திங்கள், 19 ஜூலை, 2010

என்ன விலை .....எண்காலியே? 01

கால் பந்து ரசிகர்களுக்கு, பால் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். இரண்டு கால் இருப்பவர்களுக்கே கால் பந்தாட்டத்தில் இவ்வளவு ஆர்வமும், வெறியும் இருக்கும்பொழுது, எட்டு கால் கொண்ட பால் எவ்வளவு ஆர்வம கொண்டிருக்கும்? குறைந்த பட்சம் நான்கு பங்காவது அதிக ஆர்வம இருக்கும். அது மட்டுமா? ஜோசியத்தில் என்ன கலக்கு கலக்கி, ஜெயிக்கும் அணியை முன்னதாகவே சுட்டிக் காட்டியது! 

ஆமாம் இப்போ அதுக்கு என்ன என்று கேட்கிறீர்களா?  எண்காலி பற்றியும், அது சொன்ன ஜோசியம் பலித்தது பற்றியும் பேப்பரில் படித்தவண்ணம் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த போது...

திடீர் என்று தொலைபேசி மணி டிர்ரிங் டிர்ரிங்கியது. 

"ஹலோ இந்தப் பக்கம் இடி அமின், அந்தப் பக்கம் யாரு?"

"டேய் உதை படுவே. பெயரை எப்போ மாத்திகிட்டே?"

"ரொம்பப் பெரிய பெயரா இருக்கே!"

"சரி சரி விளையாட்டை எல்லாம் விடு. நான் அமைச்சரோட பி ஏ வோட வலது கை என்று உனக்கு தெரியும்தானே?"

"தெரியும். அதோடு அமைச்சருடைய பி ஏ இடது கை பழக்கக்காரர், அவருடைய வலது கையா நீ இருக்கறதுல எந்த பிரயோஜனமும் ..."

"அப்ப நான் பி ஏவுக்கு இடது கை."

" ஹி ஹி ஹி ஹ ஹா ஹா. என்ன வேண்டும் பி ஏ இடது கையே?"

" அமைச்சருடைய வாய் மொழி உத்திரவு. பால் அப்படிங்கற பேருல யாரோ ஒரு காலிப்பய இருக்கானாமே, அவனை என்ன செலவு ஆனாலும், நம்ப ஊருக்கு கொண்டு வரணுமாம்."

" கையைக் காலை ஓடிச்சா ஓடிக்காமயா?"

" கையை காலை எல்லாம் ஓடிச்சுடாதே! அவன் என்னவோ கால் ஜோசியம் சொல்லுவானாமே?"

"கால் ஜோசியமா? ஃபோன் கால் பண்ணி உன்னுடைய ராசியை சொன்னால், உடனே 'சிவகாமி' ஜோசியம் போல பட பட என்று ஒரு பாட்டம் சொல்லுவார்களே அதுவா?"

" இல்லைடா. ஏதோ எட்டு கால் பூச்சின்னு அமைச்சர் சொன்னாரே?"

"அடப்பாவி - அது எட்டு கால் பூச்சியோ அல்லது காலிப்பயலோ இல்லைடா - எண்காலி - ஆக்டபஸ் - கால் ஜோசியம் இல்லை, கால் பந்தாட்ட ஜோசியம். அது எதுக்குடா உங்க அமைச்சருக்கு? புதுசா எவனாச்சும் ஆமைவடை போல ஆக்டோபஸ் வடை ரெசிபி ஏதாவது சொல்லி உசுப்பேத்திட்டானா?"

"இல்லைடா - இப்ப அந்த பால் எட்டு காலிக்கு ஏக டிமாண்ட்."

"ஏண்டா? நம்ப ஊருல ஏதாவது கால் பந்து போட்டி வெக்கப்போறீங்களா? எனக்கு சொல்லுடா. ஸ்டால் காண்டிராக்ட், பால் காண்டிராக்ட், கோல் போஸ்ட் காண்டிராக்ட், எல்லாம் எடுத்து நானும் மால் பார்க்கிறேன்."

"அலையாதே. சென்ற வாரம் எங்கள் கட்சி உள்பட நமக்குத் தெரிஞ்ச எல்லாக் கட்சியினரும், ரகசிய ஆலோசனை செய்து, அந்தப் பால் என்கிற ஆக்டோபஸ்சை எப்படியாவது வரவழைத்து, ஜோசியம் பார்க்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டார்கள்."

" அப்போ உள்ளூர் ஜோசியர்கள் எல்லோருக்கும் தலையில் துண்டுதானா?"

"அது அவங்க விதி. அதெல்லாம் எதுக்கு இப்போ?  நீதான் டிராவல் ஏஜென்சி வச்சிருக்கியே. பால் ஊருலே இருந்து வருபவர்கள் யாரையாவது பிடித்து, பாலுக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம் வாங்கி, இங்கே வரவழைத்துவிடு."

" செலவு நிறைய ஆகுமே?"

" நான் சொல்லும்பொழுது, செலவு பத்தி யோசிக்கவே யோசிக்காதே. நாளைக்கே பால் நம்ப ஊருல இருக்கணும். எவ்வளவு செலவாகும்?"

" செலவா? ஒரு கோடி ஆகும்." 

"அவ்வளவுதானே? இரண்டு கோடி ஆனாலும் பரவாயில்லை. ஐ வான்ட் பாஸ்ட் ஆக்க்ஷன்."

" ஓ கே நாளைக்கு பால் தரிசனம் பண்ண ரெடியா இரு."

(தொடரும்) 

5 கருத்துகள்:

  1. //ஓ கே நாளைக்கு பால் தரிசனம் பண்ண ரெடியா இரு. //


    யாருக்கோ நாளைக்கு 'பால்' ரெடி பண்ணுறான்களோ?

    பதிலளிநீக்கு
  2. யாருக்கோ நாளைக்கு 'பால்' ரெடி பண்ணுறான்களோ?
    aha Ithu!!!!!!!
    congrats Madhavan.

    பதிலளிநீக்கு
  3. ஹ ஹ நம்மூருக்கு வந்தா பால் பாவம்...என்ன பாடு படப்போதோ..

    பதிலளிநீக்கு
  4. *பால்* அவர்கள் வருகையா எங்கள் புளொக்குக்கு !
    யார் யாருக்குக் காலம் சரில்லையோ !

    இண்ணைக்குப் பால்...நாளைக்கு !
    சரி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!