Monday, April 28, 2014

திங்க கிழமை 140428 :: இனிப்பு அவள் .... இல்லை அவல்

 
   
அரை கிலோ கெட்டி அவல் வாங்கிக் கொள்ளவும் (கடையில்தான்!). 
           
போதிய அளவு சுத்தமான தண்ணீரில் அதை அரைமணி நேரம் ஊற வைக்கவும். 
    
பிறகு தண்ணீரை வடித்து விடவும். 
   
ஊறிய அவலை நன்றாகப் பிசையவும். 
   
 
   
கால் கிலோ சீனி, ஒரு மூடி தேங்காய்த் துருவல் இதை, பிசைந்த அவலோடு போட்டுக் கிளறி வைக்கவும். 
                             
அவ்வளவுதான். இனிப்பு அவல் தயார். (அவள், தாயார் என்றெல்லாம் படிக்காதீர்கள்!) 
                           

19 comments:

கோமதி அரசு said...

அருமையான இனிப்பு அவல்.

பழனி. கந்தசாமி said...

இதுதான் சத்தான இயற்கை உணவு. அமாவாசை மற்றும் திவச தினங்களில் இதுதான் எனக்கு காலை உணவு. அதாவது சமைக்காத உணவைச் சாப்பிடுவதால் விரத பங்கம் ஏற்படாது என்பது ஐதீகம்.

இமா said...

ம்... இங்கும் சமையற்குறிப்பா!! :-) எனக்கும் அவல் சாப்பிடப் பிடிக்கும்.
//(அவள், தாயார் என்றெல்லாம் படிக்காதீர்கள்!) // ;)))

அப்பாதுரை said...

அரை மணி ஊறினால் கூழ் போல் ஆகிவிடாதோ? அதற்கு மேல் பிசைந்தால்..

Geetha Sambasivam said...

இன்னிக்கு செவ்"வாய்"க் கிழமை, "திங்க" லாம் இல்ல?

@அப்பாதுரை, இந்தியாவில் கெட்டி அவல், நைஸான மெலிது அவல் என இரு வகை கிடைக்கும். கெட்டி அவலை மூன்று மணி நேரம் கூட ஊற வைக்கலாம். எதுவும் ஆகாது.

Geetha Sambasivam said...

அமாவாசையன்றும் விரத தினங்களிலும் காலை பத்து, பதினோரு மணிக்குள் சாப்பிட்டுவிடுவதால் மாலை மூணு மணிக்கு அவல் தான். :))))

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம் நீங்களே இன்னிக்குத் தான் பதிவைப்போட்டிருக்கிறதா கூகிள் சொல்லுதே!

கரந்தை ஜெயக்குமார் said...

அவல் மிகவும் பிடித்த உணவு
நன்றி நண்பரே

இராஜராஜேஸ்வரி said...

சமைக்காத சத்தான உணவு..

ஸ்கூல் பையன் said...

/அவள், தாயார் என்றெல்லாம் படிக்காதீர்கள்!/

ஹா ஹா ஹா...

வெங்கட் நாகராஜ் said...

இங்கே கெட்டி அவல் கிடைப்பதில்லை.... இதற்கென்று தனியாக தேட வேண்டி இருக்கிறது. மற்ற அவல் என்பதால் பத்து நிமிடம் மட்டுமே ஊறவைத்து சாப்பிடலாம்! :)

திண்டுக்கல் தனபாலன் said...

இனிப்புக்கு நான் எதிரி...!

Ranjani Narayanan said...

@ கீதா,
//இன்னிக்கு செவ்"வாய்"க் கிழமை, "திங்க" லாம் இல்ல?// உங்கள் நகைச்சுவையை ரொம்பவும் ரசித்தேன்.

அவலை வைத்துக்கொண்டு மேக்சிமம் திண்டி (டிபன்) செய்வது இங்குதான்!

வடகம் கூடப் போடுவார்கள்.

மனோ சாமிநாதன் said...

மிஷினில் அடித்த சாதாரண அவலை விடவும் இந்த கெட்டி அவலுக்கு ருசி அதிகம். சுலபமான, அருமையான இயற்கை உணவு இது!

Geetha Sambasivam said...

ரஞ்சனி, அவல் வடாம் நானும் போடுவேன். ரொம்ப எளிதான முறை தான். :)))

வல்லிசிம்ஹன் said...

னிப்பு எல்லாம் போட்டு... ம்ம்ம்.பரவாயில்லை. எல்லாரும் நன்றாகச் சாப்பிடுங்கள்.>} இந்த அவல் தயிர் போட்டுக் கூடச் செய்யலாம். மகா ருசி.

‘தளிர்’ சுரேஷ் said...

இனிப்பு அவல் சிறப்பான உணவு! பகிர்வுக்கு நன்றி!

G.M Balasubramaniam said...


கெட்டி அவலை சிறிது நேரம் ஊறவிட்டு அதைக் காய்ச்சியபாலில்சர்க்கரை வாழைப்பழம் நறுக்கியது சேர்த்து வாசனைக்கு சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து எனக்கு இவள் தருவாள்.

Jaleela Kamal said...

காலையில் டிபனுக்கு சாப்பிட அருமையாக இருக்கும்.. வயிற்று வலிக்கு மிகவும் நல்லது, என் மாமனாருக்கு முன்பு இதை தினம் காலையில் டீயுடன் கொடுப்பேன். அப்படியே நானும் சாப்பிடுவது. அல்சர், வயிறு புண் உள்ளவர்களுக்கு இது அருமருந்து.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!