Friday, May 26, 2017

வெள்ளிக்கிழமை வீடியோ 170526: இந்தப்பாட்டு கேட்டிருக்கீங்களோ...எந்தாத்து பையனவன்...


     படம் இளையராஜாவின் ரசிகை.  


வெளிவராத படம்.  இதில் இளையராஜா குரலில் ஒரு பாடலும் இருக்கிறது.  அழகான பாடல்.  எனக்குப் பிடித்த பாடலும் கூட.  என்னுடைய "இளையராஜா பாடிய பாடல்கள்" கேசட்டில் அந்தக் காலத்தில் மூன்றாவது பாடல் அது!  கேசெட்டெல்லாம் கடாசியாயிற்று!  ஆனால் அந்தப் பாடலை அல்லாமல், "இந்த"ப் பாடலை இங்கு பகிர்கிறேன்!  சுவாரஸ்யமான பாடல்.  எஸ் பி ஷைலஜாவும், மலேஷியா வாசுதேவனும் பாடியிருக்கிறார்கள்.

     மலேஷியா வாசுதேவன் எம் எஸ் வி காலத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் (காலம் செய்யும் விளையாட்டு- குமாஸ்தாவின் மகள்) இளையராஜாதான் அவர் குரலை முழுமையாகப் பயன்படுத்தி மிளிரச் செய்து புகழ் பெற வைத்தார் என்று நினைக்கிறேன்.


தமிழ் மண வாக்களிக்க லிங்க் இதோ...

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461287

25 comments:

syedabthayar721 said...

அருமையான பாடல் பதிவுக்கு நன்றி .

M.செய்யது
Dubai

பாரதி said...

சூப்பர்...!!!

பாரதி said...

அபூர்வமான பாடல்...!!!

ராஜி said...

என் அம்மாக்கு பிடித்த பாடல். டவுன்லோட் பண்ணிக்குறேன்

ராஜி said...

தம ஓட்டு குத்தியாச்சு

Thulasidharan V Thillaiakathu said...

ஒட்டு போட்டுட்டோம்.....ஒட்டு போட்டுட்டோம்.....ஹே..ஹே....அப்பால வாரேன்

கீதா

சென்னை பித்தன் said...

இப்போதுதான் கேட்கிறேன்.
நன்று

Asokan Kuppusamy said...

அபூர்வமான பாடலை இளையராஜாவின் குரலும் இனிமை

asha bhosle athira said...

ஆஹா மீயும் வந்திட்டேன்ன்ன்ன்ன்..

///தமிழ் மண வாக்களிக்க லிங்க் இதோ...

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461287///
இதைப் பார்த்ததும் சந்தோசம் பொயிங்குதே.. சந்தோசம் பொயிங்குதே.... இதைப் பார்த்தபின்பும் வோட் போடாமல் போவோர்.. வோட் போட விரும்பாதோர் பட்டியலில் சேர்க்கப் படுவினம் ஹா ஹா ஹா.. இனி யாரும் வோட் பட்டை தெரியவில்லை எனச் சொல்லித்தப்பி ஓட முடியாதூஊஊஊஊஉ:).

asha bhosle athira said...

சூப்பர் பாடல்.. மனதை ஏதோ பண்ணும் இனிமை...
கிட்டத்தட்ட அன்னக்கிளி படப் பாடல்களின் சாயல் வருகிறது.. குத்து அம்மா குத்தரசி குத்தத்தான் வேணும்,.. மச்சானைப் பார்த்தீங்களா..... அவை எல்லாம் ரொரொரொரொர்ம்ப பிடிக்கும் எனக்கு அந்தச் சாயல் தெரிகிறது இதிலும்..

asha bhosle athira said...

//வெளிவராத படம். //

ஹா ஹா ஹா இந்த வெளிவராத படத்தால் ஒரு தொல்லை உண்டு, அதாவது பாட்டு பிடிச்சிருக்கே படம் பார்க்கலாம் எனத் தேடினால் கிடைக்காது கர்:).

எங்கள் மாமி(கணவரின் அம்மா).. சிடியில் எப்பவும் தன் கட்டிலருகே வைத்துப் பாட்டுக் கேட்பா.... பழைய பாடல்களாக சிடி க்கள் வாங்கி வருவா... நான் போகும்போதெல்லாம், உங்களுகுப் பிடிச்சதை எடுத்துப் போங்கோடா என்பா.. நானும் எல்லாம் கொட்டித் தேடி எடுத்து வருவேன் என் காரில் போட்டுக் கேட்க.

அப்படியா எடுத்து வந்ததில் ஒரு 5/8 பாடல்கள்.. மிக வித்தியாசமானவை... மிக நகைச்சுவையானவை.. திரும்பத் திரும்பக் கேட்டுவிட்டு, இப்போ எங்கயோ இருக்கு சிடி, கையில் கிடைச்சால் என்ன பாடல்கள் எனச் சொல்கிறேன்.. ஆரம்பவரிகள் மறந்திட்டேன் படம் தேடினால் கிடைக்கவில்லை.. பின்புதான் அறிஞ்சேன்ன்.. படத்தின் பெயர் “வீட்டுக்குள்ளே திருவிளா” வாம்ம்... சரியாகத் தெரியவில்லை. ஆனா படம் வெளிவரவில்லையாம் கர்:).

mohamed althaf said...

அருமையான பாடல் பதிவுக்கு நன்றி

KILLERGEE Devakottai said...

அருமையான பாடல்

Bagawanjee KA said...

எண்பதுகளில் வந்த ஹிட் அடிக்காத பாடலாச்சே இது :)

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பாடல்
எப்பவோ வானொலியில் கேட்ட நினைவு

நெல்லைத் தமிழன் said...

இந்தப் பாடல் கேட்டதேயில்லை. பொதுவா ஹாஸ்டல்ல எல்லாப் படப் பாடல்களும் போடுவாங்க. கேட்டது இல்லை. ஆஹான்னு இல்லை

நெல்லைத் தமிழன் said...

இப்போ ரெண்டு மூணு நாளா சக்கரம் சுத்தரதில்லை. சட்டுனு ஓட்டு விழுந்துடுது

Angelin said...

மச்சானை பார்த்திங்களா டியூன் லேசா வருது ஆனா பாட்டு நல்லா இருக்கு ..
சில படங்கள் பழையவை யூ ட்யூபில் கிடைச்சாலும் பாடல்கள் தனியா கிடைக்காது ..
சமீபத்தில் தாமரை இலையே தூது செல்லாயோ பாட்டை சவுண்ட் க்லவுடில் கேட்டேன் ..
பல படங்கள் வெளி வரலைனாலும் பாடல்கள் பிரபலமாகிடும் ..
என்னடி முனியம்மா எந்த படம்னு தேடினா கிடைக்கல ஆனா மைக்கேல் ஜாக்சன் ஒரு வெள்ளைக்கார பொண்ணுகூட ஆடும் காட்சியோட ரீமிக்ஸ் செஞ்சிருந்தாங்கா ஹா ஹா

அழகான பாடலை பகிர்ந்ததற்கு நன்றி

Angelin said...

The Way You Make Me Feel ..பாடல் காட்சியை என்னடி முனியம்மாவுக்கு ரீமிக்ஸ் செஞ்சு விட்ருக்காங்க :)

Angelin said...

awwww :)) @athiraa //அன்னக்கிளி படப் பாடல்களின் சாயல் வருகிறது.. குத்து அம்மா குத்தரசி குத்தத்தான் வேணும்,.. மச்சானைப் பார்த்தீங்களா.....//

ரெண்டு பேருக்கும் ஒரே பாட்டு தோணியிருக்கே :))))) high 10

கோமதி அரசு said...

பாடல் கேட்ட நினைவு இருக்கு .
பாடல் நன்றாக இருக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

பலமுறை ரசித்த பாடல்...

Ramani S said...

கேட்டு இரசித்தோம்
பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

பாட்டுக் கேட்டதில்லை.

விஜய் said...

அருமையான பகிர்வு.
தமிழ் செய்திகள்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!