திங்கள், 26 ஜூலை, 2010

இட்லியும் தோசையும்

சுடச் சுட சில கேள்விகள்!

இட்லியும் தோசையும் சற்றேறக் குறைய ஒரே கலவையால், ஒரு கரண்டி மாவு கொண்டு தயாரிக்கப்படுபவை. ஆனால், ஹோட்டல்களில், இட்லியை விட தோசை விலை அதிகம். ஏன்?


சீரியஸ் கேள்வி அல்ல. தமாஷான பதில்களும் வரவேற்கப்படுகின்றன.


பசியோடு இருக்கும் உங்களிடம், மேலும் ஒரு கேள்வி, இட்லிக்கு மற்றும் தோசைக்கு, என்ன சைட் டிஷ் உங்களுடைய தெரிவு என்பதையும் பதிந்து, படிப்பவர் மனதில் ஆசை ஏற்படுத்துங்கள். 



41 கருத்துகள்:

  1. இட்லியின் பரப்பளவை விட தோசையின் பரப்பளவு அதிகம்.

    சைட் டிஷ் சாம்பார், மிளகாய் பொடி டெட்லி காம்பினேஷன்.

    பதிலளிநீக்கு
  2. இட்லி சின்னது, தோசை பெருசு ..
    இட்லி அண்ட் தோசைக்கு எனது தேர்வு நல்ல காரமான தேங்காய் சட்னி .. இட்லிக்கு இட்லி மிளகாய் பொடியும் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  3. இட்லியி விட தோசைக்கு எரிபொருள் தேவை அதிகம். 16 இட்லிக்களை அவிக்கும் நேரத்தில் 5 அல்லது 6 தோசைதான் தயாரிக்க முடியும்.

    தோசை தயார் செய்ய, எண்ணெயும் தேவைப் படுகிறது.

    எனவே, இட்லியை விட தோசைக்கு Production Cost அதிகம்.

    இட்லிக்கு சாம்பார், சட்னியும் தோசைக்கு மிளகாய்ப் பொடியும் என்னுடைய தெரிவு.

    பதிலளிநீக்கு
  4. தோசைய ரெண்டுபக்கமும் சுடுறோம்ல... :) 2 :))

    ***************************

    பதிலளிநீக்கு
  5. இட்லிய ரெண்டா-(ஜோடியா) வாங்குறதால, consession தர்றாங்களோ ?

    பதிலளிநீக்கு
  6. பின்னோக்கி சார் - பரப்பளவு காரணம் என்றால், மலபார் ஆடை தோசையைவிட விலை குறைவாக இருக்கவேண்டுமே (சும்மா - வாதத்தைத் தொடரத் தான் ...!)

    எல் கே சார், இட்லி சின்னது, தோசை பெருசு. இல்லை என்று தோன்றுகிறது. By weight or volume both are same.

    பெ சொ வி சார், நான் சில கல்யாண மண்டப சமையல் அறைகளில் பார்த்திருக்கிறேன். பெரிய தோசைக்கல், ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் பல தோசைகள் தயாரிப்பார்கள். எனினும், நீங்கள் சொன்னமாதிரி, தோசைக்கு தயாரிப்பு செலவு அதிகம்தான்.

    ப்ரியமுடன் வசந்த் சார், அப்படிப் பார்த்தால், இட்லியை எல்லாப் பக்கங்களிலும் நீராவியால் சுடுகிறோமே !!

    மாதவன் சார். அப்போ செட் தோசைக்கும் concession உண்டா?

    பதிலளிநீக்கு
  7. தோசைக்கு "தயாரிப்பு செலவு " என்பது இட்லியைவிட அதிகம்.
    மூன்று தோசைகள் தயாரிக்கும் அதே நேரத்தில் குறைந்தது சுமார்
    20 (வீட்டு சைஸ் இட்லிகள்) தயார் செய்துவிடலாம்.

    இட்லிக்கு :
    1 மிளகாய் போடி + நல்ல எண்ணெய்
    2 வெங்காயம் தக்காளி சட்னி.
    3 சாம்பார்.
    4 கெட்டித்தயிர்

    தோசைக்கு :
    1 தேங்காய் சட்னி,
    2 சாம்பார்.
    3 பொதினா சட்னி.

    அதெல்லாம் சரி,

    மாலையில் காலேஜ் முடிந்து வீட்டுக்கு வந்து,காலையில் செய்த மீதமுள்ள இட்லிக்கு, மதியம் வைத்த சுண்டைக்காய் குழம்பில் நல்லஎண்ணையை விட்டு தின்றுவிட்டு, அம்மாதரும் சூடான ஒரு தம்ளர் பில்டர் காபியை குடித்துவிட்டு ......ஆஹா.....

    பதிலளிநீக்கு
  8. கக்கு - மாணிக்கம், சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. இவ்வளவு நாளா இல்லாம்ம, இப்ப ஏன் இப்படி ஒரு சந்தேக கேள்வி

    பதிலளிநீக்கு
  10. இட்லி...இட்லி...
    தோசை..தோசை...(யோசிக்கிறேன்)

    எனக்குத் தோசை+மீன் குழம்பு (அசைவம்)
    தோசை + பொரிச்ச கத்தரிக்கா இல்லாட்டி வெண்டைக்காய் குழம்பு(சைவம்)பிடிக்கும்.

    இட்லிக்கு சாம்பார்,தேங்காய் சட்னிதான்.

    பதிலளிநீக்கு
  11. காலங்காத்தால என்னை போல வற ரொட்டி சாண்ட்விச் சாப்பிடுற பாவப்பட்ட ஜீவன்கள்கிட்ட இப்படி எல்லாம் கேட்டு வெறுபேத்துரீங்களே சார்.... ஹும்... சரி இருந்தாலும் சொல்றேன்...

    இட்லி with வெங்காய சாம்பார், கார சட்னி & தேங்காய் சட்னி

    தோசை with அரைச்சிவிட்ட கார குழம்பு, தக்காளி சட்னி & தேங்காய் சட்னி
    (பசி நேரத்துல...ஹும்... )

    ஓ... விலை பத்தி கேட்டீங்கல்ல...
    அது வந்து சார்... இட்லி ஒரே ஈடுல முப்பது இட்லி கூட செய்யலாம்... தோசை ஒண்ணு ஒண்ணா தானே செய்யணும்... So labour cost கூட... அதான் விலையும் கூட...

    அதோட இட்லி பெரும்பாலும் சிம்பிள் food லிஸ்ட்ல வருது...(எனக்கு இல்ல) தோசை ஸ்பெஷல் food லிஸ்ட்...அதான் விலை அதிகம்
    (ஓவரா விளக்கம் சொல்லிட்டனோ... ஹும்... என் கஷ்டம் எனக்கு...)

    பதிலளிநீக்கு
  12. // அப்பாவி தங்கமணி said...

    .........
    அதோட இட்லி பெரும்பாலும் சிம்பிள் food லிஸ்ட்ல வருது...(எனக்கு இல்ல) தோசை ஸ்பெஷல் food லிஸ்ட்...அதான் விலை அதிகம் //
    'எனக்கு இல்ல' என்பதை ரசித்தோம். அ த இட்லியை பற்றி அநன்யா மற்றும் பலருடைய பதிவுகளில் படித்ததுதான் காரணம்!

    பதிலளிநீக்கு
  13. தமிழ் உதயம். நாங்க ரொம்ப நாளா யோசனை செய்துகொண்டே இருந்தோம். இதை வாசகர்களிடம் கேட்பதா வேண்டாமா என்று. கடைசியில் மனதை (அ தங்கமணி இட்லி போல) கல்லாக்கிக்கொண்டு கேட்டுவிட்டோம்!

    பதிலளிநீக்கு
  14. ஹேமா - சுவையான தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. குரோம்பேட்டைக் குறும்பன்26 ஜூலை, 2010 அன்று PM 9:03

    தோசையை ஹோட்டல்களில் ஏன் பாய் போல சுருட்டி கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று நான் அடிக்கடி யோசனை செய்தது உண்டு. பல ஹோட்டல்களில் என்ன செய்கிறார்கள் என்றால், நீள் வட்ட (Elliptical) வடிவத்தில் தோசையை செய்து, அதை அந்த நீள் வட்டத்தின் பெரு அச்சு (Major axis) வாட்டில் சுருட்டி, அது ஏதோ பெரிய தோசை போன்று பாவலா காட்டுகிறார்கள். உங்களிடம் சுருட்டப்பட்ட தோசை வந்தவுடன், அதைப் பிரித்து மேஜர் ஆக்சிஸ் & மைனர் ஆக்சிஸ் அளந்து பாருங்கள். அது முறையே 5:3 என்ற விகிதத்தில் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  16. அ.த , இட்லியை பற்றி நீ பேச வேண்டாம்

    பதிலளிநீக்கு
  17. இட்லியவிட தோசை விலை அதிகம் ஏன்?

    குண்டா குல்லமா இருக்கறதவிட நல்ல சிலிம்மா,கொஞ்ச உயரமா, செவ செவன்னு இருக்கிறததான எல்லார்த்துக்கும் பிடிக்கும். (இட்லி, தோசயதாங்க சொல்றேன்). அதனால விலை அதிகமோ என்னமோ...

    இட்லிக்கு சிக்கன் குருமா

    தோசைக்கு சிக்கன் குருமா, தக்காளி சட்னி

    பதிலளிநீக்கு
  18. //LK said... அ.த , இட்லியை பற்றி நீ பேச வேண்டாம் //

    இட்லிய பத்தி பேச என்னை விட ஒரு பொருத்தமான ஆளை நீ காட்டு பாப்போம்... (ஹி ஹி ஹி)

    பதிலளிநீக்கு
  19. வரவர உங்களின் கேள்விகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது . எனக்கு சாப்பிடதான் தெரியும் . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. நல்ல கேள்வி ... பசிக்கு எது இருந்தா என்ன...? விலையா முக்கியம். ம்ம்ம் அசத்துங்க... அடுத்து ..! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. ஆனால், ஹோட்டல்களில், இட்லியை விட தோசை விலை அதிகம். ஏன்?


    ....idli takes less space in the hotel and plate and dosai takes up more.... adhaan..... rate ஜாஸ்தி!

    பதிலளிநீக்கு
  22. சித்ரா சொன்னது போல, தோசை நிறைய இடம் இடித்துக் கொள்வது மட்டும் இல்லை. திருப்பிப் போட ஒரு தனி திறமை வேண்டும் - சரக்கு மாஸ்டர் சம்பளம் கூடுகிறது. தயாரிப்பு முதல் வாடிக்கையாளர் வாய் வரை சரக்கு கையாளும் முறைகளும் தனி.

    இட்டிலியில் ரகங்கள் இல்லை - தோசையில் வகைகளும் ரகங்களும் எண்ணிலடங்காதவை.

    இது தவிர மீட்டர் தோசை, செட் தோசை இப்படி பரிமாணங்களும் பல விதம்

    இட்டிலி வேகும் போது சற்று அதிக நேரம் வைத்தால் எதுவும் கேட்டுப் போவதில்லை. ஆனால் தோசை விஷயத்தில் சரக்கு மாஸ்டருக்கு வேலை காலி.

    ஆக பொருள் ஒன்றாயிருப்பினும், பதனிடும் முறை, அதற்கு வேண்டிய திறன், நேரம் இவை பொறுத்து விலையும் மாறு படுகிறது.

    என்னைப் பொறுத்த வரை தோசை ஒவ்வொன்றும் ஒரு கவிதை. புகழ் பெற்ற சித்திரங்கள் போல் ஒன்று மாதிரி இன்னொன்று கிடையாது.

    சில வருடங்களுக்கு முன் மாற்றியமைக்கப் பட்ட xerox எந்திரத்தில் ஐந்து ரூபாய்க்கு ஒரு மசாலா தோசை சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் சாப்பிட்டிருக்கிறீர்களா ? அது தோசை செய்யும் அழகைப் பார்ப்பதற்கே நானும் நண்பர்களும் அங்கு நிறைய நேரம் செலவிட்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  23. அப்பாவைக் கேட்டால், தோசையுடன் நேற்று வைத்த மீன் குழம்புதான் சரியான ஜோடி என்பார்.

    பதிலளிநீக்கு
  24. ரவிச்சந்திரன்27 ஜூலை, 2010 அன்று AM 6:18

    மீந்து போன தோசையை (மீந்து போக வாய்ப்பு இல்லை..) ஒண்ணும் பண்ண முடியாது. இட்லி மீந்து போனால் இட்லி உப்புமா, இட்லி ஃப்ரை செய்து சாப்பிடலாம்

    பதிலளிநீக்கு
  25. இட்லி சில பேருக்கு வாயு தொந்தரவு கொடுக்கலாம்:) உ.பருப்பு அதிகமான அளவில் இட்லியில் உண்டு.
    தோசையில் அப்படி இல்லை.
    தட்டில் மூன்று அழகான மெத்தென்ற தோசைகளை எடுத்துக்கணும். ஒரு தோசையில் தோசை மிளகாய்ப் பொடி தூவி நல்லெண்ணெய் விடணும். அந்தட் தோசை மேல இன்னோரு தோசை அதில் வெள்ளை கெட்டி சட்டினி. மூன்றாவது தோசையின் மேல் கெட்டித் தயிர்.
    ஆச்சா...மூன்றையும் ஒன்றாகச் சுருட்டி,இல்லைன்னால் மூன்றுபாகமாக கட் செய்து சாப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
  26. இந்த மாதிரியெல்லாம் பதிவு போட்டு வயித்தெரிச்சலா கொட்டிக்காதீங்க ஆமா... :-(
    by,
    இட்லி, தோசை சாப்பிட முடியாமல் வறண்ட சப்பாத்தி தின்று உயிர் பிழைப்போர் சங்கம்...

    பதிலளிநீக்கு
  27. சூடான , (நகைச்)சுவையான விவாதங்கள். அப்பாவி தங்கமணி, எல் கே, கு கு, பனித்துளி சங்கர், கௌதமன் (ஆசிரியர் குழு கௌதமன் அல்ல), மதுரை சரவணன், சித்ரா, பாஸ்கரன், கே. ரங்கன், ரவிச்சந்திரன், வல்லிசிம்ஹன், சேதுபதி - எல்லோரும் பங்குபெற்று கலக்கிவிட்டீங்க. நன்றி.

    பதிலளிநீக்கு
  28. நியாயமான கேள்வி. இட்லி விலையேத்த வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  29. நல்லெண்ணையோ நெய்யோ கலந்த மிளகாய்ப்பொடி, சாம்பார், தக்காளி, தேங்காய், வெங்காயம் என்று மூவகை சட்டினியோடு தட்டைச் சுத்தி எளிமையா செட்டப். நடுவுல அரை டசன் இட்லி இல்லின்னா அரை முறுகலா ரெண்டு தோசை. பிட்டு பொடி, வெங்காய சட்னி, சாம்பார்னு ஒவ்வொன்னுலயும் தொட்டுக் கலந்து ஒரு வாய். தக்காளி சட்னி, சாம்பார்னு ஒரு வாய். பொடினு தனியா ஒரு வாய். சாம்பார் தேங்காய் சட்னினு ஒரு வாய். ஒவ்வொரு சட்னியிலும் தனித்தனியா ஒரு வாய். பொடிய மட்டும் தனியா விரலால் தொட்டு ஒரு சைடு ருசி. மறுபடியும் சாம்பார்ல தொட்டு.. இட்லி தோசைய காணோமேய்யா.. சட்னி சாம்பாரையும் காணோம்... இதென்ன அப்புசாமி கதையா இருக்கே?

    பதிலளிநீக்கு
  30. திரு அப்பாதுரையின் ரசனைக்கு ஒரு சபாஷ்!

    வர்ணனையிலேயே, இட்லி சாம்பார், காரச் சட்னி, போடி நெல்லேண்ணெய் இப்படி ஏகப்பட்ட காம்பினேஷனை, இட்லி வடை இல்லாமலேயே வார்த்தைகளில் சுவையாகத் தாளிதம் செய்து கொடுத்த பின்னூட்டத்திற்காக!

    எக்ச்சூஸ் மீ! ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  31. //, கௌதமன் (ஆசிரியர் குழு கௌதமன் அல்ல)//
    தகவலுக்கு நன்றி..

    அப்பாதுரைக்கு ஒரு ரசிகமணி பட்டம் கொடுக்கலாமோ?
    கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் பாட்டு நினைவுக்கு வரல்லே!

    பதிலளிநீக்கு
  32. @வல்லிசிம்ஹன்
    hostelல mixலாம் வச்சிகிட்டா.. தொரத்திவிட்ருவாய்ங்க... :-)

    பதிலளிநீக்கு
  33. சேதுபதி சார். சில நல்ல பிராண்ட் (ரெடி மேட்) இட்லி மாவு கடைகளில் கிடைக்கின்றனவே? அவைகளை வாங்கி இட்லியோ தோசையோ - பத்து நிமிடங்களில் தயார் செய்யலாமே?

    பதிலளிநீக்கு
  34. idli nool pudavai mathiri dhosai pattupudavai mathiri side dish ,labuor, teaste,ellamdhosaikku athihaselavu unndu mano.kmu.

    பதிலளிநீக்கு
  35. அதான் சரி. தாயார்,ஹேமான்னு ஏகப்பட்ட ப்ராண்ட் வரது.
    ஆனால் ஸ்டவ்,ஹீட்டர் வைத்துக் கொள்ளக்கூடார்ஹோ என்னவோ. ஒரு ப்லக் பாயிண்ட் இருந்தால் போதுமே. இட்லி எலெக்ட்ரிகல் குக்கர் இருந்தால் போதும்.எந்த ஊரில் இருக்கிறீர்கள்:)

    பதிலளிநீக்கு
  36. தோசையை வார்க்க கூடுதல் கவனமும், துல்லியமான நேரமும், அழகுத்தன்மையும் தேவைப்படுகிறது. :)

    பதிலளிநீக்கு
  37. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  38. bangalore தான்... தோசை, இட்லிங்கற பேர்ல ஏதோ ஒண்ணு போடறாய்ங்க... அதுக்கு சாம்பார் அதுவும் இனிப்பா... முடியல... :-(

    idea நல்லாத்தான் இருக்கு... :-) முயற்சி செய்றேன்..

    பதிலளிநீக்கு
  39. இட்லி, தோசை ரெண்டுக்குமே என் சாய்ஸ் எப்பவும் மிளகாய்ப் பொடிதான். தோசை தோ சொய்ங் என்பதால் இரட்டிப்பு விலை இருக்கத்தானே செய்யும்!

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  40. இட்லி, தோசை ரெண்டுக்குமே என் சாய்ஸ் எப்பவும் மிளகாய்ப் பொடிதான். தோசை தோ சொய்ங் என்பதால் இரட்டிப்பு விலை இருக்கத்தானே செய்யும்!

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!