இந்த வாரம் செய்முறை வேறு மாதிரி.
எதைச் செய்வது, எப்படிச் செய்வது என்று இல்லாமல், எப்படிச் சாப்பிடுவது
என்பதற்கு எனக்குத் தெரிந்த டிப்ஸ்!
இது மாதிரி சமயங்களில் நீங்கள்
அங்கேயே இருப்பவரானால், டிஃபனை முதல் பந்தியில் முடித்து விடுதல் நலம்.
அப்படியானால் சாப்பாட்டை மூன்றாவது பந்தியிலாவது ருசிக்கலாம். இட்லி, பொங்கல்,
ஊத்தப்பம், வடை, பூரி என்று ஏகப்பட்ட ஐட்டங்கள் போட்டால் ஒன்றிரண்டைத்
தியாகம் செய்தால் கூடப் பரவாயில்லை. அல்லது குறைந்த பட்சம் ஒவ்வொரு
வகையிலும் ஒன்று மட்டும் சாப்பிடுதல் நலம். வயிறு நிரம்பி விடாது.
அதே காலை டிஃபனில்
பொங்கல் அல்லது நெய் கலந்த ஸ்வீட்கள் போட்டால் அவற்றை அடக்கி வாசிக்க
வேண்டும்! இல்லா விட்டால் வயிறு 'டம்'மென்று ஆகி, பின்னர் ருசிக்கப்
போகும் சாப்பாட்டின் சுவையை உணர முடியாமல் செய்து விடும். அதிலும் இந்தப்
பொங்கல் இருக்கிறதே.. அந்த நாள் முழுவதும் வேறு எதுவும் சாப்பிட
முடியாமல் செய்து விடும்! மதியச் சாப்பாட்டைக் கூட விடுங்கள்! அது ஒரு
திருமணமாயிருந்தால் அன்று மாலை போடவிருக்கும் டிஃபன்! அதுவே
வெளியிலிருந்து நிகழ்ச்சிக்கு வருபவராயிருந்து, தாமதமாக வந்து விட்டால்
டிஃபனை பகிஷ்கரித்து விடுங்கள். ஏனென்றால் ஆறிப்போன டிஃபனை விட, சூடான
சாப்பாடு அதிகச் சுவை!
இது போன்ற விசேஷ நாட்களில் கொஞ்சம் வயதானவர்கள் Unienzyme Capsule கைவசம் வைத்துக் கொள்வது நல்லது. நாள் முழுவதும் வித்தியாசமான ஐட்டங்கள் யாவற்றையும் ருசிக்கலாம்.
-
நடு நடுவே காஃபி, கூல் ட்ரிங்க்ஸ் போன்ற பானங்கள் தருவார்கள். ஆசைப்
பட்டு விடக் கூடாது. ஆரஞ்சு போன்ற பழச்சாறுகள் என்றாலாவது ஓகே, காஃபி,
செயற்கை ட்ரிங்க்ஸ் போன்றவையும் நம் வயிற்றை அடைத்து, கெடுத்து, வேறு
எதையும் ருசிக்க விடாமல் செய்து விடும்!
ஆனால் காஃபியின் தரம் அறிய ஒரு முறையாவது ருசித்து விட வேண்டும். கொஞ்சமாக ருசிக்கலாம். இதிலும் ஒரு கஷ்டம் இருக்கிறது. காஃபியை அவர்கள் மொத்தமாகக் கலந்து வைத்திருப்பார்கள். எனக்கோ சர்க்கரைக் குறைவாய் இருக்க வேண்டும். (நான் டயபடிக் அல்ல) எனவே காஃபி தயார் செய்யுமிடம் சென்று எனக்கு வேண்டிய அளவில் சர்க்கரை போட்டு வாங்கிக் கொள்வேன். அதுவும் கால் கோப்பைதான்!
ஆனால் காஃபியின் தரம் அறிய ஒரு முறையாவது ருசித்து விட வேண்டும். கொஞ்சமாக ருசிக்கலாம். இதிலும் ஒரு கஷ்டம் இருக்கிறது. காஃபியை அவர்கள் மொத்தமாகக் கலந்து வைத்திருப்பார்கள். எனக்கோ சர்க்கரைக் குறைவாய் இருக்க வேண்டும். (நான் டயபடிக் அல்ல) எனவே காஃபி தயார் செய்யுமிடம் சென்று எனக்கு வேண்டிய அளவில் சர்க்கரை போட்டு வாங்கிக் கொள்வேன். அதுவும் கால் கோப்பைதான்!
ஒரு
நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். ரொம்ப ஆச்சாரம் பார்க்கும் வீட்டின்
நிகழ்ச்சி. சமையல் வேலை கூட அதே போன்ற ஆட்களைத்தான் ஏற்பாடு
செய்திருந்தார்கள். காஃபியைத் தயார் செய்பவர், டிகாக்ஷனைப் பாலுடன் கலந்து சர்க்கரைப் போட்டு ஒரு கப்பில் ஊற்றிக் குடித்துப் பார்த்தார். தூக்கித்தான் குடித்தார். திருப்தி. மிச்சத்தை அப்படியே அந்தப் பாத்திரத்தில் இருந்த காஃபியுடன்
சேர்த்து விட்டார்! விசேஷங்களிலும், ஏன் ஹோட்டல்களிலும் கூட சமையல்
செய்யும் இடத்தைப் பார்க்கக் கூடாதுதான்! சில இடங்கள் சுத்தமாகவே
இருக்கும்.
-
பாப்கார்ன், பானி பூரி, பேல்பூரி, பஞ்சு மிட்டாய் எல்லாம் சில
கல்யாணங்களில் ஏற்பாடு செய்திருப்பார்கள். அவை எல்லாம் நமக்கு வேண்டாம்.
இவற்றை ருசித்தோமானால் பின்னர் பரிமாறப்படப் போகும் சிலபல முக்கியப் பதார்த்தங்களைச் சுவைக்க முடியாமல் போகலாம்! "நாம் பார்க்காத பாப்கார்னா, இல்லை, பஞ்சு மிட்டாயா! ஹ!" என்று நகர்ந்து விடவேண்டும். பேல், பானி பூரிக்களைச் சுவைக்க மனம் ஆசைப்படுமானால் அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
-
பரிமாறும்போது முதலிலிருந்தே சில ஐட்டங்களைக் காலி செய்யத் தொடங்கி விட
வேண்டும். உதாரணமாக முதலில் பரிமாறப்படும் துளிப் பாயசம், தயிர்ப்
பச்சடி. அந்தத் துளிப் பாயசத்தை உடனே காலி செய்யா விட்டால், அடுத்து
பரிமாறப்படும் பருப்பு, சாம்பார் போன்றவைகளுடன் கலந்து சுவை கெடுக்கும்!
தயிர்ப் பச்சடியை எதனுடன் சேர்த்து சாப்பிடுவது என்று புரியாமல் அது
பாட்டுக்கு சாப்பிடப்படாமல் அனாதையாய் நின்றிருக்கும்.
-
பிடித்த அயிட்டங்களைச் சிலபேர் கடைசியில் சாப்பிட என்று
வைத்திருப்பார்கள். பிடிக்காத ஐட்டங்களை உடனே காலி செய்து விடுவார்கள்.
ஆனால் இது தவறு. ஏனென்றால் ஒரு விசேஷத்தில் பெரும்பாலும் செலவாகாமல்
மிஞ்சுவது இது போன்ற துணைப் பொருட்கள்தான்!
கோஸ் கறி, உசிலி, தயிர்ப் பச்சடி போன்றவை நிறைய மிஞ்சி விடும். (நாம் வீட்டில் செய்யும் உருளைக் கிழங்குக் கறியின் சுவையை விசேஷங்களில் பரிமாறப்படும் போது எதிர்பார்க்க முடியாதுதான்) இவற்றை தள்ளி விடவே முயற்சிப்பார்கள். எனவே நமக்குப் பிடித்தவற்றை முதலில் காலி செய்தால் அவை மறுபடி பரிமாறும்சாத்தியக்கூறு உண்டு. பிடிக்காதவற்றை அப்படியே வைத்திருந்தோமானால் மேற்கொண்டு அவற்றைப் பரிமாறாமல் தாண்டிச் சென்று விடுவார்கள்.
ஆனால் அதற்காக அவற்றை வீணாக்கும் பழக்கம் தவறு. நான் வீண் செய்ய மாட்டேன். கடைசியில் அவற்றையும் காலி செய்து விட்டுத்தான் எழுவேன்! முதலில் பரிமாறும்போதே கட்டாயம் பிடிக்காத பண்டங்களை கைகாட்டித் தடுத்து விட வேண்டும். இல்லாவிட்டால் சுவை எப்படி என்று தெரிந்து கொள்ள மட்டும் கொஞ்சமாகப் போட்டுக் கொள்ள வேண்டும்!
- சில
நேரங்களில் நாம் எக்ஸ்ட்ரா அப்பளம் அல்லது வடை கேட்டோமானால், நாம்
எழுந்திருக்கும் வரை அந்தக் குறிப்பிட்ட சர்வர் நம் பக்கம் வருவதையே
தவிர்த்து விடுவார். அல்லது கண்டும் காணாது போல தாண்டிச் செல்வார். நாம்
சங்கோஜப்பட்டு மறுபடி கேட்க மாட்டோம். அப்படியே கேட்டாலும், திரும்பி
"ஏ... ராஜா... ஸாருக்கு ஒரு வடை கொண்டு வா.." என்று குரல் கொடுப்பார்.
அந்த "ராஜா" ஏனென்று கூட பதில் சொல்ல மாட்டார்! நீங்கள் இது மாதிரி
சமயங்களில் சர்வரைக் கேட்பதைவிட, பெண் / மாப்பிள்ளை வீட்டு மனிதர்கள் பந்தி
விசாரிக்க வருவார்கள் இல்லையா, அப்போது அவர்களிடம் இது மாதிரி எக்ஸ்ட்ரா
ஐட்டங்களைக் கேட்டு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். கோஸ் கறி, உசிலி, தயிர்ப் பச்சடி போன்றவை நிறைய மிஞ்சி விடும். (நாம் வீட்டில் செய்யும் உருளைக் கிழங்குக் கறியின் சுவையை விசேஷங்களில் பரிமாறப்படும் போது எதிர்பார்க்க முடியாதுதான்) இவற்றை தள்ளி விடவே முயற்சிப்பார்கள். எனவே நமக்குப் பிடித்தவற்றை முதலில் காலி செய்தால் அவை மறுபடி பரிமாறும்சாத்தியக்கூறு உண்டு. பிடிக்காதவற்றை அப்படியே வைத்திருந்தோமானால் மேற்கொண்டு அவற்றைப் பரிமாறாமல் தாண்டிச் சென்று விடுவார்கள்.
ஆனால் அதற்காக அவற்றை வீணாக்கும் பழக்கம் தவறு. நான் வீண் செய்ய மாட்டேன். கடைசியில் அவற்றையும் காலி செய்து விட்டுத்தான் எழுவேன்! முதலில் பரிமாறும்போதே கட்டாயம் பிடிக்காத பண்டங்களை கைகாட்டித் தடுத்து விட வேண்டும். இல்லாவிட்டால் சுவை எப்படி என்று தெரிந்து கொள்ள மட்டும் கொஞ்சமாகப் போட்டுக் கொள்ள வேண்டும்!
-
விசேஷங்களில் 'இவை எல்லாம் நிச்சயம் நன்றாயிருக்கும்' என்று சில
விஷயங்களைப் ஓரளவு (!) பட்டியலிடலாம். அவை யாவன : தயிர்வடை, சாம்பார் வடை
போன்றவை, சில சமயங்களில் அவியல், பதர்ப்பேணி போன்ற சமாச்சாரங்கள், சிலவகைப்
பாயசங்கள் (எல்லா வகையும் அல்ல), சப்பாத்தி-பனீர் மசாலா!
இது மாதிரி
விசேஷங்களில் போடப்படும் வெரைட்டி ரைஸ் அவ்வளவு சுகமாக இருப்பதில்லை.
அவற்றை முடிந்தவரைத் தவிர்த்து விட்டால், குறைத்து விட்டால் வயிற்றுக்கு
நல்லது.
-