வியாழன், 19 ஏப்ரல், 2018

உங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்?


இந்த வார மனம் கவர் சிறுகதை!

இந்த வார தினமணி கதிரில் சிவசங்கரி-தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பி. ரங்கநாயகி எழுதிய ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை 'தளை' படித்தேன்.   ஏனோ ஒன்றிப்போய் படிக்க முடிந்தது.  அல்லது ஏனோ படித்த உடன் மனசில் நின்றது.  ஏனோ, என்ன ஏனோ?  நான் அந்த மாதிரிதான் என்று நினைக்கிறேன்.  அதனால் ஒன்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்!



கதையின் நடையில் பெரிதாக ஒன்றும் இல்லை.  சம்பவங்களும் சுமார்தான்.  ஆனாலும் மனம் தொட முயற்சித்த கதை.  கதையின் கருதான் காரணம்.

==============================================================================================



வருத்தம் புரிகிறது..
பறிக்க மாட்டேன்  - உன்னைப் 
பிரிக்க மாட்டேன் 
செடித் தாயிடமிருந்து 

கோபம் குறைந்து 
திரும்பு மலரே...




பறிக்க மாட்டாயே?  
எங்களைப் 
பிரிக்க மாட்டாயே...



நம்பித் 
திரும்புகிறேன்..


உன்முகம் 
கண்டு 
சிரிக்கிறேன்!




==============================================================================================================



சின்னஞ்சிறு கதை 1

சோம்னாம்புலிசம் 


"இன்னும் ஒரு அடி..  ஒரு அடி எடுத்து வச்சே... உன் உயிர் உன்னுது இல்லே..."  கத்திய கத்தலில் புவனிக்கு மூச்சிரைத்தது.

"ரா........ ஜு... "  அலறலாய் மீண்டும் வெளிப்பட்டது புவனியின் குரல்.

ராஜுவின் நடை இப்போது தடைப்பட்டது.

குனிந்து பார்த்தவன், இன்னும் ஒரு அடி எடுத்து வைத்திருந்தால் மொட்டை மாடியிலிருந்து குதித்திருப்போம் என்று உணர்ந்து திரும்பியவன், நீட்டியிருந்த மனைவியின் கைகளுக்குள் ஓடி வந்து சரணடைந்தான்.



=============================================================================================


மற்றவர்களை பற்றிதான் எப்போதும் பேசுவோமே...  நம்மை நாம் அறிவோமா?   உங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்?







========================================================================================================



சின்னஞ்சிறு கதை 2

அவர்கள் 

கணவனும் மனைவியுமாக லேபர் வார்டின் வெளியே பதட்டமாகக் காத்திருந்தனர்.   இன்னும் கொஞ்ச நேரத்தில் பேரக் குழந்தையைக் கண்ணில் பார்க்கப் போகிறோம் என்கிற பரபரப்பு இருவரிடமும் நிறைந்திருந்தது.

குழந்தையின் அழுகைக்கு குரலுக்காக நான்கு ஜீவன்கள் அங்கு ஆவலுடன் காத்திருந்தன.

நான்கு ஜீவன்களா?  ஆம்.

அதே உணர்வுடன் தங்கள் கைகளில் ஸ்பரிசிக்கப்போகும் குழந்தைக்காக இவர்களின் சம்பந்தி தம்பதியரும் எதிரே காத்திருந்தனர்.  அவர்கள் ஆர்வத்தை மறைத்து பெஞ்சில் கால் மாற்றி வைத்து ஆர்வத்தை அணைபோட்டுக் காத்திருந்தனர்.

இந்தக் குழந்தையைக் கண்ணில் பார்க்கத்தான் எவ்வளவு போராட்டம்?  

கதவு திறந்தது.  தாதியின் கைகளில் அழகிய ஆண்குழந்தை.  

இரண்டு தம்பதியரும் குழந்தைக்காகப் பாய்ந்தனர்.  'அவனி'ன் பெற்றோர் போட்டியில் வென்று குழந்தையை முதலில் கையில் வாங்கினார்.

மற்றவர்கள் அருகே கூடி குழந்தையை ஆர்வமாகப் பார்த்தனர். 

நான்கு வருடங்களுக்குமுன் விபத்தில் செத்துப்போன தங்கள் மகன்-மகள் ஜாடை குழந்தையில் தெரிகிறதா என்று ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினர் அந்த இரண்டு தம்பதியர்களும்.




====================================================================

இயக்கமும் மயக்கமும்...


"இயக்கத்தில் எத்தினையோ வயது வந்த பெண் போராளிகள் இருக்கிறார்கள்.  யுத்தத்தில் நின்று காயப்பட்ட, அங்கங்களை இழந்த போராளிகள் இருக்கிறார்கள்.  இவர்களை இயக்கத்தில இருக்கற ஆண் போராளிகள்தான் திருமணம் செய்ய முன்வரவேண்டும்.  எங்கட பொடியளில் சிலர் தங்களோடு சண்டைக் களத்தில் நின்று போராடிய பெண் போராளிகளைக் கலியாணம் கட்டுவம் எண்டு யோசிக்காமல், அழகான, நல்ல உத்தியோகம் பார்க்கிற அல்லது வெளிநாட்டில் சொந்தக்காரர் இருக்கிற பொம்பிளைகளைத் தேடித் திரிகினம்.  'இப்படியான கலியாணங்களைச் செய்துவைக்க நான் தேவையில்லை' எனத் தலைவரிட்ட சொல்லிப்போட்டு நான் விலகிட்டன்" எனக் கூறினார்.

1991- இல் திருமணக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டிருந்த அன்ரன் பாலசிங்கம்.  

ஒருசில போராளிகளின் திருமணங்களின்போது சாதி பற்றிய மறைமுகமான உறுதிப்படுத்தல்களும் இருந்தன.  ஆனாலும் பல போராளிகள் இவற்றைக் கடந்து திருமணம் செய்து அன்பான காதல் வாழ்வை மேற்கொண்டனர்.  எனது குடும்பத்தில் அம்மம்மாவிடம் சாதி வேறுபாடு பார்க்கும் குணம் இருந்தது.  எமது வீட்டில் வேலைகளைச் செய்ய வரும் ஒருவருக்கு அம்மம்மா போத்தலில்தான் அம்மம்மா குடிப்பதற்குத் தண்ணீர் கொடுப்பதை அவதானித்து வந்திருந்தேன்.  ஒருநாள் அவர் தண்ணீர் கேட்டபோது அம்மம்மாவுக்கு முன்னதாகவே நாங்கள் தண்ணீர் கொடுக்கும் கொம்பிலே தண்ணீர் கொண்டுபோய்க் கொடுத்தேன்.  அம்மம்மாவுக்கு பயங்கரக் கோபம்;  என்னுடன் எதுவும் பேசாமல் அந்தச் சொம்பை வெளியே வீசி எறிந்து விட்டார்.  அப்போதுதான் சமூகத்தில் சாதியம் ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதை நான் புரிந்து கொள்ளத் தொடங்கினேன்.


ஒரு கூர்வாளின் நிழலில் -  தமிழினி 


=======================================================================================================


நாம் செல்லும் வலைத்தளங்களின் லிங்க்கை நம் வலைத்தளப் பக்கத்தில் நாங்களும் கொடுத்திருக்கிறோம்.   அந்தந்தப் பெயர்களில்தான் அவை இடம்பெறும்.  சகோதரி கமலா ஹரிஹரன் எங்கள் தள லிங்க்கை அவர் பக்கத்தில் இப்படிக் கொடுத்திருக்கிறார்!  நன்றி சகோதரி...!





================================================================================================






மீண்டும் அடுத்த வாரம் பார்க்கலாமா.....!

74 கருத்துகள்:

  1. ஹையா நான் தான் ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை செல்வராஜு அண்ணா வெங்கட்ஜி கீதக்கா பானுக்கா எல்லாருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இரண்டாவது கமெண்டும் என்னுது. ஜாலி ஜாலி.

    பதிலளிநீக்கு
  4. வெங்கட்ஜி ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊ,,,ஆஹா

    அப்புறம் பானுக்கா..

    நான் 5.45க்கே ஒபன் பண்ணி வைச்சு ரெஃப்ரெஷ் பண்ணிட்டே இருந்தேன்....சுத்திக்கிட்டே இருந்துச்சு....ஹும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் வெங்கட்.

    // ஹையா நான் தான் ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு. //

    ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் பானு அக்கா...

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்!

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை (உங்களுக்கு மாலை) வணக்கம் வல்லிம்மா... ஐபாட்ல தமிழ் வருதுன்னு ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணியிருந்தீங்களே... காணோம்!

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

    பதிலளிநீக்கு
  10. //பூங்கவிதை அருமை//

    அதைக் கவிதைகளாக எடுத்துக்கொண்டதற்கே முதற்கண் நன்றி துரை ஸார். பாராட்டிற்கு இரண்டாம் நன்றி!!!

    பதிலளிநீக்கு
  11. ரங்கனாயகி கதையை சரியாகக் கொடுத்திருக்கலாமே. முழுவதும்
    படிக்க முடியவில்லை.என்னப்பா இது.

    பதிலளிநீக்கு
  12. இருக்கே ஸ்ரீராம். ஐபாட், லாப்டாப் ரெண்டுலயும் இருக்கு. பூவும் நீங்களும் லவ்வோ லவ். கவிதை சூப்பர்.

    பதிலளிநீக்கு
  13. அம்மா... தினமணி கதிர் தளத்துக்குச் சென்றால் படிக்கலாமே.. நான்கு பக்கங்கள் என்று நினைக்கிறேன்! இதோ லிங்க்!

    http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/apr/15/%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88-2900125.html

    பதிலளிநீக்கு
  14. பூவே ஒரு கவிதை என்பதால் என் கவிதையின் குறைபாட்டை பூ நிறை செய்து விட்டது அம்மா!!! பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. லாஸ்ட் ஆஹா!!!! வித்தியாசமாய் பதிவர்களின் பெயர்களுடன்...சூப்பர்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. நன்றி கீதா.. எங்கள் ப்ளாக் என்கிற பெயரில்தான் மற்ற தளங்களில் லிங்க் இருக்கும். சகோதரி என் பெயரில் போட்டிருப்பதைப் பார்த்ததும் ஒரு சின்ன நெகிழ்ச்சி... சந்தோஷம்!

    பதிலளிநீக்கு
  17. ஹிஹிஹி, இன்னிக்கு வேணும்னு தான் லேட்டா வரேன். யாரு பர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுனு பார்க்கத் தான். வெங்கட் இன்னிக்கு ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! நாளைக்குப் பார்க்கலாம். கதை, கவிதை எல்லாம் அருமை/ சின்னஞ்சிறு கதைகள் மிக அருமை. அதிலும் நான்கு வருஷம் கழிச்சுப் பிறந்த குழந்தை! என்ன சொல்ல!

    பதிலளிநீக்கு
  18. உங்க லிங்குக்குப் போனால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் An Error Was Encountered
    The URI you submitted has disallowed characters.

    பதிலளிநீக்கு
  19. மூணு முறை போட்டுப் பார்த்தாச்சு. ஒண்ணு , கதையை முழுசும் இங்கேயே கொடுங்க. இல்லைனா லிங்கைச் சரியாக் கொடுங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  20. அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது. இலங்கைத் தமிழர்களைப் பற்றி பிறகு எழுதறேன். பிரயாணம் இப்போ (காவிரித் தண்ணீரைக் கொண்டுவர)

    பதிலளிநீக்கு
  21. // இல்லைனா லிங்கைச் சரியாக் கொடுங்க!//

    சரியாக காபி பேஸ்ட் பண்ணுங்க கீதாக்கா... எனக்கு ஓபன் ஆகுதே...

    பதிலளிநீக்கு
  22. மெதுவா வாங்க நெல்லை... கௌ அங்கிளைப் பார்ப்பீங்களா!

    பதிலளிநீக்கு
  23. ஒருவழியாத் திறந்தது. படிச்சேன். ம்ம்ம்ம்ம் என்ன சொல்றது? எங்க மனோநிலை போலவே! இயல்பாக அந்த வயசுத் தம்பதிகளின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம்.

    ஆனால் எனக்குத் தோன்றும். சிலர் விட்டுட்டுத் தனியா யு.எஸ். எல்லாம் போய் ஆறுமாசம் இருந்துட்டு வராங்க! அது எப்படினு? எங்க குடியிருப்பு வளாகத்திலேயே எதிரே உள்ள தம்பதியரில் மாமி மட்டும் போய் யு.எஸ்ஸில் ஆறு மாசம் இருந்தாங்க. மாமா நடுவில் போய் இரண்டு மாசம் மட்டுமே இருந்துட்டு வந்தார். என்னோட நாத்தனார் பெண் கூடத் தன் பெண் பிரசவத்துக்குப் போனப்போ அவள் மட்டுமே ஆறு மாசம் தங்கினா! அவர் போய் ஒரு மாசம் இருந்துட்டுத் திரும்பிட்டார். இதற்கு என்ன அர்த்தம்? அவங்களுக்குள்ளே அந்நியோன்னியம் இல்லைனு எல்லாம் சொல்ல முடியாதே! அவரவர் மனோநிலையும், மனோபலமும் காரணம்னு நினைக்கிறேன். அதனால் தானோ என்னமோ இப்போ ரேவதி தவிப்பதை என்னால் முழுசும் புரிஞ்சுக்க முடிகிறது! :( சுமாரான கதை என்றாலும் கணவன், மனைவிக்குள் உள்ள ஒரே அலைவரிசை எண்ணங்களைச் சொல்லும் கதை! அந்த வகையில் பாராட்டுக்கு உரியது.

    பதிலளிநீக்கு
  24. பூக்கள் அழகு
    என்னைப்பற்றி...
    நான் லாடு லபக்குதாஸு...

    பதிலளிநீக்கு
  25. நெ.த. தலைக்காவேரி பயணம்? நாங்க போக நினைச்சுப் போகவே முடியலை! இனி முடியுமா தெரியலை!

    பதிலளிநீக்கு
  26. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  27. முழு கதையையும் படிக்க முடியவில்லை. லிங்க் ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  28. பூவின் தவம்

    பூஜைக்காக பூவுலகில் பூத்திருக்கும் அந்தப்
    பூவுக்குத் தெரியும் தன் தாய்க்குத் தாயான
    அண்ட சராசராங்களின் தாய் யாரென்று!
    அந்த தாய் மடிசேர தவமாய் தவமிருக்கும்
    ஒற்றைப் பூவே நீ வாழி! பக்தனொருவன் வருவான்!
    உன் தவமறிவான்; உலகத் தாயின் மடி சேர்ப்பான்
    கவலை கொள்ளற்க; காத்திருப்பதில் சுகமுண்டு.
    இன்னாரால் இன்ன காரியம் இப்படித் தான்
    நிறைவேற வேண்டும் என்பது தான் உலக நியதி!
    உன் உயிர்ப்பின் உன்னதம் நிறைவு கொள்ளும்!
    அன்னை அருள் பாலிப்பாள்; காத்திரு மலர் மகளே!

    பதிலளிநீக்கு
  29. வாங்க கீதாக்கா... படிச்சுட்டீங்களா? ஆமாம்.. ஒவ்வொருவர் மனநிலையைப் பொறுத்தது. இதிலேயே பாருங்கள், மனைவி கிளம்பும்போது கணவர் வந்துவிட்டாலும் "நான் அங்கதான் கிளம்பிக் கொண்டிருந்தேன்.. எந்நாலும் பிரிஞ்சு இருக்க முடியலை" என்று சொல்லும் எண்ணம் வரவில்லை! கெத்தாக விட்டு விடுகிறார். அவர் ஒரு பார்வை பார்த்தார் என்பதோடு சரி, புரிந்து கொண்டாரா? விவரம் இல்லை. புரிந்து கொண்டாலும் வாயால் சொல்வது போல் ஆகுமா!!

    பதிலளிநீக்கு
  30. வாங்க கில்லர்ஜி..

    //நான் லாடு லபக்குதாஸு//

    ஹா... ஹா... ஹா... ஆனால் நீங்கள் ஒருவர்தான் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  31. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  32. பானு அக்கா... பின்னூட்டத்திலேயே வல்லிம்மாவுக்கு பதிலில் லிங்க் கொடுத்திருக்கேன் பாருங்க...

    பதிலளிநீக்கு
  33. வாங்க ஜீவி ஸார்... நீண்ட நாட்களுக்குப் பின் வருகை. நன்றி. பூவுக்கு கவிதையில் அழகாய் பதில் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி ஸார்.

    பதிலளிநீக்கு
  34. "//நான் அங்கதான் கிளம்பிக் கொண்டிருந்தேன்.. எந்நாலும் பிரிஞ்சு இருக்க முடியலை" என்று சொல்லும் எண்ணம் வரவில்லை! கெத்தாக விட்டு விடுகிறார். அவர் ஒரு பார்வை பார்த்தார் என்பதோடு சரி,// ஆமாம், எனக்கும் தோன்றியது தான்! நானெல்லாம் கிளம்பும்போதே தொலைபேசிச் சொல்லி இருப்பேன்! :)))) இவங்க சொல்லலை! என்றாலும் அவங்க உடையையும் கிளம்பத் தயாராக இருந்ததையும் பார்க்கிறச்சே அவர் புரிந்து கொண்டிருப்பார் என்றே தோன்றுகிறது. ஈகோ இருவருக்குமே இருக்கு இந்தக் கதையில். அது கூடாது! கணவன், மனைவிக்குள் கோப, தாபம் வரலாம். சண்டை வரலாம். ஈகோ தேவை இல்லை.

    பதிலளிநீக்கு
  35. // ஈகோ இருவருக்குமே இருக்கு இந்தக் கதையில். அது கூடாது! கணவன், மனைவிக்குள் கோப, தாபம் வரலாம். சண்டை வரலாம். ஈகோ தேவை இல்லை. //

    அதே... அதே... பின்னால் வருத்தப்பட்டு பயனிருக்காது. நான் என் பாஸ் கிட்ட வெளிப்படையாச் சொல்வேன். அவர் புன்னகைப்பாரே தவிர பதில் அளிக்க மாட்டார்! சில சமயங்களில் முகவாய் இடது தோளை நோக்கி விரையும்!

    :))))

    பதிலளிநீக்கு
  36. சாதியத்தை ஒழிப்பது கடினம்தான்.

    //வருத்தம் புரிகிறது..
    பறிக்க மாட்டேன் - உன்னைப்
    பிரிக்க மாட்டேன்
    செடித் தாயிடமிருந்து

    கோபம் குறைந்து
    திரும்பு மலரே...//
    ரமண மஹரிஷி ஒரு முறை தன் சீடர்களுடன் கிரிவலம் வந்து கொண்டிருந்த பொழுது, ஒரு அம்மாள் செடியில் இருந்த அத்தனை பூக்களையும் பறித்ததை பார்த்ததும், சற்று கோபமாக,"பறிச்சுடு அம்மா எல்லா பூவையும் பறிச்சுடு, நீதானே வைத்தாய் .." என்றாராம். அவருக்கு பூக்களை பறித்து மரத்தை மொட்டை அடிப்பது பிடிக்காதாம்.

    பதிலளிநீக்கு
  37. என்னைப் பற்றி நான்:
    உயரே உயரே பறந்து
    பருந்தாக துடிக்கும்
    ஊர் குருவி

    பதிலளிநீக்கு
  38. //பெற்றோர் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை// கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு விஷயத்தை நான் தொன்னூறுகளிலேயே படித்தேன். லண்டனில் ஒரு விபத்தில் கணவன் இறந்து விட, அவனுடைய உடலிலிருந்து விந்தணுக்களை எடுத்து கோமாவில் இருந்த மனைவியின் உடலில் இருந்த கருமுட்டையோடு இணைத்து, கரு உயிர் கொண்டவுடன் அதை மனைவியின் கர்பபைக்குள் செலுத்தி, ஒன்பதாவது மாதம் முடிந்தவுடன் அறுவை சிகிச்சை மூலம் பூரண ஆரோக்கியத்தோடு ஒரு குழந்தையை பிரசவிக்க வைத்தார்கள்.

    பதிலளிநீக்கு
  39. //கதையின் நடையில் பெரிதாக ஒன்றும் இல்லை. சம்பவங்களும் சுமார்தான். ஆனாலும் மனம் தொட முயற்சித்த கதை. கதையின் கருதான் காரணம்.//

    சில கதைகள் அப்படித்தான் இருக்கும்.. சிலருக்கு ஒண்ணுமே இல்லையே இதில் என்பதுபோல இருக்கும்.. சிலருக்கு மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

    என் “சிரிச்சது குத்தமோ?:).. வும் அப்படித்தானே.. இதில் ஒண்ணுமே இல்லையே எனத்தானே நினைச்சீங்க:) ஹா ஹா ஹா:))..

    பூவூஊஊஊஊஊஊ உங்களைப் பார்த்துத் திரும்பியதா? இல்லை ஸ்ரீராம் பூவிடம் தோற்று விட்டாரோ?:))..

    பூவைப் பார்த்ததும் எங்கோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வந்துது..

    “தோட்டக்காரர் சொன்னார்
    “பூக்கள் பறிப்பதற்கல்ல”..
    பூக்கள் சொன்னது..
    “ஆம் செடிகளிலேயே கருகத்தான்”..”

    பதிலளிநீக்கு
  40. eஎன் ராஜூ வுக்கு கண் தெரியாதோ?:).

    //மற்றவர்களை பற்றிதான் எப்போதும் பேசுவோமே... நம்மை நாம் அறிவோமா? உங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்?//

    நான் நிறையத்தடவை என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறேனே..
    “நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே”.. ஆராவது பேசினால் கலைத்தால் தேம்ஸ்ல குதிச்சிடுவேன்... வள்ளிக்கு நேர்த்தி வைப்பேன்ன்... மற்றும் எனக்குக் கிடைச்ச பட்டங்கள் பதவிகள் இப்படி இப்பூடிப் பல விசயங்கள்:)) ஹா ஹா ஹா..

    இருந்தாலும் நம்மை நாமே புகழ்வது அழகல்ல.. நம்மை அடுத்தவர் புகழ்ந்தால்தான் அது உண்மையன புகழ்ச்சி. அரசியல்வாதிகள் மேடையில் தம்மைத்தானே புகழ்வார்களே.

    நம்மில் இருக்கும் கூடாத குணங்களை எதுக்கு வெளியே சொல்லுவோம் என ஆரும் சொல்வதில்லை+விரும்புவதில்லையே:))... மனிதன் எனில் நல்லதும் கெட்டதும் கலந்த கலவைதானே.

    பதிலளிநீக்கு
  41. அன்பும் ஒரு தளைதான் என்று கதைக்கு அந்த தலைப்பு கொடுத்து விட்டார்களோ !
    அருமையாக இருக்கிறது. இருவர் உள்ளமும் ஒன்றாய் இருப்பது மகிழ்ச்சி.
    இளம் வயது என்று இல்லை, வயதான பின்னும் ஒருவருக்கு ஒருவர் தேவை .


    மலர் பேச்சு அருமை.
    மலர் அழகு.

    தமிழினி நன்றாக சொல்லி இருக்கிறார்.
    சமூகத்தில் புரையோடி போனவைகள்.
    நீங்கள் கொடுத்த சுட்டியை காப்பி செய்து பேஸ்ட் செய்து தான் கதையை படித்தேன்.
    கமலா ஹரிஹரன் டேஸ்போர்டில் பெயர்களுடன் வைத்து இருப்பது மகிழ்ச்சி.








    பதிலளிநீக்கு
  42. எதுக்கு இப்படியெல்லாம் ஒரு உயிரை இந்த உலகுக்குக் கொண்டு வருகிறார்களோ????.. சுற்ற இருப்போருக்கு பெருமை எனினும் குழந்தை பாவம்தானே...

    போராளிகளின் கதைகள் ஒன்றா ரெண்டா.. எத்தனை இருக்கிறது.. என்ன பண்ணுவது.... எல்லோரும் மனிதர்தான்.. எல்லோருக்குள்ளும் மனம் உண்டுதானே..

    “காக்கிச்சட்டைக்குள்ளேயும்.. ஆசை மனம் உள்ளது”..
    ==========================

    என்னாது “எங்கள்புளொக்” இப்போ “ஸ்ரீராம்” புளொக் ஆகிட்டுதோ?:) கெள அண்ணனுக்கு இது தெரியுமோ?:)) ஹா ஹா ஹா:)).. ரகசியமாக லோயரைப் பிடிச்சு மேசைக்குக் கீழால காசு குடுத்து:) பெயர் மாற்றம் செய்திட்டாரோ ஸ்ரீராம்:)).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  43. பெற்றோர் இறந்து நாங்கு வருடங்களுக்கு பிறந்த குழந்தையைப் பற்றி, தொலைக்காட்சியில் பார்த்தேன்.
    அதற்கு நீங்கள் எழுதிய கதையா? நன்றாக இருக்கிறது.

    //இரண்டு தம்பதியரும் குழந்தைக்காகப் பாய்ந்தனர். 'அவனி'ன் பெற்றோர் போட்டியில் வென்று குழந்தையை முதலில் கையில் வாங்கினார்.//

    ஏன் இப்படி அவனின் பெற்றோர் முதலில் கையில் வாங்க்கினார்கள் என்று எழுதி இருக்கிரீர்கள்?

    பதிலளிநீக்கு
  44. ///Geetha Sambasivam said...
    ஹிஹிஹி, இன்னிக்கு வேணும்னு தான் லேட்டா வரேன்.///

    ஹா ஹா ஹா.... ஆஆஆஆஆ கிகிகிக்க்க்க்க்கீஈஈஈஈஈஈஈஈ கீசாக்காவை நினைச்சேன் சிரிச்சேன்:)).. இப்போ கீசாக்கா எங்கள்புளொக்கில் ஓடி ஓடியே அஞ்சு கிலோ மெலிஞ்சிருப்பாவே:)).. இப்பூடித்தான் ஒருநாளைக்கு 4.30 க்கு.. இன்னொருநாள் 5.60 க்கு:) இன்னொரு நாள் 5.12 க்கு இப்பூடித்தான் பப்ளிஸ் பண்ணோனும்:)) அப்போதான் தெரியும் உண்மையில் ஆரு 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ என:)) இது 6 மணிக்கு ரீ ஊத்திக்கொண்டு வந்து நோகாமல் நொங்கெடுக்கப் பார்க்கினம் எல்லோரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விட மாட்ட்டேன்ன்ன்ன்ன்:))... ம்ஹூம்ம்ம்ம்[இதுதான் முகத்தை இடது தோளில் வைப்பது:)) ஹையோ மீ ஸ்ரீராமின் பொஸ் ஐ சொல்லல்லே:)).. நாங்களும் செய்வோமாக்கும்:)) ஹா ஹாஅ ஹா:))]

    பதிலளிநீக்கு
  45. //ஏன் இப்படி அவனின் பெற்றோர் முதலில் கையில் வாங்க்கினார்கள் என்று எழுதி இருக்கிரீர்கள்?///

    அப்பூடிக் கேளுங்கோ கோமதி அக்கா:)).. வரவர எல்லோருக்கும் நம்பாலாரில பயமே இல்லாமல் போகுதூஊஊஊஉ:)).. நாங்க இதுக்காக பொயிங்கப்போறோம்ம் தேம்ஸ் கரையில்:) எங்களுக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))..

    பதிலளிநீக்கு
  46. //மற்றவர்களை பற்றிதான் எப்போதும் பேசுவோமே... நம்மை நாம் அறிவோமா? உங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்?//

    நம்மைப் பற்றி நாமே சொல்லி கொள்ள கூடாது.

    பதிலளிநீக்கு
  47. என்னாச்சு இண்டைக்குக் கீதாவுக்கு?:) பழையபடி நெட்டூஊஊஊஊ கட்டாஅயிடுத்தோஓஓஓஓ?:)).. இதோ இப்பவே போறேன் இதுபற்றி மோடி அங்கிளோடு பேச:))

    பதிலளிநீக்கு
  48. வணக்கம் சகோதரரே

    சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற கதை "தளை" நன்றாக இருக்கிறது. பதிந்தை படித்தேன். சுவாரஸ்யமாக சென்றது மீதியை நீங்கள் இணைப்பு கொடுத்திருப்பதால் அங்கு சென்று படிக்கிறேன். தம்பதிகளியிடையே கருத்து வேறுபாடு வரலாம்.. போகலாம். ஆனால் கருத்து மோதல்களாய் ஆகாமல் இருக்க வேண்டும்.

    மலர்கள் மிக அழகு. அழகுக்கு அழகு செய்தது தங்களின் கவிதை. அவற்றின் எண்ணங்களை மன ஓட்டங்களை புரிந்து கொண்டதால் நன்றி சிரிப்புடன் புன்னகைக்கும் மலர் மிக மிக அழகு. மலர்களையும் அவற்றை கொய்யாமல் நோகாது சொல்லிய வரிகளையும் மிகவும் ரசித்தேன்.

    தூக்கத்தில் நடப்பவை சிறுகதையாக மிகவும் நன்றாக உள்ளது.

    நான்கு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை.. விஞ்ஞான முன்னேற்றம் வியப்பளிக்கிறது. நெஞ்சம் நிறைய எதிர்பார்ப்போடு காத்திருந்து குழந்தையை கண்டதும், அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாயிருந்திருக்கும். இதுவும் வினோதங்களில் ஒன்றுதான்.

    என்னைப் பற்றியும் குறிப்பிட்டு எழுதியிருப்பதற்கு மிக்க நன்றிகள். வலைதளம் ஆரம்பித்த புதிதில் அனைவரது தளத்திற்கு சென்று படிக்க சிரமப்பட்டேன்.கணணியில் எனக்கு உதவியாய் இருந்த என் மகனும், மகளும் இந்த உத்திகளை கற்றுத்தந்தனர். அவர்களுக்கும் என் நன்றிகள். என்னைப்பற்றி தங்கள் கதம்பத்தில் கூறியுள்ளதற்கு மீண்டும் ஒருமுறை மன நெகிழ்வுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  49. கொடுத்திருந்த லிங் போய் கதையைப் படிக்கும்போது நடுவே மாறி விடுகிறது பரவாயில்லை கதையைப் பின்னூட்டங்கள் மூலம்புரிந்து கொள்ள முடிந்தது அதிகம் மிஸ் செய்யவில்லை இறந்து பொன கணவன்மனைவிகளின் உயிர்ச்சத்தை எடுத்து வாடகைத்தாய் முலம் குழந்தை பிறக்க வைப்பதன் மூலம் விஞ்ஞான வளர்ச்சி வேடுமானால் தெரியலாம் ஆனால் என்ன பயன் பிறக்கும் குழந்தைக் பிற்காலத்தில் ஏதோ வெறுமை தோன்றலாம் அவ்வப்போது ஜீவி அவர்கள் பின்னூட்டக்கவிதைகளில் அசத்துகிறார் முன்பு மழை பற்றி இப்போது பூ பற்றி

    பதிலளிநீக்கு
  50. @ GMB

    //அவ்வப்போது ஜீவி அவர்கள் பின்னூட்டக்கவிதைகளில் அசத்துகிறார் முன்பு மழை பற்றி இப்போது பூ பற்றி...//

    நன்றி, ஐயா. பாராட்ட வேண்டியதைப் பாராட்டுவதில் என்றும் தயங்கியதே இல்லை, நீங்கள்.

    பதிலளிநீக்கு
  51. செம்பருத்தியுடனான உரையாடல் செம

    பதிலளிநீக்கு
  52. நல்ல தொகுப்பு. முகம் காட்ட மறுத்த மலரை மனம் மாற வைத்து எடுத்தப் படங்கள் அருமை:).

    சின்னஞ்சிறு கதை செய்தித்தாளிலும் வாசித்தேன். தினமணி கதிர் கதையை தளத்தில் வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  53. நல்ல தொகுப்பு. இப்பொழுது தான் படிக்க முடிந்தது. முதல் கதை (தினமணி) இன்னும் படிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  54. அருமையான தொகுப்பு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  55. மலரோடு பேசியது சோ ஸ்வீட் :)
    நான் எப்பவும் மலர்களை பிரித்ததுமில்லை பறித்ததுமில்லை :)
    செடியில் இருந்தா 3 நாளா வது இருக்கும் அங்கே பட்டாம்பூச்சி தேனீக்கள் குட்டி தேன்சிட்டுகளுக்கு :)
    என்னைப்பொறுத்தவரை மலர்கள் பார்த்து ரசிக்க மட்டுமே .

    பதிலளிநீக்கு
  56. தூக்கத்தில் நடப்பது !!! என்ன செய்றாங்கன்னே தெரியாதாம் .யாருக்கும் வரக்கூடாதது

    பதிலளிநீக்கு
  57. அவர்கள் ..கதை நல்லா இருக்கு .உண்மைச்சம்பவத்தை நானும் படித்தேன் .

    //எதுக்கு இப்படியெல்லாம் ஒரு உயிரை இந்த உலகுக்குக் கொண்டு வருகிறார்களோ????.. சுற்ற இருப்போருக்கு பெருமை எனினும் குழந்தை பாவம்தானே... //

    நினைச்சேன் என்னைப்போலவே சிந்திச்சிருக்காங்க மை தலைவியும் :)


    பதிலளிநீக்கு
  58. சா தீ :( வடக்கு தெற்கு பக்கத்து நாடு எல்லா இடத்திலும் இருக்கு .சாதி வேணாம் நோ caste டிஸ்க்ரிமினேஷன் என்று பேனர் கட்டி யூ கே பார்லியமென்ட் டையே திகைக்க வச்சவங்க நம் நட்டு மக்கள் :(

    பதிலளிநீக்கு
  59. என்னைப்பற்றி ..சொல்லனும்னா
    எமோஷனல் முட்டாள் ..சிலநேரம் கெட்டவள் பல நேரம் நல்லவள் .நிஜ வாழ்வில் போலியாய் நடிப்பவர்களை பிடிக்காது

    பதிலளிநீக்கு
  60. அருமையான தொகுப்பு
    உளநிறைவான பதிவு

    பதிலளிநீக்கு
  61. பாவம் இவர் பிரிக்கமாட்டார் என்று நம்பலாம் போல…ஹும் போனால் போகிறது இதற்கு மேல் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என்று ஸ்ரீராமைத் திரும்பிப் பார்த்தாள் செம்பருத்தி!
    கீதா

    பதிலளிநீக்கு
  62. சிறுகதை 1..சோனாம்புலிஸம் நன்றாக இருக்கு ஸ்ரீராம்..முதலில் குழந்தை என்று நினைத்து ஹிஹிஹிஹி…
    சிறுகதை 2 முதலில் புரியவில்லை அப்புறம் செய்தியுடன் வாசித்த போது புரிந்துவிட்டது. செய்தி வியக்க வைத்தது…ஆனால் இப்படி ஒரு குழந்தை அவசியமோ??!! எனன்வோ போங்க
    கீதா

    பதிலளிநீக்கு
  63. தளை நன்றாக இருக்கிறது பொதுவாகச் சொன்னால். ஆனால் ஏதோ ஒரு குறை….நடை….ம்ம்ம் அப்புறம் முடிவில் மனைவி அத்தனை ஆர்வத்துடன் கிளம்பியதும், அதன் முன் சொல்லப்பட்ட அந்த அந்யோன்யம் கணவரைக் கண்டதும் வெளிப்பட்டிருக்க வேண்டாமோ?!!!! அதை அழகாய்ச் சொல்லியிருக்கலாமோ…..அங்குதான் நல்ல சான்ஸ் கதைக்கான ஸ்வாரஸ்யம். அது மிஸ் ஆனது போல் தோன்றியது.
    கீதா

    பதிலளிநீக்கு
  64. ம்ம்ம்ம்ம்ம் என்னைப் பற்றி என்ன சொல்ல, நான் சொல்லுவதை விட மற்றவர் சொல்லுவது நல்லாருக்குமோ?!!! ஏன்னா என் நெகட்டிவ் சொல்ல பெரிய லிஸ்ட் அது பதிவை விட நீளமாகிடுமே ஹிஹிஹிஹி அதான் யோசிக்கேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  65. பூவும் அதற்கான வரிகளும் மிகவும் அருமை.
    சிறு கதைகள் இரண்டும் நன்றாக வித்தியாசமாக இருக்கின்றன
    சகோதரி கமலா ஹரிஹரன் அவர்கள் மிகவும் வித்தியாசமாய்ப் பெயர்களில் தளங்களை இணைத்திருப்பது நன்றாக இருக்கிறது. ஆமாம் உங்கள் நெகிழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது.
    என்னைப் பற்றிச் சொல்வதென்றால், பல சமயம் தோன்றுவது இதுதான் நான் வெளியுலகிலும் ரொம்பவே வெளிப்படையாய் இருக்கிறேனோ என்று கொஞ்சம் ப்ரிட்டென்ஷன் வேணுமோ என்று பல சமயங்களில் தோன்றியதுண்டு.
    கதை லிங்க் எனக்கு மொபைலில் கிடைக்கக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.
    துளசிதரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!