வரமாய் வந்த புன்னை! டீசலுக்கு மாற்றாக, புன்னை எண்ணெய் மூலம் மாற்று எரிபொருளை கண்டுபிடித்திருக்கும் ராஜசேகர்: என் சொந்த ஊர், தஞ்சை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள கண்டியங்காடு கிராமம். அப்பா விவசாயி என்பதால், எனக்கும் விவசாயத்தில் ஆர்வம் அதிகம். இயற்கையான சில வழிகளைக் கையாண்டு, புதிதாக நிறைய முயற்சி செய்து, 50 மரங்களின் கிளைகளை வெட்டி, ஒரு மரத்தில் ஒட்டுக்கட்டி, ஒரே மரத்தில் 50 வித மாங்காய்களை காய்க்க வைத்தேன்.விதவிதமான மரங்களை நட்டு, தோட்டத்தின் சூழலை மாற்றியபோது, பல இடங்களில் புன்னை மரங்கள் தானாக வளர ஆரம்பித்தன. அவற்றின் பயன்பாடு அப்ப தெரியல. ஒருமுறை, தேங்காய் எண்ணெயை வெயிலில் காய வைக்கும் போது, எலி விழுந்து வீணானது; அதை இஞ்சினில் ஊற்றியதில் நன்றாகவே ஓடியது. பின், புன்னை மரத்தில் இருந்து எண்ணெய் எடுப்பது குறித்து ஆராய்ந்தேன். ஒரு லிட்டர் டீசல் 35 ரூபாய். ஆனால், ஒரு லிட்டர் புன்னை எண்ணெயில் பயோ டீசல் தயாரிக்க, 10 ரூபாய் தான் செலவாகிறது. புன்னை விதையில் உள்ள பருப்பு தான், பயோ-டீசல் தயாரிக்க பயன்படுகிறது. இந்த டீசலை பயன்படுத்துவதால், இன்ஜின் துருப் பிடிக்காது; சத்தமும் குறைவாதான் கேட்கும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கரும்புகை வராது. அதன் புகையே, மூலிகை வாசனை போல் தான் வரும்.புன்னை எண்ணெயால், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வாய்ப்பு அதிகம். தமிழக தட்ப வெப்பத்திற்கு ஏற்ப புன்னை மரத்தை முறையாகப் பயன்படுத்தினால், எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடே வராது.
(நன்றி: தினமலர் 06-12-2010)
வாசகர்களே! டீசல் விலை திடீரென்று லிட்டருக்குப் பத்து ரூபாய் என்று ஆனால், என்னென்ன நன்மைகள் விளையும்? கற்பனைக் குதிரையை ஓட்டி, கருத்துரையுங்கள்.
வாசகர்களே! டீசல் விலை திடீரென்று லிட்டருக்குப் பத்து ரூபாய் என்று ஆனால், என்னென்ன நன்மைகள் விளையும்? கற்பனைக் குதிரையை ஓட்டி, கருத்துரையுங்கள்.
