இந்த வார மனம் கவர் சிறுகதை!
இந்த வார தினமணி கதிரில் சிவசங்கரி-தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பி. ரங்கநாயகி எழுதிய ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை 'தளை' படித்தேன். ஏனோ ஒன்றிப்போய் படிக்க முடிந்தது. அல்லது ஏனோ படித்த உடன் மனசில் நின்றது. ஏனோ, என்ன ஏனோ? நான் அந்த மாதிரிதான் என்று நினைக்கிறேன். அதனால் ஒன்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்!