புதன், 13 ஏப்ரல், 2011

உள் பெட்டியிலிருந்து.... 2011 04

                     
              
எது முதலில்?     
    
(அ) தொலை பேசி மணி அடிக்கிறது.

(ஆ) குழந்தை அழுகிறது..

(இ) வாசல் கதவு தட்டப் படுகிறது. 


(ஈ)மழை பெய்கிறது. மாடியில் காய வைத்த துணிகளை எடுக்க வேண்டும்.

(உ) உள்ளே திறந்து விடப் பட்டு தண்ணீர் வீணாகக் கொட்டிக் கொண்டிருக்கும் குழாயை நிறுத்த வேண்டும்.
  
(ஊ)அடுப்பில் பால் பொங்குகிறது. 
 
எந்த வரிசையில் முடிவெடுப்போம்?


எது அதிகம்?

குழந்தை சொன்னதாம் தாயிடம்,"அம்மா! நீ என்னை நேசிப்பதை விட நான் உன்னை அதிகம் நேசிக்கிறேன்" தாய் : "எப்படி கண்ணே" குழந்தை சொல்கிறது..."உனக்கு இரண்டு குழந்தைகள், ஆனால் எனக்கு நீ ஒரே ஒரு அம்மாதானே.."

ஊக்கம்

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எல்லா நம்பிக்கையையும் இழந்து நாம் முடிந்தது என்று எண்ணும் கணம் கடவுள் புன்னகைக்கிறார்."மகனே இது ஒரு வளைவுதான், முடிவு அல்ல! (Just a bend and not the end)

கவித...கவித...

கேட்டேன்..கேட்டேன்..
நினைக்கும்போது மென்மழை,
இரவின் மடியில் மெல்லிசை,
குழந்தையின் சிரிப்பு,
பொய்யில்லா மனங்கள்,
முடிவில்லா வாலிபம்,
சாய்ந்து கொள்ள தோள்,
தாய் மடி தூக்கம்,
தூக்கத்தில் மரணம்,
மரணம் வரை உன் நட்பு...

Reminder போடு God

கடவுளே,
நான் நம்பிக்கை இழக்கும்போது
என் ஏமாற்றங்களைவிட
உன் அன்பு உயர்ந்தது
என்பதையும்,
என் வாழ்வின்
உன் திட்டங்கள்
என் கனவுகளை விட
சிறந்தது
என்பதையும்
எனக்கு நினைவூட்டு...!

அன்பான வேண்டுகோள்

எதிரிகள்
எதிரில் நிற்கிறார்கள்...
நண்பர்கள்தான்
முதுகில் குத்துகிறார்கள்.
நண்பனே..
நீயாவது
சொல்லிவிட்டு
துரோகம் செய்..

விகடகவி 
                            
WAS IT A CAR OR A CAT I SAW ...என்ன இது என்கிறீர்களா...இப்பாலிக்கா படிச்சாலும் அப்பாலிக்கா  படிச்சாலும் ஒரே மாதிரி வருது பாருங்க...

27 கருத்துகள்:


 1. உ (வெளில நிக்கிறது மாமியாரோ / கணவனோ, அவங்க கொஸ்டின் முதல்ல தண்ணி ஏன் வீணாகுதுன்னுதேன் இருக்கும்!!)
  ஆ(தூக்கி மடில வெச்சுகிட்டு அடுத்த வேலை!)


  அ(எடுக்கலைன்னா, வாய்ஸ் மெயில் விடுவாங்கல்ல, அதை வெச்சு தெரிஞ்சிக்கலாம் யாருன்னு!! ஹி ஹி ஹி)

  பதிலளிநீக்கு
 2. //எது அதிகம்?

  குழந்தை சொன்னதாம் தாயிடம்,"அம்மா! நீ என்னை நேசிப்பதை விட நான் உன்னை அதிகம் நேசிக்கிறேன்" தாய் : "எப்படி கண்ணே" குழந்தை சொல்கிறது..."உனக்கு இரண்டு குழந்தைகள், ஆனால் எனக்கு நீ ஒரே ஒரு அம்மாதானே.."//

  சூப்பரப்பூ........!!!

  பதிலளிநீக்கு
 3. //விகடகவி

  WAS IT A CAR OR A CAT I SAW ...என்ன இது என்கிறீர்களா...இப்பாலிக்கா படிச்சாலும் அப்பாலிக்கா படிச்சாலும் ஒரே மாதிரி வருது பாருங்க...
  //

  This is called Palindrome in English.

  E-g:

  Maam,
  Madam,
  Malayalam

  பதிலளிநீக்கு
 4. For a full story in palindrome click here
  http://www.spinelessbooks.com/2002/palindrome/index.html

  பதிலளிநீக்கு
 5. அன்னுவின் ஆர்டர்தான் என்னுதும்.

  எது அதிகம்?: ஒரு சின்னக் குழந்தைக்கு இப்படிலாம் யோசிக்க/பேசத் தெர்யுமான்னு சந்தேகம்தான். கொஞ்சம் அதிகம்தான்!! :-))))

  ஊக்கம் நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு
 6. எல்லாமே வாழ்வியல்.குழந்தையைத் தூக்கி வச்சுக்கிட்டே எல்லா வேலையும் பாத்துக்கலாம் !

  எல்லாம் எல்லாம் எல்லாமே நல்லாயிருக்கு !

  பதிலளிநீக்கு
 7. பால், தண்ணீர் (இரண்டும் நொடிகளில் ஆகக் கூடிய வேலை), துணி (குழந்தைய தூக்கிட்டு போனா மழைல நனைஞ்சுடுமே),குழந்தையை தூக்கிக் கொண்டு பின் கதவு, அதன் பிறகு தொலை பேசி (அப்படி தலை போற விஷயமா இருந்தா திரும்பி பண்ணட்டுமே!)(ஊ,உ,ஈ,ஆ,இ,அ)

  பதிலளிநீக்கு
 8. நல்லா யோசிக்க வச்சுட்டீங்க!

  பதிலளிநீக்கு
 9. எல்லாமே நல்லாயிருக்கு!

  பதிலளிநீக்கு
 10. ABLE WAS I ERE I SAW ELBA
  என்று நெப்போலியன் சொன்னதாகச் சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
 11. (ஊ)அடுப்பில் பால் பொங்குகிறது.
  (இ) வாசல் கதவு தட்டப் படுகிறது.
  (ஆ) குழந்தை அழுகிறது..
  (உ) உள்ளே திறந்து விடப் பட்டு தண்ணீர் வீணாகக் கொட்டிக் கொண்டிருக்கும் குழாயை நிறுத்த வேண்டும்.
  (அ) தொலை பேசி மணி அடிக்கிறது.


  (ஈ)மழை பெய்கிறது. மாடியில் காய வைத்த துணிகளை எடுக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 12. //எடுக்கலைன்னா, வாய்ஸ் மெயில் விடுவாங்கல்ல, அதை வெச்சு தெரிஞ்சிக்கலாம் யாருன்னு!! ஹி ஹி ஹி//

  \akkov athu unga oorlathan inga illai

  பதிலளிநீக்கு
 13. குரோம்பேட்டைக் குறும்பன்14 ஏப்ரல், 2011 அன்று 8:04 AM

  எது முதலில்?
  பால் உள்ள அடுப்பை அணைத்துவிட்டு, தண்ணீர் குழாயை அடக்கிவிட்டு, தொலைபேசியை எடுத்து, யாரென்று தெரிந்ததும் ஐந்தே நிமிடங்களில் திரும்ப அழைக்கின்றேன் என்று சொல்லி, அதை குழந்தையிடம் விளையாடக் கொடுத்துவிட்டு, வாசல் கதவைத் திறந்து, வந்திருப்பவர் வீட்டு நபர் என்று தெரிந்தால், அவரை உள்ளே வரவிட்டு - வெளியாள் என்று தெரிந்தால் - பத்து நிமிடங்கள் கழித்து வர சொல்லிவிட்டு - வாசல் கதவைப் பூட்டி, மாடிக்கு சென்று துணிகளை எடுத்து வருவேன். (இதை எழுதும் போது மாடிக்கு சென்று துணிகளை நான்கு நிமிடங்களில் உலர்த்தி விட்டு வந்தேன்!)

  பதிலளிநீக்கு
 14. ஹேமாவின் கருத்தே என் கருத்தும். கவிதை நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 15. பால், குழந்தை, தண்ணீர், வாசல் கதவு, துணி, தொலைபேசி. (ஏன்னா மெட்ராசில் வெட்டி(commercial) போன்கால்கள் நிறைய வருவதால்)

  பதிலளிநீக்கு
 16. குழந்தைக்கு 5 எம்.எல் உட்வர்ட்ஸ் கிரப் வாட்டர்.. கொடுத்துக் கொண்டே.. வாசலை நோக்கி சற்று சத்தமாக.. யூ ஆர் இன் க்யூ.. வெயிட் ப்ளீஸ்.. (நீங்கள் வரிசையில் உள்ளீர்கள்.. தயவு செய்து காத்திருக்கவும்)

  சொல்லிவிட்டு.. குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு குழாய்.. அடுப்பு (பால்) இவற்றுள்..எது அருகில் இருக்கிறதோ..அதன் வரிசையில் அட்டென்ட் செய்வேன்.

  எங்க ஊட்டுல காலர் ஐடி இருக்கு.. நா அப்புறமா அந்த நம்பர கால் பண்ணலாம்.. (கடைசிக்கும் மொதோ ப்ரிஃபெரன்ஸ்)

  //மழை பெய்கிறது..// அதனால் காய வைத்த துணிகள் ஏற்கனவே நனைந்திருக்கும்.. (இதுக்கு கடைசி ப்ரிஃபெரன்ஸ்)

  பதிலளிநீக்கு
 17. //மழை பெய்கிறது..//

  இப்ப போனா நானுமில்ல நனைஞ்சிடுவேன்..
  மழை விட்டதுக்கப்புறம்தான் துணி மேட்டர்..

  பதிலளிநீக்கு
 18. //Blogger எல் கே said...

  //எடுக்கலைன்னா, வாய்ஸ் மெயில் விடுவாங்கல்ல, அதை வெச்சு தெரிஞ்சிக்கலாம் யாருன்னு!! ஹி ஹி ஹி//

  \akkov athu unga oorlathan inga illai

  April 14, 2011 6:57 AM//

  கார்த்திண்ணா... காலர் ஐடி வெச்சும் பாத்துக்கலாம் இல்லை? இப்ப எல்லா வீட்டு ஃபோன்லயும் அது வந்திடுச்சு. பல வீடுகள்ல மொபைல் மட்டும்தான். அதனால இன்னும் ஈஸி!!

  பதிலளிநீக்கு
 19. //@ Annu "பல வீடுகள்ல மொபைல் மட்டும்தான். அதனால இன்னும் ஈஸி!! " //

  மொபைல் போனா இருந்தா பேசிகிட்டே.. கிட்சேன் போயி அடுப்ப அணைக்கலாம்.. குழாவ மூடலாம்.... -- கேள்வியே இல்லையே..?

  பதிலளிநீக்கு
 20. //Madhavan Srinivasagopalan said...

  //@ Annu "பல வீடுகள்ல மொபைல் மட்டும்தான். அதனால இன்னும் ஈஸி!! " //

  மொபைல் போனா இருந்தா பேசிகிட்டே.. கிட்சேன் போயி அடுப்ப அணைக்கலாம்.. குழாவ மூடலாம்.... -- கேள்வியே இல்லையே..?

  April 14, 2011 10:32 PM//

  அண்ணா.. அடுத்த தடவை குழந்தையை ஒரு கையில் வைத்துக் கொண்டு, ஃபோனை இன்னொரு கையில் வைத்து அடுப்பு வரைக்கும் போய் வாருங்கள். பதிலை மாத்திக்குவீங்க... ஹெ ஹெ ஹெ...

  பதிலளிநீக்கு
 21. நல்ல தொகுப்பு. முதலில் குழந்தைதான். பிறகுதான் மற்றவை.

  பதிலளிநீக்கு
 22. எல்லாம் சூப்பர்!

  பால், குழந்தை, குழாய், வாசல், தொலைபேசி, துணி.
  குழந்தை இரண்டாவதாக வந்ததற்கு காரணம் குழந்தை பாலுக்காக அழுது கொண்டிருந்தால் அதை பொங்க விட்டுட்டு என்ன பண்றது!

  பதிலளிநீக்கு
 23. அ,ஆ,இ,ஈ,உ,ஊ,

  எல்லாம்

  (ஒ)கடைசி 3 நிமிட,

  567 ஆவது episode,

  repeat telecast,

  மெட்டி ஒலி

  முடிஞ்சத்துக்கு அப்புறம்தான்!!


  அவ்வ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 24. // Ganpat said...
  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,

  எல்லாம்

  மெட்டி ஒலி

  முடிஞ்சத்துக்கு அப்புறம்தான்!//

  அது சரி! சீரியல் நேரத்தில் அடுப்பில் ஒன்றும் இருக்காது, குழந்தை அழுதால், அதன் முதுகில் மேலும் ஏதாவது சாத்தப்படும் - அல்லது அர்ச்சனை!
  இந்த சனியனை (ஃபோனை) வேறு யாராவது எடுங்களேன்!
  இந்த சத்தங்களைக் கேட்டு வாசல் கதவைத் தட்டுபவர் குதிகால் பிடரியில் இடிபட ஓடிவிடுவார். குழாயில் வீணாகும் தண்ணீர் மழை ரூபத்தில் ஈடு செய்யப்படுவதால் - ஒன்றும் கவலை இல்லை. 'சீரியல் முக்கியம் அமைச்சரே!'

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!