Monday, June 4, 2018

"திங்க"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.
என் பையனின் பிறந்த நாள் டிசம்பரில் வந்தது. அவனுக்கு சர்ப்ரைசாக இருக்கட்டும் என்று என் ஹஸ்பண்டும் பெண்ணும் பெங்களூருக்கு முந்தின நாள் இரவு சென்றார்கள். அப்படிப் போகும்போது அவனுக்காக, என் பெண் ஆப்பிள் Pie செய்துகொண்டு போனாள். அவள் ஆப்பிள் Pie படத்தை எனக்கு வாட்சப் மூலமாகப் பகிர்ந்துகொண்டிருந்தாள். அதன் அழகில் கவரப்பட்டு, Step by Step புகைப்படம் எடுத்திருந்தால் ‘திங்கக் கிழமை’ பதிவுக்கு அனுப்பியிருப்பேனே என்று சொன்னேன். பெங்களூரில், தாத்தா/பாட்டிக்காக அவள் மீண்டும் இதனைச் செய்தாள். ஆனால் அங்கு Cake Oven இல்லை. அதனால், ‘குழிப்பணியாரம்’ செய்யும் தாவாவை உபயோகப்படுத்திச் செய்தாள்.

சென்னையில் செய்தது, ஒரு பெரிய ஆப்பிள் Pie. பெங்களூரில் செய்தது மினி ஆப்பிள் Pies. பதிவில் பெரிய ஆப்பிள் Pie படத்தையும் கொடுத்திருக்கிறேன்.

நான், உணவு விஷயத்தில் ரொம்ப கன்சர்வேடிவ். (டிரெடிஷனலில் வராத) புதிய உணவு எதையும் try பண்ணமாட்டேன் அதனால்தான் Bhel Puri சாப்பிட்டுப்பார்க்கலாமே என்று என் மனது ஒப்புக்கொள்வதற்கு 20 வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. இதுபோல பாவ் பாஜியும்தான். வெளிநாட்டு உணவுவகைகள், பிட்சாவைத் தவிர வேறு எதையுமே சாப்பிட்டதில்லை (Unfortunately எனக்குத்தான் எல்லாவித உணவையும் சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நான் பழ வகைகளும், Fresh Juiceம் சாப்பிடுவேன். கிடைக்கும் இடங்களில் சாதம்/Dhalஐயும் வாங்கிக்கொள்வேன். சொன்னா ஆச்சர்யமா இருக்கும். லண்டன்ல ரொம்பப் புகழ்பெற்ற உணவகத்துல நாங்க-Business dinnerக்குப் போயிருந்தபோது, எனக்கு மட்டும் அங்கு அரிசி சாதமும் Dதாலும் கேட்டு வாங்கிக்கொண்டேன். வேற வழியே இல்லைனா, பிரெட், பட்டர் சாப்பிடுவேன்). எனக்கு ஆப்பிள் Pie செய்துகொடுத்திருந்தால் விருப்பப்பட்டு சாப்பிட்டிருக்கமாட்டேன். ஆனால் எல்லோரும் ரொம்ப நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். அதனால்தான் ஆப்பிள் Pie திங்கக் கிழமை பதிவாக வருகிறது.

எப்போவும் சாத்துமது, கீரை வடை, மோர்க்குழம்பு என்று வருவதற்குப் பதிலாக, அப்போ அப்போ, ‘ஒடியல் கூழ்’ போன்று வித்தியாசமான சமையல் குறிப்புகள் வருவது நல்லதுதானே.  அதனால், என் பெண்கிட்ட செய்முறை அனுப்பச்சொல்லி, அதனை மொழிபெயர்த்துப் பதிவாக அனுப்பியிருக்கிறேன். இப்போ, எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள்

Base மாவுக்கு

1 ½ கப் மைதா  (அல்லது 1 ¼ கப்)
2/3  கப் வெண்ணெய். உருக்காதது, கட்டியானது (Frozen)
துளி உப்பு
குளிர்ந்த நீர் (தேவைனா ஃப்ரீசர்ல கொஞ்ச நேரம் வச்சுக்குங்க)

ஆப்பிள் Fillingக்கு

4 பெரிய ஆப்பிள்
இலவங்கப் பட்டை பவுடர் Cinnamon – சுவையைப் பொருத்து
ஜீனி – தேவையான அளவு – சுவையைப் பொருத்து

செய்முறை

முதல்ல மாவைத் தயார் செய்துகொள்ளணும். இது 6 மணி நேரத்துக்கு முன்னாலயே தயார் செய்யணும்.ஒரு பாத்திரத்தில், மாவையும் தேவையான உப்பையும் போட்டுக்கொள்ளவும். அத்துடன் சிறிது சிறிதாக கியூப் வடிவத்தில் வெட்டிய கட்டி வெண்ணெயைச் சேர்க்கவும். இதை உதிர் உதிராக ஆகும்படி நன்றாகப் பிசையவும் (படத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்). அதன்பிறகு, 2 ஸ்பூன் குளிர்ந்த தண்ணீர் விட்டு, பூரி/சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். இதனை குளிர்சாதனத்தில் 3-5 மணி நேரத்துக்கு வைத்துவிடவும். ஆப்பிளை ஸ்லைஸ் செய்யுங்கள் (மெலிதாக படத்தில் இருப்பதுபோல் திருத்தவும்)


ஒரு கடாயில், கொஞ்சம் ஜீனியை evenஆகத் தூவி, அதில் ஆப்பிள் லேயர்களை வைத்து அதன் மேல் இலவங்கப் பட்டைப் பொடியைத் தூவவும். இதைப்போலவே திரும்பவும், ஜீனி தூவணும், அதன்மேல் ஆப்பிள், அதன் மேல் சின்னமன் பொடி தூவவும். இதனை எல்லா ஆப்பிள் சீவல்கள் முடியும் வரை செய்யவும். ஞாபகம் இருக்கட்டும், ஜீனி மிகவும் குறைவாகத் தூவணும். அதுபோல் இலவங்கப்பட்டைப் பொடியும் ரொம்பக் கொஞ்சமாகத் தூவணும். Cinnamon ரொம்ப strong flavor. அனேகமா ¾ டீ ஸ்பூனுக்கும் குறைவான cinnamon 4 ஆப்பிளுக்கும் போதுமானது.இப்போ அடுப்பில் வைத்து லைட்டாக சூடுபடுத்தவும். ஜீனி caramelize ஆகி உருகட்டும். ஆப்பிளும் முக்கால் பதம் வேகட்டும். ஆப்பிள் ஸ்லைஸை நாம மடக்கும்படி கொஞ்சம் நெகிழ்வா இருக்கணும். அதுதான் பதம். இப்போ அடுப்பை அணைத்துவிட்டு, ஆப்பிள் திருவல்களை எடுத்து ஒரு தட்டில் போட்டுக்கொள்ளவும். கடாயில் இருக்கும் ஜீனி, Cinnamon, ஆப்பிள் வாசனை கலந்த தண்ணீர் (பாகுபோல்) அப்படியே இருக்கட்டும்.இப்போ Pieக்கு அடி மாவு (base) தயார் பண்ணணும். நாம, மாவை குளிர்சாதனத்திலிருந்து எடுக்கும்போது, கட்டியா Frozen ஆகியிருக்கும். (வெண்ணெயின் காரணமாக). வெளியில் வைத்து கொஞ்சம் சாஃப்ட் ஆனதும், நன்றாக மீண்டும் ஒருமுறை பிசைந்து மாவு பதத்திற்கு வரவைங்க.இந்த மாவை ½ சென்டிமீட்டர் தடிமனில் வட்டமாக ரோல் பண்ணிக்கோங்க. பிட்சா பேஸ் போல இருக்கும். நாம உபயோகப்படுத்தப்போற Panஐவிட இது கொஞ்சம் பெரிதாக இருக்கணும். அதாவது, அந்த Baseஐ Panல் வைக்கும்போது, அடியையும் அது மறைக்கணும், ஓரங்களையும் மறைக்கணும். அப்புறம் இதை, கேக் அவனில் ஒரு 10 நிமிடத்திற்கு வைக்கவும். பிறகு அதை வெளியில் எடுக்கவும்.அதன் மீது ஆப்பிள் திருவல்களை அடுக்கவேண்டும். தோல் பகுதி மேலாக இருக்கணும். தட்டையான அடிப்பகுதி கீழே இருக்கணும். அடுத்த ஸ்லைஸ் ஓரங்களுக்கு எதிராக அடுக்கும்போது, ஒன்றை ஒன்று overlap செய்ததுபோல் இருக்கும். அப்படி அடுக்கும்போதுதான் அழகாக ரோஜாப்பூபோல் வரும். இல்லைனா வரிசையா அடுக்குனதுபோல் ஆகிடும். இந்தமாதிரி அடுக்குவதை, வெளிப்பாகத்திலிருந்து உள் பாகத்துக்கு ஒவ்வொரு லேயரா பண்ணிண்டு வரணும். இப்படியே மத்திய பாகத்துக்கு வரும்போது ஒரு ரோஜாப்பூப்போல் செய்யவேண்டும்.அதுக்கு, படத்தில் காண்பித்ததுபோல் சிறிய அளவு மாவின் மீது, ஆப்பிள் திருவல்களை நீளவாக்கில் அடுக்கி அதனை ரோஜாப்பூ போல் சுருட்டவேண்டும். இதனை நடுவில் வைக்கவேண்டும். பொதுவா இடைவெளி இல்லாதவாறு இவற்றைச் செய்யவேண்டும். Tightஆ இருந்தாத்தான் அழகா இருக்கும். (படத்தில் இருப்பதுபோல்)

அப்புறம் இதை அவன்ல வைத்து Bake பண்ணணும். 20-40 நிமிடங்கள் ஆகும். Base cook ஆயிடுத்தான்னு பார்த்துக்கணும்.

இப்போ, கடாய்ல ஜீனி, Cinnamon, ஆப்பிள் ஜூஸ் மீதி இருக்கும். அதில் தேவைப்பட்டால் (ஜூஸின் அளவைப் பொறுத்து) இன்னும் கொஞ்சம் ஜீனி, Cinnamon Powder போட்டு சுட வைக்கணும். கொதிக்கறதுக்கு முந்தைய ஸ்டேஜில், அதில் ஒரு கியூப் வெண்ணெய் போட்டு, அது கரையும்வரை காத்திருக்கவும். கலக்கிவிடவும். ஒரு நிமிடம் கழித்து அது ‘சாறு’ sauce வடிவத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். உடனே இதனை, Bake செய்திருக்கும் Pieமீது பரவலாக விட்டுவிடவும். கொஞ்சம் சூடாக அந்த ஜூஸ் இருக்கும்போதே அதனைச் செய்யணும். ‘சாறு’ ஆறிவிட்டால் அல்வா பதத்துக்குப் போயிடும்.

இப்போ ஆப்பிள் பை Pie ரெடி.

செய்துபாருங்கள். நிச்சயம் இளைஞர்களுக்குப் பிடிக்கும்.

அன்புடன்

நெல்லைத்தமிழன்


பின் குறிப்பு  :  நெல்லைத்தமிழன் இதை முன்னாலேயே எனக்கு அனுப்பி வைத்திருந்திருக்கிறார்.  நான் இது இருப்பதை மறந்து, தாமதம் செய்து விட்டேன்.  நெல்லைத்தமிழன் மன்னிக்கவும். - ஸ்ரீராம் 

112 comments:

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, எல்லோருக்கும்…

கீதா

துரை செல்வராஜூ said...

வாழ்க...

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லை இது ஆப்பிள் டார்ட் இல்லையோ....சூப்பரா இருக்கு....நானும் வீட்டில் ஆப்பிள் டார்ட், ஆப்பிள் பை செய்ததுண்டு....

கீதா

Geetha Sambasivam said...

சதி, மாபெரும் சதி!

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

Geetha Sambasivam said...

கீபோர்ட் வேலை செய்யாமல் ஸ்ட்ரைக்! :))))

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக டேஸ்டியாக இருக்கும் நெல்லை. உங்கள் பெண் அசத்துகிறார்....

சாதாரணமாக இப்படியானது டார்ட் என்றும் பை என்றால் ஆப்பிள் கலவையை பை மேல் ஸ்ப்ரெட் பண்ணிவிட்டு அதே பை மாவில் நீளநீளமாக ரிப்பன் போலக் கத்தரித்து கூடை பின்னுவது போல் மேலே மூடி இருக்கும். அதனால்தான் கேட்டேன்...நெல்லை

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கீதாக்காவைக் காணலை காபி ஆத்தலையா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லை நீங்களும் கலக்குகிறீர்கள் !! சூப்பர்

கீதா

Geetha Sambasivam said...

செய்தது இல்லை. சாப்பிட்டதும் இல்லை.

Thulasidharan V Thillaiakathu said...

சதி, மாபெரும் சதி!

கீபோர்ட் வேலை செய்யாமல் ஸ்ட்ரைக்! :))))//

ஹா ஹா ஹா ஹா வந்துட்டீங்களா கீதாக்கா...ஹா ஹா ஹா அப்ப நான் இல்லை நான் இல்லை.... ...டப்பித்தேன்...கீகாக்காவின் கீ போர்ட்!!! ஹா ஹா ஹா ஹா..

ஏதோ ஒன்று உங்களை இப்பல்லாம் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறதே அக்கா. இப்பத்தானே செலவழித்து சரி செஞ்சீங்க....

கீதா

Geetha Sambasivam said...

//கீதாக்காவைக் காணலை காபி ஆத்தலையா// எனக்குத் தெரியுதே நான் கொடுத்த கமென்ட். நெ.த.வின் பெண் அசத்துறாரே! இவ்வளவு ஆர்வத்துடன் செய்வதும் மகிழ்வாக இருக்கு.

ஸ்ரீராம். said...

துரை செல்வராஜு ஸார், கீதா ரெங்கன், கீதா அக்கா, பானு அக்கா அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

Geetha Sambasivam said...

//இப்பத்தானே செலவழித்து சரி செஞ்சீங்க....// பிரச்னை எல்லாம் இல்லை. நான் தட்டச்சுச் செய்யும் பழக்கப்படிக் கைகளை வைக்காமல் மாற்றி வைத்து விட்டேன் ஏதோ கவனத்தில். அது ட்க்ட்ச்லக்ச்ஜிகெஇலெ என்றெல்லாம் போய் விட்டது. :))))))

Thulasidharan V Thillaiakathu said...

நான் பையிலும் சரி, டார்ட்டிலும் சரி முதலில் பேஸ் பை/டார்ட்டை முக்கால் வீதத்திற்கும் பேக் செய்துவிட்டு. அப்புறம் அதை வெளியில் எடுத்து ஆப்பிள் பை ஸ்டஃப்ட் (அது ஆப்பிளை நன்றாகத் துருவி இதேதான் நீங்கள் சொல்லியிருப்பது போல் தான்) அதை ஸ்ப்ரெட் பண்ணி மேலே ரிப்பன் போல கட் செய்திருக்கும் மாவை கூடை பின்னுவது போல அதை போட்டு மூடி பேக் செய்வேன். அந்த ரிப்பன் எல்லாம் லைட் பிங்க் கலர் வரும் போது ஓவன் ஆஃப்.

அதே போல டார்ட்டிர்கும் பேஸ் முக்கால் வீதம் பேக்செது கொண்டு...ஆப்பிளை நீங்கள் கட் செய்திருப்பது போல் கட் செய்து கொஞ்சம் ப்ரௌவன் சுகர் சிரப்பில் சூடு செய்து வளைக்க வர வேண்டுமே அப்ப்டிச் செய்து நமக்கு வேண்டிய ஷேப்பில் டெக்கரேட் செய்து ரோஸ் போலவே இல்லை வேறு வடிவத்திலோ அதன் மேல் ஃப்ரௌன் ஷுகர் காரமல் சிரப்பை கொஞ்சம் ஊற்றி லைட்டாக சுகர் தூவி மீண்டும் அவனில் வைத்து ஒரு ஐந்து நிமிடம் பேக் செய்து எடுத்துடுவேன்...ஸோ தாட் அந்த ஆப்பிள் வடிவம் டெக்கரேஷன் பேஸில் கலையாமல் அப்படியே ஒட்டிக் கொள்ளும்....அதுக்காக...பைக்கும், டார்ட்டிற்கும் கொஞ்சம் இங்க்ரீடியன்ட்ஸ் வித்தியாசம்...இரட்டையர் என்றும் சொல்லலாம் ஷேப்பைத் தவிர...

மிக நன்றாகச் செய்திருக்கிறீர்கள் நெல்லை. ரொம்ப அழகா வடிவம் எல்லாம் சூப்பரா இருக்கு....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நிச்சயம் இளைஞர்களுக்குப் பிடிக்கும்.//

நெல்லை எனக்கும் பிடிக்கும்....ஹிஹிஹிஹிஹி

கீதா

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்

துரை செல்வராஜூ said...

ஆகா... ஆப்பிள் பை!...

இங்கே ஒருநாள் விட்டு ஒருநாள் ஆப்பிள் பை/ டர்ட்...

ஆனாலும், அதீத இனிப்பு...

இவற்றின் சேர்மானம் அனைத்தும் இரசாயனக் கலவை....

மேலை நாடுகளின் இறக்குமதி...
ஒரு வருட உத்தரவாதம்....

Base ஆக இருப்பது Refined Flour/ Egg/Butter..

90℅ இவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டேன்..

எனவே ஆப்பிள் பை/ டர்ட் பக்கம் போவதில்லை....

ஆனாலும் இதைப்போல் வீட்டில் செய்வது நல்லதே...

வாழ்க நலம்...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
சுவைத்துப் பார்க்க வேண்டும்
நன்றி நண்பரே

KILLERGEE Devakottai said...

அழகான வேலைப்பாடு இருக்கும் போலயே... பகிர்வுக்கு நன்றி.

எல்லாம் சரி நண்பரே... கடைசியில் "இளைஞர்களுக்கு பிடிக்கும்" என்றால் பதிவர்களில் என்னைத்தவிர வேறு யாருமே செய்து பார்க்க மாட்டார்களே...

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம்.

ஆப்பிள் பை - வாவ். பார்க்கும்போதே சுவைக்கத் தோன்றுகிறது. கொஞ்சம் வேலை ஜாஸ்தியாக இருக்கிறதே என்று யோசிக்க வேண்டியிருக்கிறது! :)

தாவா - தவா!

கோமதி அரசு said...

பார்க்க அழகாய் இருக்கிறது.
பொறுமை மிக அவசியம் இதை செய்ய என்று நினைக்கிறேன்,
அழகாய் ரோஜா போல் வைப்பதற்கே!
மருமகள் வரும் போது செய்ய வேண்டும்.
உங்கள் மனைவி,(ஹஸ்பண்டு )மகள், உங்களுக்கு எல்லாம் வாழ்த்துக்கள் அழகாய் ஆப்பிள் Pie செய்து காட்டியதற்கு.
மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசித்தேன், ருசித்தேன்.

middleclassmadhavi said...

Very beautiful!! But requires lot of patience I think!! I request Geetha Rengan Madam's recipe also...

வல்லிசிம்ஹன் said...

என்ன அழ்காகச் செய்திருக்கிறாள் உங்கள் பெண்.
இங்கே ஆப்பிள் பை ப்ளேட்ல செய்து லைன் லைன் ஆ
பேஸ்ட்ரி ஓட்டி அக்டோபர் பூராவும் கொட்டிக் கிடக்கும்.
நமக்குத்தான் ஒட்டாதே.

வாழ்த்துகளைக் குழந்தையிடம் சொல்லுங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இதை செய்வதற்கே மிகவும் பொறுமை வேண்டும்... இல்லையெனில் நெல்லைக்கு செல்ல வேண்டும்...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

மிகவும் அருமையான செய்முறை மிக மிக அழகான படங்கள். பார்க்கும் போதே கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தோன்றுகிறது. என்னவொரு பொறுமை என வியக்க வைக்கிறது. எதையுமே ரசனையோடு செய்யும் போது பார்க்கவும் அழகாவும் இருப்பதோடு, அதை பாராட்டிக் கொண்டே இருக்கவும் தோன்றும் மன நிலை வருமல்லவா? அந்த மாதிரி படங்கள், செய்முறை என்னை ஈர்த்து விட்டது.
இதையெல்லாம் செய்ததும் இல்லை. சாப்பிட்டதும் இல்லை. இனி செய்து பார்க்க தோன்றுகிறது. தங்கள் மகளுக்கு என்னுடைய பாராட்டுக்கள். மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். குழந்தைகள் நலமுடன் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன். எழுதி அனுப்பிய தங்களுக்கும் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லை காலையில் வாசிக்கும் போது ஒரு பாராவை விட்டிருக்கேன் உங்கள் பதிவில் அதான் நான் அத்தனை நீளமா பதில் கொடுத்திருக்கேன்...நீங்களும் முதலில் பேக் செய்துவிட்டுத்தான் ஆப்பிளை அடுக்கிருக்கீங்க....அதே.....உங்க பொண்ணு நல்லா செஞ்சுருக்காங்கனா நீங்க சிங்கிள் ரோஸ்ல கலக்குறீங்க....செமையா சிங்கிள் ரோஸ் ஷேப் பன்ணிருக்கீங்க...

பாராட்டுகள்!!!

ஒன்னே ஒன்னுதான் பேஸ் வெள்ளையாவே இருக்கறாமாதிரி இருக்கே அதான் எனக்கு டவுட் வந்துது...அதான் எனது முதல் மேலே உள்ள பெரிய கமென்ட்....ஏனென்றால் பேஸ் பைக்குனாலும் சரி டார்ட்டிற்கும் சரி கொஞ்சம் லைட் ப்ரௌன் ஆகுமேனு...பேஸ் க்ரிஸ்பாதான் இருக்கும். இதோட இன்னுரு கசின் நு சொல்லலாம் கேலட். (galette) இதுவும் அதே பேஸ் தான் ஆனா உள்ள ஃப்ரூட் ஃபில்லிங்க் வைச்சுட்டு கொழுக்கட்டைக்கு மடிக்கறா மாதிரி பாதி சுற்று மடிச்சு நடுல ஃபில்லிங்க் தெரியறா மாதிரி மடிச்சு பேக் பண்றது.

பை அண்ட் டார்ட் ஃபில்லிங்க் ஸ்வீட் கம்மியாவே வைக்கலாம். நான் கம்மியாதான் வைக்கறதுண்டு. அப்புறம் ப்ரௌன் ஷுகர் பயன்படுத்தறேன். தேனும் யூச் பண்ணுவேன். அப்புறம் பேஸ் மைதா க்கு பதில் கோதுமை மாவு அல்லது கோதுமை மாவுடன் கொஞ்சம் ஓட்ஸ் பொடித்தும் பயன்படுத்துவதுண்டு. அப்புறம் ஸ்வீட் ஃபில்லிங்க் இல்லாம உப்பு கார ஃபில்லிங்கும் செய்யலாம். சூப்பரா இருக்கும்....

கீதா

Bhanumathy Venkateswaran said...

ஆப்பிள் பை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. உங்கள் மகளின் திறமையையும், பொறுமையையும் பாராட்டுகிறேன். நான் இது வரை செய்ததும் இல்லை, சாப்பிட்டதும் இல்லை. இத்தனை அழகாக இருக்கும் ஆப்பிள் ரோஜாவை எப்படி சாப்பிடுவது?

Thulasidharan V Thillaiakathu said...

எனக்குத் தெரியுதே நான் கொடுத்த கமென்ட். //

அக்கா என் கமென்ட் எல்லாம் போட்டு முடித்த பிறகு கூட காணலை. அப்புறம் இப்ப மீண்டும் வந்து ரெஃப்ரெஷ் பண்ணி பார்த்தா நடுல உங்க கமென்ட் உக்காந்துருக்கு...

//பிரச்னை எல்லாம் இல்லை. நான் தட்டச்சுச் செய்யும் பழக்கப்படிக் கைகளை வைக்காமல் மாற்றி வைத்து விட்டேன் ஏதோ கவனத்தில். அது ட்க்ட்ச்லக்ச்ஜிகெஇலெ என்றெல்லாம் போய் விட்டது. :))))))//

ஹா ஹா ஹா ஹா அக்கா இது எனக்கும் பல முறை நடக்கும்....புரியாத மொழில டைப்பாகும்...சில சமயம் கவனிக்காம என்டெர் அமுக்கிட்டு அப்புறம் கமெண்டை டெலிட் செய்து போடுவதும் உண்டு...ஹிஹிஹி இதெல்லாம் சர்வசகஜம் எனக்கு....அதுவும் டைப்பிங்க் கத்துட்டுருக்கேன்ற ஜம்பத்துல ஃபாஸ்டா வேற அடிப்பேனா..என் கீஸ் வேற லூஸா...தப்புத் தப்பா வரும் ஹிஹிஹிஹி

கீதா

Anuradha Premkumar said...

ரொம்ப நல்லா இருக்கு

எனக்கும் பிடிக்கும்...நான் செஞ்சும் இருக்கேன்..

ஆனா கீதாக்கா சொன்ன மாதரி மேலயும் cover பண்ணுவேன்,,,

சுவையான ரெசிப்பி..

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் கீதாக்கா நெல்லை பெண் எல்லாவற்றிலும் கலக்குகிறார். படிப்பிலும். சமையலிலும் ஃபோட்டோ எடுப்பதிலும் என்று சர்வகலா வல்லியாக இருக்கிறார்.

கீதா

நெ.த. said...

நான் மாலை/இரவு மறுமொழி கொடுக்கறேன். இப்போ அம்மாவைப் பார்க்கச் சென்றுகொண்டிருக்கிறேன்.

நான் இந்த டிஷ் சாப்பிட்டதில்லை. நண்றாக இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

வெளியிட்டமைக்கு எங்கள் பிளாக், ஶ்ரீராமுக்கு நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

பார்க்க ரோஜாப்பூ போல நல்லாத்தான் இருக்குது.

மிகவும் பொறுமையாக கஷ்டப்பட்டு அழகாகச் செய்ததை சாப்பிடக்கூடத் தோனாதுதான்.

நல்ல ராயல் ஆப்பிளாக வாங்கி வந்தோமாம் .....
கத்தியால் நறுக்கினோமாம் .....
அப்படியே அந்தத் துண்டங்களை வாயில் போட்டோமாம் .....
பற்களால் கடித்து ருஸித்து ரஸித்து சாப்பிட்டோமாம் என்று இல்லாமல் ......

இதென்ன தேவையில்லாத வேலைகள் என நினைக்கத் தோன்றுகிறது.

இருப்பினும் இதனை அழகாக ஓர் பதிவாக படங்களுடன் காண்பித்துள்ளது பாராட்டத்தக்கது மட்டுமே. :)

Angel said...

அழகா ரோஜா இதழ் போல அரேஞ் செஞ்சு பொறுமையா செய்த மகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சொல்லிடுங்க .

Angel said...

மகள் செஞ்சது சிங்கிள் க்ரஸ்ட் ஆப்பிள் rose பை . கீதா ரெங்கன் சொன்ன மாதிரி lattice டிசைன் போட்டதும் இருக்கு ..இங்கே எல்லாமே முள்கரண்டி சாப்பிடறவங்க அவங்க வசதிக்கு மேலேயும் முழுக்க சமோசா பூரணம் போலவும் மூடி வச்சி செய்வாங்க .
மகளை இப்படி வித விதமா செய்ய சொல்லுங்க .

Angel said...

ஸ்டெப் 2 படங்கள் எனக்கு quilling பேப்பரை அழகா சுருட்டி வச்ச மாதிரி இருக்கு :) என் கண்ணுக்கு

Angel said...

/ இருக்கும். லண்டன்ல ரொம்பப் புகழ்பெற்ற உணவகத்துல நாங்க-Business dinnerக்குப் போயிருந்தபோது, எனக்கு மட்டும் அங்கு அரிசி சாதமும் Dதாலும் கேட்டு வாங்கிக்கொண்டேன். //

இங்கே பிரிட்டிஷ்காரங்க தான் தமிழ் /வட இந்திய ரெஸ்டாரண்டில் அரிசாதம்லாம் கேட்டு சாப்பிடறாங்க . இங்கே ஜேமி ஆலிவர் டிவில லெமன் ரைஸ் செஞ்ச அழகை பார்க்கணும் :) இப்போ வந்தா லண்டன் வித்யாசமா இருக்கும் .

Angel said...

மகனும் டிசம்பரா ?? .அப்போ அறிவில் ஞானத்தி ல் அன்பில் படிப்பில் நற்குணங்களில் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுதலில் மேலும் பலவிஷயங்களில் ஜீனியஸாக என் மகளையும் அப்புறம் என்னையும் போல இருக்கணுமே :))))))))))))))

Angel said...

இங்கே mince pie அப்புறம் கிறிஸ்துமஸ் புட்டிங் இந்த இரண்டுமே கிறிஸ்துமஸ் டிஷஸ் இது வரை நான் சுவைக்கலை :)
அது முழுக்க இனிப்பு .
நானும் புது உணவை தொட மாட்டேன் ஆனா இப்போ சாப்பிட நினைச்சாலும் மைதா /கோதுமை அலறி ஓடிஏ வைக்குது .
அதேபோல சாக்லேட்ஸ் ..கண்ணுமுன்னாடி குவிஞ்சு இருந்தாலும் விருப்பமில்லை :)

Angel said...

https://www.netmums.com/recipes/mince-pies-egg-free
இந்த லிங்க்கில் இருப்பது மின்ஸ் பைஸ் .எல்லா பழங்களையும் பதப்படுத்தி தேன் / சர்க்கரையில் ஊறப்போட்டு ஜாம் போல செஞ்சி filling செய்வாங்க .இதை பார்த்த பஞ்சாபி நட்பு சொன்னார் ..ஏஞ்சலின் இதில் கிழங்கு மசாலா வச்சிருந்தா நல்லாருக்கும்ல :) என்று

athira said...

ஆஆஆஆங்ங்ங்ங் தலைபைப் பார்த்ததுமே நினைச்சிட்டேன் நெல்லைத்தமிழனுக்கும் பை:) இது வேற பை:)) க்கும் வெகுதூரம் இது மகளாகத்தான் இருக்கும் என... கரீட்டுத்தான்.. அப்போ மீ ஞானியேதான் என்பது எனக்கே இப்போதான் மெல மெல்லப் ப்ரியுதூஊஊஊஊஊஉ:)))

athira said...

///நெ.த. said...
நான் மாலை/இரவு மறுமொழி கொடுக்கறேன். இப்போ அம்மாவைப் பார்க்கச் சென்றுகொண்டிருக்கிறேன்.//

விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே.. எந்த நாரதர் கலகமும் இல்லாமல் ஸ்ஸ்ஸ்ஸ்மூத்தாப்ப்ப்போகுதே இது நாட்டுக்கு நல்லதில்லையே என ஓசிச்சேன்ன் கிடைச்சிட்டுதூஊஊஊஊ:)).. இதுக்காக எனில் கில்லர்ஜியை கட்சியில் சேர்க்கலாம்ம்ம்... ஆங்ங்ங் கில்லர்ஜி ஓடியாங்கோ நெல்லைத்தமிழன் அம்மாவைத் தன்னோடு வச்சிருக்காமல் இப்போதான் பார்க்கப் போறாராம்ம்ம்ம்.. இது கொஞ்சம்கூடச் சரியில்லேஏஏஏஏ....:)).. செனைக்குப் போயாச்சு இனி அம்மாவைக் கூட்டி வந்து உங்களோடு வச்சிருக்கோணும் ஒரு மாதத்துக்கு:)) ஹையோ ஆண்டவா இந்தக் கொமெண்ட் மட்டும் அண்ணியின்[நெ.தமிழனின் முறையில தண்ணியாம்ம் ஹையோ ஹையோ:)))] கண்ணில பட்டிடாமல் காப்பாத்திப் போடுங்கோ வைரவா:))...

athira said...

ஆங்ங்ங்ங் அதிரபதே!!! அதிரபதே!!!!.. புளிச்சாதத்துக்கு வராதவிங்க.. தயிர்ச்சாதத்துக்கு வராதவிங்க.... ஆப்பிள் பைக்கு வந்திருக்கினமே:)) ஹையோ மீ ஆரையும் கொமெண்ட்ஸ் பார்த்துச் சொல்லல்லே:) மீ ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))

G.M Balasubramaniam said...

எனக்கு செய்துபார்க்க முடியுமென்று தோன்றவில்லை

athira said...

இனித்தான் பை மட்டருக்கு வருகிறேன்.. மிக அழகாகச் செய்திருக்கிறா மகள். ரோஜாப்பூ வடிவம் என்பதனால மூடாமல் செய்திருக்கிறா பொதுவா பை எனில் மேலேயும் மூடியிருக்கும் உள்ளே தான் விதம் விதமான ஐட்டம்ஸ்:) இருக்கும்.

ரோஜாப்பூ மிக அழகாக வந்திருக்கு. நானும் இப்படி உருளை ரோஸ் செய்து போட்டிருக்கிறேனே:)).. மகளுக்கு வாழ்த்துக்கள். பொதுவா இக்காலத்தில் பொம்பிளைப்பிள்ளைகள் கிச்சினுக்குள் போக விரும்புவதே குறைவு அப்படி இருக்கும்போது மகள் இப்படி விதம் விதமாகச் செய்வதுக்கு வாழ்த்துக்கள்.

Angel said...

ரோஜாப்பூ மிக அழகாக வந்திருக்கு. நானும் இப்படி உருளை ரோஸ் செய்து போட்டிருக்கிறேனே:)).//
கர்ர்ர் சந்தடிசாக்கில் சைக்கிள் கேப்பில் விளம்பரம் :)

Angel said...

//பொதுவா இக்காலத்தில் பொம்பிளைப்பிள்ளைகள் கிச்சினுக்குள் போக விரும்புவதே குறைவு //

@நெல்லைத்தமிழன் இந்த மேற் சொன்ன பின்னூட்டத்துக்கு

//நீங்கள் ஏஞ்சலினை சொல்லவில்லைதானே //போன்ற ரிப்லைக்கள் தடை செய்யப்பட்டுள்ளது

Thulasidharan V Thillaiakathu said...

மகனும் டிசம்பரா ?? .அப்போ அறிவில் ஞானத்தி ல் அன்பில் படிப்பில் நற்குணங்களில் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுதலில் மேலும் பலவிஷயங்களில் ஜீனியஸாக என் மகளையும் அப்புறம் என்னையும் போல இருக்கணுமே :))))))))))))))//

ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் சாஜி லிஸ்ட்ல என் பையனும்!!! ஹையோ இது பூஸாருக்கு ஞானிக்குப் புகை வந்திருக்குமே...

கீதா

நெ.த. said...

பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி. ஒவ்வொன்றுக்கும் மறுமொழி தருவேன்.

“பொம்பிளைப் பிள்ளைகள்”— இது என்னுடைய வயசுக்கு (அதாவது பதினைந்து-பல வருடங்களாக) க்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகள். ஆன்ரீ, அக்காலாம் இதுல வரமாட்டாங்க. (ஏ, அஅ,கீர இவங்கள்லாம் கிடையவே கிடையாது ஹாஹாஹா)

Angel said...

/ ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் சாஜி லிஸ்ட்ல என் பையனும்!!! ஹையோ இது பூஸாருக்கு ஞானிக்குப் புகை வந்திருக்குமே...//

ஹாஹா கீதாநீங்க முன்னே சொல்லியிருக்கீங்க ..பூனை வருமுன் அவரச அவசரமா டைப்பினதில் உங்க மகனை மறந்துட்டேன் .

Generally, individuals born in the month of December are fun to be around and thus make a lot of friends and admirers.

ஸ்டிவன் ஸ்பீல்பெர்க் ,ஜோசப் ஸ்டாலின் ,ஜஸ்டின் ட்ரூடோ ,மக்ரோன் ,பிராnk சினாட்ரா ,பிராட் பிட் ,பிரிட்னி ஸ்பியர்ஸ் ,வால்ட் டிஸ்னி எல் லாம் டிசம்பர்தான்

Angel said...

கர்ர்ர்ர் :) தப்பே இல்லை இல்லை உங்க மகளோட ப்ரெண்ட்ஸ் உங்களை அங்கிள்னு கூப்பிட்டதில் :)

Angel said...

இதனால் சகலமானோருக்கும் நானா அறிவிப்பது என்னவென்றால் ..உங்களை விட ஓரிரண்டு /5 வயது பெரியவங்கன்னு தெரிஞ்சிடுச்சின்னா உடனே அக்கா அண்ணா னு கூப்பிட்டுடுங்க இல்லின்னா எந்த நேரத்திலும் நீங்கள் ஆன்ட்டி அக்கா இல்லை பாட்டி ஆக்கப்படுவீர்கள் :)

Thulasidharan V Thillaiakathu said...

நானும் இப்படி உருளை ரோஸ் செய்து போட்டிருக்கிறேனே:)).//
கர்ர்ர் சந்தடிசாக்கில் சைக்கிள் கேப்பில் விளம்பரம் :)//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் ஹையோ இதை இப்பத்தானே பார்க்கிறேன்..எடுத்து வைச்சுக்கறேன்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இதனால் சகலமானோருக்கும் நானா அறிவிப்பது என்னவென்றால் ..உங்களை விட ஓரிரண்டு /5 வயது பெரியவங்கன்னு தெரிஞ்சிடுச்சின்னா உடனே அக்கா அண்ணா னு கூப்பிட்டுடுங்க இல்லின்னா எந்த நேரத்திலும் நீங்கள் ஆன்ட்டி அக்கா இல்லை பாட்டி ஆக்கப்படுவீர்கள் :)//

ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் அதான் நான் முந்திக் கொண்டு அண்ணா என்று விளித்துவிடுகிறேன் ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

Generally, individuals born in the month of December are fun to be around and thus make a lot of friends and admirers. //

ஹையோ ஏஞ்சல் இன்னிக்கு பூஸாருக்கு ரொம்பவே புகை வரப்போகுது....பரவால்ல அதனால என்ன ஏஞ்சல் பூஸார் வரதுக்குள்ள நானும் இதோ ஓடிங்க்!!

கீதா

Angel said...


//ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் அதான் நான் முந்திக் கொண்டு அண்ணா என்று விளித்துவிடுகிறேன் ஹா

கீதா//
ஆவ் !!! கீதா .இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே :) இனிமேவ் எல்லாரும் bhaiya தான் நானா கூப்பிடப்போறேன் ..
கீதா முந்தி ரெவெரி னு ஒரு பதிவர் அமெரிக்கால இருக்கார் அவரை மிரட்டி பூசாரை அக்கானு கூப்பிட வச்சேன் :)
அவரை காணோம் சில வருஷமா .வந்தாக பூனையை ஓட்டுவார் பாக்கிற இடத்தில எல்லாம் அதிரா அக்கானு சொல்லியே

Thulasidharan V Thillaiakathu said...

ஆன்ரீ, அக்காலாம் இதுல வரமாட்டாங்க. (ஏ, அஅ,கீர இவங்கள்லாம் கிடையவே கிடையாது ஹாஹாஹா)//

ஏஞ்சல் பாருங்க!!! ஹா ஹா ஹா இந்தத் தம்பிய என்ன பண்ணலாம் ஏஞ்சல் நீங்க அடுத்த வாட்டி பெயர் சொல்லிக் கூப்பிடறத விட்டு அண்ணேனு கூப்பிடுங்க...ஹா ஹா ஹா ஹா ஆனா பாருங்க நெல்லை என்னை விட ஜஸ்ட் ஒரே ஒரு மாசம் அதுவும் நாள் கணக்குல பிந்தி பொறந்துட்டாராம் அதுக்கே இப்படி ஹா ஹா ஹா ஹா..ஒரு நாள் இல்ல ஒரு அரைநாள் முன்னாடினா கூட நான் அண்ணேனு கூப்பிட்டிருப்பேன் ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

/நீங்கள் ஏஞ்சலினை சொல்லவில்லைதானே //போன்ற ரிப்லைக்கள் தடை செய்யப்பட்டுள்ளது//

ஏஞ்சல் அது வேற ஒன்னுமில்லை....தன்னைச் சொல்லிடக் கூடாதுனு முந்திக்கிட்டாங்க...அம்புட்டுத்தான்

கீதா

நெ.த. said...

ஸ்ரீராம் - வெளியிடத் தாமதம் என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. எங்கள் பிளாக்குக்கு அனுப்பறோம். எப்போன்னாலும் வெளியிட்டுக்க வேண்டியதுதான். ஆனால், ஒருவேளை நான் 'மட்டர் பனீர்' இந்த வாரம் அனுப்பினால், அதுக்கு அப்புறம் யாராவது 'மட்டர் பனீர்' அனுப்பினால் (என்னுடையது வெளியிடுவதற்கு முன்), நீங்கள் சமாளிச்சுக்கணும். அவ்ளவ்தான்.

Thulasidharan V Thillaiakathu said...

அப்போ மீ ஞானியேதான் என்பது எனக்கே இப்போதான் மெல மெல்லப் ப்ரியுதூஊஊஊஊஊஉ:)))//

ஹா ஹா ஹா அப்ப இவ்வளவு நாள் நீங்க ஞானினு போட்டுக்கிட்டது எல்லாம் டுபாக்கூரா....ஹா ஹா ஹா

கீதா

Angel said...

//இல்ல ஒரு அரைநாள் முன்னாடினா கூட நான் அண்ணேனு கூப்பிட்டிருப்பேன் ஹா ஹா ஹா

கீதா//
ஹாஹா கீதா :)

Thulasidharan V Thillaiakathu said...

அப்போ மீ ஞானியேதான் என்பது எனக்கே இப்போதான் மெல மெல்லப் ப்ரியுதூஊஊஊஊஊஉ:)))//

ஹையோ இது தெரியாம ஸ்ரீராம் வேற உங்க சிஷ்யனா இருக்குமோன்னு சொல்லிட்டேனே...!!! (ஞாயிறு)

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கீதா முந்தி ரெவெரி னு ஒரு பதிவர் அமெரிக்கால இருக்கார் அவரை மிரட்டி பூசாரை அக்கானு கூப்பிட வச்சேன் :)
அவரை காணோம் சில வருஷமா .வந்தாக பூனையை ஓட்டுவார் பாக்கிற இடத்தில எல்லாம் அதிரா அக்கானு சொல்லியே //

ஹையொ ஏஞ்சல் அது யாரப்பா...வந்தா காமிச்சுக் கொடுங்க....பூஸார் வாலை எல்லாரும் சேர்ந்து பிடிப்போம்...

கீதா

நெ.த. said...

தில்லையகத்து கீதா ரங்கன் - முதல் வருகைக்குப் பாராட்டுகள். உங்க பின்னூட்டமெல்லாம் படித்தேன். மிக்க நன்றி. இது ஆப்பிள் Pieதான் என்று சொல்லிவிட்டாள். எனக்கு bag (பை)தான் தெரியும் என்பதால், அவ சொன்னதைச் சொல்லிட்டேன்.

கீதா ரங்கன் - உங்கள் பாராட்டுக்கு நன்றி (ரொம்ப என்கரேஜ் செய்யும் விதமா எழுதுறீங்க). என் வேலை தமிழ்ப்படுத்தியது மட்டும்தான். பொதுவெளில எழுதத் தயக்கம்தான். என் பெண், 'சவுத் இண்டியன் உணவுல என்ன வெரைட்டி இருக்கு, அது எப்போனாலும் செய்துக்கலாம் என்று சொல்லிட்டா. மற்றபடி, இந்த மாதிரி செய்முறைலதான் அவளுக்கு இண்டெரெஸ்ட். உங்கள் செய்முறைக் குறிப்பை அவள்ட சொல்றேன்.

உங்களுக்கு இதெல்லாம் பிடிக்கும் என்பதே எனக்கு ஆச்சர்யம்தான். இருந்தாலும் நீங்க நிறைய செய்துபார்க்கிறீங்க. எனக்கு ஒரு ரகசியம் மட்டும் சொல்லுங்க. உங்க அப்பாவுக்கும் கணவருக்கும் இது பிடிக்குமா?

'உப்பு கார ஃபில்லிங்கா' - ஆளை விடுங்க. என்ன, பாரம்பர்ய பிள்ளையார் கொழுக்கட்டையா இனிப்பு, காரம்லாம் செய்ய?

நெ.த. said...

வாங்க துரை செல்வராஜு சார்.. நீங்க நம்ம கட்சிதான். எனக்கு பாரம்பர்யமா இல்லாத எந்த உணவும், அதுவும் கெமிக்கல்லாம் சேர்க்கும் உணவு (நாள்பட்டு இருக்கணும்னு) சுத்தமாகப் பிடிக்காது. ஒரு தடவை எங்க கம்பெனி பிட்சா கடையில், உருளை வெட்ஜ் (wedge) சாப்பிட்டேன். அட்டஹாசமா இருந்தது. உடனே கிச்சனுக்குள் சென்று எப்படிச் செய்கிறார்கள் என்று பார்த்தேன். ஃப்ரோசன் உருளை வெட்ஜை அவனில் வைத்து (பிட்சா அவன்) சூடுபடுத்துகிறார்கள். அத்துடன் உருளை வெட்ஜின் மீது இருந்த ஆசை ஓவர்.

நெ.த. said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிதா சாம்பசிவம் மேடம்.

சமையல் நிபுணிக்குத் தெரியாத ஒரு ஐட்டத்தைச் செய்து அனுப்பியிருக்கிறேன் என்பதே என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது.

தட்டச்சு எனக்குத் தெரியாததா என்ற அலட்சியத்தில் விரல்களைத் தவறாக கீபோர்டில் வைத்தீர்களா இல்லை, 'தேவையில்லாத காய்கறிகளை' மார்கெட்டிலிருந்து வாங்கிக்கொண்டு வந்தவரைப் பார்த்து கோபம் கொண்டதால் கவனம் தவறியதா? ஹா ஹா ஹா

உங்கள் பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் மிக்க நன்னி ஹை (இது வேற ஹை)

நெ.த. said...

@ஸ்ரீராம் - //துரை செல்வராஜு ஸார், கீதா ரெங்கன், கீதா அக்கா, பானு அக்கா அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.// - இப்படி வராதவர்களையும் சேர்த்து 'காலை வணக்கம்' சொல்றது தவறில்லையா? அப்போ எங்களை ஏன் மிஸ் செய்தீர்கள்? இல்லை ஸ்டாண்டர்ட் டெக்ஸ்டை பட் என்று தட்டிவிடுகிறீர்களா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நெ.த. said...

வாங்க கரந்தை ஜெயக்குமார் சார்... உங்களையும் முனைவர் ஐயாவையும் வெங்கட்டுடன் சேர்ந்து பிரகதீஸ்வரர் கோவில் பின்னணியில் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கும் முனைவரும் நீங்களும் விளக்கம் சொல்லி தஞ்சைப் பெருவுடையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார முக்கிய இடங்களுக்கு உங்களுடன் வரவேண்டும் என்று பேரவா. பார்ப்போம் எப்போது வாய்க்கிறது என்று.

நெ.த. said...

வருக கில்லர்ஜி... உங்களுக்குப் பயப்படுகின்றேனோ இல்லையோ உங்கள் மீசைக்காவது பயந்து, உங்களை 'இளைஞர்' என்று ஒத்துக்கொண்டுவிட்டேன். (ஆனா இப்போதுதான் மகனுக்குப் பெண் பார்க்கச் செல்வதாகப் படித்தேன்..ஹிஹிஹி)

நெ.த. said...

வருக வெங்கட். எனக்கும் செய்முறை எழுதும்போது வேலை ஜாஸ்தி என்றுதான் தோன்றியது. ஆனால் மகள் சுலபம் என்று சொல்கிறாள். இது அவரவர்களின் ஆர்வத்தைப் பொறுத்தது என்று நினைக்கிறேன்.

நெ.த. said...

வெங்கட் - ஒன்று குறிப்பிட மறந்துவிட்டது. பழமொழி ஒன்று சொல்வார்கள். ஆடு மேய்த்த மாதிரியும் ஆயிற்று. அண்ணணுக்குப் பொண் பார்த்த மாதிரியும் ஆயிற்று என்று. அதுபோல, குடும்பத்தோடு இரண்டு வாரங்கள் இருந்த மாதிரியும் ஆயிற்று, 10-20 பதிவுகளைத் தேற்றிய மாதிரியும் ஆயிற்று என்று நீங்கள் தமிழகத்திலும் பயணத்திலேயே இருந்தீர்கள் போலிருக்கிறது. ஹாஹா ஹா

நெ.த. said...

வருகைக்கு நன்றி கோமதி அரசு மேடம். டிசம்பரில் இதனை அனுப்பினேன். தாமதமான வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்கள் மருமகள் வரும்போது பாரம்பர்ய உணவுவகைகளைச் செய்யுங்கள் (உதாரணமா செட்டிநாட்டு சமையல் முறை போன்று)

நெ.த. said...

முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவின் வருகைக்கு நன்றி. உங்கள் கோவில் உலாவெல்லாம் பார்த்து உங்களுடன் சேர்ந்துகொள்ளவேண்டும் என்று மிக்க அவா. (கோவிலில் எதை எதைக் கண்டு ரசிக்கவேண்டும், எந்தக் காலத்தையது போன்ற விவரங்கள் உங்கள் விரல் நுனியிலல்லவா?)

காமாட்சி said...

அழாக அருமையாக செய்முறையுடன் எழுதியிருக்கிறீர்கள். படங்களெல்லாம் அசத்தல். உங்கள் பெண் செய்த குறிப்பு. மிக்க ஸந்தோஷமாக இருக்கிறது. இவ்வளவு அக்கரையாக செய்திருக்கிராள். என் பாராட்டுதள்கள். என்பேத்தியும் செய்கிராள். கிரீன் ஆப்பிள் விசேஷமாக உபயோகிக்கிராள். நான் பிட்ஸா தவிர வேறு எதுவும் செய்தது இல்லை. விசேஷ பாராட்டுதல்கள் உங்கள் பெண்ணிற்கு. அன்புடன்

நெ.த. said...

வாங்க வல்லி சிம்ஹன் அம்மா. 'நமக்குத்தான் ஒட்டாதே' - ஹை ஃபை - நாமிருவரும் திருக்குறுங்குடி அல்லவா? ஹா ஹா ஹா

நெ.த. said...

வாங்க மிடில் கிளாஸ் மாதவி. ஆம். இதைச் செய்ய பொறுமை மிக அவசியம்னு எனக்கும் தோணுது. 'கீதா ரெங்கன் மேடம்'- செய்முறை எழுதியிருக்காங்க.

நெ.த. said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எதற்கு நெல்லைக்குச் செல்லவேண்டும்? ஒருவேளை நெல்லைக்குச் சொல்லவேண்டும் என்று நினைத்தீர்களோ?

நெ.த. said...

வாங்க கமலா ஹரிஹரன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

உங்களிடமிருந்து இன்னொரு செய்முறை மிக விரைவில் வரும் என நினைக்கிறேன் (பாரம்பர்ய ஐட்டம் எழுதுங்க)

நெ.த. said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.

எனக்கும் தோன்றியது.. இவ்வளவு அழகான ரோசாவை எப்படிச் சாப்பிடுவது என்று.

நெ.த. said...

வாங்க அனுராதா ப்ரேம்குமார். நீங்கள் ஏற்கனவே செய்திருக்கிறீர்கள் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. நன்றி.

காமாட்சி said...

ருசியான ஆப்பிள் பை. அழகு,கலைநயத்துடன் அக்கரையுடன், அன்போடும் தயாரிக்கப்பட்டது. படங்கள் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. செய்முறையும் அப்படியே. உங்கள் பெண்ணிற்கு பாராட்டுதல்கள். உங்களுக்கும் பாராட்டுதல்கள். அன்புடன்

நெ.த. said...

வாங்க கோபு சார். இப்போதெல்லாம் அபூர்வமா வருகை தருகிறீர்கள். நீங்கள் கண்டிப்பா வருவீங்கன்னு நினைத்து சில செய்முறை எழுதினா வர்றதில்லை.

ராயல் ஆப்பிள்கள் - இதைப் பற்றி எழுதி உங்கள் ஆசை என்ற பலூனை ஓட்டை போட விரும்பவில்லை. என் அனுபவப்படி, நல்ல ஆப்பிள்கள், நம்ம ஹிமாச்சல்பிரதேசத்திலிருந்து வரும், பள பளப்பு இல்லாத ஆப்பிள்கள்தாம். நீங்கள் சொல்லும் ராயல் ஆப்பிள்களும் அமெரிக்க ஆப்பிள்களும் மெழுகுப்பூச்சுக்களோடு நம்மை வந்து அடையும்போது அனேகமாக விளைந்து 1 வருடத்துக்கு மேலும் ஆகியிருக்கும். கேட்க ஆச்சர்யமா இருக்கும் ஆனால் உண்மை அதுதான் (ஒருவேளை 7-8 மாதங்களாவது ஆகியிருக்கும்)

அதுனால, அடுத்த முறை, ராயல் ஆப்பிளுக்குப் பதில், கொய்யாப் பழத்தை நறுக்கி, விதைகள் இல்லாமல், சாப்பிட்டு ஆனந்தியுங்கள்.

மிக்க நன்றி.

நெ.த. said...

ஏஞ்சலின் - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

You are able to appreciate the work, while actually I am not able to. ஏன்னா நான் இத்தகைய உணவை விரும்பாததுதான் காரணம். என் பெண் கேக் போன்ற சில ஐட்டங்கள் செய்வாள். நான் டேஸ்ட் செய்யமாட்டேன்.

நான் லண்டன் வந்து 3 வருடங்கள் ஆகிறது. பாரிசிலும் பாரிசன்ஸ் சங்கீதாவில் தோசை சாப்பிட்டபோதும் எனக்கு அப்படித்தான் தோன்றியது.

//அப்போ அறிவில் ஞானத்தி ல் அன்பில்// - இதெல்லாம் சரிதான். ஆனால் நீங்கள் கொடுத்துள்ள அந்த மாதத்தில் பிறந்தவர்கள் லிஸ்ட் ஒரே குளறுபடியாக இருக்கிறதே. அதில் பலரைப் பற்றி நிறைய காசிப் கேள்விப்பட்டிருக்கேனே.

நெ.த. said...

வருகைக்கு நன்றி ஜி.எம்.பி சார். யாரேனும் கூட உதவினால் நிச்சயம் நீங்கள் செய்துபார்ப்பீர்கள் என்று நம்பிக்கை. நீங்கள் செய்த கேக் லாம் பார்த்திருக்கிறேனே.

நெ.த. said...

6 வயசுக்கு முன்னால் மிக மோசமான வால்தனமுள்ள பெண்ணாக இருந்த அதிரா அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாராது வந்த மாமணி என்று நினைத்தவரை இனி இங்கு எட்டிப்பார்க்கவிடக் கூடாது என்ற நல்லெண்ணமா அதிரடி அவர்களே. எனக்குத் தெரிந்தவரை, ஒடியல் கூழ் செய்ய ஆரம்பித்து, அதற்கு ஒடிசி நடனம் கற்றுக்கொள்வது ஈசியான வேலை என்று நினைத்து அன்றிலிருந்து எந்த உணவுப்பதிவுக்கும் அவர் வருவதில்லை என்றுதான் கேள்விப்பட்டேன். அவர்தான் வந்து விளக்கம் சொல்லவேண்டும். ஹா ஹா ஹா.


நீங்க உருளை ரோஸ் பண்ணியிருக்கீங்களா? எப்படி எப்படியெல்லாம் வித்தை செய்து உங்கள் மகனைச் சாப்பிட வைக்கவேண்டியிருந்திருக்கிறது.

என் பெண், அவளுக்கு இஷ்டமான இந்த மாதிரி ஐட்டங்களை எப்போவாவது செய்யத்தான் கிச்சனுக்குள் நுழைவாள். இல்லைனா அவள் படிப்பில் அவள் பிஸி (என்று சொல்லிடுவாள் ஹா ஹாஹா)

athira said...

////Angel said...
மகனும் டிசம்பரா ?? .அப்போ அறிவில் ஞானத்தி ல் அன்பில் படிப்பில் நற்குணங்களில் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுதலில் மேலும் பலவிஷயங்களில் ஜீனியஸாக என் மகளையும்///////////// அப்புறம் என்னையும் போல இருக்கணுமே :))))))))))))))////

அந்தக் கடசி லைன் வரைக்கும் நல்ல தெளிவாத்தான் பேசிக்கொண்டு வந்தா:)) கடசியில அண்டைக்குப் போட்ட மருந்தின் எபெக்ட் போல என்னமோ உளறிட்டா:)) எனக்கு காலையில பார்த்ததும், மூக்கால நாக்கால எல்லாம் புகைப் புகையாப் போகத்தொடங்கிட்டுது:)) அந்தரத்துக்கு மோர்கூட இல்லை:)) பபபப்ச்சைத்தண்ணியைக் குடிச்சிட்டு ஓடிட்டேன்.. இப்போ தான் கொஞ்சம் ரைம் கிடைச்சுது ஒழுங்காப் படிக்க:))

நெ.த. said...

@கீதா ரங்கன் - //ஹையோ இது பூஸாருக்கு ஞானிக்குப் புகை வந்திருக்குமே...// - அவங்களுக்கு ஏன் புகை வரப்போகுது. 1500 மில்லி மீட்டரில் இரண்டாவதாக வந்தேன் (புகைப்படம், இடுகை போடாதவரை நான் தொடர்ந்து கலாய்ப்பேன் ஹா ஹா ஹா), டமில்ல டி (எங்க ஊர்ல, A-90 to 100, B-75-90, C-50-75, D-35-50 Just Pass என்றுதான் கிரேடு ஹக்ஹக்ஹக்), ஆஜாபோஜ்லே என்றெல்லாம் சொல்பவருக்கு, தானும் 'திசம்பர்தான்' என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

athira said...

///June 4, 2018 at 4:15 PM
Angel said...
//பொதுவா இக்காலத்தில் பொம்பிளைப்பிள்ளைகள் கிச்சினுக்குள் போக விரும்புவதே குறைவு //

@நெல்லைத்தமிழன் இந்த மேற் சொன்ன பின்னூட்டத்துக்கு

//நீங்கள் ஏஞ்சலினை சொல்லவில்லைதானே //போன்ற ரிப்லைக்கள் தடை செய்யப்பட்டுள்ளது//

ஹலோ ரொம்ப ஸ்மார்ட் எனும் நினைப்பு:)) நான் ஜொன்னது “பொம்பிளைப்பிள்லைகளை” .. ஆன்ரியை அல்லவாக்கும் கர்ர்ர்ர்ர்:))

athira said...

///ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் சாஜி லிஸ்ட்ல என் பையனும்!!! ஹையோ இது பூஸாருக்கு ஞானிக்குப் புகை வந்திருக்குமே...

கீதா///

இல்ல கீதா இல்ல:)) நான் பிள்ளைகளைச் சொல்லவே மாட்டேன்ன் இக்காலத்துப் பிள்ளைகள் ரொம்ப ஸ்மார்ர்ட்ட்.. லைக் அதிரா:)) ஹையோ ஹையோ:))

athira said...

@ நெ.த
// (ஏ, அஅ,கீர இவங்கள்லாம் கிடையவே கிடையாது ஹாஹாஹா)

June 4, 2018 at 4:56 PM///

அஞ்சூஊஊஊஊஉ கீதா.. ஓடியாங்கோ இந்த சோட் காண்ட் ஐ மீ அயகா விரிவாக்கம் செய்து சொல்றேன்ன்:)) இல்லை எனில் நீங்க டப்புத்தப்பா நெனைப்பீங்க..:)) அதாவது நெல்லைத்தமிழன் அண்ணா[அதிராட முறையில ஜொன்னேனாக்கும் ஹா ஹா ஹா].. என்ன ஜொள்றார் எனில்:))..

///ஏ...அ, ஆ..கீ////

இப்பூடியெனில்.. அதாவது ஏஞ்சல் அன்ரி.... ஆஆஆஆஆஅ கீதா:)) இப்பூடிச் சொல்லுறார்:)) புரிஞ்சுக்கோங்க:))

athira said...

///Generally, individuals born in the month of December are fun to be around and thus make a lot of friends and admirers.

ஸ்டிவன் ஸ்பீல்பெர்க் ,ஜோசப் ஸ்டாலின் ,ஜஸ்டின் ட்ரூடோ ,மக்ரோன் ,பிராnk சினாட்ரா ,பிராட் பிட் ,பிரிட்னி ஸ்பியர்ஸ் ,வால்ட் டிஸ்னி எல் லாம் டிசம்பர்தான்////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கு இப்போ டவுட்டு டவுட்டா வருதூஊஊஊஊஊஊஊஉ அஞ்சு பிறந்தது அப்போ டிசம்பரில இல்ல.. அது கள்ளச் சேர்டிபிகேட்ட் ட்ட்ட்ட்ட்ட் விடமாட்டேன்ன்ன் மீ போராடுவேன்ன்ன்ன்ன்:))

நெ.த. said...

காமாட்சியம்மா - உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. 'ஆசி'கூற மறந்துட்டீங்களே...

நீங்க பிட்சாவும் செய்திருக்கிறீர்களா? சகலகலா வல்லிதான் நீங்க. விரைவில் உங்க செய்முறை ஒண்ணு இங்க வெளியாகணும்.

என் பெண் கலைநயத்தோடு செய்வாள் (அவளுக்குப் பிடித்ததை மட்டும்-அதையும் சொல்லிடணும் இல்லையா. அவள் 6-7வது படித்துக்கொண்டிருந்தபோது மேசை விரிப்பு போல் ஒரு துணியை வாங்கி அதில் கலரில் டிசைன் போட்டுக்கொண்டுபோய் ஸ்கூலில் கொடுக்கணும். எப்போதும்போல் லேட்டாத்தான் துணி வந்தது. நான் அவளுக்கு நேரமாயிடப்போகுதே என்று முந்திய நாள் கட கட வென்று டிசைன் போட்டுக் கொடுத்துவிட்டேன். அவள் ஒன்றும் சொல்லலை. ஆனால் அதன் பிறகு அவள் ஒரு துணி வாங்கி நல்ல டிசைன் போட்டு அதைத்தான் சப்மிட் பண்ணினாள். எனக்கு அப்போது கோபம், என் நேரம் வேஸ்ட் ஆகிவிட்டதே என்று. ஆனால் அவள் செய்த டிசைன் ரொம்ப நல்லா இருந்தது. எ.பியில் எப்போவாவது இரண்டு படங்களையும் அனுப்பறேன்) என் பெண் மட்டுமல்ல, பொதுவா பெண்களே ரொம்ப கலைநயம் மிக்கவர்கள். (ஆனால் என்ன.. கோவில் சிற்பங்கள், சிலைகள் எல்லாம் ஆண்கள் செய்ததுதான் ஹா ஹா ஹா)

athira said...

///Angel said...
இதனால் சகலமானோருக்கும் நானா அறிவிப்பது என்னவென்றால் ..உங்களை விட ஓரிரண்டு /5 வயது பெரியவங்கன்னு தெரிஞ்சிடுச்சின்னா உடனே அக்கா அண்ணா னு கூப்பிட்டுடுங்க இல்லின்னா எந்த நேரத்திலும் நீங்கள் ஆன்ட்டி அக்கா இல்லை பாட்டி ஆக்கப்படுவீர்கள் :)///

ஹா ஹா ஹா நல்லாத்தான் யூடு விழுந்திருக்குதுபோல:)).. அப்பாடா மீக்கு இந்தக் கலவை எல்லாம் சே..சே.. கவலை எல்லாம் இல்லவே இல்லை பிக்கோஸ்ஸ்ஸ்ஸ்ஸ் குளுக்கோஸ்ஸ்ஸ் ஐமீன் சுவீட்டான சுவிட் 16 ல இருப்போர் இந்த சலசலப்புக்கெல்லாம் பயப்புட மாட்டினம்:)).. நிறைகுடம் தளும்பாது பாருங்கோ:))

நெ.த. said...

@அதிரா - //அதாவது ஏஞ்சல் அன்ரி.... ஆ// - இது அந்த 'தேவதையின் கிச்சன்' பிளாக்குக்கே அடுக்காது. அவங்கதான் தன்னோட கையை (அதுல 1/2 விரல் மட்டும் காணும்படி இருந்தது. மற்றதெல்லாம் பிளாஸ்டருக்குள்ள) படமெடுத்துப் போட்டிருந்தாரே. அதைப் பார்த்தபோது, (எனக்கு கை ஜோசியம் தெரியுமாக்கும் க்கும்) அவங்க உங்களைவிட 6 மாசம் சின்னவங்க என்று தோன்றியது.

வேணும்னா ஏஞ்சலினையே கேட்டுப்பார்க்கிறேன். என் ஜோசியம் சொல்லும் திறமை சரியா இருக்கான்னு.

athira said...

//ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் ஹையோ இதை இப்பத்தானே பார்க்கிறேன்..எடுத்து வைச்சுக்கறேன்...

கீதா///

சே..சே.சே.. மயில் படம் போட்டு மயக்க முடியல்லியே:)) இனி ஏதும் குளிசை குடுத்துத்தான் மயக்கோணும் போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வரவர நமக்கு எதிரிங்க ஜாஸ்தியாகிட்டே வராங்க:))... ஸ்ஸ்ஸ்ஸ் காய்த்த மரம்தானே கல்லெறி படும் என முத்தாச்சிப் பாட்டி ஜொள்ளியிருக்கிறா:))...

athira said...

///கீதா முந்தி ரெவெரி னு ஒரு பதிவர் அமெரிக்கால இருக்கார் அவரை மிரட்டி பூசாரை அக்கானு கூப்பிட வச்சேன் :)
அவரை காணோம் சில வருஷமா .வந்தாக பூனையை ஓட்டுவார் பாக்கிற இடத்தில எல்லாம் அதிரா அக்கானு சொல்லியே ///

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது மீ வைரவருக்கு நேர்த்தி வச்சேனாக்கும்.. ஹா ஹா ஹா ஹையோ இதை ரெவெரி படிச்சிடக்கூடா ஜாமீஈஈஈஇ நமக்கு வேறு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ:))..

athira said...

//ஹையோ இது தெரியாம ஸ்ரீராம் வேற உங்க சிஷ்யனா இருக்குமோன்னு சொல்லிட்டேனே...!!! (ஞாயிறு)

கீதா///

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா ஒரு ஞானியாகிட்ட ஞானியை:)) உப்பூடி பப்புளிக்கில மானபங்கப்படுத்தக்கூடா:)) பிறகு கொசு வந்து கடிக்கும்:))

athira said...

//ஹையொ ஏஞ்சல் அது யாரப்பா...வந்தா காமிச்சுக் கொடுங்க....பூஸார் வாலை எல்லாரும் சேர்ந்து பிடிப்போம்...

கீதா///

என்னா ஒரு ஜந்தோசம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு சுவீட் 16 ஐப் பார்த்து க்க்க்க்க்காஆஆஆஅ எனக் கூப்பிட யாருக்குத்தான் மனசு வரும்?:)) ஹா ஹா ஹா

athira said...

@ நெ.த:
///அதில் பலரைப் பற்றி நிறைய காசிப் கேள்விப்பட்டிருக்கேனே.//

கமான் கமான்ன் அது அஞ்சு பற்றித்தானே?:).. ஹையோ அது காசிப் இல்ல:)) கொசிப் ஆக்கும்:)) ஹையோ ஹையோ

athira said...

டும்..டும்...டும்ம்.. நாட்டு மக்களுக்கோர் அவசர வேண்டுகோள்:

ஸ்ரீராம் என்பவரை:) கடந்த 3 நாட்களாகக் காணவில்லை... கடசியாக கீதா அவர்கள் பார்த்தபோது:).. நிறைய முடி.. அதில் கொஞ்சம் பின்னால வழுக்கை:))[ஹ ஹா ஹா].. குட்டித்தாடி அதில் நடுவில் நரைத்திருந்ததாம்.. ஆனா ஜி எம் பி ஐயா பார்த்தபோது நரைக்கு டை அடிச்சிருந்ததாக தகவல் சொல்லப்பட்டது:))...

அத்தோடு பொக்கட்டிலே ஒரு பிரவுண் கலர் வொலட்:) அதனுள்ளே உள் மடிப்பிலே குட்டிப்படம் அனுக்காவோடது இருக்கும்:)).. இவரை ஆராவது பார்த்தால் உடனடியாக பிரித்தானியக் கிளை அதிராவின் ஒபிஸ் செக்:) அஞ்சுவுக்குத்தகவல் ஜொள்ளவும்:))

தகவல் ஜொள்ளுபவருக்கு... ஃபிறீயா அனுக்கா மூவி ரிக்கெட் அனுப்பி வைக்கப்படும்:))..

ஹையோ மீ பிஸி வெளில போகப்போறேன்ன் பாய் பாய்ய்ய்ய்.. இது வேற பாய்ய்ய்:))

ஸ்ரீராம். said...

அதிரா, கீதா,

ஞானியில் மூன்று வகை. ஞானி, விஞ்ஞானி, அஞ்ஞானி...

நான் மூன்றாவது...

athira said...

wஎ.த

//அதைப் பார்த்தபோது, (எனக்கு கை ஜோசியம் தெரியுமாக்கும் க்கும்) அவங்க உங்களைவிட 6 மாசம் சின்னவங்க என்று தோன்றியது.

வேணும்னா ஏஞ்சலினையே கேட்டுப்பார்க்கிறேன். என் ஜோசியம் சொல்லும் திறமை சரியா இருக்கான்னு.///

ஹையோ கையை முழுசாக் காட்டாமல் அங்கின இங்கின பாதியைக் காட்டி உலகத்தை மயக்குறாவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இருங்கோ நெ.தமிழன் அடுத்த முறை ஜந்திக்கும்போது பிடிச்சு வச்சு முழுக்கையையும் படமெடுத்துப் போடுறேன்ன் அப்போ ஜொள்ளுங்கோ:)) ஹையோ ஹையோ இண்டைக்கு நமக்கு நாள் சரியில்லைப்போலும்:))

காலையிலேயே கந்தசாமிச் சாத்ஹிரியார் ஜொன்னார் பிள்ளை வெளியில போகாத அடி வாங்குவாய் என:)) வீட்டுக்குள் இருந்தாலும் கதவுடைச்சு அடிக்க வருகினமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வைரவா அஞ்சுட கண்ணில மட்டும் இது பட்டிடக்கூடா:)) ஏதோ நெ.தமிழன் தெரியாமல் ஜொள்ளிட்டார்ர்:)) ஹா ஹா ஹா:))

ஸ்ரீராம். said...

இணைய இணைப்பு வொயர்களை JCP வைத்து அறுத்து எறிந்து விட்ட காரணத்தால் மொபைல் மூலம் உலாவிக் கொண்டிருக்கிறேன்...

athira said...

ஆஆஆஆஆஆஆஆஆ ஸ்ரீராமின் “அஞ்ஞான வாசம்” முடிஞ்சுதுபோல... ஹெட் தெரியுதேஏஏஏஏஏ ஹையோ மீ ரன்னிங்:))

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லை எங்க வீட்டுல எல்லாரும் சாப்பிடுவாங்க....பேக்கிங்க் எல்லாமே...வீட்டுல செஞ்சா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா, கீதா,

ஞானியில் மூன்று வகை. ஞானி, விஞ்ஞானி, அஞ்ஞானி...

நான் மூன்றாவது...//

எல்லாத்துலயும் ஞானி இருக்கு!!! ஸோ நீங்க ஞானிதான்!! ஹிஹிஹிஹி...

விடுங்க நானும் ஒரு ஞானிதான்....வி இல்லை அ தான்...ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இணைய இணைப்பு வொயர்களை JCP வைத்து அறுத்து எறிந்து விட்ட காரணத்தால் மொபைல் மூலம் உலாவிக் கொண்டிருக்கிறேன்...//

சீக்கிரம் சரியாகணும்....

தேம்ஸ் ஞானி, மோடியின் செக் என்ன ஒன்னும் பண்ணாம இருக்கார்னு தெரில.!!!!.
கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா ஒரு ஞானியாகிட்ட ஞானியை:)) உப்பூடி பப்புளிக்கில மானபங்கப்படுத்தக்கூடா:)) பிறகு கொசு வந்து கடிக்கும்:))//

ஹா ஹா ஹா அதிரா நாங்க பாக்காத கொசுவா!!! வெரைட்டி வெரைட்டியா பாத்திருக்கோம் இதெல்லாம் ஜுஜூஊஊஊஊஊஊஊஊஊஊபி... ஹிஹிஹிஹி...

கீதா

Geetha Sambasivam said...

என்ன ஆச்சு?

Geetha Sambasivam said...

இது போங்கு ஆட்டம்

நெ.த. said...

Correct timeக்கு வராம ஒரு நிமிஷம் இரண்டு நிமிஷம் சீக்கிரமே வந்து கியூல நின்னு போங்கு ஆட்டம் ஆடறீங்களே இது நியாயமாரேரேரே

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!