Ashok Leyland experiences - Introduction. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Ashok Leyland experiences - Introduction. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11.5.12

அலேக் அனுபவங்கள்::முன்னுரை


அசோக் லேலண்ட் என்னும் சமுத்திரத்தில் ஓர் ஓரத்தில் நின்று சுமார் முப்பத்தைந்து வருடங்கள் காக்காய் குளியல் செய்த என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல், இந்த ப்ளாக் ஆரம்பித்த நாள் முதல் எனக்கு இருந்து வந்தது.
     
இதை தொடர் போல எல்லாம் எழுதி, உங்கள் பொறுமையை சோதிக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. இந்தத் தலைப்பில், வாரம் ஒரு பதிவு போடலாம் என்ற எண்ணம மட்டும் இருக்கின்றது. ஒவ்வொரு பதிவும், ஒவ்வொரு தனி அங்கமாக இருக்கும் ( என்று நம்புகின்றேன்!) 

முஸ்கி (அதாவது 'டிஸ்கி' க்கு ஆப்போசிட்!) இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே ....... இல்லை. சில இடங்களில் பெயர் குறிப்பிட்டிருப்பேன்.  சில இடங்களில் பெயர்கள் கற்பனையாக இருக்கக் கூடும். சில இடங்களில் பெயர் குறிப்பிடாமல் நழுவி விடுவேன். சில இடங்களில் பெயர்களை மாற்றிக் கொடுத்திருப்பேன். பெயர்களா முக்கியம்? (என்ன மோ சி பாலன்....? சரிதானா? ) 

முஸ்கி இரண்டு: இதில் காணப்படும் கருத்துகள், என்னுடைய பார்வை, என்னுடைய அனுபவம், என்னுடைய புரிதல். உடன் பணிபுரிந்தவர்கள் யாரையும் குறை காண்பதோ / குற்றம் சுமத்துவதோ என்னுடைய எண்ணமோ அல்லது விழைவோ இல்லை. அப்படி ஏதேனும் த்வனி தெரிந்தால், அவ்வப்போது அங்கங்கே கருத்துரைத்து உங்கள் ஐயங்களை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். 

அன்புடன் (அம்புடன்) 
கௌதமன். 
*****************************  

கி பி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்றாம் ஆண்டு வந்த சனிப் பெயர்ச்சி, மிகவும் முக்கியமானது (எனக்கு!).  புலியூர் பாலுவோ அல்லது காழியூர் நாராயணனோ யாரோ ஒருவர் என்னுடைய தனுசு ராசிக்கு அந்த சனிப் பெயர்ச்சி பெரிய நன்மைகளைக் கொடுக்கும் என்று எழுதியிருந்தார்கள். அதைப் படித்து, என்னுடைய அப்பாவும் நானும் ரொம்ப அகமகிழ்ந்து போனோம். 

அந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள், அசோக் லேலண்டுக்கு அப்ரெண்டிஸ் ஆக சேருவதற்கு (ஹிந்து பேப்பர் விளம்பரம் பார்த்து) மனு செய்திருந்த எனக்கு, எழுத்துத் தேர்வு ஒன்றுக்காக சென்னை வந்து சேரும்படி அழைப்பு அனுப்பி இருந்தார்கள். 

உடனடியாக, சென்னை வருவதற்கு, ஒரு ரயில் டிக்கெட் பதிவு செய்தார், அப்பா. முதன் முறையாக, தனி ஆளாக அதிக தூரம் (நாகப்பட்டினத்திலிருந்து, சென்னை வரை)பயணம் செய்தது அப்பொழுதுதான் என்று நினைக்கின்றேன். 
                    
அந்தப் பயணத்தின் போது ஒரு திடுக்கிடும் அனுபவம் ஏற்பட்டது. 

மீதி அடுத்த பதிவில்...