14.7.23

வெள்ளி வீடியோ : தெரியாமல் அடிப்பார்கள் தெரிந்தவர்கள் உண்மை புரியாமல் வெறுப்பார்கள் நல்லவர்கள்

 சென்ற வாரம் பழனி மலை முருகா பாடல் பகிர்ந்தபொழுது கீதா ரெங்கன்

'காவடி ஆடி வந்தால் பாடலை நினைவு படுத்தினார்.  அதுவும் கரகரப்ரியாதான் என்றும் சொல்லி இருந்தார்.  நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்.  இன்று பகிர எடுக்கும்போது இந்தப் பாடலின் ராகம் பாகேஸ்வரி ராகம் என்று சொல்கிறார்கள்  ("பாகேஸ்ரீ தாயே பார்வதியே...  பாகேஸ்ரீ தாயே பார்வதியே..  இந்த லோகேஸ்வரி நீயே உலகின் துணை அம்மா "வரிகள் நினைவுக்கு வருகிறதா?)

பாடலை இயற்றியவர் ஆனையம்ப ஆதிசேஷையர் என்று போட்டிருக்கிறார்கள்.  இசை கே பி சுந்தராம்பாள்.  பாடி இருப்பதும் அவரே...

பல்லவி
காவடி ஆடி வந்தால் கந்தா என் 
மனமுருகி கண்ணீர் வழிந்தோடுதே முருகா - உன் காவடி ஆடிவந்தால் 

அனுபல்லவி
சேவடி தந்தாளும் செல்வம் அருள் குமரா 
 பாவடி தந்தாளும் பாடியாடி களிக்க  - உன் காவடி ஆடிவந்தால் 

சரணம் 1
பால் பொங்குதே தென் பழனி மலையில் அன்பர்
கால் மாறி விளையாடும் காக்ஷி எல்லாம் காண
வேல் ஏந்தி விளையாடும் வேலா வடிவேலா
வேதாந்த நிலை காட்டி ஆண்டருள்வாய் அப்பா உன் காவடி ஆடிவந்தால் 

சரணம் 2
அன்பரெல்லாம் பணிந்து “அரோஹரா” என்றால் 
அங்கமெல்லாம் நெகிழ்ந்து அசைந்தாடுதே முருகா
ஆவேசக் கலை காட்டி ஆட்டி வைத்தாய் அப்பா நின்
ஆனந்த நிலை காட்டி கூட்டி வைத்தாய் அப்பா  - உன் காவடி ஆடிவந்தால் 

======================================================================================================

1980 ல் வெளிவந்த படம் பொன்னகரம்.  சரத்பாபு- ஷோபா நடித்துள்ள இத்திரைபபடத்தை இயக்கி இருப்பவர் மாதங்கன்.  ஷோபா மரணம் அடைந்து இரண்டு மாதங்கள் கழித்து வெளிவந்த படம்.  கல்கியில் ஷோபாவின் மரணத்தால் படம் ஹிட் ஆகிவிடும் என்று இயக்குனர் எண்ணி இருப்பார் என்று விமர்சனம் செய்திருந்தார்களாம்.

ஷங்கர் கணேஷ் இசை.  படத்தின் தலைப்பு கவிஞர் புலமைப்பித்தன் எழுதிய சிறுகதை ஒன்றின் தலைப்பு.  படத்துக்கும் அந்தக் கதைக்கும் ஏதும் சம்பந்தமுண்டா என்று தெரியாது.  அந்தப் படம் பார்க்கும் பொறுமை எல்லாம் இல்லை!!  ஆனால் இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் பிடிக்கும்.  அதில் ஒன்று ஒன்று!

கே ஜெ யேசுதாஸ் பாடிய பாடல்.  தத்துவம் போல அமைந்துள்ள இந்தப் பாடல்தான் கவிஞர் காமகோடியனின் முதல் திரைப்பாடலாம்.

இருப்பவர்க்கு ஒரு வீடு
இல்லாதவர்க்கு பல வீடு
யாரை நம்பி யாரும் இல்ல
ஆண்டவன் துணையை நீ தேடு….

வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன்
பிள்ளைகளைச் சேருமடி (2)

சேர்த்து வச்ச புண்ணியம்தான்
சந்ததியைக் காக்குமடி
சேர்த்து வச்ச புண்ணியம்தான்
சந்ததியைக் காக்குமடி
அந்த வகையில் இந்த நிலையில்
எனக்கோர் காவல் ஏதடி..

வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன்
பிள்ளைகளைச் சேருமடி

ஆடொன்று வளர்ப்பார்கள் தன் வீட்டில்
மிக அன்பாக மேய்ப்பார்கள் வயக்காட்டில்
ஆடொன்று வளர்ப்பார்கள் தன் வீட்டில்
மிக அன்பாக மேய்ப்பார்கள் வயக்காட்டில்
உறவொன்று விருந்தென்று வரும் போது
இந்த வெள்ளாடு உணவாகும் அப்போது
உறவொன்று விருந்தென்று வரும் போது
இந்த வெள்ளாடு உணவாகும் அப்போது

வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன்
பிள்ளைகளைச் சேருமடி

தெரியாமல் அடிப்பார்கள் தெரிந்தவர்கள்
உண்மை புரியாமல் வெறுப்பார்கள் நல்லவர்கள்
தெரியாமல் அடிப்பார்கள் தெரிந்தவர்கள்
உண்மை புரியாமல் வெறுப்பார்கள் நல்லவர்கள்
சரியான நேரத்திலே தெய்வம் வரும்
எது சரியென்று உள்ளங்கள் தெளிந்து விடும்
சரியான நேரத்திலே தெய்வம் வரும்
எது சரியென்று உள்ளங்கள் தெளிந்து விடும்

வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன்
பிள்ளைகளைச் சேருமடி

சேர்த்து வச்ச புண்ணியம்தான்
சந்ததியைக் காக்குமடி
சேர்த்து வச்ச புண்ணியம்தான்
சந்ததியைக் காக்குமடி
அந்த வகையில் இந்த நிலையில்
எனக்கோர் காவல் ஏதடி..

வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன்
பிள்ளைகளைச் சேருமடி

70 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

பக்தி பாடல் கேட்டு இருக்கிறேன்.

பொன்னகரம் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

அடிக்கடி கேட்பேன்,
படமும் பார்த்து இருக்கிறேன் தேவகோட்டை லட்சுமி தியேட்டரில்...

துரை செல்வராஜூ சொன்னது…

காக்க காக்க
கனக வேல் காக்க..
பார்க்க பார்க்க
பாவம் பொடிபட..

இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..

எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

நலம் வாழ்க..

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி ஜி. படம் பொறுமையாக பார்த்திருக்கிறீர்கள்!

துரை செல்வராஜூ சொன்னது…

இன்றைய பதிவின் இரண்டு பாடல்களுமே சிறப்பானவை..

முதல் பாடல் பலமுறை கேட்டிருக்கின்றேன்..

ராக ஆராய்ச்சிகள் எதுவும் தெரியாது.

ஸ்ரீராம். சொன்னது…

நலமே விளைக.. வாங்க துரை செல்வராஜு அண்ணா.. வணக்கம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

///வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன்
பிள்ளைகளைச் சேருமடி... ///

இதுதான் விஷயம்..
ஆனால் ஊரில் பலரும் இதை சிந்திப்பதே இல்லை..

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் நன்றியை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி..

நலம் வாழ்க...

துரை செல்வராஜூ சொன்னது…

/// இந்தப் பாடல்தான் கவிஞர் காமகோடியனின் 
முதல் திரைப் பாடலாம்..///

சிறப்பு...

துரை செல்வராஜூ சொன்னது…

/// இந்தப் பாடல்தான் கவிஞர் காமகோடியனின் 
முதல் திரைப் பாடலாம்..///

சிறப்பு...

துரை செல்வராஜூ சொன்னது…

இந்தப் பாடலில் வரும் ஆட்டுக் கிடா விவகாரம் வேறு சில பாடல்களில் வந்துள்ளது..

எவை என்று சொல்லமுடியுமா பாருங்கள்!..

கோமதி அரசு சொன்னது…

அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

கோமதி அரசு சொன்னது…

இரண்டு பாடல்களும் அருமையான பாடல் . முன்பு அடிக்கடி கேட்ட பாடல்.
நீங்கள் முன்பும் பொன்னகரம் பகிர்வு செய்து இருந்தீர்கள் அப்போதும் கேட்டேன், இப்போதும் கேட்டேன். அருமையான பாடல் பகிர்வு நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

// உறவொன்று விருந்தென்று வரும் போது
இந்த வெள்ளாடு உணவாகும் அப்போது.. //


இது அந்தக் காலத்து விவகாரம்..

இப்போதெல்லாம் காக்கா முதற்கொண்டு எல்லா பிரியாணி வகையும் இருபத்து நாலு மணி நேர சர்வீஸில் கிடைக்கின்றதே..

தக்காளி கிடைக்கா விட்டாலும் பிரியாணி தங்குதடையின்றி கிடைப்பதில் ஆனா பீனாக்களுக்கு எல்லையற்ற ஜந்தோசமாம்!.. (சந்தோஷமாம்)

ஏகாந்தன் ! சொன்னது…

மிக அன்பாக மேய்ப்பார்கள் வயக்காட்டில்
உறவொன்று விருந்தென்று வரும் போது
இந்த வெள்ளாடு உணவாகும் அப்போது//

இந்தமாதிரி விஷயங்களை வாசிப்பதே, நினைத்துப்பார்ப்பதே என்னை வாட்டிவிடுகிறது உடனே. பலருக்கு இதெல்லாம் வாழ்வுமுறையாகப் போனபிறகு, நாம் என்ன சொல்வது? விலகி, தூரப்போய்விடுவதே உசிதமானது.

ஏகாந்தன் ! சொன்னது…

.. கல்கியில், ஷோபாவின் மரணத்தால் படம் ஹிட் ஆகிவிடும் என்று இயக்குனர் எண்ணி இருப்பார் என்று விமர்சனம் செய்திருந்தார்களாம்.//

என்னமாதிரி ஒரு சாடிஸ்டிக் கேரக்டர், இந்தமாதிரி ஒரு விமர்சனத்தை எழுதியிருப்பார்? அதுவும் (அந்தக்கால) கல்கிபோன்ற ஒரு பத்திரிக்கையில்!

ஷோபா நடித்த படமா! பார்த்திருக்கவேண்டும். பார்க்க நேரவில்லை. இயக்குனர் மாதங்கன் அதற்கு மேலும் இயக்கினாரா என்றும் தெரியவில்லை.

‘பொன்னகரம்’ புதுமைப்பித்தனின் சிறுகதை. அந்தக்காலத்திய ‘மரபு’வழி மஹானுபவர்களான தமிழ் எழுத்தாளப் பெருங்குடிகளுக்குப் பெரிதும் எரிச்சலூட்டிய கதை!


துரை செல்வராஜூ சொன்னது…

சிறப்பு.. சிறப்பு..

அசைவ உணவின்
மீதான மோகம் எல்லை மீறிக் கொண்டு இருக்கின்றது..

நெல்லைத்தமிழன் சொன்னது…

இரண்டாவது பாடல் மிகவும் பிடித்த பாடல். யேசுதாஸ் குரல் அப்போ ரொம்ப மெச்சூராகவில்லையோ என இப்போ கேட்கும்போது தோன்றுகிறது. கவிஞரின் வரிகள் அருமை

நெல்லைத்தமிழன் சொன்னது…

முதல் பாடலை நான் விரும்பிக்கேட்பேன். குளிக்கும்போதோ இல்லை தனிமையில் இருக்கும்போதோ நான் விரும்பிப் பாடும் பாடல் இது. மிக அருமையான பாடல்.

நெல்லைத்தமிழன் சொன்னது…

அது எப்படிச் சேரும்? பிள்ளைகளைக் கேட்டுக்கொண்டா கடன் வாங்கினார்கள்? அல்லது கரும்ம் செய்தனர்? (கரும்ம்- activities and decisions)

நெல்லைத்தமிழன் சொன்னது…

துரை செல்வராஜு சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Thulasidharan thilaiakathu சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Thulasidharan thilaiakathu சொன்னது…

ஆமாம் ஸ்ரீராம் இது பாகேஸ்ஸ்வரி!!!யேதான்.....

ஆனால் நான் இதுவரை பாடிப் பார்த்தது கரஹரப்பிரியாவில்....எப்படி என்று தெரியவில்லை.!!!!!! நான் பாடியதும் கரஹரப்பிரியாவில்தான்... எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

முந்தைய கமென்ட் அழித்ததுக்குக் காரணம் எப்பவும் நான் இந்த கரஹரப்பிரியாவை மாத்தி ஷண்முகப்பிரியான்னு சொல்லிவிடுகிறேன்.

இப்பாடல் மிகவும் பிடித்த பாடல்....

கீதா

Thulasidharan thilaiakathu சொன்னது…

மாமியை அழைத்துக் கேட்டேன் அவங்கதான் எனக்கு இந்தப் பாடலைக்கத்துக் கொடுத்தாங்க...ஒரு விழாவுக்கு. ஒரிஜினல் பாகேஸ்ஸ்வரி....மாமி கற்றுக் கொடுத்தது கரஹரப்பிரியாவில்.

மாமி ஏன் இப்படி என்று கேட்டதுக்கு பாகேஸ்ரி கரஹரப்பிரியாவோட குழந்தைதானே உனக்கு பாகேஸ்வரியை கரஹரப்பிரியாவுக்கு எப்படிக் கொண்டுவரலாம்னு கத்துக் கொடுத்தேன் பாடாந்திரம் மறந்து போச்சான்னு!!!!!!!!!!!!!!!!!!கேள்வி வேறு கேட்டு....நான் ஃபோனிலேயே அசடு வழிஞ்சேன் இதோ இப்பத்தான்....

பாட்டு ராகம் எல்லாம் மறந்து போய்ட்டியேடி கீதா என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

ராகங்கள் மறக்கலை....ஆனா நீங்க சொல்லிக் கொடுத்ததே மனசுல நின்னுருச்சா ஒரிஜினல் கேட்டாலும் கரகரஹரப்பிரியாதான் நினைவுக்கு வருகிறது உண்மையாகவே....ஸ்ரீராம் இந்தப் பாடலைக் கேட்டாலும் எனக்கு இப்பவும் கரஹரப்பிரியாலதான் பாட வருது....பாகேஸ்வரியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அலர்ட்டா இருக்கணும் நான் ஹாஹாஹாஹா

கீதா

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி.. மகிழ்ச்சி..

Thulasidharan thilaiakathu சொன்னது…

ஆனால் உண்மையிலேயே இப்போதெல்லாம் பாடல்கள் கேட்பது மிகவும் குறைந்துவிட்டது....டக்கென்று ராகங்கள் கண்டுபிடிக்க முடிவதில்லை.

இப்ப பாட்லை மீண்டும் மீண்டும் கேட்கிறேன் இந்த ராகத்தில் பாடலை மனதில் பதிய வைத்துக் கொள்ள.

கீதா

Thulasidharan thilaiakathu சொன்னது…

துரை அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் நீடூழி வாழ்ந்திட இறைவன் துணையிருக்க வாழ்த்துகள்!

கீதா

Thulasidharan thilaiakathu சொன்னது…

இரண்டாவது பாடலும் கேட்ட பாடல் பிடித்த பாடல். வரிகளும். தாசேட்டனின் குரலில் அருமையான பாடல்.

கீதா

துரை செல்வராஜூ சொன்னது…

@ நெல்லை..

// பிள்ளைகளைக் கேட்டுக் கொண்டா கடன் வாங்கினார்கள்? அல்லது கருமம் செய்தனர்?.. //

ஊரைக் கொள்ளையடித்து ஊட்டுக்கு வெள்ளையடிப்பது தான் தெரியுமே..

ஊரைக் கொள்ளையடித்து பொண்டாட்டி புள்ள பேர்ல சொத்து வாங்கினா அல்லாருக்கும் பங்கு போவுதுந்னு சொல்றாங்க..

கொள்ளையடிக்கறதே பொழப்பு..ந்னு தலைல எழுத்து இருந்தா இன்னா பண்றதாம்?..

ஒர்ரே கொயப்பமா கீதே!..

( அங்கே
ஒரு டகர டப்பு சொல்கின்றது - இது ஆரியர்களின் சதி!..)

நெல்லைத் தமிழன் சொன்னது…

அவரவர் செயல் அவரவர் கருமத்திற்குக் காரணமாகிறது. முன்னோர்கள் உரைத்தபடி, கணவன் செய்யும் நல்ல செயல்களில் மனைவிக்கு 50 சதம் பங்கு போய்விடுமாம் (புண்ணியம்). கெட்ட செயல்கள் எதுவும் மனைவியைப் பாதிக்காதாம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இரண்டாவது பாடல், "தெய்வம் தந்த வீடு வீதி இருக்க" பாடலை ஞாபகப்படுத்தியது...

நெல்லைத் தமிழன் சொன்னது…

/தேவகோட்டை லட்சுமி தியேட்டரில்...// - பரமக்குடி ரவி தியேட்டரில் வெளியாகவில்லையா கில்லர்ஜி?

ஏகாந்தன் ! சொன்னது…

இப்படிக் கேட்டுவிட்டதனால் தப்பிக்க முடியாது! சேரும். அவ்வளவுதான்.

Geetha Sambasivam சொன்னது…

முதல் பாடல் நிறையக் கேட்டாச்சு. இரண்டாவது படம் வந்ததே தெரியாது. புதுமைப்பித்தனின் கதை பொன்னகரம் என்பது மட்டும் தெரியும்.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார்.

இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில், முதல் பாடல் இது வரை கேட்டதில்லை. பாடல் விபரமும், பாடியவரின் விபரமும், அது எந்த ராகத்தில் அமைந்தென்ற விபரங்களும் தெரிந்து கொண்டேன்.இவர் பாட்டுக்களில் திரைப்பட பாடல்களை விரும்பி கேட்பேன். நல்ல கணீரென்ற குரலில், உச்சரிப்பு சுத்தமாக அமைய அவர் பாடுவதை மிகவும் ரசிப்பேன். அவரது தனிப்பாடல்கள் இதுவரை கேட்டதாக நினைவில்லை.

அது போல் இரண்டாவது திரைப்பட பாடலும் இதுவரை கேட்டதில்லை. இரண்டு பாடல்களையும் இப்போது ரசித்து கேட்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். சொன்னது…

பரமக்குடி ரவி தியேட்டரில் என்ன விசேஷம்?

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம்.  நம் செயல்கள் நம் வாரிசுகளை பாதிக்கும் என்றால் சூதானமாக இருக்க வேண்டும்!

ஸ்ரீராம். சொன்னது…

YES.

ஸ்ரீராம். சொன்னது…

நினைவுக்கு வரவில்லையே...

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கோமதி அக்கா.. வணக்கம்.

ஸ்ரீராம். சொன்னது…

முன்பும் பகிர்ந்திருக்கிறேனா?  என்ன சோதித்தாலும் சில சமயம் தப்பி விடுகிறது!

ஸ்ரீராம். சொன்னது…

எல்லாமே கன்னாபின்னா என்று விலை ஏறப்போகிறதாம்...  இன்றைய செய்தித்தாள் செய்தி!

ஸ்ரீராம். சொன்னது…

மசாலா மக்களை அடிமை கொள்கிறது;கொல்கிறது.

ஸ்ரீராம். சொன்னது…

கல்கியின் அப்போதைய விமர்சகர் (சட்டென பெயர் வரமாட்டேன் என்கிறது) கொஞ்சம் அப்படி இப்படிதான் எழுதுவார்.

ஸ்ரீராம். சொன்னது…

ஆம்.  எனக்கும் அப்படி தோன்றும்.  சில யேசுதாஸ் பாடல்கள் இளமையான குரலில் ஒலிக்கும்.

ஸ்ரீராம். சொன்னது…

அப்படியா...  ஆச்சர்யம்.

ஸ்ரீராம். சொன்னது…

சில சமயங்களில் இப்படி ஆகிவிடும் கீதா.

ஸ்ரீராம். சொன்னது…

ஆம்.  நம் மனதில் பதிந்ததுதான் மறுபடி மறுபடி நினைவுக்கு வரும்.

ஸ்ரீராம். சொன்னது…

எனக்கு படிப்பதுதான் குறைந்து விட்டது. பாடல்கள் கேட்பது குறையவில்லை!

ஸ்ரீராம். சொன்னது…

ஆம். மனதில் நிற்கும் பாடல்.

ஸ்ரீராம். சொன்னது…

// நல்ல செயல்களில் மனைவிக்கு 50 சதம் பங்கு போய்விடுமாம் (புண்ணியம்). கெட்ட செயல்கள் எதுவும் மனைவியைப் பாதிக்காதாம். //

அட அநியாயமே... என்ன கொடுமை!

ஸ்ரீராம். சொன்னது…

அப்படியா சொல்கிறீர்கள்?  டியூனிலா?  தத்துவத்திலா?

ஸ்ரீராம். சொன்னது…

இரண்டாவது பாடல் இப்போது கேட்டீர்களா அக்கா?

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கமலா அக்கா..  உடல்நிலை தேவலாமா?  இல்லை விருந்தினர் விஜயமா?

இரண்டு பாடல்களுமே இப்போதுதான் கேட்கிறீர்கள் என்பது ஆச்சர்யம்.  ரசித்ததற்கு நன்றி அக்கா.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

ஆம்.. இரண்டு மூன்று நாட்களாக நான் வலைப்பக்கம் வர இயலவில்லை. என் மகளுக்கு தீடீரென உடல்நல குறைவு. அதனால், மருத்துவரிடம் செல்வது, அவளைப்பற்றிய ஒரே மனக்கவலையென நாட்கள் ஓடி விட்டன. இன்று நலமாக உள்ளாள். அதனால்தான் இன்று வலைப்பக்கம் வந்தேன். ஏதோ உங்களிடமெல்லாம் சொன்னால் ஒரு ஆறுதல் கிடைக்கிறது. அதனால் காரணத்தை சொன்னேன். நன்றி சகோதரரே.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

நெல்லைத் தமிழன் சொன்னது…

கவலை வேண்டாம் கமலா ஹரிஹரன் மேடம்... எல்லாம் சரியாகிவிடும். இந்த மாதிரி சில விஷயங்கள் நம் மனக் கிலேசங்களுக்குக் காரணமாகிவிடுகிறது. (எனக்கும் தோன்றும்.. இந்தக் கடவுளுக்கு நாம கொஞ்சம் நிம்மதியா இருந்தால் பிடிக்காதோ என்று ஹா ஹா ஹா)

கோமதி அரசு சொன்னது…

கமலா, உங்கள் மகள் நலம்பெற்று வருவது அறிந்து மகிழ்ச்சி.
இறைவன் அருளால் பூரண நலம் பெற பிரார்த்தனைகள்.
குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நமக்கு மனக்கவலை வந்து விடும். நலமாகி விட்டால் நிம்மதி வந்து விடும்.
உங்களை காணவில்லையே! என்று இன்றுதான் உங்கள் வலைத்தளத்தில் கேட்டேன்.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

தங்கள் அன்பான ஆறுதல் கூற்றுக்கு மிக்க நன்றி சகோதரரே. . தீடிரென மகளுக்கு நலக்குறைவு ஏற்பட்டதும் மனம் கலங்கிப் போய் விட்டது. இறைவன் நல்லவிதமாக அனைவரையும் குணப்படுத்தி விடுவான் என்ற நம்பிக்கை ஒன்றே நம் எல்லோரையும் இயங்க வைக்கிறது. இருப்பினும் ஒரு பதட்டம் மனதுக்குள் வந்து விடுகிறது. இரண்டு நாட்களாக மனகிலேசம். அதனால்தான் எதிலும் நாட்டமில்லை. இன்று நலமாகி உள்ளாள். தங்கள் அன்பிற்கும், இறைவனின் கருணைக்கும் மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரி

தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

/குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நமக்கு மனக்கவலை வந்து விடும். நலமாகி விட்டால் நிம்மதி வந்து விடும்./

ஆம். உண்மை. இரண்டு நாட்களாக ஒன்றும் தோன்றவேயில்லை. வயிற்றுக்குள் ஏதோ சங்கடம். இனி உங்கள் அன்பான பிரார்த்தனைகளில் அவள் பூரண நலமாகி விடுவாள். உங்கள் ஆறுதலான வார்த்தைகள் மனதிற்கு தெம்பளிக்கின்றன.

நீங்கள் இப்போது சொன்னவுடன் என் பதிவிலும் தாங்கள் வந்து தேடிய கருத்திற்கு இப்போதுதான் பதில் கருத்திட்டு விட்டு வந்தேன். உங்கள் அன்பிற்கும், பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் சகோதரி அவர்களுக்கு நன்றி.. மகிழ்ச்சி..

துரை செல்வராஜூ சொன்னது…

/// @ நான்.. நானே தான்..
இந்தப் பாடலில் வரும் ஆட்டுக் கிடா விவகாரம் வேறு சில பாடல்களில் வந்துள்ளது..

எவை என்று சொல்லமுடியுமா பாருங்கள்!..

@ ஸ்ரீராம்..
நினைவுக்கு வரவில்லையே...///

அடுத்த வாரத்தில் கவனிப்போம்!..

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் கமலா ஹரிஹரன் அவர்களது மகளின் உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்து கொள்வோம்..

மாதேவி சொன்னது…

எங்கள் குடும்பம் சற்று துயரில் இருந்து மீண்டுள்ளோம்.

இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன்.

கமலா ஹரிகரன் மகளின் நலனுக்காக பிரார்த்திக்கிறேன்.

திரு. துரை செல்வராஜ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Geetha Sambasivam சொன்னது…

கமலா ஹரிஹரன் அவர்கள் மகள் உடல் நலம் பூரண குணமடைந்து ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்திக்கிறேன். என்னதான் மாத்திரை, மருந்துகள் கொடுத்து வந்தாலும் நம் மனம் சஞ்சலம் அடையத் தான் செய்யும். இறைவன் அருளால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கி உடல் நலக்குறைபாடில் இருந்து மீண்டு வரவும் பிரார்த்தனைகள்.

கோமதி அரசு சொன்னது…

இரைபோடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம், வீண்
அனுதாபம் கொண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே
டேயண்ணா-டேயண்ணா-டேயண்ணா ட்ரியோ டேயண்ணா''
பதிபக்தி படத்தில் வரும் பாட்டு, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி மாதேவி.

ஸ்ரீராம். சொன்னது…

கொள்வோம்..... வோம்........ ஓம்... ஓம்...

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரி.

உங்கள் குடும்ப சூழ்நிலைகளிலும் நீங்கள் எங்களுக்காக பிரார்த்தனை செய்தது மனம் நெகிழச் செய்கிறது.
தங்களது அன்பான பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி மாதேவி சகோதரி

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

தங்களது அன்பான பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி. மகள் இப்போது குணம் அடைந்து வருகிறார்.

தங்கள் பிரார்த்தனைக்கும் நன்றி ஸ்ரீராம் சகோ. ஓம் நமசிவாய மந்திரத்தை தான் விடாமல் தினமும் ஜபிக்ககிறேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.

இப்போது மகள் குணமடைந்து விட்டார். உபாதைகள் தொடராமல் இத்துடன் முழுவதுமாக குணமடைய தங்களது பிரார்த்தனைகள் கண்டிப்பாக ஒரு பக்கபலமாக இருக்கும். உங்களது அன்பான பிரார்த்தனைகள் மனதிற்கு தெம்பாக உள்ளது. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.