வெள்ளி, 15 ஜனவரி, 2010

15/01/2010 இன்று சூரிய கிரகணம்

இன்று சூரிய கிரகணம்! அது தெரியாமல் - காலையில் மாடியில் உள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் பொழுது , என்னுடைய பிறந்த தேதிக்கான எண்ணுக்குடையவர் ஆரஞ்சு வண்ண மயமாகத் தென்பட்டதால், அவரை செல் போன் கொண்டு ஒரு படம் எடுத்தேன்.
அது, இது:

அதற்கப்புறம் அண்ணனுடன் சாட் செய்யும்பொழுது அவர் இன்று கிரகணம் என்றார். எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை என்று கேட்டு வைத்துக் கொண்டேன். 
   ஏனென்றால் - சாதாரணமாக கிரகண நேரத்தில் பிள்ளைத்தாய்ச்சிப் பெண்கள் சூரிய ஒளியில் நிற்கக்கூடாது என்பார்கள். என்னுடைய தொப்பையைப் பார்த்து, சூரியன் என்னையும் பி தா வாக நினைத்து ஏதேனும் ஏடா கூடம் ஆகிவிடக் கூடாது அல்லவா அதனால்தான்.
       ஆனாலும். கிரகணம் உச்சகட்டத்தில் இருந்தபொழுது, வீட்டிற்குள் விழுந்த சூரிய வெளிச்சத்தில், நான்கைந்து துளையிட்ட காகிதத்தை நீட்டி,   அதன் மூலமாக தெரிந்த சூரிய பிம்பத்தைப் படம் எடுத்தேன்.
அவைகள் இதோ :8 கருத்துகள்:

 1. சென்னையில் பரவிய வதந்'தீ'...

  மூன்று கிரகணங்கள் சேர்ந்து வந்து விட்டதாம்...'வீட்டு ஆண் பிள்ளை'களுக்கு ஆபத்தாம். எனவே தீயை விட வேகமாகப் பரவிய வதந்தியின் காரணமாக பெண்கள் குழு செய்முறையை வேகமாகப் பரப்ப, பெண்கள் ஒரு கயிற்றில் மஞ்சளைக் கட்டி அதை கழுத்தில் கட்டி சுவாமி முன் கற்பூர தீபம் காட்டி, பின்னர் அந்த மஞ்சள் கயிறை அவிழ்த்து எடுத்துக் கொண்டு போய் ஒரு வேப்ப மரத்தில் கட்டி விட வேண்டும். அதுவும் கிரகணம் ஆரம்பிக்குமுன்...!

  சிலர் அதில் சிறு திருத்தம் செய்து கொண்டனர்...தை வெள்ளிக்கிழமை...கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி அவிழ்க்கக் கூடாது..எனவே கையில் எடுத்துக் கொண்டாலே போதும்...!

  சுற்றிலும் பார்க்கும் போது வேப்ப மரங்களின் அருகில் மஞ்சள் கயிறுடன் பெண்கள் கூட்டம்.

  எல்லாம் முடிந்து கிரகணமும் முடிந்து மீண்டும் பெண்கள் கூட்டம் கூடியபோது சொல்லப் பட்ட விஷயம் பெண்களை மூட் அவுட் ஆக்கியது...

  வேறு சில இடங்களில் செய்முறை வேறு விதமாக இருந்திருக்கிறது...வாழை இலையில் அரிசி வைத்து (!) அதில் அகல் விளக்கு ஏற்றி வைத்து, வாசலில் வைத்து, பிறகு அதே மஞ்சள் கயிறு டெக்னாலாஜி. இரு மாற்றங்களுடன்...ஒன்று அந்த விளக்கை வெளியில் எறிந்து விட்டு குளித்து விட வேண்டும்..இரண்டு, அந்தக் கயிறை புங்கை மரத்தில் கட்ட வேண்டும்.

  இந்தச் செயல்களை செய்த பெண்களை இதில் எந்த நம்பிக்கையில் செய்கிறீர்கள் என்று கேட்டால் எல்லோரும் செய்கிறார்கள், நாமும் செய்யா விட்டால் மனதில் ஒரு பயம் வருகிறது என்றார்கள்...

  பதிலளிநீக்கு
 2. இங்கே பெங்களூரில் - வந்த வதந்தி - என்ன என்றால், இந்த மாதத்தில் இரண்டு கிரகணங்கள் வருவதால், இரண்டு குழந்தைகளும், அதற்கு மேலும் பெற்றவர்கள், நாய் படாத பாடு படுவார்கள் - அது ஆகாமல் இருக்கவேண்டும் என்றால் - கிரகணம் பிடிக்குமுன், இரண்டு மாடிகள் ஏறி சென்று - சூரியனைப் பார்த்து இரண்டு நிமிடங்கள் நாய் போல குரைக்கவேண்டும் - என்பதுதான். நான் ஏழு மணிக்கு, இரண்டு மாடி ஏறிப்போய் - இரண்டு நிமிடங்கள் சூரியனைப் பார்த்து வள்ளு வள்ளுன்னு குரைத்து வந்தேன்.
  (இன்னொரு விஷயம் சொல்றேன் கேளு - நான் விட்டதெல்லாம் ரீலு!)

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. Good post.. I also saw the eclipse with a single hole.. It's really good idea to have few more holes, as ur foto is very nice

  //kggouthaman said "சூரியனைப் பார்த்து இரண்டு நிமிடங்கள் நாய் போல குரைக்கவேண்டும்"//

  இதுக்கு பேர் தான், சூரியனை பார்த்து நாய் குரைக்குது !

  கௌதமன் சார், என்னோட ப்ளாக் பக்கமே வரக்கூடாதுன்னு ஏதாவது விரதமா?
  என்னோட முதல் பதிவப் பாத்து தப்பா எடை போடாம, ஒரு எட்டு வந்து பார்த்துவிட்டு உங்க கருத்த சொல்லுங்க சார்..

  பதிலளிநீக்கு
 5. கிரகணம் முடிந்ததும் குளிக்க வேண்டும் என்று அடம் பிடிப்பார்களே... ? (இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது).

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!