வெள்ளி, 22 செப்டம்பர், 2023

வெள்ளி வீடியோ : கடலும் வானும் பிரித்து வைத்தாலும் காதல் வேகம் காற்றிலும் இல்லை

பலமுறை நாம் வருத்தப்படும் விஷயங்களில் ஒன்று இணையத்தில் கிடைக்கும் பல பக்திப் பாடல்களை எழுதியது யார், இசை அமைத்தது யார் என.  இசை அமைத்தவரையாவது சில சமயங்களில் சொல்கிறார்கள்.  ஆனால் அவ்வளவு பாடுபட்டு யோசித்து எழுதியவர் பெயர் இருட்டடிக்கப் படுகிறது.  

இந்தப் பாடலும் அப்படிதான்.  எழுதியவரும், இசை அமைத்தவரும் தெரியாது.  குரல் கே பி சுந்தராம்பாள்..  

சில வார்த்தைகளை பாடலின் வளைவுக்கேற்றவாறு இழுத்துப் பாடி சமாளிக்கிறார் KBS.  இனிய பாடல்.  

கர்னாடக தேவகாந்தாரி ராகம் போல் தெரிகிறது.  ஏனெனில் ஆங்காங்கே 'எப்படிப் பாடினாரோ' பாடலின் சாயல் வருகிறது!

பழம் நீ நல்ல பழம் நீ பழனி நல்ல பழம் நீ பழனி
கையில் தண்டம் கொண்டு கழுத்தில் ருத்ராட்ச பூண்டு
கையில் தண்டம் கொண்டு கழுத்தில் ருத்ராட்ச பூண்டு
மெய்யுணர்வைக் காட்டி அழைக்கும் வையாபுரிக்கு இறைவா பழம் நீ

பாலாபிஷேகமும் தேன் அபிஷேகமும்
பாலாபிஷேகமும் தேன் அபிஷேகமும்
பார்க்க திகட்டாது - பக்தர்களுக்கு
பார்க்க திகட்டாது -நின்
விபூதி அபிஷேகம் - பார்க்க
திகட்டாது நின் விபூதி அபிஷேகம் - பழம் நீ

தங்கரதத்தில் வரும் சிங்கார முருகா
தங்கரதத்தில் வரும் சிங்கார முருகா நீ
கண்டு களித்திட - முருகனை
கண்டு களித்திட கண்கள் 1000 வேண்டும் - பழனி

பழம் நீ பழனி நல்ல பழம் நீ அன்புப் பழம் நீ
அருள் பழனி நல்ல பழனி அன்புப்பழனி


============================================================================================

1966 ல் வெளியான நாடோடி படம்தான் நடிகை பாரதிக்கு முதல் படம்.  முதல் படமே பெரிய நடிகருடன்.  படத்தில் சீக்கிரமே காணாமல் போய்விடுவார் - தற்கொலை செய்து கொள்வார்.  அப்புறம் படத்தில் வருவது சரோஜா தேவி.

B R பந்துலு தயாரித்து இயக்கிய இந்தத் திரைப்படத்திற்கு இசை மெல்லிசை மன்னர்.  பாடல்கள் கண்ணதாசன்.  'நாடு அதை நாடு', 'அன்றொருநாள் இதே நிலவில்' போன்ற இனிமையான பாடல்களை இருவரும் இந்தப் படத்தில் தந்திருக்கிறார்கள்.  கூடவே இன்றைய பாடலும்.

அமைதியான சூழலில் கேட்டுப்பார்த்தால் இனிமையான இந்தப் பாடல் ஒரு ஆங்கிலப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டது.  

பாடலுக்கான பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.  பாடலுக்கான பின்னணிக் கதை 1866 ல் தொடங்குகிறது. லோரா ஃபாஸ்டர் என்கிற பெண் கர்ப்பமாய் இருக்கும்போதே கொலை செய்யப்படுகிறார்.  அவள் காதலனும், பிறக்காத அந்தக் குழந்தைக்கு தந்தையுமான டாம் டியூலா அவளைக் கொன்ற குற்றத்துக்காக பொய்யாய் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறான்.  பொதுவில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக அவனும் கொல்லப்படுகிறான்.  
உண்மை வெளியாவது டியூலாவின் இன்னொரு காதலியால்.  அந்தக் காதல் குழப்பத்தை இங்கே சென்று படிக்கலாம்!

இந்தக் கதையை 1960 களில் ஒருவர் பாடலாய் எழுத, டாம் டூலி என்கிற அந்தப் பாடலை அந்த நேரத்தில் புகழ்பெற்று வந்த 'கிங்ஸ்டன் ட்ரையோ' என்கிற ஒரு மூவர் அணி பாடல் குழு பாட, பெரும்புகழ் பெற்றது.  அந்த நூற்றாண்டின் அமெரிக்க சிறந்த நூறு பாடல்களில் ஒன்றாகவும், ஆல்டைம் சிறந்த நூறு வெஸ்டர்ன் பாடல்களில் ஒன்றாகவும் இந்த டியூன் தெரிவு பெற்றது.  அதுபற்றியும் மேலே கொடுத்துள்ள சுட்டியில் படிக்கலாம்.  


கிங்ஸ்டன் ட்ரையோ பற்றி இங்கு படிக்கலாம்.

முதலில் ஒரிஜினல். 

ட்ரையோ பாடுவதை இங்கு க்ளிக்கி பார்க்கலாம் / கேட்கலாம்.  

பாடலின் எழுத்து வடிவங்களுடன் மட்டும் வரும் காணொளி கீழே..


இப்போது நாம் தமிழுக்கு வந்து விடுவோம்.  என்ன இருந்தாலும் நம் மொழியில் பாடலின் டியூனைக் கேட்பதற்கு ஈடு உண்டா?  அதிலும் மிகவும் அமைதியான முறையில் காதலைச் சொல்லும் இந்தப் பாடலை TMS சுசீலா குரலில் கேட்டு மகிழலாம்.  பாடல் இடம்பெற்றுள்ள பக்கத்தில் ஒருவர் இந்தப் பாடலை இப்படி சிலாகித்துள்ளார்...

"வலது கையில் கைக்கடிகாரம் கட்டிய பெண்ணின் கை தவழ்ந்து வந்து மலரை பறிக்க .. அதே போல் வலது கையில் கடிகாரம் கட்டிய ஆணின் வந்து அந்த மலரை வாங்கி கொள்ள .. இந்த காட்சிக்கு இனிக்கும் இசை ஜாலம் தந்த மெல்லிசை மன்னர்...    இந்த உலகத்தில் எல்லா  உயிர்களுக்கான ஒரே மொழி ஈர்ப்பு என்ற காதல் மொழி .. இயற்கையின் நிகழ்வுகள் வேறுபட்டாலும் முடிவில் ஒன்றாகும் நிலை...  பெண்ணின் வலது கையிலும் ஆண்கள் இடது கையிலும் வாட்ச் கட்டும் வழக்கம்.. ஆனால் எம்ஜிஆர் பெண்களை போல வலது கையில் வாட்ச் கட்டும் பழக்கம் கொண்டவர்.. பாரதி புதுமுகம் என்று அறிமுகம் ஆனாலும் அழகான முகத்தால் ரசிகர்களை கவர்ந்தார்.."

இனி பாடல்...

உலகமெங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி 
ஓசையின்றிப் பேசும் மொழி உருவமில்லா தேவன் மொழி  . (உலகம்) . 

பறவை ஒன்று வர்ணங்கள் வேறு பாட்டு ஒன்று ராகங்கள் வேறு 
இரவு ஒன்று பருவங்கள் வேறு இன்பம் ஒன்று உருவங்கள் வேறு 
கடலும் வானும் பிரித்து வைத்தாலும் காதல் வேகம் காற்றிலும் இல்லை 
உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும் ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்  . (உலகம்) .

ஒன்றே வானம் ஒன்றே நிலவு ஓடிச் சென்ற ஆண்டுகள் 
கோடி காதல் பேசி கவிதையில் ஆடி கலைகள் தேடி 
கலந்தவர் கோடி கோடி மனிதர் தேடிய பின்னும் 
குறைவில்லாமல் வளர்வது காதல் 
நாடு விட்டு நாடு சென்றாலும் தேடிச் சென்று சேர்வது காதல் 
தேடிச் சென்று சேர்வது காதல் 

28 கருத்துகள்:

 1. கேபிஎஸ் பாடலும் கேட்டு இருக்கிறேன், டிஎம்எஸ், சுசீலா பாடலும் பலமுறை கேட்டு இருக்கிறேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்டாயம் கேட்டிருப்போம், ரசித்திருப்போம் ஜி. நன்றி.

   நீக்கு
 2. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  பார்க்க பார்க்க
  பாவம் பொடிபட..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 3. இன்றைய முதல் பாடலைக் கேட்டு பல வருடங்கள் ஆகின்றன..

  இப்போதைய பாடல்கள் எல்லாம் வடக்கின் அனுராதா புத்வாள் பாணியிலும் ஆந்திரத்து கோவிந்த கோஷ்டி கானமாகவும் அமைக்கப்படுகின்றன..

  அல்லது
  மறு குழப்பி (கலவை) என்ற பெயரில் கொலை செய்யப்படுகின்றன..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது உண்மைதான் என்றாலும் அனுராதா போட்வால் நல்ல பாடகி.

   நீக்கு
 4. /// கோடி மனிதர் பேசிய பின்னும்
  குறைவில்லாமல் வளர்வது காதல்
  ///

  - கவியரசர்..

  பதிலளிநீக்கு
 5. நாடோடி..

  படப் பாடல் என்றும் இனிமை தான்!..

  பதிலளிநீக்கு
 6. இரண்டு பாடல்களும் கேட்டது இல்லை.
  நல்ல பாடல்கள்.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 8. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்கள்.
  என் அப்பாவிற்கு நாடோடி படத்தில் வரும் பாடல்கள் எல்லாம் பிடிக்கும் முன்பும் சொல்லி இருக்கிறேன்.
  இந்த பாடல் ஆங்கில படத்தின் தழுவல் என்று அப்பா சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் பகிர்ந்த பாடலை கேட்டேன். நம் தமிழ் பாட்டு இனிமை.

  //வலது கையில் கைக்கடிகாரம் கட்டிய பெண்ணின் கை தவழ்ந்து வந்து மலரை பறிக்க .. அதே போல் வலது கையில் கடிகாரம் கட்டிய ஆணின் வந்து அந்த மலரை வாங்கி கொள்ள ..//

  ஆணின் கரம் விடுபட்டு இருக்கிறது ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் தான் ஆணின் கரம் என்ற வரியை கட் செய்து விட்டீர்கள் ஸ்ரீராம்.

   நீக்கு
  2. ஹா..  ஹா.. ஹா..  இதோ, இப்போது போய் பார்த்தேன். ஒரிஜினலிலேயே அந்த வார்த்தை விடுபட்டிருக்கிறது அக்கா...

   நீக்கு
 9. எத்தனை தரம் கேட்டிருப்பேனோ இரு பாடலையும். நாடோடி படமும் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் வேறே ஏதோ படம் பார்க்கப் போயிட்டு டிக்கெட்டும் (அதிசயமானு நினைக்காதீங்க. பெரியப்பா பெண்ணோடு போனேன். அவங்களுக்கெல்லாம் பாஸ் கிடைக்காது.) வாங்கியாச்சு. உள்ளே போய் உட்கார்ந்தா ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இந்தப் படம். வழக்கம்போல் வாத்தியார் படத்துக்குக் கூட்டமா, நாங்க போக நினைச்ச படம்னு இருந்துட்டோம். போஸ்டரை எல்லாம் சரியாப் பார்க்கலை. என்றாலும் பாரதியை எனக்குப் பிடிச்சிருந்தது. சோகமான பாரதியாகவும்/தியாகம் செய்யும் பாரதியாகவும் பார்த்திருக்கேன் என்றாலும் விரைவில் நடிப்பில் இருந்து விலகி விட்டார்.

  பதிலளிநீக்கு
 10. முதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். திரை இசைப் பாடல்களை விட பக்திப்பாடல்கள் கேட்டிருக்கிறேன் எங்க ஊர் கோயிலின் உபயத்தால்!

  ஆமாம் கர்நாடக தேவகாந்தாரி போலதான் இருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 11. ஒரிஜினல் ஆங்கிலப் பாடலும் கேட்டேன் ஸ்ரீராம்....தமிழிலும் அப்படியே அதுவும் ஆரம்பம் இசை தொடக்கம்....

  க்ரெடிட் கொடுத்திருப்பாங்களா? அந்தப் பாடலால் கவரப்பட்டு.....அல்லது ஒரு வேளை இப்படி ஏதேச்சையாக ஒரே ட்யூன் மெ ம வின் மனத்ல் வந்து அமைந்ததா?

  இந்தப் பாட்டும் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். நல்ல பாடல் சிம்பிள் இசை...அமைதி. இதே ட்யூன் நிறைய கேட்டது போலவே இருக்கிறது. ஹிந்தியிலும் உண்டோ? ரொம்ப பரவலான ட்யூன் என்று தோன்றுகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. க்ரெடிட் கொடுத்த மாதிரி தெரியவில்லை.  அது பார்த்துதான் (கேட்டுதான்)  இது என்பது உறுதி! ஹிந்தியில் இல்லை என்றே நினைக்கிறேன்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!