இந்த மாத PiT போட்டிக்கு தலைப்பு மரங்கள். என்னிடம் என்னென்ன மரங்கள் படங்கள் இருக்கின்றன என்று பார்த்தபோது கிடைத்தவற்றில் சில..!
சாலை தெரிந்திருக்கக் கூடாது!
வீட்டின் மொட்டை மாடியிலிருந்து ஒரு க்ளிக்!
திருக்கடவூர் நந்தவனம்...!
கடந்து சென்றபோது க்ளிக்கியது.... பாதையும் பெரிய இடைவெளியும் இருந்திருக்கக் கூடாது!
செல் க்ளிக்! பறவை தெரிகிறதா? அதற்காக எடுத்தது!
க்ளோசப் கொய்யா!
புயல் காற்றில் சாய்ந்தாடும் மரம்!
விழுந்த மரம்! நீலத்தினால் நீளமான உயரம்!
அலைந்து திரிந்து எடுக்காதாதாலேயே எதுவும் சிறப்பாக இருக்காது. இதற்காக, அதாவது இந்தப் போட்டிக்காக என்று தனியாக எடுக்காமல் எல்லாமே சேமிப்பிலிருந்து! PiT தளத்தின், ஆல்பத்தில் போட்டிக்கு வந்திருக்கும் படங்களைப் பார்க்காமல் என் படத்தை இணைத்து விடுவேன். அப்புறம்தான் மற்ற படங்களைப் பார்ப்பேன்! முதலிலேயே பார்த்தால் என் படத்தை இணைக்கத் தோன்றாதே!!!