வியாழன், 22 ஆகஸ்ட், 2019

வெந்நீரில் மருந்திருக்கு தெரியுமா? அதை தினம் குடித்தால் குணமிருக்கு தெரியுமா...



ஒவ்வொரு வருஷமும் கல்யாண நாளுக்கு ஏதாவது ஒரு கோவில் போறதுல தீர்மானமா இருப்பா பாஸ்...   ஒரு வருஷம் நங்கநல்லூர் ஆஞ்சி கோவில்.  ஒரு வருஷம் குன்றத்தூர் முருகன் கோவில்.  இன்னொரு வருஷம் மயிலாப்பூர் பாபா, கபாலீஸ்வரர், மற்றும் அங்கிருக்கும்  கேசவ மாதவ பெருமாள் கோவில்கள்...

அப்படிப் போகும் ஓரிரு சந்தர்ப்பங்களில் வல்லிம்மாவையும் பார்த்தும் வந்திருக்கிறோம்!  ஒருதரம் சிங்கம் கிட்ட ஆசீர்வாதம் வாங்கியிருக்கோம்.  

இந்த வருஷம் கல்யாண நாளுக்கு ஒப்பிலியப்பன் கோவில் என்று போனமாசமே சொல்லிட்டார் பாஸ்.  ஏன்னா, 97இல் போயிட்டு வந்ததற்கப்புறம் குலதெய்வம் கோவில் போகாமலே இருந்தோமா...   அப்படிலாம் இருக்காதீங்கன்னு ஆளாளுக்கு சொன்னாங்க ...  எங்களுக்கு ஏற்பட்ட சில தடங்கல்களுக்கு காரணம் களைய குலதெய்வம் கோவில் போகச் சொன்னாங்களா...   நாங்களும் போயிட்டு வந்தோமா...  அப்பவே இனிமே வருஷாவருஷம் வந்துடணும்னு தீர்மானம் போட்டுக்கிட்டோம்.

அந்த வகையில இந்த வருஷம் கல்யாண நாளுக்கு ஒப்பிலிபியப்பன் கோவிலும் - அங்கதான் எங்க கல்யாணம் நடந்துச்சுன்னு முன்னாடியே சொல்லிருக்கேன் - குலதெய்வம் கோவிலும் போயிட்டு வந்துடலாம்னு மனசுக்குள் நெனச்சுக்கிட்டோம்.  முடிவும் பண்ணிக்கிட்டோம்.  அப்புறம் இரண்டாவது குலதெய்வமான சுவாமிமலைமுருகன் கோவில்..   இதுதான் திட்டம்.

போனவாட்டி போனமாதிரி கோவில் கோவிலா சுத்தக்கூடாதுன்னு பசங்க ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டானுங்க...    இந்த மூணோட சரின்னு தீர்மானமா சொல்லச் சொன்னாங்க...

எங்க தங்கறதுங்கறதை பத்தியெல்லாம் பேசிக்காம நாள் போயிட்டு இருந்தது.  அவங்கவங்களுக்கு ஆபீஸ் டென்ஷன், உடம்பு சரியில்லாமை, வரலக்ஷ்மி பூஜை, நாகசதுர்த்தி, கருடபஞ்சமி...  

எங்களுக்கு வரதா சொல்லி இருந்த வண்டிக்காரர் திடீரென காலை வாரி, வேறொருவரை அனுப்பினார்.  அந்த வேறொருவரும் எங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்ங்கறதால பிரச்னை இல்லை.

பயப்படாதீங்க...      காசிப்பயணக்கட்டுரை மாதிரி ரொம்ப பெரிசா எல்லாம் வராது...  ஆனாலும் பாருங்க...   இட்டு நிரப்ப ஒரு விஷயம் கிடைச்சுடுது நமக்கு...

பசங்களுக்கு சனிக்கிழமை ஆபீஸ் லீவுதான்.  எனவே வெள்ளிக்கிழமை ராத்திரி கிளம்பறதுல பிரச்னை இல்ல...ஒருத்தனுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை நைட் டியூட்டி.  அவனை மட்டும் ஏற்கெனவே இருந்த ஒரு காம்பன்சேட்டரி ஆஃப்  எடுக்க சொன்னோம்.

பயண நாளும் வந்தது.  இரவு ஒன்பது மணிக்கு கிளம்புவதாய் இருந்தது.  ஏழு மணிக்கு ஆரம்பிச்சுது பாருங்க மழை..   செம மழை..   எட்டு மணிக்கு வந்துடறதா சொன்ன வண்டி எட்டரைக்கு வர,  ஒருவழியாய்க்கிளம்பினோம்.  பெருங்களத்தூர்க் கோவிலில் தேங்காய், எலுமிச்சைப்பழம், சாங்கியம் செய்தபின்னே வண்டி விரைந்தது.. மழை பெய்தாலும் ஜன்னலைத் திறந்து வச்சுக்கிட்டாலும் உள்ளே தண்ணி வராம சில்லுனு இருந்தது பாருங்க...   பயணம் ரொம்ப இனிமையா அமைய அதுவும் ஒரு காரணம்ங்க...  திண்டிவனம் வரைக்கும் சல்லுனு போயிட்டோம்...   அப்புறம் கும்பகோணம் பாதைல திரும்பினப்புறம்தான் சோதனை...  அதுவரை நாலு டோல்...

ரோடாங்க அது?  சும்மாவே சுத்தம்...   அதிலும் மழைபெய்த நேரம்..  

சொல்ல மறந்துட்டேனே...  கிளம்பறதுக்கு முன்னால அதிகாலை இறங்கி குளிக்கக் கொள்ள என்று   இடம்னு தேடிப் பார்த்தா ஆச்சரியம்...  எங்கேயுமே இடம் இல்லை.

ஒண்ணு பண்ணினோம்...   போன வருஷம் ஜூன் மாசம் போனப்போ தங்கினோமே,  பாபுராஜபுரம் அக்ரஹாரம் திருமலா ஹோம் ஸ்டே நினைவு வந்துச்சா...  அட்ரஸ் எங்க பிடிக்கலாம்னு கூகிள் பண்ணினா...  இதுமாதிரி இதுமாதிரி நீங்க போன வருஷம் ஜுன்மாசம் ஆறாம் தேதி இங்க போனீங்க...    இது உங்க கண்ணுக்கு மட்டும்தான் தெரியும்..  பயப்படாதீங்க...   மார்க் போடறீங்களா? ன்னு கேட்டுச்சு.  அலண்டு போனாலும் காட்டிக்கலை.  வாட்ச் பண்றாங்கடா...



அங்கிருந்து போன் நம்பர் எடுத்து பேசி ரூம் புக் பண்ணிக்கிட்டோம்.  எனவே கவலை இல்லை. காலை மூணரை மணிக்கு கூகிள் மேப் உதவியோடு அந்த இடத்தை அடைந்தோம்.  இரண்டு நான் ஏஸி ஒரு பெட் ரூம் அறைகள் கிடைத்தன.  (கிச்சனும் உண்டு)  



பசங்க கிட்ட காலை ஆறரை மணிக்கு கிளம்பிடுவோம்னு சொன்னா முறைக்கறாங்க...  அதிலும் பெரியவன் முன்னால டிரைவர் பக்கத்துல  உட்கார்ந்து கம்பெனி கொடுத்தானா, தூங்கவே இல்லையாம்.  ஆனாலும் கண்டிப்பாகச் சொல்லிட்டு  படுத்தோம். 

அடுத்த வாரம் பார்ப்போமா...   வர வர ரொம்ப பக்தி மயமா ஆயிட்டுதோ...

இந்த வீடு ஞாபகம் இருக்கா?  இந்த வீட்டை இப்பவும் ஒரு போட்டோ எடுத்துக்கிட்டேன்...   இன்னும்  சிதிலமடைஞ்சிருக்கோ...




=============================================================================================

லலித் மோடிக்கு மதனைத் தெரியும்னு நினைக்கறேன்!  T 20ல சீர் கர்ல்ஸ் டான்ஸ் ஐடியா இங்கிருந்துதான் பிடிச்சுருக்கார்!





=================================================================================================


இதுவும் பேஸ்புக்கில் சமீபத்தில் பகிர்ந்த கவிதை...  இங்கு பின்னூட்டமிட்டிருந்த கீதா அக்கா, வாசுதேவன் திருமூர்த்தி அண்ணா சுவாரஸ்யமாய் இட்டிருந்தார்கள்.


எழுத்துகளை 
மாற்றி மாற்றி 
அமைத்துப்பார்க்கிறேன்.
எதை எதிர்பார்க்கிறேன் 
என்று தெரியவில்லை 

பக்கம் பக்கமாய் படிக்கிறேன் 
எதைத் தேடுகிறேன் 
என்று தெரியவில்லை.

எதிரில் நிற்பவரைத் 
தாண்டிப் 
பார்வையை அலைய விடுகிறேன் 
யாரைத் தேடுகிறேன் என்று தெரியவில்லை.

பதிலைத் தேடவில்லை இப்போது 
கேள்வியைத்தான் தேடுகிறேன் 
விருப்பங்களே தெரியாதபோது 
விடைகள் எப்படிக் கிடைக்கும்?


=============================================================================================


ஒருவர் புதிதாய் அறிமுகம் ஆகிறார் என்றால், அவரை அடுத்த தரம் பார்க்கும்போது சரியாய் நினைவில் வைத்திருக்கும் ஞாபகக்காரன் இல்லை நான்.  நேர்மார்!  அவர்கள் சிரித்துப் பேசும்போது தடுமாறிப்போகும் ரகம்...   வெட்கப்படவேண்டிய விஷயம்தான்...   

இது வேற மாதிரி...   படிங்களேன்...  உங்களுக்கே புரியும்..   "உக்கும்..   ஆமாம்"னு சொன்னாலும் சொல்வீங்க!



 ==================================================================================================

வெந்நீரின் மகத்துவம் தெரியுமோ....

கைகண்ட மருந்துவெந்நீர்!

மருத்துவர் எம்.மூர்த்தி:

"சிறுநீரகத்தை பாதுகாக்க, தினந்தோறும் குறைந்தபட்சம், 2 லிட்டர், அதிகபட்சம், 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என்ற, தண்ணீரின் மகத்துவம் பற்றி, விழிப்புணர்வு பிரசாரம் நடக்காத இடம் இல்லை. அதற்கு இணையாக, வெந்நீரும் உடல் நலத்திற்கு உகந்தது.
வடை, பக்கோடா, பூரி என, எண்ணெயில் பொரித்த அயிட்டம் அல்லது இனிப்புகளை சாப்பிட்ட பின் நெஞ்செரிச்சல் தோன்றும். உடனே நாம் எடுப்பது, 'ஜெலுசில்' அல்லது 'டைஜின்' மாத்திரைகளைத் தான். அதைவிடுத்து, ஒரு டம்ளர் வெந்நீரை, மெதுவாகப் பருகுகினால் போதும். கொஞ்ச நேரத்தில் நெஞ்செரிச்சல் போன இடம் தெரியாது.
சாப்பிட்ட பின், சுடச்சுட வெந்நீர் குடித்தால், உடலில் அதிகப்படி சதை போடுவதை தடுக்கலாம்.
மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வெந்நீர் கைகண்ட மருந்து; உடனடி நிவாரணம் நிச்சயம்.
உடல் வலிக்கு, வெந்நீரில் குளித்து, வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்துாள், பனங்கற்கண்டு போட்டு குடித்து படுத்தால் நன்றாகத் துாக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
கால் பாத வலியை போக்க, பெரிய வாளியில், சூடு தாங்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி, அதில் உப்புக் கல்லைப் போட்டு, கொஞ்ச நேரம் பாதத்தை வைத்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். 'டெட்டால்' ஊற்றினால், கால் வலி போவதுடன், அழுக்கும் நீங்கும்.
திடீரென்று தலை வலிக்கிறது என்றால், உடனே, டீ, காபியை தேடாமல், ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள். அஜீரணக் கோளாறு, குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலைவலி ஏற்படலாம்.
வீட்டில் பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறை, உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைப்பதால், நக இடுக்கில் இருக்கும் அழுக்கு போய், கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
வெயிலில் திரிந்து வீடு திரும்பியதும் தாகத்தைப் போக்க, ஐஸ் வாட்டர் குடிக்காமல், சற்று வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்க நல்ல வழி.
விருந்துகளில், 'செமையாக கட்டி' முடித்ததும், கூல் டிரிங்ஸ், ஐஸ் கிரீம்ஸ் பக்கம் போகாமல், ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள், உடம்புக்கு நல்லது.
ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, வீட்டு உபயோகத்திற்கும் வெந்நீரின் உதவி பெரிதாக உள்ளது.
நெய், எண்ணெய் இருந்த பாத்திரங்களை கழுவும்போது, வெந்நீரில் ஊற வைத்து கழுவினால், பிசுக்கு இருக்காது என்பது, பெண்மணிகளுக்கு தெரியாத விஷயம் அல்ல.
அதுபோலவே, தரையை துடைக்கும்போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருந்தால், வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடைத்தால் கிருமிகள் மடியும்.

- தினமலர் - "சொல்கிறார்கள்"


===================================================================================

157 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்..

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பதிவு இறங்கவே ஒரு நிமிஷத்துக்கும் மேல ஆயிருச்சு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா..​

      //பதிவு இறங்கவே ஒரு நிமிஷத்துக்கும் மேல ஆயிருச்சு//

      ஸாரி... ஹெல்ப்லெஸ்!

      நீக்கு
    2. நீங்க எதுவும் பண்ண முடியாதுனு தெரியும் ஆனாலும் புலம்பாம முடியலை ஹா ஹா ஹா...கருத்து விழவும் நேரம் எடுக்குது...

      என் நெட்டும் பிரச்சனையாக இருக்கலாம்...

      துரை அண்ணாவுக்கு குடும்ப நிகழ்வுகளா ஓகே ..அன்று ஃப்ளைட் இறங்கியாச்சுனு சொன்ன நினைவு...

      கீதா

      நீக்கு
  2. தினமும் வெந்நீர் குடிப்பதுண்டே...

    அது சரி துரை அண்ணா ஊருக்கு வந்திருக்கிறாரோ...காணவில்லையே...

    அவர் பதிவுகளை இனிதான் பார்க்க வேண்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. அவர் குடும்ப நிகழ்வுகளில் பிஸி... அப்புறம் வருவார்.

      நீக்கு
  3. போனவாட்டி போனமாதிரி கோவில் கோவிலா சுத்தக்கூடாதுன்னு பசங்க ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டானுங்க..//

    கோகுல் அண்ட் ராகுல் சூப்பர் நானும் உங்க கட்சி!!!!!! பசங்களா!!

    கோயில் போவதும் பிடிக்கும் என்றாலும் கூட...கூடவே எனக்கு இயற்கை சார்ந்த உடங்கள் மலைகள் அருவிகள் என்று போக ஆசைப்படுவதுண்டு. மிகவும் பிடித்த விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பகோணத்தில் மலையருவி இல்லையே... எனவே போகவில்லை கீதா... ஹிஹிஹி...

      நீக்கு
  4. அட பதிவு இம்முறை பேசுவது போலவே அமைந்தது ரசிக்கிறேன் ஸ்ரீராம்.

    உங்களுக்குப் பயணம் ஆரம்பத்தில் எப்போதுமே ஏதோ ஒரு பிரச்சனை வருது இல்லை?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னால பயணம் முழுவதும் பிரச்சையாய் இருந்தது. இப்போ ஆரம்பத்தில் மட்டும்! முன்னேற்றம்!

      நீக்கு
    2. அன்பு ஸ்ரீராம், அன்பு கீதா ரங்கன் ,இன்னும் வரப் போற கீதாமா
      எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.

      ஆகஸ்ட் மாதம் மறக்க முடியாத படி திருமண நாட்களும், பிறந்த நாட்களும் அமைகின்றன.
      உங்கள் திருமண பந்தம் என்றும் செழுமையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளின் வாழ்க்கை தழைக்க வேண்டும்.

      உப்பிலி அப்பனைப் பார்த்தால் மலை போலே வரும் சோதனை எல்லாம்
      நிமிடத்தில் போக்கி விடுவான்.

      இன்னும் இரு இடங்களைப் பற்றி எழ்த வேண்டும் ஸ்ரீராம்.
      மழையில் ஜாக்கிரதையாகப் போக முடிந்ததா.

      இந்த திருமலா விடுதி நன்றாக இருக்கிறதே.
      ஒரே நாளில் எல்லாக் கோவிலகளையும் பார்த்துவிட்டு
      திரும்பி விட்டீர்கள்.
      உடலுக்கு அலுப்பு இருக்கத்தான் செய்யும்.

      நீங்கள் முக நூலில் எழுதும் கவிதையை
      நான் படிக்கவில்லையே. அருமையாக எழுதுகிறீர்கள் அம்மா.
      கேள்விகள் பெரியவைதான். நானும் விடைகளைத் தேடுகிறேன்.
      ஷிர்டி பாபா துணை இருக்கட்டும்.
      நீங்களும் பாசும் வந்தது நினைவில் மறக்க முடியாமல்
      பதிந்திருக்கிறது.
      எவ்வளவு பழங்கள் கொண்டு வந்தீர்கள் அப்பா.
      சிங்கத்தின் ஆசி உங்களுடன் இருக்கும்.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா...

      இனிய காலை வணக்கம்.

      இந்தமுறை ஒப்பில்லாத அப்பனை சுகதரிசனம் செய்ய முடிந்தது. பூமா குதூகல ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.

      தாங்கும் இடம் சகல வசதிகள் நிறைந்தது. தனிச் சமையல் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

      பேஸ்புக்கில் எழுதிய கவிதையை நீங்கள் பார்க்கவில்லையா? அதனால் என்ன.. அதனால்தான் இங்கேயும் பகிர்ந்து விடுகிறேன்!

      உங்களையும் சிங்கத்தையும் சந்தித்து ஆசி பெற்றது மறக்க முடியாத அனுபவம்.

      நீக்கு
  5. இப்போது தினமுமே வென்னீர்தான். தொண்டை மங்கி
    குரல் வெளி வருவது சிரமமாக இருக்கிறது.
    மதன் கார்ட்டூன் சூப்பர். அருமை.Please continue. That house looks trajic.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா. நான் வெந்நீர் குடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்....

      நீக்கு
  6. இதுமாதிரி இதுமாதிரி நீங்க போன வருஷம் ஜுன்மாசம் ஆறாம் தேதி இங்க போனீங்க... இது உங்க கண்ணுக்கு மட்டும்தான் தெரியும்.. பயப்படாதீங்க... மார்க் போடறீங்களா? ன்னு கேட்டுச்சு. அலண்டு போனாலும் காட்டிக்கலை. வாட்ச் பண்றாங்கடா...//

    ஹா ஹா ஹா ரொம்பவே நோட் பண்றாங்கதன் ஸ்ரீராம். வேவு ரொம்பவே. இணையத்தில் ப்ரைவஸி என்பதே கிடையாது. உலகின் மூலையில் யாரோ நம்மை நோட்டமிட்டுக் கொண்டிருப்பார் என்பதுதான் டெக்னாலஜியின் ஆகச் சிறந்த அபகடனம்!!

    அந்த ரூம் நன்றாகவே நினைவிருக்கிறது. அந்த சிதிலமடைந்த வீடும். ஆனால் அப்படியேதான் இருப்பது போல இருக்கு...வேணா புதன் புதிர்ல ரெண்டு படத்தையும் போட்டு 6 வித்தியாசங்கள் கண்டுபிடிக்கச் சொல்லுங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    அப்புறம் போன முறை நீங்கள் குன்றத்தூர் போய் வந்தீங்க உங்க மண நாளில் அப்படியே சங்கீதாவில் சாப்பிட்டு... ஹிஹிஹி நானும் கூகுள் ஆகிட்டேனோ!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆகச் சிறந்த அபகடனம்!!//

      அடடே... புது வார்த்தை!

      வீட்டில் சிறு மாற்றங்கள் தெரியவில்லை?

      நீங்களும் கூகுள் ஆகி விட்டீர்களோ? எனக்கே சரியாய் நினைவில்லையே!

      ஹா.. ஹா... ஹா...

      நீக்கு
    2. அந்த வார்த்தை மலையாள வார்த்தை ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!
    பயண அனுபவங்கள் , மற்றும் கோவில் தரிசனங்கள் படிக்க என்ன பயம்?
    பதிவின் தலைப்பை படித்தவுடன்
    சூழமங்கல சகோதரிகள் முருகன் பாட்டு திருநீரில் அருள் இருக்கு தெரியுமா? பாடல் நினைவுக்கு வந்தது. பதிவு தலைப்பு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கோமதி அக்கா.. வாங்க... வாங்க... பதிவைப் படிக்க பயம் இல்லைன்னு சொல்லிட்டீங்க... ஓகே! சூலமங்கலம் பாடலை ஒட்டிதான் தலைப்பு வைத்தேன்!

      நீக்கு
  8. வர வர ரொம்ப பக்தி மயமா ஆயிட்டுதோ...//

    ஹா ஹா ஹா அப்பூடியா? ஸ்ரீராம் ?!!! பயணம் பத்தித்தானே இருக்கு.

    இன்னும் தொடங்கினா மாதிரி இல்லையே...

    சரி சரி இனி மதியத்திற்கு மேல் தான்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்தி இனிமேல்தான் வரப்போகுது கீதா... பார்த்து ஜாக்கிரதையா வாங்க!

      நீக்கு
  9. கல்யாண நாளுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
    உங்கள் கல்யாணம் நடந்த இடம் ஒப்பிலியப்பன் கோவில், குலதெய்வ கோவில் கல்யாணமகாதேவி கோவில் எல்லாம் போய் வந்தது மகிழ்ச்சி. குடும்பத்தில் மகிழ்ச்சிகள் தொடர வேண்டும். இறைவன் அருளால்.

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிய நாளாக அமைய எனது பிராத்தனைகளும்.

    தங்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள். இன்று அந்த நாளில் இனிதான பயணத்தின் முதல் வாரமாக பதிவு வந்திருப்பதால் இன்றும் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

    வெந்நீர் உடம்பை எப்போதுமே சீராக்கும் அருமருந்துதான்.தங்களின் அழகான பயணக் கட்டுரை மட்டும் படித்தேன். கவிதைகளுக்கு பிறகு வருகிறேன். கோவில்கள் உலா என்றுமே இனிமையானதுதான். மன அமைதியும் மகிழ்ச்சியும் தருவது. என்னமோ சில நாட்களாக வலைத்தளம் வர நேரம் சரியாக அமைய விடமாட்டேன் என்கிறது. மழையினால் நெட் படுத்தல், உடல்நிலை படுத்தல் என நேரமின்மைகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      வாழ்த்துகளுக்கு நன்றி.

      உங்கள் உடல்நலம் தேவலாமா?பார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் நலனை.

      படித்ததற்கும் பாராட்டியதற்கும் நன்றி.

      நீக்கு
  11. நீண்ட நாட்கள் கழித்து எட்டிப் பார்த்திருக்கும் ஸ்ரீராமுக்கும், தி/கீதாவுக்கும், எனக்கும் சேர்த்து நல்வரவு சொல்லி இருக்கும் ரேவதிக்கும் மற்றும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். துரை வீட்டில் விழா இனிமையாக நடந்து கொண்டிருக்கும்/நடக்கப் போகிறது என நம்புகிறேன். அதற்கும் சேர்த்து வாழ்த்துகளும் பிரார்த்தனையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்கள் கழித்தா? கீதா அக்கா.. வாங்க வாங்க...உங்கள் சாப்பிட வாங்க பதிவில் கூட கருத்து சொல்லியிருந்தேனே...

      நீக்கு
  12. அந்தக் கவிதைக்கு நானும், வா.தி.யும் என்ன கருத்துச் சொன்னோம்னு அதையும் போட்டிருக்கலாம். மண்டையைக் குடையுது என்ன போட்டோம்னு யோசிச்சு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் "குழப்பங்கள் சீக்கிரம் தேறலியட்டும் என்று கொடுத்திருந்தீர்கள். வாசுதேவன் ஸார் "தூக்கம் இல்லையா? ஒரு காம்போஸ் போட்டு தூங்கி எழுந்திரிங்க.. சரியாயிடும்" என்று சொல்லி இருந்தார்!

      நீக்கு
    2. தெளியட்டும் என்று படிக்கவும்...

      நீக்கு
  13. //ஒருவர் புதிதாய் அறிமுகம் ஆகிறார் என்றால், அவரை அடுத்த தரம் பார்க்கும்போது சரியாய் நினைவில் வைத்திருக்கும் ஞாபகக்காரன் இல்லை நான். நேர்மார்! அவர்கள் சிரித்துப் பேசும்போது தடுமாறிப்போகும் ரகம்... வெட்கப்படவேண்டிய விஷயம்தான்...// ஹாஹாஹா, அதான் நான் உங்களைப் பார்த்ததுமே அடையாளம் புரியாமல் முழிச்சுட்டு பாஸைப் பார்த்துப் புரிஞ்சுக்கிட்டேன்! இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா... எனக்கும் ஆச்சர்யம். என்னை நினைவில்லை உங்களுக்கு... ஆனால் பாஸ் நினைவில் இருந்திருக்கிறார்!

      நீக்கு
    2. ஹாஹாஹா, இப்போப் பார்த்தாலும் அப்படித் தான் இருக்கும்னு தோணுது! :))))))

      நீக்கு
    3. நான் கீதாக்காவை ஃபோட்டோவில் தான் பார்த்திருந்தேன் சந்திக்கும் முன் வரை...ஸ்ரீராம் நாம் போயிருந்தப்ப எனக்கு டக்கென்று தெரிந்துவிட்டதே கீதாக்காவை...நானும் பாஸும் தான் சொன்னோம் இதோ இருக்காங்க கீதாக்கானு ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  14. சிதிலமடைஞ்ச வீடு மழைக்காலம் இன்னும் பாதிக்கபடும்.
    முகநூல் கவிதை அருமை.
    விருப்பங்கள் தெரியாத போது என்ன செய்வது?
    ஞானியாகி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஞானியாகி விட்டீர்கள் //

      ஹா...ஹா.. ஹா... ஞானி சங்கரன்!

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  15. நான் பொதுவாகவே வெந்நீர் நிறையக் குடிப்பேன். உடல் இளைத்தாலும் இளைக்காட்டியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ வெந்நீர் குடிச்சா உடம்பு இளைக்காதா? நான் குடிப்பதே இல்லை!

      நீக்கு
    2. வயிற்றுத் தொந்திரவு இருக்காது என்பதோடு தொண்டையில் அழற்சி இருந்தால் சரியாகும்.

      நீக்கு
  16. sms கண்டுபிடிப்பு சொல்வது சரிதான்.
    கஷ்டநேரத்தில் கை கொடுத்தவனை நினைவு வைத்து இருப்பது உயர்வு.

    பதிலளிநீக்கு
  17. வெந்நீர் வைத்திய பகிர்வு அருமை. நானும் வெந்நீர் குடிப்பேன்.
    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  18. பதிவு எழுதறத்தே கூட நாம் எழுதறதை யாரோ வாட்ச் பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள் என்ற உணர்வுடன் எழுதுவதும் இப்படித் தான் பின்னூட்டம் வரப் போகிறது என்ற நிச்சயத்துடன் அதற்கு வாய்ப்பு கொடுத்து அதற்கான பதிலையும் முன்கூட்டியே தயாரில் வைத்துக் கொண்டு எழுதுவது இன்னொரு சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  19. இன்றைய வியாழன் பதிவு ரசிக்கும்படியான நடை. தங்குமிடம், போகும் வழியில்தான் முடிவு செய்தீர்களா? டாக்சி எடுத்துச் செல்வது சுலபமோ?- இரயில் பயணத்தைவிட?

    எனக்கும் ஒப்பிலியப்பன் தரிசனம் 8ம் தேதி கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லைத்தமிழன்.

      எங்களுக்கு வண்டி எடுத்துப்போவது வசதியாய் இருந்தது. பேர். அண்ணனும் அண்ணன் பையனும்...

      நாங்கள் பதினேழாம் தேதி தரிசித்தோம்.

      நீக்கு
  20. சும்மா சொல்லக் கூடாது.
    கவிதைகள் எழுதுவதில் ரொம்பவே தேர்ந்து வருகிறீர்கள் இப்போதெல்லாம்.
    இந்தத் தேடலை மிகச் சரியாகப் புரிந்து கொள்வோர்
    நாலைந்து பேர் தேறினாலே
    எழுதியவருக்கு கிடைத்த பேறாக அது அமையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இந்தத் தேடலை மிகச் சரியாகப் புரிந்து கொள்வோர் //

      ஐயா... தாங்கள் என்ன புரிந்து கொண்டீர்...?

      // நாலைந்து பேர் தேறினாலே //

      தேறுவது என்றால், அந்த நாலைந்து பேர் இங்கு யார் ஐயா...?

      // எழுதியவருக்கு கிடைத்த பேறாக அது அமையும். //

      எழுதியவருக்கு தலைக்கனம் தான் ஏறும் என்பது கூட புரியாத நீர் :-

      ஜிங்க் சக்... ஜிங்க் சக்...

      இதை தான் இரண்டு நாள் முன்பு புதன் அன்று சொன்னது... மறுபடியும் இங்கேயுமா ஐயா...?

      நீக்கு
    2. அன்புள்ள தனபாலன்..

      உங்கள் அப்பா உங்களுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விடுவதை சொல்லி இருந்தீர்கள். அது போலதான் ஜீவி ஸார் கொடுக்கும் ஊக்கம் எல்லாம். அவர் அந்தக் காலத்திலிருந்து எழுதி வருபவர். பத்திரிகைகளில் அவர் படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. தட்டிக்கொடுத்து, சொல்லிக்கொடுத்து ஊக்கப்படுத்துவதில் அவர் பெரியவர். என் எழுத்துகளை அவ்வப்போது சீராய்ந்து சொல்லியிருக்கிறார் - ஆரம்ப காலத்திலிருந்தே... 'கொஞ்சம் சுருக்கி எழுதலாம், இதை இரண்டுமுறை சொல்லி இருக்கவேண்டாம்' என்றெல்லாம் ஆலோசனை சொல்பவர். எனவே அவரை அப்படி நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

      நீக்கு
    3. தி.த...
      என்ன சொல்ல வருகிறீர்கள்?
      எழுதியவரை பாராட்டி இரண்டு வரி எழுதினால் அதற்கு ஏன் இவ்வளவு கடுமையாக வார்த்தைகளை வாரி இறைத்திருக்கிறீர்கள்?
      உழைப்பினால் பெற்றிருக்கிற மேன்மையைப் பராட்டினால் தலைக்கனம் ஏறாது. உற்சாகம் இன்னும் கூடி எழுத்தில் மேலும் மெருகேறும்.

      நீக்கு
    4. ஸ்ரீராம் சார்... எனது எதிர்மறை கருத்துரைகள் சிலவற்றை நீங்கள் கண்டிருக்கலாம்...

      அச்சமயம் "விட்டு விடுங்கள் DD" என்று சொல்லி உள்ளீர்கள்... அதன்பின் அதை தொடருவது இல்லை...

      அது என்ன ? யார் அவர் ? :-

      மறதி சிறந்த மருந்து... (யோசியிங்களேன்...!)

      அதனால், ஜீவி ஐயாவிடமும் அந்த உடன்பாட்டை தொடர்கிறேன்... சரியா...?

      என்ன ஒரு வருத்தம் என்றால், எனக்குள் இருக்கும் மற்றவர்களின் பிம்பம் உடைவது, எனக்கே பிடிக்கவில்லை... நிஜ வாழ்க்கையில் தான் அதிகம் என்றால், ம் இங்கும்... நன்றி...

      நீக்கு
    5. DD

      யார், என்ன, எப்போது என்று நன்றாக நினைவிருக்கிறது. வசைபாடுவதையும், கடுமையான மற்றும் நாகரீகமற்ற வார்த்தைப்பிரயோகங்கள் இருந்ததாலும்தான் அப்படிச் சொன்னேன். அப்போதும் சரி, அப்புறமும் சரி...

      வசைபாடுவதை தவறு என்று சொல்லலாம். ஊக்கப்படுத்துவதை கேவலப்படுத்தக் கூடாது. என்னை ஊக்கப் படுத்துகிறார் என்பதால் நான் சொல்கிறேன் என்று நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அவர் இங்கு எழுதும் எல்லோருக்கும் ஊக்கப்படுத்தி டிப்ஸ்கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

      ஒவ்வொருவர் கருத்தை இன்னொருவர் எள்ளுவது சரியான நடைமுறையில்லை என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ளத்தேவையில்லை. அதற்கான குறள்கள் உங்களுக்கே தெரிந்திருக்கும்.

      மனிதர்களை, நண்பர்களை மிதிப்பதை விடுத்து மதிக்கப் பழகுவோம். மன வருத்தங்கள் இன்றி நண்பர்களாகப் பழகுவோம். புண்படுத்தாமல் நட்பு பாராட்டுவோம்.

      நீக்கு
    6. //எனக்குள் இருக்கும் மற்றவர்களின் பிம்பம் உடைவது, எனக்கே பிடிக்கவில்லை... நிஜ வாழ்க்கையில் தான் அதிகம் என்றால், ம் இங்கும்... நன்றி...// நீங்களாக ஏற்படுத்திக் கொண்டது தானே டிடி. உடையத் தான் செய்யும். இதற்கெல்லாம் வருந்தாதீர்கள். இது தான் உலகம் என்பதைப் புரிந்து கொண்டு மேலே செல்லுங்கள்! உங்களைப் போன்ற இளைஞர்கள் அப்படிச் செய்தால் அழகு தானே!

      நீக்கு
    7. கீதாம்மா,
      உங்கள் விளக்கம் புரியவில்லை. இது தான் உலகம் என்று புரிந்து கொண்டு.. இந்த வரி மேலும் குழப்புகிறது.
      அருள் கூர்ந்து விளக்குவீர்களா?

      நீக்கு
    8. ஜீவி அண்ணா இங்கு யார் கதை எழுதினாலும் வந்து அதில் உள்ள நிறை குறைகளை அழகாகச் சொல்லி எங்கள் எல்லோரையும் ஊக்கப் படுத்தக் கூடியவர் என்பதை நானும் இங்கு ஒரு கதை எழுதும் ஒரு கத்துக் குட்டியாய்ச் சொல்கிறேன்.

      அவர் ஒரு தேர்ந்த எழுத்தாளர். மிக மிகச் சிறு வயதிலேயே அவரது படைப்புகள் பல பத்திரிகைகளில் வரத் தொடங்கி பல பெரிய எழுத்தாளர்களின் நட்பும் கிடைக்கப்பெற்றவர்.

      என்னுடைய எழுத்தைப் பல முறை உற்சாகப் படுத்தி ஊக்கம் அளிப்பவர். கதையில், எழுத்தில் குறை கண்டாலும் கூட அதைப் பாங்காகச் சொல்லக் கூடியவர். அதுவும் ஊக்கப்படுத்தும் விதத்தில்தான் இருக்கும்.

      கதை எழுதுவது எப்படி இருக்க வேண்டும் என்றும் சொல்பவர். அழகன விமர்சனமும் எழுதுபவர்.

      எனவே இப்போது அப்படித்தான் அவர் ஸ்ரீராமைப் பாராட்டியதும். அதில் தவறு இல்லையே...

      கீதா

      நீக்கு
    9. டிடி சகோ, நாம் பலரைப் பற்றியும் அதுவும் பார்க்காமலேயோ அல்லது முகம் பார்க்காமல் உரையாடுவதிலேயே அலல்து எழுத்தின் மூலமோ அல்லது பழகிய ஒரு சில நேரங்களை வைத்தோ ஒரு ஜட்ஜ்மென்ட் போட்டுக் கொண்டு ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துக் கொள்கிறோம் மனதில். இது பொதுவான மனித சைக்காலஜி. அதற்குக் காரணமும் நம் மனதுதான் அல்லாமல் அடுத்தவர் அல்ல.

      ஆனால் அப்படிச் செய்வது என்பது நல்லதல்ல என்று சொல்வதும் அதே சைக்காலஜிதான். ஏனென்றால் நாம் நினைத்திருப்பதற்கு மாறாக அந்த பிம்பம் இருக்கும் போது மனதில் தோன்றும் ஏமாற்றம் சில சமயங்களில் வெறுப்பாகக் கூட மாறலாம். இதுவும் உளவியல் கூற்றுதான். அப்படி மாறுவதினால்தான் வீட்டிலும் பல பிரச்சனைகள் வருகின்றன. நம் எதிர்பார்ப்புகளுக்குள், நினைத்திருக்கும் ஃப்ரேமுக்குள் அந்த பிம்பம் அவுட் ஆஃப் ஃபோக்கஸ் ஆவதால்...!!!!!!!!!

      அதனால்தான் நாம் யாரையும் ஜட்ஜ்மென்ட் செய்யக் கூடாது என்றும் அவரவரை அப்படியே ஏற்கும் மனப்பக்குவத்தைப் பெற வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொருவரிடமும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும்....மனிதருக்குள் மனிதமும் உண்டு, டெவிலும் உண்டு. எல்லாமே நம் மனதைப் பொருத்துதான். நம் மனதுள் உருவாகும் அந்த பிம்பம் உட்பட...

      எனவே நாம் அவரவரை அப்படியே ஏற்று நட்பும் அன்பும் பாராட்டுவோம். இது நான் என் அனுபவத்தில் கற்றது.

      கீதா

      நீக்கு
    10. அவரின் கற்பனைக்கேற்ற மனிதர்கள் இல்லை என்றால் மனிதர்களை அவர் சந்திக்கும் நிஜ முகங்களோடு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதைத் தான் சொன்னேன் ஜீவி சார். கிட்டத்தட்ட அதையே தி/கீதாவும் சொல்லி இருக்கிறார். எல்லோரிடமும் குறை/நிறை உண்டு. அவற்றோடு மனிதர்களை ஏற்கப் பழகிவிட்டால் பிரச்னையே இல்லையே!

      நீக்கு
    11. ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரே பெயர் கொண்ட இரு சகோதரிகளுக்கும் நன்றி. எங்கள் பிளாக் வாசகர்கள் ஒரே குடும்பம் என்ற உணர்வு மேலிடுகிறது. அந்த உணர்வைப் பேணிக் காப்போம். நன்றி.

      நீக்கு
    12. * ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தைச் சொன்ன

      நீக்கு
  21. அந்த வீட்டின் படம் ஏற்கனவே போட்டு இருக்கின்றீர்கள் ஜி
    எனக்கு பிடித்தமான வீடு.

    கவிதையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி... முதலில் போட்ட படம் என்று நானும் சொல்லியிருந்தேனே...

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  22. பயணத்தில் தொடர்கிறேன். வெந்நீரீன் மகத்துவம் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    மனம் நிறைந்த திருமண நாள் நல்வாழ்த்துகள் - சற்றே தாமதமாக இதைச் சொல்கிறேன் - பயணத்தில் இருந்ததால் தெரியவில்லை. பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்.

    கவிதை சிறப்பு. வெந்நீர் குடிப்பது நல்லது. கீதாம்மா சொல்வது போல இளைத்தாலும் இளைக்காவிட்டாலும்... எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர் பச்சைத் தண்ணீர் குடிப்பதே இல்லை. எப்போதும் வெந்நீர் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம். வாங்க வெங்கட்.

      ஆமாம்.. பயணங்கள் இனிமையானவை என்று தெரிகிறது, பச்சைத்தண்ணீரே குடிக்காத உங்கள் நண்பருக்கு பாராட்டுகள். நம்மால் முடியாது!

      நீக்கு
  24. எங்களிடம் பேசுவது பயண உரையாடல்... அருமை... முதல்முறை...?

    கூகிள் மேப் என்னைப்போல் ஊர் சுற்றிக்கு வரப்பிரசாதம்...!

    தைவிக ன்தேத்சிர...! னேதாஅ...?

    கஷ்ட நேரத்தில் கை கொடுத்தவன் - ஞாலத்தின் மாணப் பெரிது (102)
    கஷ்ட நேரத்தில் கை விட்டவன் - நாவினாற் சுட்ட வடு (129)

    இருவரும் மறக்க முடியாதது : கடும்போட்டியில் தோல்வி அடைந்தவரும், வெற்றி பெற்றவரும்...!

    வெந்நீர் உடலுக்கு உள்ளே அனைத்தும் நல்லது... வெளியே - குளியல் - ம்ஹிம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல்முறை என்று சொல்ல முடியாது. முன்னாலும் முயற்சித்திருக்கிற நினைவு DD... ரசித்திருப்பதற்கு நன்றி.

      கூகுள் மேப் பெரும்பாலும் ஓகே. சில சமயங்களில் காலை வாரி விடுகிறது! உங்களுக்கு அது செம உதவி செய்கிறது என்று தெரிகிறது.

      நீக்கு
  25. //பதிலைத் தேடவில்லை இப்போது
    கேள்வியைத்தான் தேடுகிறேன்//
    அதுதான் மூக்கிலே இருக்கிறதே. கண்ணாடியாக.
    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடினால் எப்படி கிடைக்கும்.

    விருப்பங்களே தெரியாதபோது
    விடைகள் எப்படிக் கிடைக்கும்?
    கிடைத்த விடைகளுக்கு ஏற்ப விருப்பங்களை உருவாக்கி கொள்ளலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜேகே ஸார்.. விரும்பியது கிடைக்காவிடில் கிடைத்ததை விரும்பி விட வேண்டியதுதான்!

      நீக்கு
    2. விரும்பியது கிடைக்காவிடில் கிடைத்ததை விரும்பி விட வேண்டியதுதான்!
      ஆம் அப்படித்தான் மனைவிகள் அமைகிறார்கள்.
      Jayakumar

      நீக்கு
  26. வெந்நீர் குளியலை விட வெந்நீர் ஓத்தடம் நல்லது. வெந்நீர் ஒத்தடம் வலியை போக்கும்.வெந்நீர் இதமான சூடு வைத்து தான் குளிக்க வேண்டும் என்கிறார்கள். நான் மிகுந்த சூடு வைத்து குளிப்பேன், நரம்புகள் செயல் இழக்கும் என்று படித்ததால் இப்போது மிதமான சூடு நீரில் குளிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், மிகுந்த சூடு நரம்புகளை பாதிக்கும் என்று நானும் படித்திருக்கிறேன். எனவே மிக மிதமான சுடுநீரில்தான் குளிப்பேன்.

      நீக்கு
  27. வெது வெதுப்பான நீர் எண்ணெய் குளியலின் போது நல்லது, எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீர் குளிக்க கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை...

      எண்ணெய் குளியலின் போது எனது தந்தை, என் தலையில் அடிக்கும் அடி கூட சுகம் தான்...! திமிரும் தோள்களை அப்பா அமுக்க, அம்மா ஊற்றும் வெந்நீர்.... ஊஊஊ என்று நான் அலற... சிறிது குளிர்ந்த நீரை கலந்து, மறுபடியும் அம்மா ஊற்ற... அதன்பின் அம்மாவின் கைவண்ணத்தை சாப்பிட்டு முடிக்க... தூக்கம் சொக்குமே...!

      அது ஒரு அழகிய நிலா காலம்...
      கனவினில் தினம் தினம் உலா போகும்...
      நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
      அது ஒரு பொற்காலம்...

      நீக்கு
    2. எண்ணெய் தேய்த்து குளித்தால் தூக்கம் வரும். ஆனால் தூங்க விட மாட்டார்களே! எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு தூங்க கூடாது என்பார்கள்.

      நீக்கு
    3. நான் ரெகுலராக எண்ணெய் தேய்த்தெல்லாம் குளிப்பதில்லை... (இதில் என்ன பெருமை வேண்டி கிடக்கு என்று கேட்கத்தோன்றுகிறதா?!!)

      நீக்கு
    4. சிறு வயதில் எண்ணெய் தேய்த்து குளித்தது தான். தீபாவளிக்கு தலையில் சாஸ்திரத்திற்கு ஒரு சொட்டு எண்ணெய் வைத்துக் கொள்வோம் வீட்டில் எல்லோரும்.

      நீக்கு
    5. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்ட கூடாது என்று சொல்லி விட்டார் குழந்தைகள் மருத்துவர். கணவரும், நானும் குளிக்க மாட்டோம்.
      வெந்நீர் பயன்களை சொல்லும் போது சொன்னேன் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது வெந்நீரில் குளிப்பார்கள் என்று.
      இப்போது உள்ள் ஐளைய தலைமுறைக்குக்கும் எண்ணெய் குளியல் கிடையாது. பிறந்தவுடன் தேங்காய் எண்ணெய் சூடு செய்து மிள்கு, சீரகம் போட்டு காய்ச்சி குளிப்பாட்டுவதோடு சரி.

      நீக்கு
    6. ஆக, ஒன்று தெரிகிறது... இப்போதெல்லாம் யாரும் எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பதில்லை என்று தெரிகிறது!

      நீக்கு
    7. என்னைக் கணக்கில் சேர்க்காதீர்கள். நான் இப்போவும் முக்கூட்டு எண்ணெய் சுட வைத்துத் தேய்த்துக் கொள்வேன். வாராவாரம். அநேகமா வெள்ளி அல்லது செவ்வாய். அன்றைய தினம் முடியலை எனில் சனிக்கிழமை. ஞாயிறன்று எண்ணெய் தேய்த்துக் கொள்வது கண்களுக்கு நல்லதல்ல என ஆயுர்வேதம் சொல்லும். சூரியனுக்கு உகந்த நாள்.

      நீக்கு
  28. ஆஆஆஆஆஆஅ ஸ்ரீராம் வெளியில வாங்கோ.. உங்களுக்கு என்னோடு என்ன பிரச்சனை?:) என் செக் ஜொன்னதாலதானே கண்டுபிடிச்சேன்ன்.. இல்லாட்டில் இது தெரியாமலே போயிருக்கும்:))... மாறிக்கீறித்தட்டினாலும் கரீட்டாஆஆஆஆஆ அதிரா வீட்டிலயா கையை வைப்பீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சரி இது போகட்டும் விடுங்கோ மீ மட்டருக்கு வாறேன்ன்ன்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...

      நான் நான் நானே எழுதியதுதான் இது...

      நீக்கு
    2. //நான் நான் நானே எழுதியதுதான் இது...//
      ஹையோ ஸ்ரீராம் மட்டர் இதுவல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது வேற:) அதை நான் ஆரம்பிக்க இருக்கும் உண்ணாவிரதத்தில தெரிஞ்சு கொள்ளுவீங்க ஹா ஹா ஹா:))

      நீக்கு
    3. ஆஆஆஆஆஆ இப்பொழுது என் உண்ணாவிரதம் கான்சல்ட்:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
    4. உண்ணாவிரதம் எதற்கு, எங்கு, ஏன் என்று தெரியும் முன்னரே ரத்தும் ஆகிவிட்டது. மர்மம்!

      நீக்கு
  29. //வெந்நீரில் மருந்திருக்கு தெரியுமா? அதை தினம் குடித்தால் குணமிருக்கு தெரியுமா...//

    இது சீர்காழி அவர்களின் பாட்டுத்தானே.. எனக்கு ரொம்ம்ம்ம்பப் பிடிக்கும் அவரின் பாடல்கள் மற்றும் ரி எம் எஸ்... இருவரின் பாடல்களிலும் பயங்கர லவ்....

    அது சரி எல்லாமே மாறி இருக்கு இங்கு.. இன்றைய எழுத்தைப் பார்த்தால் ஸ்ரீராமின் எழுத்துப் போலவே இலையே கர்:)).. கதை எழுதும்போது மட்டும்தான் இப்படி எழுதுவீங்க, ஆனா இது உண்மை நிகழ்வைச் சொல்லும்போது பாசை மாறி எழுதியிருப்பதைப்போல இருக்கு.. அல்லது எனக்குத்தான் பழசெல்லாம் மறந்திட்டுதோ என் செக்:) ஐப் போல.. ஹா ஹா ஹா கோர்த்து விட்டால்தான் ஓடி வருவா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல். அந்தப் பயணக்கட்டுரையை ரொம்ப நீட்டி போர் அடிச்சுட்டேன். அதற்குப் பயந்து காணாமல் போன நீங்கள் இப்போதுதான் வந்திருக்கிறீர்கள்... அதுதான் சும்மா பாணியை மாற்றிப்பார்த்தேன்!

      நீக்கு
  30. ///
    ஒவ்வொரு வருஷமும் கல்யாண நாளுக்கு ஏதாவது ஒரு கோவில் போறதுல தீர்மானமா இருப்பா பாஸ்..//
    ஹா ஹா ஹா இப்பூடி ஒவ்வொரு சந்தர்ப்பத்தை வச்சாவது உங்கள் கழுத்தைப் பிடிச்சால்தான் லீவு போடுவீங்க:) இல்லை எனில் புளொக்கும் வேர்க் உம் என இருப்பது எங்களுக்கே தெரியுமே...

    //ஏன்னா, 97இல் போயிட்டு வந்ததற்கப்புறம் குலதெய்வம் கோவில் போகாமலே இருந்தோமா... அப்படிலாம் இருக்காதீங்கன்னு ஆளாளுக்கு சொன்னாங்க ..///
    எங்களுக்கு குலதெய்வம் என்றெல்லாம் இல்லை அதனால எதுவும் தெரியாது.

    ஆனா தமிழ்நாட்டில் சொன்னார்கள்.. ஒவ்வொரு வருடமும் குடும்பத்தில் ஒருவராவது அங்கு போய்ப் பொங்கல் வைக்க வேணுமாமே.. நீங்க செய்து காட்டினால்தானே இனிமேல் மகன்மார் செய்வார்கள்.. இல்லை எனில் பயமில்லாமல் போய் விடும். ஆனா இப்போ இதெல்லாம் மருகி வந்துகொண்டிருக்கு என நினைக்கிறேன் ஏனெனில் இப்போ நிறைய இளைய தலைமுறையினர் நாட்டிலேயே இல்லையே... ஆனாலும் ஊருக்கு வரும்போது குலதெய்வத்தை தரிசிக்கத் தவறுவதில்லை எனவும் அறிஞ்சேன்ன்...

    மிகுதிக்கு கொஞ்சம் லேட்டா வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குலதெய்வம் என்றெல்லாம் இல்லை// - உங்களுக்கும் குலதெய்வம் உண்டு. அம்மா கிட்ட கேட்டுப்பாருங்க. ஆனா இப்போ அந்தக் கோயில்லாம் இருக்கோ இல்லை குண்டுவீச்சில் காணாமல் போயிடுச்சோ

      நீக்கு
    2. பாஸ் எனக்கும் சேர்த்து கோவில் சென்று, வேண்டிக்கொண்டு வந்து விடுவதால் நான் பயமில்லாமல் இருக்கிறேன் அதிரா... வெளிநாட்டில் இருபப்வர்கள் கூட ஏதாவது ஒருநாள் ஒரு காரணம் வைத்து குலதெய்வம் கோவில் சென்று வந்து விடுவார்கள் - பெரும்பாலும்.

      நீக்கு
    3. ஆம், நெல்லை சொல்வது போல வீட்டிலுள்ள பெரியவர்களைக் கேட்டுப் பாருங்கள்.

      நீக்கு
    4. இல்ல நெ தமிழன் , ஸ்ரீராம்.. நான் அறிஞ்சு இலங்கையில் குலதெய்வம் என ஒன்று இல்லை.. நம் நம் வீடுகளுக்கு அருகில் இருக்கும் கோயில்களை எப்பவும் அதிகமாக வழிபட்டு விரதமிருப்பதுதான் வழக்கம்.

      இந்த குலதெய்வம் எனும் சொல்லே, நான் இங்கு நெட் உலகில் உலாவந்தபின்னர்தான் அறிஞ்சேன்.

      நீக்கு
    5. ஓ... இந்தியாவில் மட்டுமே உள்ள வழக்கமா இது? செய்தி.

      நீக்கு
  31. //மதன் ஒரு தீர்க்கதரிசி..//

    மதனின் சியர் கேர்ள் இன்று ஆரம்பிக்கும் இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்குத் தேவைப்படுவாள்!

    நமக்கும் இன்றுதான் முதல் டெஸ்ட் கரீபியன் தீவில். சிக்ஸ் பேக்கைக் காண்பித்து படம் எடுத்துக்கொண்டிருக்கிறதுகள் நமது பிருஹஸ்பதிகள். கோஹ்லி அனுஷ்காவை (இது ஷர்மா!) மேலே சாய்த்துக்கொண்டு நீலக்கடலைப் பார்ப்பதாக ஒரு pose ! சிவப்புப் பந்து சீறும்போது தெரிஞ்சிரும் லச்சணம்..!

    மதன் படங்களை அடிக்கடித் தெளிக்கவும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. இன்று ஆஷஸ் அடுத்த டெஸ்ட் தொடங்குகிறது போல... டெஸ்ட்டில் வீரர்கள் சட்டையில் எண் போட்டுக் கொண்டு விளையாட அனுமதித்திருக்கிறார்கள். ஒருவேளை சீர் கர்ல்ஸ் கூட வரலாம் எதிர்காலத்தில்!

      நீக்கு
    2. எதுக்கு cheer girls இருக்கோ இல்லையோ..டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கண்டிப்பா எதிர்காலத்துல வேண்டியிருக்கும். ஹா ஹா.

      நீக்கு
    3. எங்கே உங்களைக் காணோம்? புளிவிட்ட கூட்டுப் பிடிக்காதோ? அல்லது குறைச்சுக்கணும்னு சொன்னதாலே வரலையா? எப்படியானும் ஓகே. யாருமே பதில் சொல்லாட்டிக் கூட எழுதும் ரகம் நான்! பிரச்னை இல்லை! :)))))))))

      நீக்கு
    4. //புளிவிட்ட கூட்டுப் பிடிக்காதோ?// - எல்லாம் ரொம்பப் பிடிக்கும் கீசா மேடம்... என்னவோ... ஒவ்வொண்ணிலும் ஆர்வம் குறைந்துகொண்டு வருகிறது. இனிப்பை நிறுத்திட்டேன் (சாலிட் இனிப்பு. இப்போகூட கும்பகோணத்துல 1/2 கிலோ ஜாங்கிரி வாங்கி, நான் ஒன்று கூட சாப்பிடலை.-வீட்டுலயும் அவ்வளவா போணி ஆகாமல் கடைசியில் தூரப்போட்டேன். எப்பவாச்சும் ஓட்ஸ்ல சிறிது ஜீனி சேர்த்துக்குவேன்). சாப்பாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமா ஆர்வம் குறையுது.

      நான் சென்ற யாத்திரையைப்பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். (நினைவுக்காக). அடுத்தது சென்ற மாதம் போன காஞ்சி யாத்திரை, அத்திவரதர் யாத்திரையைப் பற்றியும் எழுதி வைக்கணும்னு நினைத்திருக்கேன். இன்னும் சில பல உருப்படியான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

      நீக்கு
    5. அரைக்கிலோ ஜாங்கிரியைப் பனிரண்டு கிலோ என்று படித்து விட்டேன். அது ஏன் சாப்பிடும் பதார்த்தங்களைக் கொஞ்சமும் கலங்காமல் தூக்கிப் போடுகிறீர்களோ தெரியலை. அக்கம்பக்கம் ஏழைகள் (தெரிந்தவர்களாக இருந்தால்) கொடுக்கலாம். அல்லது கோயில் வாசலில் உட்கார்ந்திருக்கும் ஏழைப் பிச்சைக்காரர்களிட கொடுக்கலாம். :(

      நீக்கு
  32. *இன்று ஆரம்பிக்கும் மூன்றாவது டெஸ்ட்டில்..

    பதிலளிநீக்கு
  33. வெந்நீரில் மருந்திருக்குன்னு சொன்னது நீங்களா? சீர்காழியா? இடையில ஒயிட் ஹவுஸ் வந்ததாலே கொழப்பம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///இடையில ஒயிட் ஹவுஸ் வந்ததாலே கொழப்பம்..//

      ஹா ஹா ஹா இதுதான் ரொப்பூஊஊஊஉ சே சே டாப்பூஊஊஊ:)).. அது இருவரும் இல்லையாம் என் இன்னொரு ஃபேவரிட் பாடகர்கள் சூலமம்க்கலம் சகோதரிகளாம் ஹா ஹா ஹா

      நீக்கு
  34. //நேர்மார்! // - நேர்மாறு என்பதுதான் சரியான வார்த்தை. இது நேராக இருக்கும் நெஞ்சு என்ற அர்த்தம் கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதும்போதே நினைத்தேன். சும்மா பேச்சுவழக்குத்தானே என்று விட்டு விட்டேன்!

      நீக்கு
    2. நெய்மார் (Neymar) என்று நினைத்தேன் ஒரு கணம்!

      நீக்கு
    3. //இது நேராக இருக்கும் நெஞ்சு என்ற அர்த்தம் கொடுக்கும்.//

      அவர் இதைச் சொல்லவில்லை என உங்களுக்கு எப்பூடித்தெரியும் நெ.டமிலன்?:) இதைத்தான் சொல்லியிருக்கிறாரோ ஸ்ரீராம்..

      ஹையோ மீ நாட்டிலும் இல்லை ரோட்டிலும் இல்லையாக்கும்:))

      நீக்கு
    4. //ஹையோ மீ நாட்டிலும் இல்லை ரோட்டிலும் இல்லையாக்கும்:))//

      நானும் இதைப் படிக்கவில்லையாக்கும்!

      நீக்கு
    5. என்ன இங்கே நடக்குது?!! தமிழ்ல டி வாங்கினவங்களுக்குக் கூட நேர்மார்/நேர்மாறு/நெய்மார் எலலம் தெரியாமல் போச்சா!!!! ஹா ஹா ஹா

      நமக்கெலாம் தமிழ்ல ஈஈஈஈஈ தான்...ஹிஹிஹி..

      கீதாஅ

      நீக்கு
    6. வாங்கோ கீதா.. உங்களைத்தேடிக்கொண்டிருக்கிறேன் திங்களிலிருந்து:))

      நீக்கு
  35. வணக்கம் சகோதரரே

    பயணக்கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. குலதெய்வ வழிபாடு சிறப்பாக நன்றாக அமைந்திருக்குமென நினைக்கிறேன். சிதலமடைந்திருக்கும் அந்த வீடு நினைவில் உள்ளது. இளநீர் மட்டை குவியல்களுடன் இருக்குமே அந்த வீடுதானா? இல்லை அது வேறா?

    மதன் ஜோக் அருமை. அன்று ஒருவர் ஆடுகிறார். இன்று பல பேர்கள். மற்றபடி ஆட்டமும், ஆடையும் அதேதான். எப்படித்தான் ஒரு கற்பனை பொய்க்காமல் நிஜமானதோ?

    கவிதை மிகவும் அருமை. விருப்பங்களே தெரியாத போது கேள்விகளும் எப்படி உருவாகும்? மிகவும் அழகான கவிதை. மறக்க முடியாத இருமுகக் கவிதையும் அருமை. வெந்நீரின் அனேக பயன்களையும் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      நீங்கள் சொல்லியிருக்கும் படம் நான் திருக்கடையூரில் எடுத்த படம். அது வேறு.

      கவிதையையும் ரசித்ததற்கு நன்றி அக்கா.

      நீக்கு
  36. உள்ளுக்கு வென்னீர். வெளியே மிதமான சூடும் நல்லது.
    தவறினால் ஜலதோஷம் தான்.எல்லோரும் பழகிக் கொள்ளலாம்.
    நானும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை மறந்து 45
    வருடங்களாகிறது.

    பதிலளிநீக்கு
  37. வென்னீர் குடிப்பது மிகவும் நல்லது என்று முன்பே தெரியும். நியூஜெர்சி வந்தபிறகு இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டேன். இங்கு எட்டு மனிக்கு தான் காப்பி. ஆகவெ ஆறு மணிக்கு வென்னீர் குடித்துவிடுகிறென். அந்தந்த நேரத்துக்கு ஏதோ ஒன்று, அவ்வளவுதானே! ஆனாலும் ஸ்ரீராம், உங்களுடைய பின்னூட்டக்காரர்கள்
    அடிக்கும் லூட்டி அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையேல் அவர்களைப் போல் நானும் இரண்டிரண்டு வரிகளாகப் பத்துமுறை பின்னூட்டம் போடவேண்டியிருக்கும்! உங்களுக்கும் வயதாகிக் கொண்டே போகிறதல்லவா, அதனால் சொன்னேன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டிரண்டு வரிகளாக கமெண்ட் போடுகிறார்களா? ஹா... ஹா... ஹா... ரொம்ப நீளமாய் இருக்கிறதே... குறைத்துக் கொள்ளச் சொல்லிவிடலாம். நன்றி செல்லப்பா ஸார்.

      நீக்கு
  38. எங்கின விட்டேன் ஜாமீஈஈஈஈ.. ஒழுங்கா ஒரு இடத்தில இருந்து கொமெண்ட் போடவும் முடியுதில்லை கர்ர்ர்ர்:))..

    தெரிந்த ட்றைவருடன் பிரயாணம் பண்ணுவது என்பது நம் சொந்த வாகனத்தில் போவதைப்போல மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    இவ்வளவு மழையிலும் கோயில் தரிசனத்தை நல்லபடி முடித்து விட்டீங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்... தெரிந்த டிரைவருடன் செல்வது நிம்மதி. இதே டிரைவர் சென்ற வருடம் முறைத்துக்கொண்டார். அவரைத்தான் முதலில் சொல்லி இருந்தோம்!

      நீக்கு
  39. //இந்த வீடு ஞாபகம் இருக்கா? இந்த வீட்டை இப்பவும் ஒரு போட்டோ எடுத்துக்கிட்டேன்... இன்னும் சிதிலமடைஞ்சிருக்கோ...//

    உங்கள் சின்ன வயசு வீடோ ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அதிரா... இந்த ஊரில் நான் குடியிருந்த போது எனக்கு நினைவு தெரியாத வயது! அதுவும் வேறு இடம்!

      நீக்கு
  40. ///T 20ல//
    இந்த ஒரு வேர்ட் ஐத் தெரியாமல் சொல்லிட்டீங்க...:) இதைப்பார்த்து ஏ அண்ணன் பயங்கர குஷியாகி:) தன் மச் பற்றிக் கதைக்கத் தொடங்கிட்டார் தனையும் அறியாமல் ஹையோ ஹையோ.. பெண்கள் நாடகம் பார்த்தால் அது குறையாம்:), ஆனா ஆண்கள் மச் பார்த்தா மட்டும் அது பெரிய விஷயமோ?:)) ஹையோ இதை நான் கேய்க்கவேயில்லை.. பிபிசில காலைக் கிளவி சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே காலைக் கேள்வியில் கேட்டிச்சினம் மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸூஊஊஊஊ:))

    ஊசிக்குறிப்பு:
    மீ கல்யாணவீடு தவிர எதுவும் பார்ப்பதில்லை ட்றாமா, ஆனா சுற்றுலா வெளிக்கிட்டதிலிருந்து அதையும் விட்டாச்சு.. காவேரில தண்ணி ஒடுதோ என அதைப்பார்த்துத்தான் கண்டுபிடிக்கோணும்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மகன்கள் இப்போதும் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்குதான் பொறுமை கிடையாது!

      நீக்கு
  41. ஆஆஆவ்வ்வ்வ்வ் ஸ்ரீராமின் மின்னல் கவிதை சூப்பர்ர்... மிக அருமையாக வசனம் அமைச்சிருக்கிறீங்க,

    //விருப்பங்களே தெரியாதபோது
    விடைகள் எப்படிக் கிடைக்கும்?
    ///

    ஹா ஹா ஹா மிக அருமையான தத்துவம்... உண்மைதான் சிலருக்கு என்ன தேவை? எதுக்காக இப்படி நடக்கீனம்? ஏன் எதுவுமே இல்லாமல் இப்படிப் பண்ணுகிறார்கள் என நாம் யோசிப்போம்... அவர்களும் தமக்கு என்ன தேவை எனத் தெரியாமல் எதையோ தேடுவார்கள்.

    எங்கள் சின்னவர் பசிச்சால் சொல்லத் தெரியாது.. கோபப்பட்டு அழுவார்.. என்ன கேள்வி மிக நைசாகக் கேட்டாலும் கத்தி அழுது பதில் சொல்லுவார்ர்.. பின்புதான் கண்டு பிடிச்சேன் அது பசிக்கிறது அதை சொல்லத் தெரியாமல் இப்படி வெளிப்படுத்துறார் என, அதனால ஸ்கூல் விட்டவுடன் டக்குப் பக்கென லஞ் கொடுத்திட்டால் கூல் ஆகிடுவார்.

    இப்போ வளர்ந்திட்டாரென்பதால இப்பவும் பசிக்குதென சொல்ல மாட்டார்ர்.. ஐ வோண்ட் சொக்கா.. ஐ வோண்ட் சொக்கா என ஓடி வருவார்ர்.. அப்போ புரிஞ்சிடும்.. இப்படி வீட்டுக்குள் எனில் புரிஞ்சு நாம் நடக்கலாம், வெளி ஆட்கள் எனில் கண்டு பிடிப்பது கஸ்டமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அதிரா... குழப்பமான மனநிலை என்று சொல்ல வந்த வரிகள். அறியாமையாகவும் எடுத்துக் கொள்ளலாம். ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  42. ///ஒருவர் புதிதாய் அறிமுகம் ஆகிறார் என்றால், அவரை அடுத்த தரம் பார்க்கும்போது சரியாய் நினைவில் வைத்திருக்கும் ஞாபகக்காரன் இல்லை நான்.//

    நம் நாட்டிலேயே இப்படி எனில்.. இங்கு வெள்ளையர்களோடு மீ படும் பாடு ஹையோ.. எல்லோருமே ஒரே மாதிரியே இருப்பார்கள் கண்ணுக்கு.. நன்கு பலதடவை சந்தித்து பழகிட்டால் மட்டுமே சாத்தியம்.. மற்றும்படி அவர்கள் என்னை இங்கு ஈசியாக அடையாளம் காணுவார்கள்.. ஏனெனில் இங்கிருக்கும் வன் அண்ட் ஒன்லி டமில்க் குடும்பம் நாங்கள் தான் என்பதால்:))

    அதனால என்னில் சின்ன வயசிலிருந்து இருக்கும் ஒரு பழக்கத்தை நான் மாற்றவில்லை:).. அதாவது ஆரைப் பார்க்க நேர்ந்தாலும் சிரிச்சுவிடுவேன்:).... அதனால்தான் குறை இல்லாமல் தப்பி வருகிறேன்.

    என் நண்பி ஒருவரின் தங்கையும், எங்கள் 2 வீடு தள்ளி இருக்கும் அயலவரும் ஒரே மாதிரி இருப்பார்கள். சந்திப்பது குறைவு.

    ஒரு தடவை, அயல் பெண்ணை ஒரு சுப்பமார்கட்டில் பார்த்து, நண்பியின் தங்கை என நினைச்சு அவசரமாகப் பேசி விட்டேன்.. உங்களுக்கு நெக்ட் வீக் ஒரு திருமணம் வருகிறதெல்லோ என.. அவவும் என்ன நினைச்சாவோ.. ஓ யா... என பேசிவிட்டுப் போய் விட்டா.. பின்பு நண்பியிடம் விசாரித்தபோதுதான் உண்மை தெரிஞ்சது ஹையோ ஹையோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அடிக்கடி சந்திக்கும் நிலைமை இது. எதிராளி சிரிக்கச் சிரிக்க மலர்ச்சியுடன் பேசிக்கொண்டுபோக.. நான் விழிப்பது தெரியாமல் சமாளிக்க முயற்சிப்பேன்.

      //அதனால என்னில் சின்ன வயசிலிருந்து இருக்கும் ஒரு பழக்கத்தை நான் மாற்றவில்லை:).. அதாவது ஆரைப் பார்க்க நேர்ந்தாலும் சிரிச்சுவிடுவேன்:)....//

      நல்ல வழக்கம்தான். ஆனாலும் சமயங்களில் அதிலும் பிரச்னை வரும்!

      நீக்கு
  43. இரண்டு முகங்களை என்பதை ஒத்துக்கொள்ள முடியாது.. பொதுவாக நம் ஆள்மனதில் எந்த முகம் பதிகிறதோ அவர்களை இறுதிவரை மறக்க மாட்டோம்ம்.. பலரோடு மேலோட்டமாக பேசி விட்டுச் சென்றால் அது ஆள் மனதில் பதியாது.. அப்போ மறப்பது ஈசி.

    ஆஆஆஆஆ ஒரு பள்ளிப்பருவ கவித கவித நினைவுக்கு வருது.. இதை என் ஓட்டோகிராபில் என் நண்பி.. இப்பவும் இங்கு நம்மோடு இருக்கிறா எனச் சொல்லியிருந்தேனே.. அவ எழுதியது.. இன்னும் இருக்கு என்னிடம் தேடிப் போடுகிறேன் ஒரு நாளைக்கு...

    “நெஞ்சிருக்கும் வரை
    நினைவிருக்கும்
    அந்த நினைவினில்
    உன் முகம் நிறைந்திருக்கும்”

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தமுறை ஶ்ரீராமைப் பார்க்கும்போது பத்து ரூபாய் கடன் வாங்கப்போறேன். அப்போ கவிதையெல்லாம் தேவையில்லை ஆயுசுக்கும் என்னை மறக்கமாட்டார்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன், கடன் வாங்குவதென்று முடிவெடுத்தபின் எதுக்கு பத்து ரூபாய்? ஒரு அம்பதாயிரமாய்க் கேழுங்கோ.. எனக்கும் சேர்த்து அப்போ என்னையும் மறக்கமாட்டாரெல்லோ ஹா ஹா ஹா:))

      நீக்கு
    3. அறியாத வயதில் எழுதப்பட்ட ஆட்டோகிராஃப் வாசகங்கள் எப்போதுமே சுவாரஸ்யம்.

      நீக்கு
    4. ஐம்பதாயிரம்? ரொம்பச் சின்ன தொகையாக இருக்கிறதே.....!!!

      நீக்கு
  44. எங்கேயோ படித்திருந்தேன் - அல்லது வி எல் சி சி ஆட்கள் சொன்னாங்களான்னு ஞாபகம் இல்லை. 100 கேலரி உணவு சாப்பிட்டபிறகு அறை டெம்பரேச்சரில் தண்ணி குடித்தால் சாப்பிட்ட உணவு 100 கேலரிலயே செரிமானம் ஆகும். குளிர் தண்ணீர் குடிச்சா 120 கலோரி சமானமா ஆகும். வெந்நீர் குடிச்சா 80 கலோரி சமானமா ஆகும்னு. அதிலும் எண்ணெய் சேர்ந்த உணவு உண்டால் கடைசியில் வெந்நீர் குடிக்கணும். ஐஸ்க்ரீம் போன்றவை கடைசி உணவா இருக்கக்கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணெய்ப் பொருட்கள் சாப்பிட்டால் வெந்நீர் சாப்பிடுவது நல்லது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் நானும். குடித்ததில்லை!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் நல்லது. என் அனுபவத்தில் சொல்கிறேன்

      கீதா

      நீக்கு
  45. //சாப்பிட்ட பின், சுடச்சுட வெந்நீர் குடித்தால், உடலில் அதிகப்படி சதை போடுவதை தடுக்கலாம்.//
    100 வீதம் உண்மை.. நீங்கள் சொல்லி இருக்கும் ஒவ்வொரு வியாதிக்கும் ஒட்டு மொத்தமான ஒரே ஒரு பதில்..

    காலையில் கண் முழிச்சவுடன்.. குறைஞ்சது அரை லீட்டர் வெண்சூட்டு நீர் மடமட வென அருந்திவிட்டு பின்பு கட்டிலால் இறங்குங்கள்.. அத்தனை வியாதியும் நாளடைவில் நலமாகும்.. முக்கியமாக நெஞ்செரிச்சல் உள்ளோருக்கு இது மிக உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை எழுந்ததும் முதலில் இருநூறு எம் எல் தண்ணீர் குடிக்கிறேன் நானும். ஆனால் வெந்நீர் அல்ல!

      நீக்கு
    2. வெந்நீர்தான் குடிப்பது நல்லதென்கிறார்கள் ஸ்ரீராம்.. ஒரு ஃபிளாஸ்கில் ஊத்தி வைத்திருங்கள்.. கண்முழிச்சவுடன், நேரம் பார்க்காமல் குடிச்சிடுங்கோ.

      நீக்கு
  46. ஆஆஆஆஆஆஆஆஆஆஆ மீதான் 100 ஆவதூஊஊஊஊஊஊஊஊஊஊஊ பரிசு எனக்கேஏஏஏஏஏஎ.. பரிசாக ஸ்ரீராம் ஒரு கவிதை எழுதோணும் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையா?
      நீங்களே ஒரு கவிதை...
      உங்களுக்கு
      எதற்கு தனியாய்
      ஒரு கவிதை?!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ரொம்ப ஷை ஷையா வருது....:) கீழே ஏ அண்ணனின் கொமெண்ட் பார்த்து இன்னும் ஓவர் ஷையாகுது ஹா ஹா ஹா ட்றம்ப் அங்கிளை மீட் பண்ணியபோதுகூட இப்பூடிச் ஷை ஆனதில்லை:)) ஹா ஹா ஹா நல்லவேளை ஜாமி அஞ்சு , கீதா பிஸி என்பதால எனக்கு எவ்ளோ நல்லதாப்போச்ச்ச்:)

      நீக்கு
  47. அடடா! ஒயிட் ஹவுஸ் மேலேயும் எழுதிட்டாரே கவிதை !

    பதிலளிநீக்கு
  48. மதனின் ஜோக் செம அப்பவே இப்படி என்ன அழகா கற்பனை செஞ்சுருக்காரு..வியப்பு!! இப்போது அது நடைமுறையில் இருப்பதும்...நெஜமாவே நல்ல தீர்க்கதரிசிதான்!

    அப்படினா இன்னொன்றும் வந்துவிடும் வெகு விரைவில். அவர் சென்னை ட்ராஃபிக் பிரச்சனைக்குத் தீர்வாக வானத்தில்பல ஹெலிக்காப்டர்கள் பறப்புது போன்று போட்டிருந்தார். என்ற நினைவு!!! அதுவும் வந்துவிடுமோ விரைவில்...இங்க பங்களூரில் வந்தாலும் வரலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதனின் கற்பனைகளில் அடிக்கடி பார்க்க விரும்புவது ரெட்டைவால் ரெங்குடுக்களை!!

      நீக்கு
  49. கவிதை அருமை ஸ்ரீராம்.

    இப்படித்தான் பல தேடல்கள். ஆனால் கடைசியில் தேடி தேடி என்ன தேடுகிறோம் எதற்குத் தேடுகிறோம் என்பதும் போய்...அயற்சி?

    கடைசி வரிகள் செம...மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை பற்றி இதுவரை நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்துக் காத்திருந்தேன். நன்றி கீதா.

      நீக்கு
  50. ஸ்ரீராம், மீக்கும் அப்படித்தான் புதிதாய் அறிமுகம் அகும் நபர்களில் ஒரு சிலரை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது. அது அந்த நபரைப் பொருத்து. நாம் எத்தனை நிமிஷம் அவர் முகம் பார்த்துப் பேசுகிறோம் என்பதும் அதில் உண்டு.

    நல்ல நகைச்சுவையாகப் பேசுபவர்கள் மனதில் எளிதில் பதிந்துவிடுகிறார்கள்.

    நான் பொதுவாகவே என் எதிரில் யாரேனும் வந்தால் ஒரு புன்சிரிப்பை உதிர்ப்பதுண்டு. ஒரு சிலர் அதைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பரிமாறிக் கொள்வார்கள். சிலர் ஏதோ சிந்தனையில் செல்வார்கள் அல்லது டென்ஷனில்...

    பொதுவாகவே வெளிநாட்டவர்கள் முதன் முறை பார்த்தாலும் கூட ஹாய், என்று சொல்லி புன்சிரிப்பார்கள்.

    ஒரு சில ஹௌ டு யு டூ என்றும் சொல்வார்கள்...அல்லது வணக்கம் சொல்வார்கள்.

    நம் ஊரில் புன்சிப்பதில் சில இடைஞ்சல்களும் இருக்கின்றன என்பதையும் சொல்ல வேண்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் முகம் சமீப காலங்களில் சிரிப்பை மறந்திருக்கிறது கீதா... சமீப காலங்களில் என்றால் சமீபத்துப் பிரச்னையால் அல்ல... அதற்கும் முன்னாலிருந்தே...! ஏனோ?!! சிரிக்கப்பழக வேண்டும்!

      நீக்கு
    2. //என் முகம் சமீப காலங்களில் சிரிப்பை மறந்திருக்கிறது கீதா..//

      ஆஆஆ இதுதான் எனக்குத் தெரியுமோ.. நான் புளொக்கில் வந்த காலத்தை விட இப்போ கொஞ்சம் சிரிக்கிறீங்க ஸ்ரீராம்.. முன்பெல்லாம் அதிகம் இறுகியவர்போலவே இருப்பீங்க.. கொமெண்ட்ஸ் பார்த்துச் சொல்கிறேன்ன்.. உங்களை நான் எங்கே பார்த்தேன் எனக் கிளவி எழும்பினாலும் சே..சே கேள்வி எழும்பலாமெல்லோ ஹா ஹா ஹா:)

      நீக்கு
  51. நீங்கள் சொல்லியிருக்கும் அந்தக் கண்டுபிடிப்பு ஆமாம் அது நினைவில் இருக்கும் தான். முதல் கண்டிப்பாக மறக்கவே மறக்காது. அப்படி மறந்தால் செய்நன்றி அறியாதவர் என்று சொல்லிவிடலாம் (அதுவும் நடக்கத்தானே செய்கிறது!)

    இரண்டாவது அந்த நிகழ்வு நினைவிருந்தாலும் மீண்டும் நல்லவிதமாகப் பேசுவதும் தொடரும்..எப்போதோ நடந்தது எதற்கு அதை மறந்து இப்போது எப்படி இருக்கிறார் என்று பார்த்து ஒரு சில நபர்களிடம்..அது செல்லுபடியாகும்... ஆனால் நடந்ததை முழுவதும் மறந்துவிடுவோம் என்று சொல்வதற்கில்லைதான். மறத்தல் நல்ல பழக்கம் இந்த விஷயத்தில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  52. தினமுமே சாப்பிட்டதும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் எனக்கு உண்டு.

    ஸ்ரீராம் இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் - கடைசி தவிர தரை துடைப்பது தவிர - அனைத்தும்..இப்படித்தான் யாரேனும் சொல்லி சொல்லி பின்பற்றத் தொடங்கியது.

    வெந்நீரில் குளிப்பது அதிகக் குளிர்காலத்தில் மட்டுமே.

    என் மாமியார் சொல்லியது வெந்நீரில் நாம் குளிக்கும் சமயம் வெந்நீரை முதலில் காலில் விட்டுக் கொண்டு அதன் பின் தான் ஒவ்வொரு பகுதியாக மேலே சென்று தலைக்கு வெந்நீரில் குளிக்காமல் ரூம் டெம்ப்ரேச்சரில் தண்ணீர் இருக்க குளிக்க வேண்டும் என்று.

    சாதாரண/குளிர்ந்த நீர் என்றால் முதலில் தலையில் விட்டுத் தொடங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

    சாப்பிட்டதும் சரி, விருந்துச் சாப்பாடு, ஹோட்டலில் சாப்பிட்டதும் வெந்நீர் அருந்துவது நல்லதே இங்கு சொல்லியிருப்பது போல். என் அனுபவமும் தான்..

    கீதா

    பதிலளிநீக்கு
  53. ஆகா...! இன்று தான் இதை வாசிக்க நேரமிருந்தது... காலத்திற்கு நன்றி...

    // உழைப்பினால் பெற்றிருக்கிற மேன்மையைப் பராட்டினால் தலைக்கனம் ஏறாது //

    (1) ஜீவி சார்... எனக்கு அறிவு 2%, உழைப்பு 98%... தலைக்கனம் உள்ளவன் தான் அடுத்தவனை அறிய முடியும்... தங்களைப் போல பலர் இன்று வரை எனக்கு பழக்கமுண்டு...! எதிர்மறை விமர்சனத்திற்கு பயப்படுவது ஏன்...? தங்களின் சால்ஜாப்பை "மதிப்பீடுகள் கதையை" மூலம் சரியாக மிதிக்காமல் மதித்து விட்டேன்... அடுத்து...

    // ஒவ்வொருவர் கருத்தை இன்னொருவர் எள்ளுவது சரியான நடைமுறையில்லை என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ளத்தேவையில்லை. //

    (2) ஸ்ரீராம் சார் :- என்றாவது எனது தளத்தில் ஆரம்பத்திலுள்ள "பேச / பழக" என்பதை சொடுக்கி வாசித்து உள்ளீர்களா...? சரி அதை விடுங்கள்... நம்ம "White house அதிரா" என்பதையாவது சொடுக்குங்கள்... உங்கள் தளம் திறக்க ஏன் தாமதமாகிறது என்று தெரியலாம்...(!)

    // நீங்களாக ஏற்படுத்திக் கொண்டது தானே டிடி. உடையத் தான் செய்யும். இதற்கெல்லாம் வருந்தாதீர்கள். இது தான் உலகம் //

    (3) கீதா அம்மா :- உங்களின் அன்பிற்கு நன்றி அம்மா... மற்றவர்களின் பிம்பம் எப்பேற்பட்டது என்பதை சிறுவயதிலேயே அறிந்தவன்... அதனால் தான் மனம் குறித்த எனது பதிவுகள் அனைத்தும்.... குறளின் குரல் பதிவுகள் எல்லாம் வாசகர்களின் ஊக்கத்தினாலேயே... இன்னும் நிறைய பேசுவோம்...!

    // மனிதருக்குள் மனிதமும் உண்டு, டெவிலும் உண்டு.//

    (4) வாங்க சகோதரி கீதா :- நாம் பலமுறை நேரிலும், அடிக்கடி தொலைபேசியிலும் உரையாடி கொண்டுள்ளோம்... எனது பதிவுகளை ஆழ்ந்து படித்த நீங்களும், "இது தான் உலகம்" என்று அறியாதவனா நான்...? எனது பல பதிவுகளின் இணைப்பை கொடுத்து, அதற்கு உங்களின் அருமையான கருத்தை... கெடுக்க... மன்னிக்கவும் - அதை நம்புகிறேன்... என்னமோ போங்க...!

    இருந்தாலும் சகோதரி... // எனக்குள் இருக்கும் மற்றவர்களின் பிம்பம் உடைவது, எனக்கே பிடிக்கவில்லை... // என்று சொன்னது, எனது நெருக்கடி பதிவிற்கு அடுத்து வரும் ஒரு பதிவில் வருவதை..! அதை இப்போது மாற்றி விட்டேன்... ம்... வழக்கம் போல "அருமை, ரசித்தேன், சூப்பர்" என்று கருத்துரைகளை சொல்லி விட்டு போகிறேன்...! - இது ஒரு நாளைக்கு 200 பதிவுகள் வந்த காலத்தில்...! இன்றும் அதை தொடர்ந்தால் தான் நல்லது என்று நினைக்கிறேன்...

    உள்ளத்தில் இருப்பதெல்லாம், சொல்ல ஓர் வார்த்தையில்லை...
    நான் ஊமையாய் பிறக்கவில்லை...
    உணர்ச்சியோ மறையவில்லை...
    என் தங்கமே உனது மேனி...
    தாங்கி நான் சுமந்து செல்ல...
    எனக்கொரு பந்தமில்லை...
    எவருக்கோ இறைவன் தந்தான்...
    அந்த(1)(2)(3)(4) நாலு பேருக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  54. ஸ்ரீராம்ஜி காசி சென்று வந்த பின் மீண்டும் உங்கள் திருமணநாளிற்காகச் சென்ற பயணம் என்று தெரிகிறது. தாமதமானாலும் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்

    பயணம் தொடக்கம் மழையுடன் தொடங்கியிருந்தாலும் சிறப்பாக அமைந்திருப்பதும் தெரிகிறது. படங்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது.

    உங்கள் கவிதை மிக மிக அருமை. ரசித்தேன். மனம் ஒரு நிலையில் இல்லாமல் குழம்பும் போது பலதிற்கும் விடை தெரியாமல் நாம் என்ன கேட்டோம் என்ன நினைக்கிறோம் என்பதும்கூடத் தெரியாமல் குழப்பம் வரும் தான். சமீபத்தில் எனக்கும் கூட. அதனால் தான் பல குழப்பங்களின் இடையில் தளங்களுக்கும் வர இயலாமல் நிலை. மகனைச்சேர்க்கும்வரை. அதற்கான செலவுகளைக் கணித்து என்று இன்னும் ஒரு வருடம் கூட காத்திருந்து பரீட்சை எழுதினால் கவர்ன்மென்ட் சீட் கிடைக்குமோ என்று பல விதமான குழப்பங்கள். இறுதியில் எப்படியோ சேர்த்தாயிற்று.

    அதனால் கவிதை மிகவும் பொருத்தமாக இருந்தது போலவே இருக்கிறது. அழகாக எழுதவும் செய்கிறீர்கள். பாராட்டுகள்.

    சுடுநீர் தான் எங்கள் வீடுகளில் பெரும்பாலும். நீர் காய்ச்சிக்த்தானேகுடிக்கிறோம் அதனால் எப்போதுமே சூடு நீர் தான். சுடு நீரின் பலன்கள் பற்றி இங்கு கூடுதலாக அறிந்து கொண்டேன்

    நீங்கள் சொல்லியிருக்கும் மறக்க முடியாதவை இருமுகங்கள் என்பது மிகவும் சரியே. அதுவும் முதல் முகம்.

    அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.

    பயணக் கட்டுரையில் ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறதே. டக்கென்று புத்திக்கு எட்டவில்லை. ஆனால் வழக்கம் போல் இல்லாமல் மாற்றம் இருக்கிறது. எழுத்தின் நடையோ? இதுவும் நன்றாகவே இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  55. வெந்நீர் பற்றி சுடச் சுட நல்ல தகவல். கவிதை புது மாதிரி.. ஆமா கோவில் விசிட் எப்ப வரும் :)

    பதிலளிநீக்கு
  56. அருமையான விவரிப்பு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!