நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
7.10.12
6.10.12
பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் - 30/9/12 To 5/10/12
எங்கள் B+ செய்திகள்.
விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
==============
இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்களில் ஏற்படும் அடைப்பால் மாரடைப்பு ஏற்படுவோருக்கு 'ஆன்ஜியோப்லாசி' மருத்துவ முறையை சென்னைப் பொது மருத்துவமனையில் கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறார் பேராசிரியர் முத்துக்குமார். செய்தி தினமலரில். இவ்வாறு அறுவைச் சிகிச்சை செய்து கொள்பவர்கள் மூன்றே நாட்களில் வீடு திரும்பலாமாம்.
=============
ஏ டி எம் கார்ட் தேவை இல்லாமல் கைரேகையைப் பதிவு செய்து கைரேகையை வைத்தே பணம் எடுக்கும் ஏ டி எம் மெஷினைக் கண்டு பிடித்து ஒன்றை நிறுவியும் விட்டாதான் ஜப்பான். இது கொஞ்சம் பழைய செய்தி. (ஆனாலும் 'பின்' நம்பர் மறந்து போனால் கஷ்டம்தான் கணேஷ்!)
===============
ஏகம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் மருத்துவர் சாய்லட்சுமி மருத்துவம் பார்க்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகளுக்காக இந்த அமைப்பை உருவாக்கியுள்ளாராம். கொஞ்ச காலம் மருத்துவராக இருந்து பிறகு இந்த சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்பு கொள்ள அலைபேசி எண் 9445922333. சில உதவும் உள்ளங்கள் உதவியிலும், சம்பத்தப்பட்ட மருத்துவமனைகளிடமே உதவி கேட்டும் இந்தச் சேவையைச் செய்யும் இவரைத் தெரியபடுத்துகிறது தினமலர்.
ஏகம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் மருத்துவர் சாய்லட்சுமி மருத்துவம் பார்க்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகளுக்காக இந்த அமைப்பை உருவாக்கியுள்ளாராம். கொஞ்ச காலம் மருத்துவராக இருந்து பிறகு இந்த சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்பு கொள்ள அலைபேசி எண் 9445922333. சில உதவும் உள்ளங்கள் உதவியிலும், சம்பத்தப்பட்ட மருத்துவமனைகளிடமே உதவி கேட்டும் இந்தச் சேவையைச் செய்யும் இவரைத் தெரியபடுத்துகிறது தினமலர்.
================
வடநாடுகளில் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த குழந்தைகளைக் காப்பாற்ற முடியாமல் போகும் சந்தர்ப்பங்களைக் கண்ட நமக்கு 600 அடி ஆழ்துளைக் கிணறில் விழுந்த 3 வயதுக் குழந்தையை ஹோசூரில் உயிருடன் காப்பாற்றிச் சாதனை செய்திருக்கிறார்கள். சரியாக மூடாத ஆழ்துளைக் கிணறுகளின் அருகில் இருக்கும் சிறுகுழந்தைகளின் பெற்றோர் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கலாம்.
=================
வடநாடுகளில் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த குழந்தைகளைக் காப்பாற்ற முடியாமல் போகும் சந்தர்ப்பங்களைக் கண்ட நமக்கு 600 அடி ஆழ்துளைக் கிணறில் விழுந்த 3 வயதுக் குழந்தையை ஹோசூரில் உயிருடன் காப்பாற்றிச் சாதனை செய்திருக்கிறார்கள். சரியாக மூடாத ஆழ்துளைக் கிணறுகளின் அருகில் இருக்கும் சிறுகுழந்தைகளின் பெற்றோர் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கலாம்.
=================
2001 இல் குஜராத்தில் பேரழிவை உண்டாக்கிய நிலநடுக்கத்தில் மண்ணோடு மண்ணாகிப் போன தன் பிசினசை மீண்டும் இன்னும் புதிய முறையில் உயிர் பெறச் செய்திருக்கிறார் மண் குளிர்சாதனப் பெட்டிகள் செய்யும் மனுஷ்பாய். முன்னர் மண்பானைகள், சட்டிகள் செய்யும் தொழில் செய்து கொண்டிருந்தாராம். 1200 சென்டிகிரேடு வெப்பநிலையில் இந்த மண் குளிர்சாதனப் பெட்டி உருவாக்கப் படுவதால் உடையாது என்று கூறுவதாகக் கூறும் தினமணி இந்த குளிர்சாதனப் பொருளின் விலை 2000 ரூபாய் என்ற தகவலையும் சொல்கிறது. மின்சாரம் தேவை இல்லை. நீர் நிரப்பி அவ்வப்போது மாற்ற வேண்டும். மின் குளிர்சாதனப் பெட்டியைப் பார்ப்பது போலவே இருக்கிறது இவர் தயார் செய்யும் மண் குளிர்சாதனப் பெட்டி. இவரைப் பற்றிப் படித்தது தினமணிக் கதிரில்.
=============================
அனாதைக் குழந்தைகளைத் தெருவில் திரிவது கண்டாலோ, குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கொடுமைகளைக் கண்டாலோ 1098 என்ற எண்ணுக்கு ஃபோன் செய்யலாம் என்கிறது விகடன் செல் தொலைபேசிப் பக்கம்!
அனாதைக் குழந்தைகளைத் தெருவில் திரிவது கண்டாலோ, குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கொடுமைகளைக் கண்டாலோ 1098 என்ற எண்ணுக்கு ஃபோன் செய்யலாம் என்கிறது விகடன் செல் தொலைபேசிப் பக்கம்!
=================
14 வயதில் திருமணம் முடித்த, குழந்தைகள் பெற்ற, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த தாம்பரத்தைச் சேர்ந்த சத்யா, மேற்கொண்டு படிக்க நினைத்து, அதுவும் உருப்படியாகத் தொழிற்கல்வி படிக்க நினைத்து, கணவரின் உதவியுடன் ஹோசூர் டி வி எஸ்ஸில் மெக்கானிகல் சேர்ந்து படித்து, இன்று வொர்க் ஷாப்பில் பல ஆண்களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையுடன் வேலை செய்து பாராட்டைப் பெறுகிறார் சத்யா. இந்த உற்சாகத்தில் எக்ஸ்போர்ட் மெக்கானிக் என்னும் அடுத்த பதவிக்குப் பரிந்துரைக்கப் பட்டு, அதற்காக பயிற்சி பெறப் போகும் இவரைப் பற்றி அறியத் தருகிறது தினமலர்.
=====================

கடலூரைச் சேர்ந்த, சிதம்பரத்தில் MSc software Engineering கடைசி வருடம் படிக்கும் நாகராஜன் என்பவர் ஒரு புதிய சமையல் எரிவாயுவைக் கண்டுபிடித்திருக்கிறார் என்ற செய்தியை முகப் புத்தகத்தில் படித்து, அவர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் திரு வெங்கட் நாகராஜ் பக்கத்தில் நீங்களும் படித்திருப்பீர்கள். படிக்காதவர்களுக்காக இங்கே.. இரண்டு பக்கம் அடைக்கப் பட்ட தகர டப்பாவில் தவிடு போட்டு மூடி அதனைச் சூடு படுத்தினால் Gas உருவாகி அந்த டப்பாவில் இணைக்கப் பட்டிருக்கும் சிறிய குழாய் மூலமாக வெளியேறுகிறது. அதைத் தீக்குச்சியால் பற்ற வைக்கும்போது நீல நிறத்தில் எரிகிறது. இதைச் சிலிண்டர்களில் அடைத்து அடுப்பெரிக்கப் பயன்படுத்த முடியும் என்று நம்புகிறார் நாகராஜன்.
===================
திருப்போரூரைச் சேர்ந்த 52 வயது, 'டைல்ஸ்' பதிக்கும் தொழிலாளி, கணேசன் தன்னுடைய சைக்கிளில் டைனமோ மின்மாற்றியை பின் சக்கரத்தில் பொருத்தி, சைக்கிள் சீட் அருகில் இரண்டு திரி பின், 'டூ பின் ப்ளக்'குகளைப் பொருத்தி இணைப்பு கொடுத்து, அதில் செல் ஃபோன், எமர்ஜென்சி லைட் ஆகியவற்றை சார்ஜ் செய்கிறார் என்கிற செய்தியைச் சொல்கிறது இன்றைய தினமலர். இப்படிச் செய்ய 475 ரூபாய் செலவு ஆகிறதாம் . பெட்ரோல் உபயோக வாகனங்களிலும் இப்படிச் செய்யலாம் என்று சொல்கிறாராம் கணேசன்.
================
திருப்போரூரைச் சேர்ந்த 52 வயது, 'டைல்ஸ்' பதிக்கும் தொழிலாளி, கணேசன் தன்னுடைய சைக்கிளில் டைனமோ மின்மாற்றியை பின் சக்கரத்தில் பொருத்தி, சைக்கிள் சீட் அருகில் இரண்டு திரி பின், 'டூ பின் ப்ளக்'குகளைப் பொருத்தி இணைப்பு கொடுத்து, அதில் செல் ஃபோன், எமர்ஜென்சி லைட் ஆகியவற்றை சார்ஜ் செய்கிறார் என்கிற செய்தியைச் சொல்கிறது இன்றைய தினமலர். இப்படிச் செய்ய 475 ரூபாய் செலவு ஆகிறதாம் . பெட்ரோல் உபயோக வாகனங்களிலும் இப்படிச் செய்யலாம் என்று சொல்கிறாராம் கணேசன்.
================
3.10.12
அலேக் அனுபவங்கள் 11 :: மருத்துவப் பரிசோதனை.
டிசம்பர் இரண்டாம் தேதி, ஆண்டு 1971. அவர்கள் கேட்டிருந்தபடி, எல்லா சான்றிதழ்களும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். புறப்படுவதற்கு முன்பு, என்னுடைய எக்ஸ்-ரே யை, ஒரு புதிய மஞ்சள் நிற காகித கவரில் போட்டு, ரிப்போர்ட் இருந்த கவரை வீட்டிலேயே விட்டு, கிளம்பினேன்.
மருத்துவப் பரிசோதனைக்கு மொத்தம் ஐந்து பேர் வந்திருந்தனர். கௌதமன், பாஸ்கர், அனந்தராமன், விஸ்வநாதம் (ஆமாம் - தம் தான்) ஷ்யாம் சுந்தர் ரெட்டி - என்று ஞாபகம். ஐந்தாவது நபர் சரியாக ஞாபகம் இல்லை.
எல்லோரையும் மருத்துவ மையம் வாசலில் நிறுத்தி, எக்ஸ் ரே மற்றும் வாக்சினேஷன் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பெயர்கள் எழுதிக் கொண்டு, உள்ளே ஒரு அறையில் சென்று அமரச் சொன்னார்கள். அனைவரும் உள்ளாடை மட்டும் அணிந்து, ஒரு வெள்ளை நிற பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டோம்.
ஒரு மணி நேரம் இப்படி சங்கோஜமான நிலைமை. அவ்வப்போது கையில் / காலில் அடிபட்டு, டிஞ்சர் போட்டுக் கொள்ள வந்த இரண்டொரு தொழிலாளர்கள், அதிசயமாக எங்களைப் பார்த்து, அருகில் இருந்த கம்பவுண்டரிடம், 'யாரு இவங்க எல்லாம்? ஏதேனும் திருடிட்டு செக்யூரிடி அலாரம்ல மாட்டிகிட்டான்களா?' என்று ரகசியமாகக் கேட்டார்கள். கம்பவுண்டர், அவர்களிடம், 'இல்லைபா, சூப்பர்வைசர் ட்ரைனிங் கு புதுசா சேர வந்திருக்கின்ற ஆளுங்க.அவங்களுக்கு மெடிக்கல் எக்சாமினேஷன்'' என்றார்.
ஒவ்வொருவரையும் எடை மெஷினில் நிறுத்தி எடை பார்த்தார்கள். நான் முப்பத்தைந்து கிலோதான் இருந்தேன். எடை பார்த்தவர், "வரும்பொழுது நிறைய வாழைப் பழம் சாப்பிட்டு வந்திருக்கக் கூடாதா? வெயிட் கொஞ்சம் அதிகமாகக் காட்டியிருக்குமே " என்று கேட்டார். 'முன்னரே சொல்லியிருக்கக் கூடாதா' என்று நினைத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு ஆளுக்கு ஒரு சோதனைக் குழாயைக் கையில் கொடுத்து அந்தப்புரத்திற்கு அனுப்பினார்கள். 'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என்று மனதினுள் பாடியபடி சென்றேன்.
பிறகு நடந்தது என்ன என்றால் ...
அட! பதிவுல சென்சார் புகுந்து சில பகுதிகளை கட் செய்துவிட்டார்கள்!
டாக்டரை சந்திக்க ஒவ்வொருவரும் தனித் தனியே அழைக்கப்பட்டார்கள் (ஆமாம், ஆமாம் உள்ளாடை மட்டும்தான் - இப்பவும்) ஒவ்வொருவருக்கும் பத்து முதல், பதினைந்து நிமிடங்கள் ஆயின. என்னுடைய முறை வந்ததும், அறையினுள் சென்றேன்.
டாக்டர் வயதானவர். உயரமாக, புன்னகை தவழும் முகத்தோடு, வழுக்கைத் தலையுடன், வெள்ளைக் கோட்டு, வெள்ளை பாண்ட் அணிந்து, பருமனான மனிதராக இருந்தார். (பெயர் தெரியும். சொல்ல மாட்டேன்! ) என்னை நூறு சதவிகிதம் தேகப் பரிசோதனை செய்த பின், என்னுடைய எக்ஸ்-ரேயை அங்கிருந்த ஒளி பொருந்திய ஸ்டாண்டில் மாட்டினார். எக்ஸ்-ரே யை சில வினாடிகள் உற்றுப் பார்த்தார்.
பக்கத்து அறையில் இருந்த அவருடைய உதவியாளரை, சத்தமாக அழைத்தார். (உதவியாளர் பெயர் ஞாபகம் இல்லை). என்னுடைய சப்த நாடிகளும் ஒடுங்கிப் போயின.
டாக்டர், 'ஹியர் இஸ் எ கேஸ் ஆப் அக்யூட் பிராங்கிடிஸ் விச் மே டெவலப் இண்டு எ சீரியஸ் அண்ட் மாலினன்ட் ஒன் அண்டர் அனட்டென்டட் சர்க்கம்ஸ்டான்சஸ் ....' என்று சொல்லி, உதவியாளர் உதவியோடு, என்னை ஆம்புலன்சில் ஏற்றி, சென்னைப் பொது மருத்துவமனைக்கு கொண்டுபோய் விட்டு விடுவாரோ என்ற பயம் வந்துவிட்டது, எனக்கு.
உதவியாளர் வந்தார் .....
மீதி அடுத்த பதிவில் பார்ப்போம்.
2.10.12
காந்தி சாஸ்திரி காமராஜ் கக்கன்....
இந்தியாவின் மிக உயர்ந்த பதவியில் முழு அதிகாரத்தோடு வீற்றிருந்த லால்பகதூர் சாஸ்திரிஜி அமரர் ஆகும்போது அவருக்கு என்று சொந்தமாக ஒரு வீடு இல்லை. ஓர் அங்குல நிலம் இல்லை. அவரது குடும்பத்துக்கு அவர் விட்டுச் சென்றது ஒரு கார் வாங்கியதற்கானக் கடனைத்தான்.
1965 ஆம் ஆண்டு செங்கோட்டையில் பிரதம மந்திரியாக தேசியக் கொடி ஏற்றினார் சாஸ்திரிஜி. அடுத்த ஆண்டு ஆட்சி மாறி 1966-ஆம் ஆண்டின் சுதந்திர தின விழாவுக்கு அவரது குடும்பத்தைத் தேடி ஓர் அழைப்பிதழ் கூடப் போகவில்லை. [விகடன் பொக்கிஷம் பகுதியில் லால்பகதூர் நினைவுகள் புத்தகம் பற்றிய பகிர்வில்]
அவ்வளவுதான் நாம் உண்மையான, தன்னலமில்லாத தலைவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை!
இதைப் படிக்கும்போது கக்கன்ஜி நினைவும், காமராஜர் நினைவும் தப்பாமல் வந்தது. காமராஜரின் சொத்துக் கணக்குகள் பற்றி எதிர்க் கட்சிகள் கண்டபடி பேசிக் கொண்டிருக்க, உறக்கத்திலேயே உயிர் பிரிந்த நிலையில் காமராஜரின் சொத்து என்பது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர, வங்கிக் கணக்கோ சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இருக்கவில்லை. இறுதிவரை வாடகை வீட்டிலேயே வசித்த தலைவர் அவர்.
காமராஜர் அமைச்சரவையிலும் பின்னர் பக்தவச்சலம் அமைச்சரவையிலும் சுமார் ஒன்பதாண்டு காலம் அமைச்சரவைப் பதவி வகித்தவர் கக்கன் அவர்கள். ஓரிரு நாள் பதவி கிடைத்தாலே சொத்து சேர்க்கும் இந்நாளில் அமைச்சரை இருந்தபோதும் அரசுப் பேருந்தில் அலுவலகத்துக்குச் சென்றவர். மதுரை அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில் படுத்து சிகிச்சை பெற்றவர்.
காந்தி கற்றுக் கொடுத்த அஹிம்சைப் போராட்டத்தை சுத்தமாக மறந்து போனோம். அவர் கற்றுக் கொடுத்த உண்ணாவிரதத்தை இதற்குமேல் கேவலப் படுத்த முடியாது என்ற நிலையில் வைத்திருக்கிறோம். தலைவர்களை மறந்தோம். அவர் கற்றுக் கொடுத்த கொள்கைகளை மறந்தோம். அதை வைத்து வியாபாரம் செய்யும் கலைகளைக் கற்றோம்.
இனி இது மாதிரித் தலைவர்களை இந்தியா காணுமா? நாமே நினைத்தாலும், நாமே தலைவர்களாக வந்தாலும் அபபடி இருக்க முடியாது என்பதுதான் இன்றைய நடைமுறை உண்மை!
1.10.12
இப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை! சற்றே நீண்ட சிறுகதை 3
முன்கதைச்சுட்டிகள்...! [ 1 ], [ 2 ]
[ 3 ]
அப்பா பேத்தியை இழுத்து பக்கத்தில் அணைத்துக் கொண்டவர் அவளுக்கு எடுத்து ஊட்டினார். பவானி பதிலுக்கு எடுத்து அவருக்கு ஊட்டியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திட்டமிட்ட காட்சியில் கடவுளின் கருணையும் கிடைத்தாற்போலத் தோன்றியது. சட்டையைத் தளர்த்திக் கையை மடக்கி விட்டுக் கொண்டவர் சாப்பிடத் தொடங்கினார். என் கண்கள் கலங்குவதை என்னால் கட்டுப் படுத்தவே முடியவில்லை.
'அப்பா......'
கை கழுவ வந்த பவானியிடம் "கை கழுவிட்டு உன் ரூமை தாத்தாவுக்குக் காட்டப் போறியா " என்று உற்சாகமாகக் கேட்பது போலக் கிளப்பி விட்டேன்.
குழந்தைக் கச்சிதமாக நான் நினைத்ததைச் செய்தாள். சாப்பிட்டு விட்டு உட்காரப் போனவரைக் கையைப் பிடித்து மாடிக்கு இழுத்தாள். முதலில் மறுத்தவர் மெல்ல ஆவலுடன் மாடி ஏறினார்.
கீழே கதவைத் தாளிட்டு விட்டு நானும் தொடர்ந்தேன். எப்படித் தொடங்குவது என்ற குழப்பங்கள் விலகி, காட்சிகள் ஒவ்வொன்றாக அமையத் தொடங்குவது சந்தோஷம் தந்தது. என்றாலும் இப்போது எப்படித் தொடங்குவது என்ற சிந்தனைக்கும் சற்று நேரத்திலேயே விடை கிடைத்தது.
மாத்திரை!
கரெக்ட்.... நேற்றே அப்பாவுக்குத் தேவைப் படும் என்று வாங்கி வைத்திருந்த சர்க்கரை மாத்திரை, ரத்த அழுத்த மாத்திரை!
மேலே வந்தவர் "குழந்தைக்கு தனி ரூமா..... என்னம்மா இது... உங்களுடன் படுக்க மாட்டாளா..." என்றார். அவர் குரலில் லேசான காரம் இருந்தது. அதில் குழந்தைப் பாசத்துக்கும் மேலாக என் கணவரின் மேல் குற்றம் காணும் தன்மை தெரிந்தது!
மனதுக்குள் புன்னகையுடன்,
"இல்லப்பா.... எங்களுடன்தான் படுப்பா.... அவ ரூம்னு அவ சொல்றது அவளோட ப்ளேயிங் ரூம்.... அதோ....! இதோ இருக்கறது எங்க பெட்ரூம். மூன்று பேரும் அங்கதான் தூங்குவோம். இடது பக்கம் இருக்கறது அவர் ரூம். அந்தப் பக்கம் வலது பக்கம் இருக்கறது என் ரூம்... பகலில் நான் என் ரூமிலும் அவர் அவர் ரூமிலும் செலவு செய்யும் நேரங்கள் உண்டுப்பா....."
பவானி ரூமுக்குள் சென்று அவள் விளையாட்டு சாமான்களைக் கண்டவர் புன்னகைத்தார். எதிர்பார்த்தேன். சிறுவயதில் என் அறையை அவர் அமைத்திருந்தது போலவே அமைத்திருந்தேன்.
'கிளைக்கொமேட்' மாத்திரையையும் 'லோசார் ஏ' மாத்திரையையும் எடுத்து அவர் கையில் ஒரு தம்ளர் தண்ணீருடன் தந்தேன். அவர் கண்ணில் வியப்பு தெரிந்தது. வியப்பு கேள்வியாக மாறி சந்தேகம் தெரிந்தது அவர் கண்களில். "எப்படித் தெரியும் உனக்கு இது?"
நான் அங்கு இருக்கும்போது அவருக்கு எந்த நோயும் இல்லை. அப்புறம் வந்த காலங்களில் ஒரு நாள் அவருக்கு லேசான மயக்கம் வந்து டாக்டரிடம் சென்ற பின் சாப்பிட நேர்ந்த மாத்திரைகள் இவை.
"சொல்றேன்பா....."
கொஞ்ச நேரம் விளையாடிய பவானி தூங்கி விழத் தொடங்க, "வாங்கப்பா.... இவளை என் ரூமுக்குச் சென்று படுக்க வைக்கலாம்" என்று பவானி அருகில் செல்வதற்குள் அப்பா அவளைப் பூப்போலத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு ரெடியானார். இந்த சின்னச் சின்ன செயல்கள் என் நெஞ்சத்தை விம்மச் செய்தன. முத்துக்குமாருக்கு மானசீகமாக நன்றி சொன்னேன்.
யார் என்கிறீர்களா.... என் காதல் கணவன்.
என் அறைக்குள் சென்றதும் குழந்தையை என் படுக்கையில் விட்டவர் திரும்பி அந்த அறையைப் பார்த்தவர் பேசாமல் நின்று விட்டார். மூன்று பக்கங்களிலும் அப்பாவின் பெரிய பெரிய படங்கள். திரும்பத் திரும்ப அவற்றை உற்றுப் பார்த்தவர் என்னைப் பார்த்துத் திரும்பியபோது அவர் கண்களில் சந்தேகம், கோபம், குழப்பம் எல்லாம் தெரிந்தது. ஏனென்றால் அவை எல்லாம் அவரின் சமீப காலப் புகைப் படங்கள்.
"என்னம்மா இது.... எனக்கு ஒண்ணும் புரியலையே..... என்ன நடக்குது.... இந்தப் படங்கள் எப்படி உன்கிட்ட....?"
"அப்பா.... " மேலே பேச முடியாமல் என் கண்களில் நீர்த் திரையிட்டது. அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். கை காட்டி விட்டு எழுந்து போய் தண்ணீர் எடுத்து நிதானமாகக் குடித்தேன். கோபமாக இருந்தாலோ துக்கம், அழுகை வந்தாலோ என்னை சமனப் படுத்திக் கொள்ள அப்பாவும் பாட்டியும் சொல்லிக் கொடுத்திருந்த வழிதான் அது.
திரும்ப வந்து அவர் எதிரில் அமர்ந்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். கை நகங்களைப் பார்த்தபடி கொஞ்சம் நேரம் சும்மா இருந்தேன்.
'எங்கு ஆரம்பிப்பது?'
"என்னம்மா... யார் இந்தப் படங்கள் உன் கிட்டக் கொடுத்தது? நான் இந்த மாத்திரை சாப்பிடறேன்னு உனக்கு எப்படித் தெரியும்?"
"அதான்பா..... எங்க ஆரம்பிக்கறதுன்னு யோசிக்கறேன்.... நான் ஒருத்தரை விரும்பறேன்னு நான் சொல்றத்துக்கு முனாடியே நீங்க அதைத் தெரிஞ்சிகிட்டீங்க.... உங்கள் ஆளுங்க ராஜப்பாவும், சாமியும் உங்க கிட்ட சொல்லி, நீங்களும் விசாரிக்க ஆரம்பிச்சீங்க... நமக்குள்ள வாக்குவாதமும் ஆரம்பிச்சுது. அப்பா.... அம்மா செத்துப் போனப்புறம் சின்ன வயசுலேருந்தே பாட்டியும் நீங்களும்தான் என்னை வளர்த்தீங்க.... "
"அதுக்குத்தான் நீ...." ஆரம்பித்த அப்பாவை இடைமறித்தேன்.
"அப்பா ப்ளீஸ்.... நான் கொஞ்சம் சொல்லிடறேன்... அப்புறம் கேளுங்க.. எனக்காக நீங்க வேற கல்யாணமே பண்ணிக்கலை... எனக்காகன்னு நான் நினைச்சாலும் அம்மாவை நீங்க எந்த அளவு நேசிச்சீங்கன்னு பாட்டி சொல்லியிருக்கா.. ஆனாலும் உங்களுக்கு என்னை கவனிக்க நேரம் கம்மியா இருந்ததுப்பா.... உங்க பிசினஸ் உங்களை முழுசும் பிடிச்சு வச்சிருந்தது.. என்னுடைய தேவைகளைப் பார்த்துப் பார்த்து செஞ்சாலும் உங்க கிட்ட வேலை செஞ்சவங்க மூலமாத்தான் அதெல்லாம் நடந்தது. நீங்க என் கிட்ட செலவு செய்த நேரம் கம்மின்னாலும் அந்த நேரத்துல உங்க பாசத்தை எனக்கு காமிச்சுக்கறதுல ஒரு சிக்கனத்தை, கட்டுப் பாட்டைக் கடைப்பிடிச்சீங்க.... "
மெதுவாக, நிதானமாக வார்த்தைகளை எண்ணி, எண்ணி, நிறுத்திப் பேசினேன். சிறிய இடைவெளி விட்டுத் தொடர்ந்தேன்.
"ஆனா எனக்கு உங்க பாசம் தெரியும்பா.... நான் அதுல சந்தேகமே படல.... அதே சமயம் என்னால இடைல வந்த காதலையும் மறுக்கவோ மறக்கவோ முடியல.... நீங்க உங்க அம்மா பார்த்து வச்ச பொண்ணை, அம்மாவைக் கட்டிகிட்டீங்கன்னு தெரியும்பா... ஆனால் அதுக்காக எங்க காதலை அவ்வளவு மூர்க்கமா எதிர்ப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை..."
(அடுத்த பதிவில் நிறைவு பெறும் )
30.9.12
29.9.12
பாசிட்டிவ் செய்திகள் 23/9/2012 To 29/92012
முன்னர் குடிநீர் வாரியம் ஆறாயிரம் லிட்டர் குடிநீர் நானூறு ரூபாய்க்கும், ஒன்பதாயிரம் லிட்டர் அறுநூறு ரூபாய்க்கும் தருவதை இதே பாசிட்டிவ் செய்திகளில் வெளியிட்டிருந்தோம். இப்போது அதிலேயே இன்னொரு செய்தி. வீட்டு உபயோகத்திற்கான குடிநீர் ஆயிரம் லிட்டர் ரூபாய் நாற்பதுக்குக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது குடிநீர் வாரியம். இந்த விலையில் குடிநீர் பெற விரும்புபவர்கள் தங்கள் சொந்த செலவில் லாரிகள் மூலம் நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் கொண்டு செல்லலாம் என்று அறிவித்துள்ளது குடிநீர் வாரியம்.
==============================
தென்னக ரயில்வேயில் துணைப் பொது மேலாளராகப் பணி புரிகிறார் இளங்கோவன். அரசு ஊழியராக இருந்தாலும் கூட 'சுடர்' என்ற அமைப்பின் மூலம் 12 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத பல ஏழை மாணவிகளின் மேல் படிப்புக்கு வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அதில் சரண்யா என்ற மாணவி எஞ்சினியரிங் படித்து விட்டு இப்போது ஐ ஏ எஸ் படித்து வருகிறாராம். இவருடைய மனைவி கீதா. அவரும் 'கூடு' என்கிற அமைப்பை பெண்களுக்காக நடத்தி வருகிறார். மாத விலக்கு நாட்களில் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப் பட்டு அல்லலுறும் பெண்களின் மூட நம்பிக்கைகளை அகற்ற இவர் அமைப்புப் பாடுபடுகிறது. இவரும் ஒரு அரசு ஊழியரே. இருவருமே சமுதாய விழிப்புணர்வுக் குறும்படங்கள் இயக்கி உள்ளார்கள். தினமணியில் இவர்களின் பேட்டி....
====================
ஸ்கேட்டிங்கிலும் 'இன்லைன்' ஹாக்கிப் போட்டியிலும் சாதித்துக் கொண்டிக்கும் சென்னையைச் சேர்ந்த பதினைந்து வயது பி என் ரவுஷில். சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஃப்ரீ ஸ்டைல் இன்லைன் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று ஒட்டுமொத்தத்தில் 19 வது இடத்தையும், இந்திய வீரர்களில் 2 வது இடத்தையும் பெற்றுள்ளார். "வழக்கமாக எல்லா அணிகளுக்கு எதிராகவும் 20, 30 கோல்கள் போடும் பஞ்சாபிகள், எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் 7 கோல்கள் மட்டுமே அடித்தனர். போட்டி முடிந்த பிறகு எங்களைச் சந்தித்த பஞ்சாபிகள் எங்களைப் பாராட்டி விட்டுச் சென்றது மறக்க முடியாதது" என்கிறார் இவர் தினமணிக்கு அளித்த பேட்டியில்....
===================
மின் சிக்கனத்தை மேம்படுத்தும் விதமாக நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சென்னை நீங்கலாக சில மாவட்டங்களில் தெரு விளக்குகளை எல் இ டி விளக்குகளாக மாற்றும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. ரிமோட் டில் கட்டுப் படுத்தக் கூடியதாக தனியார் பங்களிப்புடன் செயல் பட இருக்கும் இந்தத் திட்டத்தால் 30 முதல் 35 சதம் மின்சாரம் சிக்கனப் படுத்த முடியும் என்கிறது தினமலர் செய்தி.
=================
அரசு மருத்துவர்களோ, மருத்துவமனைப் பணியாளர்களோ நோயாளிகளிடம் எரிந்து விழுந்தால் 104 என்ற 'டோல் ஃப்ரீ'எண்ணுக்கு தொலைபேசி புகார் தரும் புதிய வசதி மிக விரைவில் அறிமுகம் ஆக இருக்கிறதாம்.
=================
தேனியைச் சேர்ந்த மீனா, ஹோட்டல் சப்பளையரான கணவனின் வருமானம் போதாமல் அவதிப் பட்ட ஒரு நாளில், பக்கத்து வீட்டில் இவர் தந்த இவர் கைத் தயாரிப்பான ஊறுகாயைச் சாப்பிட்டு விட்டு அவர்கள் சொன்ன 'உன் கைப் பக்குவத்துக்கு ஊறுகாய் போட்டே பொழச்சுக்கலாம்' என்ற வார்த்தையில் உற்சாகமடைந்து, 'முனீஸ்வரன் ஊறுகாய்' என்ற பெயரில் ஊறுகாய்ப் போடத் தொடங்கி அதன் அபார வரவேற்பால், இன்று கணவர் தன் வேலையை விட்டு விட்டு இந்தத் தொழிலில் முழு மூச்சாய் இறங்கி உதவி செய்ய, பிசினசில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார், (தினமலர்)
===========
'படிக்கிற காலத்தில் கேம்ஸ் பீரியடில் ஓரமாக உட்காரவைக்க'ப் பட்டபோது மனம் நொந்து போனதாகச் சொல்லும் கலையரசி, உயரக் குறைபாடு, போலியோ பாதிப்புகள் கொண்ட மாற்றுத் திறனாளி. அவர் மற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக 'பூர்ணோதயா தொண்டு நிறுவனம்' நடத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகளின் கஷ்டத்தைப் போக்க அவர்களுக்கு அங்கே தொழிற்பயிற்சி அளிக்கச் செய்யும் இவர் இதற்காகச் சில காலம் ஒரு கிறிஸ்துவ மிசனரியில் பணி புரிந்து களமிறங்கிப் பணி புரியும் திறன்கள் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார். 'நானே அவர்களுக்கு உதவவில்லை என்றால் எப்படி' என்று கேட்கிறார். (முகப்புத்தகம்)
=================
ஒன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி சேலத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞர் பெரியசாமி. உயரக் குறைவை சக மாணவர்கள் கிண்டல் செய்த காரணத்தினால் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டாராம். இசையின் மீது ஆர்வம் என்பதால் தாளம் போடும் போடும் பழக்கம் வர, அப்புறம் குறை தீர்க்கும் நாளன்று கலெக்டர் மகாபூஷணத்தைச் சந்தித்து மனு கொடுக்க, அவர் இசைக் கல்லூரி முதல்வரை அங்கு வரவழைத்து இவரின் இசை ஆர்வத்தைச் சோதனை செய்து, மிருந்தங்க வகுப்பில் இலவசமாகச் சேர்த்துக் கொண்டதோடு இலவச உணவு, ஹாஸ்டலில் தங்கிக் கொள்ளும் வசதியோடு மாதம் நானூறு ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்க ஆவன செய்துள்ளாராம். (தினமலர்)
===============
ரயிலில் பயண முன்பதிவு செய்யும்போது பயணச்சீட்டின் அப்போதைய நிலை- ஸ்டேடஸ் - குறித்து அலைபேசியிலேயே சுலபமாக அறிந்து கொள்ள வசதியான முறை ஒன்று இருப்பதை விகடன் சுட்டிக் காட்டுகிறது. டிக்கெட்டின் PNR என்னை 139 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினால் நொடியில் குறுஞ்செய்தியாக தேவைப்படும் தகவல் வந்து விழுகிறதாம்.
================
பிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட் கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் மனைவி அலமேலுவுக்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஏகத்துக்கும் ரத்தப்போக்கும், மருத்துவமனையில் சோதனை செய்த போது தொப்புள்கொடி அறுந்து குழந்தை இறந்து விட்டது தெரிந்த நிலையில் அறுபட்ட தொப்புள்கொடி வழியாக தாய்க்கு தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரது ரத்தத்தின் உறையும் தன்மையும் பாதிக்கப் பட்டது. உடனடியாக புதிய ரத்தம் கொடுக்கப்பட்டால் மட்டுமே அலமேலுவின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் டோனர்ஸ் யாரும் கிடைக்காத நிலையில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் கவிதாவே தனது ரத்தத்தைக் கொடுத்து அலமேலுவைக் காப்பாற்றி இருக்கிறார். இருவரின் ரத்தமும் ஓ பாசிட்டிவ்.
============
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





