old and new views லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
old and new views லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.3.12

உள் பெட்டியிலிருந்து - 3 2012



சந்தோஷம்  என்பது ... 
    
வாழ்வில் நாம் விரும்பாத எந்த விஷயமும் சுவாரஸ்யமாயிருப்பதில்லை  ! 

 
           
மற்றவர்களுக்கு சந்தோஷம் கொடுப்பவர்கள்தான் அதிக சந்தோஷமாயிருக்கிறார்கள்..
 
            
உங்களை வெறுத்தவர்களையும் புண்படுத்தியவர்களையும் தண்டிக்கும் வழி அவர்களை லட்சியம் செய்யாமல் அவர்கள் முன் நீங்கள் சந்தோஷமாக வாழ்வதுதான்.
 
              


சந்தோஷத்தில் அழும் ஒருவனின் கண்ணீரின் முதல் துளி முதலில் வலது கண்ணிலிருந்து விழுகிறது. வலியில் அழுபவன் கண்ணீர் இடது கண்ணிலிருந்து விழுகிறது!    
====================

கேட்காத கவிதை / பார்வையின் மறுபக்கம் 
    
எல்லோருக்கும் நான் செவிடனாகத் தெரிகிறேனாம்... எனெக்கென்னமோ எல்லோரும் ஊமைகளாகத்தான் தெரிகிறார்கள்.    
===========================  

இரண்டு 'இரண்டு' விஷயம்...!
 விவாதங்களை விட,  விட்டுக் கொடுத்துப் போவது சிறந்தது.  

அர்த்தமில்லா வார்த்தைகளை விட அர்த்தமுள்ள மௌனம் சிறந்தது.




வாழ்வில் வெற்றி பெற,
கையில் ஒன்றுமே இல்லாத போது கூட நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பதும்,
கையில் இல்லாததே ஒன்றுமில்லை என்ற நிலையில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதும் முக்கியம்.   
===========================

சமாளிப் பூ
  
என் நட்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. என் மௌனத்தைக் கூடப் புரிந்து கொள்ளும் அற்புத நட்புகள் இருக்கும் போது இதனால் எனக்குக் கவலையுமில்லை.   
=================================   





டெஃபனிஷன்.1
     
சிலருடைய பிரிவு துன்பத்தைத் தரலாம். ஆனால் அது அவர்கள் நம் இதயத்துக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதை அறிய உதவுகிறது.           
=====================  
                         
டெஃபனிஷன்.2

இரண்டு பரஸ்பர மன்னிப்புகளுக்கிடயில்தான்  ஒரு சந்தோஷ உறவு மலர்கிறது.  
=================================

பழசும் புதுசும் 
   
வயதானவர் : தவறு செய்பவர்களுக்காகத்தான் அழிப்பான் உருவாக்கப் பட்டிருக்கிறது.    
                         
இளைஞன் :   திருத்திக் கொள்ள மனமிருப்பவர்களுக்காகத்தான் அழிப்பான் உருவாக்கப் பட்டிருக்கிறது.    
====================================

அஞ்சு நாலு மூணு...
                           
ஹலோ...உங்களிடம் ஐந்து விஷயங்கள் சொல்ல வேண்டும்.
ஆனால் இப்போது நாலு விஷயங்கள்தான் நினைவில் உள்ளன.
உண்மையில்  மூன்று விஷயங்கள்தான் முக்கியமானவை.
சொல்லப் போனால் உங்களுக்கு இரண்டு விஷயம் தெரிந்தால் போதும்.
விடுங்கள், ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்...
"நீங்கள் எனக்கு முக்கியமானவர்"    
============================
                         
நானும் மகாத்மாவும்
                        
நான் காந்தியின் விசிறி. அவர் படங்கள் சேர்க்கிறேன். எனவே நண்பர்களே,  நூறு,  ஐநூறு,  ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தால் எனக்கு அனுப்புங்களேன்...