திங்கள், 4 ஜூலை, 2016

திங்கக்கிழமை 160704 :: வாழைப்பூ வடகறி!          இதை வடகறி என்றும் சொல்லலாம், உசிலி என்றும் சொல்லலாம்.
 
 

          எங்கள் வீட்டில் இதை அடிக்கடி செய்வதில்லை.  காரணம் இதை இதழ் இதழாக உரித்து, கள்ளனை நீக்கி,  நறுக்கப் படும் பாடு.  அது நச்சு வேலையாம்!  என்ன செய்ய, நமக்கு இதுதானே பிடிக்கிறது!  உசிலின்னா அது வாழைப்பூ உசிலிதான்.  எனக்கு பீன்ஸ், கொத்தவரை, குடைமிளகாய் உசிலியெல்லாம் பிடிப்பதில்லை.
 
           வாழைப்பூவில் தேங்காய் சேர்த்தும் இன்னும் பலவிதங்களிலும் கறி செய்யலாம்.  உடம்புக்கு வாழைப்பூ எவ்வளவு நல்லது என்று சொல்லவே வேண்டாம்.  உங்கள் எல்லோருக்கும் என்னை விட அதிகமாகவே தெரியும்.
 
           உரித்துக்கொண்டே செல்லச்செல்ல, உள்ளே இருக்கும் இதழ்களை எடுப்பதுவும், பிரிப்பதுவும், நறுக்குவதும் ...
 
 


          ... நெம்பக் கஷ்டமுங்க...  அதனால் ஒரு ஸ்டேஜில் பாக்கி இருக்கும் வாழைப்பூவை...
 
 


          ..... அப்படியே சாப்பிட்டு விடுவேன்!

          வாழைப்பூவை இதழ் உரித்து, உள்ளே மறைந்திருக்கும் பூக்களை கொத்தாக தலையைப் பிடித்து வெளியில் இழுத்து, அதன் தலையில் உள்ளங்கையால் பரபரவென தேய்த்தால் இதழ் விரியும்.  
 
                                        
 
 
 
          நடுவில் வயிற்று வலியை உண்டாக்கும் கள்ளன் விழிப்பான்.  அதை அடியோடு கிள்ளி எடுத்து ஓரமாகத் தூக்கிப் போட்டு விட்டு, மற்றவற்றை சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.  வாணலியிலிட்டு புரட்டிக் கொள்ளவும்.
 
 
                                        


          சம அளவு துவரம்பருப்பு,  கடலைப்பருப்பை (நிறைய பேர்கள் து. ப மட்டும்தான் போடுவார்கள்) ஊறவைத்து எடுத்து கொண்டு, காரம் தேவைப்படும் அளவு காய்ந்தமிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்து வாணலியிலில் எண்ணெய் விட்டு இதை போட்டுப் புரட்டி வறுத்துக் கொண்டு, 
 
 


          தனித்தனியாக உள்ள வாழைப்பூ, வடகறி இரண்டையும் ஒன்று  சேர்த்து எடுத்துக் புரட்டவும்.   இறக்கி வைக்கவும்.  தட்டில் போடவும்....
 
 
          சாப்பிடவும்.


பின்குறிப்பு  :   முடிந்தவரை படங்களை 


ரி
சை
யா

க் 

கொடுத்திருக்கிறேன்.

21 கருத்துகள்:

 1. நல்ல குறிப்பு. எனக்கும் இந்த உசிலி பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 2. எங்க வீட்டில் அடிக்கடி இருக்கும். குழந்தைகள் பள்ளிக்குப் போகையிலேயே வாழைப்பூப் பருப்பு உசிலி என்றால் சாப்பாடு டப்பாவில் நிறைய வைச்சுடச் சொல்வாங்க. அப்போல்லாம் முதல்நாளே மாலையில் வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி மோரில் போட்டு வைத்துவிடுவேன். இப்போல்லாம் ஒரு வாழைப்பூ வாங்கினால் 3 நாட்கள் வைச்சுக்க வேண்டி இருக்கு! அதனால் அதிகம் வாங்குவதில்லை. பூவன் வாழைப்பூ நன்றாக இருக்கும். சின்னதாகக் கிடைத்தால் வாங்கி வருவோம். வாழைப்பூவை நறுக்கி அடையிலும் போட்டுச் சாப்பிடுவோம். எங்க பையருக்கு ரொம்பப் பிடிச்சது வாழைப்பூ அடை தான்!

  பதிலளிநீக்கு
 3. ஹிஹிஹி, பி.தொ. க்ளிக் செய்ய மறந்துட்டுக் கருத்தைப் போட்டுட்டேன்! :)

  பதிலளிநீக்கு
 4. http://cookingforyoungsters.blogspot.in/2013/08/vazhaippoo-plantain-flower-paruppu-usili.html இங்கே படங்களுடன் பார்க்கலாம். :)

  பதிலளிநீக்கு
 5. வடகறி என்பது உண்மையில் வேறு! முன்னெல்லாம் மிச்சம் இருந்த போண்டாக்கள், வடைகள் இவற்றை வைத்துச் செய்து கொண்டிருந்தனர். இப்போது கொஞ்சம் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்து வடகறிக்கெனத் தனியாக வடை செய்து சேர்க்கின்றனர். பூண்டு நிறையப் போடுவதால் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கிறதில்லை! :)

  பதிலளிநீக்கு
 6. வாழைப்பூ மடலில் பழைய சாதம் வத்தக்குழம்பு அல்லது மாங்காய் அல்லது மாவடுவுடன் சாப்பிட்டிருக்கிறீர்களா? நல்ல ருசியாக இருக்கும். மருதாணியும் கையில் இட்டுக் கொண்டால் கேட்கவே வேண்டாம். அந்த மணத்துக்காகவே ஒரு சட்டிச் சாதம் சாப்பிடச் சொல்லும்.

  பதிலளிநீக்கு
 7. எனக்கு மிகவும் பிடிக்கும் நண்பரே

  பதிலளிநீக்கு
 8. சாப்பிட ருசி + சத்து நிச்சயமாக
  ஆனால் என்ன நம்ம சோம்பேறித்தனம் >ருசி + சத்து

  பதிலளிநீக்கு
 9. பருப்பு அரைத்த கலவையை ஆவியில் வைத்து, ஆறியவுடன் மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் பொலபொலவென வந்துவிடும்.அதன் பின்பு வதக்கினால் சூப்பராக இருக்கும்...

  பதிலளிநீக்கு
 10. இது வடைகறி அல்ல....வாழைப்பூ பருப்புசிலி...

  பதிலளிநீக்கு
 11. இது வடைகறி அல்ல....வாழைப்பூ பருப்புசிலி...

  பதிலளிநீக்கு
 12. பருப்பு அரைத்த கலவையை ஆவியில் வைத்து, ஆறியவுடன் மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் பொலபொலவென வந்துவிடும்.அதன் பின்பு வதக்கினால் சூப்பராக இருக்கும்...

  பதிலளிநீக்கு
 13. நான் சாப்பிட்ட வடகறி இது இல்லை :)

  பதிலளிநீக்கு
 14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 15. வெரி சேம்!! நம்ம வீட்டிலும். மிகவும் பிடித்த ஒன்று. இது வடகறி???!!! நீங்களாகவே சும்மா அது வடை பேஸ் என்பதால் அப்படிச் சொல்லியிருக்கீங்களோ...

  கீதா

  பதிலளிநீக்கு
 16. ஆதி வெங்கட் சொல்லியிருக்கும் அந்த மெத்தெடில் தான் பெரும்பாலும் செய்வதுண்டு. உதிர் உதிராக வரும் எண்ணையும் அதிகம் சேர்க்க வேண்டாம் என்பதால்.

  கீதா

  பதிலளிநீக்கு
 17. என் பின்னூட்டம் காணாமல் போச்சே. இன்னுமொரு முறை எழுதவில்லை. வாழைப்பூ வடை செய்வதுண்டு

  பதிலளிநீக்கு
 18. நானும் உங்கள் கட்சிதான் ஸ்ரீ ராம். பருப்பு உசிலி என்றால் வாழைப் பூ உசிலிதான். ஆனால் சில சமயம் வாழைப்பூ கசந்து விடும். அப்போது நம்முடைய அத்தனை உழைப்பும் வீணாகி விடும். இப்போதெல்லாம் கறிகாய் விற்பவர்கள் கள்ளனை ஆய்ந்து தருகிறார்கள். கொஞ்சம் அதிகம் காசு கொடுக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 19. போன வருஷம் வரைக்கும் பருப்பு போட்டு செய்தென் ..இப்போ பருப்புக்கு தடா வெறும் தேங்காய் போட்டு செய்றேன் ..எங்க ஊரிலும் வாழைப்பூ கிடைக்குதே கிடைக்குதே :))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!