செவ்வாய், 12 ஜூன், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : என் கண்ணில் பாவையன்றோ....... - கீதா ரெங்கன்


என் கண்ணில் பாவையன்றோ.......
கீதா ரெங்கன்  



காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்/ நீயெனது இன்னுயிர் கண்ணம்மா / உன்னைத் தழுவிடிலோ உன்மத்தமாகுதடி / என்னுயிரு நின்னதன்றோ / காலமெல்லாம் உன் மடியில் / மயங்கினேன் உன் மடியில்

“நான் உன் மடில சித்த படுத்துக்கட்டுமாடி கோமளா? நேக்கு ஆசையா இருக்கு!”

“எங்கிட்ட என்ன கேள்வி இது? படுத்துக்கலாமே. ஒங்க மடிதானே இது” கல்யாணமான புதுசுல பதினஞ்சே வயசான கோமளா எம்புட்டு வெக்கத்தோட பதில் சொல்லிண்டே நான் படுத்துக்கறதுக்கு வாகா மடிய வச்சுண்டு என்னை படுக்க வைச்சுண்டா.

நான் இப்படி எத்தனையோ நாள் மனசு சோர்ந்து போறச்சேயும், களைப்பா இருந்தப்பவும் அவ மடில ஸ்வாதீனமா படுத்துண்டுருக்கேன். அவளும் எத்தனை ஆதுரத்தோட என் தலையை வருடிக் கொடுத்துருக்கா. தாய்க்குப் பின் தாரம் னு சொல்லறது சரிதான் போல. அம்மாவோட மடி எத்தனை சுகமோ அதே போலத்தான் இவளோட மடி. அந்த நாளெல்லாம் நினைச்சுண்டா எம்புட்டு சந்தோஷம் வரது. அப்போ படாத கஷ்டமா? எம்புட்டு கஷ்டம் வந்தாலும் கோமளா இருக்கான்னு ஒரு தைரியம் அந்தத் தைரியத்துல ஒரு மனக்களிப்பு. அதுல எல்லாத்தையும் கடந்து வர முடிஞ்சுதே.
  
அப்படிப்பட்டவள் தனக்குனு ஏதாவது கேட்டுருக்காளோனு நினைச்சுப் பாக்கறேன். ம்ஹூம் என் நினைவுக்குத் தெரிஞ்சு ஒண்ணுமே இல்லை. நானோ, குழந்தைகளோ வாங்கிக் கொடுக்கறதுதான். ஆனா அதை எம்புட்டு சந்தோஷமா வாங்கிப்பள். அந்த முகத்துல நிஸ்சலனமான சந்தோஷத்தப் பாக்கணுமே. ஒரு குத்தம் குறை? சொன்னதே இல்லையே.

பாவம். எத்தனைக் கஷ்டப்பட்டிருக்கா. அந்த நாள்ல பெரிசா இருந்த என் குடும்பத்துல வாக்கப்பட்டு அந்தச் சின்ன வயசுலயும் என் அம்மா, அப்பா, அவா அம்மா அப்பா, என் தங்கை, தமக்கைகள் அவா பிரசவம், ஆதரவு இல்லாத சித்தினு எல்லாரையும் கவனிச்சுண்டு, அரவணைச்சுண்டு, அம்புட்டு வேலையும் பாத்துண்டு, இதுக்கு நடுல நா “நேக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்டி” “டி எனக்கு இன்னிக்கு என்னவோ மனசே சரியில்லை” அப்படி இப்படினு சொல்லிண்டு, அவளை சுகிச்சதுல பொறந்த குழந்தைகளையும் கவனிச்சுண்டு எல்லாரோட ஆசைக்கும் ஏத்தபடி சமைச்சுப் போட்டுண்டு, குழந்தைகள் பெரியவா எல்லாருக்கும் இசைஞ்சுண்டு, மனுஷா இருந்தா பிரச்சனைகள் வருமில்லையோ அதையும் சமாளிச்சுண்டு இருந்தாளே தவிர தனக்குனு ஆசை எதுவும் இருந்ததா கூடக் காட்டிண்டதேயில்லையே..

குழந்தைகள் கூடக் கேட்டா, “ஏம்மா எங்களுக்கெல்லாம் விழுந்து விழுந்து உழைக்கிற. எங்க ஆசை அது இதுனு செஞ்சு கொடுக்கற. உனக்குனு ஏதாவது ஆசை இருக்கா இல்லையா? சொல்லுமா நாங்க அதை நிறைவேத்தறோம்”

“நேக்கு எதுக்கு? நீங்க எல்லாம் இருக்கும் போது நேக்கு என்ன வேணும் சொல்லுங்கோ? இதுவே பரம சொர்க்கம். பகவானுக்கு நான் ரொம்பக் கடமைப்பட்டவளாக்கும்.

ஆர் கண் பட்டுதோ. அப்படி இருந்த குடும்பத்துல இப்படி ஒரு வேதனை வரணுமா? முதல்ல பெரிய பொண் போய்ச் சேர்ந்தா. அப்புறம் மாப்பிள்ளை. அந்தக் குழந்தைகள் எங்ககிட்ட வளர ஆரம்பிச்சுது. அப்புறம் ரெண்டாவது மாப்பிள்ளை. அப்போ அவா குழந்தைகள் வளர்ந்துட்டா. அப்புறம் பொண்ணும் போய்ச் சேந்ததும் குழந்தைகள் எங்களோட வந்துட்டா. அடுத்தாப்புல மாட்டுப் பொண்ணும் போய்ச் சேர்ந்தா. எல்லாரும் 50 வயசுக்குள்ள போய்ச் சேந்துட்டா. பேரன் பேத்திகளை வளத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. பிள்ளை, பிள்ளை வயித்துப் பேரன், மாட்டுப் பொண், குழந்தைகளோட நாங்க இருக்கோம். மத்த பேரன் பேத்தி எல்லாம் அடுத்தாப்புலதான் இருக்குகள்.  

பாட்டிக்கு 80 வயசாம். கொண்டாடணும்னு குழந்தைகள் எல்லாம் வந்துருத்து. அதுகளே கேக் எல்லாம் பண்ணி கோமளவல்லி ஸ்ரீநிவாஸன்னு பேர் எல்லாம் எழுதி வைச்சுதுகள். எங்க ரெண்டு பேரையும் மாலை மாத்திக்கச் சொல்லிக் கொண்டாடி, பாட்டிய எனக்குக் கேக் ஊட்டச் சொல்லி, என்னை பாட்டிக்கு ஊட்டச் சொல்லினு… அப்போ இவ வெக்கத்தைப் பார்க்கணுமே. என் மனசும் அந்தக் காலத்துக்குப் போயிடுத்து. வடை பாயாசத்தோட சாப்பாடு. அமளி துமளி. குழந்தைகள் எல்லாம் ஆர்ப்பரிச்சா. குதூகலிச்சா. குழந்தைகள் பாட்டி கிட்ட கேட்டா.

“பாட்டி! நீ உனக்குனு எதுவுமே கேட்டதில்லையாமே. எங்ககிட்டயும் எதுவுமே கேட்டதில்லையே பாட்டி. எங்களுக்கெல்லாம் பாத்து பாத்து செஞ்சுருக்கியே. இன்னிக்கு உனக்கு பர்த்டே. சொல்லு உனக்கு என்ன ரொம்பப் பிடிக்கும்? என்ன ஆசை சொல்லு பாட்டி.”

“உங்க தாத்தாகிட்ட கேளுங்கோ”

“ஓ! பாட்டி நீ பதிவிரதைதான்! ஒத்துக்கறோம். உனக்கு என்ன வேணும்னு சொல்லு பாட்டினு கேட்டா… இப்பவும் தாத்தாதானா?.”

“நேக்கு ஒன்னுமே வேண்டாம் கோந்தே. எல்லாம் பகவான் கொடுத்துட்டாரே. உங்களை எல்லாம் விட வேற என்ன வேணும் சொல்லுங்கோ? எங்கிட்ட இத்தனை பாசமான உங்க எல்லாரையும் விட விலை ஒசந்தது என்ன இருக்கு சொல்லுங்கோ இந்த லோகத்துல. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”

“இல்ல பாட்டி இப்பவாவது உன் ஆசை என்னனு சொல்லு ப்ளீஸ்” 

குழந்தைகளுக்கு நன்னா தெரிஞ்சு போச்சு. பாட்டி எல்லார் முன்னாடியும் சொல்லமாட்டானு. குழந்தைகள் எங்கிட்ட தனியா கேட்டதுகள். அவகிட்ட தனியா கேட்டதுகள்.

நான் அதுகள் கிட்ட சொன்னேன். “பாவம் உங்க பாட்டி. அவளை என் மடில படுத்துக்க வைச்சு ஆதுரத்தோட தடவிக் கொடுக்கணும். அவ கைய பிடிச்சுக்கணும். இத்தனை நாள் எம்புட்டு சமாளிச்சுருக்கனு.

இவ என்ன சொல்லப் போறாளோனு நான் பார்த்துண்டே இருந்தேன். இவள் சின்ன வயச நினைச்சுண்டாளாம். “நீங்க எல்லாம் சிரிக்கப்படாது. உங்க தாத்தா மடில நா ஆசையா படுத்துக்கணும்” என்று சொன்னாளாம். நான் பாக்கறேன்னு தெரிஞ்சதும் மொகத்தை வேற மூடிண்டுட்டா. முகத்தைப் பார்க்கணுமே. வெக்கத்துல சேப்பா ஆயிடுத்து.

எல்லாம் சேந்து ஒரே கத்தல். ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொன்னோமாம். ஹனிமூன் கப்பிள் அட் 80னு வேற பட்டம் சூட்டிடுத்துகள். அவாளுக்கு நன்னா தெரியும் அவா பாட்டி அவா முன்னாடி என் மடில படுத்துக்க மாட்டானு.

பாட்டிக்குத் தாத்தாவோட தனியா போணும்னு ஆசை இருக்கும்னு எல்லாம் சேந்து திருநெல்வேலிக்கு ரயில்ல டிக்கெட் புக் பண்ணி போற இடத்துல எல்லாம் எங்களைக் கூட்டிண்டு போறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணி, கையில கொடுத்ததுகள்.

“பாட்டி உங்க ரெண்டு பேருக்கும் ரொம்பப் பிடிச்ச ஊர்கள். நீ அடிக்கடி சொல்லுவியே, உனக்கும் தாத்தாவுக்கும் கல்யாணம் ஆன ஊர் திருநாங்கோயில் அதான் மேல திருவேங்கடநாதபுரம்னு……  அந்த ஊருக்கும், தாத்தா ஊரான திருக்குறுங்குடிக்கும்…  உன் ஊரும் தான். ரெண்டு பேரும் கஸின்ஸ் தானே. ரெண்டு பேரும் போயி திருநாங்கோயில்ல தரிசனம் முடிச்சு உன் கல்யாண நாளை நினைச்சுண்டு…  அங்க தாமிரபரணி ஆத்தங்கரை உண்டே  அங்க தாத்தா மடில படுத்துக்கோ. அட! இங்க பாரு பாட்டிக்கு வெக்கத்த…ஹை என்ன சந்தோஷமா?”  

கையில் கேமரா வேற கொடுத்து நாங்க தனியா இருக்கற ஃபோட்டோ வேணும்னு கண்டிஷன் எல்லாம் போட்டு, கட்டிப் பிடிச்சுண்டு, முத்தம் கொடுத்து, “எஞ்சாய் தாத்தா பாட்டி” னு சொல்லி ரயில் ஏத்தி விட்டதுகள். இவள் வெக்கப்பட்டுண்டே என் கையை பிடிச்சுண்டு ரயில்ல ஏறினா.

ஒரு வாரம் ஊர்ல இருந்துண்டு, பகவான் தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிச்சுண்டு, பழசெல்லாம் நினைச்சுண்டு பேசிண்டு, இதோ திரும்பவும் குழந்தைகள்ட்ட போயிண்டுருக்கோம். இத்தனை வருஷத்துல ஒரு நாளாவது என் மடில அவளா படுத்துண்டுருப்பளோ? இல்லியே. சரி அவதான் படுத்துக்கலை. நானாவது அவளை படுத்துக்கோனு இழுத்துப் படுத்துக்க வைச்சதுண்டோ? வைச்சாலும், அவள் எங்க படுத்துண்டா? என்னைதான் படுத்துக்க வைச்சுப்பள். என்னமோ தெரியலை. எத்தனை உரிமை கொண்டாடியிருக்கேன் நான். ஆனா அவள்? பாவம்!

என்னதான் அவள் சந்தோஷமா இருந்தாலும் குழந்தைகள் எல்லாம் சின்ன வயசுலயே போய்ட்டாளேனு வலியும், வேதனையும் அவ மனசுல வாட்டிண்டுதான் இருக்குன்னு எனக்கு நன்னாவே தெரியுமே. ஆனா, என் மடில படுத்துக்கணும்ன்ற ஆசைய இத்தனை வருஷமா அவ மனசுல பூட்டி வைச்சுருந்துருக்காளே. அவளுக்கு இல்லாத உரிமையா? அதான் இத்தனை வருஷமா என் மடில படுத்துக்காதவள் இன்னிக்கு “உங்க மடில சித்த படுத்துக்கட்டுமா”னு கூடக் கேக்காம அப்படியே படுத்துண்டு அவ ஆசையை நிறைவேத்திண்டுட்டா! எதுக்குக் கேக்கணும்? அத்தனை ஆசை எம்மேல! நீ எழுந்ததும் நிறைய பேசணும்டி கோமு என்று நினைத்தபடியே அவள் மேல் ஆதுரத்துடன் கையை வைத்துத் தடவிவிட்டார், பாட்டியின் உயிர் அவர் மடியிலேயே கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிவதை அறியாமல்.




94 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் மற்றும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே வந்தோருக்கும் இனிமேல் ஆர அமர வர இருப்போர்க்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் எங்கள் ப்ளாக் குடும்பத்துக்கு. அன்பு கீதா
    படித்துவிட்டு வருகிறேன் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை - மாலை வணக்கம் வல்லிம்மா...

    பதிலளிநீக்கு
  5. //கீதா R அவர்களுடைய கைவண்ணமா!... .//

    ஆம். அவர்கள் கைவண்ணமேதான் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  6. நடுவாந்தரத்திலேயே புரிஞ்சு போய்டுத்து - பாட்டியோட கதை இப்படித்தான் முடியப் போறது....ன்னு!...

    பதிலளிநீக்கு
  7. எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்...

    ஓ! ஸ்ரீராம் இன்றும் என் கதையா...ரைட்டோ...நினைவுக்கு வந்துருச்சு.....ஸ்ரீராம் தலைப்பு அருமை!!! அருமை!! செமையா இருக்கு. கதையை ஈர்ப்பதே தலைப்புதான்...ஸ்ரீராம் அருமையான தலைப்பு கொடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி...

    மக்களே கதைக்குத் தலைப்பு கொடுத்தது ஸ்ரீராம். வானிற்கு நிலவு அழகு இல்லையா பொட்டு வைத்தது போல்...அப்படி கதை என்னதான் இருந்தாலும் அதன் தலைப்பு மிக மிக முக்கியம் இல்லையா அப்படி ஸ்ரீராம் என்ன அருமையான தலைப்பு வைச்சிருக்கார் பாருங்க..நான் நிறைய தலைப்புகள் கொடுத்திருந்தென் ஆனால் எனக்கு திருப்தி இல்லை...ஸ்ரீராமிடம் சொல்லிருந்தேன் என் தலைப்பு சர்யா இருக்கானு பாருங்க இல்லைனா வேற கொடுக்கலாம்னு அவரே அழகான தலைப்பு கொடுத்துட்டார்...இலக்கிய நயத்துடனான பாரதியின் வரியை நினைவூட்டும் ஈர்க்கும் தலைப்பு....எல்லோரும் சேர்ந்து பெரிய கை தட்டல் ப்ள்ஸ் பாராட்டு பத்திரம் வாசிச்சுருவோம்!!! ஸ்ரீராமுக்கு...

    மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம்...என்ன சொல்லனு தெரியலை...சத்தியமான வார்த்தைகள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. // சரி..நானாவது அவள படுத்துக்கோ.. ன்னு இழுத்து படுக்க வெச்சதுண்டா!?..//

    வெட்கமாக இருக்கிறது....
    ( இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் பல அர்த்தங்கள்.... )

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் கீதா... தலைப்பு கொடுத்ததை பெரிய விஷயமா சொல்றீங்க...!

    பதிலளிநீக்கு
  10. துரை அண்ணா மிக்க நன்றி அண்ணா...கருத்திற்கு...ஆமாம் கொஞ்சம் ஈசியா கெஸ் பண்ணிடலாம்...சரி அப்பால வரேன்..எல்லோருக்கும் பதில் அளிக்க....பையன் எழுந்துட்டான்.....

    கீதா

    பதிலளிநீக்கு
  11. தன்னந்தனிமையிலே
    தள்ளாத வயதினிலே
    உங்கள் பொன்முகத்தைப்
    பார்த்திருந்தால் இன்பம்
    போதாதோ எந்தனுக்கு...

    - ஸ்கூல் மாஸ்டர் எனும் படத்தில் வரும் பாடலின் சிலவரிகள்...

    ஏனோ இச்சமயத்தில் நினைவுக்கு வருகின்றன....

    பதிலளிநீக்கு
  12. நல்ல வேளை படத்தைப் பார்க்கலை. மனசுல படிக்கரையில் இருக்கும் பெரியவருக்கான கதை என நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

    கதை மிக இயல்பாகச் செல்கிறது. படத்துக்கு ஏற்றவாறு ரொம்ப நல்லா வந்திருக்கு. உரையாடல்களும் அருமை, பாராட்டுகள் கீதா ரங்கன்.

    பேத்தி, “பதிவ்ரதையா’ என்று கேட்குமிடம் மட்டும்தான் நெருடியது. இந்த வார்த்தைகள்லாம் இளசுகளுக்கு எங்கு தெரியும்?

    பதிலளிநீக்கு
  13. கீ.ரெ. வஆஆஆஆஆஆஆஆஅஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆரம்! வரதுக்கு முன்னாடியே என்னமோ மனசில் பட்டது. தி/கீ. கதையா இருக்கும்னு! பார்த்தால் அதே! :))))))

    பதிலளிநீக்கு
  14. எல்லாமே நன்றாக வந்திருக்கு கீதா. ஏதோ குடும்ப சரித்திரம் படிக்கிற மாதிரி
    இருந்தது.
    கோமளிப் பாட்டிதான் எத்தனை பொறுமை.
    இத்தனை இழப்புகளையும் சமாளித்து ,கணவனையும் கொண்டாடி. மருமகள் மகன் ,
    பேரன் பேத்திகள் என்று எத்தனை அழகாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

    கல்யாண சமையல் சாதம் சாப்பிட்ட மகிழ்ச்சியில் என்னை மிதக்க விடாமல்
    பாட்டி போய்விட்டால் எப்படிம்மா.
    கீதாமா, பாட்டி பாவம். சந்தோஷம் அதிகமானதால்
    அவள் இதயம் சாந்தி அடைந்துவிட்டதோ.
    வெகு அருமையான எழுத்து.

    என்றும் எல்லொரும் சுகமே வாழ வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  15. பாட்டி சின்னவர்கள் அனைவரையும் இழந்ததும், பேத்தி பதிவ்ரதைனு சொன்னதும் கொஞ்சம் நெருடல். மத்தபடி தாத்தா மடியில் பாட்டி உயிரை விடப் போவது புரிஞ்சது. சரளமான ஓட்டம். தி/கீதா நினைச்சபடி சுருக்கமாச் சொல்லிட்டாங்க!

    பதிலளிநீக்கு
  16. காலை வணக்கம். நேற்று சமையல், இன்று கே.வா.போ.கதையா? கீதா ரங்கன் வாரமா? கீதா அடி பொளி!👍

    பதிலளிநீக்கு
  17. நெகிழ்ந்து போய்விட்டேன் நண்பரே
    உறவென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்
    ஆசிரியருக்கு வாழ்த்துகள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  18. காலை வணக்கம் கீதா அக்கா... கீதா இப்போதெல்லாம் தேர்ந்த எழுத்தாளி ஆயிட்டாங்க... எழுத்து வசப்பட ஆரம்பித்து, நல்லா எழுதறாங்க.

    பதிலளிநீக்கு
  19. வாங்க நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  20. //இன்று கே.வா.போ.கதையா? கீதா ரங்கன் வாரமா? கீதா அடி பொளி!//

    பானு அக்கா... "கேட்டோ" வை விட்டுட்டிங்க...!!!

    :))

    பதிலளிநீக்கு
  21. நெல்லைத்தமிழன்... இந்தப் படத்துக்கும், படித்துறைப் பெரியவர் படத்துக்கும், இரண்டுக்குமே உங்களிடமிருந்து கதை டியூ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீராம் - ஒரு படத்துக்கு கதை எழுத ஆரம்பித்து, இங்கு எழுதுபவர்களின் தரம் பார்த்து, பித்தளைப் பாத்திரக் கடையில் நசுங்கின அலுமினியப் பாத்திரம் மாதிரி இருக்கும்னு விட்டுட்டேன். ஹிஹிஹி

      நீக்கு
    2. /// பித்தளைப் பாத்திரக் கடையில் நசுங்கின அலுமினியப் பாத்திரம் மாதிரி... - நெ.த.. ///

      இதென்ன ...
      இப்புடிச் சொல்லீட்டீக...

      ஆராரு எப்புடி எப்புடி எழுதுனாலும் அம்புட்டுக்கும் தரம்...ன்னு ஒன்னு இருக்கில்லா!...

      வித்தாரக் கள்ளி வெறகொடிக்கப் போனாலும் அந்த வெறகுக்குள்ளேயும் வீணை சத்தம் கேக்குமாமில்லே!....

      எழுதுங்க...சாமியளா.. எழுதுங்க!..

      நாங்களும் நாலு சேதி கத்துக்கிட்ட மாதிரி இருக்கும்!...

      நீக்கு
  22. பாட்டி சின்னவர்கள் அனைவரையும் இழந்ததும், பேத்தி பதிவ்ரதைனு சொன்னதும் /

    கீதாக்கா இதுக்கு மட்டும் இப்ப பதில் சொல்லிட்டு ஓடிடறேன்....விசா இன்டெர்வியூ மகனுக்கு இன்று....

    என் பாட்டியின் மூத்த பெண் அதாவது என் பெரிய அத்தை 28 வது வயதில் ப்ளட் கான்சரில் இறதான் இரு குழந்தைகள். அத்தையின் கணவர் என் சொந்த மாமா என் அம்மாவின் அண்ணா ஏ எல் எஸ் எனும் கொடிய வியாதியில் இறந்தார். என் தாத்தா 70 வயதில் இறந்தார். அடுத்த வருடமே என் இரண்டாவது அத்தையின் கணவர் 45 வதுவயதில் ஹார்ட் அட்டாக் ப்ளட் ப்ரஷரில் இறந்தார். அத்தைக்கு அப்போது 38 வயது....அடுத்து என் அத்தை ப்ளட் கான்சரில் 50 வதுவயதில் இறந்தார். அவர் இறந்த 2 வருடங்களில் என் அம்மா 52 வயதில் இறந்தார். மிஞ்சியது என் அப்பாவும் பாட்டியும். பாட்டி என்னுடன் இருந்தார் தனது 93 வயது வயதில் இறந்தார். நான் அவரையும் அம்மா என்றுதான் அழைப்பேன். அவரிடம் சிறுவ்யதில் வளர்ந்ததால்.இவரைத்தான் நான் அடிக்கடி என் தோழி என்று சொல்லுவது இங்கு....ரொம்பவே கலாய்ப்பேன்...நான் அடை வார்த்தால் ஊருக்கே மணக்கும் என்று நான் அடை செய்யும் போதெல்லாம் என்னைக் கலாய்த்துச் சொல்லுவார் இப்படி எங்களுக்குள் ஒரு நல்ல நட்பும் அன்பும்...

    நாங்கள் என் கஸின்ஸ் எல்லோரது குழந்தைகள் வரை அவரை ரொம்பக் கொஞ்சி அவர் எப்போதும் தாத்தாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்ததால் பதி பத்தினி, பதிவ்ரதைதான் என்றெல்லாம் சும்மா கலாய்ப்பது வழக்கம். அந்த ஃப்ளோதான் வந்தது கதையில். கதையில் தாத்தா மட்டும் இறக்காமல் இருப்பதாகச்க் சொன்னேன். நாங்கள் எங்கள் குழந்தைகள் எல்லோரும் பாட்டிய்ன் 80 தை சும்மா வீட்டளவில் கொண்டாட நினைத்தோம்....ஆனால் பாட்டி தாத்தா இல்லாமல் கொண்டாடக் கூடாது என்று சொல்லி மறுத்துவிட்டார்.....கடைசி வரை கொள்ளுப் பேரன் (என் மகனின் அன்புப் பிடியில்..நானும் மகனும் சேர்ந்துதான் தூக்கிக் கொண்டு பாத்ரூமில் வைத்து அவரைக் குளிப்பாட்டுவோம்..இறுதி நாட்களில்..அவருக்கு நினைவு தப்பிய வேளையில்..) கொள்ளுப் பேத்திகள் அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வர்....

    அந்த நிகழ்வுகள் தான் கதையில் வந்தது கீதாக்கா...மிக்க நன்றி கீதாக்கா

    மற்ற எல்லோறுக்கும் அப்புறம் வரேன்....நேரம் கிடைக்கும் போது....

    கீதா

    பதிலளிநீக்கு
  23. நெகிழ்வான கதை .
    அழகான நடையில் கதை சொன்னவிதம் மிக அருமை.
    கணவன் மடியில் உயிர் போவது ! கொடுத்து வைத்த பாட்டி.
    படத்தை பார்க்காமல் படித்து வந்தேன் மடியில் தலைவைத்து படுக்க வேண்டும் என்ற ஆசையை சொன்னவுடன் ரயில் பயணத்தில் தாத்தாவின் மடியில் பாட்டி படுத்து இருந்த படம் நினைவுக்கு வந்து அதற்கு நிறைய பேர் கருத்து சொன்னதும் நினைவுக்கு வந்து விட்டது.

    தலைப்பு கொடுத்த ஸ்ரீராமுக்கு பாராட்டுக்கள்.

    கீதாவிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. காலை வணக்கம்.

    படத்திற்கேற்ற அருமையான கதை.

    துரை செல்வராஜூ ஐயா சொன்னது போல, கதையின் முடிவு யோசிக்க முடிந்தது....

    மனதைத் தொட்ட கதை எழுதிய கீதாஜி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  25. முடிவு சற்றே தெரிந்ததுபோல் இருந்தாலும் மனம் சஞ்சலமாகியது உண்மையே...

    கோமளாபாட்டி இறைவனடியில் இளைப்பாறட்டும்.

    பதிலளிநீக்கு
  26. ஆஆஆஆஅவ்வ்வ் மீயும் இண்டைக்கு ஏழியாகவே லாண்டட்:)... ஆண்டவா இம்முறை இது என்ன சோதனை கீதாவுக்கு வந்த ஓதனை?:) ஏன் ஸ்ரீராம் ஏன்? ஏன் இப்பூடிப் பண்ணினனீங்க? மாத்தி விட்டிருக்கலாமெல்லோ அடுத்த வாரத்துக்கு... கீதா என்சோய் பண்ணியிருப்பா.. இது நேற்றும் இன்றும் கஸ்டப்படுறா... சரி நடந்தவை யாவும் நடந்தவைதானே....:)

    பதிலளிநீக்கு
  27. கீதா கதையையும் வரிகளையும் விறுவிறுப்பாகப் படிச்சேன்.. மிக அழகாக எழுதியிருக்கிறீங்க ஆனா இடையே அந்த துன்ப நிகழ்வுகளைத் தவிர்த்திருக்கலாமோ...

    துரை அண்ணன் சொன்னதுபோல, பாதியில் நானும் முடிவைக் ஹெஸ் பண்ணிட்டேன்...

    கதையை வைத்து என் மனதில் அடிக்கடி எழும் கேள்விகள்....[இது புதன் கிளவி ஹையோ கேள்வி என கெள அண்ணன் நோட் எடுத்தாலும் எடுத்திடுவார்:)):))]

    அதெதுக்கு அந்தக்காலத்துப் பெண்கள் எல்லாம் தம் விருப்பத்தை எப்பவுமே வெளிப்படுத்துவதில்லை.. மரணத்தறுவாயில்தான் வெளிப்படுத்துவார்கள்... படங்களிலும் அப்படித்தானே காட்டுகிறார்கள்... அது தப்புத்தானே? நமக்கொரு விருப்பம் எனில் அதை வெளியே சொன்னால்தானே அடுத்தவர்களுக்குப் புரியும்.

    பல பெண்கள் தன் விருப்பத்தை வெளியே சொல்லாமல்.. அவர் உணர்ந்து செய்கிறாரா பார்ப்போம் என காத்திருப்பதும்.. தன் விருப்பத்துக்கு ஒண்ணும் பண்ணுறாரில்லையே என மனதிலே புழுங்குவதும் தப்புத்தானே...

    சொல்லாமலே புரிவதற்கு எல்லோரும் என்ன ஞானிகளோ அதிராவைப்போல?:))

    பதிலளிநீக்கு
  28. ///என் கண்ணில் பாவையன்றோ......//

    ஹா ஹா ஹா இது ஸ்ரீராம் தலைப்போ? தலைப்புப் பார்த்து நினைச்சேன் இன்று என்பக்கமும் பழைய பாடல் தலைப்பு.. இங்கும் பழைய பாடல் தலைப்பு...:))

    பதிலளிநீக்கு
  29. அந்த பாட்டி தாத்தாப் படம் ஏதும் சினிமாவில் வருகிறதோ? அப்படிப் படம் கிடைப்பதரிது..

    பதிலளிநீக்கு
  30. நானும் இதான் நினைத்தேன்...

    இது கீதா க்கா வாரமா ன்னு...

    பதிலளிநீக்கு
  31. என் கண்ணில் பாவையன்றோ.......


    மிக எளிய கதை கீதாக்கா...ஆன உணர்ச்சி பூர்வமான கதை...


    மனம் மனதில் நிற்கிறது..

    பதிலளிநீக்கு
  32. கதை அருமை. இந்த படம் முக நூலில் வலம் வந்த போது இப்படத்துக்கு ஒரு கலிப்பா எழுதி என் பக்கத்தில் பதிந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  33. பல பெண்கள் தன் விருப்பத்தை வெளியே சொல்லாமல்.. அவர் உணர்ந்து செய்கிறாரா பார்ப்போம் என காத்திருப்பதும்.. தன் விருப்பத்துக்கு ஒண்ணும் பண்ணுறாரில்லையே என மனதிலே புழுங்குவதும் தப்புத்தானே...

    சொல்லாமலே புரிவதற்கு எல்லோரும் என்ன ஞானிகளோ அதிராவைப்போல?:))//

    உண்மை அதிரா, மனதில் உள்ளதை சொல்லிவிட வேண்டும். சொல்லவில்லை என்றால் விளைவுகள் மோசமாய் போய்விடும்.
    அதிராவை போல் சொல்லாமல் புரிந்து கொள்ள ஞானி இல்லைதான்.

    பதிலளிநீக்கு
  34. @ ஞானி அதிரா : ..சொல்லாமலே புரிவதற்கு எல்லோரும் என்ன ஞானிகளோ அதிராவைப்போல?:))

    இந்த உலகம் இருக்கிற லட்சணத்தைப்பார்த்தாலே புரியவில்லையா, இங்கு அதிராவைத் தவிர வேறு ஞானியேயே..கிடையாது என்று !

    பதிலளிநீக்கு
  35. //உண்மை அதிரா, மனதில் உள்ளதை சொல்லிவிட வேண்டும். சொல்லவில்லை என்றால் விளைவுகள் மோசமாய் போய்விடும்.
    அதிராவை போல் சொல்லாமல் புரிந்து கொள்ள ஞானி இல்லைதான்.//

    கோமதி அக்கா .. நிறையப் பெண்கள் தம் விருப்பத்தைச் சொல்வது தப்பு என்பதுபோல நினைக்கிறார்கள்.. முக்கியமாக கணவரை எதிரிபோல அல்லது ஒரு பிறத்தி மனிதர்போல எண்ணி அனைத்தையும் பகிரத்தயங்குகிறார்கள்.. அது தப்புத்தானே..., எனக்கு இது பிடிச்சிருக்கு இது வேணும் எனக் கேட்டாத்தானே அவர்களுக்குப் புரியும்... அனைத்தையுமே அவர்கள் புரிந்துதான் செய்யோணுமெனில் அவர்களுக்கும் மனதில் ஒரு ரென்சன் வந்திடுமெல்லோ.... இது நான் காதில் கேட்டவற்றையே இங்கு சொல்கிறேன் கற்பனை அல்ல:))

    பதிலளிநீக்கு
  36. ஏகாந்தன் Aekaanthan ! said...
    இந்த உலகம் இருக்கிற லட்சணத்தைப்பார்த்தாலே புரியவில்லையா, இங்கு அதிராவைத் தவிர வேறு ஞானியேயே..கிடையாது என்று !//

    ஸ்ஸ்ஸ்ஸ் தெரியாம அவசரப்பட்டு ஞானியாகிட்டமோ:).. வைரவா நீங்க இருக்கப் பயமேதெனக்கூஊஊ:))

    https://s-media-cache-ak0.pinimg.com/originals/bf/91/6d/bf916d1f2cc4b7ede7c6f8c81f9bba0b.jpg

    பதிலளிநீக்கு
  37. இந்தமாதிரி ரயில்ப் பிரயாணத்திலே கணவரை கலங்க விடக் கோமுப்பாட்டியால் எப்படி முடிந்தது? பேரன்கள் ஸ்டேஷனுக்கு வந்து விடுவார்கள். மனதில் நினைத்துக் கொண்டேன். எப்படியோ ஆசை நிறைவேறியது. மற்றது நடப்பது தானாக எல்லாம் நடக்கும்.
    தலைப்பும்,கதையும் அற்புதம். முதிர்ந்தகாதல். கடைசிவரை அடக்கியே வைக்கப் பட்டது. இப்போது நாமெல்லோரும்தானே அதைப் பற்றி விமர்சிக்கிறோம். கோமளாப்பாட்டிக்குத் தெரியாதே? வயதான பெரிய ஸம்ஸாரிகள், துக்கம்,ஸுகம் அதிகமாக பாதிக்கப் பட்டார்கள். அதையும் மீறி நீந்திதான் வாழ்க்கை இருந்து வந்தது. கீதா பாராட்டுகள். ஸ்ரீராமிற்கும் பாராட்டுகள். கதை படிக்கும்போதே படம் ஞாபகம் வந்துவிட்டது. ஓ. இப்படியும் ஆசைகளா? அன்புடன்

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் சகோதரி

    அருமையான கதை. மிகவும் நெகிழ்ந்து போனேன். இந்த மாதிரி சிலர் வாழ்க்கையை பார்த்து, கேட்கும் போது, எல்லோராலேயும் இப்படி இருக்க முடியாது. அதற்கென்றே ஒரு சில பேரை கடவுள் இப்படி படைத்திருக்கிறாரோ என்று நினைக்க்த் தோன்றுகிறது. பக்குவமான வார்த்தைகளுடன், பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள்.

    /நேக்கு ஒன்னுமே வேண்டாம் கோந்தே. எல்லாம் பகவான் கொடுத்துட்டாரே. உங்களை எல்லாம் விட வேற என்ன வேணும் சொல்லுங்கோ? எங்கிட்ட இத்தனை பாசமான உங்க எல்லாரையும் விட விலை ஒசந்தது என்ன இருக்கு சொல்லுங்கோ இந்த லோகத்துல. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”/

    இது ஒன்றுதான் கோமளா பாட்டியின் பொறுமையின் அடையாளம் என்று புரிந்தது. இந்த வார்த்தைகளை பார்த்ததும். என் பாட்டியின் நினைவுகள் (அம்மாவின் அம்மா) வந்ததை தவிர்க்க இயலவில்லை. கதையை படித்து இதயம் கனத்து விட்டது. தங்கள் பின்னூட்டத்தில் இக்கதை உருவாக காரணமும் படித்ததில் மிகவும் நெகிழ்ந்து போனேன். நல்லதொரு கதையை எழுதியமைக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துகளும்...

    இக்கதைக்கு ஏற்ற தலைப்பை தேர்ந்தெடுத்த சகோதரருக்கும் பாராட்டுக்கள்.

    காலை எழுந்தவுடன் கதை படித்து முதலில் உடன் விரிவாக ஒரு கருத்துரை எழுதினேன். கை பேசியில் தட்டச்சு செய்து வெளியிட போகும் போது கை தவறுதலாக எதையோ பட்டனைத்தொட அத்தனையும் மாய மானாக ஓடி விட்டது.
    மறுபடியும் யோசித்தும் எழுதியது ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. எனவே கால தாமதம் ஆகி விட்டது. வருந்துகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  39. @ ஞானி அதிரா: ஸ்ஸ்ஸ்ஸ் தெரியாம அவசரப்பட்டு ஞானியாகிட்டமோ:).. வைரவா நீங்க இருக்கப் பயமேதெனக்கூஊஊ:))//

    மேலே சொன்னதற்கு அர்த்தமென்னவெனில் (அடடா, வெளக்கும்படியாகிவிட்டதே..): ஒரேயொரு ஞானி போதுமா, இம்மாம்பெரிய ஒலகத்துக்கு? ஒரு ஏழெட்டு பேராவது குறைஞ்ச பட்சம் வேண்டாமா.. என்று அர்த்தமாக்கும்!

    பதிலளிநீக்கு
  40. ஆவ் !!சூப்பர்ப் கீதா ,நானும் அந்த ஆற்றங்கரை தாத்தா கதைனு நினைச்சுத்தான் படிக்க ஆரம்பிச்சேன் முடிவு என்னனென்னமோ செய்தது ,

    பதிலளிநீக்கு
  41. எனக்கு இப்படி வயசான தாத்தா பாட்டிங்களை பார்க்க கொள்ளை பிரியம் பிரிட்டிஷ் தாத்தா பாட்டிகளில் கை கோர்த்து நடப்பாங்க .
    இங்கே இன்னொரு பஞ்சாபி தாத்தா பாட்டி 80 இருக்கும் ஆனா இருவரும் கடைகளுக்கு ஒண்ணா போவாங்க கண்கொள்ளா காட்சி .
    இங்கே 75 வருட திருமண நாள் முடிஞ்சா தம்பதிகளும் இருக்காங்க ..அவைகளில் பாட்டி இறந்த அரை மணிநேரத்தில் தாத்தாவும் கூடவே போனார் :( ஆனா எவ்ளோ ஆத்மார்த்தமான அன்பு இல்லையா ..

    பதிலளிநீக்கு
  42. மேடம் ஞானி மியாவ் உங்களுக்கு பதில் வருது

    பதிலளிநீக்கு
  43. முதலில் தலைப்பை தேர்ந்தெடுத்த ஸ்ரீராமுக்கு பாராட்டுகள் எங்கள் ப்லாகில் தலைப்புக்கு முக்கியத்துவம் உண்டு அது என் அனுபவம் ஒரு முறை தலைப்பில் என்ன இருக்கிறாஅதுஎன்று எழுதி விட்டேன் தலைப்பில்தான் எல்லாமே அதைப் பார்த்துதான்வாங்குவோம் என்றுபதில் இருந்தது அவர்கள் சொன்ன தலைப்பு புடவைத் தலைப்பு கவனித்துதான்வாங்குவார்கள் முந்தானை முடிச்சு முக்கியமல்லவா சுபமுடிவுகளைத்டான் பலரும் எதிர்பார்க்கிறார்கள் கீதாவுக்கும் அது தெரியும்தானே

    பதிலளிநீக்கு
  44. இந்த தாத்தா பாட்டியை பார்த்ததும் ஒரு பழைய பதிவின் நினைவு ]

    65வது மண நாளை கொண்டாடிய இளம் தம்பதியரை அங்கு சந்தித்தேன் ...அந்த பெண்மணியின் அண்ணன் போரில் மாண்டவராம் அவரை நினைவு கூற வந்தனர் மிகவும் அன்பான அழகிய இந்த ஜோடி இருவரும் மிக அழகாக உடை உடுத்தி வந்தார்கள் ..
    அவர் என்னிடம் தனது பர்சிலுள்ள புகைப்படம் ஒன்றை காட்டினார் அவர்களின் என்கேஜ்மேண்டின்போது
    எடுத்ததாம் :)அதை இடப்புறம் உள்ள சட்டை பாக்கெட்டில் இதயத்துக்கு அருகே வைத்திருக்கேன் என்றார் ..இன்னும் நிறைய சொன்னார் !!!!!அவர் பெயர் jack மனைவி பெயர் jill :)அந்த இடமே சிரிப்பால் சந்தோஷத்தால் அவர்கள் இருவரும்15,16வயதிருக்கும்போது திருமணம் செய்தார்களாம் ஆராதனை முடிந்த பின் நான் பார்த்தேன் எனக்கு முன்னே அவர்கள்
    இருவரும் ஒரு குடையின் கீழ் கைகளை இருக்க பிடித்து நடந்து சென்றனர் .இருவருக்கும் எண்பது வயதிருக்கும் ..அன்புன்னா இதுதான் ...வாலிப வயதில் ஹார்மோன்களில் ஈர்ப்பில் வரும் காதலை விட வயோதிகத்திலும் உள்ளார்ந்த நேசம் பாசம் எல்லாம் சேர்ந்த ஒரு காதல் எக்செட்ரா
    எக்செட்ரா !!!!!!!!!பார்க்கவே

    அவ்ளோ சந்தோசம் .


    பதிலளிநீக்கு
  45. ஹலோவ் ஞானி மியாவ் அந்த காலத்தில் இப்படி தனியா பேச மனஸிலுள்ளதை ஷேர் செய்ய இடம் சூழல் எல்லாம் அமையணுமே .
    அதனால் அக்கால கணவர்களை குற்றம் சொல்ல முடியாது ..சிலருக்குஅன்பை எப்படி வெளிப்படுத்தறதுன்னும் தெரியாது :)
    இப்போ தான் உலகமே கைக்குள்ள என்ன எப்படி நடக்கணும்னு சொல்லித்தரக்கூட உளவியல் டாக்டர்ஸ் இருக்காங்க .
    ஒரு கணவன் மனைவி பார்த்திருக்கேன் கணவர் முன்னாடி நடப்பார் மனைவி ரெண்டு ஸ்டெப் பின்னால்தான் :) மரியாதையாம்
    பேர் சொல்லிக்கூட அழைக்காத தம்பதியருமுண்டு .ஆனால் இவர்களில் அன்பில்லைன்னு சொல்ல முடியாது அவரவர் வாழ்ந்த இருந்த சூழல் பொறுத்தே அனைத்தும் அமையும் .

    பதிலளிநீக்கு
  46. அப்புறம் எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு குட்டி குழந்தை ஒளிந்திருக்கும் :) தன்னை குழந்தையாக யாரவஸ்து சீராட்ட மனம் ஏங்கும்
    கோமளிப்பாட்டிக்கும் அந்த ஆசை .நிறைவேறியது ஆனா தாத்தா பாவம் எப்படி தாங்குவார் :( தாத்தாவை நினைக்க கஷ்டமாயிருக்கு

    பதிலளிநீக்கு
  47. ஸ்ரீராம் தலைப்பு செம கலக்கல் ..

    பதிலளிநீக்கு
  48. ஸ்ரீராம் மிக்க நன்றி கதையை வெளியிட்டமைக்கும், என் எழுத்தை ஊக்கப்படுத்தியதற்கும்...ஆனால் என்ன கொஞ்சம் வெட்கமாகிவிட்டது....இங்கு ஒவ்வொருவரும் எப்படி அருமையாக எழுதுகிறார்கள். அதைப் பார்த்து எனக்கு ச்சே நாம் எழுதுவது ஒன்றுமே இல்லை என்று தோன்றும்....மிக்க நன்றி ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  49. ஏகாந்தன் Aekaanthan ! said...
    //மேலே சொன்னதற்கு அர்த்தமென்னவெனில் (அடடா, வெளக்கும்படியாகிவிட்டதே..): ஒரேயொரு ஞானி போதுமா, இம்மாம்பெரிய ஒலகத்துக்கு? ஒரு ஏழெட்டு பேராவது குறைஞ்ச பட்சம் வேண்டாமா.. என்று அர்த்தமாக்கும்!///

    ஆவ்வ்வ்வ்வ் இதுதான் பொஷிடிவ் திங்கிங் என்பதோ?:)).. ஆனா ஏகாந்தன் அண்ணன் இப்பொ எங்கள் புளொக் வந்து போகும் எல்லோருமே தாமும் ஞானி ஆக ரெடி எனச் சொல்லிட்டினம்:)) வரவர என் ஆச்சிரமத்துக்கு சிஷ்யர்கள் பெருகிக்கொண்டே வாறாங்க..:)).. இல்லாட்டில் விட மாட்டேனெல்லோ:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  50. //Angel said...
    மேடம் ஞானி மியாவ் உங்களுக்கு பதில் வருது//

    ஹையோ ஜாமீஈஈஈஈஈஈ:))

    https://thumbs.dreamstime.com/z/cat-climbing-tree-23677279.jpg

    பதிலளிநீக்கு
  51. ///Angel said...
    ஹலோவ் ஞானி மியாவ் அந்த காலத்தில் இப்படி தனியா பேச மனஸிலுள்ளதை ஷேர் செய்ய இடம் சூழல் எல்லாம் அமையணுமே .
    அதனால் அக்கால கணவர்களை குற்றம் சொல்ல முடியாது .//

    ஹலோ மிஸ்டர்.. நான் எங்கே அக்காலத்தைச் ஜொன்னேன்.. இக்காலத்தைப்பற்ரியே கதைச்சேன்ன்.. கணவன்மாரை குறை ஜொள்ளல்லே.. மனைவிமாரைத்தான் ஜொன்னேன்:).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    இல்ல அஞ்சு இக்காலத்துக் கணவன்மார்களின் புலம்பல்ஸ் தான் சிலது என் காதுக்கு எட்டியது.. அதாவது எதிலயும் மனைவிமார் மனம் திறந்து பேசுவதில்லை.. எனக்கு இது பிடிச்சிருக்கு .. இது பிடிக்கவில்லை என சொல்வதை ஏதோ .. தப்பான விசயமாக, தம்மை தரக்குறைவாக எண்ணிட்டாலும் என்பது போல எல்லாம் நினைக்கிறார்களாம்... எல்லாத் தம்பதிகளும்.. மனம் திறந்து பேசுவது குறைவு அதுதான் காரணம்.. கணவன் மனைவிக்கும் என்ன வெய்க்கம் ரோசம் மானம் எல்லாம் பார்த்துக்கொண்டு கர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  52. ஒவ்வொருவருக்கும் எப்போதும் தனித்தனியாக விரிவாகக் கொடுப்பேன் இன்று கொடுக்க இயலவில்லை. மன்னிக்கவும்...

    நெத கருத்திற்கு மிக்க நன்றி....நீங்கள் சொல்லியதற்கு கீதாக்காவிற்குக் கொடுத்த பதிலில் வந்திருக்கு....
    நீங்களும் எழுதலாமே நெத நன்றாகவே எழுதுகிறீர்கள். துரை அண்ணாவின் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்.

    துரை அண்ணா மிக்க நன்றி கருத்திற்கு...பல அர்த்தங்கள்//ஆம் கொள்ளலாம்.

    கீதாக்கா மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு. நீங்களும் நெல்லையும் பதிவிரதை பற்றி சொல்லியதால் நான் தெரிந்து கொள்வதற்காகக் கேட்பது...தவறாக எழுதிவிட்டேனோ? அப்படி எழுதக் கூடாதோ என்று...

    பானுக்கா மிக்க நன்றி கருத்திற்கு.

    கில்லர்ஜி மிக்க நன்றி கருத்திற்கு...

    வல்லிம்மா மிக்க நன்றி கருத்திற்கு...

    மாலா மாதவன் தங்களுக்கும் மிக்க நன்றி கருத்திற்கு.

    காமாட்சிம்மா மிக்க நன்றி கருத்திற்கு.

    கோமதிக்கா மிக்க நன்றி கருத்திற்கு....

    வெங்கட்ஜி மிக்க நன்றி கருத்திற்கு

    ஏகாந்தன் அண்ணா மிக்க நன்றி கருத்திற்கு...

    ஞானிக்கும் மிக்க நன்றி கருத்திற்கு...ரொம்ப கும்மி அடிக்க முடியலை....சோகம் அது ஃப்ளோவில் வந்தது. அப்படியே என் பாட்டிக்கு நடந்தது...அதைத்தான் சொல்லிருக்கேன்...

    ஏஞ்சல் மிக்க நன்றி கருத்திற்கு...விரிவா சொல்ல முடியலை ஏஞ்சல்...

    பூசார் உங்களுக்கு ஏஞ்சல் சொன்ன அழகான பதிலையே வழி மொழிகிறேன். அக்கால குடும்பத்தில் மனதில் உள்ளதைச் சொல்லுவது எல்லாம் அத்தனை எளிதல்ல....நானும் பெரிய குடும்பத்தில் அதுவும் ஜாயின்ட் ஃபேமிலியில் வளர்ந்தவள் என்பதால் சொல்ல முடியும்...அப்படி இருந்ததால் அன்பில்லை என்று சொல்ல முடியாது....ஏஞ்சலின் கருத்தை டிட்டோ செய்கிறேன். சூப்பர் கமென்ட் ஏஞ்சல்...

    கரந்தை சகோ மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு.

    ஜிஎம்பி சார் மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...

    கமலா சகோ தங்கஈன் விரிவான கருத்திற்கு மிக்க நன்றி. மொபைலில் அடித்து சில சமயம் எனக்கும் அப்ப்டி ஆகும் என்பதால் நான் கூடியவரை மொபைலில் அடிப்பதைத் தவிர்க்கிறேன்....

    டிடி மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...

    அனு மிக்க நன்றி கருத்திற்கு...

    எல்லோருடைய பாராட்டிற்கும், கருத்திற்கும் மிக்க மிக்க நன்றி. பானுக்கா கீதாக்கா சொன்னது போல் அடி பொளி கேட்டோ இஆயிட்ச கீதையிண்டே ஆயிட்சேயானு..!! ஹா ஹா ஹா ஹா...

    அதிரா இன்று வெளியிட்டதில் ஒன்றுமில்லை நானும் ஸ்ரீராமும் பேசிக் கொண்டுதான் ஸ்ரீராம் வெளியிட்டார். பிரச்சனை இல்லை....இது எதிர்பாராத ஒன்று மகனின் வரவு எமர்ஜென்சி விசா என்பதால் எல்லாம் கடைசி நிமிடத்தில் மாறியது. முதலில் ஜூன் 25 வந்து ஜூலை 6 செல்வதாக இருந்தது. ஆனால் அவன் ஜூன் 20 அங்கு இருக்க வேண்டும் என்று ஆனதால் லாஸ்ட் மினிட் சேஞ்சஸ்...ஒரு வாரம் தான் என்று ஆனது...

    இப்போதைக்கு எல்லோருக்கும் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்....அப்பால வந்து பார்க்கிறேன்...

    மிக்க நன்றி எல்லோருக்கும்.....எபிக்கும்!!! தன்யள் ஆனேன் (ஸ்ரீராம்!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  53. ///ஆனால் என்ன கொஞ்சம் வெட்கமாகிவிட்டது....இங்கு ஒவ்வொருவரும் எப்படி அருமையாக எழுதுகிறார்கள். அதைப் பார்த்து எனக்கு ச்சே நாம் எழுதுவது ஒன்றுமே இல்லை என்று தோன்றும்....மிக்க நன்றி ஸ்ரீராம்

    கீதா///

    கீதா.. இங்கின அருமையாக எழுதுறாங்க எனச் சொன்னது மீக்குத்தானே?:) ஹையோ நேக்கு இப்போ ஒரே ஷை ஷையா வருதேஏஏஏஏ... கடவுளே.. இங்கின என் செக்:) வந்திடக்கூடா:)

    பதிலளிநீக்கு
  54. //ஏஞ்சல் மிக்க நன்றி கருத்திற்கு...விரிவா சொல்ல முடியலை ஏஞ்சல்...//

    @ கீதா

    டோன்ட் யூ வொர்ரி ....இந்த குண்டு பூனையை நான் பார்த்துக்கறேன் :)

    பதிலளிநீக்கு
  55. ஹலோ மியாவ் :) பாஸிடிவ் எண்ணம் தேவைதான் :) சரி சரி சந்தோஷபட்டுக்கோங்க

    பதிலளிநீக்கு
  56. //டோன்ட் யூ வொர்ரி ....இந்த குண்டு பூனையை நான் பார்த்துக்கறேன் :)//

    https://s-media-cache-ak0.pinimg.com/564x/17/20/a3/1720a3627c2fec68c67e9e8191a6c26e.jpg

    பதிலளிநீக்கு


  57. அது மியாவ் இக்கால கணவர் மனைவிக்கு பேசவே நேரமில்லை அதுவும் ஒரு பிரச்சினை .இங்கே தெரிந்த குடும்பம் கணவனும் மனைவியும் மாறி மாறி வேலை அவர் வீட்டில் இருக்கும் நேரம் மனைவி வேலையில் என்னதான் பணம் சம்பாதிச்சாலும் அது சந்தோஷத்தை தருமா இப்படி சின்ன சின்ன சந்தோஷங்களை

    பதிலளிநீக்கு
  58. @ கீதா ரெங்கன்: ஏகாந்தன் அண்ணா மிக்க நன்றி கருத்திற்கு...//

    நன்றி லிஸ்ட்டில் என்னையும் போட்டுவிட்டீர்களா! நன்றி. ஆனால் நான் எங்கே கருத்து சொன்னேன்! அதிராவை சீண்டிக்கொண்டு, இன்று அதிராவின் அங்க்ள் ட்ரம்ப், கிம்முடன் சிங்கப்பூரில் கைகுலுக்குவதை, பேசுவதைப் பார்த்துப் பொழுதுபோக்கிக்கொண்டிருந்தேன்.

    ’கேளாயோ எங்கள் கதையை..!’ என்று கோமுப்பாட்டியும் தாத்தாவும் கூப்பிட்டதும், இப்போதுதான் படித்தேன் கதையை. தாத்தாவுக்குள் புகுந்துகொண்டு கோமுப்பாட்டியின் காவியத்தை க்ரிஸ்ப்பாக எழுதியிருக்கிறீர்கள். முடிவு சோகமெனச் சொல்லமாட்டேன். வாழ்த்துக்கள்.

    ஜாய்ண்ட்-ஃபேமிலி ப்ராடக்ட்டான உங்களுக்குள் நிறைய கதைகள் பதுங்கிக் கிடக்கக்கூடும்.
    ஸ்ரீராம் - கவனிக்கிறீர்களா ?

    பதிலளிநீக்கு
  59. கோமதி அக்கா .. நிறையப் பெண்கள் தம் விருப்பத்தைச் சொல்வது தப்பு என்பதுபோல நினைக்கிறார்கள்.. முக்கியமாக கணவரை எதிரிபோல அல்லது ஒரு பிறத்தி மனிதர்போல எண்ணி அனைத்தையும் பகிரத்தயங்குகிறார்கள்.. அது தப்புத்தானே..., எனக்கு இது பிடிச்சிருக்கு இது வேணும் எனக் கேட்டாத்தானே அவர்களுக்குப் புரியும்... அனைத்தையுமே அவர்கள் புரிந்துதான் செய்யோணுமெனில் அவர்களுக்கும் மனதில் ஒரு ரென்சன் வந்திடுமெல்லோ.... இது நான் காதில் கேட்டவற்றையே இங்கு சொல்கிறேன் கற்பனை அல்ல:))//

    கற்பனை என்று சொல்லவில்லை அதிரா, நீங்கள் சொன்னது உண்மை.
    உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.
    நீங்கள் சிறு வயதாக இருந்தாலும் உங்களின் வார்த்தைகள் நல்ல அனுபவம் நிறைந்த வார்த்தைகள் என்பது அனைவருக்கும் தெரியும்.

    பதிலளிநீக்கு
  60. //ஸ்ரீராம் - கவனிக்கிறீர்களா ?//

    ஏகாந்தன் ஸார்... இதற்கு கீதா பதில் சொல்வார்!

    பதிலளிநீக்கு
  61. துரை செல்வராஜூ ஸார் சொல்லியிருக்கும் ஸ்கூல் மாஸ்டர் வசனமாகட்டும்... பொதுவாக உறவுகளை பற்றி, மனங்களைப் பற்றி இங்கு வெளிப்பட்டிருக்கும் நண்பர்கள் கருத்துகள் மிகுந்த சுவாரஸ்யம். நிறைய யோசிக்கவும் வைத்தது.

    பதிலளிநீக்கு
  62. மனைவி சும்மா எதிர்பார்ப்புகளை மனசுக்குள்ளேயே வைத்துப் புழுங்கி கொண்டிராமல், கணவர்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் என்று அதிரா சொல்லியிருக்கும் கருத்து அட்சரலட்சம். வல்லிம்மா அடிக்கடி சொல்லும் கருத்து இது. (கணவனாக இதைச் சொல்லவில்லை... பொதுவான மனிதனாகச் சொல்கிறேன்) வாழும் காலம் கம்மி. ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருங்கள், மனம் விட்டுப் பாராட்டுங்கள் என்று சொல்வார் வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  63. @ ஸ்ரீராம்: ..வாழும் காலம் கம்மி. ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி.. //

    அங்கும் இங்கும் அலைபோலே- தினம்
    ஆடிடும் மானிடர் வாழ்விலே
    எங்கே நடக்கும் எது நடக்கும்- அது
    எங்கே முடியும் யாரறிவார்..

    -கண்ணதாசன்

    மனம்விட்டுப் பேசினால் நல்லதுதான். அப்படிப் பேச விழைகையில், அந்தப்பக்கம் கேட்கத் தயாராக இருப்பது முக்கியம். ரிசீவர் சரி இல்லையெனில், அல்லது ஆஃப் மோடில் இருந்தால், ஒலி பரப்பி என்ன புண்ணியம்?

    பதிலளிநீக்கு
  64. //ரிசீவர் சரி இல்லையெனில், அல்லது ஆஃப் மோடில் இருந்தால், ஒலி பரப்பி என்ன புண்ணியம்?//

    ஏகாந்தன் ஸார்...அது ஒரு சோகம்தான். ஆனால் முயற்சிக்கும்போது வழி கிடைக்கலாம்.

    அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ இந்தப் பக்கம்... ஞாயிறுண்டு திங்களுண்டு... எந்த நாள் உந்தன் நாளோ..

    நீங்கள் கொடுத்திருக்கும் வரிகள் எந்தப் பாடல் என சட்டென நினைவுக்கு வரவில்லை. ஆனால் மேற்சொல்லியிருக்கும் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

    பதிலளிநீக்கு
  65. "இரவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்றே" பாடலை சொல்கிறார் ஏகாந்தன்

    பதிலளிநீக்கு
  66. ஜெயசங்கர் நடித்த முதல் படம் இரவும் பகலும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  67. //இரவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்றே" பாடலை சொல்கிறார் ஏகாந்தன்//

    ஓ... கோமதி அக்கா ... கிரேட்! கீதாக்கா.. பாருங்க எனக்கும், உங்க "மன்னி" க்கும் ஒரு போட்டி!

    பதிலளிநீக்கு
  68. தப்பாய் சொல்லி விட்டேன் குலமகள் ராதை படம் பாடல்

    பதிலளிநீக்கு
  69. குலமகள் ராதை படத்தில் வரும் பாடல் என்பதற்கு இரவும் பகலும் என்று சொல்லி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  70. //தப்பாய் சொல்லி விட்டேன் குலமகள் ராதை படம் பாடல்/

    ஓ..... ஓகே ஓகே ஓகேக்கா...

    பதிலளிநீக்கு
  71. //மனம்விட்டுப் பேசினால் நல்லதுதான். அப்படிப் பேச விழைகையில், அந்தப்பக்கம் கேட்கத் தயாராக இருப்பது முக்கியம். ரிசீவர் சரி இல்லையெனில், அல்லது ஆஃப் மோடில் இருந்தால், ஒலி பரப்பி என்ன புண்ணியம்?//

    அதுதானே !

    பதிலளிநீக்கு
  72. இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
    என்று வரும் பாடல்

    பதிலளிநீக்கு
  73. கோமதி அரசு சரியாகச் சொல்லிவிட்டார். எனக்கு மிகவும் பிடித்த சுசீலா பாடல்களில் ஒன்று. சின்ன பாடல்தான். ஆனால் விளையாடியிருக்கிறார் கண்ணதாசன்.அடுத்த வரியே தூள்: அறிவுக்கு ஆயிரம் கண்கள்.. உறவுக்கு ஒன்றே ஒன்று!

    நீங்கள் குறிப்பிட்ட பாடல்வரிகளை முதன்முறையாகப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  74. நெகிழ்வான கதை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  75. ///மனம்விட்டுப் பேசினால் நல்லதுதான். அப்படிப் பேச விழைகையில், அந்தப்பக்கம் கேட்கத் தயாராக இருப்பது முக்கியம். ரிசீவர் சரி இல்லையெனில், அல்லது ஆஃப் மோடில் இருந்தால், ஒலி பரப்பி என்ன புண்ணியம்?//

    ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணன் இதுவும் 100 வீதம் கரிட்டூஊஊஊ.. எனக்கொரு அண்ணா சொன்னார் தன் மனைவி தான் என்ன கேட்டாலும் மெளனம்தானாம் பதில்... தான் எத்தனையோ தடவை பின்னால கதைபேசி அலுத்து நான் என்ன சுவரோடயா பேசுறேன் உன்னோடுதானே எனவும் சொல்லிப்பார்த்து.. ம்ஹூம்ம்.. இப்போ அவர்களுக்குள் பேசுவதென்பது மிகவும் குறைஞ்சுபோச்சு ஏதோ பிள்ளைகளுக்காக வாழ்க்கை நடத்துகின்றனர் என நினைக்க்கிறேன்..

    மனமொத்தால் மட்டுமே எதுவும் சாத்தியம்போலும்..

    ஆவ்வ்வ்வ் கண்ணதாசன் அங்கிள் பற்றிப் பேச்சு நடந்திருக்கே மீ இல்லாமல் போயிட்டேன்ன்:)).. இருப்பினும் எதுக்கும் ச்சும்மா ஜொள்ளி வைப்போம்ம் என்ன பாடல் எனக் கண்டு பிடிக்கினமோ பார்க்கலாம்..

    “வெண்ணிலா வானத்திலே நீயும் நானும்..
    மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்..”..

    பதிலளிநீக்கு
  76. ஹலோவ் மியாவ் :))

    வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்

    படம்: அவசரக் கல்யாணம்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: டி.ஆர். பாப்பா
    பாடியவர்: பி. சுசீலா

    வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
    மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
    //

    பதிலளிநீக்கு
  77. ஆஆஆஆவ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஊ அப்படியே சொக்கப்பனைபோல சொக்கிப் போனேன்ன்.. பல வருடமா இப்பாட்டை நினைப்பேன் ஒரு நாளாவது கேட்டதில்லை... இது ஏன் எனில்..

    ஒருநாள் ஹொஸ்டலில் நானும் என் நெருங்கிய தோழியான ஒரு முஸ்லிம் அக்காவும் நைட் நிலவில் பல்கனியிலே இருந்து கதைத்துக் கொண்டிருந்தபோது இப்பாட்டு வானலையில் தவழ்ந்து வந்து காதிலே விழுந்தது... அது நமக்காகவே போட்டதென நினைச்சு புல்லாஆஆஆஆஆஆஆஆரிச்சுப் போனேன்ன்ன்... வாவ்வ்வ்வ்வ்வ் மியாவும் நன்றி..

    அப்பூடியே என் பக்கம் ஸ்ரீராம் கேட்ட பாட்டையும் தேடி எடுத்து வாங்கோ பார்கலாம்.. பொற்கிழி தருவதா இல்லையா என:))

    பதிலளிநீக்கு
  78. ஸ்ரீராம் பாட்டை தேடோ தேடுன்னு தேடினேன் கிடைக்கலை கர்ர்ர்

    பதிலளிநீக்கு
  79. @ஸ்ரீராம் ஹீரோ யார் ? படம் பேரென்ன

    பதிலளிநீக்கு
  80. ஏஞ்சல்...

    //ஸ்ரீராம் பாட்டை தேடோ தேடுன்னு தேடினேன் கிடைக்கலை கர்ர்ர்//

    நானும் பலநாட்களாகத் தேடிக்கொன்டுதான் இருக்கிறேன்.

    //ஸ்ரீராம் ஹீரோ யார் ? படம் பேரென்ன//

    மறந்து போச்சே... சாந்தி கிருஷ்ணா ஹீரோயினோ என்றொரு சந்தேகம்...

    பதிலளிநீக்கு
  81. நன்று...

    கதையைப் படித்துக் கொண்டே வந்தால்.. இந்தப் படமா? எதிர்பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  82. ஶ்ரீராம் சொன்ன பாடல் அவர்கள் படம் பாலசந்தர் படம் கமல, ரஜினி நடித்த படம். சுஜாதா கதாநாயகி.

    பதிலளிநீக்கு
  83. //ஶ்ரீராம் சொன்ன பாடல் அவர்கள் படம் பாலசந்தர் படம் கமல, ரஜினி நடித்த படம். சுஜாதா கதாநாயகி.//

    ஆமாம் கோமதி அக்கா... தெரியும். எஸ் பி பி பாடல் அது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    ஒருவேளை ஏஞ்சலுக்கு நான் கொடுத்திருக்கும் பதில் பார்த்து இதைச் சொல்லி இருந்தீர்கள் என்றால்... அது வேறு பாடல். அதிரா தளத்தில் நான் கேட்டிருக்கும் கிளவிக்கு... சே.... அதிரா சின்ரோம்... கேள்விக்கு இங்கு பதில் சொல்லி இருக்கிறார் ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  84. கதை மனதை உருக வைத்து விட்டது

    பதிலளிநீக்கு
  85. நல்லாவே இருக்கு, கதையும் அதன் வாத விவாதங்களும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!