புதன், 2 செப்டம்பர், 2009

எனது எருமைச் சந்தேகங்கள்!

சமீபத்தில், www.crazymohan.com வலைப் பதிவை மேய்ந்து கொண்டிருந்தேன். என்னுடைய 'சு'தந்தி'ர' தின நண்பன் கைவண்ணம் வெகுவாகக் கவர்ந்தது. பாட்டும் படமும் அவனுக்குக் கை வந்த கலை. நிற்க. கிரேசி மோகனின் - பழைய (சாவி இதழில் வந்த) கதையைப் படித்த பொழுது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.
அது என்ன என்றால் - வீட்டில் வளர்க்கப்படும் பசு விற்கு பெரும்பாலானவர்கள், "லட்சுமி / லக்ஷ்மி " என்று நாமகரணம் செய்திருப்பார்கள் - நிறைய லட்சுமி இருந்தால் - என்ன அல்லது என்னென்ன பெயர்கள்? - முதல் சந்தேகம்.
எருமை மாடுகளுக்கு என்ன பெயர் வைப்பார்கள்? (பிறந்த கன்றுக் குட்டியை - கொண்டு போய் அரசியல் தலைவர்களிடம் கொடுத்து - பெயர் வைக்கச் சொன்னால் - அவர்கள் எதிர்க் கட்சிப் பிரபலங்களின் பெயர்களை வை(த்)தாலும்! - வைப்பார்கள் ;-)
இந்த சந்தேகத்தை, என்னைத் தவிர பல எருமை மாடுகளை - சிறு வயது முதலே வளர்த்து / மேய்த்து வந்த என் மனைவியிடம் கேட்டேன். அவள் கூறியது - வேடிக்கையாக இருந்தது. அவர்கள் வீட்டில் இருந்த எல்லா கறவை மாடுகளுக்கும் "காமாட்சி" என்று பெயராம்; கறவை மாடுகளின் கணவன் அல்லது மகன்கள் எல்லோருக்கும் "வெங்கட்டா" என்று பெயராம்!
கமல்ஹாசன் படம் ஒன்றில் நாய்க்குப் பெயர் சுப்பிரமணி - என்று வந்ததால் - வெறுப்படைந்த அந்த பெயர் கொண்டவரின் பிள்ளைச் செல்வங்கள் - பழிக்குப் பழியாக - அவர் வீட்டு நாய்க்கு என்ன பெயர் வைத்தார்கள் என்று நான் இங்கே எழுதப் போவதில்லை!

4 கருத்துகள்:

  1. ஏன், வளர்ந்த கன்றாக இருந்தாலும் செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்து விட்டால், அவர்கள் பெயரும் சூட்டி விடுவார்கள்
    கருப்பன், பெரிய கொம்பன் இப்படியாக - அப்பெயரை சுமந்து திரியப் போவது உங்கள் வீட்டுக் கன்றுக் குட்டி தானே!

    பதிலளிநீக்கு
  2. பெரிய லட்சுமி, சின்ன லட்சுமி குட்டி லட்சுமி என்றெல்லாம் கூப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
  3. புலவரே - நீங்க எழுதியதைப் படித்தவுடன், பெரிய பத்மினி, பத்மினி, குட்டி பத்மினி என்று சம்பந்தமில்லாமல் சில பெயர்கள் ஞாபகம் வந்தன.
    ஆனந்த் - லிட்டில் ஆனந்த்
    ஆல்பர்ட் - பேபி ஆல்பர்ட்
    ஆகிய பெயர்களும்.
    :: அத்திம்பேர்::

    பதிலளிநீக்கு
  4. கமலம் காமாட்சி, மகாலக்ஷ்மி என்றெல்லாம் பசுவின் பெயர்களும், கோணக்கொம்பி, பெரிய கறுப்பி, முசுடு, என்றெல்லாம் எருமைக்குப் பெயர்களும் எனக்குப் பரிச்சயம். எருமைக்கு ஒரு அநீதி இழைக்கப் படுவது என்னவோ தெளிவு. அசட்டுப் பிள்ளைகளை எருமை மாடு என்று கோபமாக அழைப்பவர்கள் மக்கு மண்ணாந்தை களை அவன் பசு மாதிரி ரொம்ப சாது என்று சொல்லி பசுவையும் அவமதிப்பதுண்டு

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!