படைப்பாற்றல் நிரம்ப உபயோகமாவது, விளம்பர உலகத்தில்தான். எங்கள் வாசகர்கள் நிறைய பேர் படைப்பாற்றல் மிக்கவர்கள் என்பது, பதிவுலகம் அறிந்த விஷயம்.
இதோ ஒரு பொருள்.
இதை உற்பத்தி செய்பவர் ஒருவர், உங்களை அணுகி, எல்லோரும் இந்த பிராண்டு குன்டூசிகளையே வாங்கும்படி செய்யவேண்டும், அந்த வகையில் உங்களை விளம்பரம் ஒன்றை வடிவமைக்கச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
பிராண்டு பெயர் தொடங்கி, விளம்பர வாசகங்கள், விளம்பரப் படம் (யார் நடித்தது, என்ன தீம -- etc etc ... ) எல்லாவற்றிற்கும் உங்களுக்கு முழு சுதந்திரம்.
இந்த விளம்பரத் திடலில் இறங்கி, பாட் செய்ய, பந்து போட, ஃபீல்ட் செய்ய உங்கள் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு. Free wheeling இருக்கவேண்டும் என்பதற்காக, நாங்கள் அதிகம் நிபந்தனைகள் விதிக்கவில்லை.
அப்படி ஏதாவது அவசியம் ஏற்பட்டால், பின்னூட்டத்தில் அவ்வப்போது சொல்கிறோம்.
வழக்கம் போல, ரொம்பப் பெரிய, நூறு வார்த்தைகளுக்கு மேற்பட்ட கருத்தாக இருந்தால், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தனிப்பதிவாகப் போட்டுவிடலாம்.
சும்மா போட்டி மட்டும் வைக்காமல், ஒரு சுவையான கதையும்:
ஓர் ஊரில் ஒரு புதை பொருள் ஆராய்ச்சியாளர். அவர் ஒரு இரும்பு நகரத்தில் ஒரு புதையல் கண்டு பிடித்தார். சுமார் ஒவ்வொரு கிலோ எடை உள்ள இரும்புக் கட்டிகள், பத்துப் பதினைந்து ஓரிடத்தில் அவருக்குக் கிடைத்தது. அவைகளை அவர், அந்த ஊரில் இரும்பு வேலை செய்யும் உழைப்பாளிகளிடம், ஆளுக்கு ஒரு கட்டி கொடுத்தார்.
கட்டிகளைப் பெற்றுக் கொண்ட உழைப்பாளிகள், ஒவ்வொருவரும் அதை வெவ்வேறு உருமாற்றங்கள் செய்தனர்.
முதலாமவர், ஒரு கிலோ இரும்பில் ஓர் இரும்புலக்கை செய்து, அதை இருபது ரூபாய்க்கு விற்றார்.
இரண்டாமவர், அந்த இரும்பில் ஒரு கிலோ எடைக்கல் ஒன்று செய்து, அதை முப்பது ரூபாய்க்கு விற்றார்.
மூன்றாமவர், அந்த இரும்பில் நான்கு சுத்தியல் செய்து, ஒவ்வொன்றும் முப்பது ரூபாய் என்று விற்றார்.
இன்னொருவர் அந்த இரும்பில் ஆணிகள் செய்து, அவற்றை இருநூறு ரூபாய்க்கு விற்றார்.
ஒருவர் மட்டும், அந்த ஒரு கிலோ இரும்பில் குண்டூசிகள் செய்து அவற்றை ஆயிரம் ரூபாய்க்கு விற்றார்.
(இந்தக் கதையின் நீதி என்ன?)
