நீண்ட நாட்களுக்குப் பிறகு குமுதம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு என்ன வாய்ப்பு...எப்படி இருக்கிறது என்று பார்க்க காசு கொடுத்து வாங்கியதுதான்! பழைய குமுதம் நினைவுக்கு வந்தது. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகள், (சுஜாதா, ரா கி ர, பி வி ஆர், போன்றோரின் சமூக நாவல் தொடர் ஒன்று, சாண்டில்யனின் சரித்திரக் கதையொன்று) ராஜேந்திரகுமார், எஸ் ஏ பி போன்றோரின் சிறுகதைகள், (சுந்தர பாகவதர் சிறுகதைகள்..!) ப்ளான் பட்டாபி போன்ற படக் கதைகள், அஞ்சு பைசா அம்மு, போன்ற தொடர் சிரிப்பு துணுக்குகள் என்று ஒரு பல்வேறு சுவைகளைக் கொண்ட புத்தகமாய் வெளி வந்த காலம் அது. இப்போது ஒன்றுதான் பிரதானம்...சினிமா...பக்கத்துக்குப் பக்கம்...வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. பாவமாக இருந்தது...நான் (வாங்கிய) என்னைச் சொன்னேன்!
*************************************************************************
கல்கியில் பொன்னியின் செல்வன் படமாவது பற்றி வாசகர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலனவர்கள், விஷப் பரீட்சை என்றே எழுதியிருந்தனர். வந்தியத் தேவன் விஜய், குந்தவை அனுஷ்கா என்றும் காதில் விழும் செய்திகள் கூறுகின்றன. எனக்கு குந்தவையையும் பிடிக்கும் அனுஷ்க்காவையும் பிடிக்கும் ஆனால் அனுஷ்காவை குந்தவையாய் பிடிக்கவில்லை! என் விருப்பத்தை யார் கேட்கிறார்கள்? நந்தினியாய் யாரோ..? ஆனால் ஒன்று... ஆதித்ய கரிகாலரைக் கொன்றது யார் என்ற விவாதம் இனி மறைந்து போகும். ஒவ்வொரு கேரக்டரையும் கொன்றது யார் என்றுதான் நமக்கே தெரிந்து விடுமே... "உனக்குப் பிடிக்கவில்லை என்றால் விடேன்.... கதையை படிக்காத எத்தனையோ பேருக்கு அந்தக் கதை போய்ச் சேருகிறதே..." என்கிறான் மகன். ஒரேயடியாய் போய்ச் சேர்ந்து விடக் கூடாதே என்பதுதான் கவலை.
****************************************************
ஆனந்த விகடனில் சுகா எழுதும் தொடர் (மூங்கில் மூச்சு?) தொடர் சுவாரஸ்யமாக இருக்கிறது. ராமலக்ஷ்மி கூட இதைப் பற்றி அவர் பதிவில் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம். வாலி எழுதும் தொடர் படிக்க வாங்கத் தொடங்கியது. விகடன் பரவாயில்லை. சில பல சுவாரஸ்ய பகுதிகள். படிக்கத் தூண்டுவதால் வாங்கவும் தோன்றுகிறது. பொக்கிஷம் என்று பழைய நினைவுகளை போடுகிறார்கள்.
*************************************************
சினிமா, கவர்ச்சிப் படங்கள் என்று வியாபாரத்துக்காக தன்னை இறக்கிக் கொள்ளாத கல்கியிலும் பல்வேறு சுவாரஸ்ய பகுதிகள் உண்டு. பிரபலங்களை வாசகர்கள் சந்த்தித்திருந்தால் அல்லது அவர்கள் மறக்க முடியாத புகைப் படங்களைக் கேட்டு வாங்கிப் போடுகிறது. அவர்களுடைய முதல் பட்டுப் புடைவை நினைவை கேட்கிறது. பல்வேறு பத்திரிகைகளுக்கும் பயணப் பட்ட ஞானியின் 'ஓ பக்கங்கள்' உண்டு. நினைவுத் திறன் பற்றி லதானந்த் எழுதும் கட்டுரை உண்டு. இவர் ஒரு வலைப் பதிவரும் கூட. கல்கி சிறுகதைப் போட்டி அறிவித்திருக்கிறது தெரியுமோ... ஜூன் பதினைந்து கடைசி நாளாம்.
**************************************************
கணையாழி மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. எப்படி இருக்கிறது என்று வாங்கிப் பார்க்க வேண்டும்.
****************************************************
பாலிமெர் தொலைக் காட்சியில் தலைப்புச் செய்திகள் போடும்போது ஒரு வித்தியாசம் + சுவாரஸ்யம். தலைப்புச் செய்திக்குக் கீழே பெரிய எழுத்துகளில் அந்தச் செய்திக்கு ஒரு கமெண்ட் போடுகிறார்கள்! அறிவிப்பாளர் அதை வாசிக்க மாட்டார். பின்னர் விரிவான செய்தியிலும் அது வராது. உதாரணமாக ஜெயலலிதா ராஜபக்ஷே போர்க் குற்றங்களுக்காக உலக நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட வேண்டும் என்பதற்கு இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று செய்தி. கீழே கமெண்ட் "சோனியா விடுவாரா?"
******************************************
புட்டபர்த்தி சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. பக்தர்கள் ஏதாவது அவர் இதில் அற்புதம் நிகழ்த்தக் கூடுமா என்று பிரார்த்தனையுடன் இருக்கிறார்கள். கண்ணீர் மல்க பக்தர்கள் கூடுகிறார்கள். பேட்டியளிக்கிறார்கள் . உள்ளே அனுமதிக்காத அரசாங்கத்தை வசை பாடுகிறார்கள். அங்கு 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது. ஹெட்லைன்ஸ் டுடே சாய்பாபா பற்றி விரிவாக அலசுகிறது.
******************************************************
மக்கள் தொலைக் காட்சியில் இரவு ஒன்பது முதல் பத்து வரை கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை என்று ஒரு நிகழ்ச்சி. அரட்டை என்பது தொலைபேசியில் பேசி மக்களைக் கொல்லும் நிகழ்ச்சிதான். ஆனால் இந்த சேட்டை கொஞ்சம் வித்தியாசம். தொலைபேசி அரட்டைக்கு நடுவில் நான்கைந்து முறை வருகிறது. ஏரல் இமான் அண்ணாச்சி என்பவர் நடத்துகிறார். மைக்கும் கையுமாக நல்ல வெள்ளை பேண்ட், ஷர்ட்டில் மக்களை கலாய்க்கிறார். ஷோ ரூம், ஸ்டம்ப், விக்கெட், ரன் அவுட் போன்ற வார்த்தைகளுக்கு தமிழில் என்ன என்று கேட்கிறார். வரும் பதில்கள் சுவாரஸ்யம். வ உ சி யார் என்றால் மக்களில் சில பேர் காந்தி வரை இழுத்தார்கள்! சரியாகச் சொல்ல முயன்ற ஓரிருவர் வ உ சி சிதம்பரம் பிள்ளை என்றார்கள். உங்கள் தொலை பேசி எண்ணை வேகமாக சொல்லச் சொல்வார். பெருமையாக வேகமாக சொல்லும் மக்களைப் பாராட்டி விட்டு "அண்ணே அதை அப்படியே தமிழ்ல சொல்லுங்கண்ணே" என்பார். அந்தத் திருநெல்வேலி ஸ்லேங்கும் இமான் அண்ணாச்சியின் உடனடி reaction களும் சுவாரஸ்யம். சில முறை பார்க்கலாம்.
************************************************************
CNN IBN னில் ஒரு செய்தி. கேரளாவில் புனித வெள்ளியை தொடர்ந்து வரும் விடுமுறையை அனுபவிக்க மருத்துவர்கள் முன்யோசனையுடன் செயல்பட்டார்களாம்! புதன் வியாழன் இரண்டு நாட்களில் 21 சிசேரியன் ஆபரேஷன்கள். இன்னும் நாட்கள் இருக்கின்றன என்ற பிரசவ கேஸ்களைக் கூட அழைத்து அறுத்து விட்டதாக பரபரப்பு. நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறதாம்!
******************************************************
ஐ பி எல் கிரிக்கெட் மேட்ச் (22-04-2011) ராட்சச கெயில் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்க உடன் விளையாடிய நம்மூரு கவர்ச்சிப் பையன் கோஹ்லி பட்ட பாடு சுவாரஸ்யமாக இருந்தது. கெயிலின் சதத்துக்கு இரண்டு ரன்களே தேவை. அணி வெற்றி பெற பத்து ரன் தேவை என்ற நிலையில் இருந்த நிலையிலிருந்து கோஹ்லி அடித்து கொண்டிருக்க, ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில் கோஹ்லி தொட்ட ஒரு பந்து நான்கு ரன்னுக்கு சென்று விட, அவரின் குற்ற உணர்வும் பட்ட பாடும்...கெயிலிடம் சென்று பேசி விட்டு வந்து மிச்ச பந்துகளை தடுத்தாடிக் கொண்டிருந்தார். வெற்றிக்கும் கெயிலின் சதத்துக்கும் இரண்டு ரன்களே தேவை! பந்து வீச்சாளர் இந்த நிலையில் ஒரு வைட் பால் போட...கோஹ்லியின் டென்ஷன் எகிறியதை பார்க்கப் பாவமாகவும் இருந்தது. புதுமையாகவும் இருந்தது, நெகிழ்ச்சியாகவும் இருந்தது. சக வீரர் சதம் அடிக்க வேண்டும் என்ற அவரின் பொறுப்புணர்ச்சி பாராட்டத் தக்கது. நம்மூரு தினேஷ் கார்த்திக் நினைவுக்கு வந்தார்.
**********************************************************
கணையாழி மீண்டும் வருகிறதா?
பதிலளிநீக்குநல்ல தகவல்
அனைத்து வார இதழ்கள் குறித்த
சுருக்கமான விமர்சனம் அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
கல்லூரி காலங்களிலும் அதற்கு பிறகும் சுஜாதாவின் தொடர்கதைகளை சேகரிக்க எண்ணி சகலதையும் தருவித்து படித்த கிறுக்குத்தனம் இப்போது ஞாபகம் வருகிறது. இப்போது இவைகளின் நினைவே வருவதில்லை. இவைகளை கைகளால் தொட்டே பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. நீங்கள் சொல்வது போல சகலமும் சினிமா. சினிமாவைதவிர வேறொன்றும் இல்லை என்றாகி விட்டடது .கேட்டால் இப்போதைய இளைஞர்கள் இதனைத்தான் விரும்புகிறார்கள் என்று ஒரு பொய்யை எளிதாக சொல்லிவிடுவார்கள்.கணையாழி மீண்டும் ஜெயந்காந்தனின் நிர்வாகத்தில் வருகிறதாம். நல்ல செய்திதானே?
பதிலளிநீக்குபொன்னியின் செல்வனை கொலை பண்ணாமல் விடமாட்டார்கள் போல . பாண்டியன் ஆபத்துதவிகள் செய்யத் தவறியதை மணிரத்தினம் செய்கிறார் :D
பதிலளிநீக்குகணையாழி நன்றாக உள்ளது
கொஹ்லி செய்ததும் சரி. கார்த்திக் செய்ததும் சரி. வெற்றிதான் முக்கியம் தனிப்பட்ட சாதனைகள் அல்ல.
நன்றாக உள்ளது விமர்சனம். வார இதழ்கள் சமிபகாலமாக வாசிப்பது குறைந்திருந்தது. இப்போது மீண்டும் வாசிக்க துவங்கி உள்ளேன்.
பதிலளிநீக்கு//ஒரேயடியாய் போய்ச் சேர்ந்து விடக் கூடாதே என்பதுதான் கவலை. //
பதிலளிநீக்குவாஸ்தவமான கவலை!
கல்கி சிறுகதைப் போட்டிக்கு தலைப்பு ஏதும் இருக்கா ஜி!
நான் ஆனந்த விகடன் எப்போதாவது வாங்குவேன்.பிந்தியே வருகிறது இங்கு.இணையத்தில் வானொலியில் செய்திகள் கேட்டுக்கொள்வதே சுலபமாக இருக்கிறது !
பதிலளிநீக்குவிமரிசனங்கள் பயனுள்ளவை.பாரட்டுக்கள்.
பதிலளிநீக்குவந்தியதேவனாக விஜய் யும்,
பதிலளிநீக்குஆழ்வார்க்கடியன் நம்பியாக செந்திலும்,
வசனகர்த்தாவாக கலைஞரும்,
இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாதும்,
இயக்குனராக மணிரத்னமும்
தயாரிப்பது சன் TV நிறுவனமும்
இ ல் லா த ப ட் ச த் தி ல்
இந்த விஷப்பரிட்சையை வரவேற்கிறேன்
//ஆதித்ய கரிகாலரைக் கொன்றது யார் என்ற விவாதம் இனி மறைந்து போகும். ஒவ்வொரு கேரக்டரையும் கொன்றது யார் என்றுதான் நமக்கே தெரிந்து விடுமே... // ரசித்துச் சிரித்தேன்! வந்தியத் தேவன் கதாநாயகன் இல்லை என்று கல்கியே சொல்லியிருக்கிறார் என்று விஜயிடம் யாராவது சொல்லுங்கள் (அப்போ மாடடேன்னுடவாருல்ல!!)
பதிலளிநீக்குஎல்லாமே சுவையான செய்திகள்! நைஸ்!
பதிலளிநீக்குவெட்டி அரட்டைதான் என்றுமே சுவாரசியம்! பொன்னியின் செல்வன் பற்றி நீங்கள் எழுதி இருப்பது படு சூப்பர்!
பதிலளிநீக்குகணையாழி என்று ஒரு பத்திரிகை இருந்தது தெரியவே தெரியாது. நிச்சயம் வாங்கி பார்க்க வேண்டும். சில வருடங்களுக்கு பிறகு குமுதம், விகடன், குங்குமம், கல்கி என்று எல்லா பத்திரிகைகளையும் பார்த்தேன், ஆனால் ஏனோ படிக்க தோன்றவே இல்லை. முன்பிருந்த அந்த சுவாரசியம் இப்பொழுது இல்லை. இதயம் பேசுகிறது என் கண்ணில் படவேயில்லை, இன்னும் வந்து கொண்டிருக்கிறதா?
Ganpat said...
பதிலளிநீக்கு//வந்தியதேவனாக விஜய் யும், இயக்குனராக மணிரத்னமும் ....//
நிச்சயமாக அப்படித்தான்
மற்றவை யும் எப்படியோ ?
எங்கள் அனுதாபங்கள் .
nice review:)
பதிலளிநீக்குTidbits are super.
பதிலளிநீக்குwe think and you write. Great co ordination.:)
PONNIYIN selvan 2nu peyar vacchukkattum.
remix nu sollattum.
Orijinalukkum ithukkum sambantham illainnu oru disclaimer podattum.
Saami kaappaaththu!!!!!!!!!!!
குமுதத்தைப் படிக்க முன்பு எங்கள் வீட்டில் பெரிய போட்டியே நடக்கும். இப்பொழுது குமுதம்,ஆனந்த விகடன் உட்பட எந்தப் பத்திரிகையிலும் சுவாரஸ்யம் இல்லை.
பதிலளிநீக்கு//ஆதித்ய கரிகாலரைக் கொன்றது யார் என்ற விவாதம் இனி மறைந்து போகும். ஒவ்வொரு கேரக்டரையும் கொன்றது யார் என்றுதான் நமக்கே தெரிந்து விடுமே...//
பொன்னியின் செல்வன் படமாவதைக் குறித்து உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
//அனுஷ்க்காவையும் பிடிக்கும் என் விருப்பத்தை யார் கேட்கிறார்கள்? //
பதிலளிநீக்குதங்கள் வீட்டுத் தங்க்ஸின் போன் நம்பர் என்னவோ..?
// ஆதித்ய கரிகாலரைக் கொன்றது யார் என்ற விவாதம் இனி மறைந்து போகும். //
ஹா.. ஹா.. ஹா..
இது செம.
எல்லாவற்றிற்கும் விமர்சனம், சொன்ன நீங்கள்..
எனது வலைப்பூ பற்றியும் விமர்சித்திருக்கலாமே.
எந்தவொரு நாவலையும் சுவாரஸ்யம் இழக்கச்செய்யணும்ன்னா, அதை படமாக்கினாப்போதும். பொன்னியின் செல்வன் தப்பிப்பிழைப்பானா??.. பார்ப்போம்.
பதிலளிநீக்குஅனைத்தும் நன்றாய் இருக்கிறது.
பதிலளிநீக்குவாசகர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தொகுப்பு:)! விகடனில் கூடுதலாக நா.முத்துகுமாரின் அணிலாடும் முன்றில் [ஒவ்வொரு உறவுகளைப் பற்றியும் சொல்லி வரும் தொடர்], நட்சத்திர எழுத்தாளர்கள் சிறுகதை அணிவகுப்பு ஆகியனவும் தற்போதைய சிறப்பு.
பதிலளிநீக்குபத்திரிகைகளில் ஆரம்பிச்ச்சு, சினிமா, டிவி நிகழ்ச்சினு அரட்டை நல்லாருக்கு. (பெண்கள்தான் அரட்டை அடிப்பாங்கன்னு சொல்றவங்க, இங்கயும் பாருங்க) :-))))))
பதிலளிநீக்கு//ஒரேயடியாய் போய்ச் சேர்ந்து விடக் கூடாதே//
ஹா.. ஹா... பொன்னர்-சங்கர் பாத்தீங்களா? -)))))