வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

சிறு மெழுகும் பேரிங் கழற்ற உதவும்!



மின் விசிறி நின்று போனது. 

கையால் சுற்றுவதே கடினமாக இருந்ததால், பக்கத்தில் இருக்கும் மின் கருவி பழுது பார்ப்பவரை அழைத்தோம்.       
                  
சுமார் ஒரு மணி நேரத்தில் விசிறியைக் கழற்றி பேரிங்குகளை மாற்றித் திரும்பவும் மாட்டி விட்டார். மேல் பக்கம் இருந்த 6202 பேரிங்கைக் கழட்டுவதிலும் மாற்றுவதிலும் எந்த சிக்கலும் இல்லாமல் செய்து விட்டார். ஆனால் கீழே இருந்த 6201 பேரிங்கைக் கழற்ற என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்த்துக் கொண்டே வந்தேன். அவர் பாதி வேலை செய்து முடித்த பின் தான் இதைப் படம் அடுத்து மற்ற நேயர்களுடன் பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்ற, அவ்வாறே செய்துள்ளேன்.

ஒரு குழியில் பொருத்தப் பட்டிருக்கின்ற ஓடி உழைத்த பழைய பேரிங்கைக் கழற்றுதல் சுலபமான வேலை அல்ல. இந்த முறையைப் பயன்படுத்தி, சுலபமாக சர்வீசிங் செய்யலாம்.

வேண்டிய உபகரணங்கள்:
* மெழுகுவர்த்தி (குறைந்தபட்சம் கட்டைவிரல் பருமன் உள்ளது ஒன்று)
* பேரிங்கின் நடுப் பகுதியில் நுழையும் அளவுக்கு ஒரு உலோக உருளை.
* ஒரு சிறிய சுத்தி(யல்).
* கொஞ்சம் பொறுமை,
   
படம் 1 - பேரிங் நடுப்பகுதியில் மெழுகு.
   
படம் 2 - பழைய பிறந்தநாள் வர்த்தி உபயோகப் படுகிறது
           
படம் 3,4,5,6  மெழுகை வைத்து அடிக்க அடிக்க பேரிங் மேலே வருகிறது



 

படம் 7,8 மெழுகை எடுத்து சுத்தம் செய்த பின் புது பேரிங் போட குழி ரெடி.
 










(வாசகர்களும் அவர்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற எளிய யுக்திகளை மற்ற வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே!)
    

18 கருத்துகள்:

  1. பயனுள்ள செய்தி.. பகிர்விற்கு நன்றி..

    என்னுடைய பைக்கில் சைடு இன்டிகேடர் பஸ்ஸர் வேலை செய்யவில்லை.. கழற்றி, பார்த்தால், வயர் அறுந்து விட்டது.. அது அப்படி இருப்பதுபோல மறுபடியும் சோல்டர் செய்து பொருத்தினால் பஸ்ஸர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது..

    வீட்டில் குழாய் ரிப்பேர், வயரிங், , மின் உபகரணங்கள் பழுதடைந்தால் நான்கூட முடிந்த வரை நானே சரி செய்ய முயற்சிப்பேன்.. 90 சதவிவீதம் வெற்றியும் பெற்றுள்ளேன்..

    டிஷ் டிவி அண்டெனா சரியாகப் பொருத்த சரியான ஆள் கிடைக்காத நிலையில் நானே முயன்று அதனை எப்படி பிட் செய்வது என்பதை தெரிந்து கொண்டேன்.

    தேவை ஒரு சில டூல்ஸ் மற்றும் ஆர்வம்

    பதிலளிநீக்கு
  2. // (வாசகர்களும் அவர்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற எளிய யுக்திகளை மற்ற வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே!) //

    ஹி.. ஹி.. தொழில் ரகசியம் !!

    நல்ல யோசனை..

    பதிலளிநீக்கு
  3. thanks. பாக்கலாம் இன்னும் என்னல்லாம் ஐடியா வருதுன்னு:)

    பதிலளிநீக்கு
  4. - வெங்காயம் நறுக்கும் போது சிக்லேட் வாயில் மென்னால் கண்ணில் தண்ணீர் வராது என்று கேள்விப்பட்டு - அழுவதை கொஞ்சம் நிறுத்தி இருக்கின்றேன் !!

    - என் அம்மா கொடுத்த ஐடியா - பச்சை மிளகாய் வாங்கியவுடன் காம்பை கிள்ளி டப்பாவில் பிரிட்ஜ்ஜில் போட்டுவைத்தால் கெடுவதில்லை.

    இதை மாதிரியும் பரவாயில்லையா ? (சாப்பாட்டு ராமன் என்று சொன்னாலும் பரவாயில்லை !!)

    பதிலளிநீக்கு
  5. சாய் சொன்னது எனக்குப் பிரயோசனமா இருக்கும் !

    பதிலளிநீக்கு
  6. // பச்சை மிளகாய் வாங்கியவுடன் காம்பை கிள்ளி டப்பாவில் பிரிட்ஜ்ஜில் போட்டுவைத்தால் கெடுவதில்லை...//

    உண்மைதான். ஆனால் அவ்வளவு காம்புகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று சொல்லவில்லையே ?

    பதிலளிநீக்கு
  7. சாய்! அற்புதம்! மங்கையர் மலருக்கு எழுதலாம். எங்கள் ப்ளாக் சரியான இடமா என்று தெரியவில்லை. அவர்கள் இந்தப் பதிவிற்கு பொறியியல் என்று லேபல் போட்டிருக்கிறார்கள். ;-) ;-)

    பதிலளிநீக்கு
  8. IDHU MIGAVUM PAYAN ULL SEIDHI. IDHU MADHIRI PALA VISHAYANGALI UNGALDEMIRUNDHU ETHIRPARKKEROM.

    பதிலளிநீக்கு
  9. நல்ல ஐடியா . எங்க கம்பெனி பிட்டர்சுக்கு ஒரு பாக்கெட் மெழுகு வாங்கிக் கொடுக்க வேண்டியது தான்.
    பொறியியலை பொரியல்னு நெனைச்ச சாயின் டைமிங் சிரிப்பை வரவச்சுது.

    பதிலளிநீக்கு
  10. மோட்டார் கம்பெனியில் வேலை செய்த எனக்கு இந்த ஐடியா வரவில்லை... எல்லாத்துக்கும் மெழுகா..நல்ல ஐடியாவா இருக்கு...

    பேரிங் லூசானால்.. பாடியில் குத்துப் போட்டு டைட் பண்ணத்தெரியும்....

    பதிலளிநீக்கு
  11. / Anonymous said...உண்மைதான். ஆனால் அவ்வளவு காம்புகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று
    சொல்லவில்லையே//

    ஓஹோஓஹோ நீங்க வடை போச்சே கதை ஆளா ?

    பதிலளிநீக்கு
  12. இதோ இன்னொன்னு

    நார்மலாக "ஜாம் பாட்டில்", நெய் பாட்டில் அல்லது வேறேதாவது பாட்டில் மூடி டைட்டாக இருந்தால் திறக்க ரொம்ப கஷ்டப்படுவோம். என்ன கையையை அலம்பி திறந்தாலும் திறக்காமல் படுத்தும் !!

    அந்த மூடியின் விளிம்பில் ரப்பர் பேண்ட் ஒன்றை கரெக்டாக சுற்றி கையால் திறந்தால் கிரிப் கிடைத்து சட்டேன்று திறந்து விடலாம் !!

    ட்ரை பண்ணி பார்த்து சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  13. ஹி ஹி...

    ஆங்கிலத்திலயும் இந்த போஸ்ட்டை போட்டா ஒரியாக்காரரை படிக்க சொல்லலாம்.. :))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!