சனி, 11 டிசம்பர், 2021

வசந்த்தைக் காப்பாற்றிய வனஜா.. / நான் படிச்ச கதை

 திருவாரூர் : மன்னார்குடி அருகே விபத்தில் சிக்கி செயல்படாத மாணவரின் இதயத்தை செயல்பட வைத்த செவிலியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருவாக்குறிச்சியைச் சேர்ந்தவர் வசந்த் 18;  பாலிடெக்னிக் இறுதியாண்டு படித்து வருகிறார். நேற்று லக்னாம்பேட்டை என்ற கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் வரும்போது செம்மறி ஆடுகள் மீது மோதி கீழே விழுந்ததில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.



அவ்வழியாக காரில் வந்த மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர் வனஜா கீழே கிடந்த வசந்தை பரிசோதித்து பார்த்துள்ளார். அவரது இதயம் செயல்படாததை அறிந்து, அவசர கால முதலுதவியாக இதய பகுதியை கைகளால் மசாஜ் செய்ததில் ரத்த ஓட்டம் சீராகி மாணவரின் இதயம் மீண்டும் செயல்பட துவங்கியது.

உடனடியாக மாணவருக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.மாணவர் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

========================================================================================================

கலிபோர்னியா: அமெரிக்காவின் பெர்க்லே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிரபல இந்திய அமெரிக்க கணித மேதை மற்றும் ஆசிரியர் நிகில் ஸ்ரீவத்சவா பணிபுரிந்து வருகிறார்.


உலக அளவில் தீர்க்க முடியாத பல கணித புதிர்களுக்கு தீர்வு கண்டுபிடித்த இவர் இணையத்தில் புகழ் பெற்றார். தற்போது இவர் சிப்ரியான் ஃபோயாஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது ஆண்டுதோறும் அமெரிக்க கணிதவியல் அமைப்பால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நிகில் ஸ்ரீவத்ஸவா தவிர மார்க்கஸ் மற்றும் டேனியல் ஸ்பெயின்மேன் ஆகிய கணித பேராசிரியர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

'பாலினாமியல்ஸ் மற்றும் காடிசன் சிங்கர் பிராப்ளம் பண்புகள் இரண்டாம் பகுதி' என்கிற தலைப்பில் இவர்கள் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கைக்காக இந்த மூன்று கணித மேதைகளுக்கு அவர்களது கணித அறிவை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.

1959ஆம் ஆண்டு ரிச்சர்ட் காடிசன் மற்றும் இசடோர் சிங்கர் ஆகியோர் உருவாக்கிய 'பேவிங் பிராப்ளம்' என்ற சிக்கலான ஓர் கணித புதிருக்கு இவர்கள் தங்கள் ஆய்வு மூலமாகத் தீர்வு கண்டுபிடித்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
======================================================================================================


==========================================================================================================================================================================================

நான் படிச்ச கதை 
-ஸ்ரீராம் -

இதோ..   வெள்ளிக்கிழமை மதியம் வரை 'நான் படிச்ச கதை' பகுதிக்கு எதுவும் வரவில்லை. கூகுள் வேறு,  'நான் படிச்ச கதை' என்று டைப் செய்தால் தெலுங்குப்பட டைட்டில் போல 'நான் படிச்சா கதை' என்று டைப் செய்கிறது!  ஒவ்வொரு முறையும் திருத்த வேண்டி இருக்கிறது.  நான் படிக்கா விட்டாலும் அது கதைதான்!

படிக்க ஏராளமாகக் காத்திருக்க, நடுவில் விழுந்து விட்ட நீண்ட இடைவெளியை உடைக்க ஒரு சுஜாதா புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினேன்.   அது அவர் சிறுகதைத்தொகுப்பு.

சிறுகதை எழுதுவது சவாலான விஷயம் என்கிறார் சுஜாதா. .பத்திரிகை ஆசிரியர்கள் 'என்ன செய்வியோ தெரியாது, அடுத்த வாரம் ஒரு சிறுகதை கொடு' என்று மென்னியைப் பிடிக்கும்போது  ஆற அமர அமர்ந்து யோசித்து கதையை உருவாக்கும் வாய்ப்பை இழக்கிறோம் என்கிறார்.  பிரபலமாக இருப்பதன் விலை அது என்று சொன்னாலும், அந்நிலையிலும் தன்னால் எழுதப்பட்ட சில சிறுகதைகளை இப்போது படிக்கும்போது மனத்திருப்தி வருகிறது என்றும் சொல்லி இருக்கிறார்.

2003 ல் அவர் சொல்லும்போதே நாற்பது வருடங்களில் 200 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருப்பதாய்ச் சொல்கிறார்.

கதையில் ஒரு ஜீவன் இருக்க வேண்டும். மனதில் நிற்கும்படி ஒரு சம்பவம் இருக்க வேண்டும்.  இப்போது சம்பவங்கள் எதுவுமே இல்லாமல் கதையை மொட்டையாக எழுதி விடுகிறார்கள்.  புதுமை என்ற பெயரில் நிறைய கதைகள் அப்படிப் படித்திருக்கிறேன். 

இவை அப்படி அல்ல.  சிறுகதைகள் செழுமையாக, வளப்பமாக இருந்த காலத்தில் எழுதப்பட்டவை.

அந்த 200 கதைகளிலிருந்து சட்டென தன் மனதைக் கவர்ந்த 50 சிறுகதைகளை மட்டும் தடித்த புத்தகமாக உயிர்மைப் பதிப்பகம் வாயிலாகக் கொடுத்திருக்கிறார்!

எல்லாம் ஏற்கெனவே படித்த சிறுகதைகள் என்றாலும் இரண்டாவது கதை படிக்கும்போதே அதை (மறுபடியும்) சிலாகித்த மனம், திடீரென ஏன், இதை சனிக்கிழமை நான் படிச்ச கதை பகுதிக்கு தயார் செய்யக் கூடாது என்று தோன்றியது.  எப்போதுமே மனதில் நிற்கும் சுஜாதா சிறுகதைகளில் ஒன்று இது.

ஜீவி ஸார் எதிர்பார்ப்பது போல பகிர முடியாது.  எனக்குத் தோன்றியதையே எழுதுகிறேன்!  ஓகேயா என்று அவர் சொல்லவேண்டும்!

கதையை எடுத்துக் கொண்டால் ஏற்கெனவே ஏகப்பட்ட பேர்கள் இந்தக் கதையை யு டியூபில் வாசித்துத் தள்ளி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.  ஆனால் எனக்கு கதையை வாசித்து கேட்டதில் ஆர்வமில்லை.  பச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால் அதெல்லாம் கண்றாவியாக இருக்கிறது!  நம் மனம் நம் டேஸ்ட்டுக்கு படிப்பது போல எதுவும் இருக்காது.  இதை ஒரு குறும்படமாக வேறு எடுத்துக் கெடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.  கதையிலிருந்து விலகி காட்சிகள் எடுத்திருப்பது விமரிசனத்தைப் படிக்கும்போது தெரிகிறது.  ஆனால் விமர்சித்திருப்பவரோ பாராட்டித் தள்ளுகிறார்.  



இப்படியான இடங்கள் கதையில் இல்லை!

கதையை விட்டு விலகாமல் சுஜாதாவுக்கு நியாயம் செய்திருப்பதாய் பொய் சொல்கிறார்!

எனவே,

ஏகப்பட்டபேர்கள் எக்கெனவே சொல்லி இருக்கும் கதையை நாமும் பகிர்வதா, அல்லது பிரபலமான கதைதான் என்று நாமும் பகிர்வதா என்றும் இரண்டு மாதிரி தோன்ற, எப்படியும் நாம் எழுதுவதை எழுதி விடுவோம் என்று தோன்றியது.  ஏனெனில் நான் பார்த்தவை எதுவும் ஜீவி ஸார் சொன்ன சிலாகிப்பு வகையைச் சார்ந்தது அல்ல.  

சரி கதைக்கு வருகிறேன்.  கதையின் தலைப்பு 'ஒரே ஒரு மாலை'.  கதை ஆனந்த விகடனில் 1968 ல் வெளியாகியிருந்திருக்கிறது.


கதை என்று எடுத்துக் கொண்டால் பெருநகரம் ஒன்றில் வசிக்கும் இளைஞன் ஒருவன் பெற்றோர் சொல்படி அவர்கள் பார்க்கும் பெண்ணை அவசர லீவில் ஊர் அல்லது கிராமத்துக்கு வந்து மணம்  செய்கிறான்.


பெண்ணும் ஒன்றும் படிக்காதவள் எல்லாம் இல்லை.  பி யு சி படித்தவள்.  எனிட் பிளைட்டன் படிக்கக்கூடிய பெண்.  ("பதினைந்து வயதுப் பெண் படிக்கும் புத்தகம் அது" - ஆத்மாஆனால் நாகரீகங்களால் மூழ்க்கடிக்கப்படாத பெண்.  


அவர்கள் ஏற்கெனவே அந்தரங்கமாக அரையிருட்டில் தொட்டுக் கொண்டு விட்டாலும், ஆணின் தொடுகையில் சிலீர் என்று உள்வாங்கி உறையும் பெண்.  

இந்த இடங்களில் சுஜாதாவின் வர்ணனைகள் ரசனையானவை.  இந்துவின் பாஷை அந்தக் காலத்து கதாநாயகியின் கொஞ்சல்களை ஒத்திருந்தாலும் ரசிக்கக் கூடிய வகை.

"உங்களுக்கு ஆக்டர்ஸ் யாரார் பிடிக்கும்?"

"சிவாஜி கணேசன், பால் நியூமன்"

"அப்புறம்?"

"கே ஆர் விஜயா"

இந்துமதிக்கு கே ஆர் விஜயாவின்மேல் பொறாமை ஏற்பட்டது.

ஒரு கதையின் முடிச்சை, அல்லது ஒன்லைனை முடிவு செய்து விட்டால் அதை அப்படியே வரும் வடிவத்தில் எழுதுவது ஒருவகை.   நன்றாகத்தான் இருந்திருக்கும் அப்படி எழுதி இருந்திருந்தாலும்.  

ஏனெனில் கதையின் முடிச்சு அப்படிப்பட்டது.  முதலிலேயே முடிவு செய்தாரோ, அல்லது அப்புறம் மெருகேற்றினாரோ கதையை வேறு புது வடிவத்துக்கு கொண்டு செல்கிறார் சுஜாதா.

கதையின் கிளைமேக்ஸ் எனப்படுவதை நடுவிலேயே போட்டு டமார் என்று உடைத்து விடுகிறார்.  பிறகு மீண்டும் கொஞ்சம் முன்னால் போகிறார்.  இனி படிக்க என்ன இருக்கிறது என்று நினைக்கும்போது படித்துக்கொண்டு வரும் கதை முடியும்போது மனதின் பிசையல் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருக்கிறது.

கதையைப் படிக்கும்போது படைப்பாளி ஏற்படுத்த நினைக்கும் கேரக்டரின் மேல் அனுதாபம் தானாக வரவேண்டும்.  வழிய திணிக்க நினைத்தால் செயற்கையாகி விடும்.  இந்துவின் கேரக்டரும் ஆத்மாவின் கேரக்டரும் அதைச் செவ்வனே செய்கிறது.

ஆமாம், யோசித்துப் பார்த்தால் கதையில் இந்த இருவரைத்தவிர வேறு கேரக்டர்கள் இருக்கிறார்களா என்ன?  இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.  ஆனால் இல்லை. கல்யாணத்துக்கு வராத பெரியப்பா, இவர்தான் மாப்பிள்ளையா என்று நிச்சயமாகாத நிலையில் இந்துமதியிடம் ஆத்மாவின் ஃபோட்டோவை காண்பிப்பது போல காட்டிவிட்டு உடனே பிடுங்கி விடும் எச்சரிக்கையான அம்மா.. திருமணம் முடிந்த ஓரிரு நாட்களில் தேங்காயுடன் எஸ்கேப் ஆகும் உறவுகள்..

கடைசியில் மனதுக்குள் நாம் நம்மையும் அறியாமல் "இந்து..  அந்தக் கேள்வியைக் கேட்காதேயேன்..  ப்ளீஸ்.." என்று கெஞ்சத் தோன்றுகிறது.

அவருடைய அபிமான ஆண் பெயர் கதாநாயகனுக்கு.  ஆத்மா.    ஆனால் நாயகி பெயர் நித்யா இல்லை.  இந்துமதி.  இந்தப் பெயர் உங்களுக்கு உங்கள் கற்பனையில் ஒரு பெண்ணை மனதில் நிறுத்தும்.  அதற்கு சுஜாதாவின் வர்ணனைகள் உதவும்.

இந்தக் கதையை நிறைய பேர்கள் ஏற்கெனவே படித்திருப்பீர்கள்.  படித்திருந்தாலும் நினைவில் இலையே என்று சொல்பவர்களுக்கு, இதுவரை படிக்காதவர்களுக்கு அந்தக் அக்கதையை இங்கு சென்று படிக்கலாம்.  கொஞ்சம் ஒழுங்காய் பாரா பிரித்து வெளியிட்டிருந்தால் இன்னும் எஃபெக்டிவாக இருந்திருக்கும் என்று எண்ண வைக்கும் வலைப்பக்கம்!

ஆமாம், கதைக்கான அந்தத் தலைப்பு,  'ஒரே ஒரு மாலை' பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

101 கருத்துகள்:

  1. 'பாலினாமியல்ஸ் மற்றும் காடிசன் சிங்கர் பிராப்ளம் பண்புகள் இரண்டாம் பகுதி' என்கிற தலைப்பில் இவர்கள் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கைக்காக இந்த மூன்று கணித மேதைகளுக்கு அவர்களது கணித அறிவை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.//

    வாழ்த்துவோம்.

    தற்போது மேல்னிலைப் பள்ளிக் குழந்தைகள் இந்த பாலினாமியலில் தான் கொஞ்சம் தவிக்கிறார்கள் என்று வீட்டில் அறிகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அல்ஜீப்ரா பயங்கர காப்ரா - எப்பவுமே பார்டர் பாஸ்தான்!!

      நீக்கு
    2. நான் அல்ஜிப்ரா படிச்சதே இல்லை.செக்ரடேரியல் கோர்ஸ் என்பதால் பொதுக்கணக்கு முறை தான். இதை அநேகமாக லட்சத்திப் பத்தாம் முறையாகச் சொல்றேனோ? ஹிஹிஹி நினைவில் இல்லை. :)

      நீக்கு
  2. அவ்வழியாக காரில் வந்த மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர் வனஜா கீழே கிடந்த வசந்தை பரிசோதித்து பார்த்துள்ளார். அவரது இதயம் செயல்படாததை அறிந்து, அவசர கால முதலுதவியாக இதய பகுதியை கைகளால் மசாஜ் செய்ததில் ரத்த ஓட்டம் சீராகி மாணவரின் இதயம் மீண்டும் செயல்பட துவங்கியது.//

    பாராட்ட வேண்டிய விஷயம். அந்த நிமிடத்தில் வசந்த் பையனுக்கு செவிலியரின் உதவி கிடைத்திருக்காவிடில்? அந்த நொடித் துளிகள்! வாசிக்கும் போது மனம் திக் திக்...நல்ல காலம் சரியான தருணத்தில் உதவி கிடைக்கப்பெற்று பையன் காப்பாற்றப்பட்டிருக்கிறான். வனஜா அவர்களை வாழ்த்துவோம். பாராட்டுவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி மன மகிழ்வுடன் வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. கணிதமேதை பற்றிய செய்தி தினசரியில் வந்திருந்தது. பாராட்டுகள். இளைஞனைக் காப்பாற்றிய செவிலித் தாய்க்கு மிக்க நன்றி. அவர் தம் தொண்டு சிறப்பானது. பெண் காவலர் பற்றியும் செய்தித்தாளில் பார்த்தேன். அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. "ஒரே ஒரு மாலை" இந்தக்கதையை எப்போப் படிச்சாலும் அல்லது அது பற்றிப் படிக்க நேர்ந்தாலும் மனம் அதைத் தவிர்க்கச் சொல்லும். "திக்"கென்று இருக்கும். பரிதவிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் தடவை விகடனில் படித்தபோதே மனசு ரொம்பக் கஷ்டப்பட்டது. அப்புறம் படித்ததில்லை.

      நீக்கு
    2. எனக்கு இந்தக் கதையைப் படித்தபோது, வல்லிம்மா குழந்தை தண்ணீரில் விழுந்ததும், சிங்கம் உடனே தண்ணீரில் பாய்ந்து காப்பாற்றியதும்தான் நினைவுக்கு வந்தது.

      சிறிய சிறிய தவறுகள், பெரும் கேடாக முடிந்துவிடும். எனக்கு இரண்டு முறை அந்தமாதிரி நிகழ்ந்திருக்கிறது. ஒரு முறை மாமல்லபுரத்தில், அலை என்னை இழுக்கப்பார்த்தது. (20 வயதில்). 14 வயதில், தாமிரவருணி ஆற்றின் வெள்ளம் இழுக்கப் பார்த்தது.

      மெக்சிகோ சென்றிருந்த சமயம், எனக்கு கடலின் அடியில் பவளப்பாறைகள் உயிரிகள் பார்க்கணும் என்று தோன்றியது (50 டாலர் டிக்கெட்டுடன் ஒருவர் எங்கள் ரிசார்ட்டில் நிறையபேரைக் கேட்டுக்கொண்டிருந்தார்). நான் எனக்கு நீச்சல் தெரியாது, ஆனாலும் வருவதற்கு ஆசை என்றேன். அவர் கூட்டிச்செல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவர் கூட்டிச்சென்று ஏதாவது அனர்த்தம் விளைந்திருந்தால்?

      நீக்கு
    3. சுஜாதாவின் "அம்மாமண்டபம்" சிறுகதைத் தொகுப்பில் இதுவும் இருக்கு!

      நீக்கு
    4. கதையை ஒட்டி எவ்வளவு சிந்தனைகள்...!

      நீக்கு
  6. சிறுகதை எழுதுவது சவாலான விஷயம் என்கிறார் சுஜாதா//

    அதே அதே.

    //பத்திரிகை ஆசிரியர்கள் 'என்ன செய்வியோ தெரியாது, அடுத்த வாரம் ஒரு சிறுகதை கொடு' என்று மென்னியைப் பிடிக்கும்போது // ஆற அமர அமர்ந்து யோசித்து கதையை உருவாக்கும் வாய்ப்பை இழக்கிறோம் என்கிறார்.//

    இதையும் டிட்டோ. நமக்கெல்லாம் இக்கட்டு இல்லை என்றாலும் எழுதவே வரமாட்டேங்கிறதே!!! கதை என்று சொல்லிக் கொண்டு ஏதோ எழுதி ஜல்லியடிப்பதும் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கின்றன!!!!!

    அவர் பெரிய எழுத்தாளர். நன்றாக எழுதக் கூடியவர் அவருக்கே இப்படி என்றால்....நமக்கெல்லாம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடுத்த வாரம் ஒரு சிறுகதை கொடு' என்று மென்னியைப் பிடிக்கும்போது// - பத்திரிகை ஆசிரியர்களுக்கு அது பிஸினெஸ். பத்திரிகை வரணும், விளம்பரம் செய்யணும் என்று... ஆனால் கலைஞர்களுக்கு அது கடினம்.

      சிறுகதை எழுதுவதற்கே இப்படிச் சொல்கிறாரே... கண்ணதாசன், வாலி போன்றோரெல்லாம் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள்? பாடலுக்கான கருத்தைச் சொல்லி பாட்டை எழுதி வாங்குவது என்று. அதுவும் வந்த பிறகுதான் கதைப்பகுதியைச் சொல்வாங்க. முன்னமே சொன்னாலாவது, காரில் வரும் நேரத்தில் யோசிக்கலாம்.

      பிரபலமான என்பதைவிட, வியாபாரத்துக்கு உகந்த தன்மை உள்ளவர்களுக்கு இந்த 'இன்பமான துன்பம்' இருப்பது இயல்புதான்.

      நீக்கு
    2. கண்ணதாசன், வாலி போன்றோரெல்லாம் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள்? பாடலுக்கான கருத்தைச் சொல்லி பாட்டை எழுதி வாங்குவது என்று. அதுவும் வந்த பிறகுதான் கதைப்பகுதியைச் சொல்வாங்க. முன்னமே சொன்னாலாவது, காரில் வரும் நேரத்தில் யோசிக்கலாம்.//

      ஆமாம் இதை ஆமோதிக்கிறேன். காலையில் தோன்றியது இப்ப நெல்லையின் கருத்தைப் பார்த்ததும் மீண்டும் அதையே சொல்லாமல் டிட்டோ செய்கிறேன்.

      //பிரபலமான என்பதைவிட, வியாபாரத்துக்கு உகந்த தன்மை உள்ளவர்களுக்கு இந்த 'இன்பமான துன்பம்' இருப்பது இயல்புதான்.//

      ஆப்ட்!

      நீக்கு
    3. ஒரு கருத்தைச் சொல்லி பாட்டை வாங்குவதும், கருவை நீயே முடிவு செய்து உடனே ஒரு சிறுகதை கொடு என்பதும் ஒன்றா?

      அப்படி கருவைச் சொல்லி பாடல் கேட்டும் சில பாடல்கள் உடனே எழுதப் பட்டிருக்கின்றன.  சில பாடல்கள் நாட்கணக்கில் கூட ஆகியிருக்கின்றன.  இதில் வியாபாரம் என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.  நம் ஊரில் பயங்கரமாக காசு பார்க்கலாம் என்கிற துறை அல்ல இது   பிரபலம் ஓகே.

      நீக்கு
    4. //பயங்கரமாக காசு பார்க்கலாம்// - அப்படி இல்லை. பத்திரிகை போட்டித் துறை என்பதால் வாசகர்களைக் கவரணும் என்றெல்லாம் யோசிச்சிருக்கலாம். சாவி ஆசிரியர், சுஜாதாவின் லாண்டரி டிக்கெட்டையும் வெளியிட்டதை யோசித்துப் பார்க்கணும்

      நீக்கு
    5. ​உண்மை. அது சாவியின் யுக்தி. எழுத்தாளரின் விருப்பம் அல்ல!

      நீக்கு
  7. ஆனால் எனக்கு கதையை வாசித்து கேட்டதில் ஆர்வமில்லை. பச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால் அதெல்லாம் கண்றாவியாக இருக்கிறது!//

    டிட்டோ! எனக்கும் பிடிப்பதில்லை. அதனால் அதைக் கேட்பதுமில்லை.

    ஆனால் பார்வைத் திறனற்றவர்களுக்கு, வயதானவர்களுக்கு இது உதவும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக ஆதரிக்கிறேன். ஆனால் அவர்களுக்கு என்று ஏற்கனவே இருக்கும் ரீடர் மென்பொருள் எப்படி வாசிக்கும் என்று தெரியவில்லை.

    ஏனென்றால் மென்பொருள் வாசிப்பு ஆஇ மூலம் உருவாக்கப்படுவது. சமீபகாலமாக நம்மூரில் மனிதக் குரல்கள் பதியப்பட்டு வெவ்வேறு வகையான உச்சரிப்பிற்காகப் பதியப்பட்டும் குறிப்பாகத் தமிழ் அதற்கான சாம்பிள் டெஸ்டிங்கில் நான் மதிப்பாய்வு செய்திருக்கிறேன். அது போல இந்திய ஆங்கில உச்சரிப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுவதால் அதற்கான பதிதலும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டினரின் ஆங்கில உச்சரிப்பிற்கான அதுவும் கூட வெவ்வேறு இரு தமிழ்க்காரர்கள் ஆங்கிலத்தில் கலந்துரையாடல் செய்வது எல்லாம் சமீபத்தில் பதியப்பட்டது. வயதானவர்கள், பார்வைத்திறனற்ரவர்களுக்குப் பயனுள்ள வகையில்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரீடர் மென்பொருள் - தமிழ் படிக்குமா என்பது என் ஐயம்.

      நீக்கு
    2. Jaws screen reader இருக்கு கௌ அண்ணா. அதை பயன்படுத்திதான் பார்வைத்திறன் இல்லாதவர்கள் வாசிக்கிறார்கள்.

      ஒரு நிறுவனம் (பெயர் வெளியிடக் கூடாது என்று எனக்குச் சொல்லப்பட்டிருப்பதால் சொல்லவில்லை) தமிழில் வாசிக்கச் செய்திருக்கிறார்கள். அதற்குத்தான் நாங்கள் சிலர் அதன் உச்சரிப்பு ஏற்ற இறக்கங்கள் மதிப்பாய்வு செய்து கொடுத்தோம்.

      கீதா

      நீக்கு
    3. செல்லினத்தில் உள்ள சொல்வான் பற்றி தெரியுமா?

      நீக்கு
    4. செல்லினச் சொல்வான் பற்றி அறிந்ததில்லை.  அதே சமயம் கண் தெரியாதவர் பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை.  என்னைப் பொறுத்தவரை அதைக் கேட்பதைவிட....  

      நீக்கு
  8. கதையில் ஒரு ஜீவன் இருக்க வேண்டும். மனதில் நிற்கும்படி ஒரு சம்பவம் இருக்க வேண்டும்.//

    அதே அதே.

    //ஏகப்பட்டபேர்கள் எக்கெனவே சொல்லி இருக்கும் கதையை நாமும் பகிர்வதா, அல்லது பிரபலமான கதைதான் என்று நாமும் பகிர்வதா என்றும் இரண்டு மாதிரி தோன்ற, எப்படியும் நாம் எழுதுவதை எழுதி விடுவோம் என்று தோன்றியது. //

    ஸ்ரீராம் கர்ர்ர்ர் எதுக்கு இணையம்? நீங்க உங்க அனுபவத்தை புரிதலை உணர்வை எழுதுவதுதானே சிறப்பு.

    கண்டிப்பாக இணையத்தில் ஜீவி அண்ணா சொல்வது போல இல்லை என்பதே உண்மை.

    அந்தப் பெட்டிக்குள் இருப்பது கதையிலிருந்து விலகி அந்தக் குறும்படத்தில் சொல்லப்பவையா? ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லப்பவையா? - சொல்லப்படாதவையா?

      கீதா

      நீக்கு
    2. இணையத்தில் கதை இருக்கிறதே தவிர அலசல் இல்லை.  கதையைக் குட்டிச்சுவராக்கிய குறும்படம் ஒன்று இருக்கிறது!!!

      நீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.
    கணித மேதை நிகில் ஸ்ரீவத்ஸவா பற்றிய செய்தி பெருமையளிக்கிறது.
    விபத்தில் சிக்கிய மாணவன் உயிரை மீட்ட செவிலியர் வனஜாவின் செயல் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  11. மேலும் கருத்து சொல்ல கதையை வாசித்துவிட்டு வருகிறேன் ஸ்ரீராம். இக்கதை வாசித்ததில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. //பத்திரிகை ஆசிரியர்கள் 'என்ன செய்வியோ தெரியாது, அடுத்த வாரம் ஒரு சிறுகதை கொடு' என்று மென்னியைப் பிடிக்கும்போது  ஆற அமர அமர்ந்து யோசித்து கதையை உருவாக்கும் வாய்ப்பை இழக்கிறோம் என்கிறார். // 

    இப்படி மற்றவர்களைப்  பிடித்து கேட்டு வாங்கி போட முடியாமல் ஏன் நாமே எழுதினால் என்ன என்று தொடங்கிய கதை மோஹினி என்று நினைக்கிறேன். அதாவது ஸ்ரீராம் தான் அமானுஷ்யனை உருவாக்கியவர். ஏன் அமானுஷ்யம்? மநுஷ்யனுக்கு எதிர்பதம் அ மனுஷ்யன் அமானுஷ்யன். சுஜாதாவின் ஆத்மா என்ற நாயகன் போன்றது. 

    சனிக்கிழமை விமரிசனம் அல்லாது செவ்வாய்கிழமைக்கு சென்று விட்டேன். ஜீவி சார் அவருடைய விமரிசனம்  தயிர் சாதம் போன்றது என்பார். சாதத்தையும் தயிரையும் பிரிக்கமுடியாது. இங்கு ஸ்ரீராம் அவர்களின் விமரிசனம் ஒரு fried rice போன்று உள்ளது. சுஜாதாவின் கதையினூடே அவருடைய எண்ணங்கள்  (கீசாக்கா மன்னிப்பாராக) இணைந்து ஒரு அற்புதக்கலவை. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெகே அண்ணா ஏணிமலைக் கதை ஸ்ரீராம் எழுதுகிறார் என்று ஃபைனலைஸ் பண்ணிட்டீங்க போல!!!

      எனக்குத் தோன்றியது. கௌ அண்ணா அல்லது ஸ்ரீராம். ஜீவி அண்ணாவும் என் லிஸ்டில் இருக்கிறார்!!!!!!

      கீதா

      நீக்கு
    2. ஜெ கே சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

      நீக்கு
    3. ஜீவி சாரின் எழுத்து அல்ல அது. அப்பாதுரை பாணி. ஆனால் எழுதுவது கேஜிஜி சார்னு நான் நினைக்கிறேன். படமும் அவர்தான். ஆனால் எழுத்து சூப்பர்(இதுவரை. பொதுவாக சஸ்பென்ஸ் கதை ஆரம்பிப்பது சுலபம். முடிக்கும்போதுதான் அடச்சே என்று இருக்கும், அனேகமாக எல்லாக் கதைகளும்) என்றும் சொல்லிக்கறேன்.

      நீக்கு
    4. ம்ம்ம்ம்ம் அநேகமாக ஜீவி சார் தான் முதலிடத்தில் இருக்கார். மத்தவங்க என் பட்டியலிலேயே இல்லை. அப்பாதுரையின் பாணியாகவும் தெரியலை. அதில் ஊடாடும் மெல்லிய நகைச்சுவை இதில் இல்லை. ஆங்காங்கே வரும் வார்த்தைப் பிரயோகங்கள் காண முடியலை.

      நீக்கு
    5. (இதுவரை. பொதுவாக சஸ்பென்ஸ் கதை ஆரம்பிப்பது சுலபம். முடிக்கும்போதுதான் அடச்சே என்று இருக்கும், அனேகமாக எல்லாக் கதைகளும்)

      நெல்லை அதே அதே....

      கண்டிப்பாக அப்பாதுரை ஜி இல்லை. அவர் பாணியே வேறு. கீதாக்கா சொல்லியிருப்பது போல் நகைச்சுவை, வார்த்தைப் பிரயோகங்கள், ப்ளஸ் நறுக் சுருக் ...

      ஜீவி அண்ணாவுக்கும் கௌ அண்ணாவுக்கும் போட்டி என் லிஸ்டில்!!!!! ஸ்ரீராம் அடுத்து!!!!!!!

      கீதா

      நீக்கு
    6. //அவருடைய எண்ணங்கள் (கீசாக்கா மன்னிப்பாராக) இணைந்து ஒரு அற்புதக்கலவை//

      நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்...

      நீக்கு
    7. @தி/கீதா, நான் படம் வரையவில்லை என திருகௌதமன் அவர்கள் அடுத்தடுத்துச் சொல்வதைப் பார்த்தால் எழுதி வரைந்திருப்பாரோ என்றும் தோன்றுகிறது! :)))))

      நீக்கு
    8. ஆமாம், அது தெரிந்தாலும் நடு நடுவில் இப்படியும் தோன்றத்தானே செய்யும். குரங்கு மனம்! அங்கே இங்கே அலை பாயுமே!:) வண்ணக்கலவையிலிருந்து கோடுகள் வரை ஊன்றிப் பார்த்தால் உங்கள் ஓவியமும் இதுவும் வேறுபடுகிறது.

      நீக்கு
  13. சிறுகதை எழுதுவதுதான் கஷ்டம். கொண்டாடப்படும் பல எழுத்தாளர்கள் அதில்தான் ஜெயிப்பார்கள். சுஜாதாவும் அதில் ஏஸ்தான்.
    சுஜாதாவின் இந்த கதையின் தலைப்பு 'அம்மாமண்டபம்' என்று நினைவில் வைத்திருந்தேன். ஆனால் என் குடும்பத்திலேயே அடுத்த தலைமுறை பெண்களுக்கு எனக்கு ஏற்படுத்திய பாதிப்பை இந்த கதை ஏற்படுத்தவில்லை. காரணம், இந்த கதையின் பல சம்பவங்கள் அவர்களுக்கு அவுட் டேட்டட் ஆகி, அவர்களால் இந்தக் கதையோடு தங்களை இணைத்துக் கொள்ள முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். உண்மைதான். கதை காலத்தைக் கடந்து நிற்கவில்லை என்று தோன்றுகிறது.

      நீக்கு
    2. இப்போதைய பெண்கள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கடந்து அல்லவோ வருகிறார்கள். அப்போதைய பெண்களின் மனோநிலை இப்போதுள்ளவர்களுக்குப் புரியுமா சந்தேகமே!

      நீக்கு
    3. கதை காலத்தைக் கடந்து நிற்கிறதா என்று என்னால் முடிவு செய்ய முடியவில்லை.  எனக்கு தோன்றும் உனர்வு எல்லோருக்கும் அப்படியே தோன்றினால்தான் காலத்தைக் கடந்து நிற்கிறது என்று பொருளா?  68 ல் அவசரத்துக்கு எழுதிய கதையில் ஒரு சிறு முயற்சி.  கதையின் முடிவு கிட்டத்தட்ட பாதியிலேயே வந்து விடுகிறது.  அதற்குப்பின் கதை தொடர்கிறது.  முடிவு மாறவில்லை.  ஆனால் தாக்கம்  இன்னும் அதிகரிக்கிறது..  பெண்களுக்கு மட்டும்தான் அப்பீலாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

      //இந்த கதையின் பல சம்பவங்கள் அவர்களுக்கு அவுட் டேட்டட் ஆகி,//

      கிட்டத்தட்ட இதைதான் அந்தக் காலத்து கொஞ்சு கதாநாயகி போல என்று சொல்லி இருக்கிறேன்.  இந்தக் காலத்தில் பத்மினியையும், கே ஆர் விஜயாவையும் (ஐயே...) சரோஜா தேவியையும் யாராவது சகித்துக் கொள்வார்களா?

      நீக்கு
  14. ஸ்ரீராம் இந்தக் கதையை விவரித்திருக்கும் விதம்... மன்னிக்கவும் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை ஏற்கெனவே படிச்சதால் அப்படித் தோன்றலாமோ என்னமோ!

      நீக்கு
    2. உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமை என் குறை.  அடுத்த முறை பெட்டராக முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  15. கதையை வாசித்துவிட்டேன். ரொம்பவே வித்தியாசமான விதத்தில் எழுதியிருக்கிறார். க்ளைமாக்ஸ் இடையில் குறுக்கிட்டுச் சொல்லப்பட்டதுமே கொஞ்சம் புரிந்துவிடுகிறது. அவள் கேட்கும் கேள்விக்கு இடைப்பட்ட சமாச்சாரங்கள்தான் அடுத்து சொல்லப்போகிறார் ஸோ அந்தக் கேள்வியுடன் முடியும் என்று. ஆனால் நீங்கள் சொன்னது போல் அந்தக் கேள்வியை இந்து ஏன் கேட்டாள்!!?? என்று தோன்றத்தான் செய்கிறது. ஆனால் அதுதானே கதையை ஆற்றோடு அடித்துச் சென்று கல்லணையில் தங்குவது போல் மனதில் தங்கச் செய்கிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதி கேட்க வைக்கிறது! விதி ஒரு சந்தர்ப்பமும் தருகிறது! மீறி இரண்டாம் முறை முயற்சிக்கும்போது முடிந்து விடுகிறது.

      நீக்கு
  16. ஒரு பக்கம் பாசிட்டிவ் என்று இளைஞனின் உயிர் காப்பாற்ற பட்ட செய்தியை விவரித்து விட்டு கடைசியில் இளைஞனின் இறப்பு கதையையும் முன்னுக்குப் பின் முரணாக வெளியிட்டதற்கு என்னுடைய ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறேன். பொசிட்டிவ் கதையை தேர்ந்து எடுத்திருக்கலாம்.  

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   அது நான் படிச்ச கதையாக இருக்காது..  நான் தெரிவு செய்த கதையாக இருக்கும்.  சமயங்களில் சப்பென்றும் இருக்கும்!!

      நீக்கு
  17. ஒரு பெண்ணின்மேல் ஆசைப்பட்டு, அவளுக்காகவே உருகி ஆனால், அவளோடு காலம் பூராவும் இருக்கவேண்டும் என்ற ஆசையில்லாமல் இறப்பவனுக்கு, அவனுடைய நல்வினையோ தீவினையோ காரணமாக இப்படி நடந்துவிடுகிறதோ? அந்தப் பெண்ணும் எத்தகைய பாவத்தை மற்றும் அதிர்ஷ்ட காம்பினேஷனைச் செய்ததால் அவள் வாழ்க்கை இப்படி ஆனதோ? கதை என்றாலும், இப்படி நிகழ்ந்தால் அதற்கு பூர்வ ஜென்ம கர்மா என்னவாக இருந்திருக்கும் என்று மனதில் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி இருந்தாலும் அந்தப் பெண்ணிற்கு ஏற்படும் மன பாதிப்பு? அதிலிருந்து அவள் மீண்டு வர எத்தனை வருடங்கள் ஆகுமோ! :(

      நீக்கு
    2. இந்தக்கதையைப் போல் இருவரும் போய்விட்டார்கள். ஆனால் அவன் மட்டுமே/அல்லது அவள் மட்டுமோ போயிருந்தால்? என் கற்பனை (இருக்கா என்ன) அந்தக் கோணத்தில் சென்றது.

      நீக்கு
    3. கங்கை ஆறு குழந்தைகளை நீரில் வீசிக் கொன்றபோது அந்த ஆறு குழந்தைகளின் கர்மா என்ன சொன்னதாக பாரதம் சொல்கிறது?  அது போல நினைத்துக் கொள்ளவே வேண்டியதுதான்!  இதெல்லாம் ரொம்ப யோசிக்கக் கூடாது...!!

      //ஆனால் அவன் மட்டுமே/அல்லது அவள் மட்டுமோ போயிருந்தால்? //

      புன்னகை மன்னன் படம் அப்போதே வந்திருக்கும்!  புன்னகை மன்னி என்று வந்திருக்கலாம்!!

      நீக்கு
    4. கங்கை விஷயம் வேறே! அது அஷ்ட வசுக்களின் சாபத்தினால் அவர்களும் இறைவனிடம் கேட்டுக் கொண்டதால் கங்கை வயிற்றில் பிறந்தார்கள். அவரவர் செய்த பாபத்துக்கேற்பத் தானே ஏழு வசுக்கள் நீரில் வீசப்பட்டனர்! பீஷ்மராகப் பிறந்த எட்டாம் வசுவின் பாபக்கணக்குக் கூட இருந்ததால் பூவுலகில் ஜீவித்து இருக்க வேண்டி இருந்தது. அவருக்குச் சில நாட்களில் நினைத்த போது இறப்பைத் தேடிக்கலாம் என்னும் வரமும் தந்தை மூலம் கிடைத்தது.

      நீக்கு
  18. கதையின் அறிமுகத்தை ஸ்ரீராம் எழுதியவிதம் நன்று. நேரம் கிடைத்திருந்தால் இன்னும் மெருகேற்றியிருப்பார் (கதை அறிமுகத்தை).

    பேசாமல், கதையையும் ஸ்ரீராமே தனியாக தட்டச்சு செய்து படிக்கக்கொடுத்திருக்கலாம். அந்த ப்ளாக்ஸ்பாட் நன்றாக இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை தட்டச்சு செய்ய நிறைய நேரமும் பொறுமையும் வேண்டும் நெல்லை.  அதேபோல நான் ரொம்ப மெருகேற்றுவதெல்லாம் இல்லை.  ஓரிரு முறை எடிட் செய்வதோடு சரி..  என்ன வந்திருக்கிறதோ அதுதான்!  இன்னும் இரண்டுமுறை பார்த்தால், அல்லது படித்தால் வெளியிடவே வேண்டாம் என்று ஒதுக்கி ஓரமாகப் போட்டு விடுவேன்!

      நீக்கு
    2. கிட்டத்தட்ட ஶ்ரீராம் போலவே நானும். அநேகமாகப் பதீவுப் பக்கங்களிலேயே நேரடியாத் தட்டச்சுகிறேன். வேர்டில் எழுதி வைத்துக் கொண்டு காப்பி, பேஸ்ட் பண்ணுவதில்லை. ஆகவே எடிட் என்றெல்லாம் செய்வது இல்லை. மின்னூல்களாகப் போட்டப்போ எல்லாவற்றையும் வேர்டில் காப்பி பண்ணி எடிட் செய்து அனுப்பி இருக்கேன். இப்போல்லாம் அதைச் செய்யக் கூட உடம்பு வணங்குவதே இல்லை. :(((((

      நீக்கு
  19. போற்றத்தக்க செய்திகள். பகிர்ந்த விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  20. பின் மதியத்தில் நுங்கம்பாக்கம் வரை போய் வார வேண்டியிருக்கிறது. வந்து வாசித்து எனக்குத் தோன்றுவதை பகிர்ந்து கொள்கிறேன்.

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார்..  மெதுவா வாங்க...

      //உங்கள் "முயற்சிக்கு"//

      புரிந்தது!

      நீக்கு
  21. பாசிட்டிவ் செய்திகள் சிறப்பு. வழியில் யாரேனும் கிடந்தாலும் கண்டுகொள்ளாமல் போவோருக்கிடையில் செவிலியர் வனஜா அவர்கள் பையனுக்கு முதலுதவி செய்து காப்பாற்றியது பெரிய விஷயம். பாராட்டுவோம்.

    கணித மேதை - நம்மூர் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. நான் படிச்ச கதையை ஸ்ரீராம்ஜி சொன்ன விதம் சிறப்பாக இருக்கிறது.

    கதையை வாசித்துவிட்டேன். சுஜாதா சார் கதையும் கதை சொன்ன விதமும் அருமை. முடிவைச் சொல்லி அதன் பின்னும் கதையை தொய்வில்லாமல் நர்த்தியிருப்பது வித்தியாசம். கதை முடிவு வேதனை.

    துளசிதரன்



    பதிலளிநீக்கு
  23. பாராட்டுதலுக்குரியவர்களை பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  24. கொஞ்சம் ஒழுங்காய் பாரா பிரித்து வெளியிட்டிருந்தால் இன்னும் எஃபெக்டிவாக இருந்திருக்கும் என்று எண்ண வைக்கும் வலைப்பக்கம்!//

    ஆமாம் ஸ்ரீராம். டயலாக்ஸ் எல்லாம் சேர்ந்தே இருப்பதால் யார் சொல்கிறார்கள் எனும் குழப்பம். அதைப் பிரித்து தனி தனியாகப் போட்டிருந்தால் நன்றாக இருக்கும். அந்த வலைப்பக்கத்தில் எல்லாக் கதைகளுமே அப்படித்தான் இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே போய் ஒரு நாலைந்து கதைகளைப் படிச்சுட்டு வந்தேன். சுவாரசியம்.

      நீக்கு
    2. ஆம்.  ப்ரசண்ட் செய்யும் விதத்திலும் இருக்கிறது என்பதை உணர்த்தும் பக்கம்.

      நீக்கு
  25. எனக்கே ஆச்சரியமக இருக்கிறது. சுஜாதாவின் இந்தக் கதையை நான் படித்ததில்லை. அல்லது படித்த நினைவில்லை. சுஜாதாவின் இந்தக் கதையை உங்கள் வார்த்தைகளில் பகிர்ந்து உங்கள் மொழியில் கதை வாசித்த உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்குமே என்று தோன்றியது.
    இருந்தாலும் ஒன்று மாற்றி ஒன்று என்று சில விஷயங்களை கலவையாக கவரப் செய்திருந்தது கூட புது மாதிரியாகத் தான் இருந்தது.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்..  கதை வாசித்த உணர்வுகளை அளவுடன் பகிர்ந்திருக்கிறேன்.  ரொம்பச் சொன்னால் அலுத்து விடும்!

      நீக்கு
  26. மொத்தம் 84 பின்னூட்டங்கள். இந்த 'நான் படிச்ச கதை'க்காக மட்டும் எத்தனை பின்னூட்டங்கள், அதில் சிலர் மட்டும் இட்ட பல பின்னூட்டங்கள், அவற்றில் உங்கள் கணிப்பில் எத்தனை பயனுள்ளவையாக இருக்கும் என்பதையெல்லாம் வகைப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வகைப்படுத்துதலில் தேறுபவை இந்தப் பகுதியை தொடர்ந்து நீங்கள் எழுதும் பொழுது கணக்கில் கொள்ள உதவியாக இருக்கும். நீங்களும் உங்கள் நூலகத்தில் வாசிக்காத புத்தகங்களை வாசித்து இந்தப் பகுதிக்கு எழுத வாய்ப்பேற்படும். சொல்லப் போனால் ஒரே கல்லில் இரண்டு மாங்கனிகள்.

    வரும் புத்தாண்டில் இந்த மாதிரி புது முயற்சிகள் உங்களில் மலரட்டும்.

    நுங்கம்பாக்கம் Doctor Office சென்று திரும்புவதற்கே இன்றைய பின் மாலைப் பொழுது சரியாகி விட்டது.
    இப்பொழுது தான் நேரம் கிடைத்தது.
    தொடர்ந்து இந்த பகுதிக்கு எழுதுவீர்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கு. எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. //நுங்கம்பாக்கம் Doctor Office சென்று திரும்புவதற்கே//

    என்ன சொன்னார் டாக்டர்?  உங்கள் கையசைவுகள் முன்னேறி உள்ளனவா?  மருந்துகள் மாற்றிக் கொடுத்திருக்கின்றனரா?

    பதிலளிநீக்கு
  28. மாத்திரைகளின் வீரியத்தை கூட்டியிருக்கிறார. வயது மூப்பு கருதி கொஞ்சம் கொஞ்சமாக குணப்படுத்த வேண்டும் என்பது அவர் கரூத்து.
    இடது கை விர்லகளுக்குத் தான் பயிற்சி கொடுக்க வேண்டும்.
    நான் தட்டச்சு பயின்றவன் அது இப்பொழுது கைகொடுக்மிறது.
    (ASDF;) தினம் அரைமணி நேரம் PC-யில். Soon dual arthritis என்பதால் தலையை குனிந்து அதிக வேலைகள் செய்யக் கூடாது. ஆக, கைப்பேசிக்கு முடிந்த வரை தடா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனமாக இருங்கள். உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.

      நீக்கு
    2. நானும் தட்டச்சு ஆங்கிலம், தமிழ் இரண்டுமே பயின்றவன்!  இரண்டும் உயர் நிலை.  

      நீக்கு
    3. ஹிஹிஹிஹி, நானும் என்று சொன்னால் தப்பாய் விடுமோ? :))))) கூடவே ஆங்கிலச் சுருக்கெழுத்தும், அக்கவுன்டன்சி/எகனாமிக்ஸும்/ செக்ரடேரியல் கோர்ஸ் தனியார் பள்ளி/கல்லூரி(?) மூலம் படித்துக் கொண்டிருந்தேன்.

      நீக்கு
    4. தப்பு ஒன்றுமில்லை. இந்த இடத்தில் சரியாகத் தான் அந்த 'நானும்' வந்திரும்கிறது. :))

      மேற்கொண்டு நெல்லை வந்தால் சொல்வார். வந்தால் என்ன? வருவார் என்பது நிச்சய யூகம்.

      நீக்கு
  29. ** Spondyloarthritis

    Soft Cervical Collar அப்பப்போ
    அணிய வேண்டுன்.

    பதிலளிநீக்கு
  30. சரி ஸ்ரீராம். அப்படியே செய்கிறேன்.
    பரிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!