திங்கள், 25 ஏப்ரல், 2011

கு கு அனுப்பிய இருபத்தைந்து விஷயங்கள்.

           
குரோம்பேட்டைக் குறும்பன், 'எவனோ  ஒரு கோம்பைப் பய' பதிவைப் படித்துவிட்டு, எழுதி அனுப்பிய, அவர் தெரிந்துகொண்ட விஷயங்கள்!

****** ****** *****
1) எங்கள் ஆசிரியர் குழுவில் கிரிக்கட் பைத்தியங்கள் நிறைய பேர்கள் உள்ளனர்.

2) அவர்கள் ஐ பி எல் மாட்ச் பார்த்தபடி அரட்டை அடிப்பார்கள்.

3) மா ஆ மா என்றால் ஆட்ட நாயகன்.

4) ஆட்டத்தை பார்ப்பதுடன், விளம்பரங்களையும் ஆராய்கிறார்கள்.

5) ஹவேல்ஸ் கேபிள் நிறுவனம் ஐ பி எல் போட்டிகளின் விளம்பரதார்களில் ஒன்று.  

6) ஒயர்களில் சன்னமானது முதல் தடிமனானது வரை நிறைய உள்ளன.

7) சின்னப் பசங்களால தடிமனாக உள்ள ஒயரை சுலபமாக முறுக்க முடியாது.

8) அறிவு ஜீவி அடிக்கடி எங்கள் ஆசிரியர் குழுவுடன் அளவுலாவுகிறார்.

9) எளிதில் தீப்பிடிக்காத காப்பு உறை = flame retardant material.
     
10) இந்த காப்பு உறை தீ பிடிப்பதை ஒத்திப் போடும். தவிர்க்காது

11) ஆசிரியர் குழுவில் உள்ள யாருக்கோ அப்பாவி அல்லாத தங்கமணி வாய்த்திருக்கிறார்.

12) அவர் சீரியல் பார்ப்பவர்.

13) அவர் கேட்டால், மறுக்காமல் செயல் படுகிறார்கள் ஆசிரியர்கள்.

14) சாந்தி நிலையம் என்ற பெயரில் ஒரு சீரியல் இப்போ வந்துகிட்டு இருக்கு.

15) சாந்தி நிலையம் என்ற பெயரில் ஒரு திரைப் படமும் முன்பு வந்துள்ளது.

16) அந்தப் படத்தில் நல்ல பாட்டுகள் நிறைய உண்டு.

17) அதுதான் (எம் ஜி ஆர்) மஞ்சுளா நடித்த முதல் படம்.

18) இயற்கை என்னும் இளைய கன்னி - என்ற பாடல் இடம் பெற்ற படம் சாந்தி நிலையம்.

19) ஆசிரியர் குழுவில் ஒருவருடைய குரல் கர்ண கடூரமாக இருக்கும்.

20) (point edited - sorry Mr கு.கு)

21) ஆசிரியர் குழுவில் மரியாதையாகப் பேசத் தெரியாதவர் யாரோ ஒருவர் இருக்கிறார். (அடிச்சுட்டான், எவனோ கோம்பைப் பய etc, etc)

22) கிளியரசில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1950.

23) கிளியரசிலைக் கண்டு பிடித்தவர்கள், ஐவன் கோம்ப், மற்றும் கெட்சீ டெல்லெர்.   

24) ஐவன் கோம்ப் பிறந்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.  (மறைந்து பதினொரு ஆண்டுகள் ஆகிவிட்டன - நன்றி விக்கி)

25) 'எங்கள்' வலைப்பூ வாசகர்களில் ரொம்பப் பேருங்க பயந்த சுபாவம் உடையவர்கள். பிரச்னைகளில் எதிலேயும் மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக இருப்பவர்கள்.
                            

8 கருத்துகள்:

  1. ரெம்ப சரியா சொல்லி இருக்கார்ன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நான் தெரிஞ்சுகிட்ட ஒரே ஒரு விஷயம்......
    எங்கள் ப்ளாகை கு.கு. உன்னிப்பா படிக்கிறார்!

    பதிலளிநீக்கு
  3. சத்தியாமா எனக்கு ஒன்றுமே புரியவில்லை .

    பதிலளிநீக்கு
  4. எங்கள் ஆசிரியர் வீட்டில் கலைஞர் தி வி இல்லை .
    உங்கள் வீட்டில் சாந்தி நிலையம் அன்றால் எங்கள் வீட்டில் ஜான்சி ராணி,
    எல்லோருக்குமே கிரிக்கெட் பிடித்திருக்க வேண்டுமா என்ன ?
    நான்கூட ஒவ்வொருமுறையும் ஹாவெல் மின்கடத்தி விளம்பரம் பார்க்கும் பொழுது இவர்கள் எப்படி வயதுக்கு மீறிய அறிவுடன் பிள்ளைகளைக் காட்டுகிறார்கள். பட்டுத் தெளிந்திருந்தால்தானே அந்த அளவு அறிவு முதிர்ச்சி இருக்கும்?

    பதிலளிநீக்கு
  5. எங்கள் புளொக்கின் பிரமாத ரசிகர்.அப்பிடியே புட்டுப் புட்டா வச்சிருக்கார் !

    பதிலளிநீக்கு
  6. 25 பாயிண்டுகளில், 24ஐப் போட்டிருந்தாலும், சொல்லாத அந்த ஒன்று என்னன்னுதான் ஒரே யோசனையா இருக்கு!! :-)))))

    பதிலளிநீக்கு
  7. //சொல்லாத அந்த ஒன்று என்னன்னுதான் ஒரே யோசனையா //

    Sri, did I not tell you that most people are driven by curiosity ?

    பதிலளிநீக்கு
  8. ஹாஹாஹா கடைசி கமெண்டை ரசிச்சுப் படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்.. தூள் தூள்.. வாழ்க..:)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!