வியாழன், 21 ஏப்ரல், 2011

எவனோ ஒரு கோம்பைப் பய!

                                 
ஆசிரியர் குழு ஐ பி எல் மாட்ச் ஒன்றில் மூழ்கி இருந்தது.
                  
'ஆஹா அடிச்சுட்டான்!', ' ஊஹூம் பிரயோஜனமில்லை' 'சூப்பர் ஷாட்', 'இவர்தான் இன்றைக்கு மா ஆ மா' (தப்பா நெனச்சுக்காதீங்க மேன் ஆஃப் தி மாட்ச் - M O M - இப்படி மா ஆ மா ஆயிடுச்சு!) - 'இந்த ஹாவல் கேபிள் கரண்ட் கண்டக்ட் செய்வதை விட அக்னி எதிர்ப்புக்குத்தான் அதிகம் பயன் படும் போல!' என்றெல்லாம் கமெண்ட் அடித்து, ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தோம். 'சின்னப் பையனால இந்த அளவுக்கு அந்த ஹெவி கேஜ் ஒயரை முறுக்க முடியுமா?' என்று கேட்டார் ஓர் ஆசிரியர்.

அறிவு ஜீவியும் வந்திருந்தார். அவர் சொன்னார், "சின்னப் பையனால ஒயரை அந்த அளவுக்கு முறுக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் இதில் அவர்கள் சொல்லும் செய்திதான் முக்கியமே தவிர, செயல் அல்ல."

"பிளாஸ்டிக் தீப்பிடிக்காமல் இருக்குமா?" என்று கேட்டார் மற்றொரு ஆசி.
               
'Flame retardant materials' பயன் படுத்தி கேபிள் வெளிப்புற உறை செய்தால் - எளிதில் தீப்பிடிக்காது. தீப்பிடிக்க சற்று தாமதமாகும். அரை நிமிடத்திற்கு மேல் ஆகும். அதற்காக - தீயிலேயே அதை போட்டு வைத்துவிட்டு, தீப்பிடிக்காமல் இருக்கிறதா என்று ஆராயக்கூடாது." என்றார் அறிவு.

அப்போ அங்கே வந்தார் ஒரு திருமதி. (அப்பாவி அல்லாத தங்கமணி) "கிரிக்கட் எல்லாம் கிடக்கட்டும். 'சாந்தி நிலையம்' என்ன ஆச்சு? அதைப் போடுங்க" என்றார்.

"சாந்தி நிலையமா? - அட! அதைப் போடுங்க. ரொம்ப நல்ல படம். நல்ல பாட்டுகள் நிறைய வரும். மஞ்சுளா நடித்த முதல் படம். இயற்கை என்னும் இளைய கன்னி, ஏங்குகிறாள், துணையை எண்ணி ஈ ஈ ..." என்று கர்ண கடூரமாகப் பாடினார் ஓர் ஆசிரியர்.

"ஐயோ நிறுத்துப்பா. நீ சொல்றது சினிமா; இவங்க சொல்றது சீரியல்" என்று சானலை மாற்றினார் இன்னொரு ஆசிரியர்.   
         
ஜவஹர் சொன்ன மூன்றெழுத்து நடிகை வந்து, 'அழகு, நம்ம கையிலதான் இருக்கு' என்றார். 'எங்க கையில என்ன இருக்கு? எல்லாம் அவன் செயல்!' என்றார் ஓர் ஆசிரியர்.

"அவன் யார்? எவன்?" என்று கேட்டார் ஒருவர்.

"எவனோ ஒரு கோம்பைப் பய! எப்படி காசு பண்றதுன்னு நல்லா தெரிஞ்சுகிட்டு நம்ம தலையில மொளகா அரைச்சுகிட்டு இருக்கான்." இது இன்னொருவர் சொன்னது.

அறிவு ஜீவி - தொண்டையை கனைத்துக் கொண்டார். எல்லோரும் அவரை ஆவலுடன் பார்த்தோம்.

"எவனோ ஒரு கோம்பைப் பய என்பது முக்கால் வாசி சரி. அறுபத்தொரு வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில், 'கிளியரசில்' கண்டுபிடிக்கப்பட்டது. நம் பாட்டிகள் கண்டுபிடித்த மஞ்சள் மற்றும்  பயத்த மாவு  வகையறாக்களை ஒதுக்கி வைத்துப் பார்த்தால், கிளியரசில் தான் பர்சனல் கேர் தயாரிப்புகளின் முன்னோடி. அதைக் கண்டு பிடித்தவர் எவனோ கோம்பை இல்லை, 'இவன் கோம்பே (Ivan DeBlois Combe) அல்லது 'ஐவன் டெப்லோயிஸ் கோம்ப்' என்ற உச்சரிப்புப் பெயர் கொண்ட மனிதர். இவர், 'கெட்சீ டெல்லெர் (Kedzie Teller) என்கிற இரசாயன நிபுணருடன் இணைந்து 1950 ஆம் வருடம் கண்டு பிடித்த தயாரிப்புதான் கிளியரசில் என்கிற, முகப்பரு போக்கும் க்ரீம்.  
    
எல்லா சருமப் பாதுகாப்பு கிரீம்களிலும் காணப்படும் வேதியியல் பொருள் அல்லது பொருட்கள் என்னென்ன என்று வாசகர்களுக்கு ஒரு அறிவியல் போட்டி வையுங்கள். வாசகர்கள் தங்கள் உபயோகிக்கும் அழகு கிரீம் பெட்டி மேலே எழுதியுள்ள பொருட்களைப் பார்த்து, பின்னூட்டத்தில் எழுதட்டும்" என்று சொன்னார் அன்னா அறிவு ஜீவி.

வாசகர்களே - பார்த்து எழுதுங்கள். அதாவது, பெட்டி மேல் இருக்கின்ற விவரங்களைக் காபி & பேஸ்ட் பண்ணுங்கள். அதைத் தவிர, இந்தப் பதிவின் மூலமாக, உங்களுக்கு வேறு சில முக்கியமான விவரங்களும் சொல்லியுள்ளோம். அவை என்னென்ன என்பதையும் பதியுங்கள். அதிக விவரங்கள் பட்டியல் இடுபவர்களுக்கு, அதிகப் பாயிண்டுகள் உண்டு!
            
மற்றும் ஒரு முக்கியமான தகவல். இவன் கோம்பே பிறந்தது - சரியாக நூறு வருடங்களுக்கு முன்பு. அவர் பிறந்த தேதி, ஏப்ரல் இருபத்தொன்று, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பதினொன்று! (21-04-1911).
             
                         

13 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. கோம்பே குறித்த நல்ல நினைவு கூறல். நா பவுடர், கீரிம் எதுவும் யூஸ் பண்றதில்லை.

  பதிலளிநீக்கு
 3. குரோம்பேட்டைக் குறும்பன்21 ஏப்ரல், 2011 அன்று 12:14 PM

  இந்தப் பதிவிலிருந்து இருபத்துநான்கு புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் தெரிந்து கொண்டவைகளை, தனியே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 4. சகோதரி சித்ரா அவர்கள் கொடுத்துள்ள சுட்டி மூலமாக அங்கு போய்ப் பார்த்தோம். இந்தப் பதிவில் உள்ள கோம்பை என்னும் வார்த்தைக்கும், 'சுட்டி' காட்டும் கோம்பை இனத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. 'சுட்டி' காட்டும் கோம்பை இனம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் வாழ்ந்த, அதிகம் நாகரீகம் அடையாத மக்கள் இனம். பதிவில் காணப்படும் கோம்பை என்ற வார்த்தை, தஞ்சாவூர் மாவட்டத்தில், பயன் படுத்தப்படும் ஒரு கிண்டல் வார்த்தை. 'டேய் கோம்பை, என்பதும், டேய் கோம்பை மண்டை, என்பதும், பள்ளிக்கூட நாட்களில் - நண்பர்கள் ஒருவருக்கொருவர் கிண்டலாக அழைத்துக் கொள்ளும் வார்த்தைகள்.எனவே, வாசகர்கள் யாரும் தவறாக நினைக்கவேண்டாம்.

  பதிலளிநீக்கு
 5. கோம்பே / கோம்பை நல்லாத்தானிருக்கு.கோம்பே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் !

  நான் முகம் வறண்டுபோகாம இருக்க அப்பப்ப ஏதாச்சும் போட்டுக்குவேன்.
  இப்போ L`OREAL ஏதோ ஒண்ணு !

  பதிலளிநீக்கு
 6. நான் கலந்துகிட்டா அழகுசாதன கம்பேனிகள் மான நஷ்ட வழக்குப் போடும் ரிஸ்க் இருப்பதால் மீ த எக்ஸெம்ப்டு:))

  பதிலளிநீக்கு
 7. //நான் கலந்துகிட்டா அழகுசாதன கம்பேனிகள் மான நஷ்ட வழக்குப் போடும் //

  சும்மா கலந்துக்கங்க. எங்கள் கம்பெனி தயாரிப்புகளை உபயோகிக்குமுன் என்கிற உதாரண புருஷனின் படத்துக்கு உபயோகபடாதா என்ன !

  பதிலளிநீக்கு
 8. கோம்பப் பயலுக்கு சரி... இந்த சும்பப் பய அப்படின்னு சொல்றாங்களே அதுக்கும் ஏதாவது இருக்கா சார்! ;-))

  பதிலளிநீக்கு
 9. RVS said...
  கோம்பப் பயலுக்கு சரி... இந்த சும்பப் பய அப்படின்னு சொல்றாங்களே அதுக்கும் ஏதாவது இருக்கா சார்! ;-))

  கிண்டல் அலங்கார கீழ்வேளூர் சுவாமிகள் எழுதிய, 'அக்மார்க் அகடவிகடம்' என்னும் புத்தகத்தில் தேடிப் பார்க்கவேண்டும்!

  பதிலளிநீக்கு
 10. பதிவில் காணப்படும் கோம்பை என்ற வார்த்தை, தஞ்சாவூர் மாவட்டத்தில், பயன் படுத்தப்படும் ஒரு கிண்டல் வார்த்தை. 'டேய் கோம்பை, என்பதும், டேய் கோம்பை மண்டை, என்பதும், பள்ளிக்கூட நாட்களில் - நண்பர்கள் ஒருவருக்கொருவர் கிண்டலாக அழைத்துக் கொள்ளும் வார்த்தைகள்


  ......இது எனக்கு புதிய செய்தி. தெளிவு படுத்தியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. தனித் தனியா ஏதோ ஜோக் ரேஞ்சுக்கு புரிஞ்சாலும் மொத்தமா என்னனு திரும்ப திரும்ப படிச்சாலும் எனக்கு ஒண்ணுமே புரியலயே!

  பதிலளிநீக்கு
 12. நன்றி குரோம்பேட்டைக் குறும்பன். இருபத்து ஐந்தாவது விஷயமும் அனுப்பி இருக்கின்றீர்கள். நீங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த இருபத்து நான்கு விஷயங்களில், இருபதாவது விஷயம் எடிட் செய்யப்பட்டது. அதை வெளியிட மாட்டோம். நீங்கள் அனுப்பியவைகளை, அடுத்த வாரம் தனிப பதிவாகப் போட்டுவிடுகிறோம்.

  பதிலளிநீக்கு
 13. எழுதி அனுப்பி, போட்டியில வெற்றி பெற்றா, பரிசாக அழகுசாதனப் பொருட்கள் தருவீங்களா? :-)))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!