சுடச்சுட விருந்து சாப்பிடப்போகும் அனுபவமே தனிதான். குழம்பு என்ன, கூட்டு என்ன, பொரியல் என்ன... புதிதாய்ச் சமைத்து உடனுக்குடன் சாப்பிடுவது... ஆஹா...
தஞ்சையில்
நான் படித்த பள்ளியில் ஆறுமுகம் என்று ஒரு டிராயிங் மாஸ்டர் இருந்தார்.
டிராயிங் வகுப்பில் வந்து போர்டில் ஏதாவது ஒரு படத்தை வரைந்து விட்டு,
நாற்காலியில் அமர்ந்து நிறைய கதை சொல்வார், கதை அடிப்பார். சில சமயங்களில்
வேறு ஏதாவது வகுப்புக்கு ஆசிரியர் லீவென்றால் இவரை அனுப்புவார்கள். இவர்
வந்து கதை சொல்வார்.
இவர் சொன்ன ஒரு சமையல் குறிப்புதான் 'தொஸ்ஸு'. இது அவரே வைத்த பெயர் என்று நினைக்கிறேன்.
முதல்நாள்
செய்து மீந்து போகும் குழம்பு, ரசம், பொரியலை எல்லாம் ஒன்றாகப் போட்டு
(பொரியலை எப்போதும் சேர்க்க மாட்டார்கள் - சில சமயங்களில் சேர்ப்பார்கள்)
புதிதாகக் கொதிக்க வைப்பதுதான் தொஸ்ஸு!
ஆனால்
நாங்கள் சாம்பாரையும் ரசத்தையும் ஒன்றாக்குவதில்லை. சாம்பார் மட்டும்தான்
எடுத்துக் கொள்வோம். காரக்குழம்பு எனும் வெந்தயக் குழம்பாயின் அதற்கு இந்த
ட்ரீட்மெண்ட்டே தேவையில்லை. கொஞ்சம் சூடு பண்ணி அப்படியே சாப்பிடலாம்! பருப்புக்குழம்புக்குத்தான் இது ஒத்து வரும்!
எங்கள் டிராயிங் மாஸ்டர் சொன்ன தொஸ்ஸுவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. தலைப்பு வைக்க ஒரு பெயர்க் கவர்ச்சிக்காக அதை உபயோகித்துக் கொண்டேன். அவ்வளவுதான்!
படங்கள் : "இணையம்தாங்க!"