Tuesday, May 30, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை - அனுபூதி, முகநூல் நட்பு - கவிஞர் கே அசோகன் - சீதை 8, 9


      ராமனை, சீதை மன்னிக்கும் கற்பனையில் இரண்டு குட்டிக்கதைகள் வழங்குகிறார் கவிஞர் கே. அசோகன்.


======================================================================அனுபூதி – சிறுகதை

கவிஞர் கே அசோகன்

“ஏனுங்கோ. கருவேப்பிலை வாங்கி வாங்களேன்”

சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் சீதை.

“என்னது ? நான் இன்னா செய்துட்டிருக்கேன், எத்தனை தடவை சொல்றது, தியானம் பண்ணும்போது இடைஞ்சல் செய்யாதே-ன்னு கேட்கவே மாட்டியா !
நீயே போய் வாங்கிக்கோ” என்று சொல்லிவிட்டு கண்களை மூடி தனியறையில் தியானத்தைத் தொடர்ந்தான் இராமன்.

“இவக, எதுக்குத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டாங்களோ?, கட்டுன பொஞ்சாதிக்கு ஒரு கருவேப்பிலைக் கூடவா வாங்கி தர முடியாது, நான் என்ன ? நகைநட்டா
வாங்கி தாங்க-ன்னு கேட்டேன்”  முனகியபடியே கடைக்கு போக தயாரானாள்.

கடைக்கு போனால், திரும்பி வர கால்மணி நேரமாவாது ஆகும்,  அதுவரைக்கும் கேஸ் ஸ்டவ் எரியவிட்டா, கேஸ் விரயமாகும், நாற்பது நாள் வர்றது, முப்பது
நாள்லேயே தீர்ந்திடும், அதுக்கும் அவர்கிட்ட மல்லுக்கட்டணும்-ன்னு கேஸ் ஸ்டவ்வை ஆப் செய்து விட்டு, கருவேப்பிலை வாங்க கடைக்கு போனாள்.

கடைக்கு போன சீதை, எதிரில்பட்ட மாலா, கீதா, இரமா, தோழிகளிடம் பேசிவிட்டு, கருவேப்பிலை வாங்கிவர, அரைமணி நேரமாகி விட்டிருந்தது.

மறுபடியும் கேஸ் ஸ்டவ் பற்றவைத்து “கருவேப்பிலை” மணக்க சமையலில் மும்முரமானாள்.

கண்களை மூடி தியானத்திலிலிருந்த இராமனின் மனதில் “கருவேப்பிலை வாங்க கடைக்கு போன சீதை, ஒழுங்காக ரோடை கிராஸ் செய்வாளா ?  வண்டிகள் வேகவேகமாய் வருகிறதே, இரண்டு பக்கமும் பார்த்து ரோட்டை கிராஸ் செய்ய வேண்டுமே, என்ன செய்தாளோ, பத்திரமாக திரும்புவாளோ?” இந்த எண்ணங்களிலேயே தியானத்தில் மூழ்காமல், அரைகுறையாக முடித்து கொண்டு கண்களைத் திறந்தவனின் எதிரிலிருந்த சுவர்கடிகாரம் மணி எட்டைக் காட்டியது.

அரக்க பரக்க எழுந்து, “அடியே சீதா, சமையல் ஆச்சா, ஆபிஸ்க்கு லேட்டாச்சு, சீக்கிரமா கிளம்பணும்…". ஆர்ப்பாட்டத்த்தோடு, காலை டிபனை வாயில் திணித்து, அரைகுறையால் மென்று விழுந்கி, மதிய சாப்பாட்டை கட்ட சொல்லி ஆபிசுக்கு கிளம்பினான்.

போகிற வழியில் “சே, இன்னைக்கு தியானத்துல ஒக்காரும்போதே,
“கருவேப்பிலை” வாங்கியான்னு முட்டுக்கட்டைப் போட்டா சீதா, ஆதனால, இன்னைக்கு திருப்தியே இல்லே” என்று மனதுக்குள் பேசிக் கொண்டான்.

அலுவலகம் வேலை முடித்து, இரவில் வீடு திரும்ப நேரமாகி விடுகிறது.  அசதியில் தூங்கி விடுவதால், அதிகாலையில் எழுந்து தியானம் செய்ய முடிவதில்லை.

ஆறுமணிக்கு எழுந்து காலைக்கடன்கள் முடித்து, குளித்து, தியானத்தில் ஒக்காரும்போதுதான் “கடைக்கு போய் பால் வாங்கியா ! கருவேப்பிலை வேணும், பரண்ல இருக்கிற பாத்திரத்தை எடுத்துக் கொடு-ன்னு குடைசல் கொடுக்கறா சீதா, இவ பன்ற அலம்பல் தாங்க முடியலே, சொல்லாம, கொள்ளாம காட்டுப்பக்கம் ஓடிடலாமோ” இப்படிகூட நினைத்தான்.

அவனே, உண்மையிலேயே, தியானத்தைப் பத்தி சீதாவுக்கு தெரியலையா? இல்லே, நாம மட்டும்….மாங்கு…மாங்குன்னு சமையல் கட்டுல வேலை செய்யறோம், இவர் மட்டும் தியானம்ஙகற பேர்ல சொகுசா ஒக்காந்துண்டு, ஏமாத்தறோம்- ன்னு நினைக்கறாளோ” என்றும் நினைத்து கொண்டான்.


“நாம பன்ற தியானத்துக்கு, சீதாவால இடையூறு வரக்கூடாது, யார்கிட்ட யோனைக் கேட்கலாம்-ன்னு நினைச்சிகிட்டிருக்கும் போதே… "அடியே திவ்ய மஹாலில் ஒரு சாமியார் வந்திருக்கிறாராம், இன்னா பிரச்சினைன்னாலும், உடனே தீர்த்து வைச்சு, ஆசிர்வதித்து அனுப்புறாராம், நான் பார்க்க போறேன், நீயும் துணைக்கு வாயேன்” தோழிகளின் பேச்சு இராமனின் காதில் விழுந்தன.

“அட, இதுகூட நல்ல யோசனைதான், சீதாவைக் கூட்டிபோய், சாமியார்கிட்ட அறிவுரை சொல்ல சொல்லி, தியானத்துக்கு இடையூறு இல்லாம இருக்க வழி பண்ணனும்ன்னு” தீர்மானித்தான்.

மறுநாள் ஆபிசுக்கு லீவு எழுதிக் கொடுத்தான்

லீவுக்கான காரணம் ”மனைவியை மருத்துவமனைக்கு கூட்டி செல்வதற்கு” என கோரிக்கை விடுத்திருந்தான் இராமன்.

திவ்ய மஹாலில், காலையிலேயே கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தன. கூட்டம் நீண்டு கொண்டேயிருந்த்து. வரிசையில், இராமனும், சீதாவும் நின்று…… நெளிந்து… நெளிந்து சென்று….. வெகுநேரத்திற்கு பிறகு சாமியாருக்கு அருகில் சென்று விட்டார்கள்.

சாமியாரை வணங்கி “சாமி, நான் தினமும் காலையில் தியானம் செய்கிறேன். அப்பொழுதுதான் இவள்“ கருவேப்பிலை வாங்கியா, பால் வாங்கி வந்தியா, பரண்மேல இருக்கிற பாத்திரத்தை எடுத்து கொடு, பாத்திரத்தை பரண்மேல எடுத்து வை-ன்னு அற்ப விஷயங்களுக்காக, என்னுடைய தியானத்தைக் கெடுக்கிறாள். நீங்கதான் அறிவுரை சொல்லி ஆசிர்வதிக்கணும்-ன்னு“ கைக்கட்டி வணங்கி நின்றான்.

“நான் ஒன் மனைவிக்கு அறிவுரை சொல்லும்போது, நீ வெளியே இருப்பா” என்று இராமனை அனுப்பி விட்டார்.

சாமியார், சீதாவைப் பார்த்தார்.

சீதாவோ, மெல்லிய சிரிப்பை சிந்தினாள். மனதுக்குள்  “இவரே, குடும்ப பொறுப்பை சுமப்பதற்கு பயந்துதானே கல்யாணமே வேணாணும்ன்னு, சாமியாரானார், இவரென்ன?  நமக்கு அறிவுரை சொல்வது' என்று நினைத்தாள்.

சீதாவின் எண்ண ஓட்டத்தைப் படித்து விட்டார் சாமியார்.

“அம்மையே, நீ என்ன நெனைக்கிறேன் தெரிஞ்சுக்கிட்டேன்,  அதெல்லாம் போட்டு குழப்பிக்காதே, ஒன் புருஷன் தியானம் பண்ணும் போது, இடைஞ்ச
ல் செய்யாதே,, ஏன்னா, அவர் பன்ற தியானத்தின் பலன்களில் பாதியளவு தானாகவே ஒனக்கு சேர்ந்திடும், இதுதான் பெண்களுக்கு உரிய வரப்பிரசாதம்.  பெண்கள் செய்யும் அர்ப்பணிப்பான வேலைகள், தியானத்திற்கு ஈடானதுதான். தனியாய் தவம், தியானம் செய்ய தேவையில்லை, நீடுழி வாழ்க" என்று ஆசிர்வதித்து “ஒன் புருஷனை வரச்சொல்” என்றார்.

சாமியாரின் அருகில் பவ்யமாய் கைக்கட்டி நின்றிருந்தான்.

“மகனே, குடும்ப வாழ்க்கைய ஏத்துகிட்ட பிறகு எல்லாத்துலேயும் சரிசம்மாக நடந்துக்க வேண்டும்,  அதைவிட்டுட்டு, நான் தியானத்துல இருக்கேன், கருவேப்பிலை வாங்கியான்னு சொல்றா, இடைஞ்சல் பன்றா“ன்னு குறைப்பட்டுக்க கூடாது. சின்ன சின்ன வேலைகளை செய்து கொடுத்து…. அதில் அவங்களுக்கு ஏற்படுத்துற சந்தோஷத்தைப் பார்க்குறதுதான் உண்மையான தியானம். நீ தியானத்துல அனுபவிக்கிற அனுபூதி தன்மையைவிட ஆயிரம் மடங்கு மேலானதாகும், கடவுள் ஆசி கிடைக்கும்” என்று வழியனுப்பினார்.

இராமனின் முகம் தெளிவாய் மாறியது. வெளியே வந்தான். சீதாவின் கரத்தைப் பற்றி கொண்டு நடந்தான். “ சீதா, கருவேப்பிலை வாங்கி வந்து தராத தற்கு மன்னித்து கொள்” என்றான் இராமன்.

அதைக் கேட்டவுடன், அவளின் கரங்கள் இராமனின் தோளைப் பற்றியிருந்ததில் தெளிவானது  “சீதை, இராமனை மன்னித்து விட்டாளென்றே”.


கவிஞர் கே. அசோகன்.-------------------------------------------------------------------------------------------------------------------------------------------முகநூல் நட்பு
கவிஞர் கே அசோகன்

“பேண்ட், ஷர்ட், கூலிங் கிளாஸ் இப்படி எல்லாமே பிரான்டன்ட்தான், ஆபிசில் அவன் பேரே “பிரான்டன்ட் சீத்தா ராமன்” என்று பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவார்கள்.

ஜாலியாக விசிலடித்து கொண்டு பேஸ்புக், சோசியல் மீடியாக்களில் லைக்ஸ், கமெண்ட்டுகள்“ என குவிப்பதிலேயே பொழுதைப் போக்கினான்.

கைநிறைய சம்பளம், வார இறுதியில் கடற்கரையோர ரீசார்ட்டுகளில் என்ஜாய்மெண்ட்,  இப்படி பொழுதுபொக்கியவனின், கண்களில் மின்னலாய் தெறித்தாள் சீதா.

பெயர் கர்நாடகமாக இருந்தாலும்,
ஐ.டி யில் வேலை செய்தும், அதை
பேஷனாக மாற்றிக் கொள்ளாதவள். இருந்தும் பாய் பிரண்ட்ஸ் எக்கசக்கம்.

மாடர்ன் டிரஸ்ஸில் வளையவளைய வரும் அவளை வளைப்பதில் சில பேருக்கு ஆசையை விட பேராசை அதிகமென்றே சொல்ல்லாம். அவரவர் வேலையை நிறுத்திவிட்டு “ஆவென்று வாயைப் பிளந்துகொண்டு ஜொள்ளிடுவார்கள்.

“என்னடி சீதா, ஆபிசே ஜொள் விடுது, நீ கண்டுக்க மாட்டேங்கறெ“ என்ற
தோழிகளின் கேள்விக்க  “அடிப் போடி, அழகான ஓவியத்தை ரசிக்கத்தான் செய்வார்கள், ரசிக்கட்டுமே, ஆனால், ஓவியத்தை சிதைக்க நினைத்தால், சீறிவிடுவேன்” என்று சீறுவாள்.

ஒருநாள் ரீசார்ட்டில சீத்தாராமனும், சீதாவும் சந்தித்தார்கள்.

சீத்தாராமனுக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்றது, மனசு இறக்கைக்கட்டி ஆகாயத்தில் பறந்தது.  சீதாவின் மனசு குறுகுறுத்த்து.

இருவரும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். காலார கடற்கரை மணலில் நடந்தார்கள்.  இடைவெளி விட்டு நடந்தவர்களிடையே, இடைவெளி குறைந்து நெருக்கம் சேர்ந்தது.

நெருக்கத்தில் “காதல்" கனிந்தது.

“டார்லிங்! இப்போதைக்கு வீட்டுல சொல்ல வேண்டாம். நம்ம ரெண்டுபேரோட குடும்பமும், எப்போ நெருக்கமாகி வருதோ, அப்போ, கல்யாண ஏற்பாடுகள் அவங்களே பன்றா மாதிரி நடக்க ஏற்பாடு செய்வோம், நாம இரண்டு பேரும் காதலர்கள் என்பது யாருக்கும் தெரியக்கூடாது” என்று சீதா கேட்டுக் கொண்டாள்.

சிறிது நாளில் அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே இரண்டு குடும்பமும்
நெருக்கமானது. கல்யாண பேச்சு ஆரம்பமானது.

இரண்டு குடும்பத்தாரும், எதற்கு வெளியெ மாப்பிள்ளையும், பொண்ணும் தேட வேண்டும், கையிலேயே வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைவானேன்” என்று முடிவுக்கு வந்து சீதாராமனுக்கு சீதாவுக்கு முடிச்சு போட திட்டமிட்டார்கள்.

பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்த்து.

உறவினர் கூட்டத்தோடு…. சீதாவின் வீட்டில் கம்பீரமாக மாப்பிள்ளையாக
வீற்றிருந்தான்.

அப்பொழுது, துள்ளிகுதித்தபடியே “அங்கிள் நீங்கதான் என்னோட அக்காவை கட்டிக்க போறீங்களா ?  சுட்டித்தனமாய் கேட்டாள் சீதாவின் தங்கை இரமா.

“ஆமாம்மா, நான்தான் ஒன் அக்காவை கட்டிக்க போறேன்” என்றான் சீதாராமன்.

இரமாவிடம் மெதுவாக பேசி ….“என்னம்மா என்ன வகுப்பு படிக்கிறே, மார்க்கு நல்லா வாங்குறியா ”  இப்படி ஆரம்பித்து, ஒன் அக்காவுக்கு நெறைய பாய் பிரண்ட்ஸ் இருக்காங்களாமே, அவங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாங்களா ?"


“ஒன் அக்கா பேஸ் புக்குல எத்தனை மணிவரைக்கும் சாட்டீங் செய்வா.லைக்ஸ். கமெண்ட்ஸ்லாம் எப்படி வரும், ஆபாசமா படங்கள் வந்தா ஒன் அக்கா ரசிப்பாளா ?"

கேள்விகளால் துளைக்க…. திருதிருவென முழித்து… “அங்கிள், இதெல்லாம் அக்காகிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்கோங்க“  பட்டென்று எழுந்து ஓடிவிட்டாள்.

சீதாராமனுக்கு முகத்திலடித் த்து போலிருந்தன. அதைக்காட்டிக் கொள்ளாமல், கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான்.
ஒரு டிரேயில், காபி தம்ளர்களோடு வந்த சீதா, சீதாராமனுக்கு காபியைக் கொடுத் ததோடு, இரகசியமாக ஒரு கடிதத்தைக் அவனிடம் கொடுத்தாள்.

கடிதத்தை வாங்கியவன், பாத்ரூம் செல்வதுபொல வெளியே போய் பிரித்து படித்தான்.

அதில், “கொஞ்ச காலம் உங்களோடு பழகிய பாவத்திற்கு உங்களை மன்னித்துவிட்டேன்.   இதுபோல் இன்னொரு பெண்ணின் வீட்டிற்கு சென்று “சந்தேக பார்வையை“ பதிக்காதீர்கள் என்றிருந்த்து.

மீண்டும் உள்ளே நுழைந்தவன், வீட்டுக்கு போய் தகவல் அனுப்புகிறோம்,சம்பிரதாயமான பதிலை சொல்லிவிட்டு கிளம்பினான் இராமனாக.

சீதா, இராமனை மன்னித்து விட்டதற்கான உண்மையான காரணம், அவளுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.


கவிஞர் கே. அசோகன். தமிழ்மணம் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யுங்க....!


59 comments:

Geetha Sambasivam said...

ஹையா, திறந்துடுச்சு. க்ரோம் ப்ரவுசரில் இரண்டாம் முறையாத் திறந்துடுச்சு! படிச்சுட்டு வரேன். :)

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு இரண்டுமே! சின்ன விஷயம் தான்! ஆனால் உட்பொருள் கனமானது! அதிலும் இரண்டாவது கதையில் சீதா மன்னித்ததோடு விட்டு விட்டதும் சரியான முடிவே. முடிவை வாசகர்கள் ஊகிக்க விட்டு விட்டார்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வித்தியாசமான நோக்காக இருந்தாலும் இரண்டுமே அருமை. ஆசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

இரண்டுமே வெவ்வேறு வழிகளில் அருமை வாழ்த்துகள் நண்பர். கவிஞர். கே. அசோகன் அவர்களுக்கு.

நெல்லைத் தமிழன் said...

இரண்டுமே நல்லாத்தான் இருக்கு. கதாசிரியருக்கு பாராட்டுகள். த ம 2

middleclassmadhavi said...

Superb! Superb!

Thenammai Lakshmanan said...

irandu kathaikalum arumai !

விஜய் said...

ரசித்தேன்,அருமை.
தமிழ் செய்திகள்

Angelin said...

இரண்டுமே நல்லா இருக்கு ..ரெண்டாவதில் சீதா தனியா பேசணும்னு கூப்ட்டு ரெண்டு பளார் கொடுத்து பிறகு மன்னித்திருக்கலாம் னு தோணுது ..சந்தேக பிசாசுகளை துவச்சிபோட்டாதான் திருந்துங்க

asha bhosle athira said...

முதல் கதை மட்டும் இப்போ படிச்சேன்.. நிஜம்தான்.. நியாயமான மன்னிப்புத்தான், சாமியாரிடம் மனைவியைத் திருத்தக் கூட்டிப்போனவர்.. தான் திருந்திவிட்டார்.

உண்மைதான் தியானம் கோயில் என அலைவதைக் காட்டிலும், மனைவிக்கு/கணவனுக்கு.. குழந்தைகளுக்கு ஒழுங்கா செய்ய வேண்டியதைச் செய்து மகிழ்த்திப்படுத்தி வைத்திருந்தாலே.. குடும்பம் கோயிலாகி நிம்மதி கிடைத்து விடுகிறது.. பிறகெதுக்கு தியானம்... நிம்மதி இல்லாதபோதுதானே மனதை அமைதிப் படுத்த தியானம் தேவைப்படுது.

asha bhosle athira said...

இரண்டாவது கதையில் சீதை ராமனை மன்னிச்சிட்டா சரி ஆனா கல்யாணம் நடந்துதோ இல்லையோ?:).. இது ஒன்றும் பெரிய தப்பாகத் தோணல்ல.. ஏனெனில் இதில் வரும் ராமன் ஏற்கனவே பேஸ் புக்கில் கொமெடிகள் பண்ணிக் கலக்குபவர்.. சகஜமாகப் பேசுபவர் என்பதனால்.. இதுவும் அவரின் சேஷ்டைகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ளலாமே:)..

ஊசிக்குறிப்பு:
ஹா ஹா ஹா 2ம் கதை படிக்கும்போது இங்கின ஒருவர் நினைவுக்கு வந்தார்.. அவர் அவர் யாரென மீ டொல்ல மாட்டனே... அமேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ.. க்க்கா வாசி:).. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்:).

asha bhosle athira said...

///Angelin said...
இரண்டுமே நல்லா இருக்கு ..ரெண்டாவதில் சீதா தனியா பேசணும்னு கூப்ட்டு ரெண்டு பளார் கொடுத்து பிறகு மன்னித்திருக்கலாம் னு தோணுது ..சந்தேக பிசாசுகளை துவச்சிபோட்டாதான் திருந்துங்க//

அம்மாடியோஓஒவ்வ்வ்வ்வ்வ் ஃபிஸ்ஸூ பொயிங்குதே:) ஹா ஹா ஹா பொஸிட்டிவ்வா திங் பண்ணிட்டால் ஓகே:) புதிதாக வந்திருக்கும் மாப்பிள்ளை எனில் இதே துவையல்தான் கரீட்டூஊஊஉ:) ஆனா இக் கதையில் சொல்லப்பட்டிருக்கும் விதம் கதாநாயகன்.. ஒரு கொமெடி ரைப்... அடி வாங்கவும் ரெடி:).. ஆனா தப்பானவரா தெரியல்ல:). சரி சரி விட்டுப்பிடிச்சிடலாம்:) ஹா ஹா ஹா.

Thulasidharan V Thillaiakathu said...

இரண்டுமே நல்லாருக்கு..ரெண்டாவது....முடிவு....அதாவது மன்னித்ததன் உண்மையான காரணம்....வாசகர்களின் ஊகத்திற்கு!!!.???..

வாழ்த்துகள்....

Angelin said...

Garrrrrஅதிரா.. ஒரு சின்ன பிள்ளை கிட்ட கேட்டு வாஙகர ஒர் ஜந்து அது காமெடி டைப்பா .வந்து அடிப்பென் உங்களை haahaa

asha bhosle athira said...

//Angelin said...
Garrrrrஅதிரா.. ஒரு சின்ன பிள்ளை கிட்ட கேட்டு வாஙகர ஒர் ஜந்து அது காமெடி டைப்பா .வந்து அடிப்பென் உங்களை haahaa//

ஆவ்வ்வ்வ் ஸ்ரீராமை நெம்ம்ம்பி இப்பக்கம் வந்தால்ல், எவ்ளோ கூக்குரல் போட்டாலும் அவர் வந்து காப்பாற்ற மாட்டார்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அதனால ஓடியே தப்பிட வேண்டியதுதென்ன்ன் :) நாம ஆரூஊஊஊஉ 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்.. எங்கிட்டயேவா:)..

http://likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg

Angelin said...

அந்த பயம் இருக்கட்டும் ஹா ஹா

அப்பாதுரை said...

//1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்

wow..

Angelin said...

@ அப்பாதுரை /// நோ நோ :) நம்பாதீங்க ..இவங்க லாஸ்ட்ல செகண்டா வந்ததை பெருமையா சொல்றாங்க :)

நெல்லைத் தமிழன் said...

@அதிரா - "1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்" - எனக்கு உங்கள் எழுத்துப்பிழைகளைத் திருத்த நேரமில்லை. ஏஞ்சலின் வேற எப்போதும் A & E ல பிஸி போலத் தெரியுது. இனிமேல், இதனை காப்பி-பேஸ்ட் செய்து போடுங்கள்.

"1500 மில்லி மீட்டர் ரேசில், 2 பேர் ஓடி, 2ஆவதா வந்தேன்"

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான படைப்புகள்
அழகான எழுத்து நடை

Angelin said...

@நெல்லைத்தமிழன் :)))) ஹா ஹா அதை நான் எழுத நினைச்சேன் இன்னொரு கமெண்ட்டில் :) நீங்க சொல்லிட்டிங்க
ஒரே அலைவரிசை இல்ல :) பூனையை ஓட்டறதில் ..

asha bhosle athira said...

எங்க எங்க எங்கின விட்டேன்ன் சாமீஈஈஈஈஈஈ:) ஓடின வேகத்தில கொஞ்சல் லேசாஆஆ ஸ்லிப் ஆச்சா:) அதுதான் உடனே வர முடியல்ல:).. இட்ஸ் ஓகே... 1500 மீட்டரில் 2ண்ட்டா வந்த எனக்கு இதெல்லாம் பெரிய விசயமோ?:)..


///அப்பாதுரை said...
//1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்

wow..///

ஹா ஹா ஹா பார்த்தீங்களோ என்னோடு பேசாத உங்களுக்கே புரியுது:).. இங்கின ஆருக்குமே என்னைப் பற்றிப் புரியமாட்டுதாமே:) நான் எது செஞ்சாலும் குறுக்க நிக்கினமே:)..

asha bhosle athira said...

///நெல்லைத் தமிழன் said...
@அதிரா - "1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்" - எனக்கு உங்கள் எழுத்துப்பிழைகளைத் திருத்த நேரமில்லை. ஏஞ்சலின் வேற எப்போதும் A & E ல பிஸி போலத் தெரியுது. இனிமேல், இதனை காப்பி-பேஸ்ட் செய்து போடுங்கள்.

"1500 மில்லி மீட்டர் ரேசில், 2 பேர் ஓடி, 2ஆவதா வந்தேன்"///

ஹா ஹா ஹாஅ யூ ரூஊஊஊஊ நெல்லைத்தமிழன்?:)).. இவர் “எழுத்து” நாடி பார்க்கும் ஜோசியரா இருப்பாரோ?:)).. என்னாதூஊஊஊஊஊஉ மில்லி மீற்றராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?:)

asha bhosle athira said...

///Angelin said...
@நெல்லைத்தமிழன் :)))) ஹா ஹா அதை நான் எழுத நினைச்சேன் இன்னொரு கமெண்ட்டில் :) நீங்க சொல்லிட்டிங்க
ஒரே அலைவரிசை இல்ல :) பூனையை ஓட்டறதில் ..///

ஆமா ஆமா.. என்னா ஒரு சங்கோஷம்:)) அது அலைவரிசை இல்ல சுனாமிவரிசையாக்கும்:)... சே..சே... இங்கின ஆரும் நமக்குச் சப்போர்ட்டுக்கு வரமாய்ட்டாங்களாமே:) மனம் வெறுத்துப்போய் தேம்ஸ்ல குதிக்கப்போனேன்ன்:).. அப்போதான் நினைவு வந்துது இன்று செவ்வாய்க்கிழமை.. நாள் கூடாதென:).. செவ்வாயில தனியக் குதிக்கப்பூடாதாம்ம்ம்.. அதான் அஞ்சுவைத் தேடி இங்கின வந்தேன்ன்:).

Asokan Kuppusamy said...

அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் பிளாக்கின் சார்பில் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் செலுத்துகிறேன்

கோமதி அரசு said...

இரண்டு கதையுமே நன்றாக இருக்கிறது.
முதல் கதை அருமை.

G.M Balasubramaniam said...

இன்னும் எத்தனைஉ சீதைகள் மன்னிக்கக் காத்திருக்கிறார்களோ அப்பாதுரையும் வந்திருக்கிறாரே

திண்டுக்கல் தனபாலன் said...

கவிஞர் கே.அசோகன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

// ஏதோ ஒரு பயத்தில் பூசி மொழுகி கமெண்ட்ஸ் கொடுத்துள்ளனர்.// என்றும் சொல்லும் பின்னூட்ட புயலை காணமே... கஷ்டம்டா சாமி...!

ஓஹோ... asha bhosle athira பதிவு இல்லையோ...

நன்றிகள்...

காமாட்சி said...

இரண்டு கதைகளும் அருமையாக இருக்கிறது. நல் முத்துகள். வாழ்த்துகள். அன்புடன்

Madhavan Srinivasagopalan said...

// .இவங்க லாஸ்ட்ல செகண்டா வந்ததை பெருமையா சொல்றாங்க :) // அதுலயும்... ரெண்டே ரெண்டு பேர்தான் கலந்துக்கிட்டாங்களாம்...

asha bhosle athira said...

/////Madhavan SrinivasagopalanMay 31, 2017 at 10:44 AM
// .இவங்க லாஸ்ட்ல செகண்டா வந்ததை பெருமையா சொல்றாங்க :) // அதுலயும்... ரெண்டே ரெண்டு பேர்தான் கலந்துக்கிட்டாங்களாம்...////

ஹையோ ஹையோ உண்மை வாசல் படியைத் தாண்ட முன் பொய் ஊரெல்லாம் சுத்திடுமாமே அப்பூடி ஆச்சே என் நிலைமை....

இருங்கோ இதுக்குல்லாம் காரணமான அஞ்சுவையும் நெ. தமிழனையும் முதலில் தேம்ஸ்ல தள்ளிப்போட்டுத்தான் இன்று நெஸ்ட்டமோல்ட் ரீ குடிப்பேஏஎன்ன் இது அந்த 2 வது கதையில் வந்த சீதைமேல் சத்தியம்ம்ம்ம்:).

asha bhosle athira said...

கெள அண்ணனைக் கடந்த 48 மணிநேரமாகக் காணவில்லை, கடசியாகப் பார்த்தபோது கையிலே ரோசாப்பு வைத்துக்கொண்டு ஸ்ரீராம் என்பவரோடு பேசிக்கொண்டிருந்தார்ர்ர்ர்:)

அவரைக் கண்டுபிடித்து வருவோருக்கு, அஞ்சுவின் அடுத்து வரவிருக்கும் ரெசிப்பி.... டிஸ் உடன் வழங்கப்படும்ம்ம்ம்ம்ம்:)

Angelin said...

பூனைக்கு மூக்கில் வேர்த்திருக்கே :) நான்----------------- மோர்க்குழம்பு போஸ்ட் போடப்போற விஷயம் :)
எனக்கொரு டவுட் உங்களோட ஒடியல் கூழ் ரெசிப்பி பார்த்தே மயங்கி இருப்பார் :) எதுக்கும் அன்டிஸிபேட்டரி அங்கில்சிபேட்டரி :) பெயில் எடுத்து வைங்க அதிரா :) ஸ்கொட்லன்ட்யார்ட் நேரே அங்கே வரங்கன்னு பிபிசில flash நியூஸ் போகுது

Chellappa Yagyaswamy said...

கருவேப்பிலை கதைதான் எனக்கு பிடித்த து. சரி, அடுத்த மன்னிப்பு கதையை எந்த மகானுபவன் எழுதப்போகிறாரோ என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.- இராய செல்லப்பா சென்னை

Bagawanjee KA said...

என் வீட்டு சீதையும் இப்படித்தான் ,ஜோக்காளியை விட வெங்காயம் உரித்து தருவதுதான் முக்கியம் :)

காதலித்து விட்டு இப்படியா கழுத்து அறுப்பது :)

kg gouthaman said...

அடுத்த புதன்கிழமை புதிரோடு வரப்பார்க்கிறேன்.

Asokan Kuppusamy said...

மிகவும் நன்றி

Asokan Kuppusamy said...

மிகவும் மகிழ்ச்சி

Asokan Kuppusamy said...

மிகவும் மகிழ்ச்சி தங்கள் கருத்துக்கு

Asokan Kuppusamy said...

மிகவும் நன்றி

Asokan Kuppusamy said...

மிகவும் மகிழ்ச்சி

Asokan Kuppusamy said...

Thanks you for comments

Asokan Kuppusamy said...

Thanks you for comments

Asokan Kuppusamy said...

மிகவும் மகிழ்ச்சி

Asokan Kuppusamy said...

சந்தேகம் பிசாசுதான்

Asokan Kuppusamy said...

உண்மைதான்

Asokan Kuppusamy said...

மிகவும் நன்றி

Asokan Kuppusamy said...

மிகவும் நன்றி

Asokan Kuppusamy said...

மிகவும் நன்றி

Asokan Kuppusamy said...

மிகவும் நன்றி

Asokan Kuppusamy said...

மிகவும் நன்றி

Asokan Kuppusamy said...

மிகவும் மகிழ்ச்சி தங்கள் கருத்து

Asokan Kuppusamy said...

மிகவும் நன்றி

Asokan Kuppusamy said...

மிகவும் நன்றி

Asokan Kuppusamy said...

மிகவும் மகிழ்ச்சி தங்கள் கருத்து க்கு

Asokan Kuppusamy said...

வாருங்கள்

Bhanumathy Venkateswaran said...

இரண்டாவது கதையில் சீதை மன்னித்ததை விட,முதல் கதையில் மன்னித்தது இயல்பாக இருந்தது.

Asokan Kuppusamy said...

பானுமதி வெங்கடேசன் அவர்களுக்க மிக்க நன்றி

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!