டேராடூன்: உத்தரகண்டில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லை வரை செல்லும் நீலாபானி - முலிங் லா இடையே, 16,000 அடி உயரத்தில், 32 கி.மீ., துாரத்துக்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த மலைச்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அ ரசு துவங்கி உள்ளது. உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் முலிங் லா மலைப்பகுதி உள்ளது. பயண பாதை : இது, ந ம் நாட்டின் உத்தரகண்ட் மாநிலத்தை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் தன்னாட்சி பிராந்தியத்துடன் இணைக்கும் பழங்கால வர்த்தக மற்றும் பயண பாதையாக இருந்தது. இமயமலையில், 16,000 அடி உ யரத்துக்கு மேல் அமைந்துள்ள மலைப்பாதையான இந்த பகுதியை அடைய, தற்போது சாலை வசதி இல்லை. ஆனால், நீலா பானியில் இருந்து மலையேற்றம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. முலிங் லாவை அடைய ஐந்து நாட்கள் ஆகும். இந்நிலையில், நீலபானி - முலிங் லா இடையே, 32 கி.மீ., துாரம் சாலை அமைக்கும் பணியை, பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை நிறுவனம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 104 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளனர். பொறியியல் ஆலோசனை : நிறுவனங்களிடம், பி.ஆர்.ஓ., ஒப்பந்தம் கோரியுள்ளது. தேர்வாகும் நிறுவனம் மலை, பாறை, மண் வகை ஆகியவை எப்படி உள்ளது என ஆய்வு செய்து, எங்கு சாலை அமைக்கலாம், பனிச் சரிவு தடுப்பு ஆகியவை குறித்து அறிக்கை அளிக்கும். அதன்பின் சாலை பணிகள் துவங்கும். அனைத்து வானிலையிலும் திபெத் எல்லையை அடையும் வகையில் இந்த சாலையை கட்டமைக்க உள்ளனர். சவால் : இதன் மூலம் சீன எல்லையில் அசாதாரண சூழல் நிலவும் போது, நம் படைகளை சில மணிநேரங்களில் அப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியும். இது குறித்து பி.ஆர்.ஓ., அதிகாரிகள் கூறுகையில், 'லடாக்கில் சீன படைகளுடன் கடந்த 2020ல் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, எல்லைகளில் சாலை, பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு பணிகளை மத்திய அரசு விரைவு படுத்தி வருகிறது. 'அதன் ஒரு பகுதியாக நீலாபானி - முலிங் லா இடையே உயர்மட்ட மலைப்பாதை அமைக்க உள்ளோம். இமயமலையில் சாலை அமைக்கும் இந்த பணி மிக சவாலானதாக இருக்கும்' என்றனர்.
========================================================================================
மிகச்சிறிய பயணம். ஏறியதும் தெரியாது, இறங்கியதும் தெரியாது என்று மூன்று அல்லது நான்கு நிமிடங்களில் மேலே சென்று விடுகிறது. மெல்ல செங்குத்தாக உயரத் தொடங்கி, சட்டென சற்று வேகமாகி, இறங்கும் நேரம் மெதுவாக மறுபடியும் சற்று செங்குத்தாக ஏறி நிலையத்தை அடைகிறது. அங்கு தரிசனம் முடித்து இறங்குவதற்குக் காத்திருந்த மக்கள் பரபரப்படைவதைப் பார்க்க முடிந்தது. எங்கள் டிரைவர் சற்றே திரும்பிப் பார்த்த நிலையில் அமர்ந்திருக்க (வின்ச் அவருக்கு பின்புறமாக ஏறிக் கொண்டிருந்தது) அங்கிருந்த வாலண்டியர்கள் அவரைப்பார்த்து "நேரா திரும்பி உட்காருங்க நேரா திரும்பி உட்காருங்க" என்று திரும்பதிரும்பச் சொல்லவும், கவனிக்காத அவரை "உங்களைத்தான் சொல்றாங்க" என்று நான் சொன்னதும் குழம்பிப்போய் முழுவதுமாக எசகுபிசகாக திரும்பி உட்கார யத்தனித்தவரை திருப்பி நேராக உட்கார வைத்தேன்!
இறங்கி நேராக நடந்து மேலேறி, ஸ்வாமியை தரிசிக்கும் வரிசையில் சேர்ந்தோம். உள்ளூர் வி ஐ பி "மேலே ஏறி விட்டீர்களா? ஏறியதும் சொல்லுங்கள்" என்று வின்ச் ஏறும் முன் சொல்லி இருந்தார். எனவே அங்கிருந்து அவருக்கு போன் செய்தேன். "ஏரியாச்சா? இதோ வருகிறேன்" என்று உடனே போனை கட் செய்தவரை நல்லவேளையாக நம்பாமல் ஸ்வாமியைப் பார்க்க ப்ரொசீட் செய்தோம். பெரிய கியூ இல்லை என்றாலும் மெதுவாக நகர்ந்தது. முதலில் ஸ்ரீ அமிர்தபாலவல்லித் தாயார் தரிசனம். பட்டர்கள் மொபைலில் மூழ்கி இருந்தனர். இருவர் அவர்களுக்குள் பணத்தை எண்ணியவாறு தீவிர வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தனர். தீபம் காட்டி விளக்கம் சொல்வார்கள். அது நடைபெறவில்லை. எவ்வளவு முறை எவ்வளவு பேர்களுக்கு அவர்களும் சொல்வார்கள் இல்லையா? முடித்து தாயாரை வலமாகத்தாண்டி இடதுபுறம் திரும்பி 'யு டர்ன்' போட்டு நரசிம்மமரை தரிசிக்கச் சென்றோம். ஓரளவு தூரத்திலேயே வரிசையைக் கட்டுப்படுத்தி தரிசிக்க வைத்தார்கள். அரை நிமிடத்துக்கும் மேல் தரிசனம் செய்ய முடிந்தது. கொஞ்சம் முயன்றால் ஒரு நிமிடம், ஒன்றரை நிமிடம் தாக்குப் பிடிக்கலாம்.
நரசிம்மரை தரிசித்து திரும்பும்போது அங்கு ஒருவர் நின்று கொண்டு "தரிசனம் நல்லபடி ஆச்சா?" என்று அன்பொழுகக் கேட்டார். ஒருகணம், அவர்தான் அந்த வி ஐ பி ஏற்பாடு செய்த ஆலோ என்று எண்ணினேன். அவர் வலது கை கீழே நீட்டியவண்ணம் இருந்தது. கண்டுகொள்ளாமல் தாண்டி வந்தேன். பின்னால் வந்த பாஸ், "ச்சே.. உங்க கைல காசு இருக்கு.. தட்டிலும் போடமுடியவில்லை. உண்டியலில் போடக்கூடாது என்று சொல்லிட்டீங்க.. அங்க ஒருத்தர் நின்னு கைநீட்டினார்.. ஒன்றும் கொடுக்க முடியலை" என்று குறைப்பாட்டுக் கொண்டார். "அவர் நீ ரோப்காரில் சீக்கிரம் ஏற உதவி பண்ணினாரா, இங்கே கியூவில் நிற்காமல் உள்ளே அழைத்து தரிசனம் செய்ய வைத்தாரா, இல்லை பக்கத்தில் அழைத்துப்போய்தான் தரிசனம் செய்ய வைத்தாரா... என்ன செய்தார், அவருக்கு லஞ்சம் கொடுக்க?" என்று வீ பா க ஸ்டைலில் பொரிந்தேன்!
நகர்ந்து நகர்ந்து வெளியே வந்து பிரசாதம் கொடுக்குமிடம் வந்தோம். மணி ஒன்று. ஒன்றும் சாப்பிடாதது எனக்கு பாதிக்கவில்லை என்றாலும் பாஸ் "பசிக்கிறது, பிரசாதம் வாங்கலாம்" என்றார். நல்லவேளை மறுக்காமல் வாங்கினேன். மடைப்பள்ளி அருகேயே வைத்து ஒரிஜினல் கோவில் தயாரிப்பு. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம். ஒரு மந்தாரை இலையை பகோடா பொட்டலம் போல மடக்கி அதில் நிரப்பிக் கொடுத்தார்கள். என்ன சுவை.. அபார புளியோதரை, பொங்கல், தயிர் சாதம்.. ஒரு பொட்டலம் 20 ரூபாய்.
சரி, இறங்கலாம் என்று வந்தபோது நரசிம்மர் புன்னகைத்தது தெரிந்தது. மிகப்பெரிய கியூவில் கடைசியில் இணைய வேண்டி இருந்தது. எப்படியும் எழுநூறு பேர்களுக்கு மேல் முன்னால் நிற்பார்கள். முந்தி முந்தி குறுக்கே புகுந்து முன்னால் சென்ற சில குடும்பங்கள் வேறு நடுநடுவில். ஏற்கனவே சொன்னபடி ஒருமுறைக்கு 16 பதினாறு பேராக எவ்வளவு ட்ரிப்பில் கீழே போவோம்? டிரைவர் அங்கிருந்த காவலரிடம் "நாங்க வி ஐ பி வழி வந்தோம்" என்று சொல்லி குறுக்கே போக முயன்றது தோல்வியில் முடிந்தது. என்ன செய்வது, எவ்வளவு நேரம் ஆகும் என்று நின்றிருந்தோம். ஏகப்பட்ட ஹேஷ்யங்கள் போய்க் கொண்டிருந்தன. வானரங்கள் இங்குமங்கும் தாவி வேடிக்கைக் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்தன. சுதாரிக்காத பக்தர்களிடமிருந்து தண்ணீர் பாட்டிலைக் கவர்ந்து சென்றன.
அப்போது ஒரு சலசலப்பு எழுந்தது. தடிமனான இரண்டு வாலன்டியர்கள் அங்கே தோன்றி,"அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ரோப்கார் கிளம்பாது. கீழே வி ஐ பி வழியில் வந்தோம். எங்களை முதலில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று முப்பது நாற்பது பேர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடிதடியில் வின்ச்சையே நிறுத்தி விட்டோம். இரண்டு மணிக்கு லன்ச் இடைவேளை. அப்புறம் ஒரு மணிநேரம் கழித்து மறுபடி தொடங்கும்" என்றார். கூட்டத்தைக் கரைக்கச் சொன்னாரோ, நிஜமாக சொன்னாரோ.. எங்கள் பொறுமை போனது. என் கூட வந்தவர்கள் படி வழியே இறங்கும் ஆப்ஷனுக்கு ஆதரவு கொடுக்க, என் விருப்பம் ஒற்றை ஆளாய் தோற்றுப் போனது. முழங்கால்களை பிடித்தபடியே அப்படியே அந்தப் பக்கம் இருக்கும் படிக்கட்டுகளை நோக்கி நகர்ந்தோம்.
மனதைத் திடப்படுத்திக் கொண்டு 1300 படிகளில் இறங்கத் தொடங்கினோம். பாஸ் லஞ்சம் கொடுத்து ஒரு மிகச்சிறிய கூஜாவில் மேலேயிருந்து தீர்த்தம் வாங்கி வந்திருந்தார். அதை வால் உம்மாச்சிகளிடமிருந்து காப்பாற்ற போராடியபடியே இறங்கினோம். நொபைலைக் கூட பறித்துச் செல்ல முயன்றன. மதியம் ஒன்றரை மணிக்கு இறங்கத் தொடங்கினோம். ஒரு மணி நேரத்தில் இறங்கினோம்.
==============================================================================================
சென்ற வாரம் புதன்கிழமை கொடுத்திருந்த இலை படத்துக்கு செல்வாண்ணா ஒரு கவிதை எழுதி அனுப்பி இருந்தார். சென்ற வியாழனிலேயே வெளியிட முடியுமா என்று கேட்டிருந்தார். அவர் பாஷையிலே சொல்ல வேண்டும் என்றால் சென்ற வார பதிவு "முரட்டு பதிவா"க இருந்ததால் அப்போது வெளியிடாமல் இந்த வாரம் வெளியிடுகிறேன்!
=================================================================================================
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரை விடுதலை செய்து கோபி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராஜ்குமாரை வீரப்பன் கடத்திவைத்திருந்தபோது, தமிழக அரசின் சார்பில் தூதர்களாக வீரப்பனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் ஒருவர், கல்வியாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான பிரபா கல்விமணி. இந்தத் தீர்ப்பு தொடர்பாக அவருடன் பேசினேன்.ராஜ்குமார் மீட்புக் குழுவில் நீங்களும் இடம்பெற்றிருந்தீர்கள். இந்தத் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தாமதமான தீர்ப்பானாலும், வரவேற்க வேண்டிய தீர்ப்பு இது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான எந்த ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை என்ற வழக்கறிஞர் பாப்பா மோகனின் வாதம் நிரூபணமாகியிருக்கிறது.
ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக வீரப்பனிடம் என்ன பேசினீர்கள்?
பழங்குடி மக்கள் தொடர்பில் அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?
எங்கே நிறைவேற்றினார்கள்? தூதுவர்களாகச் சென்ற எங்களுக்கே சம்மன் அனுப்பி சாட்சிகளாக்கினார்கள். இவ்வளவுக்கும் தூதுவர்களாகச் செல்பவர்களுக்கு இப்படியெல்லாம் எதிர்காலத்தில் சம்மன் அனுப்ப மாட்டோம் என்று இரண்டு மாநில உள்துறைச் செயலர்களும் முன்பு கூறியிருந்தார்கள். அதையே மீறினார்கள். எங்களுக்கே இந்தக் கதி என்றால், குரலற்ற பழங்குடி மக்கள் நிலைமையை யோசியுங்கள்.
வீரப்பனை நீங்கள் பார்த்த நாட்களில் அவருடைய அணுகுமுறை எப்படி இருந்தது?
எனக்கு ஒரு விஷயத்தில் அவர் மீது மதிப்பு இருந்தது. அது என்னவென்றால், கடத்திச் சென்றிருந்தாலும், ராஜ்குமாரை மிகவும் கண்ணியமாக நடத்தினார் வீரப்பன். ராஜ்குமாரை விடுவிக்கும்போது புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து வழியனுப்பினார் வீரப்பன். இருவரும் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டனர். இங்கே படித்து, பயிற்சி பெற்று போலீஸ் வேலைக்குச் செல்பவர்கள் காவலில் வைக்கப்படுபவர்களை எத்தனை மோசமாக நடத்துகிறார்கள் என்பதை நாம் பார்க்கும்போது அது மரியாதையைத் தந்தது.
தமிழக அரசுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
அப்பாவி மலைவாழ் மக்கள் மீது போலீஸார் நடத்திய அட்டூழியங்கள் சொல்லவே முடியாத அளவுக்குக் கொடுமையானவை. பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கான உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். கொடுமையிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும். அந்த எளிய மக்கள் சிந்திய கண்ணீருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்!
- சந்தனார் - செப்.29 2018 இந்து தமிழ்திசை --











.jpg)






















அனைவருக்கும்புத்தாண்டு
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள்...
வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குவாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் 2026 ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
நீக்கு//ராஜ்குமாரை விடுவிக்கும்போது புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து வழியனுப்பினார் வீரப்பன். இருவரும் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டனர்.// LOL
பதிலளிநீக்குஇன்னும் வெவ்வேறு அனுபவங்கள் படித்தால் இன்னும் அகலமாக புன்னகைக்கலாம்.
நீக்கு//வந்திருக்கும் அந்த ஆன்மாவிடமிருந்து தப்பிக்க பிரணவ் எடுக்கும் முயற்சிகள் கதை.// ஓஹோ! இப்ப நம்ம வசதிக்கு, பேய் ஆன்மா ஆகிடுச்சோ? பலே பலே ;-) ;-)
பதிலளிநீக்குபேயிடம் அச்சமில்லை; பிணத்திடமும் அச்சமில்லை. ஆனால், இரண்டும் சேர்ந்து கொள்ளும்போதுதான் (மனிதன்), சில பல வேளைகளில் அச்சமுண்டு, அச்சமுண்டு !
நீக்குஅந்தக் கதையில் ஆவி, பேய் என்று எப்போதும்போல் பயமுறுத்தாமல் வித்யாசமாகக் காட்டிட்டியிருந்ததன் பாதிப்பை;உ என்னை அப்படி எழுத வைத்திருக்கிறது!
நீக்குமுருகா சரணம்..
பதிலளிநீக்குமுருகா சரணம்..
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஅனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
வாங்க கோமதி அக்கா.. வணக்கம். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் 2026 ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
புது வருடத்தில் நரசிம்மர் கோயில் புளியோதரை பிரசாதம் கிடைத்தது
பதிலளிநீக்குநன்றி. பிறகு வருகிறேன்.
ஆமாம். முன்னாடியே கிடைத்தாலும் வைத்திருந்து "இன்று சாப்பிடும்படி" அமைந்தது விசேஷம்!
நீக்கு//தளிர் எனத்
பதிலளிநீக்குதழைத்தால்
எத்தனையோ
இசைப்பாட்டு
பழுத்ததொரு
இலைக்கு
போற்றியே திருப்பாட்டு!//
Hear, hear, செல்வாண்ணா! இளவேனிலில் இளந்தளிர்கள் அழகு என்றால் இலையுதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் அழகு. முதுமை அதன் அழகுக்காகவே, இருப்புக்காகவே போற்றப்படவேண்டும், கொண்டாடப்படவேண்டும்! முதுமையில் இளமை farce is pathetic. Happy 2026 and cheers!!
நினைத்த நேரத்தில் நிறைய எழுதுவார். இப்போது கண்களும் விரல்களும் கொஞ்சம் சண்டி செய்கின்றன அவருக்கு. கூடவே இணையமும்!
நீக்குதிருவாழி அவர்களுக்கு நன்றி
நீக்குஉங்கள் ஷோலிங்கர் பயண விபரம் நல்லா இருந்தது. எதற்கும் knee cap எடுத்துச் சென்றிருந்திருக்கலாமே.
பதிலளிநீக்குஇணையத்திலிருந்தாவது நரசிம்மர் படத்தை, வருட ஆரம்ப நாள் என்பதால் எடுத்துப் போட்டிருந்திருக்கலாம்.
வாங்க நெல்லை.. இப்போது படம் இணைத்து விட்டேன். Knee cap க்கு வேலை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும் சமீப காலங்களில் உபயோகிப்பதும் இல்லை. அதை உபயோகிப்பது சரி, தவறு என்று இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. மருத்துவர் கூடாது என்கிறார். பிஸியோ தப்பில்லை என்கிறார். சும்மாவே பால்மாறுவேன்!!!
நீக்குஅதிகாரத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் காலைக் கழுவ பூட்சை நக்கத் தயங்கமாட்டார்கள். அந்த நிதர்சனத்தின் வெறுப்பில் எளியவர்களை ஏறி மிதிப்பார்கள்.
பதிலளிநீக்குவீரப்பன் செயலால் துரோகிகள் வெறும்பயல்கள் பத்திரிகையாளர் என்ற போர்வையில் கோடிகளைச் சம்பாதித்தனர். இப்போ கழகத்தின் காலில் விழுந்துகிடக்கின்றனர்
இப்போதைய கழகத்துக்கும் வீரப்பனுக்கு சம்பந்தமில்லை. ஆனால் விஜயகுமார் முதலில் கலைஞருக்குதான் செய்தி சொன்னார், பின்னர்தான் முதல்வருக்கு சொன்னார் என்று படித்த நினைவு. வீரப்பன் இப்போது அந்த ஏரியா மக்களால் கடவுளாக கும்பிடப்படுகிறார். நினைவு நாளன்று செம கூட்டம் கூடுகிறது.
நீக்குவீரப்பன் நல்லவன் என்று எழுதுகிறவர்களைப் பார்த்தால் சிரிப்புதான். கொள்ளைக்காரன் கொலைகாரனுக்கு வக்காலத்தா?
பதிலளிநீக்குநடிகர் ராஜ்குமார் அவர்கள் நல்லவர். அதனால் பிரச்சனை மிக மோசமாகவில்லை
'பயணம்' என்றொரு படத்தில் திரை நாயகனின் சாகசத்துக்கும் நிஜ வாழ்வின் அனுபவத்துக்கும் எவ்வளவு வித்யாசம் என்று விமான கடத்தல் சம்பவம் ஒன்றினுள் உரித்துக் காட்டி இருப்பர்கள். அதுபோல அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும், வீரப்பனைப் பகைத்துக் கொள்ளாமல் நிதானமாக நடந்து கொண்டார். காட்டுக்குச் சென்று அவருடன் பேசிய அனுபவங்களை நிருபர் ஒருவர் எழுதிய அனுபவங்களில் ராஜ்குமார் பேசிய ஒரு பகுதியை எடுத்து வைத்திருந்தேன். டிராஃப்ட் வெள்ளத்தில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
நீக்குபழுத்த இலைக்கு மிகச் சிறப்பாக இலை என்பதை வைத்து துரை செல்வராஜு சார் எழுதியிருக்கிறார்
பதிலளிநீக்குகவிதையும் வார்த்தை விளையாட்டும் மிகவும் ரசிக்கும்படி இருந்தது
ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனை திறமைகள். வியக்கிறேன்
வெளிப்பட வாய்பளித்த எபியை எண்ணி மகிழ்கிறேன்
நெல்லை அவர்களுக்கு நன்றி
நீக்குநிகோ சோப் விளம்பரம்.. ஆமாம் இந்த சோப்புகளினால் என்ன பயன்? உபயோகிப்பவர்களுக்கு. விற்பவர்களுக்கல்ல
பதிலளிநீக்குஸ்கின்னுக்கு நல்லது அப்படி இப்படி என்றெல்லாம் சொல்லி விற்று விடுகிறார்கள். ஆனால் நான் இப்படி ஒரு சோப்பை கேள்விப்பட்ட ஞாபகம் கூட இல்லை.
நீக்குஓடிடி பட அறிமுகம் நன்று. பிரணவ் மோகன்லால் படம் பார்க்கணும். அடுத்த படம் எப்படி இருந்தது?
பதிலளிநீக்குஇரண்டுமே தற்கொலை கொலைப் படங்களா?
முதல் படத்தைவிட இரண்டாவது படம் சுமார்! ரிவால்வர் ரீட்டா என்றொரு படம் பார்க்கத்தொடங்கி பொறுமை இல்லாமல் நிறுத்தி விட்டேன். புதுப்பப்படம். கீர்த்தி சுரேஷ்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், நம் நட்பு குடும்பத்தினர் அனைவருக்கும் மலர்ந்த 2026ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புது வருட நல்வாழ்த்துகள். புது வருடம் அனைவருக்கும் பல நன்மைகளை தர வேண்டுமாய் இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் வாழ்த்துகள்.
நீக்குஓ! புத்தாண்டு வருட மாற்றத்துடன் தொடக்கமா!!!!
பதிலளிநீக்குகீதா
சும்மா.. சின்ன மாற்றம் முதலில்.. போகப்போக பார்க்கலாம். வாங்க கீதா.. புத்தாண்டுக்கு புதிய ஐடி! கலக்கறீங்க...
நீக்குபாசிட்டிவ் செய்தி மிக நல்ல விஷயம்!
பதிலளிநீக்குகீதா
ஆமாம்.
நீக்குவிஞ்ச்சுக்கு லஞ்ச்
பதிலளிநீக்குரசனை... சொல்லழகு..
பொக்கிஷம் பகுதி அருமை
பதிலளிநீக்குஅரட்டை கதம்பம் வழக்கம் போல....
பதிலளிநீக்கு(முழுதாகப் படிக்கவில்லை)