செவ்வாய், 5 ஏப்ரல், 2011

ஹலோ மை டியர் ராங் நம்பர்!


                                                                        

டிர்ரிங் .... டிர்ர்ர்ர்ர்ர்ரிங்!

ஹலோ இந்திய அரசாங்க லோகோ வடிவமைப்புத் துறை.

"................"
"என்னது கவர்ன்மெண்ட் முத்திரையில் இருக்கின்ற மூன்று சிங்கங்கள் முகங்களாக ஹர்பஜன் 'சிங்', மகேந்திர 'சிங்' தோனி, யுவ்ராஜ் 'சிங்' முகம் போடணுமா? அடப்பாவிங்களா உங்க கிரிக்கட் கிறுக்குக்கு ஒரு அளவே இல்லையா!"

=================

டிர்ரிங் .... டிர்ர்ர்ர்ர்ர்ரிங்!


ஹலோ - அகில இந்திய காமெடி நடிகர்கள் சங்கம்.

"......................."
"என்னது உங்க பார்ட்டி சார்பா, டர்ட்டியா பேச எங்க உறுப்பினர் யாராவது வருவார்களா என்றா கேட்கிறீர்கள்? வைங்கடா ஃபோனை! பிச்சிப் புடுவோம் பிச்சி!"

==================

டிர்ரிங் .... டிர்ர்ர்ர்ர்ர்ரிங்!


ஹலோ எங்கள் ப்ளாக் அலுவலகம்.

"................................."

"என்னது? எலெக்டிரானிக் சாமியார் விலாசம் வேண்டுமா? அவரை மும்பை கிரிக்கட் மைதானத்தில் யாரோ சிலர் நன்றாகக் கவனித்து அனுப்பிவிட்டார்கள்! ஐ பி எல் போட்டிகள் வரை அவர் மௌன விரதமாம்!"

==================

டிர்ரிங் .... டிர்ர்ர்ர்ர்ர்ரிங்!


ஹலோ அடி தடி ஆட்டோ அனுப்புவோர் சங்கம்.

"......................."

"மொத்தம் அஞ்சு பேருங்களா? அனுப்பிடுவோம். இருபத்தஞ்சு லட்சம் காஷ் கொடுத்துடுங்க. அட்ரஸ் சொல்லுங்க? எங்கள் ப்ளாக் .......அப்புறம்?...."

எஸ்கேப் ...... !

==================

10 கருத்துகள்:

 1. என்னாது.. தப்பான அட்ரஸுக்கு வந்திட்டேனோ ?

  பதிலளிநீக்கு
 2. ச்சே.. ஜோக்கா இருந்தாலும் கடைசியில உங்க அட்ரெஸ் போட்ருக்கலாம்.. எல்லாத்துக்கும் ஒரு விடிமோட்சம் கிடைச்சிருக்கும். ;-))))

  பதிலளிநீக்கு
 3. // RVS said...
  ச்சே.. ஜோக்கா இருந்தாலும் கடைசியில உங்க அட்ரெஸ் போட்ருக்கலாம்.. //
  ஆர் வி எஸ் - எங்க முதுகுல யாராவது டின் கட்டணும்னு ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு!

  பதிலளிநீக்கு
 4. //டிர்ரிங் .... டிர்ர்ர்ர்ர்ர்ரிங்!

  ஹலோ இந்திய அரசாங்க லோகோ வடிவமைப்புத் துறை.

  "................"
  "என்னது கவர்ன்மெண்ட் முத்திரையில் இருக்கின்ற மூன்று சிங்கங்கள் முகங்களாக ஹர்பஜன் 'சிங்', மகேந்திர 'சிங்' தோனி, யுவ்ராஜ் 'சிங்' முகம் போடணுமா? அடப்பாவிங்களா உங்க கிரிக்கட் கிறுக்குக்கு ஒரு அளவே இல்லையா!"//

  :-)

  உங்க அலும்பு தாங்க முடியல

  பதிலளிநீக்கு
 5. டிர்ரிங் .... டிர்ர்ர்ர்ர்ர்ரிங்!

  எங்க அஞ்சு பேர்ல ஒருத்தரையும் காணோம் !

  பதிலளிநீக்கு
 6. நான் கேக்க நெனச்சேன்...ஹேமா கேட்டாங்க.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!