திங்கள், 25 ஜூன், 2018

"திங்க"க்கிழமை : புளிச்சகீரை ஊறுகாய்/ Gongura Pickle - அதிரா ரெஸிப்பி


புளிச்சகீரை ஊறுகாய்/ Gongura Pickle
ஸ்ஸ்ஸ்ஸ் பொறுங்கோ, எல்லாரும் வந்த பிறகு சமியலை ஆரம்பிக்கலாம்:))
ரு ஆறுமாதத்துக்கு முன்பு எங்கள் தமிழ்க் கடைக்கு ஒரு இலை வந்திருந்தது. இது என்ன இலை எனக் கேட்டேன்.. இதுதான் கொங்குறா கீரை .. இது கேரளாவில்தான் பேமஸ் என்றார் கடையில் நின்ற தம்பி. 


சரி எதுக்கும் எடுப்போம் என வாங்கி வந்து, எப்படிச் சமைப்பதெனத் தெரியாமல் அஞ்சுவை விளக்கம் கேட்ட இடத்தில், பருப்புச் சேர்த்து சமைக்கலாம் என்றா. அப்படியே செய்தேன் ஆனா பெரிதாக பிடிக்கவில்லை நமக்கு.

பின்பு வாங்குவதில்லை என விட்டு விட்டேன். சமீபத்தில் ஒரு குறிப்பு பார்த்தேன், அந்த இலையில் ஊறுகாய் செய்திருந்தார்கள்.. எனக்கு ஆசை வந்து விட்டது, கடைக்குப் போனால்.. என் நல்ல காலம், கொங்குறா இலைகள் வந்திருந்துது, உடனே வாங்கி வந்து ஊறுகாய் செய்தேன்.. சூப்பரோ சூப்பர்.. என்னா ஒரு சுவை. செய்த உடனே சாப்பிட கொஞ்சம் உறைப்பாக இருந்தது, வைத்துச் சாப்பிட சுவையோ சுவை.

இதுக்கு எண்ணெய் கொஞ்சம் அதிகமாகவே சேர்க்கோணும், ஆனால் நான் அப்படிச் சேர்க்கவில்லை. 
===============================இடைவேளை===============================
ந்த கொங்குறா ஊறுகாய் செய்த வாசத்தில:), உல்லாசக் கப்பல்கூட நம் ஏரியாவுக்கு வந்துதே:))... கிட்டவாகச் சென்று படமெடுத்தேன்.. அதே சூரியனின் தொல்லையால்:) கர்ர்ர்ர்ர்:).. படம் இருட்டாகி விட்டது. கப்பலில் பாருங்கோ.. நடுவிலே மேலே சுவிமிங் Pool தெரியுது.. அதில் பெரிய ரீவி இருக்கு. நான் படமெடுத்தபோது ரீவியிலே ரொம் அண்ட் ஜெரி போச்சுதா.. ரொம் ஜெரிக்கு அடிச்ச இடத்தில ஜெரி ஆத்தில ஜம்ப் பண்ணுவதை என் ரெண்டு கண்ணாலும் பார்த்தேன் எனச் சொன்னா நம்பவா போறீங்க:)) சரி விடுங்கோ சமையலைக் கவனிப்போம்:))
================()()()()()()================

தேவையானவை:
கொங்குறா இலைகள், செத்தல் மிளகாய் உங்கள் காரத்துக்கு ஏற்ப போடவும்.. கொஞ்சம் உறைப்பாகவும் இருந்தால்தான் ஊறுகாய் சுவையாக இருக்கும். கொஞ்சம் புளி, உப்பு, ஒரு 3,4 பற்கள் உள்ளி. மற்றும் நல்லெண்ணெய்.[எங்கே உள்ளியைக் காணேல்லை இங்கு எனத் தேடப்புடா கர்:)) அது செய்யும்போதுதான் இம்முறை வரும்:)]

செய்முறை:
முதலில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் மிளகாயை நன்கு முறுகப் பொரிச்சு எடுங்கோ, இறக்கும்போது அந்தச் சூட்டிலேயே புளியையும் போட்டு சூடுகாட்டி எடுங்கோ[இது என் ஐடியா:)]

பின்னர், மீண்டும் எண்ணெய் விட்டு.. இதில் நான் விட்ட எண்ணெய் போதாது, நீங்க இன்னும் கொஞ்சம் அதிகமாகவே விடலாம், எண்ணெயில் இலைகளைப்போட்டு நன்கு வதக்கோணும். வதங்கியதும் இப்படிக் கரைந்தது போல வரும்.. அந்தச் சூட்டில் உள்ளியையும் போட்டு இறக்குங்கோ.. உள்ளியை வதக்க தேவையில்லை[இதுவும் அதிராட ஐடியாத்தான்... “நீங்க எங்கேயோ போயிட்டீங்க அதிரா” என நீங்களெல்லாம் ஜொள்றது கேய்க்குது தங்கூ தங்கூஊ:))]

அடுத்து உப்புப் போட்டு, அனைத்தையும் சேர்த்து அந்த வதக்கிய எண்ணெயுடனே... மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். ஸ்ஸ்ஸ் இடிபட்டு என் அழகிய “மண் டிஸ்” ஐ உடைச்சுப் போடாதையுங்கோ கர்:)).. லைனில வந்தால் ஒவ்வொரு கரண்டி தருவேனாக்கும்:)..., வெள்ளை ரைஸ் உடன் சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும், மற்றும்படி பாண், ரொட்டி, புட்டு அனைத்துக்குமே ஒத்துப்போகுது இது.

பார்த்தீங்களோ.. பானுமதி அக்காவின் குறிப்புக்களைவிட ஈசியான குறிப்பெல்லோ இது:)).. இதுக்குத்தான் அதிராவின் சமையல் குறிப்புக்களைத் தேடித்தேடிச் செய்யுங்கோ என்றால் ஆருமே கேட்பதில்லை கர்ர்ர்ர்ர்ர்:)).

ஊசிக்குறிப்பு:
இது ஸ்ரீராமின் விசாளக்கிழமைப்:) பூக்களுக்கு எசப்பாட்டு:) எங்கட ஏரியாப் பூக்கள்..[அழகாயிருக்கு, நல்லாயிருக்கு எனும் சொற்கள் தடை செய்யப்பட்டுள்ளன:).. அதையும் தாண்டி ஏதாவது ஜொள்ளுங்கோ:)]

ஊசி இணைப்பு:
ஹா ஹா ஹா என்னா ஜோக்க் என்னா ஜோக்க் சிரிச்சதில் வயிறு நோகுது எனக்கு..:) உங்களுக்கு?:)) சரி சரி இதுக்கெல்லாம் முறைக்கக்கூடா:)).. ஊறுகாய் செய்யுங்கோ:))
>>>>>>>>>>__()__<<<<<<<<<<

125 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஓ இன்று பூஸாரின் ரெசிப்பியா...சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். பழைய ஃபார்முக்கு வந்தாச்சா!

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  6. ஜோக்கு ஜோக்கு ஹா ஹா ஹா ஹா

    குடிகாரன் கண்ணுக்கு ரெட்டையா இல்லையா தெரியும்! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

    பதிலளிநீக்கு
  9. புளிச்ச கீரை மசியல் என்றாலே
    நாலு கவளம் சோறு கூடுதலா இறங்கும்..

    அதுவும் பூஸாரோட ரெசிப்பி...ன்டால்
    கேக்கவும் வேணுமோ!?...

    பதிலளிநீக்கு
  10. பூக்கள் டாலியா போல இருக்கு ஆனா கொஞ்சம் வித்தியாசமா ......எல்லா பூக்களுக்கும் இப்ப நீங்க எங்களை அறிமுகப்படுத்தறீங்கல்ல அதான் இப்படி வெக்கப்பட்டு பிங்காகி நிக்குது எல்லாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அந்தத் தம்பி யாரு அதிரா?!! ஜூப்பரா சொல்லிருக்கார்!!! அந்தத் தம்பிய அப்புறம் பாத்தீங்கனா சொல்லுங்க....கோங்குரா ஆந்திரா ரெசிப்பி அங்குதான் செய்வதுண்டு...கேரளத்தில் கோங்குரா ஃபேமஸா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ....

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ரொம் ஜெரிக்கு அடிச்ச இடத்தில ஜெரி ஆத்தில ஜம்ப் பண்ணுவதை என் ரெண்டு கண்ணாலும் பார்த்தேன் எனச் சொன்னா நம்பவா போறீங்க:)) சரி விடுங்கோ // ஹஹாஹா ஹாஹா ரொம் அல்லஓ குதிப்பதை நான் என் ரெண்டு கண்ணால் பார்த்தேன் அவருக்கு தேம்ஸில் குதிகுதித்துப் பழக்கமல்லோ...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  13. இதுநான் வீட்டில் கிடைக்கும் போதெல்லாம் செய்வதுண்டு. என் மகனுக்கும் செய்து கொடுத்துவிட்டுள்ளேன் அப்ப புளியை கொஞ்சம் சூட்டில் போட்டுத்தான் அரைப்பேன்.

    மிகவும் பிடிக்கும். எனக்கும் என் மகனுக்கும். சாம்பார் செய்யலாமே. புளி ரொம்பப் போட வேண்டாம். நன்றாக இருக்கும். சரி அப்பால வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. துரை அண்ணா ஆமாம் புளிச்ச கீரை மசியல் செமையா இருக்கும்....

    கீதா

    பதிலளிநீக்கு
  15. கோங்குரா கீரை ஆந்திராவின் சிறப்பு இல்லையோ? இந்தப் பூஸாருக்குக் கேரளம்னு சொன்னது யாரு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நாங்க நிறையச் சாப்பிட்டிருக்கோம். கொஞ்சம் நாட்கள் முன்னர் கோங்குரா சட்னி செய்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சாதம் கலந்து சாப்பிட வைச்சுக் கொண்டிருந்தேன். இப்போப் பொடி வகையறாவுக்கு மாறியாச்சு! :)))))

    பதிலளிநீக்கு
  16. பூஸார் ஊசி இணைப்புக் கொடுத்திருப்பது பலமுறை சுத்திச் சுத்தி வந்தாச்சு! பூக்கள் என்னமோ சோகை பிடிச்சாப்போல் வெளுத்து இருக்கே! இதான் நிறமா?

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீராம் ஐந்து கிளவிகள், சே, எல்லாம் இந்தப் பூஸாரால் வந்தது, கேள்விகள்னு கூகிள் பண்ணினால் என்னென்னமோ வந்தது, பயந்துட்டேன். நீங்களே லிங்க் கொடுங்க! :))))

    பதிலளிநீக்கு
  18. //http://geetha-sambasivam.blogspot.com/2018/06/blog-post.html// ஹிஹிஹி, எல்லாம் ஒரு விளம்பரந்தேன்! :))))))

    பதிலளிநீக்கு
  19. கீதா அக்கா... ஐந்து கேள்விகள் பதிவை கூகிளில் தேடக்கூடாது. எங்கள் பதிவில் தேடவேண்டும்! அப்புறம் தேடி லிங்க் தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இன்று சகோதரி அதிராவின் கோங்குறா ஊறுகாய் பிரமாதமாக உள்ளது. ஆந்திரா கோங்குறா பச்சடி கேள்விபட்டுள்ளேன். செய்ததில்லை. அங்குள்ள உணவுகள் எப்போதும் காரம் அதிகமாக இருக்கும். அதற்கேற்றபடி அதிராவும் காரமாக ஊறுகாய் செய்துள்ளார்.அருமையாக படங்களும் செய்முறையும் தந்த சகோதரி அதிராவுக்கு பாராட்டுகள்.

    பூக்கள் படம் மிகவம் தடை செய்யபட்ட வார்த்தைகளையும் தாண்டி மிகவும் ரசிக்கத்தக்க விதத்தில் உள்ளது பூக்களின் படத்தையும், கூடவே கண்ணழகியையும் பகிர்ந்த சகோதரி அதிராவுக்கு நன்றிகள். வாழ்த்துகள்.

    நகைச்சுவையும் அருமை. அந்த கணவன் பெண் பார்க்க போனதிலிருந்தே ஆரம்பித்து விட்டார் போலும். பாவம்..
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. அதிராவை நம்பி முனியய்யா மேல் பாரத்தை போட்டு கீரை வாங்கி வீட்டில் செய்ய சொல்லப்போறேன்.

    சிவாஸ் ரீகல் சிவசம்போவின் நகைச்சுவை ஸூப்பர்

    பதிலளிநீக்கு
  22. ///இதுக்கு எண்ணெய் கொஞ்சம் அதிகமாகவே சேர்க்கோணும்///

    உங்க குறிப்பை செய்து பார்க்க கொங்குரா இலை வாங்கிட்டேன் ஆனால் அதில் உங்களையும் சேர்க்கணும் என்று குறிப்பி போட்டு இருக்கீங்க... ஆமாம் என்ப்ப வரீங்க

    பதிலளிநீக்கு
  23. காலை வணக்கம் 🙏

    கோங்கூரா ஆந்திரப் பிரதேசத்தில் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். கோங்கூரா பச்சடியும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  24. கோங்குரா கீரைல ஊறுகாயா? எனக்குப் பிடிக்கும்னு தோணலை. கீதா ரங்கன் (அக்கா) என்றைக்காவது செய்து எனக்குக் கொடுத்தால்தான் உண்டு.

    செய்முறையை இன்டெரெஸ்டில் ஆக எழுதியிருக்கீங்க. சுட சாத்த்துக்கு நல்லா இருக்கும்னு (ஐயையோ... அட்டஹாசமா இருக்கும்னு) தோணுது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  25. ஊசிக்குளிப்பு ரசிக்கும்படி இருந்தது. குடிப்பவனுக்கு ஒரு பொருள் இரண்டாகத் தெரியாதோ? ஒன்றே சமாளிக்கமுடியாதபோது இரண்டு.... பாவம்தான்.

    பதிலளிநீக்கு
  26. செய்முறைக் குறிப்பு ஈசியாத்தான் இருக்கு. அதை ஆசையாச் செய்துபார்த்திட்டு, சரியா வராம உங்களைத் திட்டறதுக்காக தேடி வருவோமோன்னு "நீங்க எங்கேயோ போய்ட்டீங்க அதிரா"

    பதிலளிநீக்கு
  27. //எப்படிச் செய்வது எனத் தெரியாமல் அஞ்சுவிடம் விளக்கம் கேட்டேன்//- ஏற்கனவே இரண்டு மாசத்தில் மூணே மூணு செய்முறை, "தேவதையின் கிச்சன்"ல போட்டிருக்காங்க. அடுத்தது என்ன செய்யறதுன்னு அவங்களுக்கே தெரியலை. இதுல உங்க பாராட்டையும் படிச்சாங்கன்னா, தான்தான் ராம்சேயின் மென்டர் என்று சொன்னாலும் சொல்வாங்க. அதுகூட பரவாயில்லை.. இன்னும் என்ன என்ன செய்முறைலாம் அவங்ககிட்டேயிருந்து வருமோ.... உங்களுக்கு ஏன் எங்கமேல ஆத்திரம்?

    பதிலளிநீக்கு
  28. ஆனாலும் உங்களுக்கு தைரியம் அதிகம்...! ஹிஹி,,,

    பதிலளிநீக்கு
  29. >>> அழகாயிருக்கு, நல்லாயிருக்கு எனும் சொற்கள் தடை செய்யப்பட்டுள்ளன:).. <<<

    சரி!...

    அழகா நல்லாயிருக்கு!?...

    இது அழகாயிருக்கா!.. இல்லேன்னா -

    நல்ல அழகாயிருக்கு!?...

    இது நல்லாயிருக்கா!...

    ரெண்டுமே சரியில்லேன்னா -

    அழகா இருக்கிறதை நல்லா வெச்சுக்குங்கோ..
    நல்லா இருக்கிறதை அழகா வெச்சுக்குங்கோ!..

    இதுவும் சரியில்லேன்னா -
    ஆளா வுடுங்க ஜாமியோ....வ்!..

    பதிலளிநீக்கு
  30. அதெல்லாம் இருக்கட்டும்...

    ஏதாவது - காய்!..

    எலுமிச்சங்காய்/பழம், மாங்காய், களாக்காய், கடாரங்காய், நாரத்தங்காய் -
    இதுகளை உப்புல போட்டு ஊற வெச்சா - அதுதான் ஊறுகாய்!...

    இந்த மாதிரி காட்டுக் கீரை, நாட்டுக் கீரை, புளிச்சக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை
    இதெல்லாம் வதக்கி வெச்சா அது எப்புடி ஊறுகாய்..ன்னு ஆகும்!?...

    நீதி கெடைச்சாகணும்!..

    பதிலளிநீக்கு
  31. கோங்குரா சட்னி, துவையல் , ஊறுகாய் எல்லாம் ஆந்திரா புகழ். அந்த தம்பிக்கு தெரியாது போலும் .

    அதிராவின் ஊறுகாய் செய்முறை நன்றாக இருக்கிறது.
    இங்கு கிடைக்கிறது பச்சைபசேல் என்று இல்லாமல் பழுத்து போன இலைகளுடன் அதனால் வாங்கவில்லை.

    //இது ஸ்ரீராமின் விசாளக்கிழமைப்:) பூக்களுக்கு எசப்பாட்டு:) எங்கட ஏரியாப் பூக்கள்..[அழகாயிருக்கு, நல்லாயிருக்கு எனும் சொற்கள் தடை செய்யப்பட்டுள்ளன:).. அதையும் தாண்டி ஏதாவது ஜொள்ளுங்கோ:)]//

    அதிரா பகிர்ந்த பூக்கள் அற்புதம் . இயற்கையின் படைப்பில் அனைத்தும் அழகே!

    பதிலளிநீக்கு
  32. ஊசி இணைப்பு சிரிக்க வைத்தது உண்மை.

    பதிலளிநீக்கு
  33. முதலில் கோங்குரா ஆந்திர ஸ்பெஷல் எனக்குப் பிடிக்காது இருந்தாலும் வலை வழக்கப்படி அருமை என்றுசொல்லிச் செல்கிறேன்

    பதிலளிநீக்கு
  34. அருமையா இருக்கே..


    நாங்க பூண்டு போடாம வடகம் சேர்த்து தாளிப்போம்..இது புதுசு தான் எனக்கு..

    இதோ நாளக்கி செய்றேன் படம் போடுறேன்...

    ok அதிரா...

    பதிலளிநீக்கு
  35. ஆஆஆஆஆஆவ்வ் என்னாதூஊஊஊஊஊஊ புளிச்ச கீரையில ஊறுகாயோ?:) இதை மனிசர் சாப்பிடுவினமோ?:).. அப்படிக் கீரையில ஊறுகாய் செய்யும் தெகிறியம் ஆருக்கு வந்தது?... ஹையோ ஆண்டவா என்ன இது கீழே அதிரா எனப் போட்டிருக்கே... ஓ மைக் கடவுளே....:)) தெரியாம அவசரப்பட்டு உளறிட்டமோ:). கடவுளே இது ஆர் கண்ணிலும் பட்டிடக்கூடா:))..

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ் என் ரெசிப்பியா இன்றூஊஊஊஊ ஹையோ இண்டைக்கும் மீ ஹெட்டைக் காட்டுவதில்லை வெளியே என இருந்தேனே:)).. ஹாண்ட் ஐக் காட்ட வச்சிட்டார் ஸ்ரீராம் ஹா ஹா ஹா:) நன்றி நன்றி.

    வாவ்வ்வ்வ் என்னா ஒரு யூப்பர் டிஸ்ஸ்:)) பார்க்கவே சாப்பிடோணும் என வருகுதெல்லோ .. அது உண்மைதான் நிஜமா... ஜத்தியமா.. சூப்பரோ சூப்பர்ர்.....இதனுடனேயே எதையும் சாப்பிடலாம் வேறு கறியே தேவையில்லை...

    பதிலளிநீக்கு
  36. ///ஸ்ரீராம். said...
    துரை ஸார்... இது ஊறுகாய் அல்ல... ஊறுகீரை...!!///

    ஓ மை வைரவா!!!.. மக்கள் தவறு செய்தா... அரசனிடம் முறையிடலாம்:)).. அந்த அரசனே.... ???? யாரிடம் போய் முறையிடுவது?:)..

    சட்டை கிழிஞ்சுதுன்னாஆஆஆஆஆ..... தச்சு முடிச்சிடலாம்ம்... நெஞ்சு கிழிஞ்சிடுச்சே... எப்பூடி நானும் தைப்பேன்ன்:))..

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  37. வாங்கோ கீதா, துரை அண்ணன், பானுமதி அக்கா...

    ///ஓ இன்று பூஸாரின் ரெசிப்பியா...சூப்பர்

    கீதா///

    ஆவ்வ்வ்வ் அதிரா எண்டாலே சூப்பர் என.. ஹையோ டங்கு ச்லிப்பாகுதே...:) அதிராவின் ரெசிப்பி எண்டாலே சூப்பர் என கீதாவுக்குத் தெரிஞ்சிருக்கு.... :) இதை எபோ எல்லோரும் தெரிஞ்சு கொள்ளப் போகினமோ?:))

    பதிலளிநீக்கு
  38. //குடிகாரன் கண்ணுக்கு ரெட்டையா இல்லையா தெரியும்! ஹா ஹா ஹா ஹா

    கீதா//

    ஹா ஹா ஹா அதில உள்ள கருத்தை நான் ரொம்ப ரசிச்சேன்ன்:) ஏனெனில் பல வீடுகளில் இப்படி சிட்டுவேஷனில் சண்டைப்பிடித்து வீடு அலங்கோலப்பட்டுவிடும்.. இது எவ்ளோ நகைச்சுவையாக சொல்லி சிரிக்க வைக்கிறார்கள் இருவரும்:))..

    பதிலளிநீக்கு
  39. //துரை செல்வராஜூ said...
    புளிச்ச கீரை மசியல் என்றாலே
    நாலு கவளம் சோறு கூடுதலா இறங்கும்..

    அதுவும் பூஸாரோட ரெசிப்பி...ன்டால்
    கேக்கவும் வேணுமோ!?...///

    ஆவ்வ்வ்வ் துரை அண்ணன் எண்டால் துரை அண்ணன் தான்.. அது கலா அண்ணியோடு திருச்செந்தூர் போனதிலிருந்து துரை அண்ணன் ரொம்ப நல்லவராகிட்டார்ர்:)) நன்றி நன்றி..

    ஹையோ அடுத்து ஏதும் வேட்டு வச்சிடுவாரோ:))

    பதிலளிநீக்கு
  40. //Thulasidharan V Thillaiakathu said...///

    //பூக்கள் டாலியா போல இருக்கு ஆனா கொஞ்சம் வித்தியாசமா ......எல்லா பூக்களுக்கும் இப்ப நீங்க எங்களை அறிமுகப்படுத்தறீங்கல்ல அதான் இப்படி வெக்கப்பட்டு பிங்காகி நிக்குது எல்லாம். //

    ரோட்டோரங்களில் இப்படி சில இடங்களில் வேலியாக இருக்குது கீதா.. அது பிங்கும் அல்ல ஒரு லைட் பேப்பிள்.

    டேலியா போலத்தான் ஆனா அது ஒற்றை இதழ்போல எல்லோ இருக்கும்.. இது தடிச்சது அதுவும் நடுவில் பாருங்கோ என்னா ஒரு அழகு.

    பதிலளிநீக்கு
  41. //அந்தத் தம்பி யாரு அதிரா?!! ஜூப்பரா சொல்லிருக்கார்!!! அந்தத் தம்பிய அப்புறம் பாத்தீங்கனா சொல்லுங்க....கோங்குரா ஆந்திரா ரெசிப்பி அங்குதான் செய்வதுண்டு...கேரளத்தில் கோங்குரா ஃபேமஸா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ....

    கீதா///

    ///Geetha Sambasivam said...
    கோங்குரா கீரை ஆந்திராவின் சிறப்பு இல்லையோ? இந்தப் பூஸாருக்குக் கேரளம்னு சொன்னது யாரு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,///

    ஹா ஹா ஹா ரெண்டு ஸ்டேட்மெண்ட்ஸ் ஐயும் பார்க்கும்போது.. ஒண்ணு மட்டும் நல்லாவே புரியுது:) அதிராவில எவ்ளோ தும்பிக்கை சே..சே... டங்கு சேஷ்டை பண்ணுதே:) எவ்ளோ நம்பிக்கை உங்களுக்கெல்லாம்:))..

    அந்தத்தம்பி கரெக்ட்டாத்தான் சொல்லியிருப்பார் நான் தான் கொழுக்கட்டைக் கதைபோல கேரளா ஆக்கியிருப்பேனெ ந நினைக்கிறேன்:) ஏனெனில் எனக்க்கு எப்பவும் ஆந்திரா.. கேரளா குழப்பமுண்டெல்ல்லோ:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  42. //ஹஹாஹா ஹாஹா ரொம் அல்லஓ குதிப்பதை நான் என் ரெண்டு கண்ணால் பார்த்தேன் அவருக்கு தேம்ஸில் குதிகுதித்துப் பழக்கமல்லோ...ஹா ஹா ஹா ஹா

    கீதா//

    ஹா ஹா ஹா யூம்:) பண்ணிப் பாருங்கோ கீதா ரீவி தெரியுதெல்லோ... நான் வீடியொவும் எடுத்தேன்.. படம் போவது தெரிஞ்சுது ரிவியில்... ஆனாலும் அதில எனக்கொரு டவுட்டூ... ஜெரியை ரொம் தள்ளி விட்டுதோ இல்ல ஜெரியே சூஊஊஊஊ சைட்டுப் பண்ணிச்சுதோ எண்டுதேன்ன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  43. //Thulasidharan V Thillaiakathu said...
    இதுநான் வீட்டில் கிடைக்கும் போதெல்லாம் செய்வதுண்டு. என் மகனுக்கும் செய்து கொடுத்துவிட்டுள்ளேன் அப்ப புளியை கொஞ்சம் சூட்டில் போட்டுத்தான் அரைப்பேன்.//

    நான் அந்த சுவையின் ஆசையால ஒன்லைனில் தேடினேன்.. அமேசனில் போத்தலில் கிடைக்குதே அவ்வ்வ்வ்வ்:))

    பதிலளிநீக்கு
  44. வாங்கோ கீசாக்கா..

    ///கொஞ்சம் நாட்கள் முன்னர் கோங்குரா சட்னி செய்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சாதம் கலந்து சாப்பிட வைச்சுக் கொண்டிருந்தேன். இப்போப் பொடி வகையறாவுக்கு மாறியாச்சு! :)))))///

    ஓ.. இங்கு ஆரும் கொங்குரா ரெசிப்பி போட்டு நான் காணவில்லை.

    //பூஸார் ஊசி இணைப்புக் கொடுத்திருப்பது பலமுறை சுத்திச் சுத்தி வந்தாச்சு! பூக்கள் என்னமோ சோகை பிடிச்சாப்போல் வெளுத்து இருக்கே! இதான் நிறமா?///

    அதேதான் கலர் கீசாக்கா.. அப்படியே எடுத்து இப்பூடியே அனுப்பினேன்ன்.. அது ஒரு வித மெல்லிய பேப்பிள்.

    பதிலளிநீக்கு
  45. //Geetha Sambasivam said...
    ஸ்ரீராம் ஐந்து கிளவிகள், சே, எல்லாம் இந்தப் பூஸாரால் வந்தது, கேள்விகள்னு கூகிள் பண்ணினால் என்னென்னமோ வந்தது, பயந்துட்டேன். நீங்களே லிங்க் கொடுங்க! :))))//

    எதுக்கு இப்போ உங்களுக்கு அஞ்சு கிளவிகள்?:) ஏதும் ஆயுத பூஜையோ?:) ஆள்[கிளவி] பத்தாட்டிச் சொல்லுங்கோ.. என் செக்கை:) .. பே-லீவில அனுப்பி வைக்கிறேன்ன்:)) இதுகூடவா செய்ய மாட்டேன்ன்:))

    பதிலளிநீக்கு
  46. //http://geetha-sambasivam.blogspot.com/2018/06/blog-post.html//

    ஆவ்வ்வ்வ் இந்த மாதமே கீசாக்கா ரெசிப்பி போட்டிருக்கிறா நான் பார்க்கவில்லையே...

    நன்றி கீசாக்கா.

    பதிலளிநீக்கு
  47. வாங்கோ கமலா சிஸ்டர்...

    ///பூக்கள் படம் மிகவம் தடை செய்யபட்ட வார்த்தைகளையும் தாண்டி மிகவும் ரசிக்கத்தக்க விதத்தில் உள்ளது பூக்களின் படத்தையும்,//

    ஹா ஹா ஹா நன்றி.

    /// கூடவே கண்ணழகியையும் பகிர்ந்த சகோதரி அதிராவுக்கு நன்றிகள். வாழ்த்துகள். //

    இவ கண்ணழகி அல்ல.. கண்ணகியை விடப் பெரிசூஊஊஊஊஉ.. கண்ணகிக்கு மேற்புறமாக சுவிமிங் பூல் இல்லையாக்கும்:))

    மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  48. //KILLERGEE Devakottai said...
    அதிராவை நம்பி முனியய்யா மேல் பாரத்தை போட்டு கீரை வாங்கி வீட்டில் செய்ய சொல்லப்போறேன்.//

    வாங்கோ கில்லர்ஜி:) ஆவ்வ்வ்வ் முனியைய உங்கட பாரத்தை எல்லாம் தாங்குவாரோ தெரியாது எதுக்கும் நீங்க உங்கட ஜாம்ஸ் ஊரணியில போட்டிட்டு ஆரம்பியுங்கோ ஹா ஹா ஹா..

    //சிவாஸ் ரீகல் சிவசம்போவின் நகைச்சுவை ஸூப்பர்//
    ஹா ஹா ஹா அவர் வாயைத்திறந்தாலே சூப்பர்தானே.. நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  49. கரந்தை ஜெயக்குமார் said...
    அருமை//

    வாங்கோ.. நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
  50. ஆஆஆஆவ்வ் ட்றுத்ட ஹெட் தெரியுதே:)..

    //Avargal Unmaigal said...
    ///இதுக்கு எண்ணெய் கொஞ்சம் அதிகமாகவே சேர்க்கோணும்///

    உங்க குறிப்பை செய்து பார்க்க கொங்குரா இலை வாங்கிட்டேன் ஆனால் அதில் உங்களையும் சேர்க்கணும் என்று குறிப்பி போட்டு இருக்கீங்க... ஆமாம் என்ப்ப வரீங்க///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதைப் படிச்சதும் எனக்கும் ஒரு பள்ளிக்கால நினைவு வந்து சிரிப்பு வந்திட்டுது:) ... ஒரு அண்ணா கேட்டார்ர்.. “உங்களுக்கு என்னயும்:) வேணுமா?” என.. நான் ஒரு கணம் ஆடிப்போயிட்டேன்:).. அது என்ன சம்பவம் என்பதனை புளொக்கில் ஒருதடவை எழுதி விடுறேன்ன்:)) ஹா ஹா ஹா .. மிக்க நன்றி ட்றுத்.

    பதிலளிநீக்கு
  51. அதிரடி, புதுசாப்பதிவு போட்டு 2 நாளாகுது! உங்களை எங்கே காணோம்? அப்புறமா அப்டேட்டே ஆகலைனு சொல்லுவீங்க! இங்கே எங்கள் ப்ளாகின் இடப்பக்க சைட் பாரில் பார்த்தால் தெரியும்! எங்கே! அதெல்லாம் ஒழுங்காப் பார்க்கிறதே இல்லை! எப்போப்பார்த்தாலும் தேம்ஸில் குதிக்கிறேன்னு பயமுறுத்திட்டுக் கடைசியிலே குதிக்கிறதும் இல்லை! :)))) பதிவுக்கும் ஒழுங்கா வரதில்லை! :))))

    பதிலளிநீக்கு
  52. Geetha Sambasivam said...
    ஸ்ரீராம் ஐந்து கிளவிகள், சே, எல்லாம் இந்தப் பூஸாரால் வந்தது, கேள்விகள்னு கூகிள் பண்ணினால் என்னென்னமோ வந்தது, பயந்துட்டேன். நீங்களே லிங்க் கொடுங்க! :

    நான் சொன்ன அஞ்சு கேள்வி பதிவு...

    http://engalblog.blogspot.com/2012/05/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  53. கீசா மேடம் - //பதிவுக்கும் ஒழுங்கா வரதில்லை! :))))// - இது யாருக்குச் சொன்னீங்க? உங்கள் இடுகைக்கு பின்னூட்டம் போட்டால், இத்தனை நாளாகியும் இன்னும் வெளியிடலை. வெளியிட்டால் மறுமொழி காணோம்.

    பதிலளிநீக்கு
  54. //இத்தனை நாளாகியும் இன்னும் வெளியிடலை. வெளியிட்டால் மறுமொழி காணோம்// நெ.த. எந்தப் பதிவில்? எல்லாத்துக்கும் ஒழுங்கா பதில் கொடுத்திருக்கேன். நீங்க தான் பார்க்கலை! கீரைப் பதிவிலும் பதில் சொல்லியாச்சு. ஊரைச் சுற்றிய பதிவிலும் நேத்தே பதில் கொடுத்தாச்சு. நீங்க தூங்கிட்டீங்க போல! :))))))

    பதிலளிநீக்கு
  55. ஆன்மிகப் பயணம் பதிவில் பதிலையே ஒரு பதிவாக்கிட்டேன்.:) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் கரெக்டாச் சொல்லிட்டேனாக்கும்! எதிர்பாராத் தடங்கல்னாத் தான்! :(

    பதிலளிநீக்கு
  56. //நெ.த. said...
    கீசா மேடம் - //பதிவுக்கும் ஒழுங்கா வரதில்லை! :))))// - இது யாருக்குச் சொன்னீங்க? உங்கள் இடுகைக்கு பின்னூட்டம் போட்டால், இத்தனை நாளாகியும் இன்னும் வெளியிடலை. வெளியிட்டால் மறுமொழி காணோம்.///

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா...

    https://www.youtube.com/watch?v=Z-JW-bE4PTc

    பதிலளிநீக்கு
  57. ஒரு கருத்துக்கு மூன்று கருத்துப் பதிஞ்சிருக்கேன்!:)))) போய்ப் பார்க்காமலேயே சொல்லறீங்க?

    பதிலளிநீக்கு
  58. அதிரடி, என்னோட பதிவுக்கு வரவும் இல்லை. கருத்துச் சொல்லவும் இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதிலே சிரிப்பு! :)

    பதிலளிநீக்கு
  59. அதிரடி, இந்தப் பாட்டுக்கு எங்க பொண்ணு என்ன ஆட்டம் ஆடுவா தெரியுமா? உங்க பூசாரெல்லாம் ஒண்ணுமே இல்லை! :))))) இப்போக் குட்டிக் குஞ்சுலு, பட்டுக் குட்டிக் குஞ்சுலு, ஹனுமான் சாலீஸாவுக்கு ஆடறது!

    பதிலளிநீக்கு
  60. //வெங்கட் நாகராஜ் said...
    காலை வணக்கம் 🙏

    கோங்கூரா ஆந்திரப் பிரதேசத்தில் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். கோங்கூரா பச்சடியும் நன்றாக இருக்கும்.

    June 25, 2018 at //

    வாங்கோ வெங்கட்... ஓ அது ஆந்திராதான் போல நான் தான் தப்பா சொல்லிட்டேன்.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  61. நெ.த. said...
    கோங்குரா கீரைல ஊறுகாயா? எனக்குப் பிடிக்கும்னு தோணலை. கீதா ரங்கன் (அக்கா) என்றைக்காவது செய்து எனக்குக் கொடுத்தால்தான் உண்டு.//

    வாங்கோ நெல்லைத்தமிழன்.. ஹையோ உங்களுக்குப் பிடிக்குமென்று நினைச்சேன்ன்.. கிட்டத்தட்ட உங்கள் புளி மிளகாய் ரெசிப்பி போலவே இருந்துதே... உங்களுக்குப் பிடிக்கும் செய்து பாருங்கோ.

    கீதா ரங்கன் அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஓடிக் கமோன்ன்ன்:) உங்க தம்பி ஆசையாத் தேடுறார்ர்:))

    //செய்முறையை இன்டெரெஸ்டில் ஆக எழுதியிருக்கீங்க. சுட சாத்த்துக்கு நல்லா இருக்கும்னு (ஐயையோ... அட்டஹாசமா இருக்கும்னு) தோணுது. பாராட்டுகள்//

    அதேதான் சுட்ட சாதம் இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சுடும் சாதத்துக்கு நல்லாயிருக்கும்:)) ஹா ஹா ஹா நன்றி.

    பதிலளிநீக்கு
  62. //நெ.த. said...
    ஊசிக்குளிப்பு ரசிக்கும்படி இருந்தது. குடிப்பவனுக்கு ஒரு பொருள் இரண்டாகத் தெரியாதோ? ஒன்றே சமாளிக்கமுடியாதபோது இரண்டு.... பாவம்தான்.//

    ஹா ஹா ஹா அது கில்லர்ஜியின் சிறி சிவசம்போ அங்கிள் ஜொன்னது:))

    பதிலளிநீக்கு
  63. //நெ.த. said...
    செய்முறைக் குறிப்பு ஈசியாத்தான் இருக்கு. அதை ஆசையாச் செய்துபார்த்திட்டு, சரியா வராம உங்களைத் திட்டறதுக்காக தேடி வருவோமோன்னு "நீங்க எங்கேயோ போய்ட்டீங்க அதிரா"//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நம்மளை நாமளே புகழாட்டில் வேறு ஆர்தான் புகழுவினம் என.. எபூடிக் கிட்னியை ஊஸ் பண்ணி எழுதினாலும்:)) அதுக்கு மேலால அடிச்சுத் துவைக்கிறாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  64. //நெ.த. said...
    //எப்படிச் செய்வது எனத் தெரியாமல் அஞ்சுவிடம் விளக்கம் கேட்டேன்//- ஏற்கனவே இரண்டு மாசத்தில் மூணே மூணு செய்முறை, "தேவதையின் கிச்சன்"ல போட்டிருக்காங்க. அடுத்தது என்ன செய்யறதுன்னு அவங்களுக்கே தெரியலை. இதுல உங்க பாராட்டையும் படிச்சாங்கன்னா, தான்தான் ராம்சேயின் மென்டர் என்று சொன்னாலும் சொல்வாங்க. அதுகூட பரவாயில்லை.. இன்னும் என்ன என்ன செய்முறைலாம் அவங்ககிட்டேயிருந்து வருமோ.... உங்களுக்கு ஏன் எங்கமேல ஆத்திரம்?///

    ஹா ஹா ஹா :) அவவுக்கு ஒரு நினைப்பு தான் பெரிய சமையல்ராணி:) இதில தனிக்கிச்சின் எல்லாம் வச்சிருக்கிறேன் என:)).. ஆனா விரைவில அவ சமையல் புளொக்கை வித்தே எல்லோருக்கும் இன்சூரன்ஸ் கட்ட வேண்டி வரப்போகுதூஊஊஊ ஹா ஹா ஹா மிக்க நன்றி நெ.தமிழன்.. அதுசரி எப்போ ஊறுகாய் செய்யப்பொறீங்க?:)
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  65. //திண்டுக்கல் தனபாலன் said...
    ஆனாலும் உங்களுக்கு தைரியம் அதிகம்...! ஹிஹி,,,//

    வாங்கோ டிடி.. ஆரைச்சொல்லுறீக?:) ஹா ஹா ஹா.. குறிபை அனுப்பியவரையா? இல்ல வெளியிட்டவரையோ?:) ஹா ஹா ஹா நன்றி.

    பதிலளிநீக்கு
  66. //Nagendra Bharathi said...
    அருமை//

    வாங்கோ... கப்பலோ பூவோ சமையலோ எதைச் சொல்றீங்க?:) மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  67. @ துரை அண்ணன்
    //அழகா இருக்கிறதை நல்லா வெச்சுக்குங்கோ..
    நல்லா இருக்கிறதை அழகா வெச்சுக்குங்கோ!..

    இதுவும் சரியில்லேன்னா -
    ஆளா வுடுங்க ஜாமியோ....வ்!..//

    ஹா ஹா ஹா என் ரெசிப்பி பார்த்து துரை அண்ணனுக்கு என்னமோ ஆச்சே ஆவ்வ்வ்வ்வ் இதுக்கு மீ பொறுப்பில்லை:) ஹையோ ஆண்டவா இங்குள்ளோரைச் சமாளிப்பதை விட தேம்ச்ல குதிப்பது எவ்ளோ பெட்டர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  68. //துரை செல்வராஜூ said...
    அதெல்லாம் இருக்கட்டும்...


    இந்த மாதிரி காட்டுக் கீரை, நாட்டுக் கீரை, புளிச்சக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை
    இதெல்லாம் வதக்கி வெச்சா அது எப்புடி ஊறுகாய்..ன்னு ஆகும்!?...

    நீதி கெடைச்சாகணும்!..////

    இதென்ன இது புது ரெசிப்பி ஜொன்னா அடிக்க வாறாங்க கர்ர்ர்:)) அதிரா எது செஞ்சாலும் புதுமையா இருக்குமெண்டு ஜொனேன் தானே:)) ஹையோ மருதஹில்:) வேலா பீஸ்ஸ்ஸ்ஸ் சேஃப் மீஈஈஈ:))

    பதிலளிநீக்கு
  69. நெல்லை அந்த "கீதா அக்கா" அப்படின்றதுல சவுன்ட் ஓவரா அழுத்தமா தெரியுதே!!! ஹா ஹா ஹா சரி சரி ஸவுன்ட் விட்டுக்கோங்க...கோங்குரா தானே....செஞ்சு தரேன் ...ஆனா அதுல வைச்சுருவேன் ஆப்பு!! ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  70. வாங்கோ கோமதி அக்கா..

    இல்ல அந்த தமிபியில் தப்பிருக்காது:) நான் தான் குழப்பிட்டேன் என நினைக்கிறேன் ஹா ஹா ஹா:)

    //இங்கு கிடைக்கிறது பச்சைபசேல் என்று இல்லாமல் பழுத்து போன இலைகளுடன் அதனால் வாங்கவில்லை.//

    இங்கும் வந்து சேர 2 நாள் ஆகிடுது ஆனாலும் பச்சையா இருந்துது சிலது பழுக்க ஆரம்பித்திருந்தது... கடைக்காரர்களும் பாவம் தானே இவ்ளோ தூரத்தில் இருந்து எடுப்பிச்சு தாறாங்க.. பழுத்து விட்டதென்று நாம் வாங்காட்டில் ஆரு வாங்குவா என நினைப்பேன்.. ஆனா எங்கள் கடைத்தம்பி, இலைகள் கொஞ்சம் வாடி விட்டதெனில், தானாகவே விலை குறைப்பார் எடுக்கச் சொல்லி..

    //அதிரா பகிர்ந்த பூக்கள் அற்புதம் . இயற்கையின் படைப்பில் அனைத்தும் அழகே!//
    மிக்கநன்றிகள் கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
  71. //G.M Balasubramaniam said...
    முதலில் கோங்குரா ஆந்திர ஸ்பெஷல் எனக்குப் பிடிக்காது இருந்தாலும் வலை வழக்கப்படி அருமை என்றுசொல்லிச் செல்கிறேன்//

    வாங்கோ ஜி எம் பி ஐயா...

    உங்களுக்கு இங்கு வெளிவரும் எந்த சமையல் குறிப்பும் பிடிச்சிருப்பதாக நான் அறியவே இல்லை:)) அதுசரி ஆந்திராவோடு என்ன கோபம் உங்களுக்கு?:) ஹா ஹா ஹா ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  72. வாங்கோ அனு வாங்கோ..

    //இதோ நாளக்கி செய்றேன் படம் போடுறேன்...///

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பிறந்தாப் பிறகணும் பிள்ளை இவ போலே.... பாருங்கோ என் செக்கூட இப்படி செய்வதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    அனு இன்னொன்று, நைட் அல்லது காலையில் செய்து ஒரு சில மணித்தியாலங்களின் பின் சாப்பிடும்போது உறைப்பு அடங்கி சூப்பரா இருக்கும்... சுடச்சுட சாப்பிடுவதைக் காட்டிலும்.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  73. அதிரா இதை கோங்குரா சட்னி என்றும், பச்சடி என்றும் செய்வாங்க. ஆந்திரால ஹோட்ட்ல்ல டேபிள்ல இது கண்டிப்பா பருப்பு பொடி, ஆவக்காய் ஊறுகாய் கூட இதுவும் இருக்கும்.

    இதுல பூண்டு போடாம பெருங்காயம் போட்டு வெந்தயம் கொத்தமல்லி விரை எல்லாம் வறுத்து போட்டு அரைத்து வெந்தட்யம் தாளித்துச் செய்வதுண்டு. என் மகனுக்கு இதேதான் ஆனால் பெருங்காயம் இல்லாமல் பூண்டு போட்டு கொடுத்தேன். வெந்தயம் ட்ரையாக வறுத்தும் பொடித்தும் சேர்த்துப் பாருங்க டேஸ்ட் ரொம்ப நல்லாருக்கும்..

    நான் மகனுக்குச் செய்யும் போது ஃபோட்டோ எடுக்காம விட்டுட்டேன் ஸ்டெப் பை ஸ்டெப்பா...அதான் திங்கவுக்கு அனுப்ப முடியலை. இன்னொரு ஆந்திரா கத்திரிக்காய் தொக்கு ஒன்று சூப்பரா இருக்கும் அதுவும் செய்தேன் ஃபோட்டோ எடுக்காம போனதால திங்கவுக்கு அனுப்ப முடியலை. அடுத்து செய்யும் போது எடுத்து அனுப்பணும். இதுவும் ரொம்ப ரொம்ப ஈசி ரெசிப்பிதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
  74. ///Geetha Sambasivam said...
    அதிரடி, என்னோட பதிவுக்கு வரவும் இல்லை. கருத்துச் சொல்லவும் இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதிலே சிரிப்பு! :)///

    நோஓஓஓஓஓஒ கீசாக்கா போட்ட கூச்சலில் பதறி அடிச்சு ஓடிப்போய் போன வேகத்தில தொண்ணூறு கொமெண்ட்ஸ் போட்டிட்டேனேஏஏஏஏஏஏஏ உங்கள் உள் பெட்டியைப் பாருங்கோ:)) ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  75. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பிறந்தாப் பிறகணும் பிள்ளை இவ போலே.... பாருங்கோ என் செக்கூட இப்படி செய்வதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
    //

    ஹலோ உங்க செக் என் அரிச் வடை ரெசிப்பியை செஞ்சாங்களெ!! அனுவும் என் ரெசிப்பி ட்ரை பண்ணி போட்டாங்களே அரிசி வாய் இல்ல அதுக்கு முன்ன திரிசங்கு ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ....

    ஹான் அதிரா உங்க குழை சாதம் மகனுக்குச் செஞ்சு கொடுத்தேன். அவன் சொன்னது கிட்டத்தட்ட பிசிபேளா பாத் மாதிரிதான் இருக்கு மிக்ஸ் ஆஃப் பிசிபேளா அண்ட் குழம்பு சாதம்...என்றான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  76. ///Geetha Sambasivam said...
    அதிரடி, இந்தப் பாட்டுக்கு எங்க பொண்ணு என்ன ஆட்டம் ஆடுவா தெரியுமா? உங்க பூசாரெல்லாம் ஒண்ணுமே இல்லை! :))))) இப்போக் குட்டிக் குஞ்சுலு, பட்டுக் குட்டிக் குஞ்சுலு, ஹனுமான் சாலீஸாவுக்கு ஆடறது!//

    ஹா ஹா ஹா பட்டுக் குஞ்சலு அதிரா ஆன்ரியைப்போலவேதான்ன்ன்ன்ன்ன்ன்:)).. மீயும் ஹானா சோங் போட்டுவிட்டு ஆடுவன் தெரியுமோ:) ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:))

    பதிலளிநீக்கு
  77. ஹை போலன் கவுண்ட் மூச்சடைத்தல் எக்ஸ்ட்ரீம் தும்மல் எல்லாம் ஒண்ணுசேர்ந்து வரும்போதே நினைச்சேன் எதோ அசம்பாவிதம்னு :)
    கணிப்பு சரியாப்போச்சே :)

    பதிலளிநீக்கு
  78. மகன் இன்னொன்றும் சொன்னான் அதிரா....குழம்பு சாதத்தைத்தான் குழை சாதம்னு சொல்றாங்களோனு கேட்டான்....ஹையோ இத பார்த்ததும் எடுத்துப் போட்டுருங்க...இல்லைனா உங்க கண்ணுக்கு மட்டும் தெரியட்டும்

    நெல்லை செக் கண்ணுல பட்டுருச்சுனா நீங்க மாட்டிக்கிட்டீங்க...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  79. ஹை போலன் கவுண்ட் மூச்சடைத்தல் எக்ஸ்ட்ரீம் தும்மல் எல்லாம் ஒண்ணுசேர்ந்து வரும்போதே நினைச்சேன் எதோ அசம்பாவிதம்னு :)
    கணிப்பு சரியாப்போச்சே :)//

    ஹா ஹா ஹா ஹா வாங்க ஏஞ்சல்....இங்க இந்த பதிவு கூட உங்க தும்மலை கிளப்பிருக்கும்....பூசார் தாளிப்பு அப்படியோ....ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  80. //Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா இதை கோங்குரா சட்னி என்றும், பச்சடி என்றும் செய்வாங்க. ஆந்திரால ஹோட்ட்ல்ல டேபிள்ல இது கண்டிப்பா பருப்பு பொடி, ஆவக்காய் ஊறுகாய் கூட இதுவும் இருக்கும். //

    ஓ இந்த ஆவக்காய் என்றால் என்ன? நானும் கேள்விப்பட்டேன்ன் தெரியாது. கொவ்வைக்காயே இப்போ எங்கள் தமிழ்க்கடை வந்தபின்புதானே கண்டு பிடிச்சேன்..

    ஓ மகனுக்கு செய்து குடுத்தீங்களோ மியாவும் நன்றி.. நெ.தமிழன தான் எப்பூடி மிரட்டினாலும் செய்யவே மாட்டேன் என அடம்பிடிக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  81. //Thulasidharan V Thillaiakathu said...
    மகன் இன்னொன்றும் சொன்னான் அதிரா....குழம்பு சாதத்தைத்தான் குழை சாதம்னு சொல்றாங்களோனு கேட்டான்....ஹையோ இத பார்த்ததும் எடுத்துப் போட்டுருங்க...இல்லைனா உங்க கண்ணுக்கு மட்டும் தெரியட்டும் //

    ஹா ஹா ஹா நெ.தமிழனுக்கு மாலைக்கண்:)) இப்போவெல்லாம் அவர் நைட்டில உலா வருவதில்லையே அதான்:)) என் செக் க்கு கண் திறந்து படிக்க முடியாது போலன் அலர்ஜி ஹா ஹா ஹா இதிலிருந்து என்னா தெரியுது வைரவர் என் பய்க்கமே தேன்ன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  82. /அதாவது ஜனங்களுக்கு எல்லாம் புரியனும்

    இந்த மியாவ் //கானா // பாட்டை போட்டு குத்தாட்டம் ஆடுவாங்களாம் :))

    மியாவ்பீடியா விளக்கம் பை ஏன்ஜெல்

    பதிலளிநீக்கு
  83. //Angel said...
    ஹை போலன் கவுண்ட் மூச்சடைத்தல் எக்ஸ்ட்ரீம் தும்மல் எல்லாம் ஒண்ணுசேர்ந்து வரும்போதே நினைச்சேன் எதோ அசம்பாவிதம்னு :)
    கணிப்பு சரியாப்போச்சே :)//

    ஆவ்வ்வ்வ் வாங்கோ அஞ்சு.. அதெல்லாம் ஒண்ணுமில்லே இருங்கோ ஆவி:) பிடிச்சால் எல்லாம் சரியாகிடும்:))

    பதிலளிநீக்கு
  84. //ஹா ஹா ஹா பட்டுக் குஞ்சலு அதிரா ஆன்ரியைப்போலவேதான்ன்ன்ன்ன்ன்ன்:)).. மீயும் ஹானா சோங் போட்டுவிட்டு ஆடுவன் தெரியுமோ:) ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:))

    June 25, 2018 at 3:35 PM


    அதாவது ஜனங்களுக்கு எல்லாம் புரியனும்

    இந்த மியாவ் //கானா // பாட்டை போட்டு குத்தாட்டம் ஆடுவாங்களாம் :))

    மியாவ்பீடியா விளக்கம் பை ஏன்ஜெல்

    பதிலளிநீக்கு
  85. //Angel said...
    /அதாவது ஜனங்களுக்கு எல்லாம் புரியனும்

    இந்த மியாவ் //கானா // பாட்டை போட்டு குத்தாட்டம் ஆடுவாங்களாம் :))

    மியாவ்பீடியா விளக்கம் பை ஏன்ஜெல்//

    உப்பூடி உசுப்பேத்தினால் வீடியோவை இங்கின போட்டிடுவேன்ன் பிறகு நீங்க மயங்கினால் மீ பொறுப்பல்ல:)) கர்ர்ர்ர்ர்ர்:)))

    பதிலளிநீக்கு
  86. எப்படிச் சமைப்பதெனத் தெரியாமல் அஞ்சுவை விளக்கம் கேட்ட இடத்தில், பருப்புச் சேர்த்து சமைக்கலாம் என்றா. அப்படியே செய்தேன் ஆனா பெரிதாக பிடிக்கவில்லை நமக்கு.//
    ஹலோ குண்டு பூஸ் ..நான் துவரம் பருப்பை சொன்னேன் நிச்சயம் நீங்க மைசூர் பருப்பைத்தான் சேர்த்திருப்பீங்க :)
    நீங்கள் செய்தது தொக்கு அல்லது பச்சடி :)
    இது கோங்கரா தொக்கு

    பதிலளிநீக்கு
  87. அந்த உல்லாச கப்பலில் இருந்து ஒல்லியா ஒரு உருவம் குண்டா ஒரு உருவத்தை தண்ணில தள்ற போலிருக்கே :)

    அந்த குண்டு உருவம் பிங்க் கலர் கார்டிகன் பாப் கட் :) சன் க்ளாஸஸ் போட்டிருந்தது

    பதிலளிநீக்கு
  88. Angel said...
    எப்படிச் சமைப்பதெனத் தெரியாமல் அஞ்சுவை விளக்கம் கேட்ட இடத்தில், பருப்புச் சேர்த்து சமைக்கலாம் என்றா. அப்படியே செய்தேன் ஆனா பெரிதாக பிடிக்கவில்லை நமக்கு.//
    ஹலோ குண்டு பூஸ் ..நான் துவரம் பருப்பை சொன்னேன் நிச்சயம் நீங்க மைசூர் பருப்பைத்தான் சேர்த்திருப்பீங்க :)
    நீங்கள் செய்தது தொக்கு அல்லது பச்சடி :)
    இது கோங்கரா தொக்கு//

    ம்ஹும்ம்ம்ம் பாங் ல காசு எண்ணுவோர் எல்லாம் பணக்காரர் ஆக இருப்பினமோ?:) அது போல கிச்சின் ஜொந்தமா வச்சிருப்போர் எல்லாம் சமையல் எக்ஸ்பேர்ட் பொலவே ஒரு நினைப்பூஊஊ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் செஞ்சது அதிராஸ் ஸ்பெஷல் ஆறுகாய்:) ஹையோ டங்கு ஸ்லிப். ஊறுகாய்ய்ய்ய்ய்ய்ய்:))

    https://tse3.mm.bing.net/th?id=OIP.M11cvcjNBACwfgmXD1oGrwHaFA&pid=15.1&P=0&w=257&h=175

    பதிலளிநீக்கு
  89. நேற்று ஏ அண்ணன் என்னைத்தேடியதாக:) என் செக் சொன்னா:)) பின்ன கீசாக்கா எல்லாம் தேடவே இல்ல கர்ர்ர்ர்:))..

    அநேகமாக வேல்ட் கப் பற்றி ஏதும் டிஸ்கஸ் பண்ணத்தான் தேடியிருப்பார்:) பிக்கோஸ் அவரும் மீயும் தான் ஒழுங்கா வேல்ட் கப் பார்க்கிறோமாக்கும்:))..க்கும்..க்கும்:))

    பதிலளிநீக்கு
  90. என்ன இலை எனக் கேட்டேன்.. இதுதான் கொங்குறா கீரை .. இது கேரளாவில்தான் பேமஸ் என்றார் கடையில் நின்ற தம்பி. //

    நான் அடிச்சி சொல்றேன் அந்த தம்பி கரெக்ட்டா ஆந்திரா என்றதை நீங்கதான் கேரளா ஆக்கியிருப்பிங்க :)

    வைகோ அங்கிளையே பன்னீர் அங்கிளாக்கின வில்லங்கமான பூனையாச்சே நீங்க :)
    அது மட்டுமா ராமாயணத்தை மஹாபாரதமாக்கி
    லவனையும் குசனையும் சீதைக்கு தம்பிகளாகினதெல்லாம் நாங்க மறவோம்

    பதிலளிநீக்கு
  91. //Angel said..
    அந்த குண்டு உருவம் பிங்க் கலர் கார்டிகன் பாப் கட் :) சன் க்ளாஸஸ் போட்டிருந்தது//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எங்கயோ படம் பார்த்திட்டா:))

    பதிலளிநீக்கு
  92. @அஞ்சு
    //நான் அடிச்சி சொல்றேன் அந்த தம்பி கரெக்ட்டா ஆந்திரா என்றதை நீங்கதான் கேரளா ஆக்கியிருப்பிங்க :)

    வைகோ அங்கிளையே பன்னீர் அங்கிளாக்கின வில்லங்கமான பூனையாச்சே நீங்க :)
    அது மட்டுமா ராமாயணத்தை மஹாபாரதமாக்கி
    லவனையும் குசனையும் சீதைக்கு தம்பிகளாகினதெல்லாம் நாங்க மறவோம்///

    ஹையோ ஆண்டவா வல்லாரை ஓவராக் குடிக்க வாணாம் என மிரட்டினாலும் கேய்க்காம குடிச்சு இப்போ எனக்குத்தான் வம்பாப்போச்சேஎ:))

    http://gallery.yopriceville.com/var/albums/Free-Clipart-Pictures/Cartoons-PNG/Tom_and_Jerry_Free_PNG_Clip_Art_Image.png?m=1447961995

    பதிலளிநீக்கு
  93. @ கீதாக்கா ..நீங்க எல்லா பதிவுக்கும் கமெண்ட் பதில் போட்டீங்க :) நான் ஜாட்சி :)
    நெல்லைத்தமிழன் அநேகமா அந்த குழாய் :) சாதத்தை ட்ரை பண்ணி அந்த மயக்கத்தில் இருக்காருன்னு தோணுது

    பதிலளிநீக்கு

  94. அநேகமாக வேல்ட் கப் பற்றி ஏதும் டிஸ்கஸ் பண்ணத்தான் தேடியிருப்பார்:) பிக்கோஸ் அவரும் மீயும் தான் ஒழுங்கா வேல்ட் கப் பார்க்கிறோமாக்கும்:))..க்கும்..க்கும்:))

    //

    கர்ர்ர்ர் :) நாங்க குடும்பமா பார்க்கிறோம் தெரியுமோ :)
    ஒரு கால்பந்து பிரியருக்காகவே நான் கால்பந்து ரசிகையாகிட்டேன் :)
    என் கணவருக்கு எத்தினி கோல்ஸ் பெனால்டி பிரீ கிக் எல்லாத்தையும் மெசேஜ் அனுப்பிட்டேயிருப்பேன் :)

    பதிலளிநீக்கு
  95. மியாவும் நன்றி.. நெ.தமிழன தான் எப்பூடி மிரட்டினாலும் செய்யவே மாட்டேன் என அடம்பிடிக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    June 25, 2018 at 3:38 PM//

    பல வருஷம் கழிச்சி குடும்பத்தோட சந்தோஷமா இருக்கார் .பாவம் பிழைச்சி போக விடுங்க உங்க தம்பியை :)

    பதிலளிநீக்கு
  96. ////http://geetha-sambasivam.blogspot.com/2018/06/blog-post.html//

    ஆவ்வ்வ்வ் இந்த மாதமே கீசாக்கா ரெசிப்பி போட்டிருக்கிறா நான் பார்க்கவில்லையே...

    நன்றி கீசாக்கா.//

    நாங்கல்லாம் கமெண்ட் கூட போட்டாச் கிகிக்கிக்கீயே

    பதிலளிநீக்கு
  97. யாரோ ரெண்டு பேர் என்னை பற்றி பேசினாங்களே நான் கமெண்டில் பார்த்தனே

    1,கீதா ரெங்கன்

    யெஸ் கீதா அங்கே தாலிச்சதுக்கு இங்கே தும்மி குதிச்சேன்

    பதிலளிநீக்கு
  98. தாளிச்சதுக்கு // ஸ்பெல்லிங் மிஸ்டேக்

    பதிலளிநீக்கு
  99. ஏஞ்சல் நீங்க பூஸாருக்கு சோமபானம் இன்ட்ரோ பண்ணினாலும் பண்ணினீங்க இங்க பாருங்க ஆட்டத்தை!!! ஹா ஹா ஹாஅ

    https://www.youtube.com/watch?v=m3LlWmThK5c

    கீதா

    பதிலளிநீக்கு

  100. நெ.த. said...
    //எப்படிச் செய்வது எனத் தெரியாமல் அஞ்சுவிடம் விளக்கம் கேட்டேன்//- ஏற்கனவே இரண்டு மாசத்தில் மூணே மூணு செய்முறை, "தேவதையின் கிச்சன்"ல போட்டிருக்காங்க. அடுத்தது என்ன செய்யறதுன்னு அவங்களுக்கே தெரியலை. இதுல உங்க பாராட்டையும் படிச்சாங்கன்னா, தான்தான் ராம்சேயின் மென்டர் என்று சொன்னாலும் சொல்வாங்க. அதுகூட பரவாயில்லை.. இன்னும் என்ன என்ன செய்முறைலாம் அவங்ககிட்டேயிருந்து வருமோ.... உங்களுக்கு ஏன் எங்கமேல ஆத்திரம்?//



    கர்ர்ர்ர்ர் :) 10,000 டைம்ஸ்


    நான் போடுவதெல்லாம் யாருக்கும் தெரியாத ரெசிப்பியா தேடி போடறேன் :)
    இதோ லிஸ்ட் சொல்றேன் கேட்டுக்கோங்க


    அடுத்து வரவிருக்கும் ரெசிப்பீஸ்
    நேந்திரம் வாழைத்தோல் தோரன் ,வாழைப்பூ புளிக்குழம்பு
    பிரிட்டிஷ் ஹாஷ் பிரவுன்ஸ் / அப்புறம் ஜிஜேஹஸ்ம்க்ஸ்ட்டியூட்ன் ஹாஆஅஹாஹா

    பதிலளிநீக்கு
  101. @கீதாஆ :) ஹாஹாஆ என்னா ஆட்டம்

    பதிலளிநீக்கு
  102. / அதையும் தாண்டி ஏதாவது ஜொள்ளுங்கோ:)]//

    நோ மம்மி சொல்லிருக்காங்க பூ செடியையெல்லாம் குழந்தைங்க போல் அதுங்களை தாண்ட மாட்டேன்

    பதிலளிநீக்கு
  103. பல வருஷம் கழிச்சி குடும்பத்தோட சந்தோஷமா இருக்கார் .பாவம் பிழைச்சி போக விடுங்க உங்க தம்பியை :)//

    ஹ அஹாஹா ஹா ஹா அஹ உருண்டு பெரண்டு சிரிச்சேன்...ஹா ஹா ஹா ஹொஹொஹொஹொஹொ....

    கீதா

    பதிலளிநீக்கு
  104. நேந்திரம் வாழைத்தோல் தோரன் ,வாழைப்பூ புளிக்குழம்பு //

    ஏஞ்சல் இந்த ரெண்டும் தெரியும்...ஆனா அடுத்த ரெண்டும் இப்ப தெரியலை நீங்க போடுங்க பார்த்துட்டு சொல்லுறேன் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  105. என் அம்மா புளிச்ச கீரை மசியல் - வெங்காயம், வத்தல் மிளகாய், பச்சை மிளகாய் உப்பு சேர்த்து - செய்வார், மிகவும் அருமையாய் இருக்கும்....
    புளிச்ச கீரைக்கு இவ்ளோ புளியா? புளியைக் குறைப்பது ஜெனரலாக நல்லது...
    முதல் தடவை செய்ததே இவ்வளவு அருமையாகச் செய்து படங்களுடன் போட்டதற்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  106. // புளிச்ச கீரைக்கு இவ்ளோ புளியா? // புளிச்ச கீரைக்குத் தேவை இல்லை. நான் எப்போவானும் சேர்ப்பேன். அதிகம் காரமாக இருந்தால் மட்டும்!

    பதிலளிநீக்கு
  107. //பல வருஷம் கழிச்சி குடும்பத்தோட சந்தோஷமா இருக்கார் .பாவம் பிழைச்சி போக விடுங்க உங்க தம்பியை :)//

    ஹலோ மிஸ்டர் உங்களுக்கு வர வர மாறாட்டமாவேஏஏஏஏ வருது வயசாகுதில்ல அதான்:)).. அவரூஊஊஊஉ கீதாட அம்பி:) சேஎ..சே.. தம்பி:))... அவர் எனக்கு எவ்ளோ பெரிய அண்ணா.. அவரைப்போய் தம்பி எண்டு அபச்சாரம் அபச்சாரம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  108. //Thulasidharan V Thillaiakathu said...
    நேந்திரம் வாழைத்தோல் தோரன் ,வாழைப்பூ புளிக்குழம்பு //

    ஏஞ்சல் இந்த ரெண்டும் தெரியும்...ஆனா அடுத்த ரெண்டும் இப்ப தெரியலை நீங்க போடுங்க பார்த்துட்டு சொல்லுறேன் ஹா ஹா ஹா ஹா

    கீதா//

    கீதா,
    அஞ்சு எப்ப்போ கிச்சின் ஓனா திறந்தாவோ அப்பவே ஓடிப்போய், மீ லைஃப் இன்சூரன்ஸ் எடுத்திட்டேன் அதுவும் ஒரு கோடிக்கு:)).. எதுக்கும் நீங்களும் எடுத்திடுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  109. //middleclassmadhavi said...

    புளிச்ச கீரைக்கு இவ்ளோ புளியா? புளியைக் குறைப்பது ஜெனரலாக நல்லது...
    முதல் தடவை செய்ததே இவ்வளவு அருமையாகச் செய்து படங்களுடன் போட்டதற்கு பாராட்டுக்கள்!//

    வாங்கோ மிடில்கிளாஸ் மாதவி...

    உண்மைதான் பழப்புளி உடம்புக்கு கேடு, பொதுவா நாங்க எப்பவும் தேசிக்காய்தான் அதிகம் சேர்ப்போம்... இது அந்த ஆந்திரா பாட்டி[இதுவரை அவ கேரளா என நினைச்சிருந்தேன்:)] செய்து காட்டும்போது இதை விட அதிகம் புளியும் நிறைய மிளகாயும் சேர்த்தா:)..

    நானும் நினைச்சேன் எதுக்குப் புளி என, ஆனா அது சேர்த்தது காரத்தைக் குறைச்சு கொஞ்சம் இனிமையைக் கூட்டும் என நினைக்கிறேன்.. அதனாலதான் கொஞ்சம் இனிப்பான சுவையாக இருந்துது... மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  110. //Geetha Sambasivam said...
    // புளிச்ச கீரைக்கு இவ்ளோ புளியா? // புளிச்ச கீரைக்குத் தேவை இல்லை. நான் எப்போவானும் சேர்ப்பேன். அதிகம் காரமாக இருந்தால் மட்டும்!//

    அதேதான் கீசாக்கா காரத்தைக் குறைக்கவே பழப்புளி என நினைக்கிறேன், நம் வாய்க்கு காரம் தெரியாவிடினும் வயிற்றை அது பழுதாக்கிவிடும் என்பதால புளி சேர்க்கிறார்களா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  111. இவ்வளவு மிளகாய் சேர்ப்பதற்கு, கோங்கூரா அரைக்கிலோ அளவு சேர்க்கலாம். நான் ஒரு ஐந்துநக்ஷத்திர ஓட்டல் குறிப்பு எழுதி வைத்து இருந்தேன். அதில் கணக்கு இப்படி இருந்தது. நன்றாக படங்களுடன் உங்கள் குறிப்பு விசேஷம். பருப்புகளெல்லாம் தாளிப்பில் முழுதாகவும், மிளகாயுமாக அந்தக் குறிப்பு இருந்தது. முழுமிளகாய்களுமாக இருந்தது. இந்தக்கீரை நல்ல உயரமாக வளரக்கூடியது. நேபாளத்தில் இந்தத் தண்டிலிருந்து நார் எடுத்துக் கயிறு திரிப்பார்கள். கோங்கூராவிற்கு டோரிஸாக் என்று பெயர். வேலி ஓரம் வளர்த்து அழகு செய்வார்கள். சாப்பிடமாட்டார்கள். ஏதானும் என் பங்கிற்கு புதுக்கதை இல்லை. எல்லா விஷயங்களும் எல்லாரும் எழுதி விட்டார்கள். என்பங்கிற்கு இதுதான் கிடைத்தது. ஸரியா அன்புடன்

    பதிலளிநீக்கு
  112. அதிரா கோங்குரா தொக்கு பிரமாதம். நான் உள்ளி சேர்ப்பதில்லை. அடுத்த முறை சேர்த்துப் பார்க்கிறேன். அந்த கீரையிலேயே புளிப்பு இருப்பதால்(புளிச்ச கீரை) புளி மிகவும் கொஞ்சமாக சேர்த்தால் போதும். நிறைய எண்ணெய், காரம், இருப்பதால் ஒரு வாரம் வரை வெளியிலேயே வைத்துக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  113. துரை சாரின் கேள்வி நியாயமானதுதான். இது ஊறுகாய் கிடையாது. தொக்கு. கோங்குரா தொக்கு. தவறாக குறிப்பிட்டதால் போடுங்கள் தோப்புக்கரணம்..ஒண்ணு, ரெண்டு ...

    பதிலளிநீக்கு
  114. //இந்தக்கீரை நல்ல உயரமாக வளரக்கூடியது. நேபாளத்தில் இந்தத் தண்டிலிருந்து நார் எடுத்துக் கயிறு திரிப்பார்கள். கோங்கூராவிற்கு டோரிஸாக் என்று பெயர். வேலி ஓரம் வளர்த்து அழகு செய்வார்கள். சாப்பிடமாட்டார்கள்.//

    நாமெல்லாம் கோங்குராவை தொக்கு செய்து சாப்பிடுவதிலேயே இருக்கிறோம். காமாட்சி அம்மா உருப்படியான தகவல் தந்திருக்கிறார்கள். நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  115. வாங்கோ காமாட்ஷி அம்மா வாங்கோ.. உங்களைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகின்றன.. நலம்தானே...

    //இவ்வளவு மிளகாய் சேர்ப்பதற்கு, கோங்கூரா அரைக்கிலோ அளவு சேர்க்கலாம்.//
    அச்சச்சோ அரைக்க்கிலோ கொங்குறா இங்கு எப்படி வாங்குவதாம்? பத்துக் கட்டு வாங்கினாலும் வராது:).

    இன்னொன்று காமாட்சி அம்மா.. இந்த ஊறுகாய்க்கு நிறைய செத்தல் மிளகாய் அள்ளிப் போட்டுத்தான் செய்கிறார்கள் பார்த்தேன்.. நான் இது சட்னிக்குப் போடுவதுபோல கொஞ்சம் எல்லோ போட்டேன்.

    //பருப்புகளெல்லாம் தாளிப்பில் முழுதாகவும், மிளகாயுமாக அந்தக் குறிப்பு இருந்தது. முழுமிளகாய்களுமாக இருந்தது. //

    அது கீரைக் கடைசல் போல செய்கிறார்கள்.. இப்படி அரைட்த்ஹபின்பு.. இன்னும் நிறைய செத்தல் மிளகாயும் பருப்புக்களும் தாளித்துப் போட்டுக் கொட்டுகிறார்கள்.. வயிறு என்னத்துக்கு ஆகுமோ?:)

    ஓ இதில் கயிறும் திரிப்பார்களோ.. புதுத்தகவல்.

    நானும் தண்டுகளை நட்டு விட்டிருக்கிறேன்.. ஆனா வளரும் எனும் நம்பிக்கை இல்லை பார்ப்போம்.

    மிக்க நன்றி காமாட்ஷி அம்மா.

    பதிலளிநீக்கு
  116. வாங்கோ பானுமதி அக்கா.. உண்மைதான் புளி அதிகம் தேவை இல்லை.. கீரையின் அளவைப் பொறுத்து எடுத்தால் போதும்.

    உண்மைதான் நிறைய எண்ணெயில் பொரித்து அப்படியே எண்ணெயுடன் அரைக்கிறார்கள்.. ஆனா நான் கொஞ்சமாகத்தான் சேர்த்தேன்.

    பதிலளிநீக்கு
  117. //Bhanumathy Venkateswaran said...
    துரை சாரின் கேள்வி நியாயமானதுதான். இது ஊறுகாய் கிடையாது. தொக்கு. கோங்குரா தொக்கு. தவறாக குறிப்பிட்டதால் போடுங்கள் தோப்புக்கரணம்..ஒண்ணு, ரெண்டு ...///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)).. சரி உங்களுக்கு ஒரு போத்தல் ஊறுகாய் அனுப்பி வைக்கிறேன்:). மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  118. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பிறந்தாப் பிறகணும் பிள்ளை இவ போலே.... பாருங்கோ என் செக்கூட இப்படி செய்வதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))....


    நல்லா சத்தமா நாலு முறை சொல்லுங்கோ...
    நான் சொன்னா எங்க வீட்டில் அடிக்க வராங்க...
    ...

    நிச்சயம் செய்வன்.. ஏற்கனவே அஞ்சு து ,கீதா அக்கா து போட்டாச்சு...அடுத்து நீங்க தான்...இல் உங்க குறிப்பு தான்

    பதிலளிநீக்கு
  119. கீசா மேடம்.... யார் தூங்கிட்டாங்கன்னு தெரியலையே....

    ஶ்ரீரங்கநாதன் பாதம் பணிந்த இடுகையில் மறுமொழி ரொம்ப நாளாகியும் வரலை. ஒரே தலைப்புக நிறைய இடுகை போட்டால இந்த பிரச்சனைதான்...ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  120. நெ.த.ஆன்மிகப் பயணம் பக்கத்தில் உங்கள் கேள்விகளுக்கான பதிலைப் பதிவாக் கொடுத்திருக்கிறதாச் சொல்லி இருக்கேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மற்றபடி அதில் உள்ள மற்றப் பதிவுகளுக்குப் பதில் தேவைப்படாது என்பதால் சொல்லலை! :))))

    பதிலளிநீக்கு
  121. //நானும் தண்டுகளை நட்டு விட்டிருக்கிறேன்.. ஆனா வளரும் எனும் நம்பிக்கை இல்லை பார்ப்போம்.//

    ஹலோவ் நானி சே சே :) ஞானீ ஈ உங்களுக்கே நம்பிக்கை இல்லையா :)
    கர்ர் செடி வளர செடிக்குதான் நம்பிக்கை வேணும் :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!