இன்று சூரிய கிரகணம்! அது தெரியாமல் - காலையில் மாடியில் உள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் பொழுது , என்னுடைய பிறந்த தேதிக்கான எண்ணுக்குடையவர் ஆரஞ்சு வண்ண மயமாகத் தென்பட்டதால், அவரை செல் போன் கொண்டு ஒரு படம் எடுத்தேன்.
அது, இது:
அதற்கப்புறம் அண்ணனுடன் சாட் செய்யும்பொழுது அவர் இன்று கிரகணம் என்றார். எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை என்று கேட்டு வைத்துக் கொண்டேன்.
ஏனென்றால் - சாதாரணமாக கிரகண நேரத்தில் பிள்ளைத்தாய்ச்சிப் பெண்கள் சூரிய ஒளியில் நிற்கக்கூடாது என்பார்கள். என்னுடைய தொப்பையைப் பார்த்து, சூரியன் என்னையும் பி தா வாக நினைத்து ஏதேனும் ஏடா கூடம் ஆகிவிடக் கூடாது அல்லவா அதனால்தான்.
ஆனாலும். கிரகணம் உச்சகட்டத்தில் இருந்தபொழுது, வீட்டிற்குள் விழுந்த சூரிய வெளிச்சத்தில், நான்கைந்து துளையிட்ட காகிதத்தை நீட்டி, அதன் மூலமாக தெரிந்த சூரிய பிம்பத்தைப் படம் எடுத்தேன்.
அவைகள் இதோ :