங்க" க்கிழமை 150810 :: சேனை மசாலா.சேனைக்கிழங்குக்கும் எங்களுக்கும் ஏழாம் பொருத்தமான ஒரு சம்பவத்தை இந்தப் பதிவில் படித்திருப்பீர்கள்!
 
இப்போது வேறு ஒரு முயற்சி.   அப்போது செய்ய இருந்த முயற்சிதான்!
 
இது யாரும் செய்யாதது இல்லை.  இதை நாங்கள் இந்தமுறை செய்தோம்.  அவ்வளவுதான்!  இதன் மூலம் யாராவது ஒருவராவது பயனடைந்தால் (ஹிஹிஹி) சரிதான்!
 
என்ன செய்தார்கள் என்றால்,
 

                                                            Image result for சேனைக்கிழங்கு
 
சேனைக்கிழங்கை கழுவி, சுத்தம் செய்து, தோல் நீக்கிக் கொண்டு அரிப்பை நீக்கும் சிகிச்சை செய்தபின்,
 
சற்றே பெரிய துண்டுகளாக அவற்றை நறுக்கி எடுத்துக் கொண்டு,


                                                                             Image result for சேனைக்கிழங்கு
 
கொஞ்சம் புளியை எடுத்து, கெட்டியாகக் கரைத்துக் கொண்டு, அதில் உப்பு, காரப்பொடி, ( நாங்கள்  மசாலாப் பொடி சேர்க்கவில்லை!  தேவைப்படுபவர்கள் சேர்த்துக் கொள்ளலாம் ) சேர்த்துப் பிசைந்துகொண்டு,
 
அதில் நறுக்கிய சேனைத் துண்டுகளைப் போட்டுப் புரட்டி, குலுக்கி, 15 நிமிடங்கள் ஊறவைத்து, 'மைக்ரோவேவ் அவனி'ல் நான்கு நிமிடங்கள் வைத்து எடுத்துக் கொண்டு,
 
வாணலியில் எண்ணெய் விட்டுக் கொண்டு இந்த சேனையைப் போட்டு, உடையாமல் புரட்டும் நேரம்....

 
கொஞ்சம்  சின்ன வெங்காயம் எடுத்து உரித்துக் கொண்டு, கொஞ்சம் கொத்துமல்லி, இரண்டு பச்சை மிளகாய்,  இரண்டு பட்டை மிளகாய், கொஞ்சம் உப்பு, இரண்டு பல் பூண்டு ( நாங்கள் இஞ்சி சேர்க்கவில்லை.  தேவையானால் சேர்த்துக் கொள்ளலாம் ) அப்படியே பச்சையாக மிக்ஸியிலிட்டு நன்றாக அரைத்துக் கொண்டு,  அதை வாணலியிலிட்டு, பச்சை வாசம் போக வதக்கிக் கொண்டு,

 
பக்கத்து வாணலியில் மொருமொருத்துக் கொண்டிருக்கும் சேனையை இதில் எடுத்துப் போட்டு,  உடையாமல் புரட்டி விடவும்.  நன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து விடலாம்!
 

 
வீட்டில், "தொட்டுக் கொள்ள எல்லாம் வேண்டாம்..... அப்படியே சாப்பிடுகிறோம்" என்று சொல்லி காலி செய்து விட்டோம்!
 
இந்தக் கலவையில் சேனையைப் போடாமல் தனியாகவும் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டோம்.  வெங்காயம் சாப்பிடாதவர்களுக்கும், மொறுமொறு என்று மட்டுமே சாப்பிடப் பிடிப்பவர்களுக்கும்!

எப்பவும்  சின்னச் சின்னதா நறுக்கி ரோஸ்ட் செய்யறோமே...  மாறுதலாய் முயற்சி செய்வோமே என்று..!

படங்கள்  : கடைசி மூன்று படங்கள் மட்டும் சொந்தம்!  மற்றவை இணையத்திலிருந்து!
 

52 கருத்துகள்:

 1. சேனைக்கிழங்கு அரிப்பு வரும் என்பதால் நான் விரும்புவதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதோ அதிசயம், இதுவரை நாங்கள் அரிக்கும் சேனையை நாக்கில் சந்தித்ததில்லை கில்லர்ஜி. நன்றி.

   நீக்கு
 2. அடா...அடா...அடா...

  அட்ரஸ் சொல்லுங்க செல்லுலே ...

  ஓலா டாக்சிலே ஓடி வாரேன் .

  வந்துக்கினே இருக்கேன்.

  இந்தக் கிழவி கிட்டே நானும் எத்தனை வருசமா மன்னாடி கிட்டு இருக்கேன்.
  பண்ணித்தர மாட்டேன் அப்படின்னு அடம் பிடிக்கிறா...


  கடவுளா பாத்து கண் துரந்துட்டாரு .

  சேனை மசாலா இருக்கே அது
  வெத்தக்குழம்பு சாதம் இல்லேன்னா
  புளியோதரையுடன் சாப்பிட்டா
  பிரமாதம். பிரமாதம்.

  யாரு..ஓலா டாக்சி டிரைவரா ?
  எங்கயா இருக்கே..
  ஓடி வாய்யா...
  நம்ம போறதுக்குள்ளே தீந்து போயிடப்போவுது.


  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.. சுப்பு தாத்தா... இதை விடப் பெரிய பாராட்டு வேண்டுமா? நன்றி.

   நீக்கு
 3. குறிப்பு நன்றாக இருக்கிறது. அதென்ன அரிப்பை நீக்கும் சிகிச்சை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புளித்தண்ணீரில் அல்லது உப்பு நீரில் காயை அலசுவதுதான் அரிப்பு நீக்கும் சிகிச்சை மனோ சாமிநாதன் மேடம். ஆனால் உண்மையைச் சொல்லணும்னா நாங்க அதுபோல ட்ரீட்மெண்ட் தராமலேயே ஒழுங்காகத்தான் இருக்கும் சேனை! வாங்கிய அன்றே சமைக்காமல், சிலநாள் கழித்து சமைத்தால் அரிப்பு இருக்காது என்பார் என் பாஸ்.

   நீக்கு
 4. சேனை அரசருக்கு மட்டுமல்ல ,எனக்கும் பிடிக்கும் :)

  பதிலளிநீக்கு
 5. ம்ம்ம்ம்ம்...
  செய்து பார்த்துவிட வேண்டும் அண்ணா...

  பதிலளிநீக்கு
 6. //பக்கத்து வாணலியில் மொருமொருத்துக் கொண்டிருக்கும் சேனை//

  ஆஅஹா ! சீக்கிரமே செஞ்சி பாக்கணும்

  பதிலளிநீக்கு
 7. எல்லா வகையிலும் சாப்பிட்டுப் பார்த்துவிட்டேன்.... இந்தக் காய் எனக்கு பிடிப்பதே இல்லை... :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கார்த்திக் சரவணன். இதுபோலச் செய்து பாருங்கள்... அப்படியே சாப்பிடுவீர்கள்!

   நீக்கு
 8. படிக்கும்போதே சாப்பிட்த் தோன்றுகிறது நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
 9. தாங்கள் கொடுத்து வைத்தவர்தான். விதவிதமாய் ருசிப்பதில்

  பதிலளிநீக்கு
 10. தாங்கள் கொடுத்து வைத்தவர்தான். விதவிதமாய் ருசிப்பதில்

  பதிலளிநீக்கு
 11. பார்க்கவே நல்லாருக்கு. சாப்பிட இன்னும் நல்லாருக்கும். சிவப்பு, மஞ்சள் சேனையைப் பற்றிக் குறிப்பு கொடுத்திருக்கலாம். வெறும்ன தோல் எடுத்துட்டு, கறி பண்ணும்போது புளி சேர்ப்பதால், அரிப்புக்கு சான்ஸ் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நெல்லைத் தமிழன். சிவப்பு, மஞ்சள் சேனை பற்றி என்ன குறிப்பு? நீங்கள் சொல்லுங்களேன்

   நீக்கு
  2. நன்றி நெல்லைத் தமிழன். சிவப்பு, மஞ்சள் சேனை பற்றி என்ன குறிப்பு? நீங்கள் சொல்லுங்களேன்

   நீக்கு
 12. துளசி : சேனைக் கிழங்கு எங்கள் வீட்டில் எரிசேரி, அவியல், பொரியல் செய்வதுண்டு. நான் பாலக்காட்டில் தன்கையே தனக்குதவி என்பதால், சேனைக்கிழங்கைப் பெரிய துண்டுகளாக்கிக் கொண்டு சிறிதாக வெந்ததும், வதக்கும் போது சாம்பார் பொடியும் போட்டு (எல்லாத்துக்கும் சாம்பார் பொடிதான் ஹிஹிஹி...வாங்கும் பொடி இல்லை என்றால் கீதா அவ்வப்போது வரும் போது சாம்பார் பொடி, அந்தப் பொடி இந்தப் பொடி என்று ஏதேனும் பொடிகள் கொடுப்பார் அதை வைத்துக் கொண்டு ஓட்டி விடுவேன்.) இது நன்றாக இருக்கின்றது..ஆனா மிக்சிக்கு எங்க போவேன்...பார்ப்போம் வீட்டில் செய்வார்களா என்று...


  கீதா: அட ஸ்ரீராம் உங்க ஏழாம் பொருத்தம் பதிவையும் படிச்சுட்டுத்தான் வரேன்..உங்களுக்கு விதி ஓரமா நின்னு சிரிச்சுச்சு...எனக்கு நடுல...பின்ன உறவினருக்கு அசத்தணும்னு நினைச்சு இந்தக் கிழங்கு குழைந்து போக அதை அப்படியே கொஞ்சம் வெங்காயம், பூண்டு பேஸ்ட், போட்டு கான்ர்ஃப்ளார் கலந்து, ப்ரெட் கரம்ப்ஸ்ல புரட்டி கோஃப்தா கறியாக்கி பொரித்து , தக்காளி வெங்காயம் க்ரேவியில் போட்டு...சேனை கோஃப்தா ஆக்கி விதிக்கு நன்றி சொல்லி ..புது ரிசிப்பி கிடைச்சுதுல அதுக்குத்தான்..

  இப்ப நீங்கள் கொடுத்த ரிசிப்பி பச்சை மிளகாய் சேர்க்காமல் செய்திருக்கிறேன்....ஆனா நீங்க கொடுத்துருக்கற எல்லாம் கலந்து அதுல சேனையை மாரினேட் செய்து பின்னர் பொரித்து.....இல்லைனா க்ரில்லிங்க் செய்து. இப்படியும் செய்து பார்த்துடறேன்....நாக்குல தண்ணி...சேனை ரொம்ப பிடிக்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி துளசிஜி, நன்றி சகோதரி கீதா! நீங்களும் இதே போலச் செய்திருப்பது குறித்து சந்தோஷம்.

   துளசிஜி.. அக்கம் பக்கம் மிக்‌ஸி இல்லையோ? அம்மி?!! :)))

   நீக்கு
 13. கீதா: ஸ்ரீராம், சிவப்புச் சேனை கொஞ்சம் வேக சமயம் எடுக்கும்...அரிப்பும் கூடுதலாக இருக்கும்...மஞ்சள் சேனை சீக்கிரம் வெந்துவிடும்....ஆனால் இரண்டு கலரும் கலந்து வருவது சில சமயம் வேக சமயம் எடுக்கின்றது. உங்க பாஸ் சொல்லுவது சரிதான். வாங்கியவுடன் சமைக்காமல் இரண்டு மூன்று நாள் தள்ளிப் பொட்டு சமைத்தால் அரிப்பு இருக்காது...

  பதிலளிநீக்கு
 14. குறிப்பினை வாசிக்கும்போதே வாயூறத் தொடங்கிவிட்டது சகோ!
  இங்கு உடன் தேடினால் இந்த சேனை = கரணைக் கிழங்கு கடைகளில் கிடைக்காதே..:(
  இருக்கட்டும் கிடைக்கும்போது செய்துவிடுவதுதான்!..:)

  அருமையான குறிப்பு சகோ!
  நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  த ம +

  பதிலளிநீக்கு
 15. சேனைக்கிழங்கை புதிய முறையில் சமைக்க கற்றுக்கொடுத்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 16. நல்லாதான் இருக்கும்!நான் செய்ய முடியாது-மைக்ரோவேவ் இல்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மைக்ரோவேவ் இல்லைன்னாலும் செய்ய முடியும் சென்னை பித்தன் ஸார். நன்றி வருகைக்கும், வாக்குக்கும்!

   நீக்கு
 17. அருமையான சேனை மசாலா. பொறுமை வேண்டும் நீங்கள் சொன்னது போல் செய்ய.
  கையில் எண்ணெய் தடவிக் கொண்டு சேனையை வெட்ட வேண்டும் இல்லை கை அரிப்பு தாங்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி அரசு மேடம். நாங்கள் கையில் எண்ணெய் ஏதும் தடவாமலேயே சேனையை அரிந்தோம்.

   நீக்கு
 18. அருமை. எனக்கும் கருணைக்கிழங்குதான் பிடிக்காது. சேனை அரித்து நான் பார்த்ததில்லை. நல்ல
  ரெசிபி.தாங்க்ஸ் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 19. சேனைக்கிழங்கு இங்கே (ஶ்ரீரங்கத்தில்) நல்லாவே இல்லை! நீங்க சொல்லி இருக்கிறாப்போல் சேனை கோஃப்தா என்று வட மாநிலங்களில் செய்வார்கள். அவ்வளவாகச் சேனை பிடிக்கிறதில்லை. :)

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் சகோதரரே.

  சேனை மசாலா படங்களுடன் ருசியாக அருமையாக இருந்தது. வெறும் ரோஸ்ட்தான் செய்திருக்கிறேன். புளி அல்லது எலுமிச்சை சாறு விட்டு மசியல் செய்வோம். தங்கள் செய்முறை உடனே செய்து பார்க்க தூண்டுகிது தங்கள் பக்குவபடி ஒரு சமயம் செய்ய வேண்டும். சேனை எங்களுக்கு மிகவும் பிடித்தக் காய்.பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 21. நான் பச்சை மிளகாய் & காய்ந்த மிளகாய் சேர்க்காமல் புளி, மிளகாய்த் தூள் போட்டுப் பின், தேங்காய் & சோம்பு அரைத்துச் சேர்ப்பேன். நல்ல கிரேவி கிடைக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!