புதன், 16 செப்டம்பர், 2009

சிக்கனமாய் வாழவேண்டும்!

சிக்கன நடவடிக்கைகளில் வழி காட்டிச் செல்லும் தலைவர்கள், முன்னுதாரணமாக இருக்க வேண்டும் - அப்பொழுதுதான், "மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி" என்று மக்களும் அந்த வகையில் சிந்திக்க ஆரம்பிப்பார்கள்; செயல்படுவார்கள். (வாழ்க மு இ இ இ அ !)

எங்களுக்கும் கூட முதலில் ஆயிரம் சிக்கன நடவடிக்கை மனதில் தோன்றின. அப்புறம் தீவிர சிக்கன நடவடிக்கை என்றதுடன் ஐநூறாகக் குறைந்து, பிறகு அதி தீவிர சிக் ந வ என்றதும் இரு நூறாகக் குறைந்து - இப்படி ஒவ்வொரு நிமிடத்திற்கும் குறைந்து குறைந்து ------ கடைசியில் மிஞ்சியவை இவை:
வலைப் பதிவர்களுக்கான சிக்கன நடவடிக்கைகள் - எங்கள் பரிந்துரைகள்.
ஒன்று : இருப்பதிலேயே சிறிய எழுத்துக்களை உபயோகியுங்கள் - உங்கள் வலைப் பதிவைப் படிப்பவர்கள் யாரேனும் இருந்தால் - அவர்கள் படிக்காமல் போய்விடுவார்கள் - இதனால் அவர்கள் நேரம் மிச்சமாகும்.
இரண்டு : முடிந்தவரை - lighter shade fonts - உபயோகியுங்கள். - அதே நேர மிச்சம்.
மூன்று : contravention இல்லாத விஷயங்களை மட்டும் பதியுங்கள் - உதாரணம் : நெல்லுக்குள்ள அரிசி இருக்கு ! - இதனால் படிப்பவர்கள் கமெண்ட் கந்தசாமியாக மாறி - வச வச வென்று - எதையாவது எழுதி - அவர்களின் நேரத்தையும் - மட்டறுக்க உங்கள் நேரத்தையும் - வீணாக்கமாட்டார்கள்!
நான்கு : படங்கள் மட்டும் இருந்தால் - அதைப் பதியுங்கள் - one picture = 1000 words. இதனால் இடம், எழுத்துப் பிழைகள் - இலக்கணப் பிழை - திருத்தங்கள் - எவ்வளவு நேரம் மிச்சம் பார்த்தீர்களா! மேலும் மௌனம் = சர்வ அர்த்த சாதகம். ஆனால் செப்டம்பர் ஆறாம் தேதி பதிவிடப் பட்ட ஞாயிறு-8 போன்ற படங்கள் வேண்டாம் - அது என்ன என்று யோசிக்கும் வாசகர்களுக்கு - நேரம் அதிக விரயம் - முடியைப் பிய்த்துக் கொள்வா ...... அட - முடி வெட்டிக் கொள்ளும் செலவு குறையுமே -- ஒ கே ஒ கே!
ஐந்து : மௌன விரதம் போன்று - எழுதா விரதம் - வாரத்தில் ஒரு நாளாவது இருங்கள் - உங்கள் வாசகர்களை வாரம் ஒரு நாள் படிக்கா விரதம் இருக்கச் சொல்லுங்கள் (படிக்கச் சொல்லி நீங்க வற்புறுத்தினா மட்டும் - அவங்க உங்க வலை புகுந்து - படிச்சிடப் போறாங்களா என்ன!:-)
ஆறு: நீங்களும் உங்கள் வாசகர்களும் ESP, Claivoyance போன்ற வித்தைகளை - தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் (How to make ESP work for you - By Herald Sherman) - ஒவ்வொரு நாளும் - ஒவ்வொரு மணி நேரத்தில் - நீங்கள் பதிய நினைப்பதை - மனதுக்குள் - நினைத்துக் கொண்டே இருங்கள் - வாசகர்கள் எல்லோரும் நீங்க எழுத நினைப்பதை, எண்ண அலைகள் மூலமாகப் பெற்றுக் கொள்வார்கள் - internet charges உட்பட - எல்லாமே மிச்சமாகும்!
எங்கள் அடுத்த எண்ண அலைகள் அலைபரப்பு - இன்று மாலை நான்கு மணி தொடங்கி ஒவ்வொரு இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை !!

4 கருத்துகள்:

  1. //வாழ்க மு இ இ இ அ!//
    முன்னேற்றமின்றி இழிந்த இந்திய அரசியல் ?
    முன்னூட்டம் இன்றி இளைத்த இணைய அமைப்பு?
    முகம் இல்லாத இணைய -இ-மெயில் அனுப்புனர் ?

    பதிலளிநீக்கு
  2. எண்ண அலைகள் என்றதும் நினைவுக்கு வருவது யூரி கெல்லெர் என்ற நபர் தம் கையில் இருந்த ஸ்பூன் போன்ற வஸ்துக்களை ஏதும் செய்யாமலேயே வளைத்துக் காட்டியதுதான். இதை மானசீக சக்தி என்று சொன்னார்கள். ஒரு சமயம் அவர் தொலைக் காட்சியில் தோன்றி பார்ப்பவர் கையில் வைத்திருந்த ஸ்பூனை வளைத்ததாகவும் சொன்னார்கள்!! இது கட்டுக் கதையாகவும் இருக்கலாம். இவர் போலவே பீட்டர் ஹுர்கொஸ் என்பவர் தம் அகக்கண் பார்வையால் தூர திருஷ்டி மற்றும் உணர்வுகளைப் படிக்கும் திறன் பெற்றிருந்ததாக சொல்லப் பட்டது. காலக் கிரமத்தில் (அல்லது சரி பார்க்கச் சென்ற பொது) அவர்கள் திறன் காணாமல் போய் இருந்தது!
    உண்மையாக எண்ண அலைகள் அதீத சக்தி வாய்ந்தவையா என்று சரி பார்க்க நம்மிடம் எண்ணம் இருக்கிறது, அதீத சக்தியைத் தான் காணவில்லை.

    பதிலளிநீக்கு
  3. நன்றி - உங்கள் அலை பரப்பில் - மாலை ஆறு மணிக்கு மு இ இ இ அ - என்றால் 'யார்' என்று சிக்கனமாக - எகோநோமி கிளாசில் - தெரியப் படுத்தியதற்கு!
    :: அலைஞன்::

    பதிலளிநீக்கு
  4. முன்னவர் இப்படி இருந்தால் இளையவரும் அப்படியே என்கிறீர்களா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!