திங்கள், 1 நவம்பர், 2010

குழந்தைகளின் திறமைகள்


நவம்பர் மாதம் வந்துவிட்டது. இந்த மாதத்தில், தீபாவளி மட்டும் அல்ல, குழந்தைகள் தினமும் வருகிறது. வாசகர்களின் இல்லங்களில், பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் (மழலையர் வகுப்பு தொடங்கி, பத்தாம் வகுப்பு வரை படிப்பவர்கள் எல்லோரும் 'குழந்தைகள்' கணக்கில் வருவார்கள்) எவ்வளவோ திறமைகள் உள்ளவர்கள் இருப்பார்கள்.   
     
படம் வரைபவர்கள், பாட்டு பாடுபவர்கள், கதை, கவிதை, கட்டுரை எழுதுபவர்கள், மிமிக்ரி, புகைப்படம் எடுப்பவர்கள், வாத்தியம் வாசிப்பவர்கள் இன்னும் எவ்வளவோ திறமைகள் அவர்களிடம் இருக்கும். உங்கள் குழந்தையின் படைப்பாற்றல் மிக்க படைப்புகள் எதுவாக இருந்தாலும், அதை நவம்பர் பதினான்காம் தேதிக்குள், எங்களுக்கு engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு, படைப்பாளியின் பெயர், வயது விவரங்களுடன் அனுப்பி வையுங்கள். 
            
எங்களுக்கு வருகின்ற படைப்புகளை, 'இது நம்ம ஏரியா' வலைப பக்கத்தில் வெளியிடுவோம். எங்களுக்கு வந்து சேரும் படைப்புகளின் விவரங்களை, எங்கள் ப்ளாக் சைடு பாரில் நாள்தோறும் பட்டியல் இடுகின்றோம். 

பங்கு பெறப்போகும் குழந்தைகளுக்கு, எங்கள் வாழ்த்துகள். 

(முக்கிய குறிப்பு: இது போட்டி அல்ல. குழந்தைகளின் திறமைகளை, வெளிக் கொண்டு வரும், உலகிற்கு தெரியப் படுத்தும் ஒரு முயற்சியே. பங்கு பெறுகின்றவர்களின் எல்லோருடைய படைப்புகளும், வெளியிடப்படும்.)
            

13 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் பங்கு கொள்ளப்போகும் குழந்தைகளுக்கு.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நல்ல விஷயம். பாராட்டுக்கள். குழந்தைகளின் திறமைகளை பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷமே ஸ்பெஷல்தான். பங்கு பெறப்போகும் குழந்தைகளுக்கு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பங்கு பெறப்போகும் குழந்தைகளுக்கு, எங்கள் வாழ்த்துகள்.


    .....எனது வாழ்த்துக்களும் !
    இது நல்ல ஐடியாங்க. உங்களுக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள்.. நல்ல ஐடியா முடிந்தால் என் மகளின் திறமைகளையும் அனுப்புகிற்ன்..

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் என் மாணவர்களிடம் தெரிவிக்கிறேன்.. பங்குப்பெறச் செய்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. மெண்டல் ஏஜ் படி பார்த்தா நானும் குழந்தைதான். சொல்லப் போனால் கைப்பிள்ளை. நானும் பங்கு பெறலாமா:)

    பதிலளிநீக்கு
  7. @Gopi Ramamoorthy
    //சொல்லப் போனால் கைப்பிள்ளை.//
    எடுப்பார் கைப்பிள்ளையா? ;-) ;-) ;-) ;-)

    பதிலளிநீக்கு
  8. நன்றி தமிழ் உதயம், மீனாக்ஷி, சித்ரா.

    சிநேகிதி, 'முடிந்தால்' இல்லை; முடியும். சந்தேகம் வேண்டாம்!

    மதுரை சரவணன் சார்! நன்றி. மறக்காமல் மாணவர்களிடம் கூறுங்கள். உங்கள் ஆர்வம எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

    கோபி ராமமூர்த்தி சார், கைப்பிள்ளையாக இல்லாவிட்டால் கூட, உங்கள் படைப்புகளை, எப்பொழுதும் நீங்க எங்களுக்கு அனுப்பலாம். 'இது நம்ம ஏரியா' ப்ளாக் முதன்மை வாசகங்களை நீங்க பார்க்கவில்லையா? "எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்."
    எங்கள் ப்ளாக் வாசகர்கள், யார் எதை அனுப்பினாலும், 'இது நம்ம ஏரியா' வில் வெளியிடப்படும்.

    ஆர் வி எஸ் சார், 'கோ ரா' அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளை என்று தோன்றவில்லை! அட உங்களுக்குத் தெரியா(த)தா? நீங்களும்தான் அவரை அவருடைய R கோபி வலையில் பின் தொடர்கிறீர்கள்!! (கோபி - லண்டன் பயணக்கட்டுரையும், படங்களும் பிரமாதம்!)

    பதிலளிநீக்கு
  9. வாசகர்களை ஊக்கப்படுத்துவதில் எங்கள் ப்ளாக்கிற்கு என்றும் முதலிடம்தான். தவறாமல் வைபவியின் படைப்பை அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. படைப்பாளிகளுக்கும், களம் அமைத்து கொடுக்கும் "எங்க(ள்)"ளுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. வாவ் சுப்பர்.. என்னோட படைப்புகளையும், என் பையன் பேருல அனுப்பிடறேன்.. ஓக்கேவா ?

    பதிலளிநீக்கு
  12. ஹிஹி நானும் அதையே தான் நெனச்சேன்.. கோபி முந்திக்கிட்டாரு.. அவசரக்குடுக்கை... பாருங்க.. அவர் சொன்ன மென்டல் ஏஜ் சரியாத்தான் இருக்குது.. என்னையும் சேர்த்துக்குங்க ஆட்டத்துல..

    பதிலளிநீக்கு
  13. நல்ல முயற்சி. எனது வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!