சனி, 2 ஏப்ரல், 2011

இந்த எ சா தொல்லை தாங்க முடியல!

     
மும்பை போய் விட்டாரே, இவரு எங்கே பதிவெல்லாம் படிக்கப் போறாருன்னு நெனச்சி நாங்க அவருடைய இருப்பிடத்தின் ஃபோட்டோ போட்டிருந்தோம். அவரு என்னடா என்றால், கையில் எப்பவும் வைத்திருக்கும் AMAZON KINDLE WI-FI 3G PDF reader gadget ல இணையம் பார்த்து, நம் பதிவைப் படித்துவிட்டு, அலை பேசியில் எங்களை அழைத்து, உர்ர் என்று உறுமினார்!

இவரை வாங்கடி - சாரி - வாங்கடே ஸ்டேடியத்தில் யாராவது பார்த்தால் நன்றாக 'கவனித்து' அனுப்பவும்!

இவரை கவனித்து அனுப்ப, இது மட்டும் காரணம் இல்லை! இவர் எழுதித் தந்துள்ள கிரிக்கட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிவு - போட்டிக்கு முன்பு பார்க்க வேண்டிய கவரில், இப்படி எழுதி இருக்கிறார்:
R
A
V
A
N
A
D
E
S
A
M
அணி வெற்றி பெறும்! அந்த அணித் தலைவர், கோப்பையைக் கைப் பற்றுவார்!

போட்டி முடிவடைந்த பின் திறக்க வேண்டிய இரண்டாவது கவரை நாங்க இன்னும் திறக்கவில்லை.

போட்டி முடிந்து, ரிசல்ட் வந்தவுடன், நாம் எ சா அவர்களுக்கு வைக்கவேண்டியது ஆப்பா அல்லது சோப்பா என்று முடிவு செய்வோம்! அதுவரைப் பொறுத்திருங்கள்!
                    

4 கருத்துகள்:

 1. இந்த மாதிரி ஜோசியம் சொல்ற எ. சா கையில் சிக்கினார்னா கைமா தான்..... :)))

  பதிலளிநீக்கு
 2. "இந்த எ சா தொல்லை தாங்க முடியல!"////

  கனவுல வந்து பயமுறுத்தறாரோ.

  பதிலளிநீக்கு
 3. கண்டிப்பா கவர்ல ஒண்ணுமிருக்காது.ஏமாறப்போறீங்க !

  பதிலளிநீக்கு
 4. எனக்கு இப்போ பயம்மா இருக்கு.. ஒரு வேளை பலிச்சுடுமோ? பெருமாளே!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!