கொடிகள் படர்கின்றன - ஸ்ரீவேணுகோபாலன்
அக்காவின் பார்வை வரவர எனக்குப் பிடிப்பதில்லை. அதன் காரணமும் எனக்குப் பிடிபடுவதில்லை. இருந்தாற் போல் இருந்து அவள் பார்வை சுற்றிப் பறந்து என் மீது வந்து விழுகிறது. ஏதோ இரை கொத்த வரும் பறவை என்னைத் தேடி வருவது போல் நான் நடுங்குகிறேன். என்னை நேர்முகமாய் அவள் தாண்டிச் செல்லும்போது அவள் பார்வையின் உக்கிரத்தைத் தாங்க இயலாது தவிக்கிறேன். பார்வையில் கற்பூரக் கொழுந்து எரிகிறது.
அக்கா ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தால் இதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். அவள் படித்தவள். எம். ஏ. பாஸ் செய்திருக்கிறாள். கொடி போன்று இருப்பாள். நடந்து வருவதிலேயே ஒரு களை, கம்பீரம் ! ஆங்கிலம் பேசினால் கடல் மடை திறந்ததுபோல் இருக்கும். இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். அவளுக்கு முப்பத்தைந்து வயதாகி விட்டது என்று ஒருவரும் சொல்லவே மாட்டார்கள். அவள் சற்றுப் பருமன். அவ்வளவுதான்!
இப்படிப்பட்டவள் மீது எனக்கு எவ்வளவு அன்பு தெரியுமா? ஆனால் அவள்?
உண்மையில் அவள் உறவு முறையில் எனக்கு அக்கா அல்ல. அவளுக்கும் எனக்கும் இருப்பது ஒரு உறவில் சேர்த்தியா என்று கூடத் தெரியாது. அவள் அம்மாவும் என் அம்மாவும் ஏதோ விதத்தில் அக்கா தங்கை ஆக வேண்டுமாம். அது இரண்டு விட்டோ, மூன்று விட்டோ! ஏதோ உறவு அவ்வளவுதான்! அந்த நாளில் குடும்பமெல்லாம் ஆல் போல் தழைத்து ஒரே கிராமத்தில் இருந்ததாம். இப்போது நாங்கள் இருவரும் ஏதோ நிர்ப்பந்தத்தில் கூடியிருக்கிறோம். நிர்ப்பந்தம் என்று சொல்வதற்கில்லை, அக்கா ஐந்தாவது பிரசவத்துக்குக் கிராமம் வர ஆசைப்பட்டாள். முதல் நான்கு பிரசவங்களிலும் குழந்தைகள் தக்கவில்லை, அதனால் ஒரு குறை. ஏதோ கிராமத்துத் தெய்வத்தின் மீது ஒரு நம்பிக்கை!
"உன் எல்லையில் குழந்தை பிறந்து நான் வாழவேண்டும்" என்று பிரார்த்தனை, பிரசவத்துக்கு தைரியமாக கிராமம் தேடிவந்து விட்டாள்.[நடுவில் இரண்டு மூன்று வரிகளைக் காணோம்]
............................ -----------------------------------------------------
சிரித்துக் கொண்டிருப்பவர் முகத்தில்கூடச் சிறிது மாற்றம் ஏற்பட்டது. ஏதோ யோசித்து நின்றுவிட்டு, "நீ என்னடி செய்கிறாய்?" என்றார் என்னைப் பார்த்து.
சிரித்துக் கொண்டிருப்பவர் முகத்தில்கூடச் சிறிது மாற்றம் ஏற்பட்டது. ஏதோ யோசித்து நின்றுவிட்டு, "நீ என்னடி செய்கிறாய்?" என்றார் என்னைப் பார்த்து.
"இந்த வருஷம் எஸ். எஸ். எல். ஸி. போகிறேன்.."
"மேற்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?"
நான் மௌனமாக நின்றேன். சீனு மாமா எல்லோரையும் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தார். ஒருவரும் பதில் சொல்லவில்லை.
"எஸ். எஸ். எல்.ஸி. பாஸ் பண்ணின பிறகு என்கிட்டே அனுப்புங்கோ! ஒரு வருஷம் நம்ம வீட்டிலே இருந்து, ஷார்ட் ஹேண்டு. டைப்ரைட்டிங் பாஸ் பண்ண வைத்து உத்தியோகம் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்" என்றார்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மகிழ்ச்சிதான். எப்படியாவது குடும்பத்திலிருந்து என்னைக் கழற்றிவிட்டால் போதுமென்றிருக்கிறார்கள். நான் போனால் இன்னும் ஐந்து பெண்கள் வரிசையாக இருக்கின்றனர். சொற்ப வருமானத்தில் எல்லோரையும் எப்படிக் கரை சேர்த்து விடுவது?
நான் பரீட்சை தேறுவதற்கு ஒரு வருடமாகியிட்டது. அதற்குள் சீனு மாமா தம் வாக்கை மறந்திருப்பாரோ என்று எங்களுக்கெல்லாம் பயம்! ஆனால் நான் தேறிய கொஞ்ச நாட்களுக்கெல்லாம் சீனு மாமா கடிதம் எழுதி விட்டார். எங்களுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி கரை புரண்டுயிட்டது.
நான் முதன் முதலாகப் பட்டணம் வந்து இறங்கியபோது அக்கா, "அடி சீதாக் குட்டி!" என்று என்னைக் கட்டிக் கொண்டு விட்டாள். என்னுடைய பழைய சமுக்காளப் படுக்கையை எடுத்து, "இதெல்லாம் எதற்கு?' என்று பழங் கூடையில் போட்டு விட் டான். பீரோவிலிருந்து ஒருபுதிய 'பின்னி' 'ரக்'கை எடுத்துக் கொடுத்து விட்டாள். பிறகு என் பெட்டி யைத் திறந்து பார்த்தாள். தோய்த்துத் தோய்த்துத் தொய்ந்து போன என் பாவாடை, தாவணிகளைப் பார்த்துப் புருவத்தை நெரித்தாள். பிறகு சீனு மாமாவிடம் "இதோ பாருங்கோ! நாளைக்கே சீதாவுக்குத் தாவணி பாவாடை 'செட்' நாலு வாங்கணும்! பட்டிக்காட் டிலே இருந்த மாதிரி இவன் இங்கே இருக்கக் கூடாது!"
என்றாள். அப்படிப்பட்ட அக்காவுக்கு என்ன நேர்ந்து விட் டது? நான் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறேன்?
அவர்கள் வீட்டில் என்ன சுதந்திரம்! மாமாவுக்கு இந்தியன் ஆயில் கம்பெனியில் அக்கௌண்ட்ஸ் ஆபீஸராக வேலை. அக்கா, பெண் கல் லூரியில் ஸைகாலஜி லெக்சரர். ஒரே ஒரு கைக் குழத்தை! அதைக் கவனித்துக் கொள்ளவும். சமைக் கவும் ஓர் அம்மாள் வீடு வந்து பார்த்துக் கொள்வாள். அவ்வளவு பெரிய கண்ணாடியை முதன் முதலாக அப்போதுதான் பார்க்கிறேன். அதன் முன் நின்றுகொண்டு என்னைப் பார்த்துக் கொள்வதுகூட ஒரு பொழுது போக்காக அமைகிறது.
விரைவிலேயே என்னை ஓர் இன்ஸ்டிட்யூட்டில் சேர்த்துவிட் டார்கள். அதில் சுருக்கெழுத்து, தட்டெழுத்து, அகௌண்டன்ஸி, கடிதப் போக்குவரத்து எல்லாமே கற்றுக் கொடுக்கிறார்கள். படிப்பு முழு நேரப் படிப்பாக அமைகிறது.
ஒரு நாள் பகலெல்லாம் சூரிய ஒளியே இல்லாமல் மூட்டமாக இருந்தது. சுற்றிலும் ஒரு தண்மை நிறைந்து மனத்துக்கு இதமாயிருக்கிறது.
அக்கா வாங்கிக் கொடுத்த புடவையை நான் உடுத்தியிருக்கிறேன். புடவையை உடுத்திக் கொள்வது இதுதான் முதல் தடலை. உடுத்திய பிறகு கண்ணடியின் முன் நின்று கொண்டேன். எனக்கே ஆச்சரியம்! "பழைய சீதா எங்கே?" என்று கேட்டுக் கொள்கிறேன்.
மெல்லிய பச்சையில் வாங்கியிருந்த அந்தப் புடலை உடலில் அழுந்திப் படித்திருக்கிறது. உடல் மலர்ந்திருப்பதைக் கண்டு திகைக்கிறேன். கன்னங்களில் இருந்த வாட்டம் மறைத்து இப்போது குமிழாய் வளைத்திருப்பது தெரிகிறது. நான் எவ்வளவு பெரியவளாய்த் தென்படுகிறேன்?
இங்கே வந்த பிறகு குடும்பக் கவலைகளை மறந்திருக்கிறேன். அதுதான் முக்கிய காரணமாக இருக்க வேண்டும். எப்போதும் ஒரு மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறேன். இந்தப் பெரிய நகரம், அதில் விதம் விதமாய் உடுத்திச் செல்லும் ஆண் பெண்கள், கடைலீதிகள் கடற்கரைச் சாலை யாவுமே என்னுள்ளே ஒருவித இன்பப்பிரமையை எழுப்பி வருகின்றன. அக்கா எனக்கு நல்ல மோஸ்தர்களில் துணிகளை எடுத்துத் தருகிறாள்.. கொண்டை போடவும், கிரீம் தடவிப் பவுர் போட்டுக் கொள்ளவும் கற்றுத் தந்திருக்கிறாள். அலங்காரப் பொருள்களை வைத்திருக்கும் சிறிய பெரிய டப்பிகளைக் கண்டே நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன்!
"பேஷ்!" என்று குரல் சேட்டுத் திரும்புகிறேன். மாமா ஹால் வாயில் பக்கம் நிற்கிறார். நான் வெட்கப் பட்டுக் கொள்கிறேன். அவர் மாடிப்படிகளில் ஏற ஆரம்பிக்கிறார்.
"சீதா! ஒரு கூல் டிரிங்கு கொண்டு வாயேன்!" என்று கூறிக் கொண்டே போகிறார். நான் பிரிஜடேரை நோக்கி நடக்கிறேன். அதிலிருந்து ஆரஞ்சு ரசத்தை எடுத்துக் கொண்டு போய் அவர் முன் முன் வைக்கிறேன். புடவையை அடிக்கடி சரிசெய்து கொண்டே அவரைப் பார்க்கிறேன். அவர் மெள்ளப் பருகுகிறார். இடை யிடையே 'பேஷ் பேஷ்' என்கிறார். அவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குச் சிரிப்பு பொங்கி வருகிறது. நான் அலங்கரித்துக் கொண்டிருப்பதை அவர் உற்றுக் கவளிப்பதெல்லாம் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. "உனக்கு எல்லாம் நன்றாகப் பொருந்தியிருக்கிறது" என்கிறார் அவர்.
மறு நாள் காலை நான் கருக்கெழுத்துப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். "இன்றைக்கு எந்தப் பாடம் என்று கேட்டுக் கொண்டே மாமா உள்ளே வருகிறார். "டிப்தாங்" என்கிறேன் நான். அவர் என் அருகில் உட்கார்ந்து கொள்கிறார். '''டிப்தாங்' என்றால் என்ன தெரியுமா?" என்று அவர் ஆரம்பிக்கிறார். அவர் விளக்கங்கள் எனக்குச் சுலபமாகப் புரிந்து விடுகின்றன. அவர் தினந்தோறும் காலை வேளைகளில் வரத் தொடங்குகிார். பிறகு இரவு நேரங்களிலும் வருகிறார்.
அன்று இரவு நான் பாடங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன். சுருக்கெழுத்தில் ஒரு 'ஸ்ட்ரோக்' தப்பிதமாக விழுந்து விட்டது. பின்னலிருந்து யாரோ என் பென்சிலைச் சட்டென்று பிடுங்குகிறார்கள். நான் திரும்பிப் பார்க்கிறேன். மாமா சிரித்துக் கொண்டே நிற்கிறார். அவருக்கு முன் வரிசை ஓர பற்கள் இரண்டு சொத்தைப் பற்கள்! அதை மறைத்துக் கொள்வதற்காக முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறார்.
பிறகு அவர் ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு என் அருகில் அமர்கிறார். "இப்படியல்லலா போட வேண்டும்!" என்று போட்டுக் காண்பிக்கிறர். பாடம் சிறிது நேரம் நடக்கிறது. மாமா இடையிடையே ஏதாவது வேடிக்கைக் கதை சொல்ல ஆரம்பித்து விடுவார். அல்லது கேலியாக எதையாவது கூறிக்கொண்டிருப்பார். அவைகளைக் கேட்கக் கேட்க எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வரும்.. அன்று அவர் சொன்ன வேடிக்கைக் கதைக்கு எனக்கு ஒரேயடியாய்ச் சிரிப்பு வருகிறது. அவரும் 'ஹஹ்ஹா' என்று தம் சொத்தைப் பற்களை மறந்து சிரிக்கிறார். சட்டென்று என் கண்கள் வாயில் பக்கம் நோக்குகின்றன. அங்கே அக்கா நின்று கொண்டிருக்கிறாள்.
"இதென்னது? உங்களுக்கு இன்னும் நாழியாகலையா? மணி ஒன்பதடிச்சாச்சு! உங்க தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டு அந்தப் பெண் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டு..."
"ட்யூஷன் இதோ முடிஞ்சு போச்சு!" என்கிறார் மாமா. "நல்ல யூஷன்.காலை வேளையியே வைத்துக் கொண்டால் மாத்திரம் போதாதா? ராத்திரி வேறு வேண்டுமா?"
மாமா அதற்கு மேல் பேசலில்லை. மெள்ள எழுந்து போய் விடுகிறார். அக்கா நிதானமாக உள்ளே நுழைகிறாள். எனக்கு இன்னும் சிரிப்பு உள்ளுறக் குமைந்து கொண்டிருக்கிறது. அக்கா என்னை உற்றுப் பார்த்த வாது நிற்கிறாள்.
"சீதா! உடுத்திக் கொண்டால் எல்லாவற்றையும் சரியாக உடுத்திக் கொள்ள வேண்டும். அலங்கோலமாக இருக்கக் கூடாது. உட்காருகிறது. எழுந்திருக்கிறது எல்லாவற்றிலுமே ஓர் அமரிக்கை வேண்டும். வீட்டிலே இருந்தாலும் சரி.."
"சரி அக்கா!"
அக்கா போகிறாள். அவள் போன பிறகுதான் என் சிரிப்பு தளர்கிறது. அக்கா கூறியபடி இன்னும் விஷயங்களில் பக்குவப்பட வேண்டியது நான் என்று நினைக்கிறேன். எனக்கே ஒன்றும் புரியவில்லை. அக்கா கூறினது மாத்திரம் மனத்தில் ஒரு நெருடலாக நின்று விடுகிறது.
அன்று மாலை வகுப்பிலிருந்து நான் திரும்பிக் கொண்டிருக்கிறேன். வீட்டுக்குப் போக பஸ் ஸ்டாண்டில் வந்து நிற்கிறேன். வெரு நாழிகையாக பஸ்ஸைக் காணவில்லை. நின்று நின்று கால் சலிக்கிறது.
"ஏது யோசனை பலமாக இருக்கே!" என்ற குரல் கேட்டுத் திரும்புகிறேன். மாமா ஸ்கூட்டரில் வந்து என் அருகில் நிற்கிறார். நான் சிரிக்கிறேன்.
'வீட்டுக்குத்தானே போகிறாய் சீதா? ஏறிக் கொள்கிறாயா?"
"ஐயோ வேண்டாம்! இதிலே எனக்கு உட்காரத் தெரியாது!"
"அதைப் பற்றி உனக்கெள்ள கவலை.. நான் பழக்குகிறேன். ஏறிக்கோ மெட்ராஸுக்கு வந்தால் எல்லாம் சுத்துக்கணும் தெரிஞ்சுதா?"
நான் ஏறி உட்காருகிறேன். என் தோழிகளுக்கு 'டாட்டா' கூறுகிறேன் மாமா வாகவமாக ஸ்கூட்டரை ஓட்டுகிறார். ஒவ்வொரு திருப்பத்தின்போதும் என் கண்கள் செருகிக் கொள்கின்றன. 'அம்மோய்' என்று என்னை அறியாமல் வாய் கூவுகிறது. கண்களை மூடிக் கொண்டால் எங்கேயோ பறப்பதுபோல் இருக்கிறது.
வீட்டு வாசலில் இறங்கினவுடன் என் மேலெல்லாம் உதறலெடுக்கிறது.
பிரயாணம் செய்த வேகத்தை இது வரை அனுபவித்திராததால் நெஞ்சு பதற்றமடைகிறது. வீட்டுக்குள் சிரித்துக்கொண்டே போகிறேன், "சீதா, ஒரு கூல் டிரிங்கு!' என்று கூறிக் கொண்டே அவர் மாடிக்குப் போகிறர். நான் 'பிரிஜ்'ஜிலிருந்து ஆரஞ்சு ரசத்துடன் மாடிக்குப் போகிறேன். மாமா அதைப் பருகிக் கொண்டே என்னை உற் றுப் பார்க்கிறார். நான் தலை குனிகிறேன்.
அவர் மெள்ள, "சீதா!" என்கிறார்.
"என்ன?"
அவர் மேலே பேசவில்லை. யோசனை யில் ஆழ்ந்து விடுகிறார். பிறகு மீண்டும் "சீதா!" என்கிறார்.
"ஒண்ணுமில்லை. நாம்ப ஸ்கூட்டர்லே வத்ததை அக்காகிட்டே சொல்லாதே! அவள் ஒரு கர்நாடகம்! இதெல்லாம் அவ ளுக்குப் பிடிக்காது, தெரிஞ்சதா?" நான் தலையசைக்கிறேன்.
மறுநாள் மாலையிலும் பஸ் ஸ்டாண் டில் நின்றுகொண்டிருக்கிறேன். என்னோடு என் தோழிகளும் நிற்கிறார்கள். சட்டென்று ஒருத்தி, "சீதா, உன் மாமா" என்கிறாள். நான் தூரத்தில் பார்க்கிறேன். அவர் ஸ்கூட்டரில் வருவது தெரிகிறது. எனக்குச் சந்தோஷம் பொங்குகிறது. மற்றவர்கள் சிரிக்கிறார்கள். அவர்கள் சிரிப்பது ஒரு மாதிரியாக இருக்கிறது.
மாமா என் அருகில் ஸ்கூட்டரைக் கொண்டு வந்து நிறுத்துகிறர். அவர் முகமெல்லாம் மலர்ச்சி! அவரை இன்று பார்ப்பதற்கே புதுமையாக இருக்கிறது. நரைத் தலையெல்லாம் பிசிறு தெரியாமல் வாரியிருக்கிறார். டெரிலின் ஷர்ட் . போட்டிருக்கிறார். வழக்கமாக வாயில் அடக்கிக் கொண்டிருக்கும் புகையிலையை காணவில்லை.
நான் ஏறிக் கொள்கிறேன். ஸ்கூட்டர் பறக்கிறது. சாலையில் நடுநாயகமாகப் போவது எனக்கு எவ்வளவு பிடிக்கிறது ? ஸ்கூட்டர் ஒரு திருப்பத்தில் என்மீது காற்றை வீசியடிக்கிறது.
"இதென்ன மாமா, இங்கே திருப்பி விட்டீர்கள்! வீட்டுக்குப் போகவில்லையா?"
"நீ பேசாமல் வா..."
சிறிது நேரத்தில் ஸ்கூட்டர் மெரினா சாலையில் ஓடுவதைக் காண்கிறேன். இங்கேயெல்லாம் வந்து இயற்கை அழகைக் காண வேண்டுமென்று எத்தனை நாட்கள் கனவு கண்டிருக்கிறேன்? கார்களின் இடைவெளியே மாமா ஸ்கூட்டரை அனாயாசமாக ஓட்டிச் செல்கிறார்.
ஒரு ரெஸ்டாரெண்டுள் நுழைகிறோம். மாடியில் மேஜை, நாற்காலிகள்! அருகே நீச்சல் குளத்தில் நீஞ்சுகிற வைபவங்கள்! மாமா முந்திரிப் பருப்புக்கும் சிப்ஸுக் கும் 'ஆர்டர்' கொடுக்கிறார். என் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொள்கிறார்.
"ம்! ஆகட்டும்!" என்கிறார். நான் சிரித்துக் கொண்டே முந்திரியக் கொரிக்கிறேன். அவர் ஒன்றிரண்டை என் கையிலிருந்து பிடுங்கி விட்டு, சிறு குழந்தைகளைப் போல் "ஏமாந்தாயா?" என்று கேட்கிறார். எனக்கென்னவோ ஒவ்வொன்றுக்கும் சிரிப்புப் பொத்துக் கொண்டு வருகிறது.
"நேற்றைக்கு நீயும் நானும் ஸ்கூட் டரிலே போய் இறங்கின சேதியை உங்க அக்காகிட்டே சமையற்கார் சொல்லி விட்டாள்."
"அதனாலென்ன?''
''என்னவா? உன் அக்கா ராத்திரி முழுதும் என்னுடன் வாதம் பண்ணிக் கொண்டிருந்தாள் தெரியுமா?"
''ஏன் அப்படிச் செய்கிறான்?"
"டீக்காய் அலங்காரம் பண்ணிக் கொண்டு காலேஜுக்குப் போகிறளே தவிர மற்றப்படி அவள் வெறும் கட்டுப் பெட்டி! இரண்டுபேர் 'ஸோஷியலா' பழகறதை அவள் விரும்ப மாட்டாள். சுத்தக் கர்நாடகம்!"
சட்டென்று சிரிப்பொலி கேட்டுத் திரும்புகிறோம். சற்றுப் புறம்பே உள்ள மேஜையில் ஓர் இளைஞனும் பெண்ணும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இசைஞன் ஒரு டம்ளரை அந்தப் பெண் வாயருகில் பருகும்படி நீட்டியிருந்தான். அப்போது அந்தக் கிளர்ச்சியில் ஏற்பட்ட சிரிப்புத்தான் அது! அவர் கண்களைச் சிமிட்டுகிறர். எனக்குச் சிரிப்பு வருகிறது.
அருத்திய பிறகு புறப்படுகிறோம். வீட்டுக்கு இரண்டு பர்லாங் தூரத்திலேயே அவர் என்னை இறக்கி விடுகிறர். ''நீ ஒன்றும் சொல்லிக்காதே! வகுப்பில் லேட்டாகிவிட்டதுன்னு சொல்லு. நான் இன்னும் அரை மணிக்கப்புறம் வந்து சேருகிறேன்" என்று கூறி அவர் ஸ்கூட் டசில் போய் விடுகிறார்.
அவர் மறைந்த பிறகு நான் மெள்ள நடக்கிறேன். இரண்டு அடிகள்தான் சென்றிருப்பேன். "சீதா" என்ற குரல் கேட்டுத் திரும்புகிறேன். எனக்குத் தூக்கி வாரிப் போடுகிறது. என் பின்னால் அக்கா நின்று கொண்டிருக்கிறாள்.
''அக்...கா" என்று நாக்குழறுகிறேன். "ஏன் இங்கே இறக்கி விட்டுப் போனவர், வீட்டு வாசலில் இறக்கிவிட் டுப் போவதுதானே?"
"இல்லையக்கா! அவருக்கு வேறு எங்கேயோ போகணுமாம்!" நான் குழறுகிறேன். அக்கா என்னையே கூர்ந்துபார்க்கிறாள்.
"உங்களைத் தேடித்தான் புறப்பட் டேன். இப்படித்தானே வரும் வழி! எப்படியும் சந்தித்து விடலாம் என்று வந்தேன்."
அதற்கு மேல் அவள் பேசவில்லை. வீட்டுக்குப் போகிறோம். அவள் மேலும் பேசாதது எனக்கு என்னவோ போலிருக்கிறது. அக்கா உள்ளே போய் முகத்தைக் கழுவிக்கொண்டு என்னிடம் வருகிறாள்.
"இப்படி உட்கார் சீதா!"
நான் நடுக்கத்தோடு உட்காருகிறேன். "உனக்கு ஒரு விதத்திலும் திகில் வேண்டாம் சீதா! நீ சின்னப் பெண்! நீ எல்லாக் காரியங்கரையும் நல்லா ஆலோசனை பண்ணி செய்யணும்! உறவு முறை, கட்டுப்பாடு, சட்ட திட்டம் இதெல்லாம் மனிதர்களுடைய நன்மைக்குத்தான்! தீமைக்கு இல்லை. இதையெல்லாம் நினைத்துப் பார்த்து, உன் பிற்கால வாழ்வை நீ வகுத்துக்கணும், அம்மா! இது என் ஆசை!"
அவள் எழுந்து போய்விடுகிறாள். எனக்குப் பதில் பேசவே விடாதது மனத்தை என்னவோ செய்கிறது. சிறிது நேரம் தவிக்கிறேன். கண்களில் நீர் மல்குகிறது. அதைத் துடைத்தவாறு மாடிக்குப் போகிறேன். யாரோ என்னை உரக்கத் திட்டிவிட்டது போல் மனம் துடிக் கிறது. நான் குற்றமற்றவள் என்று உள்ளம் வாதிக்கிறது.
கட்டிலில் போய் விழுகிறேன். வெகு நேரம் அழுகிறேன். இடையே மாமாவின் ஸ்கூட்டர் சத்தம் கேட்கிறது. சிறிது நேரத்தில் அக்காவும் அவரும் பேசிக் கொள்ளும் சத்தம் கேட்டுறது. அவர்கள் வெகு நாழிகை பேசுகிறார்கள். நான் மெள்ள உறங்கி விடுகிறேன்.
மறுநாளிலிருந்து மாமா எனக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுக்க வருவதில்லை. எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. என் முன் எப்போதும் அடிக்கடி தென் படுபவர் இப்போது தென்படுவதில்லை. எங்கேயாவது பார்த்துவிட்டால் முகத்தைத் திருப்பிக்கொண்டு பேசாது போய் விடுகிறார். அவரைப் பார்க்கலே பரிதாபமாக இருக்கிறது.
அன்று நாங்கள் மகாபலிபுரம் போகிறோம். நான், என் வகுப்புச் சிநேகிதிகள் எட்டுப்பேர். என் டீச்சர் ஆகிய சிறிய கோஷ்டி, கல் ரதங்களைப் பார்த்துவிட்டு எல்லோரும் கடற்கரையில் உட்காருகிறோம். மாலை நேரம் ஆகிக் கொண் டிருக்கிறது.
"சீதா உன் மாமா!" என்று ஒருத்தி கூறவும் திரும்பிப் பார்க்கிறேன். மாமா தூரத்தில் நின்றுகொண்டு பார்ப்பது தெரிகிறது. தோழிகளிடம் 'இதோ வரு கிறேன் என்று கூறித் துள்ளிக் குதித்து ஓடுகிறேன். என்னைக் கண்டதும் மாமாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
"உன்னை எப்படியும் இங்கே கண்டு பிடித்து விடவேண்டும் என்று நான் ஆபிஸ் வேலையை அப்படியே போட்டு விட்டு வந்திருக்கிறேன், சீதா!"
நான் அவரை நன்றிப் பெருக்கோடு நோக்கினேன்.
"நாங்கள் மகாபலிபுரம் வந்தது உங் களுக்கு எப்படித் தெரியும் மாமா?"
"நீ காலையில் அக்காவிடம் 'பெர் மிஷன்' கேட்டுக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும்!" கார் ஹாரனின் சத்தம் கேட்கிறது. தோழிகள் அனைவரும் புறப்பட்டு விட் டார்கள்.
"அவர்களிடம் சொல்லிவிடு. நாம் ஸ்கூட்டரில் போகலாம்" என்கிறார் மாமா! நான் டீச்சரிடம் கூறிவிடுகிறேன். அவர்கள் கோஷ்டி, போய் விடுகிறது.
நான் மணற் கரையில் குதித்து ஓடு கிறேன். அலை வந்து சமன் செய்த தரையில் தாவி ஓடுகிறேன்.
"சீ!" என்று கூறிக்கொண்டு மாமாவும் ஓடிவருவது தெரிகிறது. நான் அலைப்பக்கம் செல்லும்போது அவர் சட்டென்று கையைப் பிடிக்கிறர். ஒரு கணம் என் உடல் நடுங்குகிறது. அவர் என் கைகளை அழுத்திய வலுவில் கண்ணாடி வளையல்கள் இரண்டு பொடிப் பொடியாகின்றன. என் முகத்தை உற்றுப் பார்த்தவாறே அவர் தன் பிடிப்பைத் தளர்த்திக் கையை எடுத்துவிடுகிறார்.
"ஒண்ணுமில்லை: நீ தண்ணீரில் விழுந்து விடுவாயோன்னு பயந்தேன்" என்கிறார்.
அந்தி நேரத்தில் அங்கிருந்து புறப்படுகிறோம். ஸ்கூட்டர் பறந்து செல்கிறது. மாமா இடையிடையே பாடிக் கொண்டு ஓட்டுகிறார்.
ஊரை நெருங்கும் சமயம்! படீரென்று வெடிச் சத்தம், ஸ்கூட்டர் திசை திரும்புகிறது. மாமா சட்டென்று அதை நிறுத்துகிறார். கீழே இறங்குகிறோம். பின் சக்கர டயர் வெடித்திருக்கிறது.
பட்டணத்து எல்லையில் ரிப்பர்செய்து கொண்டு நாங்கள் வீடு திரும்பும்போது மணி எட்டாகிவிடுகிறது. மாமா என்னேத் தொலைவில் இறக்கி விட்டுவிடுகிறர். நான் தனியாக முதலில் வீட்டுக்குள் நுழைகிறேன். உடம்பெல்வாம் நடுங்குகிறது.
வெளி வராந்தாவில் சற்றுத் தயங்கி நிற்கிறேன். உள்ளே யாரேனும் தென் படுகிறர்களா என்று பார்க்கிறேன். ஹால் நாற்காலியில் அக்காவும் ரங்கு வும் பேசிக் கொண்டிருக்கின்றனர். என்னைப் பற்றித்தான் பேசியிருப்பார்களோ?
அக்காவுக்கு ரங்கு ஒரு தூரத்து உறவு! வந்து இரண்டு மாதங்களாகின்றன.
மெள்ள உள்ளே நுழைகிறேன். அக்கா என்ன ஏறிட்டுப் பார்க்கிறான். அந்தப் பார்வையின் சக்தி தாங்காது நான் நடுங்குகிறேன்.
மெள்ள உள்ளே நுழைகிறேன். அக்கா என்ன ஏறிட்டுப் பார்க்கிறான். அந்தப் பார்வையின் சக்தி தாங்காது நான் நடுங்குகிறேன்.
""சீதா, ஏன் லேட்?"
"வழியில் கார் ரிப்பேர் ஆகிவிட்டது. எல்லோருமே இப்போதுதான் வருகிறோம்!"
"கார் ரிப்பேரா?" அக்கா சிரிக்கிறான். "உன் சிநேகிதி மாலதியை நான் வர வழியிலேயே பார்த்து விட்டேன்... அவர்கள் சாயங்காலமே வந்துவிட் டார்கள்!"
நான் தயங்குகிறேன். என் காலின் கீழே பூமி நடுங்கிக் கொண்டிருக்கிறது. மிரள மிரள விழிக்கிறேன்.
"நீ வேறு காரணம் ஒன்றும் சொல்ல வேண்டாம். ஒரே ஒரு வேண்டுகோள்! நீ தினமும் எப்படியாவது ஐந்து மணிக்குள் வீட்டில் இருக்க வேண்டும். அக்காவின் வேண்டுகோளை நிறைவேற்றுவாய் அல்லவா?"
எனக்கு நீர் மல்குகிறது.'ஆகட்டும்' என்று தலையசைக்கிறேன் பிறகு நகர்ந்து விடுகிறேன். நெஞ்சில் வேதனை நிறைந்து விடுகிறது. அறைக்கு வரு கிறேன்.
"வேண்டுகோளா இது? கட்டளைதானே?" என்று மனம் குமுறு கிறது. வேறு ஒருவர் விட்டில் இப்படி அடிமையாய் இருக்க வேண்டியிருக்கிறதே என்று உள்ளம் நோகிறது.
அன்று சனிக் கிழமை. மாலையில் கடைசி வகுப்புக் கிடையாது. நான் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். திடீரென்று மழைத்தூறல் லேசாகத் தெளிக்கிறது. நான் பஸ்ஸ்டாப் அருகில் ஒதுங்குகிறேன்
"என்ன யோசனை பலமாக இருக் கிறதே!" என்று குரல் கேட்டுத் திரும்பு கிறேன். மாமா ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு என் அருகில் வருகிறார்.
''வருகிறாயா, ஸ்கூட்டர்லேயே போகலாம்!"
நான் தயங்குகிறேன். "தூறல் பலத்துவிடப் போகிறது. எவ்வளவு நாழிகை நிற்கப் போகிறாய்? இலேசாத் தூறல் இருக்கும்போதே போய்விடலாம்"
நான் 'சரி' என்று தலையசைக்கிறேன். பிறகு பின்பக்கத்தில் ஏறி உட்காருகிறேன். ஸ்கூட்டர் புறப்படுகிறது. சிறிது நேரத்திலேயே தூறலும் நின்று விடுகிறது. முகத்தை இடது கையால் துடைத்துக் கொண்டு பார்க்கிறேன். அவர் சாலையை மாற்றி வேறு பக்கம் திருப்புவதைக் கண்டதும் "மாமா" என்று கூவுகிறேன்.
"நீ பயப்படாதே சீதா! இன்னிக்கு எப்படியும் நம்ப இரண்டு பேரும் சினிமா போகணும்! அக்கா எப்படித் திட்டினாலும் பரவாயில்லை!"
"நிறுத்துங்கள் மாமா, நிறுத்துங்கள்!" நான் கூவுகிறேன்.
அவர் தயக்கத்தோடு 'பிரேக்' போடுகிறார். நான் உடனே கீழே குதிக்கிறேன்.
"என்னை மன்னியுங்கள் மாமா! அக்காவுக்கு நாள் மானசீகமாக ஒரு வாக்குக் கொடுத்திருக்கிறேன்."
"மானசீகமாவது, வேகமாவது? என்ன உளறுகிறாய்?"
"இல்லை மாமா, இதிலிருந்து நான் பிறழ்வதற்கில்லை!"
நான் வேகமாக நடக்கிறேன். மாமா சிறிது நேரம் நிற்கிறர். பிறகு ஸ்கூட்டரில் என்னத் தாண்டி வேகமாகப் போய் விடுகிறார். நான் அந்தச் சாலையை விட்டு இன்னும் திரும்பிவிடவில்லை காலடி ஓசை கேட்டுப் பின்னால் பார்க் கிறேன். அருகில் ரங்குவைக் கண்டதும் எனக்குத் தூக்கி வாரிப் போடுகிறது.
அவன் என்னிடம் பேச முயல்வது போல் நிற்கிறான். எனக்கு ஆத்திரம் மூண்டு வருகிறது. "என்ன?" என்று தீவிழி விழித்துக் கேட்கிறேன்
.
அவன் தயங்குகிறான்."சொல்கிறேன் என்று தவறுதலாக நினைத்துக் கொள்ளாதீர்கள்! அவன் நாக்குழறுகிறது.
அவன் தயங்குகிறான்."சொல்கிறேன் என்று தவறுதலாக நினைத்துக் கொள்ளாதீர்கள்! அவன் நாக்குழறுகிறது.
"சொல்லுங்கள்!"
"நீங்கள் இப்படிச் செய்யலாமா?"
"எப்படிச் செய்கிறேன்?"
''அக்காவுக்குப் பிடித்தமில்லா
"என்ன செய்துவிட்டேன்?"
"இப்படி ஸ்கூட்டரில் ஊர் சுற்றலாமா?" அவரோடு ஊர் சுற்றலாமா?"
"மிஸ்டர்! நாக்கை அடக்கிப் பேச வேண்டும்! யார் ஊர் சுற்றினார்கள்?"
"என் கண்களால் பார்த்தேன் சொல்கிறேன்!"
"நீங்கள் பார்த்தால் அது நிஜமாகி வீடுமா?"
"மன்னிக்கவும்: என் பார்வையை நான் நம்புகிறேன்."
எனக்குக் கோபம் மூள்கிறது. அவனை சினத்தோடு பார்க்கிறேன். "நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன? அது என் பாடு! நீங்கள் யார் என் நிழல் போல் தொடர்வதற்கு?"
"நான் உங்களைத் தொடரவில்லை.. என் நண்பனைப் பார்த்துவிட்டுத் திரும்புகிறேன்.உங்களைச் சந்தித்தேன். அவ்வளவு தான்!"
"எல்லாம் தெரியும்! நிறுத்திக்கொள்ளுங்கள்! நீங்களும் அக்காவை அண்டிப் பிழைக்க வந்தவர்தான். நான் உங்களை விடத் தாழ்த்தவளில்லை. நீங்கள் என்னைக் கண்காணிக்க வேண்டியதில்லை."
அவன் தயங்குவது தெரிகிறது. அவன் கண்கள் சிறிது மங்குகின்றன. என்னைச் சற்று அச்சத்தோடு பார்க்கிறான்.
"நான் அண்டிப் பிழைக்க வந்தவன்தான். ஆனால் ஒன்று! எனக்கு மானம் இருக்கிறது!" அவன் படபடப்போடு பேசிவிட்டுத் தலை குனித்தவாறு போய் விடுகிறான்.
என் மனம் வெகு நேரம் கொதிக்கிறது. வீட்டை நோக்கி நடக்கிறேன்.
நினைவில் அழல் எரிகிறது. அக்காவிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவானே என்று தோன்றுகிறது. சொல்லட்டுமே, நான் இன்றைக்கே, இந்தக் கணமே இந்த வீட்டை விட்டுப் போகத் தயார்! அறைக்கு வந்த பிறகும் என் மனம் அடங்குவதில்லை. அங்கும் இங்கும் உலாவுகிறேன். "எனக்கு மானமிருக்கிறது!" என்று அவன் கூறிய சொல் என்னை அரித்து விடுகிறது.
அப்படி யென்றால் எனக்கு?
இரவாகிறது. அக்கா வீட்டுக்கு வந்தாகியிட்டது. எல்லாவற்றையும் கேட்டு விட்டு எப்போது என் அறைக்கு வருவாள் என்று காத்திருக்கிறேன். அக்கா வரவில்லை. ரங்கு அவளிடம் கூறவில்லை! மறு நாள் விடுமுறை நாள். எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள். அக்கா தன் சிநேகிதி வீட்டுக்குப் போகத் தயார் செய்து கொண்டிருக்கிருள். ரேடியோ மெதுவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ரங்கு தன் அறையை விட்டு வெளி வருவது தெரிகிறது. நேரே அக்காவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான். பிறகு அக்காள் பேச்சு கேட்கிறது.
"நான் ஊருக்குப் போகப்போகிறேன். அக்கா!"
"ஊருக்கா? அங்கே போய் என்னடா செய்யப் போறே?"
"இங்கே இருக்க மனசுக்குப் பிடிக்கலை"
"பிடிக்கலையா? உணக்கென்ன குறை? பேசாமல் இருந்திண்டிரு! மனசு எல்லாம் சரியாகப் போய் விடும்!"
அக்கா குடையை விரித்துக் கொண்டு வெளியே போகிறாள். ரங்கு திரும்பி வருகிறன். எனக்கு மனம் அடித்துக் கொள்கிறது.
எந்த நிமிடமும் என்னைப் பற்றிச் சொல்லி விடுவானோ என்று தோன்றுகிறது.
சொன்னால் சொல்லிக்கொள்ளட்டும். இங்கே யார் பயப்படப்போகிறார்கள்?
நான் அறையை விட்டு வருகிறேன். வராந்தாவைத் தாண்டி வெளி வாயில் பக்கம் போகிறேன். சற்று நேரம் நின்று தெருவைப் பார்க்கிறேன். பிறகு உள்ளே நுழையும்போது மெள்ளச் சன்னல் வழியாக அவன் அறைக்குள் பார்க்கிறேன்.
என் மனம் துணுக்குறுகிறது. உள்ளே பெட்டி படுக்கைகளைக் கட்டித் தயாராக வைத்திருக்கிறது. அவன் துண்டால் தன் முகத்தை மூடிக் கொண்டு விசித்துக் கொண்டிருக்கிறான்.
எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அறைக்குத் திரும்பி வந்து விடுகிறேன்....
மனம் ஏனே குமைகிறது. என் பேச்சு அவன் மனத்தைப் பாதிப்பானேன்? நான் என்ன சொல்லி விட்டேன்? நான் சொன்னதில் என்ன குற்றம் இருக்கிறது?
இரண்டு நாட்கள் செல்கின்றன. அன்று மாலை திரும்பிக் கொண்டிருக்கிறேன். சாலைத் திருப்பத்தை அடைந்ததும் ரங்கு முன்னால் செல்வதைக் காண்கிறேன். நான் சற்று யோசிக்கிறேன்.
இரண்டு நாட்கள் செல்கின்றன. அன்று மாலை திரும்பிக் கொண்டிருக்கிறேன். சாலைத் திருப்பத்தை அடைந்ததும் ரங்கு முன்னால் செல்வதைக் காண்கிறேன். நான் சற்று யோசிக்கிறேன்.
பிறகு விறு விறுவென்று நடந்து அவனைப் பிடித்து விடுகிறேன். என்னைக் கண்டதும் அவன் திகைக்கிறன்.
"நான் கூறியது உங்கள் மனத்தைத் துன்புறுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்! என்னால் நீங்கள் இந்த வீட்டை விட்டுப் போக வேண்டாம்!" என்கிறேன்.
அவன் விழித்தவாறு நிற்கிருன். பிறகு, "நீங்கள் ஒன்றும் காரணமில்லை. நானே இரண்டு மாதங்களாகப் போகவேண்டும் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அக்காதான் என்னைத் தடுத்து நிறுத்தியிருக்கிறள். இதை நீங்க தெரிந்துகொள்ளுங்கள்" என்றன்.
நான் அவளை ஏறிட்டுப் பார்க்கிறேன். "அன்று நான் திரும்பி வரும் போது தூறல்! பஸ் கிடைக்கவில்லை. அதனால் தான் மாமா ஸ்கூட்டரில் ஏறினேன். அவர் வண்டியை வீட்டுக்கு விடுவதை விட்டு வேறு திசை திருப்புவதைக் கண்டு தான், நான் அவரை நிறுத்திக் கீழே இறங்கி விட்டேன். இதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்..
இருவரும் வீட்டை நோக்கி மெள்ள நடக்கிறோம். அவன் கால்கள் நொண்டுவதை நான் இப்போதுதான் கவனிக்கிறேன்.
"காலில் என்ன?"
"கல் தடுக்கி விட்டது. இப்போது சீழ் கொண்டிருக்கிறது."
ரங்குவுக்கு முன்னால் நடந்துகொண் டிருந்தவள் சிறிது தூரம் சென்றதும் திரும்பிப் பார்க்கிறேன். அவன் இபோதும் தலை குனித்து கொண்டிருப்பது என் மனத்தை என்னவோ செய்கிறது.
இரவுகள் நகர்கின்றன. என் படிப்புதான் என்னைக் கவர்கிறது. இடையிடையே நினைவுகள் அப்பால் செல்கின்றன. ரங்குவின் கவிழ்ந்த முகம் எனக்குத் தெரிகிறது. அதில் கண்கள் நீரால் மங்கி நிற்பது தெரிகிறது. என் மனத்தில் இதை நினைத்ததும் இப்போது இரக்கம் சுரந்து விடுகிறது! அவனும் நம்மைப் போல் தானே? அவனுக்கும் மனம் என்று ஒன்று இருக்கத்தானே செய்கிறது?
இரவுகளில் நான் படித்து விட்டு உறங்க வெகு நாழியாகிவிடுகிறது. விளக்கை அணைத்ததும் அவன் அறையை ஒரு முறை கண்ணோட்டம் விடுகிறேன். என் மனத்தில் ஒருவித நிம்மதி நிறைகிறது.
எனக்கே வியப்பாக இருக்கிறது. முன்பு போல் மாமாவின் உருவம் என் கண் முன் தோன்றுவதில்லை. அவர் மாடி அறையில் ஒருவரிடமும் கலக்காமல் ஒதுங்கியிருப்பது போல் அவரது நினைவுகளும் என் மனத்தில் ஒதுங்கி இருக் கின்றன.
அன்று வரும்போது அவன் வராந்தாவில் நிற்கிறான். நான் சிரித்துக் கொண்டே "கால் குணமாகி விட் டதா?" என்று கேட்கிறேன். "குணமாகி விட்டது" என்று அவன் தலையசைக்கிறான். அவன் பார்வையில் மலர்ச்சியில்லை. நான் அறைக்கு வருகிறேன். . இவன் இரண்டு வார்த்தை என்னிடம் பேசக்கூடாதா என்று எனக்குத் தோன்றுகிறது. யோசிக்க யோசிக்க அது ஒரு குறையாக எனக்குப் படுகிறது. அந்தக் குறை என் மனத்துள் எழுப்பும் சூன்யம் பெரிதாகத்தெரிகிறது. ஒரு வேளை என்னை அவமானப்படுத்துகிறானோ? நெஞ்சம் குமுறுகிறது. அழுகையும் வந்து விடுகிறது. முடிவு காணாமல் விக்கி அழுகிறேன். இடையிடையே இவன் உருவம் கண் முன் ஏன் வருகிறது என்று வினவிக் கொள்கிறேன். முன்பு அந்த உருவத்தையே எவ்வளவு வெறுத்தேன். அவன் உருவத்தில் என்ன கவர்ச்சி வந்து விட்டது? எனக்கே புரியவில்லை. நினைக்க நினைக்க மேலும் அழுகைதான் கூடுகிறது.
என் பரீட்சைகள் முடிந்து விட்டன. அன்று இன்ஸ்டிட்டியூட்டில் மாலையில் ஒரு விடையனுப்பு விழா ஏற்பாடு செய்திருக்கிறர்கள்.
மாலையில்தான் விழா! மாலை நெருங்க நெருங்க என் தவிப்பு அதிகமாகிறது. ரங்குவையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மனம் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. புறப்படுமுன் அவன் அறைப் பக்கம் மெள்ளச் செல்கிறேன். சன்னல் வழியாக எட்டிப் பார்க்கிறேன். அவன் புத்தகத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டதும் இலேசாகக் கனைக்கிறேன். அவன் நிமிர்கிறான். பிறகு சன்னலருகே வருகிறான்.
"ஒன்றுமில்லை. எங்கள் இன்ஸ்டிட்டியூட்டில் விடையனுப்பு விழா நடக் கிறது. நீங்களும் வருகிறீர்களா?"
"எப்போது?"
"இப்போதுதான். வருகிறீர்களா?"
"மன்னிக்கவும்! உங்களோடு நான் வருவதற்கில்லை"
என் மனத்தில் அடி விழுகிறது. நான் நகர்ந்து தெரு வாயிற் பக்கம் வருகிறேன். கால்கள் தரையின் பாவுவ்தஜில்லை. பூமி நகர்ந்து போனாற்போல தோன்றுகிறது. கண்களில் அழுகை பீறிட்டு வருகிறது. "நான் என்ன அவ்வளவு கேவலமா? என்னுடன் வர அவருக்கு ஏன் பிடிக்கவில்லை"
கண்களைத் துடைத்துக் கொள்கிறேன். மெள்ள நடந்து தெருவைக் கடக்கிறேன். பஸ் ஸ்டாண்டு வரையில் வந்து விட்டேன். இப்போது அழுகை குமுறி வருகிறது. எங்கேயாவது போய் நன்கு அழ வேண்டும் போல் தோன்றுகிறது. விழாவில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று தெரிந்து விடுகிறது. வீடு திரும்பவும் விருப்பமில்லை. எங்கே போவது? பஸ் ஸ்டாண்டிலேயே சற்று விசிக்கிறேன்.
நெஞ்சின் விக்கல்களை அடக்கிக் கொள் கிறேன். சுடற்கரை பஸ் தென்பட்டதும் உடன் ஏறி விடுகிறேன்.
கடற்கரையை அடையும்போது, பொழுது சாய்ந்திருக்கிறது. மணற்கரையில் கூட்டத்தை விட்டுத் தனித்து நடக் கிறேன். கடல் ஓரமாய்க் கீழே உட்கார்ந்ததும் 'பக்'கென்று அழுகை பொங்கி வருகிறது. அழுது தீர்க்கிறேன்.
மீண்டும் தலை நிமிரும்போது இருட்டி யிருக்கிறது. நினைவில் இன்னும் வேதனை கொந்தளிக்கிறது. அழுதழுது கண்கள் வறண்டு விட்டன. மனத்தில் ஏதோ ஒரு மானம். இவன் இப்படிச் கூறினதாலா நாம் இப்படித் துக்கப்பட வேண்டும்? சற்று அலட்சியத்தோடு அப்படி நினைக்கிறேனே ஒழிய மறுகணம் அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்ற துக்கமே மீண்டும் வருகிறது.
கைகளைக் கழுவி முகத்தைத் துடைத் துக் கொள்வதற்காகத் தண்ணீர்ப்பக்கம் போகிறேன். அலைகள் என் கால்களைக் கழுவுகின்றன. மேலும் இரண்டடிகள் உள்ளே நடக்கிறேன். சட்டென்று என் கைகளை யாரோ பிடிக்கிறார்கள். திரும்பிப் பார்க்கிறேன். என் உள்ளம் பொங்கி எழுகிறது. அங்கே அவர்தான் நின்று கொண்டிருக்கிறார்! ரங்குநான்.
"இதென்ன பைத்தியம்? என்ள செய்கை செய்யத் துணிகிறீர்கள்? உயிரை விட்டு விடுவதுதான் உங்களுக்கு ஒரு வழியாகத் தென்பட்டதா?"
நான் திகைக்கிறேன். "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?".
"நாள் உங்களை அப்படி என்ன சொல்லி விட்டேன்? நீங்கள் ஏன் உயிர் விடத் துணிகிறீர்கள்?"
எனக்கு விஷயம் புரிந்து விட்டது. அலைகள் பக்கம் செல்வதை அவர் நான் உயிர் துறக்கப் போவதாக எண்ணிவிட் டார். என்னைக் காப்பாற்றவே கையைப் பிடித்து இழுத்திருக்கிறார்.
இவருக்கு என் மீது எவ்வளவு கரிசனம்?
நான் மணலுக்குத் திரும்புகிறேன். என்னாலும் தாங்க முடியலில்லை, சட் டென்று விசிக்க ஆரம்பித்து விடுகிறேன். அவர் என் அருகில் அமர்கிறார். கண்களைத் துடைத்து விடுகிறர். என் அழுகை அடங்க நேரம் பிடிக்கிறது.
"சாயங்காலம் நீங்கள் எவ்வளவு வெறுப்போடு பதில் கூறினீர்கள்?"
"அதற்குத்தான் பிராயச்சித்தம் செய்து விட்டேனே. நீ ஒரு மாதிரி
முகத்தை வைத்துக் கொண்டு போனதைப் பார்த்ததும் பயந்து விட்டேன். பிறர் வீட்டில் அண்டி வாழ்பவர்களுக்கு சரிதான்! எனக்கும் சரிதான்! அந்த ரோசத்தில் நீ என்ன செய்து கொள்வாயோ என்று பயந்து பஸ் ஸ்டாண் டுக்கு வந்தேன். நீ கடற்கரை பஸ்ஸில் ஏறினது கண்டதும் எனக்கு உதறலெடுத்து விட்டது. உடனே மறு பஸ் பிடித்து இங்கே வந்து தேடினேன். நல்ல வேளை"
முகத்தை வைத்துக் கொண்டு போனதைப் பார்த்ததும் பயந்து விட்டேன். பிறர் வீட்டில் அண்டி வாழ்பவர்களுக்கு சரிதான்! எனக்கும் சரிதான்! அந்த ரோசத்தில் நீ என்ன செய்து கொள்வாயோ என்று பயந்து பஸ் ஸ்டாண் டுக்கு வந்தேன். நீ கடற்கரை பஸ்ஸில் ஏறினது கண்டதும் எனக்கு உதறலெடுத்து விட்டது. உடனே மறு பஸ் பிடித்து இங்கே வந்து தேடினேன். நல்ல வேளை"
...
எனக்குச் சிரிப்பு வருகிறது. அப்படியே மௌனமாக அமர்த்திருக்கிறோம்.
எனக்குச் சிரிப்பு வருகிறது. அப்படியே மௌனமாக அமர்த்திருக்கிறோம்.
நட்சத்திரங்கள் பொரிந்திருக்கின்றன. என் கையில் அவர் பற்றிய இடம் குளுமையாய் இருக்கிறது. முன்பு ஒரு தரம் மாமா பற்றியதும் நினைவு வருகிறது. அதற்கு இதற்கும் எவ்வளவு வித்தியாசம்? மாமா என் மகிழ்ச்சிக்காக வேண்டி, வாங்கிக் கொடுத்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆனால் இன்று அதைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சி, இதோ இவர் சாதாரணமாகத் திரும்பிப் பார்க்கும் ஒரு சிறு பார்வையிலேயே எப்படி ஏற்பட்டு விடுகிறது?
நினைக்கும்போதே என்னை உலுக்கி யெடுக்கிறது. மாமாவோடு பழகுவதில் எத்துணே தூரம் விகல்பத்தின் ஓரத்தில் இருந்தேன் என்பது இப்போது பளிச்சிட்டு விடுகிறது. ஓர் அடி அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ எடுத்து வைத்திருந்தால் . உடம்பு சிலிர்த்து விடுகிறது. எனக்கு ஏன் இந்த உணர்வு அப்போது இல்லாமற் போய் விட்டது?
இரவு நேரம் கழித்து விட்டுக்குத் திரும்புகிறோம். அக்கா எங்களை ஆச்சரியத்தோடு பார்க்கிறாள்.
இவர்களுடைய விழாவுக்குப் போய்விட்டு வருகிறோம்!" என்கிறார் ரங்கு.
"நீ மட்டுந்தான் அவள் விழாவில் கலந்துகொள்ள வேணுமா? எங்களைக் கூப்பிட்டிருக்கக் கூடாதா? உனக்கு மட்டுத்தான் அவள் மீது அக்கறையா??"
நான் அக்காவைப் பார்க்கிறேன். எனக்கு மெய் சிலிர்க்கிறது. அக்காவின் கைகளைப் பிடித்துக் கொள்கிறேன். அப்படியே அழுது விடுகிறேன்.
இடை யிடையே, "எனக்கு இப்போது எல்லாம் புரிகிறதக்கா! எல்லாம் புரிகிறது!" என்கிறேன்.
அக்கா என் தலையை மெள்ள நிமிர்த்துகிறாள்...... "அக்கா! என்னே மன்னித்து விடு" என்று குமுறுகிறேன்.
"இதென்ன அசடு, இவ்வளவு அழுகை! எதற்கு மன்னிப்பு? இயற்கையின் கபாவத்தைப் போய்க் குற்றம் கண்டு பிடிக்க முடியுமா? இளங் கொடிகள் படர்கின்றன. படர்வது அவற்றின் சுபாவம். நல்ல கொம்பு கிடைத்தாலும் சரி. கரையான் அரித்த கொம்பு கிடைத் தாலும் சரி; அவை படர்ந்து விடுகின்றன. அவை படர்வதற்கு நல்ல ஆதாரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பது சுற்றியுள்ளவர்களின் கடமை! அவ்வளவுதான்.. டேய், ரங்கா! நீ எங்கே போய் விட்டாய்? இந்தா இங்கே வா... உன்னைத்தான் ஆதாரமாய் நினைத்திருக்கிறேன்."
நான் அக்காவை நிமிர்ந்து பார்க் கிறேன். இப்போது அக்காவின் பார்வை எனக்கு ரொம்ப ரொம்ப.....
- 1965 -கல்கி -



ஆபாசமாகப் போய்விடுமோ என நினைத்துக்கொண்டே முழுக் கதையும் படித்தேன்.
பதிலளிநீக்குசிறுகதையா நெடுங்கதையா என்ற குழப்பம்.
காலத்துக்கு ஏற்றபடி (1965) நல்லாவே எழுதியிருக்கார்.
வாங்க நெல்லை... அப்போதெல்லாம் சிறுகதை குறுங்கதையா இருந்திருக்கு. கல்கியில் எட்டு பக்கங்கள்.
நீக்குஇவ்வளவு வளர்ந்த பெண்ணுக்கு என்னதான் ஹார்மோன்கள் வேலை என்றாலும் மாமா வழியும்போது அவ்வளவு விவரம் தெரியாமலா இருக்கும்! அதுவே ரங்கன் விஷயத்தில் சீக்கிரம் விவரம் வந்து விடுகிறது.
ஆமாம், ஸ்ரீவேணுகோபாலன் என்னும் பெயரில் இப்படித் தான் எழுதுவார். இவர் எழுதின "நீ, நான், நிலா" அப்போதைய காலகட்டத்தில் ரொம்பவே விரும்பிப்படிச்ச ஒன்று.
நீக்குவாங்க கீதா அக்கா... நீ நான் நிலா நானும் படிச்சிருக்கேன், பிடிக்கும். ஆனா அது புஷ்பா தங்கதுரையா எழுதினது.
நீக்குகடைசி வரியில் நாயகன் 'நீ நான் நிலா' என்பான். நாயகி 'தேன் பால் பலா' என்பாள்.
இவ்வளவு வளர்ந்த பெண்ணுக்கு என்னதான் ஹார்மோன்கள் வேலை என்றாலும் மாமா வழியும்போது அவ்வளவு விவரம் தெரியாமலா இருக்கும்! அதுவே ரங்கன் விஷயத்தில் சீக்கிரம் விவரம் வந்து விடுகிறது.//
நீக்குஎனக்கும் தோன்றியது....சில இடங்கள் பொருந்தலையோன்னு தோன்றியது..
கீதா
காலை வணக்கம், வாத்யாரே!
பதிலளிநீக்குஉங்களுக்கே ஏற்கனவே தெரிந்திருக்கும். ஒரே மாவை இட்லியாவும் வார்க்கலாம்; தோசையாவும் வார்க்கலாம்ங்கிற மாதிரி, ஒரே ஆள்தான். டீசெண்டா எழுதும்போது பேரு ஸ்ரீவேணுகோபாலன்; இண்டீசெண்டா எழுதும்போது பேரு புஷ்பா தங்கதுரை :-)
வாங்க TVM... அது எல்லோரும் அறிந்ததுதானே.. அவர் ஸ்ரீவேணுகோபாலன் என்கிற பெயரில் திருவரங்கன் உலா மட்டும் தான் எழுதி இருக்கார்னு நினைச்சேன்.
நீக்குஇவர் மதுரா விஜயம் இன்னும் ஒரு சில நாவல்களை ஶ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் எழுதியிருக்கிறார். இவர் நான் வளர்ந்த கிராமத்துக்கார்ர் (கீழந்த்தம், திருநெல்வேலி). கே கே நகரில் இருக்கும்போது என் அப்பா இவரைச் சந்தித்தார். என்னிடம் சொன்னபோது என்னையும் கூட்டிச் சென்றிருக்கலாமே என்று சொல்லவில்லை, அப்போது நான் புஷ்பா தங்கதுரை நாவல்கள் கதைகள் படித்திருக்கிறேன் என்று அப்பாவிடம் தைரியமாகச் சொல்ல முடியாது இல்லையா?
நீக்குஹா.. ஹா.. ஹா... பொதுவாக இவர் எழுத்துகளை நான் படித்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கலாமே... அவர் பிரம்மச்சாரி.
நீக்குஆமாம், திருமணம் ஆகாதவர்களுக்கு ஏன் ப்ரம்மம்ச்சாரி என்று பெயர் வந்தது?
மனதில் தூய்மையுடன் ப்ரம்மத்துடன் ஒன்றிணைந்து இருப்பதால் பிரம்மசாரி. திருமணம் ஆகிவிட்டால் எல்லா தகிடுதத்தங்களும் வந்துவிடுகிறதோ? கீதா சாம்பசிவம் மேடம் விளக்கினால் நல்லது.
நீக்குபிரமசாரிக்கு அர்த்தமே வேறே. பெண்கள் ச்சம்பந்தமே இல்லாதவங்க மட்டுமே பிரமசாரி. கல்யாணம் செய்து கொள்ளாதவர்களெல்லாம் பிரமசாரினால் இந்த ஸ்ரீவேணுகோபாலனும் பிரமசாரியே! பீஷ்மர், அனுமன் போன்றவர்கள் நைஷ்டிக பிரமசாரிகள். இது போல் நிறைய உதாரணங்கள் உள்ளன.
நீக்குஅப்போ நான் பேச்சிலர்!
நீக்குமனதில் தூய்மையுடன் ப்ரம்மத்துடன் ஒன்றிணைந்து இருப்பதால் பிரம்மசாரி. //
நீக்குநெல்லை இப்படி இருப்பதன் அர்த்தமே வேற. இது மிக உயர்ந்த நிலை உன்னதமான நிலை..... அதுக்கு பிரமசாரி எப்படி சொல்ல முடியும் நெவர்!!!!இது சரிப்படலையே...பிரமசாரின்னு கல்யாண்ம பண்ணிக்காம தகிடுதத்த வேலைகள் செய்யறவங்களை என்ன சொல்றது?
மனசால கெட்டாலும் சொல்ல முடியாதுல்லையா?
கீதா
என்னுடைய நண்பர் ஒருவர் இன்னொரு நண்பரைப் பற்றிச் சொல்லும்போது சொல்வார்... "அவர் கல்யாணமே பண்ணிக்கலை.. பேச்சிலர். ஆனால் பிரம்மச்சாரி இல்லை"
நீக்கு//இப்படி இருப்பதன் அர்த்தமே வேற. // இல்லை. பழைய காலத்தில் குருகுலத்தில் வாசம் முடிந்து வெளியேறும்வரை பிரம்மசாரிகள். பிறகு குரு, தக்க பெண்ணைத் திருமணம் செய்துகொள் என்று சொல்லி அனுப்பிவிடுவார். குருகுலத்தில் வேத அத்யயனம் மாத்திரம் செய்துகொண்டு இருப்பதால், பிரம்மத்தோடு ஒன்றியிருக்கும் பருவம் அது.
நீக்கு//மனசால கெட்டாலும் சொல்ல முடியாதுல்லையா?// இதை யாரு கண்டுபிடிக்கமுடியும்? கன்னிகாதானம் என்று சொல்கிறோம். அங்கும் இந்தக் கேள்வி எழலாம் இல்லையா?
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎதையாவது எழுதி பார்க்கும் முன் அழித்து விட்டால், இருக்கும் கருத்துகளைவிட, இல்லாமல் அழிக்கப்பட்ட அந்த ஒரு கருத்து என்னவாக இருக்கும் என்று யோசனையில் ஆழ்வது மனித பலவீனம்!
நீக்குநானும், நாரோல் நாச்சியார், நெல்லைத்தமிழன் மாதிரி, 'மெட் ராசு தம்ளர் ' ஆகலாமான்னு ஒரு யோசனை ;-) ;-)
பதிலளிநீக்குஅபுரி வாத்யாரே... விம் போட்டு விளக்கவும்.
நீக்கு@ஸ்ரீராம்: இந்தக் கதையின் நாயகி மாதிரி அவ்ளோ அப்பாவியா நீங்க நெல்லைத் தமிழன் என்பதை மெட்ராஸ் பாஷையில் எழுதுங்க மெட்ராசு தம்ளர்.
நீக்குஅச்சச்சோ... நான் அவர் மெட்றாஸ் என்று வைத்து தன் புனைப்பெயரை வைத்துக் கொள்ளப் போகிறார் என்று நினைத்தேன்! நீங்க நீங்கதான், நான் நான்தான்!
நீக்குஹாஹாஹா திவாமா என்னை நாரோயில் நாச்சியாராகவே ஆக்கிட்டார்!!!
நீக்குகீதா
இன்று சைகுண்ட ஏகாதசித் திரு நாள்.
பதிலளிநீக்குபின்னூட்டங்களில் கவனம் கொள்ளவும்.
வாங்க ஜீவி ஸார்.. அசைவம் எப்போதுமே இருக்காதே... ஹிஹிஹி..
நீக்குஅது தெரிந்துதான் நேற்றே வெங்காயத்தை ஶ்ரீராம் உபயோகப்படுத்திவிட்டாரே
நீக்குஹா.. ஹா.. ஹா... அதுவும் கூட சென்ற வாரம் செய்ததன் பகிர்வுதானே..
நீக்கு(இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்போம்...!)
ஸ்ரீராம் இனி டேட் போட்டு போடுங்க அப்பதான் நெல்லை பிடிச்சுக்கிட மாட்டார்!
நீக்குஒரு வேளை நேத்து வைகுஏ வாக இருந்திருந்தால்?
கீதா
அதுதான் இல்லையே... மிஸ்டர் எக்ஸ் மாதிரி பதில் சொல்லிடுவோம்!
நீக்குஅந்த காலத்து சினிமா போன்று மெரினாவில், மஹாபலிபுரத்தில் என்று இரண்டு டூயட் சீன், காதல் வாஹனம் ஸ்கூட்டர் (ஜெமினி lambretta ஸ்கூட்டரில் வருவதை கற்பனை செய்யவும்) என்று சினிமாத்தனமாக சில பல சீன்களை புகுத்தி கதையை கல்கி பக்கத்தில் எட்டாக்கி எழுதி விட்டார் ஆசிரியர். காலத்திற்கேற்ற கதை என்பதை தவிர சிறப்பு ஒன்றும் இல்லை.
பதிலளிநீக்குசரியாச் சொன்னீங்க... 'அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் எல்லாம்...' என்று ஆரம்பிப்பவர்கள் இதை கவனிக்கலாம். மேலும் இவரும் புகழ்பெற்ற எழுத்தாளர். இப்போது யோசித்தால் ரங்கன் - சீதா காதலை முதன்மைப்படுத்தி கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
நீக்குவாங்க JKC ஸார்...
எதையும் சொல்வது எளிது. எழுதிப் பார்த்தால் தான் எழுத்தின் சாகசம் புரிந்து கதைகள் எழுதுவது வசப்படும் என்று நான் சொன்னால் அது தவறு என்பீர்களா, ஜெயக்குமார் ஸார்?
நீக்குஜீவி அய்யா சொல்வது சரி என்ற படியால் தான் நான் கதை எழுதப்புகவில்லை. இக்கதையின் சுருக்கத்தை ஸ்ரீ ராம் அவர்களுக்கு இ-மெயிலில் அனுப்பி இருந்தேன். அதை கருத்தாக வெளியிட முடியவில்லை. Too big.
நீக்குJayakumar
ஸ்ரீராமுக்கு என்று சொன்னாலே போதும் JKC ஸார்... இந்தக் கதையின் சுருக்கத்தை எனக்கு அனுப்பி இருந்தீர்களா? எப்போது? எனக்கு நினைவேயில்லையே...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி
இன்று நாராயணரின் அருள் அனைவருக்கும் கிடைத்திட பிரார்த்தித்துக் கொள்கிறேன். 🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஸ்ரீரங்கத்தில் அமர்க்களப்படும். மனமெல்லாம் அங்கே தான் இருக்கு. கோயிலுக்கெல்லாம் போயிருக்கப் போவதில்லை. என்றாலும் நேரலையில் நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கலாம். ஆனால் இப்போத் தான் நாலு வருஷங்களாகத் தொலைக்காட்சிப் பெட்டியே இல்லையே! அது மறந்துட்டேன். :)
நீக்குஇப்போ அங்கே தொலைக்காட்சிப் பெட்டி இருக்கோ...? இப்போ அதை பெட்டி என்று சொல்ல முடியாது! பேப்பர் என்றுதான் சொல்லணும்!
நீக்குNo No. No TV
நீக்குகொடி போன்று இருப்பாள். நடந்து வருவதிலேயே ஒரு களை, கம்பீரம் ! ஆங்கிலம் பேசினால் கடல் மடை திறந்ததுபோல் இருக்கும். இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். அவளுக்கு முப்பத்தைந்து வயதாகி விட்டது என்று ஒருவரும் சொல்லவே மாட்டார்கள். அவள் சற்றுப் பருமன். அவ்வளவுதான்!//
பதிலளிநீக்குஸ்ரீராம், கொடி போல் இருப்பாள்....அப்புறம் சற்றுப் பருமன்னு வருதே....
கீதா
இந்த முரண்பாட்டை நானும் கவனிச்சுக் கேட்க இருந்தேன். நீங்க கேட்டுட்டீங்க.
நீக்குஅச்சரப்பாக்கம் ருஷ்யேந்திரமணிக்கும் குஷ்பூ, கல்பனாவுக்கும் வித்யாசம் இருக்கில்லையா...
நீக்குகொடி என்பது பூசணிக்கொடி. மொத்தத்தில் சாவித்திரி போல.
நீக்குஅல்லது தேவிகா போல!
நீக்குகீதாக்கா சரியா பாயிண்டைப் புரிஞ்சுகிட்டாங்க...
நீக்குஸ்ரீராமும், ஜெ கே அண்ணாவும் பேசியதை வாசிக்கறப்ப சிரித்துவிட்டேன்!!!
அது சரி...நான் கேட்டது முதலில் கொடி போலன்னு சொல்லிட்டு அப்புறம் சற்று பருமனாகன்னு சொல்லியிருக்காரே...ஆசிரியரா...இல்லை நீங்க குரல் கொடுக்கும் போது கூகுள் சரியா புரிஞ்சுக்கலையா....இல்லை ஸ்கானருக்குப் புரியலையோ என்னவோ..
கீதா
தப்பு என்னுது இல்ல... ஒரிஜினலே அப்படிதான். வேறு ஒன்று எல்லோரும் கேட்பாங்கன்னு ஆதாரம் எடுத்து வச்சிருந்தேன்...
நீக்குகொடி போல இருப்பாள் என்ற முரண் எனக்குக் காலையிலேயே தோன்றியது. எழுதினால் கீர ஏதேனும் சொல்வாரோ என்று எழுதவில்லை. ஒருவேளை அரசியல் கட்சிக் கொடி சைஸ் என்று சொல்லவந்திருப்பாரோ? நாமதான் செடி/கொடி என்று நினைத்துவிட்டோமோ
நீக்குநடுவில் சிலபக்கங்களைக் காணோம் போல வரிகள்!!!!! பழைய பொக்கிஷம் இல்லையா....இப்படி எடுத்துப் போடுவதே சிரமம், ஸ்ரீராம் பொறுமையா செஞ்சுருக்கீங்க...
பதிலளிநீக்குகீதா
__/\__
நீக்குஎப்படியாவது குடும்பத்திலிருந்து என்னைக் கழற்றிவிட்டால் போதுமென்றிருக்கிறார்கள். //
பதிலளிநீக்குபாருங்க அந்தக் காலத்துல...சொற்ப வருமானத்துல கரை சேர்க்க முடியாத நிலையில் இத்தனை குழந்தைகள். இப்படிக் கழற்றிவிட மனசு பாருங்க....பாவம்...
கீதா
கிருஷின் நிலை இங்கும்!
நீக்குஹாஹாஹா.... பிடிச்சிட்டீங்க...எனக்கும் தோன்றியது! இங்கு சொல்ல...
நீக்குகீதா
ஆஹா கதை 1965 ல் ..அழகாக எழுதப்பட்ட கதை. அந்த சீதாக்குட்டி வயதிற்குரிய அந்த மனசைச் சொல்லியிருக்கும் விதம்...65 வருடங்களிலான மொழி......நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குகதையில் அந்த மாமா கொஞ்சம் இப்படியும் அப்படியும் பண்ணுவாரோ என்று தோன்றியது...வந்தார் எல்லைக்கோட்டில் ஒரு கால் அந்தப்பக்கம் இந்தப்பக்கமாக நின்றுவிட்டார்....நல்ல காலம்.
கீதா
சீதா சுதாரித்து விட்டாள் - ரங்கனின் உதவியோடு... அதுதான் காரணம். அவராக நிற்கவில்லை.
நீக்குஇன்று வைகுண்ட ஏகாதசி ன்றதுனால புதவின் கதைகளில் வேணுகோபாலன் கதையாக சைவமாக விரதமாகப் போட்டிருக்கீங்களோ? ஸ்ரீராம் ஹிஹிஹி
பதிலளிநீக்குஒழுங்கான கதைகள் என்றால் வேணுகோபாலன்...அப்படியும் இப்படியும்னா புஷ்பாதங்கதுரை...உங்களுக்கும் தெரிஞ்சதுதான்.
கீதா
சைவக்கதைகள்!
நீக்குகதைக்கான படங்களில் முதல் படம் கொஞ்சம் அமலா மாதிரி இருக்கு இல்ல? இரண்டாவது படம் சாந்தி கிருஷ்ணா கொஞ்சம் த்ரிஷா கொஞ்சம்...
பதிலளிநீக்குமுதல் படம் கொஞ்சம் அமலா போல கொஞ்சம்...இன்னொரு நடிகையும் போல இருக்கு சட்டென்று சொல்லத் தெரியவில்லை ஆனால் பழைய படங்கள் நடிகை
பதிலளிநீக்குஇரண்டாவது படம் கௌதமி போலத் தெரியுது எனக்கு, ஸ்ரீராம்.
மூன்றாவது படம் கொன்ஜம் மேனகாவின் நீட்ட மூகம் போல!!!!
கீதா
ஆமாம். டைப்ப மறந்து விட்டேன். கொஞ்சம் கௌதமியும்....
நீக்குஓவியர் ஜெ..விடம் படம் வரையச் சொல்லியிருந்தால், நிச்சயம் குமுதத்தில் இந்தக் கதை பிரசுரம் ஆகியிருக்கும். ஹா ஹா ஹா.
நீக்கு