வாழைப்பூ வடகறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழைப்பூ வடகறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.7.16

திங்கக்கிழமை 160704 :: வாழைப்பூ வடகறி!



          இதை வடகறி என்றும் சொல்லலாம், உசிலி என்றும் சொல்லலாம்.
 
 





          எங்கள் வீட்டில் இதை அடிக்கடி செய்வதில்லை.  காரணம் இதை இதழ் இதழாக உரித்து, கள்ளனை நீக்கி,  நறுக்கப் படும் பாடு.  அது நச்சு வேலையாம்!  என்ன செய்ய, நமக்கு இதுதானே பிடிக்கிறது!  உசிலின்னா அது வாழைப்பூ உசிலிதான்.  எனக்கு பீன்ஸ், கொத்தவரை, குடைமிளகாய் உசிலியெல்லாம் பிடிப்பதில்லை.
 
 



          வாழைப்பூவில் தேங்காய் சேர்த்தும் இன்னும் பலவிதங்களிலும் கறி செய்யலாம்.  உடம்புக்கு வாழைப்பூ எவ்வளவு நல்லது என்று சொல்லவே வேண்டாம்.  உங்கள் எல்லோருக்கும் என்னை விட அதிகமாகவே தெரியும்.
 
 







          உரித்துக்கொண்டே செல்லச்செல்ல, உள்ளே இருக்கும் இதழ்களை எடுப்பதுவும், பிரிப்பதுவும், நறுக்குவதும் ...
 
 


          ... நெம்பக் கஷ்டமுங்க...  அதனால் ஒரு ஸ்டேஜில் பாக்கி இருக்கும் வாழைப்பூவை...
 
 


          ..... அப்படியே சாப்பிட்டு விடுவேன்!

          வாழைப்பூவை இதழ் உரித்து, உள்ளே மறைந்திருக்கும் பூக்களை கொத்தாக தலையைப் பிடித்து வெளியில் இழுத்து, அதன் தலையில் உள்ளங்கையால் பரபரவென தேய்த்தால் இதழ் விரியும்.  
 
                                        
 
 
 
          நடுவில் வயிற்று வலியை உண்டாக்கும் கள்ளன் விழிப்பான்.  அதை அடியோடு கிள்ளி எடுத்து ஓரமாகத் தூக்கிப் போட்டு விட்டு, மற்றவற்றை சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.  வாணலியிலிட்டு புரட்டிக் கொள்ளவும்.
 
 
                                        


          சம அளவு துவரம்பருப்பு,  கடலைப்பருப்பை (நிறைய பேர்கள் து. ப மட்டும்தான் போடுவார்கள்) ஊறவைத்து எடுத்து கொண்டு, காரம் தேவைப்படும் அளவு காய்ந்தமிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்து வாணலியிலில் எண்ணெய் விட்டு இதை போட்டுப் புரட்டி வறுத்துக் கொண்டு, 
 
 


          தனித்தனியாக உள்ள வாழைப்பூ, வடகறி இரண்டையும் ஒன்று  சேர்த்து எடுத்துக் புரட்டவும்.   இறக்கி வைக்கவும்.  தட்டில் போடவும்....
 
 
          சாப்பிடவும்.


பின்குறிப்பு  :   முடிந்தவரை படங்களை 


ரி
சை
யா

க் 

கொடுத்திருக்கிறேன்.