=====================================================================
நான் பதிவு எழுத ஆரம்பித்த காலங்களில் எழுதிய பதிவை நான் மறு பதிவாக நேற்று இட்டு
இருந்தேன். அதை படித்த திருமதி. உஷா அவர்கள் நீங்கள் ஆரம்ப முதெல்லர்ந்தே இப்படித்தான் எழுதுகிறீர்களா என்று
கேட்டு இருந்தார். அதற்கு பதில்தான் இந்த பதிவு. இதுவும் ஆரம்ப காலத்தில் நான் எழுதிய பதிவு எனக்கு மிகவும் பிடித்த நல்ல பதிவு.
இது அந்த நேரத்தில் சீண்டுவார இல்லாமல் இருந்தது அதன் பின்தான் சீரியாஸா
எழுதுவதற்கு பதிலாக பல மொக்கை பதிவுகளை எழுத ஆரம்பித்தேன் அப்புறம் அந்த மொக்கைகள்
பிரபலமாகின...
சரி இதைப்படித்து விட்டு அப்படியே போகாமல் உங்கள் மனதில் பட்ட கருத்தை பதிவிட்டு
செல்லுங்கள். இல்லைன்னா உங்க கண்ணுலேயே வந்து
குத்துவேன் அல்லது மொக்கை பதிவுகளாக போட்டு பதிவுலகத்தையே கலங்கடிச்சுடுவேன்
================================================================================
மௌனமாக ஒரு அலறல்
மதுரைத்தமிழன்
அம்மா...நான் உங்ககிட்ட அனுமதி வாங்கிட்டுதான்
பார்ட்டிக்கு போயிருந்தேன்...
அம்மா நீங்க சொன்னீங்க குடிக்க கூடாது என்று.
அம்மா நீங்க சொன்னதை மறக்காமல் ஞாபகம் வைத்திருந்தேன்.
அம்மா நான் கோக் மட்டும்தான் குடித்தேன்
அம்மா என் உள்ளத்திற்குள் ஒரு கர்வம் & பெருமை
அம்மா நீங்க சொன்னதை அப்படியே கடைபிடிகின்றேன் என்றுதான்
அம்மா எல்லோரும் குடி குடி என்று வற்புறுத்தினார்கள்
அம்மா நான் அதை மறுத்து கோக் மட்டும்தான் குடித்தேன்
அம்மா இருந்தாலும் நான் குடித்துவிட்டு கார் ஒட்டவில்லை
அம்மா நான் பார்ட்டியில் சரியாகத்தான் நடந்தேன்
அம்மா உங்கள் வழிகாட்டுதல் எப்போதுமே சரியாகத்தான் இருக்கும்.
அம்மா ஒரு வழியாக பார்ட்டி முடிந்து எல்லோரும் வெளியேறத் தொடங்கினார்கள்.
அம்மா நானும் என் காரில் வந்து உட்கார்ந்தேன் எனக்கு தெரியும் நான் நல்ல படியாக
வீடு வந்து சேர்வேன் என்று
அம்மா நீங்க என்னை ரொம்ப பொறுப்பான நல்ல பிள்ளையாக வளர்த்திர்கள்.
அம்மா நான் காரை பார்க்கிங் லாட்டில் இருந்து எடுத்து மெதுவாக ரோட்டிற்குள் வந்தேன்
அம்மா அப்போது இன்னொரு காரில் வந்தவன் என்னை பார்க்வில்லை.
அம்மா அந்த கார் என் காரில் ஒரு பாறாங்கல்லை போல வந்து மோதியதும்மா
அம்மா என்ன நடந்தது என்று தெரியவில்லை நான் தரையில் கிடந்தேனம்மா
அம்மா அப்போது போலிஸ்காரர் பேசியது என் காதில் விழுந்தது அம்மா
அம்மா அவர் யாரிடமோ சொன்னார் அந்த வாலிபன் நல்லா குடித்துவிட்டு கார் ஒட்டி வந்து
மோதியுள்ளான் என்று
அம்மா குடித்தது அவன் ஆனால் எனக்கு ஏன் அம்மா இந்த தண்டனை?
அம்மா உன் ஆசை மகள் நான் தரையில் கிடக்கின்றேன்.
நீ சிக்கிரம் இங்கே வாம்மா
அம்மா எப்படிம்மா இது நடந்தது? என் வாழ்க்கை பார்ட்டியில் உள்ள ஒரு பலூனை போல ஒரு நொடியில் உடைந்துவிட்டதேயம்மா
அம்மா இங்கே எங்க பார்த்தாலும் ஒரே ரத்தமயம்தானம்மா எல்லாம் இரத்தமும் உன் செல்லப்
பிள்ளையினுடையது தானம்மா
ஆம்புலன்சில் வந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள் நான் சிக்கிரம் இறந்து விடுவேன்
என்று
அம்மா நான் உன்னிடம் ஓன்றை மீண்டும் சொல்ல விரும்புகிறேன் சத்தியமா நான் குடிக்கவில்லை
அம்மா மற்றவர்கள்தான் குடித்தார்கள் அந்த பார்ட்டியில்
அம்மா ஓன்று மட்டும் வித்தியாசம் குடித்து அவர்கள் ஆனால் இறப்பது நான் அம்மா
அம்மா இவர்கள் ஏனம்மா குடிக்கிறார்கள் இது அவர்கள் வாழ்க்கையை மட்டுமில்லாமல்
மற்றவர்கள் வாழ்க்கையயும் அழித்துவிடுமம்மா
அம்மா ரொம்ப வலிக்குதம்மா சில நொடியில் கத்தியை எடுத்து மெதுவாக அறுப்பது போலவும்
சில நொடியில் பாறாங்கல்லை மேலே தூக்கிபோட்டது போலவும் வலிக்குதம்மா...
ஆனால் குடித்து விட்டு என் மேல் மோதியவனோக்கோ சிறு அடி கூட இல்லையம்மா.
அவன் வைத்த கண் மாறாமல் என்னை பார்த்து கொண்டிருக்கிறான் அம்மா.
அம்மா இது நியாமில்லை அம்மா இது நியாமில்லை.......
அம்மா தம்பிய அழ வேண்டாம் என்று சொல்லும்மா
அம்மா என் செல்ல அப்பாவை தைரியாமாக இருக்க சொல்லம்மா
அம்மா நீதான் அவரை பார்த்து கொள்ள வேண்டும்
என் சாமாதியில் "டாடியின் பெண் இங்கே உறங்குகிறாள்
"என்று போடும்மா
அம்மா உன்னைப் போல யாரவது அவனுக்கு எடுத்து சொல்லி வளரத்திருந்தால்
இப்போது நானும் உயிரோட இருந்திருப்பேன் அம்மா.
அம்மா எனக்கு இப்போ பயமா இருக்கும்மா. என்னால முச்சுவிடமுடியலையம்மா
அம்மா எனக்காக அழாதேம்மா உனக்கு நான் எப்போது தேவையோ அப்போது உன் அருகில் இருப்பேனம்மா?
அம்மா நான் இறக்கும் முன் உன்னிடம் கடைசியாக ஒரு கேள்வியம்மா....
நான் குடிச்சிட்டு கார் ஓட்டவில்லை ஆனா நான் ஏனம்மா இப்போ சாகனும்?
இன்றைய இளைஞர்கள் நல்லிரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு அவர்களே
காரை ஓட்டி சென்று விபத்திற்கு உள்ளாவதை நாம் தினசரிகளில் படிக்கிறோம். அந்தமாதிரியுள்ள இளைஞர்கள் & இளம்
சகோதரிகள் குடிப்பதற்கு முன்னால் ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். நான் உங்களை குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அதிகமாக குடித்து விட்டு
விடிகாலையில் கார்களை ஒட்டி செல்ல வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் லிமிட் என்னவென்று தெரிந்து விட்டு அந்த அளவு குடியுங்கள் நண்பர்கள்
சொல்லுவதற்க்காக அதிக அளவு குடிக்காதிர்கள். முடிந்தால் குடிக்காமல்
இருக்க முயற்சி செய்யுங்கள்
இழப்பு என்பது இழந்தவர்களூக்குதான் புரியும். நீங்கள் இறப்பதினால் உங்களுக்கு பெரிய இழப்ப ஏதுமில்லை வாழ வேண்டிய ஆண்டுகளைதான்
இழக்கிறீர்கள். ஆனால் உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு உங்களின்
இழப்பு ஒரு பெரிய இழப்பு. உங்களால் அடைந்த சந்தோஷங்களையும் அவர்கள்
இழக்கிறார்கள்