Thursday, June 1, 2017

பாஹுபலி - ஒரு பாப்கார்ன் அனுபவம்முதலில் உற்சாகமாக இருந்தாலும் நாள் செல்லச்செல்ல ஒரு தயக்கமும், பதட்டமும் ஏற்பட்டது உண்மை.    

 
வாய்தவறி ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டேன்.   மகன்கள் என்னை ஒரு வழி பண்ணி விட்டார்கள்.

 
அவசரப்பட்டு விட்டோமோ? பேசாமல் வழக்கம்போலவே இருந்திருக்கலாமோ?


கிளம்பிச் செல்கையில் கூட கேன்சல் செய்துவிட்டு வீடு திரும்பி விடலாமே என்கிற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.  மகன்கள், பாஸுடன் திரு திரு என்று மரியாதையாக விழித்துக் கொண்டு மௌனமாக சாலையில் பயணித்தேன்.  சாலையில் பதட்டமின்றி நடமாடுவோரைப் பார்த்தபோது எரிச்சலும், தைரியமும் ஒருங்கே எழுந்தன.


சுமார் 15 வருடங்களுக்குப் பின்னர் செல்கிறேன்.  அதுவும் சென்னையில் இப்போதுதான் முதல்முறை.  மதுரை, தஞ்சையில் தியேட்டர் தியேட்டராக அலைந்திருக்கிறேன்.  டச் விட்டுப் போச்சு பாருங்கள்.  அதான் டென்ஷன்!

ம்ஹூம்...  பத்து ரூபாய், இருபது ரூபாயில் படம் பார்த்த நாட்கள் நினைவில் நிற்க, இது ஒரு புதிய அனுபவம்.  சத்யம் தியேட்டர், சென்னை.
Image result for sathyam theatre images

குடிதண்ணீர் உட்பட எதுவுமே உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.  நான் வெடிகுண்டுடன் வந்திருக்கிறேனா என்று ஒருவர் சோதித்து உள்ளே அனுப்பினார்.  மகன் 'தன்காலத்து'ப் பெருமையைக் காட்ட இரண்டு வாளிகளில் பாப்கார்ன் வாங்கினான்.  அதில் எதையோ தெளி தெளி என்று தெளித்து வினோத வாசனையில் கொண்டு வந்தான்.  இரண்டு அண்டாக்களில் வெளி நாட்டு பானம் வாங்கி கொண்டான்.
                                            Image result for sathyam theatre popcorn images     Image result for sathyam theatre popcorn images

படம் பார்க்கப் போகிறோமா, இதை எல்லாம் சாப்பிட்டு விட்டுப் படுத்துத் தூங்கப் போகிறோமா என்று சந்தேகம் வந்தது எனக்கு.  செல்பி எடுத்தான்.
 
படம் தொடங்கியதும் என் கைகள் அனிச்சையாக ரிமோட்டைத் தேடின.  "சவுண்டைக் குறைடா"  
Image result for sathyam theatre popcorn images


கொஞ்ச நேரத்தில் பழகி விட்டது.இதன் முதல் பாகம் "ஹோம் தியேட்டரி"ல்தான் பார்த்தேன்!!  இதன் பிரம்மாண்டம் கருதி தியேட்டரில் பார்க்கும் ஆசை வந்தது.  காஸ்ட்லி ஆசை!


ஆமாம், படத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் இல்லையா?
 

Image result for bahubali 2 images
காரைக்குடி விருந்தில் போடப்படும் வாழை இலை போல மிகப்  பெரிய இலை போட்டு, அதன் நடுவில் ஒரு சோறு, ஒரு கறி, ஒரு கூட்டு மட்டும் பரிமாறினால் எப்படி இருக்கும்?  


அப்படித்தான் இருந்தது பாஹுபலி 2 பார்த்தபோது!  கண்களை அறையும் பிரம்மாண்டம்.  
Image result for bahubali 2 images


ஆனால் அந்த ப்ரம்மாண்டத்துக்குக்கான கதை மிஸ்ஸிங்! 


குறிப்பாக க்ளைமேக்ஸ். 


ஃபிளாஷ்பேக்கில்  அவ்வளவு நீளமான ஒரு கதையைச் சொல்லி விட்டு, எங்கே மூன்றாம் பாகம் எடுக்க வேண்டி வந்து விடுமோ என்று பயந்த மாதிரி பொசுக்கென முடிந்து விடுகிறது க்ளைமேக்ஸ்.  அதுவும் நம்ப முடியாத காட்சி அமைப்புகளுடன்.மதம் பிடித்த யானையும், பல்வாள் தேவனின் வாகனமும் இது கிராபிக்ஸ், இது கிராபிக்ஸ் என்று சிரிக்கின்றன.  ஆனால் என்ன, படம் முழுக்க பிரம்மாண்ட கிராஃபிக்ஸ்!கதாநாயகன் பிரபாஸ் அழகு, கவர்ச்சி.  அப்பா ப்ரபாஸ்தான் எனக்குப் பிடித்திருந்தது.  பிரபாஸ்
பல்லாயிரம் இளம்பெண்களின் கனவை ஆக்ரமித்திருப்பார்.  

Image result for bahubali 2 images 
  Image result for bahubali 2 imagesபிரபாஸும், ராணா டகுபதியும் மோதி உடையும் பிரம்மாண்ட சிலைகளும் கட்டிடங்களும் புன்னகைக்க வைக்கின்றன.  அம்புமழை பொழிந்து முதுகையே மூடினாலும் முட்களை பிடுங்கி எறிவது போல எறிந்துவிட்டு பிரபாஸ்  அடுத்த கட்டத்துக்கு நகர்வதும் அங்ஙனமே!

Image result for bahubali 2 images        

அனுஷ்கா ...  ரொம்ப எதிர்பார்த்து விட்டேனோ!  ஆனாலும் அசத்தல்தான்.
Image result for bahubali 2 images


நானும் பார்த்து விட்டேன் பாஹுபலி 2 - அதுவும் தியேட்டரில்..அடுத்த 15 வருடங்களுக்குப் போதும்!

தமிழ்மண வாக்களிக்க அன்புடன் இங்கு க்ளிக்கி வாக்களிக்கவும்!

75 comments:

KILLERGEE Devakottai said...

ரிமோட்டை தேடியதையும் அண்டாக்களில் பாணம் இரண்டையும்இரரசித்தேன்.
ஸ்ரீராம் ஜி த.ம. லிங்க் பயனுள்ளது.

நெல்லைத் தமிழன் said...

எங்கள் தங்கத் தலைவி தமன்னாவைப் புறக்கணிக்கும் விதமாக பாஹுபலி-1 ஐ வீட்டில் பார்த்துவிட்டு, இஞ்சி இடுப்பழகியால் இளமை தொலைத்த அனுஷ்காவைப் பார்க்க பாஹுபலி-2வை சத்யம் தியேட்டரில் பார்த்த குற்றத்துக்காகத்தான், வாளி பாப்காரன், அண்டா பானம் செலவா?

நம்ம ஊரில் தியேட்டர் கொள்ளை ஒழிந்தால்தான் படவுலகம் செழிக்கும். இல்லைனா ஹோம் தியேட்டர்தான் கதி.

த.ம +1

Bagawanjee KA said...

பசங்க சென்று பார்த்தாலே போதும் ,நான் பார்த்த மாதிரிதான் :)

திண்டுக்கல் தனபாலன் said...

15 வருடங்களுக்குப் பிறகு... இது தான் பிரமாண்டம்...!

Anandaraja Vijayaraghavan said...

படம் பார்க்கப் போகிறோமா, இதை எல்லாம் சாப்பிட்டு விட்டுப் படுத்துத் தூங்கப் போகிறோமா என்று சந்தேகம் வந்தது //hahaha

Avargal Unmaigal said...

போன வாரமே எங்கள் டிவியில் (on demand) விட்டாலும் கடந்த ஞாயிறு அன்று முதல் பகுதியையும் திங்கள் அன்று மீதியையும் பார்த்து கிழ்த்தோம் பாகுபலி 2 என்னை கவரவில்லை

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹாஹ் ஸ்ரீராம் என்ன அதிசயம் பாகுபலியின் வீரமோ, மந்திரமோ, மாயையோ..டெக்னிக்கோ.. பாகுபலி கொற்றம் வாழ்க! வளர்க! இதற்காகவே மூன்றாவது பகுதி வர வேண்டும்! ஹஹ என்னனு கேக்கறீங்களா...எங்கள் ப்ளாகின் தமிழ்மணப்பட்டை பளிச்சென்று தெரிகிறதே!!! அதுவும் போட்டவுடன் விழுந்துவிட்டதே!! ஓட்டு!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹஹ் வாளி, அண்டா, ரிமோட்டைத் தேடியது ஐயோ செம ரொம்ப சிரிச்சுட்டேன் ஸ்ரீராம்....பாகுபலியை விட உங்கள் பதிவு ரொம்பப் பிடித்துவிட்டது...இருங்க அடுத்து வாசிச்சுட்டு வரேன்....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

படம் பார்க்கப் போகிறோமா, இதை எல்லாம் சாப்பிட்டு விட்டுப் படுத்துத் தூங்கப் போகிறோமா என்று சந்தேகம் வந்தது // ஹஹஹஹஹ் ஐயோ ஸ்ரீராம்....உண்மையைச் சொல்லணும்னா நான் தியேட்டர்ல கொஞ்சம் தூங்கிட்டேன் பா...ஹஹஹ்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எனக்கும் அப்பா ப்ரபாஸைத்தான் பிடித்தது. ஐயோ ஸ்ரீராம் நாம இதைச் சத்தமா சொல்லக் கூடாதுபா....அப்புறம் நம்மை ஓல்டிஸ்னு கலாய்ச்சுடுவாங்க!!!!ஹிஹிஹி....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

தியேட்டர்கள் பகல் கொள்ளையர்களே என்றே தோன்றுகிறது. அதுவும் வாட்டர் பாட்டில் கூட அனுமதிக்கப்படுவதில்லை எனும் போது அதையும் காசு கொடுத்து வாங்கணும்னா இதெல்லாம் ஓவரா இல்லை? சரி ஏன் இப்படி அனுமதி இல்லைனு தெரியலை...அங்க வாங்கறதையும் எல்லாரும் தியேட்டர்ல சீட்டுக்கு அடில எறிஞ்சுட்டுத்தானே போறாங்க? குப்பைத் தொட்டியிலா போடுறாங்க நம்ம மக்கள்??!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எனக்கும் பாகுபலி 2 ரசிக்கவில்லை....பிரம்மாண்டம் மட்டும் தான்...கிராஃபிக்ஸ் எல்லாம் ரசிக்கலாம் என்றாலும் ஆனால் அதுவும் அளவுக்கு மீறும் போது ஆவ்வ்வ்வ்வ்வ்வ் தான். எனக்குக் குற்றம் 23 பிடித்திருந்தது.

கீதா

middleclassmadhavi said...

என் மகனை முதல்முறை தியேட்டர் கூட்டிப் போனது ஞாபகம் வந்தது - சவுண்டைக் குறை என்று ஒரே ஆர்ப்பாட்டம்! நடுவில் விளக்கங்கள் கேட்டல் வேறு!
ஒரு பாப்கார்ன் தான் உங்களுக்குக் கிடைத்ததா? :-))
எனக்கும் அப்பா ப்ரபாஸ் தான் பிடித்தது. ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு எப்படி?

ராஜி said...

நான் இன்னும் பார்க்கல. டிவில போடும்போது பார்த்திக்குறேன்.

நெல்லைத் தமிழன் said...

இது தில்லையகத்து கீதா ரங்கனுக்கு

சினிமா தியேட்டர் (உதாரணம் பி.வி.ஆர்) க்ரூப்ல, 5 பேர் மட்டும் ஒரு ஷோவுக்கு பதிவு செய்திருந்தாலும், பெரிய குரூப்கள், ஷோவை கேன்சல் செய்வதில்லை. இட வாடகை, மற்ற வசதிகள் இவைகளெல்லாம் ஓரளவு கான்ஸ்டன்ட். நிறைய படங்களும் பப்படம்தான். அப்போ எப்படி அவங்களுக்கு லாபம் வரும்? அது கேன்டீன் லீசுக்கு விடுவதால்தான். சினிமா டிக்கெட் ஓரளவுக்குமேல் விலை ஏற்ற முடிவதில்லை. அதனால், கேன்டீன் ஆட்கள், பெப்சி 110ரூ, பாப்கார்ன் 150 ரூ என்று கொள்ளை லாபம் வைத்து விற்கிறார்கள். Mallகளும், கார் பார்க்கிங்குக்கு ஒரு மணிக்கு 50 ரூ என்று கொள்ளையடிப்பதில்லையா (இங்கெல்லாம், Mallனா பார்க்கிங் உண்டு. ஒரு பைசாவும் கிடையாது. வெறும் விண்டோ ஷாப்பிங் செய்துவிட்டுவரலாம்-ஓசி ஏர் கண்டிஷன், மற்றும் பார்வைக்கு 'குளு குளு'-இப்போதான் அர்த்தம் புரிஞ்சிக்கிட்டேன். என்ன, Mall functionஆகாத நடு இரவு, கார் பார்க் செய்யக்கூடாது. எதுக்குன்னா, சில பேர், CAR SALE என்று போர்டு போட்டு காரை அங்க அங்க நிறுத்திடுவாங்க. அதைத் தடுப்பதற்காக)

திருவான்மியூர் தியேட்டரில் எங்களை ஒன்றும் சொல்லாமல், உணவுப்பொருட்களை (ஒண்ணுமில்லை. தண்ணி பாட்டில்) கொண்டுபோக அனுமதித்தார்கள்.

ஸ்ரீராம் - ரம்யா கிருஷ்ணன் நடிப்பைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? அவங்களையும், நாசரையும், சத்யராஜையும் விட்ட வேறு யாரும் அந்த அந்த வேடங்களுக்குப் பொருத்தமானவர்கள் என்று எண்ணத்தோன்றவில்லை. அஃப்கோர்ஸ், அவந்திகா வேடத்துக்கும்தான். ரம்யா கிருஷ்ணன் வேடத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தால், நல்ல காமெடிப் படம் பார்த்த உணர்வு வந்திருக்கும்.

asha bhosle athira said...

ஆவ்வ்வ்வ்வ்வ் ஸ்ரீராம்ம்ம்ம் தியேட்டர்ருக்குப் போய் அனுஸ்காவைப் பார்த்து விட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சேஏஏ கடவுளே ஒரு அந்தர அவசரத்துக்கு ஒரு வார்த்தை பேசமுடிவதில்லை இந்த “டங்கை”:) வைத்து கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... பாகுபலி படம் பார்த்துவிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

இனி அடுத்த 15 வருடத்தாலயாஆஆஆஆஅ? அப்போ அனுஸ்காவுக்கு வயசாகிடும்ம்ம்ம்...

asha bhosle athira said...

//நெல்லைத் தமிழன் said...// ரம்யா கிருஷ்ணன் வேடத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தால், நல்ல காமெடிப் படம் பார்த்த உணர்வு வந்திருக்கும்.////

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இவர் ஸ்ரீதேவியை இன்னும் விடுவதாயில்லை.. இனி ஹன்ஷிகா படம் பாருங்கோ நெல்லைத்தமிழன்.. ரோமியோ யூலியட் பார்த்தனீங்களோ.. தியேட்டரில் பார்த்தோம்ம் என்னா கொமெடிப்படம்.. ஹா ஹா ஹா:).

asha bhosle athira said...

//Thulasidharan V Thillaiakathu said...
படம் பார்க்கப் போகிறோமா, இதை எல்லாம் சாப்பிட்டு விட்டுப் படுத்துத் தூங்கப் போகிறோமா என்று சந்தேகம் வந்தது // ஹஹஹஹஹ் ஐயோ ஸ்ரீராம்....உண்மையைச் சொல்லணும்னா நான் தியேட்டர்ல கொஞ்சம் தூங்கிட்டேன் பா...ஹஹஹ்

கீதா//

ஹா ஹா ஹா என்னைப்போல ஒருவர்:)

asha bhosle athira said...

இஞ்சி இடுப்பழகி... நடிச்சதால, குண்டான அனுஸ்காவை மெலிய வைக்க முடியவில்லையாம்... அதனாலயே இப்படம் அதிகம் தாமதமானதாக கேள்விப்பட்டேன்.

இஞ்சி இடுப்பழகி படம் பார்த்ததும் ரிவியூ ............... ஹையோ ஏன் ஓடுறீங்க?:)... எழுத நினைச்சேன்ன்ன் எனச் சொல்ல வந்தேன்ன்.. ஆனா எழுதாமல் விட்டு விட்டேன்ன்.. நல்ல படம்.. பாருங்கோ ரைம் இருப்பின்.

asha bhosle athira said...

//நெல்லைத் தமிழன் said...
எங்கள் தங்கத் தலைவி தமன்னாவைப் புறக்கணிக்கும் விதமாக பாஹுபலி-1 ஐ வீட்டில் பார்த்துவிட்டு, இஞ்சி இடுப்பழகியால் இளமை தொலைத்த அனுஷ்காவைப் பார்க்க//

ஹா ஹா ஹா நெ.தமிழன் பொயிங்கியிருப்பதை இப்போதான் பார்த்தேன்ன்ன்.. ஹா ஹா ஹா குண்டானாலும் அனுஸ்கா அழகுதேன்ன்ன்ன்ன்ன்:)

Angelin said...

அஆவ் !! அனுஷ்கா பாஹுபலில தலைல வச்சிருந்த ரோஜா நம்ம ஏரியாவில் வந்திருக்கு :) ஓடிப்போய் பாருங்க

Angelin said...

அப்படியே தமன்னா தலைல இருந்த ரோஜாவையும் நம்ம ஏரியாவில் வந்திருக்கு அதையும் பாருங்க

Angelin said...

ராதா ஸ்ரீதேவி வச்சிருந்ததும் ..ரோஜாவை சொன்னேன்அங்கிருக்கு போய் பாருங்க

(அம்மாடி ஒரு வழியா எல்லார் ரசிகர்களையும் ஒண்ணா சேர்த்து அங்கே அனுப்பிட்டேன் :))))

Angelin said...

@athiraa // ஹா ஹா ஹா குண்டானாலும் அனுஸ்கா அழகுதேன்ன்ன்ன்ன்ன்:)//

ஒரு -----இன்னொரு ---- பாராட்டுறாங்க :)))))))))

விஜய் said...

ரசித்தேன்,அருமை
தமிழ் செய்திகள்

asha bhosle athira said...

ரோசாப்பூஊஊஊஊஊஊ ரோசாப்பூஊஊஊஊஊஊ அஞ்சுவின் ஓஜாப்பூஊஊஊஊஊஉ வெளியே வந்துவிட்டது.. இங்கின இடது பக்கம்... புளொக் லிஸ்ட்ஸ் ஐப் பாருங்கோ.... வாடாத ரோசாப்பூஊஊஊஊஊஉ நா ஒண்ணு பார்த்தேன்ன்ன்ன்ன்ன்:)..

Angelin said...

மென்மையான கண்டனங்கள் :) @ஸ்ரீராம் எனக்கு அனுஷ்கா கட்டியிருக்கும் புடவை க்ளியரா தெரில அது turquoise ப்ளூவா இல்ல பெர்சியன் ப்ளூவானு தெரில :)

சென்னை பித்தன் said...

அனுஷ்காகத்தானே போனீங்க?!

நல்ல அனுபவம்
நான் சத்யம் போனதே இல்லை!

Srikanth said...

//படம் பார்க்கப் போகிறோமா, இதை எல்லாம் சாப்பிட்டு விட்டுப் படுத்துத் தூங்கப் போகிறோமா என்று சந்தேகம் வந்தது எனக்கு.// Anushka vera 'Kanna nee thoongada' nu thaalatu padina ;)

Madhavan Srinivasagopalan said...

// படம் தொடங்கியதும் என் கைகள் அனிச்சையாக ரிமோட்டைத் தேடின. "சவுண்டைக் குறைடா" // Ha h aha..

பாரதி said...

கொடுமை தியேட்டரில் நுழையும்போது தலைமுதல் கால்வரை 'தடவி' அனுப்புவது...!!!!

துரை செல்வராஜூ said...

விருமாண்டி தான் கடைசியாக தியேட்டரில் பார்த்த படம்..

அதற்குப் பின் ஒரு சில புதிய படங்கள் - ஓடித் தேய்ந்த பிறகு!.. (நன்றி - யூடியூப்!..)

பாகுபலி முன்னது - அபுதாபியில் - மகள் வீட்டு Home Theater ல்!..

இங்கே குவைத்தில் பாகுபலியைப் பார்க்க படையெடுத்துச் சென்றார்கள்..

பாகுபலியைப் பார்த்த தங்களது அனுபவம் இனிமை..

Asokan Kuppusamy said...

அருமையான விமர்சனம்

Bhanumathy Venkateswaran said...

என்னைப்போன்றவர்கள் மாய்ந்து மாய்ந்து விமர்சனம் எழுதி, நன்றாக இருக்கிறது என்று சொன்ன மாநகரம், துருவங்கள் பதினாறு, ப.பாண்டி போன்ற படங்களைப் பார்க்காமல் பாகுபலி-2 ஐ (அனுஷுக்காவிற்க்காகத்தானே.?) ;) பார்த்த உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. ;)

மனோ சாமிநாதன் said...

முதல் பாகத்தில் அனுபவித்த பிரமிப்பு இரண்டாம் பாகத்தில் சற்று குறைவு தான்! நீங்கள் சொன்ன மாதிரி, flashback முடியும்போது படம் முடிந்த உணர்வு வந்து விடுகிறது! அதற்கப்புறம் கிளைமாக்ஸ் சண்டையெல்லாம் ரொம்பவும் நீளம்!

ஆனால் அதையெல்லாம் மீறி கிராபிக்ஸின் பிரம்மாண்டம் அசத்துகிறது!

Geetha Sambasivam said...

பாஹுபலி பார்த்தாச்சா? நாங்க கிளம்பறதுக்கு முதல்நாள் பையர் பாஹுபலி காசெட் வாங்கி வந்தார். க்ர்ர்ர்ர்ர்ர். பார்க்க முடியலை. பாஹுபலி 1 தொலைக்காட்சியில் பார்த்தாப்போல் இதையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கலாம். வெளிநாடு மாதிரி இங்கேயும் பக்கெட் சைஸ் பாப்கார்ன் அண்டா சைஸ் குளிர்பானம் வந்தாச்சா?

Angelin said...

//வாய்தவறி ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டேன். மகன்கள் என்னை ஒரு வழி பண்ணி விட்டார்கள்.//
ஹாஹா :) நல்லதுதான் நீங்க சொன்ன வாக்கை மீறாமல் கூட்டிட்டு போனது .
நான் தியேட்டரில் தமிழ் படங்கள் பார்த்து ----- ----- வருஷங்கள் ஆகுது .இங்கே மகளுடன் கார்ட்டூன் டிஸ்னி படங்களை மட்டுமே பார்த்தோம் தியேட்டரில் ..கேரளநண்பர் ஒருவர் பாஹுபலி எல்லாரும் ஒண்ணா பார்க்கலாம்னு சொன்னார் பக்கத்து சிட்டில ..நமக்கு ஹோம் தியேட்டரே போதும் :)நான்லாம் மல்ட்டி டாஸ்க்கிங் செஞ்சுட்டே படம் பார்ப்பேன் :)

அப்புறம் நீங்க அண்டால வாங்கின பானத்தை இப்போதான் செடிக்கு வார்த்திட்டு வந்தேன் என்னமா பூச்சிங்க துண்டை காணோம் துணிய காணோமுன்னு ஒடிச்சி தெரியுமா :)

//அடுத்த 15 வருடம் // பிறகு அனுஷ்க்காவின் மகள் அப்போ வரும் படத்தில் நடிக்கக்கூடும் ..

முக்கிய குறிப்பு ... நான் ஹோம் தியேட்டரில் இன்னும் முதல் பகுதியையே பார்க்கலை :)

Ramani S said...

கடைசிச் சண்டை
எரிச்சலூட்டும் அளவுக்கு
(இங்கும் (அமெரிக்காவில் )
15 டாலர் டிக்கெட் எடுத்துப் பார்க்கும்படியானது
உறுத்திக் கொண்டே இருக்கிறது
ஆரம்பத்தில் நானும் பழைய 70 பைசாவில்
பார்த்துப் பழகியவன்என்பதால் )

கோமதி அரசு said...

நானும் தியேட்டர் போய் வருடம் பல ஆகிவிட்டது.
சத்தம் பயங்கரமாய் இருப்பதாய் நானும் நினைப்பேன்.
சிவாஜி போனேன் கடைசியாக .
முதல் பாகம் தொலைக்காட்சியில் வந்ததை இன்னும் பார்க்கவில்லை.
பார்க்க தோன்றவில்லை.
குடும்பத்துடன் போய் வந்தது மகிழ்ச்சிதானே!

ஏகாந்தன் Aekaanthan ! said...

கடைசியாக தியேட்டரில் பார்த்தபடம் The man who knew infinity -கணிதமேதை ராமானுஜம் பற்றிய தரமான படம். பாஹுபலிகளுக்கு பலியாகும் உத்தேசமில்லை!

கோமதி அரசு said...

//மகன் 'தன்காலத்து'ப் பெருமையைக் காட்ட இரண்டு வாளிகளில் பாப்கார்ன் வாங்கினான்.//

அருமை.

Chellappa Yagyaswamy said...

அனுஷ்கா மிகவும் அழகு என்கிறார்களே, உண்மையா?

ஸ்ரீராம். said...

சிரித்து ரசித்ததற்கு நன்றி நண்பர் கில்லர்ஜி.

ஸ்ரீராம். said...

வாங்க நெல்லை.... தங்கத்தலைவி தமன்னாவா? ஆ!

ஓகே, அவங்க இருக்கற ஒல்லிக்கு எங்க ஹோம் தியேட்டரே போதும். அனுஷ் இருக்கற குண்டுக்கு தியேட்டர் ஸ்க்ரீன் தேவைப்பட்டது. ஓகேயா!

ஸ்ரீராம். said...

வாங்க பகவான் ஜி. நானும் அப்படித்தான். இந்த முறைதான் ஒரு ஆர்வக் கோளாறு!

ஸ்ரீராம். said...

ஹா... ஹா... ஹா... வாங்க திண்டுக்கல் தனபாலன்.. நன்றி!

ஸ்ரீராம். said...

வாங்க ஆவி. நன்றி ரசித்ததற்கு.

ஸ்ரீராம். said...

வாங்க மதுரை.. தியேட்டரில் பார்த்தால் அந்த ப்ரம்மாண்டமாவது ப்ரம்மாண்டமாகத் தெரியுமோன்னுதான்........!!

ஸ்ரீராம். said...

வாங்க கீதா ரெங்கன். இதற்காகவே மூன்றாவது பகுதி வரவேண்டுமா? என்ன ஒரு கொலைவெறி!

//பாகுபலியை விட உங்கள் பதிவு ரொம்பப் பிடித்துவிட்டது..//

பாகுபதிவு!!! நன்றி கீதா.

தியேட்டர் கொள்ளையைப் பற்றி நாம் பேசிப் பயனே இல்லை. திருத்த முடியாத நிலைக்குச் சென்று விட்டது. பாஹுபலி கலெக்ஷனை விட பாப்கார்ன் கலெக்ஷன் அதிகமாமே...!

ஸ்ரீராம். said...

வாங்க மிகிமா...

//ஒரு பாப்கார்ன் தான் உங்களுக்குக் கிடைத்ததா? //

ஹா... ஹா... ஹா.. தலைப்பிலிருந்து கேட்கிறீர்கள்! முன்னொரு காலத்தில் இந்த சத்தத்தைத் தாங்கிய காதுகள்தான் என் காதுகளும். பழக்கம் போய்விட்டது!

ஸ்ரீராம். said...

வாங்க ராஜி.. நன்றி.

ஸ்ரீராம். said...

மீள்வருகையில் கீதாவுக்கு பதிலில் நெல்லை...

//சினிமா டிக்கெட் ஓரளவுக்குமேல் விலை ஏற்ற முடிவதில்லை.//

என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? ரிலீஸான முதல் மூன்று நாட்களில் அவர்கள் அடிக்காத கொல்லையா?!! திருவான்மியூர் தியேட்டர் வாழ்க.

ரம்யா கிருஷ்ணன் வேடத்தில் ஸ்ரீதேவியா! ஐயோ.. புலி (பூனை!!) நினைவிருக்கிறதா? ரகி,சரா, நாசர் எல்லாம் ஓகே தான். ரசிக்க முடிந்தது. அப்பா பிரபாஸ் கூடப் போகும்போது சராவின் வழிசல் கடுப்ஸ். கொலையே செய்யும் அடிமைத் தளபதி பின்னர் பொங்கியெழுந்து "சிவகாமி" என்று அலறுவது ஒரு நகைச்சுவை!

ஸ்ரீராம். said...

வாங்க ஆஷா போஸ்லே.. அனுஷ் பார்க்கவா தியேட்டர் போனேன்? கர்ர்ர்ர்.... ஆமாம், நெல்லை கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஸ்ரீதேவியைப் ப்ரமோட் செய்கிறார்! இஞ்சி இடுப்போ பானை இடுப்போ... அனுஷ் அனுஷ்தான்! ஹிஹிஹிஹி...

ஸ்ரீராம். said...

வாங்க ஏஞ்சல்.. முதல்ல ரோஜா ப்ரமோஷன் வேலையை முடிச்சுட்டீங்க! படம் பாருங்க.. அனுஷ் கட்டியிருக்கும் புடவை நிறம் சரியாகத் தெரியும்!

ஸ்ரீராம். said...

வாங்க விஜய்.. நன்றி.

ஸ்ரீராம். said...

வாங்க சென்னை பித்தன் ஸார்.. நிசம்மா படத்தோட பிரம்மாண்டத்துக்காகத்தான் போனேன். உள்ளங்கையைக் காட்டுங்க.. கிள்றேன்!

:))

ஸ்ரீராம். said...

அடடே... ஸ்ரீகாந்த்... வெல்கம்... அடிக்கடி வரணும் சரியா?

ஸ்ரீராம். said...

வாங்க மாதவன். ரசனைக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

வாங்க பாரதி.. அந்தக் காலத்துல இந்தக் கருமம் எல்லாம் கிடையாது. இப்போதான் சகட்டுமேனிக்கு சந்தேகப்படறாங்க!

ஸ்ரீராம். said...

வாங்க துரை செல்வராஜூ ஸார். நானும் எப்பவும் ஹோம் தியேட்டர்தான். இந்த முறைதான்!

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.

ஸ்ரீராம். said...

வாங்க பானுமதி மேடம்.. துருவங்கள் 16 ஏற்கெனவே பார்த்து விட்டேன். பவர் பாண்டி வீட்டில் இருக்கிறது. பார்க்க வேண்டும்! அனுஷ் இந்தப் படத்தில் சுமாராகத்தான் இருப்பார் என்று தெரிந்ததுதானே போனேன்? (மண் ஒட்டலை பாருங்க)

ஸ்ரீராம். said...

வாங்க மனோ சாமிநாதன் மேடம். நீங்களும் அதே கருத்தில் இருப்பதற்கு மகிழ்ச்சி.

ஸ்ரீராம். said...

வாங்க கீதாக்கா.. பா....ர்....த்...து...ட்...டே.....ன்! பக்கெட் பாப்கார்ன், அண்டா குளிர்பானம் கனகாலத்துக்கு முன்னரே வந்தாச்சு. நான்தான் போவதே இல்லையே... போனாலும் சாப்பிடுவதில்லை.

ஸ்ரீராம். said...

வாங்க ஏஞ்சல்.. மகன் அவன் காசிலேயே எல்லா செலவும் செய்தது அவனுக்கு(ம்) பெருமை. சிறுவயதில் அவர்களை நான் சினிமா அழைத்துப் போனது போக, இப்போ அவன் பெருமையா எங்களை அழைத்துப் போய் Film காட்டினான்!!!!!!!

ஸ்ரீராம். said...

அண்டால பானம் பையன் வாங்கி பையன்கள் குடித்தார்கள். நான் நிம்பு பானி! முதல் பகுதி ஹோம் தியேட்டரில் (இன்னும் இருக்கு) முன்...னரே பார்த்து விட்டிருந்தேன்.

ஸ்ரீராம். said...

வாங்க ரமணி ஸார். வருகைக்கும் மனமகிழ்(மதி) கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

வாங்க ஏகாந்தன் ஸார். நான் எங்கே அப்படி தரமான படங்கள் எல்லாம் பார்க்கப் போகிறேன்!

ஸ்ரீராம். said...

வாங்க கோமதி அரசு மேடம். மகிழ்ச்சி.

ஸ்ரீராம். said...

வாங்க செல்லப்பா ஸார். அனுஷ் அழகுன்னுதான் பேசிக்கறாங்க...

G.M Balasubramaniam said...

என் மகனவனது செல்லில் இந்தப்படம் இருப்பதாகக் கூறி பார்க்க விருப்பமா என்று கேட்டான் பிரம்மாண்டப் படங்களை தியேட்டரில் பார்த்தால்தான் நிறைவு.படம் பார்க்கலாமா

பி.பிரசாத் said...

Honest review ...சும்மா ஆஹா ஓஹோன்னு எழுதாம....

சேட்டைக் காரன் said...

படம் பார்த்துக்கொண்டிருந்தபோது திறந்த வாயை மூடவில்லை; முடிந்து வெளியே வந்ததும் ‘படம் எப்படி?’ என்று குடும்பத்தார் கேட்டபோது, மூடிய வாயைத் திறக்கவில்லை. அம்புட்டுத்தேன்! :-)

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான கண்ணோட்டம்
நான் - இன்னும்
படம் பார்க்கவில்லை...
பார்த்த பின்னே...
மிகுதி...

நெல்லைத் தமிழன் said...

சேட்டைக்காரன் - செம 2 வரி FEEDBACK. காலைவாரிவிடற மாதிரி நகைச்சுவையா எழுதறதுல நீங்க கில்லாடிதான்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!