பலமுறை நாம் வருத்தப்படும் விஷயங்களில் ஒன்று இணையத்தில் கிடைக்கும் பல பக்திப் பாடல்களை எழுதியது யார், இசை அமைத்தது யார் என. இசை அமைத்தவரையாவது சில சமயங்களில் சொல்கிறார்கள். ஆனால் அவ்வளவு பாடுபட்டு யோசித்து எழுதியவர் பெயர் இருட்டடிக்கப் படுகிறது.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
KBS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KBS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
22.9.23
14.7.23
வெள்ளி வீடியோ : தெரியாமல் அடிப்பார்கள் தெரிந்தவர்கள் உண்மை புரியாமல் வெறுப்பார்கள் நல்லவர்கள்
சென்ற வாரம் பழனி மலை முருகா பாடல் பகிர்ந்தபொழுது கீதா ரெங்கன்
1.4.21
22.4.14
காங்கிரஸ் கோஷ்டி ஆரசியலும் சினிமா விமர்சனமும் -1930 ஸ்டைல்!
காங்கிரசில் கோஷ்டி இருப்பது இப்போதல்ல, 1930 களிலேயே இருந்திருக்கிறது. தீரர் சத்தியமூர்த்தி ஒரு கோஷ்டி. ராஜாஜி ஒரு கோஷ்டி.
இது சம்பந்தமான சுவையான ஒரு சம்பவம்.
எஸ் ஜி கிட்டப்பா
மறைவுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கை வைத்திருந்த
கே பி சுந்தராம்பாளை நந்தனார் படத்தில் ஆண் (நந்தனாராக) வேடத்தில் நடிக்க
வைக்க ரூபாய் ஒரு லட்சம் அந்தக் காலத்திலேயே கொடுத்து ஒப்பந்தம் செய்து
படமெடுத்தது எல்லோருக்கும் தெரியும். இதற்கு கே பி எஸ் முதலில் ஒத்துக்
கொள்ளவில்லை. நந்தனாராக (ஆணாக) நடிப்பதால் வேறொரு ஆண்மகனோடு ஜோடி
சேரவேண்டிய அவசியம் இல்லை என்பதும், சத்யமூர்த்தி அவர்களும் சிபாரிசு
செய்தார் என்பதாலும் ஒத்துக் கொண்டார்.

இந்த முயற்சி கூட ஒரு போட்டியின் விளைவாகத்தான் அவசரம் அவசரமாக எடுக்கப் பட்டதாம். எஸ்.டி சுப்புலட்சுமியை வைத்து டைரக்டர் கே. சுப்பிரமணியம் 'பக்த குசேலா' என்று படம் எடுத்துக் கொண்டிருந்தாராம். அதில் எஸ் டி எஸ் (சோமசுந்தரம் அல்ல!) தான் கிருஷ்ணராம். அந்தப் படம் வெளிவருமுன் நந்தனாரை வெளியிட்டுவிட முடிவு செய்து, அதேபோல வெளியிட்டும் விட்டார்களாம்.
சத்தியமூர்த்தி ஆதரவு பெற்ற நந்தனார் படத்துக்கு 'அப்படி' விமர்சனம் எழுதிய கல்கியின் பேனா, இந்தப் படத்துக்கு 'முல்லைச் சிரிப்பு எஸ் டி சுப்புலட்சுமி' என்று பாராட்டியிருந்தாராம். கூடுதல் தகவல் இந்தப் படத்தில் எஸ் டி சுப்புலட்சுமி அவர்கள் கிருஷ்ணனாக மட்டுமல்லாமல் மிசஸ் குசேலனாகவும் நடித்திருந்தாராம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)